Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது.

Featured Replies

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.

மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

http://www.nation.lk/2010/04/04/news3.htm

இனி இந்த இரண்டு அணிக்கும் வாக்களித்து பிரிவினையை வளர்க்க கூடாதென்று சனங்கள் சிங்களவனுக்கு வாக்களிக்கப்போகுதுகள்.

அல்லது தாங்களும் வாக்களிக்காமல் விடப்போகுதுகள்...

இதில இலாபம் அடையப்போறது டங்குதான்

பலமா காத்து அடிக்கக்க மா விக்கப்புடாது; அப்பிடி வித்தா முதலும் போயிடும்....மழை அடிக்கக்க உப்பு விக்கப்புடாது......ஆனால் உப்பும் விற்கலாம் ,மாவும் விற்கலாம் அது நமது உரிமை...அதற்கு ஏற்ற காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.....

ஆதாரத்திற்காகவா அல்லது பதில் எழுதவா ??

நீங்கள் மா விற்றால் என்ன ? உப்பு விற்றால் என்ன? ஆனால் நீங்கள் இணையம் விற்பவரே அதற்கு காத்து அடித்தால் தான் என்ன ?

சுத்தல் வேண்டாம் பதில் எழுதவும் ?

சரி தராக்கி இன்னும் ஒரு கேள்வி நீங்கள் ஏன் இன்னும் ஒரு பெயரில் யாழில் எழுதி வருகின்றீர்கள் ????

இது குறித்து நான் நிர்வாகத்திடம் கேட்ட போதும் பதில் இல்லை ?

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள், எவருக்கும் ஆதரவளிக்காமல் விலகி நிற்பதான அறிக்கை சரியானதுதான். ஆனால் இதுகாலவரையில் தமிழர் கூட்டமைப்பிற்கு அது தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது. இது போன்றதொரு முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கொள்கை, இன்று கள அரசியலில் இல்லை. அது அனைவராலும் மேற்கொண்டு முன்னெடுக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறது. அதற்குள் பிரிவுகள் பிளவுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து,

கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு,

தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில்,

யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.

இது போன்றதொரு முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கொள்கை, இன்று கள அரசியலில் இல்லை. அது அனைவராலும் மேற்கொண்டு முன்னெடுக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறது. அதற்குள் பிரிவுகள் பிளவுகள்.

இப்படி அவர்கள் எங்கேயும் சொல்லவில்லை உங்கள் கற்பனை வளம் இறைவன் நல்ல நகைச்சுவை

நீங்களும் தராக்கியும் மட்டுமே சம்பந்தரை தீவிரமாக ஆதரிக்கின்றீர்கள் தராக்கியும் நீங்களும் சம்பந்தரை ஆதரித்தால் சாணக்கியர்கள் என்றும் இல்லை என்றால் கழுதை குதிரை கருடன் என்று திட்டி உங்கள் இயலாமையை வெளிப்படுத்துகின்றீர்கள்

பல தூக்கப்பட்டு விட்டது என்ன செய்வது ? நீங்களும் அவர்களுக்கு வேண்டும் அல்லவா?

தராக்கி கெஞ்சி மன்றாடி வாக்கு கேட்கின்றார் நீங்கள் ஏதோ ஆய்வாளர் நிலவன் போல் நிறுவிக் கேட்கின்றீர்கள்

சகல புலம் பெயர் அமைப்புக்களும் கயேந்திரனை ஆதரித்து அறிக்கை விடுவதை பொறுக்க முடியாமல் 3 பேர் கொண்ட படைப்பாளிகள் கழகம், திருமலைக்கழகம் அறிக்கை விடுகின்றார்கள்

நீங்கள் இருவரும் புலம் பெயர் சமூகத்தின் புத்திஜீவிகள் மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் இதில் உட்குத்து இருப்பதாகவே படுகின்றது

Edited by tamilsvoice

இந்த சனியங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. படிச்சமா நாட்டவிட்டு பாஞ்சமா எண்டு இருக்காமா.. அரசியலும் மண்ணாங்கட்டியும்...

சும்மா சூடு வாங்கத்தான்..

பனங்காய் விடிவெள்ளி மதிவதனங் போன்றவர்கள் மாற்று கருத்து அரசியல் செய்ய கஸ்டமாக இருக்குதாம், அதனால் ப க மாணவர்களே நீங்கள் இனிமேல் அரசியல் கதைக்க வேண்டாம்

மஹிந்த வட பகுதி செல்லும் சிங்கள இனவாதிகளுக்கு தேர்தல் பரிசாக 7500 ரூபா கொடுக்கிறாராம்

ஏன் வெளிநாட்டில உள்ள சில தமிழருக்கும் மகிந்த காசு குடுக்கிறாராம் உங்களுக்கு தெரியாதோ??

இப்படி அவர்கள் எங்கேயும் சொல்லவில்லை உங்கள் கற்பனை வளம் இறைவன் நல்ல நகைச்சுவை

நீங்களும் தராக்கியும் மட்டுமே சம்பந்தரை தீவிரமாக ஆதரிக்கின்றீர்கள் தராக்கியும் நீங்களும் சம்பந்தரை ஆதரித்தால் சாணக்கியர்கள் என்றும் இல்லை என்றால் கழுதை குதிரை கருடன் என்று திட்டி உங்கள் இயலாமையை வெளிப்படுத்துகின்றீர்கள்

பல தூக்கப்பட்டு விட்டது என்ன செய்வது ? நீங்களும் அவர்களுக்கு வேண்டும் அல்லவா?

தராக்கி கெஞ்சி மன்றாடி வாக்கு கேட்கின்றார் நீங்கள் ஏதோ ஆய்வாளர் நிலவன் போல் நிறுவிக் கேட்கின்றீர்கள்

சகல புலம் பெயர் அமைப்புக்களும் கயேந்திரனை ஆதரித்து அறிக்கை விடுவதை பொறுக்க முடியாமல் 3 பேர் கொண்ட படைப்பாளிகள் கழகம், திருமலைக்கழகம் அறிக்கை விடுகின்றார்கள்

நீங்கள் இருவரும் புலம் பெயர் சமூகத்தின் புத்திஜீவிகள் மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் இதில் உட்குத்து இருப்பதாகவே படுகின்றது

எதற்கு இப்படிப்பட்ட முடிவு? நான் உங்களைப் போன்ற புத்திஜீவி இல்லை. சாதாரண் புத்திசாலியாகக் கூட இல்லை. ஒரேபக்கம் பார்வை கூடாது, மற்றவர்களும் எப்படி ஏமாற்றப் புறப்படுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். சம்பந்தர் மட்டுமே ஏமாற்றுகிறார், இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நிற்கிறார், என்ற முடிவு தவறு என்பது எனது முதல் விடயம். வெற்றிபெற்றாலும் கஜேந்திரன் அணியினரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வருவார்கள், இப்போதும் அவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் அகப்பட்டுள்ளார்கள் என்பது இரண்டாவது விடயம்.

தமிழீழக் கோரிக்கை இரண்டு தரப்புக்களாலும் கைவிடப்பட்டதுதான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடுநிலைமுடிவிற்குக் காரணம். ஏதாவது ஒரு தரப்பு இந்தக் கொள்கையைக் கொண்டிருப்பின் அவர்கள் நடுநிலை நியாயத்தைக் கொண்டிருக்க முடியாது. பிளவுபட்டு நிற்கும் இரு பகுதியினரிடமும் ஒரே கொள்கைதான்.

ஏன் தனிநபர் தாக்குதல்? அதனால்தான் களப் பொறுப்பாளர் விடயங்களை அகற்றியிருக்கலாம். நான் மட்டுமல்ல, நாமெல்லாருமே யாழ்களத்திற்கு வேண்டப்பட்டவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு இப்படிப்பட்ட முடிவு? நான் உங்களைப் போன்ற புத்திஜீவி இல்லை. சாதாரண் புத்திசாலியாகக் கூட இல்லை. ஒரேபக்கம் பார்வை கூடாது, மற்றவர்களும் எப்படி ஏமாற்றப் புறப்படுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். சம்பந்தர் மட்டுமே ஏமாற்றுகிறார், இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் நிற்கிறார், என்ற முடிவு தவறு என்பது எனது முதல் விடயம். வெற்றிபெற்றாலும் கஜேந்திரன் அணியினரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வருவார்கள், இப்போதும் அவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் அகப்பட்டுள்ளார்கள் என்பது இரண்டாவது விடயம்.

ஆனாலும் இவர்களது கடந்தகால சேவைகள் கருதியும்

முக்கியமான காலகட்டத்தில் எல்லாம் இவர்களது துணிச்சலான பல அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கான முடீவுகளை ஏற்றவன் என்கின்ற ரீதியிலும்...

இவர்களது இந்த முடிவுக்கு கட்டப்படுகின்றேன்

அதேநேரம் புலிகளுக்கு பின்னால் பலவருடங்களாக நின்றோர் இன்று அவர்களது பலமுடிவுகள் தவறானவை என்று பிதற்றித்திரிவதுபோல்..

இம்முடீவும் எம்மினத்திற்கு ஒரு வரலாற்றுத்தப்பாக இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பார்கள் பிச்சைக்கே அப்பிடி இருக்கேக்க மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிச்சைக்காரர்களை(அரசியல்வாதிகள்)சரியாக வழிமொழிவது என்பது மிகப்பெரும் கடமை அதன் அளுத்தம் புரிந்தே அவர்கள் அதனை மக்களிடமே விட்டு விட்டார்கள்.

ஆனால் மக்களுக்கு கூட புரியவில்லை யாரை தெரிவதென்று,ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த மக்கள் தொடர்ந்து பல்லக்கு தூக்கவேண்டும் இந்த பிச்சைக்காரர்களுக்கு யார் வந்தாலும்.

பிச்சைக்கார்கள் பல கெட்டப்புகளில் வந்து அசத்துவார்கள், நாங்கள் இங்கை கட்சி பிரிந்து ரசிகர் மன்றம் வைத்து விசிலடிச்சு சந்தோசப்படுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்கார்கள் பல கெட்டப்புகளில் வந்து அசத்துவார்கள், நாங்கள் இங்கை கட்சி பிரிந்து ரசிகர் மன்றம் வைத்து விசிலடிச்சு சந்தோசப்படுவம்.

நீங்கள் எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டாலும்...

சல்லிக்காசு கையிலில்லாதவன் கோபுரங்களும் பங்களாக்களும் கட்ட நினைப்பதுபோல்தான் இங்கு பலர் எழுதுகிறார்கள்.

இருப்பதை வைத்து சோற்றுப்பாட்டை பார்ப்போம் என்று என் போன்றோர் சொன்னால் தூரப்பார்வையில்லை நுண்ணறிவு இல்லாதவர் என்கின்றனர். ஆனால் இவர்களின் இந்த ஒற்றை வழி.... அறிவுதான் இன்றைய தமிழரின் இழிநிலைக்கு காரணம். அதை வழி நடத்தியவர்கள் இவர்கள்தான் என்பது மிகவும் வருத்தமான உண்மை.

ஆனால் இதைக்கூட ஏற்காது இது புலிகளைத்தாக்குவதாக சொல்லி அதில் ஒழிந்து கொள்வார்கள்

Edited by விசுகு

எல்லாம் இருக்கட்டும்

எல்லாரும் வாங்கோ

வயசுக்கு தமிழ்க்குரல் இறைவன் தயா பிளம்பு விசுகு கிசுகு சிறி குறி சாந்த கந்தன் செந்ததன் கீந்தான் வாங்கோ. நாளைக்கு உந்த நாசமாப்போன தேர்தல் முடியப்போகுது. இத்தோட இதை விட்டுப்போட்டு நாங்கள் ஒன்று படுவோம்.

யார் வென்றாலும் தோற்றாலும் அவர்கள் சேவை செய்யவேண்டியது எங்கள் சனத்துக்கே எங்களுக்கு அல்ல. ஆகையால் உங்களுக்கும் பல அரசியல் கருத்துக்கள் இருக்கலாம் எல்லாம் நன்மைக்கே. உங்களின் பல வாதப் பிரதிவாதங்களில் நன்மைகள் இருக்கலாம் சிலரின் வாதங்களில் சற்று அநாகரிகமும் இருந்திருக்கலாம் இருந்தாலும் இதுகளை பொருட்படுத்தாமல் நாங்கள் மீண்டும் ஒன்று படுவோம்.

அரசியல்வாதிகளுக்காக அடிபட நாங்கள் யாரும் அரசியல் கட்சி தொண்டர்களா இல்லை நாங்கள் எங்கள் இன விடுதலை விரும்பிகள் அந்த நோக்கத்துக்காக என்றாலும் இனி நாம் ஒன்றுபடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி அண்ணா

இங்க கனபேர் தேர்தல் முடிந்ததும் ஈழம் கிடைத்து விடும் என்று இருக்கினம்.

நாங்க போக வேண்டிய இடம் வெகு தூரத்தில்..

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

உங்கள் முயற்சிக்கு ஒரு பச்சையுடன் கூடிய வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்களிப்பு எப்படி? எங்கு? அப்பொது?

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி அண்ணா

இங்க கனபேர் தேர்தல் முடிந்ததும் ஈழம் கிடைத்து விடும் என்று இருக்கினம்.

நாங்க போக வேண்டிய இடம் வெகு தூரத்தில்..

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

உங்கள் முயற்சிக்கு ஒரு பச்சையுடன் கூடிய வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்களிப்பு என்றும் பச்சைதான்.

சூறாவளி நீங்கள் போட்ட பலமான பிள்ளையார் சுழி, ஒரு சூறாவளி போல வந்து போகாமல், நிலைத்து நின்று, வளர்ந்து, விருச்சமாக வேண்டும்.

Edited by ஆராவமுதன்

நான் இல்லை இல்லை நாமும் வருகிறோம் ஒன்று சேர

  • கருத்துக்கள உறவுகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை விலக்கிக்கொண்டது.

-------

greensmilies-010.gif உங்கள் புள்ளடி சைக்கிளுக்கே....greensmilies-010.gif

நல்லது உறவுகளே

நாங்கள் வெவ்வேறு விதமாக சிந்தித்தாலும் அடிப்படிக் கொள்கை எங்கள் எல்லாருக்கும் ஒன்றுதான். தேர்தல் கால விரிசல்கள் எங்களுக்குள் இருக்கும் பொது இலட்சியத்தை சிதையாமல் இருக்கவேண்டும். தேர்தல் முடிந்துவிடும் அனாலும் எங்கள் விடுதலைப்பயணம் முடியாது. எமக்கு வேண்டியது கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து முயற்சிப்போம்.

எந்தக் காரனத்துக்கவோ எனத்துக்கோ பிரிந்து நிக்கும் அரசியல் கட்சிகளை நான் ஒன்றுசேர்த்து ஒரே நோக்கத்துக்காக குரல் கொடுக்க பாடுபடுவோம். தேர்தல் அரசியல் வேறு இலச்சியம் வேறு.

தயவு செய்து உங்கள் வேற்றுமைகளை களைந்து பயணத்தை தொடருங்கள்.. நாங்கள் பிரிந்து இருந்தவர்கள் இல்லை இந்தத் தேர்தல் எங்களைப் பிரிக்க அனுமதிக்கவும் கூடாது.

தொடரும்...

தமிழ் தேசியச் கூட்டமைப்பு என்ன செய்தது என்பது முக்கியமல்ல இனி என்ன செய்யப்போகின்றது என்பது அவதானிக்கப்படவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது உறவுகளே

நாங்கள் வெவ்வேறு விதமாக சிந்தித்தாலும் அடிப்படிக் கொள்கை எங்கள் எல்லாருக்கும் ஒன்றுதான். தேர்தல் கால விரிசல்கள் எங்களுக்குள் இருக்கும் பொது இலட்சியத்தை சிதையாமல் இருக்கவேண்டும். தேர்தல் முடிந்துவிடும் அனாலும் எங்கள் விடுதலைப்பயணம் முடியாது. எமக்கு வேண்டியது கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து முயற்சிப்போம்.

எந்தக் காரனத்துக்கவோ எனத்துக்கோ பிரிந்து நிக்கும் அரசியல் கட்சிகளை நான் ஒன்றுசேர்த்து ஒரே நோக்கத்துக்காக குரல் கொடுக்க பாடுபடுவோம். தேர்தல் அரசியல் வேறு இலச்சியம் வேறு.

தயவு செய்து உங்கள் வேற்றுமைகளை களைந்து பயணத்தை தொடருங்கள்.. நாங்கள் பிரிந்து இருந்தவர்கள் இல்லை இந்தத் தேர்தல் எங்களைப் பிரிக்க அனுமதிக்கவும் கூடாது.

தொடரும்...

சூறாவளிக்கு, ஒரு பச்சைப்புள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளிக்கு, ஒரு பச்சைப்புள்ளி.

சூறாவளிக்கு ஒரு பச்சைப்புள்ளி குத்திக்கொண்டே சைக்கிளுக்கு வாக்கு கேட்டால்.......???

Edited by விசுகு

சூறாவளிக்கு ஒரு பச்சைப்புள்ளி குத்திக்கொண்டே சைக்கிளுக்கு வாக்கு கேட்டால்.......???

ஒண்டா இருந்த தமிழர் பலத்தை பிரித்தது முதாலாவது பிழை

யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள் ஆனால் தேர்தலுக்குப் பின்னர் என்றாலும் நீங்களும் ஒன்று சேருங்கள் கட்சிகளையும் ஒன்று சேருங்கள் சையிக்கிலோ வீடோ இரண்டும் தமிழர்கள் தான் அதை மரவதேங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.