Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது.

யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இவர்கள் யாழ் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தகவல் ஒன்றினை அடுத்து இன்று சாவகச்சேரி டச்சு வீதிப் பகுதியை சுற்றி வளைத்த படையினரும் காவற்துறையினரும் தேடுதல்களை நடத்தினர். அவ்வேளையிலேயே குறித்த வீடொன்றிலிருந்து குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

globaltamilnews

இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. globaltamilnews

எந்த அமைப்பாய் இருக்கும்? கண்டுபுடிக்கமுடியாமல் இந்த ஈனப்பிறவியின் மோட்டுமண்டை வெடிக்கும்போல இருக்குதே......

இலங்கையில் தமிழர்களை எழும்பவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு தமிழ் ஒட்டுக்குழுக்களிடம்,,, முக்கியமாக இந்தியாவினல் முற்றுமுழுதாக நிர்வாகிக்கப்படும் ஈபிடீபிக்கு.. றோவினால் அறிவுருத்தபட்டிருக்கிறது. தமிழரிடம் பறிக்கும் பணம் தமிழ் அழிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது

கேக்க யார்மில்லாத நாதியத்த சனம்தனே.. யாருக்கென்ன...

எந்த அமைப்பாய் இருக்கும்? கண்டுபுடிக்கமுடியாமல் இந்த ஈனப்பிறவியின் மோட்டுமண்டை வெடிக்கும்போல இருக்குதே......

ஏதாவது துப்பு கிடைக்குமா...??? :)

அதுக்காக யாழுக்கை துப்பி நாறடிக்கிறதில்லை...

Edited by தயா

உப்புடி நிலமை எண்டால் நாளைக்கு வெளிநாட்டில இருந்து ஊருக்கு விடுப்பு பார்க்கப்போகிற பிள்ளைகளையும் கப்பம் கேட்டு தூக்கமாட்டாங்கள் எண்டுறதுக்கு என்ன உத்தரவாதம்..? :) ஓர் சிறுவனை காசுக்காய் கொலை செய்கிற அளவுக்கு போய் இருக்கிது எண்டால் ஊர் நிலமை மோசம் எண்டுதான் நினைக்கவேண்டி இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒருக்கா யாராவது ஊர்ப்பயண கட்டுரையில் சேர்ப்பிங்களே....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரண்டு கிழமைக்கு முன்னமெண்டா செய்தி வந்திருக்குமேயெண்டு யாழ் பத்திரிகையளில தேடிப்பாத்தன் ஒரிடமும் இல்லை. பொம்பிள பிள்ளையாயிருந்திருந்தால் கலர் படமும்போட்டு வித்தியாசமா எழுதுப்பட்டிருக்கும். நாளைய பத்திரிகையளில தன்னும் வரும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

ரண்டு கிழமைக்கு முன்னமெண்டா செய்தி வந்திருக்குமேயெண்டு யாழ் பத்திரிகையளில தேடிப்பாத்தன் ஒரிடமும் இல்லை. பொம்பிள பிள்ளையாயிருந்திருந்தால் கலர் படமும்போட்டு வித்தியாசமா எழுதுப்பட்டிருக்கும். நாளைய பத்திரிகையளில தன்னும் வரும்தானே!

தேனியிலும்.. தினமுரசிலும்.. வீணையிலும்... வலம்புரியிலும் தேடினா வருமோ..! அவங்கள் தானே செய்யுறது எப்படி போடுவாங்கள்.

கிழக்கின் உதயத்தின் பின் திருமலை.. மட்டக்களப்பு என்று இதுவரை 5 சிறுவர்கள் சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுகிறார்கள் கப்பம் கேட்டு.

வடக்கின் வசந்தத்தின் கீழ் இது..! இப்ப விளங்குதோ.. நீங்களும் உங்கட சிங்கள அரசாங்கமும் கொண்டு வாற உதயங்களினதும் வசந்தங்களினதும் தார்ப்பரியம்.

நீங்கள் தூர பாதுகாப்பாக இருந்து கொண்டு நல்லாத்தான் இன ஐக்கியம் அளந்து கொட்டாவி விடுறியள். அங்க சனம் ஆவி அடங்க கிடக்கிறது தெரியாம.

இதில கிழக்குப் போல வெஸ்ட் பாங் வரணுமாம். வடக்குப் போல காசா வரணுமாம். இவர் பலஸ்தீனக்காரனுக்கே புத்திமதி சொல்லுறார்..! விட்டா எருமை மாடு ஏரோ பிளேன் ஓடுது எண்டுவியள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை கோவப்படுறதுதான் சந்தேகத்த உண்டாக்கிது. உதயன் எண்டொரு பத்திரிகையும் வருகிது , காலம் காலமா யாழில கவிட்டு கொட்டின பத்திரிகை , ஏதோ ஈ பேப்பரா தினசரி வருதாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கோவப்படுறதுதான் சந்தேகத்த உண்டாக்கிது. உதயன் எண்டொரு பத்திரிகையும் வருகிது , காலம் காலமா யாழில கவிட்டு கொட்டின பத்திரிகை , ஏதோ ஈ பேப்பரா தினசரி வருதாம். :lol:

கிழக்கின் உதயத்தில நடந்ததைப் பற்றி சொன்ன உடன.. அதுக்கு பேப்பரில போட்டவங்களோ என்று ஐயா கேட்க மறந்திட்டார் என்று நினைக்காதேங்கோ. அதுக்கு போட்டோக்களோட ஆதாரங்களைப் போட்டு கவுத்துப் போட்டாங்கள். பிடிப்பட்ட ஆக்களையும் தப்பி ஓடுறாங்கள் என்று சொல்லி சுட்டுப் பொசுக்கிட்டான் சிங்களவன். இப்படியான நிலையில.. உதயன்.. உதுகளை உயிர் அச்சுறுதலுக்கு மத்தியில் முந்திரிக்கொட்டை மாதிரி அவிழ்த்துவிட அத்தியடிக் குத்தியரின் வானரப்படை அனுமதிக்க வேணுமே..! அவற்ற சன நாய் அகம் உலகமே அறியும் தானே..! அதுகளை சொல்லுறது. அதுகளை மறைச்சுப் போடுங்கோ..! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உதயன் பேப்பர்காரனும் உதில சேப்பெண்டு சொல்லேல்ல.....அதுக்கு நன்றி.

கிழக்கில சிங்களவன் நீதிய நிலைநாட்டினதா செய்தி சொல்லிட்டியள்.....வடக்கில நிலைநாட்ட நேரம் வரும் கனநாள் இல்ல. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவகச்சேரியில் 13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு! குடாநாட்டில் பெரும் பீதியும் பரபரப்பும்!!2010-03-28 05:56:12

சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று நாள் களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபில நாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில

யாழ்ப்பாணம், மார்ச் 28

சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று நாள் களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபில நாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழி யில் இருந்து மீட்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டது.

மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத் தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் படுகொலை செய் யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மக னான கபிலநாத் (வயது 16) என்பவரா வார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட் சைக்குத் தோற்றியிருந்தார்.

இந்தச் சம்பவம் பற்றித் தெரியவந்துள் ளவையாவது:

இம்மாதம் 14ஆம் திகதி இரவு அவரது வீட்டுக்கு வந்த சிலர் இவரது பெயரைக் கூறி வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அன்று இரவு தொலை பேசியில் தொடர்புகொண்டு மூன்று கோடி ரூபா கப்பம் தந்தால் விடுதலை செய் வோம் என்று கடத்தியவர்கள் தெரிவித் துள்ளனர். தேர்தல் பணிக்காகவே இந்தப் பணம் கேட்பதாக, சில கட்சிகளின் சின் னங்களைக் கூறி கடத்தல்காரர் கப்பம் கோரினர்.

நண்பர்கள் மூவர் கைதாகினர்

இந்தச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரது நண்பர்களான மூவரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் ஜி.சீ.ஈ (உயர்தர) வகுப்பு மாணவர்கள். மற்றைய வர் ஜி.சீ.ஈ (சாதாரண) வகுப்பு மாணவன். மூவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தனர்.

உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவ ரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றனர். மற்ற மாணவன் கடந்த டிசெம்பர் மாதம் சாதா ரண தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பொலிஸார் கைது செய்த பிரஸ்தாப மாண வர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக் கப்பட்டனர்.

கொழும்பில் இருந்து

விசேட பொலிஸ் குழு

கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் கோஷ்டி பிரஸ்தாப மாண வர்கள் மூவரையும் விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையின் தொடர்ச்சி யாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்க ளில் உயர்தர வகுப்பு மாணவனான யோக நாதன் காண்டீபன் என்பவரின் வீட்டை சுற்றிய பகுதியை பொலிஸாரும் இராணு வத்தினரும் இணைந்து நேற்று முன் தினம் தேடுதல் நடத்தினர்.

அந்த மாணவனின் வீடு சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தனியார் ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது. நக ரில் இருந்து 500மீற்றர் தூரத்தில் டச்சு வீதியை அண்டியதாக அந்த ஒழுங்கை உள் ளது.

சம்பவ இடத்துக்கு நீதிவான்

நேற்றுப்பிற்பகல் ஒரு மணியளவில் டச்சு வீதி மற்றும் அண்டிய அந்த ஒழுங்கை ஆகிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலி ஸார் அந்தப் பகுதிக்குள் எவரும் உள் செல்லக்கூடாது என்று தடைவிதித்தனர்.

சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபா கரன் சம்பவ இடத்துக்குச் சென்றார். அவ ரது முன்னிலையில் குறிப்பிட்ட மாண வனின் வீட்டுக்கு பிற்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் புதைகுழி ஒன்று தோண்டப் பட்டது. மூன்று அடி ஆழமுள்ள அந்தப் புதைகுழிக்குள் இருந்து அழுகிய நிலை யில் சடலம் மீட்கப்பட்டது. தமது மகனின் சடலம் என உறவினர் சடலத்தை அடை யாளம் காட்டினர்.

யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை சம்ப இடத்துக்கு அழைத்து சடலத்தை பிரேத பரிசோத னைக்காக ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்று மாலை 5.30மணிளவில் சம்பவ இடத்துக்குச் சட்ட வைத்திய அதிகாரி சென் றார். சடலம் யாழ்.ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது.

பிரஸ்தாப வீட்டில் வசித்து வரும் உயர் தர பரீட்சை மாணவனின் தந்தை வெளி நாட்டில் உள்ளார். அவரது மனைவி தனது மற்றொரு மகனை கொழும்புக்கு அழைத் துச் சென்றார். அப்போது உயர்தர வகுப்பு மாணவன் மட்டும் வீட்டில் இருந்தார்.

இறந்தவர் கடத்தப்படுவதற்கு முதல் நாள் கொழும்பு சென்ற உயர்தர வகுப்பு மாணவனின் தாயார் மகனைக் கைது செய்த செய்தி கேட்டு மறுநாளே சாவகச் சேரிக்கு திரும்பியிருந்தார்.

பெரும் எண்ணிக்கையானவர்கள், அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள் அங்கு கூடிய போதும் சடலத்தைப் பார்வையிட பொலிஸார் எவரையும் அனுமதிக்க வில்லை.

குடாநாட்டில் வன்செயல்கள் சற்றுக் குறைந்து வரும் வேளையில் இச் சம்பவம் குடாநாடு முழுவதும் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2947&Uthayan1269738327

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்யப்பட்ட மாணவரின் வீட்டு வளவுக்குள் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகனின் சடலம்

சனிக்கிழமை, 27 மார்ச் 2010 19:33

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE சாவகச்சேரியில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகனான மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொலீஸார் குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை,இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக பொலீஸ் ஊடகப்பேச்சாளருடன் தொடர்புகொண்டது.

தமக்கு இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி எமக்குத்தெரிவித்தார்.

எனினும்,நாளைக்காலை மேலதிக தகவல்களை தம்மால் தரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

www.tamil.dailymirror.lk

ஒரு செய்தி சொல்லுது துணை கொலைக் குழு என்று, இன்னொன்று சொல்லுது சக மாணவர்களின் குழு என்று......... எது உண்மை?

:) எந்த குழு எண்டாலும் ஒரு மாணவனின் உயிர் அனியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

.

பணத்திற்காக ஒரு தமிழ் மாணவனை கொலை செய்யும் அளவிற்கு, இந்தச் சமுதாயம் கீழிறங்கி இருப்பது கேவலமான செயல். :)

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுக்குழுக்கள் இருக்கும் வரை தமிழனுக்கு ஒருபோதும் நிம்மதிகிடையாது, இந்த தேர்த்லுடன் இவரகளது தேள்வைவைகள் இல்லாது ஆக்கப்பட வேண்டும். :)

யாழில் இதுவரை 4 சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அனைவரும் தர்போது கொலை செய்யப்பட்ட மாணவனின் வயதை ஒட்டியவர்கள், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். ஏதோ காரணத்திற்க்காக இந்த சேய்திகள் வெளியே வரவில்லை. சிலரது "காணவில்லை" விளம்பர பகுதியில் வந்துள்ளது. இவர்கள் கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு தோற்றியவர்கள்.

[ஃஉஒடெ நமெ='னெடுக்கலபோவன்' டடெ='27 Mஅர்ச் 2010 - 06:28 PM' டிமெச்டம்ப்='1269728899' பொச்ட்='577523']

தேனியிலும்.. தினமுரசிலும்.. வீணையிலும்... வலம்புரியிலும் தேடினா வருமோ..! அவங்கள் தானே செய்யுறது எப்படி போடுவாங்கள்.

கிழக்கின் உதயத்தின் பின் திருமலை.. மட்டக்களப்பு என்று இதுவரை 5 சிறுவர்கள் சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுகிறார்கள் கப்பம் கேட்டு.

வடக்கின் வசந்தத்தின் கீழ் இது..! இப்ப விளங்குதோ.. நீங்களும் உங்கட சிங்கள அரசாங்கமும் கொண்டு வாற உதயங்களினதும் வசந்தங்களினதும் தார்ப்பரியம்.

நீங்கள் தூர பாதுகாப்பாக இருந்து கொண்டு நல்லாத்தான் இன ஐக்கியம் அளந்து கொட்டாவி விடுறியள். அங்க சனம் ஆவி அடங்க கிடக்கிறது தெரியாம.

இதில கிழக்குப் போல வெஸ்ட் பாங் வரணுமாம். வடக்குப் போல காசா வரணுமாம். இவர் பலஸ்தீனக்காரனுக்கே புத்திமதி சொல்லுறார்..! விட்டா எருமை மாடு ஏரோ பிளேன் ஓடுது எண்டுவியள்.

[/ஃஉஒடெ]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி எதிர்பாரதவிதமாக எல்லா இடமும் பரவி விட்டதால்.

அப்பாவி மணவர்களின் தலையில் தூக்கி போடபட்டுள்ளது............. அவர்கள் இனி வெளிவர முடியாது.

தேட சென்ற இராணுவத்தினரே சடலத்தையும் கொண்டு சென்றுள்ளார்கள்............ அமைச்சரின் பணிப்பால்.

மாணவர்கள் செய்திருந்தால்......???

கைது செய்து மறு நிமிடமே இரண்டு தட்டு தட்ட சொல்லியிருப்பார்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.....அதுவும் தேர்தல் காலத்தில..... :)

:lol: எந்த குழு எண்டாலும் ஒரு மாணவனின் உயிர் அனியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.

உண்மை.. சும்மா ஊம் கொட்டிவிட்டு... இன்னும் ஜோசனையா இருந்தா மைல் கல்லு சாமிக்கு ஒரு வெடகோழி வெட்டிட்டு, தேமே எண்டு சோறு கோட்டிக்கொள்ளுவோம். :D

என்ன முண்டத்தனமான கருத்து இது? :)

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட மாணவனின் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.யின்) நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப் புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்றுமுன்தினம்பணிப்புரைவிடுத்துள்ளார்.

ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 14 ஆம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர்.

அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையை அடுத்து அவர் எல்லா விவரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையை அடுத்து, இந்தக் கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் இடம்பெற்ற மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைகள் நேற்றுக் காலை இடம்பெற்றன.

இதனையடுத்து சடலம் சாவகச்சேரி பெரியரசடியிலுள்ள அவரது வீட்டுக்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.

பெற்றோர், உறவினர்கள், கொலையுண்டவரின் சக மாணவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனுதாபிகள் அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் கொளுத்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உற்றார், உடன்பிறப்புகள் கதறியழ எடுத்துச்செல்லப்பட்ட கபிலநாத்தின் சடலம் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நேற்றுப் பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

மாணவனின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதோ, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட போதோ பேழை திறக்கப் படவில்லை. வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டவாறே அடக்கம்செய் யப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் மாணவர்களும் அந்த ஊரைச்சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.

சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

-பதிவு-

.

Edited by தமிழ் சிறி

மாணவன் கபில்நாத் படுகொலை ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு பிடியாணை ஆனால் இறுதி கிரியையில் டக்ளசும் பங்கேற்பு

யாழ் நிருபர்

திங்கட்கிழமை, மார்ச் 29, 2010

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக

ஈ.பி.டி.பி.யின் நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்பவரை தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப் புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார். ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 14 ஆம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர்.

அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையை அடுத்து அவர் எல்லா விவரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையை அடுத்து, இந்தக் கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் இடம்பெற்ற மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைகள் நேற்றுக் காலை இடம்பெற்றன.

இதனையடுத்து சடலம் சாவகச்சேரி பெரியரசடியிலுள்ள அவரது வீட்டுக்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.

பெற்றோர், உறவினர்கள், கொலையுண்டவரின் சக மாணவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனுதாபிகள் அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் கொளுத்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உற்றார், உடன்பிறப்புகள் கதறியழ எடுத்துச்செல்லப்பட்ட கபிலநாத்தின் சடலம் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நேற்றுப் பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.மாணவனின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதோ, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட போதோ பேழை திறக்கப் படவில்லை. வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டவாறே அடக்கம்செய்யப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் மாணவர்களும் அந்த ஊரைச்சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.

கூடவே கொலைக்கு காரணமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திட்டமிட்ட அரசியல் கொலை...... :wub:

இக் கொலை சம்பந்தமாக மக்கள் கேபமுற்று ஈ பி டி பி அலுவலகத்தைத் தாக்கியதாக செய்தி.

கபில்நாத் படுகொலை சம்பவம் சாவகச்சேரியில் பதட்டம் ! ஈ.பி.டி.பி. அலுவலகம் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது:

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் கடத்தப்பட்ட மாணவனான கபில்நாத் கொலையை அடுத்து ஈபிடிபியின் சாவகச்சேரி அலுவலகம் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவன் கபில்நாத் கொல்லப்பட்டமையை அடுத்து கொலைக்கும் ஈபிடிபி கட்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சாவகச்சேரிப் பகுதியில் இன்று பிற்பகல் திரண்ட அப்பகுதி மக்கள் அங்கிருக்கின்ற ஈபிடிபி காரியாலயத்தினை முற்றுகையிட்டனர். அதன் பின்னர் ஈபிடிபி அலுவலக பொருட்கள் அனைத்தும் மக்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

மக்கள் பெரிய அளவில் அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த ஈ.பி.டி.பியினர் தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற வேளை அந்தப் பகுதி மக்கள் அனைவரும் திரண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதும் அங்கு பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து செய்தியின் செய்தியயாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவிலும் இவ்வாறான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.