Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் த.தே.கூ. வில் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆய்வாளர் துரைரட்ணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைவாணியின் கருத்துடன் நான் முற்றாக உடன்படுகிறேன. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியாக இருப்பார்களேயானால், அவர்கள் செய்யவேண்டியது அகில இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து கொள்வது அல்ல. மாறாக தமிழ்ப்பிரதேசங்கள் எங்கணும் உள்ள அடி மட்ட மக்களை உள்ளடக்கிய அரசியல் போராட்ட அமைப்பாக அது மாறவேண்டும். அதற்குரிய ஏது நிலை இப்போது இல்லை என்பதும், இது உயிரச்சுறுத்தல்கள் உள்ள மிகவும் சிக்கலான பணி என்பதும் உண்மை. ஆனால் இனத்தின் நனடமை கருதி இதனை அவர்கள் மேற்கொள்வார்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு பக்க துணையாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள், நாடுகடந்த தமிழீழ அரசு என்பனவும் இருக்க வேண்டும்.

கடந்த வாரம், கனேடிய தமிழ் வானொலிக்கு பேட்டி வழங்கிய மாமனிதர் விக்கினேஸ்வரன் அவர்களது புதல்வி, திருமலை மாவட்டத்தைக் குறிப்பிட்டு, அங்கு இளையதலைமுறையினர் அரசியல் விடயங்களில் அக்கறையற்று காணப்படுவதனை கவலையுடன் குறிப்பிட்டார். பாராளுமன்றத் தேர்தலிலும், வாக்களிக்களிபதிலும் இளையதலை முறையினர் அக்கறைப்படவில்லை என்பதனை நேரில் அவதானித்த ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இறுதியாக சுதந்திரமாக நடைபெற்ற 1977ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுவோமாயின் இது நேரெதிரான நிலமை. அப்போது இளையவர்களே, முதியவர்களைக்காட்டிலும் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

பட்டுவேட்டிக்கனவில் இருக்கும் அகில இலங்கை தமிழரசுக்கட்சியினால் இந்நிலையை மாற்ற முடியாது சிறிலங்கா, இந்திய அரசாங்கங்களும் இளையவர்கள் அரசியலுக்கு வருவதனை தடுக்கவே விரும்புவார்கள்.

Edited by MI7

இப்ப இருக்கும் இளைஞ்சர்களின் காலத்தில்தான் இப்படி ஒரு அழிவை சந்தித்தது எமது இனம்.

வெளில போனவங்களை தவிர இருந்தவங்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் இலக்காதத்தான் இருந்தார்கள்.

இதுக்குள்ள அவங்களும் வந்து சாக வேண்டுமா?

போராடி மாண்டுபோன மாவீரர்களின் கல்லறையே கப்பற முடியாத ஒரு சூழலில் இருப்பவர்களையும் காவு குடுக்க வேண்டுமா?

இனி புலத்தில் இருந்து வந்துதான் நீங்கள் சொன்னதை முன்னெடுக்கவேண்டும்...

புலத்தில் இருந்து வருபவர்கள் தனிய காணிகளையும் வீடுகளையும் வாங்கி ஆட்டு இறைச்சிக்கறியும் கல்லும் குடிக்காமல் சமூக சேவையும் செய்தால் நல்லது.

சுன்னாகம் மீன் சந்தையில நிண்ட ஏதோ மாதிரியிருக்கு MI7 இன் ஆலோசனைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இருக்கும் இளைஞ்சர்களின் காலத்தில்தான் இப்படி ஒரு அழிவை சந்தித்தது எமது இனம்.

வெளில போனவங்களை தவிர இருந்தவங்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் இலக்காதத்தான் இருந்தார்கள்.

இதுக்குள்ள அவங்களும் வந்து சாக வேண்டுமா?

போராடி மாண்டுபோன மாவீரர்களின் கல்லறையே கப்பற முடியாத ஒரு சூழலில் இருப்பவர்களையும் காவு குடுக்க வேண்டுமா?

இனி புலத்தில் இருந்து வந்துதான் நீங்கள் சொன்னதை முன்னெடுக்கவேண்டும்...

புலத்தில் இருந்து வருபவர்கள் தனிய காணிகளையும் வீடுகளையும் வாங்கி ஆட்டு இறைச்சிக்கறியும் கல்லும் குடிக்காமல் சமூக சேவையும் செய்தால் நல்லது.

என்னவோ இதுதான் உண்மை .........

ஆனால் அங்கிருந்து ஓடிவந்தவர்கள் எல்லாம் சொல்லுவதுவது நாங்களும் எங்களால் இயன்றது எல்லாம் செய்தது என்று.."எங்களால் இயன்றது" என்றால் அது ரேடியோவில்/ டிவி இல் அரசியல் கதைப்பது, இணையத்தளங்களில் ஆய்வுக்கட்டுரை /கருத்துகள் எழுதுவது, சங்கங்கள், அமைப்புகளால் அமைத்து கொடிபிடிப்பது...

எங்கள் (நெருங்கிய) உறவுகள் எங்கள் நிதி மற்றும் வேறு தேவைகளில் தங்கியுள்ளது உண்மைதான், ஆனால் அவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடியவகையில் ஒரு தனியான சமுகமாக/ தனி மனிதர்களாகவோ நாங்கள் வரவில்லை என்பதை உணராதமட்டும் இத்தகைய ஏமாற்றங்களும் சலிப்புகளும் தவிர்க்கமுடியாதவை..

நேற்று, இங்கே கனடாவில் உள்ள CTR வானொலியை (அரசியல் அரங்கம்) கேட்டேன், மக்கள்/தலைமை தாங்கினவர்கள்/தாங்குபவர்கள் பலரும் தெளிவடைந்து விட்டார்கள் போல் தெரிகிறது..ஆனாலும் மேய்ப்பன் இல்லாதவர்கள் இனியும் என்ன செய்வார்கள் என்று யாருக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை ஒருகாலமும் சேர்க்கக்கூடாது பொறுத்த நேரத்தில் மீண்டும் மூன்றாம் ஆட்களின் கதை கேட்டு களுத்தை அறுப்பார்கள்.

இவர்கள் பிரிந்தது அவர்கள் விருப்பம். ஆனால் பின்பு புலம் பெயர்ந்தவர்களின் சொல்லை கேட்டு நாங்கள் கூட்டமைப்பை உடைக்கவில்லை அந்த மூன்று பேரையும் மாத்தப் போகின்றோம்.எஸ்.எம்.எஸ் இந்த மூவரையும் பாவமன்னிப்பு கேட்டால் திருப்பி எடுப்பம்.வானொலி பேட்டி என்று வேணுமென்றே அவமதித்தது.கடைசி ஒரு வயசிற்கு கூட மரியாதை கொடுக்கவில்லை.

புலிகளை யாரவது ஒரு கேள்வி ஏன் என்று எப்போதாவது கேட்டீர்களா? கேட்டிருந்தால் அவர்களும் அழிந்திருக்க மாட்டார்கள் தமிழனும் தோத்திருக்க மாட்டான்.அவ்வளவு பயம்.இப்போது சம்பந்தர் தானே என்று கண்டவன் நிண்டவன் எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டான்.

கையில கொஞ்சம் காசை வைத்துக் கொண்டு புலம் பெயர்தமிழன் செய்யும் அடாவடிதனத்திற்கு மண்ணில் இருந்தவர்கள் கொடுத்த அடிதான் இந்த எலக்சன் முடிவுகள்.

நீங்கள் எல்லோரும் வாசிக்க வேண்டியது கனடாவிலிருந்து வெளிவரும் "தாயகம்" பத்திரிகை.கொஞ்சமாவது அரசியலறிவை உயர்த்த அது பயன்படும்.

தமிழர்கள் புலிகளிடம் கேளாத அந்த கேள்வி என்ன என்று ஒருக்கா விலாவாரியாக எழுதினால். எங்கள் நாட்டுக்கு உதவாதுபோனாலும் எங்காவது விடுதலைபோர் நடந்தால்..........? அந்த மக்களுக்கு நான் அறிய கொடுப்பேன். உங்கள் விடுதலை அமைப்பிடம்போய் இந்த கேள்வியை கேளுங்கள் இதை கேட்காது போனதால்தான் நாம் தோற்றுபோனோம் என்று.

அண்ணே நேரம் இருக்கும்போது தயவு செய்து அந்த கேள்வி என்ன கேள்வி என்று ஒருக்கா எழுதிவிடுங்கோ. உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். பல மக்களுக்கு விடுதலை கூட கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலிகளை சந்தித்தேன்

கேள்வி கேட்டேன்

அவர் சந்தித்தவர்களில் புலிகள் இல்லையென்றால்................???

சேர்ந்த இடம்தான் பிழையே தவிர..............??

  • கருத்துக்கள உறவுகள்

ரிவி யள் றேடியோக்கள கையுக்க வச்சுக்கொண்டு பே...பே... யெண்டு கத்தி இங்கதான் கனபேருக்கு பே புடிச்சிருக்கு. குழையடிச்சு பேயோட்டுறத இங்க ஆரம்பிச்சா நல்லாயிருக்கும். :)

அதுக்கு நானும் நீங்களும் என்ன செய்வது........... எங்களுக்கு தண்ணியடிச்சு கழுவவே நேரம் சரியா இருக்கு.

தமிழர்கள் புலிகளிடம் கேளாத அந்த கேள்வி என்ன என்று ஒருக்கா விலாவாரியாக எழுதினால். எங்கள் நாட்டுக்கு உதவாதுபோனாலும் எங்காவது விடுதலைபோர் நடந்தால்..........? அந்த மக்களுக்கு நான் அறிய கொடுப்பேன். உங்கள் விடுதலை அமைப்பிடம்போய் இந்த கேள்வியை கேளுங்கள் இதை கேட்காது போனதால்தான் நாம் தோற்றுபோனோம் என்று.

அண்ணே நேரம் இருக்கும்போது தயவு செய்து அந்த கேள்வி என்ன கேள்வி என்று ஒருக்கா எழுதிவிடுங்கோ. உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். பல மக்களுக்கு விடுதலை கூட கிடைக்கும்.

உந்த அண்ணை முன்னாள் புலியாம் எண்டு அவரே சொன்னவர்.... அவர் யார் எண்டு இங்கை போய் பாருங்கோ...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67860

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், தமிழீழ விடுதலைப் புலிகளிடமே மத்திய குழு இல்லை. அந்த அமைப்பின் அதிகாரமே தனிநபரிடம்தான் இருந்தது. முன்னர் இந்த மத்திய குழுவை அமைக்குமாறு கோரித்தான் பிரச்சினைகள் கிளம்பி பல போராளிகள் அந்த அமைப்பில் இருந்து விலகி இருந்தனர்.

பின்னர் கூட அந்த இயக்கம் மத்திய குழு அமைக்க முயற்சிக்கவும் இல்லை விரும்பவும் இல்லை. காரணம், அந்த அமைப்பை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்தான்.

வரலாறுகளை கூர்ந்து கவனியுங்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் மத்திய குழு இருந்திருந்தால் திட்டமிட்டபடி பல விடயங்கள் நடந்து ஏறி இருக்கும். முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட நிலை கூட வந்திருக்கக்கூடிய வாய்பு இருந்திருக்காது.

நான் கூறிய தகவல்கள் உண்மையைானவை. பிறகு எங்கே நான் புலிகள் இயக்கத்தினையும் அதன் தலைவரையும் விமர்சிப்பதாக எண்ணி என்னை றவுண்டு கட்டி அடிக்காதீர்கள்.

கருத்துக்களை எதிர்ப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு கருத்தையும் தீவிரமாக ஆராய்ந்துவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்.

எமக்கு இப்போது உள்ள முக்கியமான பணியே தவறுகளில் இருந்து பாடங்களை கற்று அதில் இருந்து மீள வேண்டும் என்பதே. இல்லை, நீங்கள் அனைவரும் வீம்பு செய்து கொண்டுதான் இருப்பீர்களாயின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட கதிதான் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களுக்கும் ஏற்படும்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக சரியாகவே போராட்டம் நடத்திய போதிலும் அவர்கள் இராஜதந்திர ரீதியில் மிகவும் பலவீனமாகவே இருந்தனர். எமக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. நாம் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூற வருகின்றேன்.

சிங்கள அரசை நம்ப முடியாது என்கிற விதண்டவாதத்தை தயவுசெய்து கைவிடுங்கள். உண்மையில் சிங்கள அரசை நம்பமுடியாது என்பதனை நான் பூரணமாகவே ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், அவர்கள் தர விரும்பிய எதனையாவது நாம் ஏற்றுக்கொண்டு சிங்கள அரசு எமக்கான உரிமைகளை சரியாக தரவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு காட்டினோமா என்றால் இல்லையே. (ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையே இனி யாரும் இணைத்து தருவார்களா என்பதே கேள்வியானது)

எமது மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடந்தபோது ஏன் சர்வதேச சமூகம் எமக்காக குரல் எழுப்பவில்லை. அதனையும் மீள் பரிசீலனை செய்யுங்கள். (நாம் இராஜதந்திர ரீதியில் புலத்தில் மிகவும் பலவீனமாகவே இருந்திருக்கின்றோம். இப்போதும் இருக்கின்றோம்) எல்லாவற்றையும் சர்வதேசத்தின் மீதும் இந்தியா மீதும் பழி போடுகின்ற குறுகிய மனப்பான்மையை கைவிட்டு விட்டு தவறுகளை நாம் திருத்தவேண்டும்.

ஒரு தடவை யோகரத்தினம் யோகி அவர்கள் கூறிய விடயம் கவனிக்க வேண்டியது. அதாவது, எமது மக்கள் எப்போதும் தப்பித்தலுக்கான காரணங்களைத்தான் தேடுகின்றார்களே தவிர அதனை எவ்வாறு எதிர்கொள்வது முறியடிப்பது என்பதனைப் பற்றி சிந்திப்பதே இல்லை என்றார்.

மீண்டும் நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன். வீண் விதண்டவாதங்களை கைவிட்டு புலத்தில் உள்ள விடுதலைப் புலிகள் சார்பான அமைப்பு மற்றும் அவர்களின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் புறக்கணித்து நீங்களே சுயமாக முடிவு எடுத்து தாயக மக்களுக்கு எது தேவை என்பதனை முடிவு அந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அந்த மக்களின் வாழ்வுக்கு ஒளியேற்றுங்கள்.

இன்னொரு விடயத்தினையும் இங்கே கூற வேண்டும். கூட்டமைப்புக்கு எதிராக ஆய்வு எழுதிய பெருந்தகைகளில் பெருமளவிலானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற கட்சியே போட்டியிடாத மாதிரி கற்பனை செய்து அது வெற்றி பெற்றது தொடர்பான எக்கருத்துக்களையும் பதிவு செய்யவில்லை. அதேபோன்று ஒரு காலத்தில் தமிழர்களின் குரலாக ஒலித்த தமிழ்நெட் இணையத்தளம் (இப்போது ஒலிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து) 82 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என பூசி மெழுகி செய்தி போட்டிருக்கின்றது.

இதில் இருந்து நீங்கள் எல்லோரும் பல விடயங்களில் முடிவு எடுத்து எவற்றை, எவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

இல்லை, இவர்கள் போன்ற ஊடகங்கள், ஆய்வாளர்கள் புலத்து மக்களுக்கு மீண்டும் மூளைச் சலவை செய்யக் கிளம்புவார்கள். இல்லை, சவாரி விட முனைவார்கள்.

ஆகவே, நாம்தான் மிகவும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

:):mellow::) :) உங்களுக்கு நிச்சயமாக ரவுண்டுகட்டி அடிப்பாங்கள். அடிப்பாகங்கள் என்று தெரிந்திருந்தும் எழுதி இருக்கிங்கள்.

தையிரியமான ஆள்தான் நீங்கள்.. :):D :D

அவங்கள் எப்பவும் எதிர்த்தே பழக்கப்பட்டவங்கள்.

மத்திய குழுவோடை பல இயக்கங்கள் வந்து போன வரலாறும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அப்படி மத்திய குழுவோடை இருந்தவர்களால் புலிகளை போல யாரால் சாதிக்க முடிந்தது. ? எதை சாதித்தார்கள் ? என்பதும் இவ்வளவும் சொல்லும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது. அதையும் ஒருக்கா ஆராஞ்சு போட்டு கருத்து எழுதுங்கோ.

அவைகள் உங்களுக்கு தெரிய இல்லை எண்டா அமத்தி வைச்சு கொண்டு இருக்கிறது நலம்.

:):mellow::) :) உங்களுக்கு நிச்சயமாக ரவுண்டுகட்டி அடிப்பாங்கள். அடிப்பாகங்கள் என்று தெரிந்திருந்தும் எழுதி இருக்கிங்கள்.

தையிரியமான ஆள்தான் நீங்கள்.. :):D :D

அவங்கள் எப்பவும் எதிர்த்தே பழக்கப்பட்டவங்கள்.

கடைசியாக நீங்கள் புலியை சொறியிற கூட்டத்தோடை சேருவியள் எண்டது எதிர்பார்த்ததுதான். புலியை சொறியாமல் உங்களால் அரசியல் கருத்துக்களை உங்களவர்களால் சொல்ல முடியாதோ. நீண்டகாலமாக தமிழர்களை வளிப்படுத்தியதில் புலிகள் பங்கு அதிகம் அவர்களை தூற்றுவதை உங்களால் நடுநிலையோடு பார்க்க முடியும் எண்றால் அவர்களின் தியாகத்துக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை எவ்வளவு என்பது புரிகிறது.

உங்களுக்காக மடிந்தவர்களுக்கு மரியாதையையும் , கௌரவத்தையும் கொடுக்க நினைப்பவர்களை கேவலமாக விளிக்கும் நீங்கள் தமிழரின் ஒற்றுமையை பற்றி பேசுகிறீர்கள் என்பது மகா கேவலம்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தடவை யோகரத்தினம் யோகி அவர்கள் கூறிய விடயம் கவனிக்க வேண்டியது. அதாவது, எமது மக்கள் எப்போதும் தப்பித்தலுக்கான காரணங்களைத்தான் தேடுகின்றார்களே தவிர அதனை எவ்வாறு எதிர்கொள்வது முறியடிப்பது என்பதனைப் பற்றி சிந்திப்பதே இல்லை என்றார்.

இன்னொரு விடயத்தினையும் இங்கே கூற வேண்டும். கூட்டமைப்புக்கு எதிராக ஆய்வு எழுதிய பெருந்தகைகளில் பெருமளவிலானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற கட்சியே போட்டியிடாத மாதிரி கற்பனை செய்து அது வெற்றி பெற்றது தொடர்பான எக்கருத்துக்களையும் பதிவு செய்யவில்லை. அதேபோன்று ஒரு காலத்தில் தமிழர்களின் குரலாக ஒலித்த தமிழ்நெட் இணையத்தளம் (இப்போது ஒலிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து) 82 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என பூசி மெழுகி செய்தி போட்டிருக்கின்றது.

இதில் இருந்து நீங்கள் எல்லோரும் பல விடயங்களில் முடிவு எடுத்து எவற்றை, எவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.இல்லை, இவர்கள் போன்ற ஊடகங்கள், ஆய்வாளர்கள் புலத்து மக்களுக்கு மீண்டும் மூளைச் சலவை செய்யக் கிளம்புவார்கள். இல்லை, சவாரி விட முனைவார்கள்.

தாயகம் , தன்னாட்சி , சுயர்ணய உரிமை என்ற பதங்களை மட்டும் வைத்து பிழைப்போட்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமர்ப்பணம்..

இன்னொரு விடயத்தினையும் இங்கே கூற வேண்டும். கூட்டமைப்புக்கு எதிராக ஆய்வு எழுதிய பெருந்தகைகளில் பெருமளவிலானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற கட்சியே போட்டியிடாத மாதிரி கற்பனை செய்து அது வெற்றி பெற்றது தொடர்பான எக்கருத்துக்களையும் பதிவு செய்யவில்லை. அதேபோன்று ஒரு காலத்தில் தமிழர்களின் குரலாக ஒலித்த தமிழ்நெட் இணையத்தளம் (இப்போது ஒலிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து) 82 வீதமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என பூசி மெழுகி செய்தி போட்டிருக்கின்றது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் போது தமிழ் மக்கள் 18% தான் வாக்களித்து அதில் 60% வாக்கை கூட்டணி பெற்று இருந்தால் அதை தமிழ் மக்கள் தனிநாட்டுக்காக கொடுக்க பட்ட ஆணை எண்று சொல்வீர்களோ.?

ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பை தங்களின் தலைமையாக நினைத்து இருந்தால் எந்த தடை வந்தாலும் அவர்களுக்கான தார்மீக ஆதரவை எந்தவளியிலாவது காட்டி இருப்பார்கள். அதுதான் உண்மையானதும் கூட. இந்த கூட்டமைப்பால் அல்லது இருக்கும் அரசியல் கட்ச்சிகளால் தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் வராது என்பதும் வாக்களிக்கும் தகுதியில் யாரும் இல்லை என்பதுவே தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர் வாக்களிக்க போகாது இருந்ததின் காரணம்.

உங்களின் நண்பர் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் போட்டி இடுகிறார் எண்றால் எந்தவேலை இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு வாக்களிக்க போவீர்களா இல்லையா.? அதுக்கு பதிலை தேடுங்கள் தமிழ் மக்கள் தலைமையாக யாரும் இப்போது இல்லை என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இருந்தாலும் சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி இருக்கிறவடியால் இன்னொருக்கா மீட்டுகிறன்,

இரு நண்பர்களின் பாலைவனப்பயணத்திலில் ஒரு பாலைவனச்சோலையில் பசியில் களைத்த முதியவர்களை சந்திக்கிறார்கள்

அவர்களிடையே ஒரு ஒஸ்லோ உடன்படிக்கை இருவரும் சேர்ந்து முதியவரின் பசியை தீர்ப்பதென்று,

உடன்படிக்கை பிரகாரம் இருவரும் தம்மிடம் உள்ள ரொட்டித்துண்டுகளை சமமாகப்பங்கிட்டனர்

முதலாமவரிடம் 5 ரொட்டியும் இரண்டாமவரிடம் 3 ரொட்டியும் இருந்தது அதனை மூன்றாகப்பிரித்து மூவரும் சமமாக உண்டனர்.

விடை பெற்ற முதியவர் முதலாம்வருக்கு 5 வெள்ளிக்காசையும் இரண்டாமவருக்கு 3 வெள்ளிக்காசையும் கொடுத்துவிட்டுச்சென்றார்.

அம்முதியவர் சென்றவுடன் 3 ரொட்டிகாரர் சொன்னார் நாமிருவரும் நம்மிடம் இருந்த ரொட்டிகளை சமமாகவே பங்கிட்டு சாப்பிட்டோம் அவ்வாறாயின் 8 வெள்ளியில் அரைவாசியான 4 வெள்ளி வேண்டும் ஆகவே ஒரு வெள்ளியை என்னிடம் தா எனக்கேட்டு தர்க்கித்தார்.

அப்பிரச்சனை தீர்க்கமுடியாது இருவரும் நீதி மன்றத்திற்கு எடுத்து சென்றனர்

வழக்கை நன்றாக விசாரித்த்ட நீதிபதி 3 ரொட்டிக்காரரிடம் உனது 2 வெள்ளியை 5 ரொட்டிக்காரரிடம் திருப்பிக்கொடுத்து விடு உனக்கு ஒரு வெள்ளிதான் நியாயமாக கிடைக்கவேண்டும் என்றார்.

உங்களில் பெருப்பான்மையிருக்கு இத்தீர்ப்பு புரியாது புரிந்திருந்தால் வெற்றி தோல்வி எண்டு கூச்சல் போட மாட்டீர்கள்

முன்னர் 80 % மக்கள் வாக்களிப்பில் 22 ஆசனங்கள்

இப்ப 30% வாக்களிப்பில் 5 ஆசனங்கள் நீங்கள் கணித்த்தில் நல்ல பு'ளி' ஆக இருப்பியளோ?

எது எவ்வாறிருப்பினும் வென்றவர்ககளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக த தே கூ விளங்க வேண்டும்

ஆனால் இருந்தவர்களை விட்டு விட்டு புதிதாக எப்பிடி சேர்க்கப்போகிறார்களோ எண்டதுதான் கவலையாயிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு பாதகம் என்று தெரிந்தும், இது தெரியாமல் விடுவதால் அல்லது தெரியாது போல் நடித்து பல விடையங்களையும் சிக்கலாக்க நினைக்கும் சில புல்லுவிகளுக்காய், சில விபரங்களை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்...

இங்கே சில ஆய்வாளர்கள், இணையங்கள் கூறும் விடயம் தமிழர்கள் பெரும்பான்மையாக புறக்கணித்ததாக, எதற்காக அவ்வாறு கூறுகிறார்கள், யாரை திருப்திப்படுத்த கூறுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் இதனுடைய பாதிப்பு எத்தகையாது என தெரிந்து கதைகிறார்களா அல்லது தெரியாமல் கதைகிறார்களா என்று தெரியவில்லை.

பெரும்பான்மையோர் புறக்கணித்தனர் என்று சொல்லும் போது முதலில், அங்குள்ள மக்களின் எண்ணிக்கை தெரியவேண்டும்? எப்போது இறுதியாக சனத்தொகை கணக்கெடுப்பு நடந்ததது என்று தெரியுமா? ஒவ்வொரு முறையும் அரசாங்கம் கணக்கொடுப்பு நடத்த முற்பட்ட போதெல்லாம் அதை தவிர்த்தது யார்? என்ன மாதிரி என்று தெரியுமா? அவ்வாறு தடுக்காமல் விட்டிருந்தால் என்னென்ன விளைவுகள் வந்திருக்கும் என்று தெரிந்தா இதை திரும்ப திரும்ப சொல்லுகிறார்கள்...

http://www.slelections.gov.lk/District2004/district2004jaffna.html

http://www.slelections.gov.lk/District2000/district2000jaffna.html

http://www.slelections.gov.lk/District2001/district2001jaffna.html

http://www.slelections.gov.lk/parliamentary_elections/10Z.html

மேற்கூறிய இணைப்புகளை சென்று பாருங்கள், எல்லா வருடமும் 6 லட்சம், 6 அரை லட்சம், 7 லட்சம் என கருதிதே எங்களுக்கு ஆசனப் பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாங்கள் இந்த புறக்கணிப்பை பற்றி கதைத்து அல்லது தூக்கி பிடித்து, இன்னும் பிரச்சனைகளை சிக்கலாக்க போகிறோம்..

பலரும் சொல்லும் 2004 தேர்தலை பாருங்கள் ..மொத்த வாக்களார் ...644,279 வாக்களித்தவர் 305,259 - 47.38%

இந்த முறை 721, 359 வாக்களித்தவர் 168, 277 - 23.33% . இதை விட விபரமாக எழுதி எமது இனத்தை விற்க விரும்பவில்லை..

ஆனால் விரைவில் சனத்தொகை கணக்கெடுப்பு வரும், அப்போது இப்போது 9 ஆக இருக்கிற உறுப்பினர் எண்ணிக்கை 4 ஆகவோ அல்லது 5 தாகவோ வரும் போது யாழ் மாவட்டத்தினதும் வாக்களிப்பு வீதம் 75 ஆகவோ அல்லது 95 ந்தாகவோ இருக்கும். ஆனால் என்ன எங்கள் சார்பாக பாரளுமான்ரம் போகிறவர்களின் எண்ணிக்கைதான் குறைந்திருக்கும் ..அது மட்டுமல்ல பல்கலைகழகத்திற்கு போகிறவர்களினதும் எண்ணிக்கை அறைவாசியாகவோ அல்லது கால்வாசியாகவோ குறைந்திருக்கும்..அப்போதுதாவது திருந்துவோமா என காலம்தான் சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நவீன விஞ்ஞானத்தின் தந்தை எனப்படும் ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு அவையில் வயலின் வாசித்தார் அங்கு வருகை தந்திருந்த ஒரு நகைச்சுவை நடிகர் அதனைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாராம்,

விசனமடைந்த ஐன்ஸ்டீன் சொன்னாராம் நீங்கள் நடித்த நகைச்சுவை காட்சியைப்பார்க்கும் போது கூட என்னால் சிரிக்க முடியவில்லை என்னத்துக்கு இந்த மனிசன் பைத்தியக்காரன் மாதிரி அனியாத்திற்கு சிரிக்குது என்று,

5 ரொட்டி x 3 =15

3 ரொட்டி x 3 =9

மொத்தம் =24

மூவரும் தலா 8 துண்டுகள் சாப்பிட்டார்கள்

அப்படியாயின் 3 ரொட்டிக்காரர் அந்த முதியவருக்கு 1 துண்டை மட்டும் கொடுக்க

5 ரொட்டிக்கார 7 துண்டை கொடுத்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்கை, விடுதலைப் புலிகளின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறீர்கள். நான் எந்தவொரு இடத்திலும் விடுதலைப் புலிகளினதும் அந்த அமைப்பின் தலைவரின் தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை.

மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன். விடுதலைப் புலிகள் தமிழர்களால் தீர்க்கமான போராட்டத்தை நடத்தமுடியும் என்பதனை காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். நாம் அதில் இருந்து அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்பதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

தவறுகள் விட்டதனால்தான் எமக்கு இந்நிலமை ஏற்பட்டிருக்கின்றது என்பதனையே சுட்டிக்காட்டுகின்றேன்.

பிற இயக்கங்களும் மத்திய குழு வைத்திருந்து பின்னர் அவற்றுக்கு நடந்த கதி என்ன என்பதனைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். அது பல நிர்வாகக் கட்டமைப்புக்களை அதன் திறமையான போராளிகளால் திறம்பட நடத்தி வந்தது. அப்படி ஆயின் மத்திய குழு அமைத்தால் அதுவும் சிறப்பாக இயங்கி இருக்காதா என்ன?

நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகளால் சாதிக்க முடிந்தது போன்று பிற இயக்கங்களால் ஏன் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்கிற விடயத்துக்கு நான் ஆழமாக செல்ல விரும்பவில்லை.

எனது அடிப்படை வாதமே மத்திய குழு இருந்திருந்தால் இராணுவ வெற்றிகளை எவ்வாறு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக அறுவடை செய்ய வேண்டும் என்பதனை மத்திய குழுவில் இருக்கக்கூடியவர்கள் வலியுறுத்தி இருப்பார்கள்.

எல்லாவற்றையும் பொறுமையாக இருந்து கூர்ந்து கவனியுங்கள். விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் ஏன் தோல்வியுற்றது என்று ஒருவன் வரலாறு எழுதும்போது யாவும் உங்களுக்கு புரியக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்.

காலங்கள் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்கிற உண்மையை புரிந்துகொண்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலையங்கத்தில் இணைக்கப்பட்ட எனது கருத்து முதிர்ச்சியற்றது, காரணம் தேர்தல் தொடர்பான பூரண அறிவின்மையே ஆகவே எனது கருத்திற்காக கள உறுப்பினர்களிடம் மன்னிப்புக்கோருகின்றேன்!

ஊடகவியலாளர் துரைரத்தினம் தேர்தலுக்கு முதல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை பாருங்கள்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ( கிளிநொச்சி தொகுதி உட்பட) வாக்காளர்களாக தேர்தல் திணைக்களத்தால் 7இலட்சத்து 21ஆயிரத்து 359பேரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் புள்ளிவிபரத் திணைக்களம் இறுதியாக 2008 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 18வயதிற்கு மேற்பட்டவர்கள் 3இலட்சத்து 70ஆயிரத்து 620பேரே இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், யாழ்மாவட்டத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முதல் வெளியேறியவர்கள் உட்பட அங்கு இல்லாத பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாததன் காரணமாகவே 7இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கிருந்த வாக்காளர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் 7இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தார்கள் என்று கூட பிரசாரம் செய்தனர்.

தற்போது கிளிநொச்சி தொகுதி மற்றும் பருத்தித்துறை தொகுதியின் பெரும்பகுதியான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களில் பலர் இறுதிக்கட்ட போரின் போது இறந்துள்ளனர். பலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். முகாம்களில் இருக்கும் பலர் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வில்லை. இதன் காரணமாக நடைபெறப்போகும் தேர்தலில் 2இலட்சத்து 50ஆயிரத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கப்போகிறார்கள். என குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை 148503 வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள 48 அல்லது 50வீதமானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். கிளிநொச்சி தொகுதி மக்கள் சிறிய பகுதியினர்தான் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5ஆயிரம் பேர் வாக்களிக்க சென்ற போது திருப்பி அனுப்பபட்டனர். எனவே மக்கள் தேர்தலை புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவை வழங்கினார்கள் என்று பையித்தியகார தனமாக கதைக்காதையுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,

ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தில் குளிர் காய்ந்த எனக்கு

விடுதலைப்புலிகளைப்பற்றி கதைக்க அருகதை இல்லை.

நான் கேட்பது தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் கேட்கும் கூட்டமைப்பு

தங்களுக்கிடையே அதிகாரத்தையே பகிராமல் இருப்பதைப்பற்றியே.

விடுதலைப்புலிகளையும் கூட்டமைப்பையும் ஒப்பிட்டு

மாவீரர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

வாத்தியார்

.............

பொய்கை, விடுதலைப் புலிகளின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறீர்கள். நான் எந்தவொரு இடத்திலும் விடுதலைப் புலிகளினதும் அந்த அமைப்பின் தலைவரின் தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை.

மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன். விடுதலைப் புலிகள் தமிழர்களால் தீர்க்கமான போராட்டத்தை நடத்தமுடியும் என்பதனை காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். நாம் அதில் இருந்து அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்பதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

தவறுகள் விட்டதனால்தான் எமக்கு இந்நிலமை ஏற்பட்டிருக்கின்றது என்பதனையே சுட்டிக்காட்டுகின்றேன்.

பிற இயக்கங்களும் மத்திய குழு வைத்திருந்து பின்னர் அவற்றுக்கு நடந்த கதி என்ன என்பதனைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். அது பல நிர்வாகக் கட்டமைப்புக்களை அதன் திறமையான போராளிகளால் திறம்பட நடத்தி வந்தது. அப்படி ஆயின் மத்திய குழு அமைத்தால் அதுவும் சிறப்பாக இயங்கி இருக்காதா என்ன?

நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகளால் சாதிக்க முடிந்தது போன்று பிற இயக்கங்களால் ஏன் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்கிற விடயத்துக்கு நான் ஆழமாக செல்ல விரும்பவில்லை.

எனது அடிப்படை வாதமே மத்திய குழு இருந்திருந்தால் இராணுவ வெற்றிகளை எவ்வாறு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக அறுவடை செய்ய வேண்டும் என்பதனை மத்திய குழுவில் இருக்கக்கூடியவர்கள் வலியுறுத்தி இருப்பார்கள்.

எல்லாவற்றையும் பொறுமையாக இருந்து கூர்ந்து கவனியுங்கள். விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் ஏன் தோல்வியுற்றது என்று ஒருவன் வரலாறு எழுதும்போது யாவும் உங்களுக்கு புரியக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன்.

காலங்கள் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்கிற உண்மையை புரிந்துகொண்டால் சரி.

அண்ணை உங்கட கருத்தில் ஒண்றுக்கு ஒண்று முரணான பல அம்சங்கள் இருக்கின்றன. புலிகள் சிறப்பாக செயற்பட்டார்கள் என்கிறீர்கள், பிறகு புலிகள் மத்தியகுழு வைத்து இருந்தான் இன்னும் சிறப்பாக செயற்பட்டு இருக்கலாம் என்கிறீர்கள்.

புலிகளை விட மத்தியகுழு வைத்து இருந்தவர்கள் ஏன் சிறப்பாக செயற்படவில்லை எண்று ஆராய விரும்பவில்லை என்கிறீர்கள். மற்றயவர்களில் தேல்வியை தழுவிய மத்தியகுழு புலிகளுக்குள் மட்டும் முன்னேற்றும் எண்று அளப்பது எதனால்.? உங்கட முயல்களுக்கு மூண்டு கால் எண்டது உங்களோடை மட்டும் இருக்கட்டும்.

புலிகளின் தலைமை பண்புதான் புலிகளை இவ்வளவுக்கும் வளர்த்து விட்டது. அவர்களின் தலைமையே தமிழர்கள் தங்களுக்கு வேண்டியதை பெற முடியும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. மத்தியகுழு கேட்டவன் எல்லாம் சோத்துப்பாசலுக்காக வீட்டு வாசலிலை தவம் கிடந்தனர்.

35 000 மாவீரர்களும் அவர்களின் குடும்பங்களும் மற்றும் போராளிகளும் புலிகளின் பின்னால் நிண்றார்கள் எண்றால் அதுக்கு காரணம் புலிகளின் தலைமை மீதான நம்பிக்கையே. அதை கேவலப்படுத்த நினைக்கும் உங்களை வேறு என்ன மாதிரி சொல்ல முடியும்.?

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் கருத்தெழுதும் சககருத்தாளனது கருத்துக்கு கருத்தெழுதாது

அவனை

முட்டாள் என்றும்

விசரன் என்றும்

பைத்தியக்காறன் என்றும்

விசுக்கோத்து என்றும்............. எப்போ எழுதத்தொடங்கினார்களோ அன்றே கருத்துக்களம் செத்துவிட்டது.

எதற்கும் அடங்காத மக்களின் தீர்ப்புகளுக்கு தலைவணங்காத மக்களின் நலனைவிட தமது தனிப்பட்ட சில தனிஆதிக்க சக்திகளின்

திணிப்புகளே இங்கே நடக்கின்றன.

இவை ஆரோக்கியமான கருத்தாடலோ அல்லது ஆரோக்கியமான பங்களிப்புகளோ அல்ல.

இவை துளியும் எமது மக்களுக்கோ எமது இலட்சியங்களுக்கோ நன்மை தராது என்பதைவிட இருப்பதையும் பிரித்து சிறுசிறு குழுக்களாக்கி அந்த குழுக்களுக்குள் தமது எழுத்துக்களின் வலிமையை தொடர்ந்து பலப்பரீட்சை செய்ய மட்டுமே உதவும்

எந்த ஆதிக்கசக்திகளுக்கும் அல்லது எந்த தனிக்குழுக்களுக்கும் அல்லது எந்த இதுபோன்ற எழுத்துக்களுக்கும் கருத்து எழுதியோ அல்லது இவர்களின் அடாவடித்தனத்துக்கு எழுதி என்னை நான் குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை.

எனது மக்களுக்கான எமது தாயகத்துக்கான எனது வழியில் எனது பங்களிப்பு தொடரும்.

நன்றி. வணக்கம்

விசுகு அண்ணா;

எல்லாற்றை கருத்தையும் கேட்க வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லை பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இல்லை. நீங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு அதை சொல்லும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. இன்னொருத்தர் தவறாக சொன்னால் அதையெல்லாம் பெரிதாக எடுக்காதீர்கள். அவர் தன்னுடைய கருத்தை சொல்கிறார் பிடிக்காவிட்டால் உங்கள் கருத்தை எழுதுங்கள் அதற்காக ஓடி ஒளித்தால் உங்கள் கருத்துக்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாகிவிடும்.

நிலவை பார்த்து நாய் குலைத்தால் நிலாவுக்கு ஒன்றும் இல்லை........புரியும் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.