Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!

Featured Replies

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!

சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் -

தீர்வு விடயத்தில் இன்னமும் காலத்தை இழுத்தடித்தால், அது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்று இந்தியா கருதுவதாகவும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆகவே, சிறிலங்காவின் புதிய அரசு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வை வழங்குவதற்கு தேவையான நாடாளுமன்ற பலத்தை – மூன்றிலிரண்டு பெரும்பான்மையை – தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வழங்குவதாக இந்திய தரப்பிலிருந்து சிறிலங்காவுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில் – புதிய அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

புதிய அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக கெல உறுமய மற்றும் வீமல் வீரவன்ச தரப்பு ஆகியவை, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் அரசதலைவர் தேர்தல் காலப்பகுதியில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமைக்கு போர்க்கொடி தூக்கியபோதும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுத்தருவது குறித்தும் அண்மையில் சிறிலங்கா – இந்திய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.puthinamnews.com/?p=9400

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

  • கருத்துக்கள உறவுகள்

ஆசான் அவர்களே, இப்படியெல்லாம் நடக்கும் எண்டுதான் இங்கு யாழ் களத்தில் அனேகமாணோர் முன்போயே கூறியிருந்தோம். அப்போது எங்களுக்கு அனேகர் தந்த பட்டப்பெயர் நாட்டைவிட்டு ஓடிப்போனவயள். இப்போதும் கூறுகிறோன் தமிழர்விரோததேசமாம் இந்தியாவுடன் உறவு வைத்திருக்கும் அனைவுரும் தமிழினத் துரோகிகளே, இதில் பெரிய துரோகி, சின்னத்துரோகி, இசுக்குட்டித்துரோகி என எதுவித பாகுபாடும் கிடையாது. சம்பந்தன் அல்ல, தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்கூட மீணடெளுந்துவந்து இந்தியாவுடன் அரசியல் சம்பந்தப்போச்சு வைத்தாராகவிருந்தால், அக்கணத்திலிருந்து அவரும் துரோகியே.

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு,

நாங்கள் மணிகட்டாத மாடுகள். நாங்கள் சொன்னால் இது தான் நடக்கும்.

என்றும் சொல்லுவேன் .இது ஆரம்பம் மட்டுமே.இன்னும் பல கூத்துக்கள் காத்திருக்கின்றன. மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்.

வாத்தியார்

...............

ஆசான் அவர்களே, இப்படியெல்லாம் நடக்கும் எண்டுதான் இங்கு யாழ் களத்தில் அனேகமாணோர் முன்போயே கூறியிருந்தோம். அப்போது எங்களுக்கு அனேகர் தந்த பட்டப்பெயர் நாட்டைவிட்டு ஓடிப்போனவயள். இப்போதும் கூறுகிறோன் தமிழர்விரோததேசமாம் இந்தியாவுடன் உறவு வைத்திருக்கும் அனைவுரும் தமிழினத் துரோகிகளே, இதில் பெரிய துரோகி, சின்னத்துரோகி, இசுக்குட்டித்துரோகி என எதுவித பாகுபாடும் கிடையாது. சம்பந்தன் அல்ல, தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்கூட மீணடெளுந்துவந்து இந்தியாவுடன் அரசியல் சம்பந்தப்போச்சு வைத்தாராகவிருந்தால், அக்கணத்திலிருந்து அவரும் துரோகியே.

வடக்கத்தையர்களை இறுதியில் கை கொடுப்பார்கள் என்று தலைவர் நம்பினார் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மை என்ன?

10.000 மேற்ப்பட்ட போராளிகள் அனைத்து முக்கிய தளபதிகளும் உயிரோடு இருந்தும் முள்ளிவாய்க்கால் வரை இருந்தும் மெல்ல மெல்ல பின் வாங்இயதன் காரனம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா கப்பல் அனுப்புது, நோவே கப்பல் அனுப்புது, இந்தியா கப்பல் அனுப்புதெண்டு சொன்னதுகள மறக்கேலுமே!

சொல்கேமோட கதைச்சு ஒவாமாவோட கதைச்சு பான் கி யோட கதைச்சு எதுவும் நடக்கேல.

சிங்கோட அல்லது சோனியாவோட கதைக்க கொள்கை இடம் குடுக்கேலயோ தெரியாது.... ஆனா அத்வானி அம்மாவோட டீல் போட கொள்கையென்ன கோட்பாடு என்ன?

கூட்டமைப்பு இணங்கினாலும் 6 பேர கட்சி தாவ வச்சுதான் யாப்பு மாற்றம் நடக்க போகுது.

வடக்கு கிழக்கு இணைக்க இந்தியா திரும்பவும் இறங்கவேணும்.

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!

இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் -

தீர்வு விடயத்தில் இன்னமும் காலத்தை இழுத்தடித்தால், அது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்று இந்தியா கருதுவதாகவும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியா தலையிட்டாலும் பரந்த அளவிலான அதிகார பரவலாக்கலை மகிந்தவோ அல்லது சிங்கள இனவாதிகளோ தமிழருக்கு வழங்க மாட்டார்கள். இந்தியாவின் அழுத்தத்தால் ஏதாவது கிடைத்தால், அதை வாங்கி கொண்டு இறையாண்மை உள்ள வடக்கு கிழக்கு இணைந்த தீர்விற்காக தொடர்ந்து போராட வேண்டியது தான்.

ஜே.ர் மாகாண சபையை ஒரு தீர்வாக அமுல் படுத்தினவர் தானே, அதன் பின்பும் நாங்கள் போரடினாங்கள் தானே. உலகமும் அது ஒரு பொருத்தமான தீர்வு என்று ஏற்கவில்லை தானே. அது போல மீண்டும் நடக்கும்.

யார் தமிழர் பிரதிநிதிகளாயிருந்தாலும் இந்தியாவினது அரசியல் செல்வாக்கின் அழுத்தம் அங்கு இருக்கும். அரசியல் யாப்பின் மாற்றம் தமிழருக்கு நன்மைதரப்போவதில்லை. இந்தியா விரும்பாமல் எதுவித தீர்வுகளும் தமிழருக்குக் கிடைத்துவிடப் போவதுமில்லை. சிங்களம் எந்தத் தீர்விற்கும் தயாரானாலும் இந்தியாவின் விருப்பமே அதில் ஆதிக்கம் செலுத்தும்.

சர்வதேச அழுத்தங்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய் வேடங்கள். எந்தச் சர்வதேசமும் இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்படாது. இந்தியா எமது மக்களின் ஆயுதப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிட்டது. ஆனால் கூட்டமைப்பினர் ஆயுத பலமற்றவர்கள். அவர்கள்மீதான அழுத்தங்கள் என்ன வகையில் பிரயோகிக்கப்படும் என்ற முறையைப் பார்க்க வேண்டும். தற்போதைய நிலையில் அந்நிலை தமிழருக்கு மேன்மையை ஏற்படுத்துமானால் அழுத்தங்களுக்கு இணங்குவதில் தவறில்லை.

அவ்வாறில்லாமல் பயந்து அழுத்தங்களுக்குப் பணிந்தால் அடுத்த தேர்தல் அவர்களுக்குப் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய புண்ணாக்கு சம்பந்தன். இதுக்கு இணக்கம் சொல்லுறதுக்கு.

சம்பந்தர் மட்டுமே கூட்டமைப்பல்ல. அதிலுள்ளவர்கள் அனைவருமே கூட்டமைப்பினைச் சார்ந்தவர்கள். தாயகத்திலுள்ள அரசியல் எவ்வாறு, யாரால் வழிப்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் வழிநடத்துதலைத் தவிர்க்க முடியாது. இதுதான் அப் பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். 30 வருடப் போராட்டம் தமிழர்களுக்குக் கற்றுத் தந்த பாடமும் கூட.

இதற்கான மாற்று வழியிருந்தால் யாரும் முன்வைக்கலாம்.

வடக்கத்தையர்களை இறுதியில் கை கொடுப்பார்கள் என்று தலைவர் நம்பினார் என்று சொல்கிறார்கள் ஆனால் உண்மை என்ன?

10.000 மேற்ப்பட்ட போராளிகள் அனைத்து முக்கிய தளபதிகளும் உயிரோடு இருந்தும் முள்ளிவாய்க்கால் வரை இருந்தும் மெல்ல மெல்ல பின் வாங்இயதன் காரனம் என்ன?

இந்திய பயங்கரவாதிகள் என அழைக்க தகுதியான 'றோ'வும் காங்கிரஸ்உம், கைக்கூலி நம்பியாரும், கையேந்தி பிழைப்பு நடத்தும் இந்திய வெளியுறவுத்துறையும், இந்தியாவின் ஜனநாயகத்தை நம்பிய மேற்குலகும், பௌத்த தேச பாண் கீ மூனும், சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சிங்கள சதிகாரர்களும் காரணம்.

சம்பந்தர் மட்டுமே கூட்டமைப்பல்ல. அதிலுள்ளவர்கள் அனைவருமே கூட்டமைப்பினைச் சார்ந்தவர்கள். தாயகத்திலுள்ள அரசியல் எவ்வாறு, யாரால் வழிப்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் வழிநடத்துதலைத் தவிர்க்க முடியாது. இதுதான் அப் பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். 30 வருடப் போராட்டம் தமிழர்களுக்குக் கற்றுத் தந்த பாடமும் கூட.

இதற்கான மாற்று வழியிருந்தால் யாரும் முன்வைக்கலாம்.

மாற்று வழி: இந்தியாவை முற்றாக ஒதுக்கி, பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவு வைத்து இந்தியாவை சிதறடிக்கலாம்.

30 ஆண்டுகளில் நயவஞ்சக இந்தியாவை நண்பனாக பார்த்து ஈழத்தமிழர் சந்தித்தது வெறும் அழிவுதான். எந்த நன்மையையும் இல்லை. (ஏதாவது நன்மை கிடைத்திருந்தால் சொல்லவும்.) இது தான் தொடர்ந்தும் 30 ஆண்டுகளில் நாம் பெற்ற பாடம். தொடரும் அழிவை எந்த கையாலாகதவன் கூட விரும்பமாட்டான்.

இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. அது நயவஞ்சக, சதிகார இந்தியர்களின் கைக்கூலிகள். இந்திய வழங்கிய அற்ப சலுகைகளை அனுபவித்துக்கொண்டு, ஈழத்தமிழர் அழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கியவர்கள். இவர்கள் தொடர்ந்தும் நயவஞ்சக, சதிகார இந்தியாவின் புகழ் பாடிக்கொடிருப்பார்கள் என்பதை விளங்குவது சிரமமாயிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

10.000 மேற்ப்பட்ட போராளிகள் அனைத்து முக்கிய தளபதிகளும் உயிரோடு இருந்தும் முள்ளிவாய்க்கால் வரை இருந்தும் மெல்ல மெல்ல பின் வாங்இயதன் காரனம் என்ன?

ஆயுத வழங்கல் இல்லாமல் போனதுதான். செஞ்சோலைக்குக் குண்டு போட்டபோதே விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை என்று சிங்கள இராணுவத்திற்கு தெரிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: இந்தியா அழுத்தம் கொடுத்தால் இணங்குவதுதான் நண்மை பயக்கும் என்று வாதிடுபவர்கள், எவ்வகையான தீர்வொன்றை இந்தியா தரப்போகிறதென்பதையும் சொல்லலாமே?? அப்படித் தரப்படுகிற தீர்வென்பது எந்த உப்புச் சப்புமில்லாமல் இருக்குமென்றால் அப்போது என்ன செய்வதாக உத்தேசம்? அதையும் தலையாட்டி "இணங்கிக்கொண்டு" ஏற்றுக்கொள்ளலாம் என்கிறீர்களா?? ஏனென்றால் இந்தியாவைத் தவிர்த்து எமக்கு எந்தத் தீர்வும் வரப்போவதில்லை என்கிற ஞானம் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடும்வரையிலும் பலருக்கு வராமல் போனது அதிசயம்தான்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத வழங்கல் இல்லாமல் போனதுதான். செஞ்சோலைக்குக் குண்டு போட்டபோதே விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை என்று சிங்கள இராணுவத்திற்கு தெரிந்துவிட்டது.

:mellow: இதுதான் உண்மையில் நடந்தது. இறுதி ரெண்டு மாதத்தில் மட்டுமே புலிகளுக்கு கொண்டுவரப்பட்ட ஆயுத கப்பல்கள் 8 சிங்களக் கடற்படையும், இந்தியக் கடற்படையும் சேர்ந்து அழித்ததாக வன்னியில் 3 வருடகாலம் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் பிடிக்கப்பட்டு டக்கிளஸ் குழுவிற்கு 40,000 அவுஸ்த்திரேலிய டாலர்கள் கப்பம் கட்டி இங்கு வந்தடைந்த ஒரு நண்பர் கூறினார். கனரக ஆயுதப் பற்றாக்குறையும், விமான எதிர்ப்பு ஆயுதங்களின் வெற்றிடமுமே புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறது.பல்குழல் எறிகணை செலுத்திகள், நீண்டதூர ஆட்டிலெறிகள், நூற்றுக்கணக்கான தாங்கிகள், கடல்ப்படையின் நவீன ஏவுகனைகள் என்பவற்றிற்கு முன்னால் புலிகள் வெறும் ஏ.கே 47 உடன் போரிட்டார்களென்பதே உண்மை. விளவு எல்லோரும் தெரிந்ததுதான்.

Edited by ragunathan

இறைவன் அடுத்த தேர்தலிலும் உங்களைப் போன்றவர்கள் இவர்களைத் தான் ஆதரிப்பீர்கள்.எது எது நடக்கும் என்று சொன்னமோ அது நன்றாகவே நடக்கிறது.இந்தியா இன்றி எமக்கு ஒரு தீர்வும் கிடையாது என்றால் இந்தியாவும் சிறிலங்காவும் தரும் தீர்வை ஏற்றுக் கொண்டு அடிமையாகா வாழ்வதே சிறந்தது,ஆனால் என்ன மக்கள் இதனை உணர்ந்து தெளிவடைந்து மீண்டும் போராட இன்னும் காலம் எடுக்கும்.அதுவரை உங்களைப் போன்றவர்கள் இந்தியாவைத் தவிர்த்து ஒரு தீர்வும் இல்லை என்று எழுதிக் கொண்டு இருங்கள்.இந்தியா இன்றித் தான் தமிழருக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புவர்கள் பலர்.அது தமிழகத்திலும் புலத்திலும் களத்திலும் நன்கு வேரூன்றி விட்டது.இதன் பலாபலங்களை இந்தியா ஒரு நாள் உணரும்.

நீங்கள் 3 மாதமாகச் சொன்னது நடக்குது ஒருதரும் கேட்கவில்லை என்று கோபப்படுகின்றீர்கள்.

மற்றவன் 30 வருசமாகச் கத்தி கத்தி சொன்னது நடந்திட்டுது அது விளங்கவில்லை இன்னமும் உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில காலங்களில் புலம்பெயர் நாடுகளிலும் "தமிழீழம்" என்று உச்சரிக்கவோ, எழுதவோ முடியாத நிலை வரும்போது கிடைக்கின்றதைப் பெற்று வாழத் தமிழர்கள் பழகிவிடுவார்கள். இந்தியா மட்டுமல்ல, அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மேற்கு நாடுகளும் தமிழர்களுக்கு ஒரு "தீர்வை"க் கொடுக்கத்தான் போகின்றார்கள்.

இறைவன் அடுத்த தேர்தலிலும் உங்களைப் போன்றவர்கள் இவர்களைத் தான் ஆதரிப்பீர்கள்.எது எது நடக்கும் என்று சொன்னமோ அது நன்றாகவே நடக்கிறது.இந்தியா இன்றி எமக்கு ஒரு தீர்வும் கிடையாது என்றால் இந்தியாவும் சிறிலங்காவும் தரும் தீர்வை ஏற்றுக் கொண்டு அடிமையாகா வாழ்வதே சிறந்தது,ஆனால் என்ன மக்கள் இதனை உணர்ந்து தெளிவடைந்து மீண்டும் போராட இன்னும் காலம் எடுக்கும்.அதுவரை உங்களைப் போன்றவர்கள் இந்தியாவைத் தவிர்த்து ஒரு தீர்வும் இல்லை என்று எழுதிக் கொண்டு இருங்கள்.இந்தியா இன்றித் தான் தமிழருக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புவர்கள் பலர்.அது தமிழகத்திலும் புலத்திலும் களத்திலும் நன்கு வேரூன்றி விட்டது.இதன் பலாபலங்களை இந்தியா ஒரு நாள் உணரும்.

நீங்கள் எழுதும் இந்தக் கருத்திற்கு விடுதலைப்புலிகள் கூட வந்ததில்லை. இந்தியாவுடன் நட்புறவு கொண்டு, தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் இறுதிவரையிலும் முயற்சித்திருந்தனர். யாவராலும் அறியப்பட்ட விடயம் இது. எந்த நம்பிக்கையில் இந்தியாவை ஒதுக்கித் தமிழருக்குத் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்களெல்லாம் சிந்திக்கிறீர்களோ எனக்குப் புரியவில்லை.

இப்படியே இந்தியா எதிர்ப்பின் மூலம் எதைச் சாதிக்க முடியும். பலமுற்றிருந்த விடுதலைப்புலிகள் சாதிக்க முடியாததையா இந்திய எதிர்ப்பாளர்கள் சாதிக்கப்போகின்றீர்கள். நாடுகடந்த அரசாங்கம் முதல் அனைத்துப் புலம் பெயர் அரசியலாளர்கள் இந்தியாவுடன் தமிழர் இனப் பிரச்சனை சம்பந்தமாகப் பேசப்படும் என்று கூறியுள்ளார்கள்.

எந்த அரசியல் பிரச்சனையும் பிராந்திய ஆதிக்கத்திற்குள் இருந்து கைநழுவிச் செல்வதற்கு பிராந்திய சக்தி விரும்பாது. நோர்வே மத்தியஸ்த்தம் செய்ய வந்து விட்டது, என்றபோது இந்தியா ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதாகத்தான் நாம் உணர்ந்தோம். அது அவ்வாறு நடக்கவில்லை. அனைவரும் சேர்ந்தே தமிழரை அழித்தனர் என்பது இன்று வரலாறு.

மாற்று வழி: இந்தியாவை முற்றாக ஒதுக்கி, பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவு வைத்து இந்தியாவை சிதறடிக்கலாம்.

30 ஆண்டுகளில் நயவஞ்சக இந்தியாவை நண்பனாக பார்த்து ஈழத்தமிழர் சந்தித்தது வெறும் அழிவுதான். எந்த நன்மையையும் இல்லை. (ஏதாவது நன்மை கிடைத்திருந்தால் சொல்லவும்.) இது தான் தொடர்ந்தும் 30 ஆண்டுகளில் நாம் பெற்ற பாடம். தொடரும் அழிவை எந்த கையாலாகதவன் கூட விரும்பமாட்டான்.

இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. அது நயவஞ்சக, சதிகார இந்தியர்களின் கைக்கூலிகள். இந்திய வழங்கிய அற்ப சலுகைகளை அனுபவித்துக்கொண்டு, ஈழத்தமிழர் அழிவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கியவர்கள். இவர்கள் தொடர்ந்தும் நயவஞ்சக, சதிகார இந்தியாவின் புகழ் பாடிக்கொடிருப்பார்கள் என்பதை விளங்குவது சிரமமாயிருக்காது.

இன்றைய உலகியற் போக்கு தேவை கருதியது. எந்தத் தேவையுமின்றி உலக நாடுகள் தமது ஆதரவினைத் தெரிவிப்பதில்லை. விடுதலைப்புலிகளின் எண்ணத்தில் உதிக்காத சிந்தனைகள் எம் சிந்தனையில் உதிக்கின்றது. இவ்வளவு வல்லமை படைத்திருந்த விடுதலைப்புலிகள் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாமல் விட்டதேன்.?

இது புலிகளில்லாத களநிலை. அது முற்றிலுமாக உணர்ந்து கொள்ளப்படல் வேண்டும். அடுத்தது உங்கள் விடயம். நீங்கள் மேற் கூறிய நாடுகள்,தமிழரிடமிருந்து எவற்றைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கின்றீர்கள். அப்படிப் பணயம் வைக்கக்கூடிய ஏதாவதொன்றை நம் கைவசம் வைத்துள்ளோமா?

:rolleyes: இந்தியா அழுத்தம் கொடுத்தால் இணங்குவதுதான் நண்மை பயக்கும் என்று வாதிடுபவர்கள், எவ்வகையான தீர்வொன்றை இந்தியா தரப்போகிறதென்பதையும் சொல்லலாமே?? அப்படித் தரப்படுகிற தீர்வென்பது எந்த உப்புச் சப்புமில்லாமல் இருக்குமென்றால் அப்போது என்ன செய்வதாக உத்தேசம்? அதையும் தலையாட்டி "இணங்கிக்கொண்டு" ஏற்றுக்கொள்ளலாம் என்கிறீர்களா?? ஏனென்றால் இந்தியாவைத் தவிர்த்து எமக்கு எந்தத் தீர்வும் வரப்போவதில்லை என்கிற ஞானம் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடும்வரையிலும் பலருக்கு வராமல் போனது அதிசயம்தான்.

எது தீர்வாக இருக்கும் என நானெப்படி ஊகம் செய்ய முடியும். அதுதான் அழுத்தங்கள் என்று ஏதோ காரணம் சொல்லப்பட்டுள்ளதே. இந்த அழுத்தம் என்கிற விடயத்திற்குப் பணிந்த நிலை எமது வரலாற்றிலுண்டு.

விடுதலைப் புலிகளைப் போன்று கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ்க் கட்சியினரோ பலமானவர்களில்லை. ஒன்றை நாடி இன்னொன்றைச் செய்யக் கூடியவர்கள் புலிகள்.

முதலில் தீர்வுத்திட்டம் பற்றிய செய்தி வரட்டும். அதைவிடவும் அழுத்தம் கொடுத்ததான செய்தி உண்மையா என்பதும் தெரியவரட்டும்.

நீங்கள் எழுதும் இந்தக் கருத்திற்கு விடுதலைப்புலிகள் கூட வந்ததில்லை. இந்தியாவுடன் நட்புறவு கொண்டு, தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் இறுதிவரையிலும் முயற்சித்திருந்தனர். யாவராலும் அறியப்பட்ட விடயம் இது. எந்த நம்பிக்கையில் இந்தியாவை ஒதுக்கித் தமிழருக்குத் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்களெல்லாம் சிந்திக்கிறீர்களோ எனக்குப் புரியவில்லை.

இப்படியே இந்தியா எதிர்ப்பின் மூலம் எதைச் சாதிக்க முடியும். பலமுற்றிருந்த விடுதலைப்புலிகள் சாதிக்க முடியாததையா இந்திய எதிர்ப்பாளர்கள் சாதிக்கப்போகின்றீர்கள். நாடுகடந்த அரசாங்கம் முதல் அனைத்துப் புலம் பெயர் அரசியலாளர்கள் இந்தியாவுடன் தமிழர் இனப் பிரச்சனை சம்பந்தமாகப் பேசப்படும் என்று கூறியுள்ளார்கள்.

எந்த அரசியல் பிரச்சனையும் பிராந்திய ஆதிக்கத்திற்குள் இருந்து கைநழுவிச் செல்வதற்கு பிராந்திய சக்தி விரும்பாது. நோர்வே மத்தியஸ்த்தம் செய்ய வந்து விட்டது, என்றபோது இந்தியா ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதாகத்தான் நாம் உணர்ந்தோம். அது அவ்வாறு நடக்கவில்லை. அனைவரும் சேர்ந்தே தமிழரை அழித்தனர் என்பது இன்று வரலாறு.

இறைவன்,

விடுதலைப் புலிகளை நயவஞ்சமாக ஏமாற்றி தோற்கடித்ததன் பின்னணியில் இருப்பது இந்தியா என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.முள்ளிவாய்க்கால் அவலதுக்கு அடிப்படிக் காரணம் இந்திய நயவஞ்சகம்.விடுதலைப் புலிகளையே தோற்கடித்த இந்திய நயவஞ்ஜகத்த்க்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சில்லறை.சர்வதேசத்தை ஆட்டி வைக்கும் இந்திய வல்லாதிக்கம் அழிந்தால் அன்றி தமிழருக்கு எந்த விடுதலையும் கிடிக்காது என்பதே அரசியல் யதார்த்தம்.இவை எல்லாவற்றியும் மறைத்துக் கொண்டு உங்களுக்கு நாங்கள் இந்தியாவின் தயவில் தமீழிழம் பெற்ருத் தருவோம் என்போர் மக்களை ஏமாற்றுகின்றனர்.

தமிழரின் தாயகம் தேசியம் சுயனிர்ணயம் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவின் தயவுடன் நாம் இவற்றைப் பெற்றுத் தருவோம் என்று சொல்பவர்கள் மக்களை ஏமாற்ருபவர்கள்.இல்லை எமக்கு இவை எதுவுமே சரிவராது நாம் இவற்றை விட்டு விட்டு இந்தியா சொல்வதைச் செய்கிறோம் என்று சொல்லுங்கள் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.இன்றில்லாவிட்டாலும் இனி வரும் காலக்ங்களில் இந்திய வல்லாதிக்கதுக்கு எதிரான போர் என்பது உக்கிரம் அடையத் தான் போகிறது.அது வட எல்லையில் மாவோக்களின் எழுச்சியுடனும் இந்திய உபகண்டம் எங்கனம் அடக்கப்படும் தேசிய இனங்கள் பழ்ம் குடியினர் தாழ்த்தப்பட்டோர் என விரியும் அப்போது ஈழத் தமிழரும் அவர்களுடன் சேர்வார்கள்.அத்ற்க்கு பத்து வருடம் ஆகலாம் நூறு வருடம் ஆகலாம். நான் சொல்வது தாயகம் தேசியம் சுயனிர்ணயம் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி அதற்காக மடிந்த மாவீரரின் தியாகங்களை கொச்சைப் படுத்துதி இந்திய வல்லாதிக்கதிடம் விற்காதீர்கள் என்பதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்பிடி எல்லாத்துக்கும் இந்தியாதான் காரணமா இருக்கிது? அகண்ட கால் வைக்கினம் அடியைப்பார் எண்டிட்டு உள்ளுக்க விட்டு அடிப்பம் உறுட்டி அடிப்பம் கவிட்டு அடிப்பம் சுழண்டடிப்பம் உறுண்டு அடிப்பம் கவிண்டு அடிப்பம் எண்டு பேக்காட்டிப்போட்டு இந்தியாதான் எல்லாத்துக்கும் காரணம் எண்டா..... :rolleyes:

புலியை வெளியிலை விடு சனத்துக்கு சொர்க்கத்தை காட்டுறம் எண்டும் சில ஆய்வாளர்கள் தோனி, நெருக்பு, ஆசிய அரிப்பூண் எண்டு எல்லாம் எழுதினவை..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாற்றில துடங்கி முள்ளிவாய்க்கால்வரை எல்லாத்துக்கும் காரணம் புலிதான்..... இந்தியா தன்னுடைய பிராந்திய நலன காப்பாத்திச்சு. இப்ப இல்ல எப்பவும் இந்தியா தன்ர நலன காப்பாத்தும், உங்களிட்ட கொள்கை கோட்பாடு இருக்கிற மாதிரி இந்திய கொள்கையும் கோட்பாடும் இந்திய நலன்தான். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.