Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவள் பெயர் வசந்தி

Featured Replies

அவன் வெற்றிமனையை அடைந்த போது நேரம் பதினோரு மணியை தாண்டி இருந்தது. கொளுத்தும் வெய்யிலின் வெம்மையினால் வழிந்த வியர்வையினை துடைத்து கொண்டு அந்த கட்டட முனையை தாண்டும் போது தான் அவளைக் கண்டான்.

எங்கிருந்து வந்தாள் என்று தெரியவில்லை. அவன் எதிர் பார்க்கவும் இல்லை. அவனை கட்டி அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். "சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்". இவனை அவள் பேசவே விடவில்லை. "நாளைக்கு கல்யாணம் என்றீர்கள் ..இப்படியா தாமதமாக வாறது. நான் பயந்தே போய்விட்டேன் தெரியுமா" அவள் பேசி கொண்டே இருந்தாள். என்ன செய்வது என்றே புரியாமல் விழித்தான் கார்த்திக்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வசந்தி.....மல்லாவியில் நடுத்தர குடும்பத்தில் மூத்தவளாக பெற்றோரின் செல்ல பிள்ளையாக வாழ்ந்த பூஞ்சிட்டு....வாழ்வில் வசந்தத்தை எட்டி பார்க்கும் வயதில் சிவாவின் மேல் காதல் வசப்பட்டாள். அவனின் தன்னம்பிக்கை, இரக்க குணம் , உறுதியே , அவளை அவன் மேல் மையல் கொள்ள வைத்தது என்று எப்பவுமே சிவாவுக்கு சொல்லி கொள்வாள். சொந்தமாக சிறிய உந்துருளி திருத்துமிடம் வைத்திருந்த சிவாவும் , கணவனை இழந்த தன் அம்மா, வறுமையுடன் போராடி கொண்டு படிக்கும் தன் உயிர் தங்கை மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ, அவ்வளவு காதலை வசந்தி மேலும் வைத்திருந்தான். நட்டாங்கண்டல் வீதி ஓரம் , யோகபுரம் மைதானம் அருகில், துணுக்காய் சந்தியடி, பாலையடி பாடசாலை அருகில் என்று இவர்கள் சந்திக்கும் இடம் மாறினாலும் இவர்கள் ஒருவர் மேல் கொண்ட காதல் மாறவே இல்லை.

அன்றும் அப்படி தான் அவர்களின் இரகசிய சந்திப்பை முடித்துவிட்டு திரும்பும் போது தான் வசந்தியின் தந்தையை எதிர்பாராது முட்டுப்பட(சந்திக்க) வேண்டி வந்தது. பிறகு என்ன.. காதல் வீட்டிலேயே பூகம்பமாக வெடிக்க , சாதி என்ற அரணை உடைக்க முடியாத சமுதாயத்தில் வளர்ந்த சராசரி தந்தையால் , வசந்திக்கு காதல் மீது தடையை மட்டும் தான் போட முடிந்தது. அது மட்டும் அல்ல.. எல்லா சினிமாவிலும் வருவதை போலவே வசந்திக்கு உடனடியாக சொந்ததிலையே வரனையும் பார்த்து விட்டார்.

அவர்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை....வீட்டை விட்டு ஓடுவதை தவிர. வசந்தி சிவாவின் வீட்டிலேயே அடைக்கலமானாள். இரண்டொரு நாளில் காவல்துறையின் அனுமதியுடன் திருமண நாளும் நிச்சயிக்கபட்ட போது தான்.. அவனை தேடி அந்த முறையும் வந்தது.

ஆம்.. அது எல்லைப்படைக்கான பணி அழைப்பு முறை. ஆனையிறைவை வெற்றி கொண்ட புலிவேங்கைகள் யாழை சுற்றி வளைத்து நின்றகாலம். அரியாலை கிழக்கு, நாவற்குழி, சாவகச்சேரி எங்கும் புலிகளின் படையணிகள் நிலை கொண்டு இருந்தன. ஜெயசுக்குறு மறிப்பு, தொடர்ச்சியான ஓயாத அலைகள் என்று போர் அரங்குகளால் காயமடைந்த புலிகளுக்கு ஈடு கொடுக்கவும், தொடர்ச்சியான போர் முறைக்கான அடிதளமாகவுமே முழுக்க முழுக்க மக்களை கொண்ட கட்டுமானமாக எல்லைப்படை படையணி உருவாகி இருந்தது. ஆரம்பத்தில் பின்தள பணிகளில் புலிகளுக்கு உறுதுணையாக நின்ற அவர்கள், நாளாக நாளாக புலிகளுக்கு ஈடாக சண்டை களங்களிலும், முன்னணி காவல் நிலைகளிலும் பங்கெடுத்தார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை இரண்டு வார கடமையாக எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க பட்டிருந்தது எல்லைப்படை பணி. சிவாவுக்கு பணிக்கான முறை வந்ததும் திருமண நாளை கருத்தில் கொண்டு அவனது தாய், துணை தடுத்த போதும்.."இல்லை அம்மா இரண்டு வாரம் தானே உடனே போய்விடும் ..உதவி என்பது கேட்கும்போது செய்யவேண்டும். காலம் தாழ்த்தி செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்று தான்" என்று மறுத்துரைத்து பணிக்கு தயாரானான். அன்பு காதலியிடம் முத்தமிட்டு விடைபெற்றான்.

அது நாகர்கோவில் முன்னணி நிலை... வெட்டவெளி , சுடுமணல், பக்கவாட்டாக ஆழிக்கடல்..கண்கள் எதிரியின் நிலைகளை குறிவைத்து நின்றாலும் மனமோ வசந்தியையே தேடியது. நாட்கள் மெதுவாகவே நகர்ந்தன. ஓய்வு நேரத்தில் தன் துணைக்கு மடல் எழுதினான். மீதி இருக்கும் நாளை குறிப்பிட்டு அதற்கு பிறகு தங்கள் வாழ்கையில் இடம் பெற போகும் இன்பங்களை பற்றியே நிறைய எழுதினான். எதிரி கூட அவள் மாதிரியே தெரிவதாக எழுதினான். உன் நினைப்பால் தூக்கம் வருவதில்லை.... அதனால் நீண்ட நேரம் காவல் கடமையில் இலகுவாக நிற்கமுடிவதாக காதலையும் காலத்தையும் இணைத்து எழுதினான். அவள் கலக்கத்தை போக்கவே பக்கம் பக்கமாக கதை எழுதினான். வரும் நாளில் வாசலில் நிற்கும் படி வேண்டி எழுதினான்.

காலை ஆறு மணியை தாண்டி இருந்தது ..ஆழகடலின் மேலே சூரியன் வர தொடக்கி இருந்தான். இருந்தாலும் அவன் மனம் இன்னும் கழிய போகும் ஆறு மணித்தியாலத்தையே நினைத்து ஏங்கியது. ஆம்.. பகல் பன்னிரண்டு மணியுடன் அவன் பணி முடிகிறது. நண்பர்களின் கேலியும் நக்கலுமாக பொழுது கழிந்து கொண்டிருந்த போது தான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.

"மச்சான் தண்ணி அள்ள போன சுமனுக்கு வெடிபட்டுவிட்டுதடா.. ஓடி வாங்கடா தூக்குவம்.." குரல் கேட்டு சிவாவும் தனது சுடுகலனுடன் சுமன் விழுந்திருந்த இடத்தை நோக்கி ஓடினான். எதிரியின் குறி சூட்டாளனுக்கு தெரியுமா..இவனுக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள் என்று.. ஆம் ..அவனது அடுத்த குறி சிவா மேலே விழுந்தது. சிவாவுக்கு தலை விறைத்தது.. கண்கள் இருட்டின. வசந்தியின் காதல் முகம் பளிச்சென்று தெரிந்து மறைந்தது. அந்த சுடு மணலை முத்தமிட்டவாறே தன்னுயிரை இந்த நாட்டுக்காக கொடுத்தான்.

"அம்மா ...உங்கள் மகன் லெப்.சிவாவாக இந்த மண்ணுக்காக தன்னுயிரை கொடுத்துவிட்டார்." அந்த அரசியல் துறை போராளி தட்டு தடுமாறி சிவாவின் வீரச்சாவை தாய்க்கு சொல்லி கொண்டிருந்தான். வசந்தியால் நிற்க முடியவில்லை. தலையை சுற்றி கொண்டு கீழே சரிந்தாள். தாயின் தங்கையின் ஒப்பாரிகளுக்கு நடுவே லெப்.சிவாவின் புகழுடல் விதைக்கபட்ட போதும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் பிரமை பிடித்தவள் போலவே இருந்தாள் வசந்தி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தம்பி குறை நினைகாதீங்கள்..மல்லாவி தெருக்களில் யாரை கண்டாலும் சிவா என்று கட்டி அணைத்து திரிந்த வசந்தியை இங்கு இணைத்திருந்தார்கள். அவளால் இன்னும் அவள் காதலனின் இழப்பை ஏற்று கொள்ள முடியவில்லை" என்ற படியே அந்த வெற்றிமனையின் பராமரிப்பாளர் கார்த்திக்கை நோக்கி வந்தார்.

திடீர் என்று கார்த்திக்கை விட்டு விலத்திய வசந்தி .. அப்போது தான் உள் நுழைந்த இன்னொரு வாலிபனை நோக்கி ஓடினாள்.

"சிவா நேற்று அல்லவா வாறதாக சொன்னீர்கள். ஏன் இவ்வளவு தாமதம். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்ற எண்ணம் கூட இல்லாத அளவுக்கு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்".

அதே வசனம் ...........

குறிப்பு : தமிழர் தாயகத்தில் மனநிலை பாதிக்கபட்ட பெண்களுக்கான பராமரிப்பு இடமான வெற்றிமனை 2009 மாசி மாதம் 18 ஆம் நாள் சிங்கள வான்படையின் F-07 விமான குண்டுவீச்ச்க்கு உள்ளாகி இருபதுக்கும் மேற்ப்பட்ட உளநலம் பாதிக்கபட்ட பெண்களையும் பராமரிப்பாளர்களையும் இழந்தது. வசந்தியும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். இல்லை எங்காவது தடுப்பு முகாமில் உங்களையும் கட்டி அணைக்கலாம். நீங்களாவது சொல்லி புரியவைப்பீங்களா..அவள் சிவா வீரச்சாவு என்று ...

யாவும் கற்பனை அல்ல.. இக் கதையை தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதி ஆக்கிய 279 எல்லைப்படை மாவீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.......

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

கதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.

இந்த கதையை எழுதும் போது எங்க இருந்து உங்களுக்கு இந்தியன் தமிழ் வந்து சேருது. (நெருடலா இருக்கு)

கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்.

  • தொடங்கியவர்

கதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.

இந்த கதையை எழுதும் போது எங்க இருந்து உங்களுக்கு இந்தியன் தமிழ் வந்து சேருது. (நெருடலா இருக்கு)

கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா. இந்திய தமிழ் என்று எதனை குறிபிடுகிறீர்கள். எனக்கும் அதற்கும் வாய்ப்புகள் குறைவு.

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையினை வாசிக்கும் போது சாந்தி ரமேஸ் நேசக்கரத்துக்காக பேட்டி எடுத்த போராளிக் கணவனைத் தேடும் அபலைப் பெண்ணின் உண்மைக் கதை நினைவுக்கு வந்து போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதிய விதம் அழகு...தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அவலம் மனதை வாட்டுகின்றது

நன்றி அபிராம்

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

உண்மையாக நடந்த சம்பவத்தை கதையாக எழுதிய விதம் அழகு...தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ரதி உங்கள் கருத்துக்கு. எவ்வளவோ உண்மை சம்பவங்கள் இன்னும் வெளிவராமல் அழிந்துவிடுமோ என்ற கவலையும் எனக்கு உண்டு.

ஒரு பெண்ணின் அவலம் மனதை வாட்டுகின்றது

நன்றி அபிராம்

வாத்தியார்

*********

நன்றி வாத்தியார். எம்மினத்தின் அவலத்தில் ஒரு சிறு துளி தான் இந்த பெண்ணின் கதை. இவ்வளவு வலிக்கும் எங்களுக்கு விடிவு ஒன்று தான் தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் தோழர் அபிராம் :lol:

  • 2 years later...
  • தொடங்கியவர்

மூன்று வருடங்களுக்கு முன்னர் எல்லைப்படை மாவீர்களுக்காக எழுதிய கதையை யாழின் முகப்பில் இணைத்த நியானிக்கு நன்றிகள். இன்று இதை போல எத்தனையோ பெண்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டு தனி மரங்களாக எங்களின் தெருக்களில் தங்களின் நேசத்துக்குரியவர்களை தேடி அலைகிறார்கள்.

 

 

:( மனம் கனக்கிறது.

  • தொடங்கியவர்

:( மனம் கனக்கிறது.

 

நன்றி அலைமகள். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கைதேர்ந்த எழுத்து நடையுடன் மனம் கனக்க வைக்கும் கதை. தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி

மனம் கனக்கிறது

  • தொடங்கியவர்

கைதேர்ந்த எழுத்து நடையுடன் மனம் கனக்க வைக்கும் கதை. தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்.

 

நன்றிகள் மெசொபொத்தேமியா சுமேரியர். உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கு.

சம்பவத்தை கதையாக் பகிர்ந்த உங்களுக்கு நன்றி

மனம் கனக்கிறது

 

நன்றி அகஸ்தியன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.