Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசுக்கான வாக்களிப்பு சட்டவிரோதமாம். கொழும்புச் சிங்களம் சொல்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமீழீழ அரசின் தேர்தலில் குழறுபடிகள் இங்கிலாந்தின் சில இடங்களில் நடைபெற்றுள்ளன. இக்குழறுபடிகளே நாடுகடந்த அரசைக் கைப்பற்ற சிலர் முனைவதற்குச் சாட்சி. வென்றவர்களில் பலர் இதயசுத்தியுடன் செயற்பட முனையாவிட்டால், நாடுகடந்த தமிழீழ அரசும் பூமி கடந்துவிடும்.

கிருபன் அண்ணா கவலைபடாதீர்கள்..............

பூமி கடந்த அரசு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளேன்!

நாடு கடந்த தமீழீழ அரசின் தேர்தலில் குழறுபடிகள் இங்கிலாந்தின் சில இடங்களில் நடைபெற்றுள்ளன. இக்குழறுபடிகளே நாடுகடந்த அரசைக் கைப்பற்ற சிலர் முனைவதற்குச் சாட்சி. வென்றவர்களில் பலர் இதயசுத்தியுடன் செயற்பட முனையாவிட்டால், நாடுகடந்த தமிழீழ அரசும் பூமி கடந்துவிடும்.

எம்மவர்களிடையே, ... இக்கட்டமைப்பை குழப்பி உடைக்க இங்கு பல கும்பல்கள் ...

1) கே.பியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முக்குதக்குப்பட்ட சில முன்னால் போராளிகள் என்று சொல்லும் கும்பல்

2) நாடு கடந்த அரசு என்று, எல்லோரையும் இணைக்கிறோம் என்று இங்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் வீடு வாசல் ஏறி இறங்கிய கும்பல்

3) பேச்சுச்சுதந்திரம்/ஜனநாயக முகமூடிகளுடன் திரியும் இன்னொரு கும்பல்

இவர்கள் போன்ற பலர், இந்த பலரையும் முந்திக்கொண்டு ..... "விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரிவு" .... செயற்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுக்கள்! இதற்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஒரு குறிப்பிட்ட கோட்டுக்கு மேல் போகமல் இந்தியா பாத்துக்கொள்ள்கிறது.. வியாபாரத்தில் மிக மிக கஸ்டப்பட்டு செழிப்பவர்களை. உடனுக்குடன் தூக்குகிறார்கள்.

சொத்து பறிமுதல் செயப்படுகிறது. சொஞ்சம் தெண்டப்பார்த்தால், குடும்பத்தோடு கொலை செய்யப்படுகிறார்கள்.

இதற்கு EPDP அடியாட்கள் இதற்க்கு உபயோகப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கை வைக்காமல் எமக்கு விமோசனம் இல்லை.......!!!!

இது தான் எனது கருத்தும்.எனக்கு மட்டும் இல்லை இங்க இருக்கிற பலருக்கும் இது தெரியும்.ஆனால் சின்ன திருத்தம்.தமிழரை மட்டும் இல்லை.முழு இலைங்கையும் ஒரு கோட்டுக்கு மேல போவதை அந்த நாய்கள் விரும்பாதுகள்.அது சிங்களவனுக்கும் தெரியும்.அதாவது இலங்கையில் உண்மையான அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுவதை எப்பாடுபட்டாவது தடுக்கும்.உதாரனத்துக்கு போர் முடிந்துவிட்டது என்று அரசு அறிவித்த பின் வட கிழக்கில் அமைதியும் அபிவிருத்தியும் ஏற்பட்டு வருகுது அங்கு பாலாறும் தேனாறும் ஓடுது என்று உள்ளூர் மக்களுக்கும் வெளி உலகுக்கும் காட்ட சிங்களம் தலையால நடக்குது.அப்படியான நேரத்தில் யாழில் ஏற்பட்டுருக்கும் பதட்டம்(கடத்தல் ' வதந்திகள்,கொலை என்பன சாட்ச்சி.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு மேல்மாடி காலியெண்டு என்ன செல்லுறது.... :lol:

சிங்களவனுக்கு மேல்மாடி காலியெண்டு என்ன செல்லுறது.... :rolleyes:

எங்கட ஆக்களுக்கு குறிப்பாக உங்களோட நிக்கிற சிங்களவனுக்கு வால் பிடிக்கிற ஆக்களுக்கு மேல்மாடியே இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அவன் எதற்காகக நிதியை கேட்க வேண்டும். நாம்தானே கோடை விடுமுறைக்கு அன்னியசெலாவணியை அவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகின்Nறூம். வெட்கம் கெட்ட தமிழன். அங்கே ஒரு| இனமே மண்ணிற்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்போது அந்த வீதிகளின் வழியே பயணிக்க நினைக்கின்றான். சொகுசுவாழ்க்கையை அங்கு விளம்பரம் செய்ய நினைக்கும் ஈனத்தமிழன் இருக்கும்வரை ஈழம் கானல் நீர்தான்.

நோர்வேயில் மாத்திரம் கோடைவிடுமுறைக்கு இலங்கைக்கு போவதற்கு 8200 பேர் பதிந்திருக்கின்றார்கள். கொடுமை சாமி

நல்லூர் திருவிழா, மடுத்தேவாலயம் திருவிழா போன்ற திருவிழாக்கள் வர சிறிலங்காவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போகிறவையும் சிறிலங்கா அரசுக்கு அந்நிய செலவணியைக் கூட்டக்கூடிய சிறிலங்கா எயர்லைன்ஸ் விமானத்தில் தான் செல்கிறார்கள். சிங்களதேசத்துப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஊடகங்களிலும் மேடைகளிலும் சொல்பவர்களின் வீடுகளில் இருப்பது டில்மா தேயிலை. அவர்கள் பயணிப்பது சிறிலங்கன் எயர்லைன்ஸ். சிறிலங்கா துடுப்பாட்ட அணி வரும் போது அவர்களின் கைகளில் இருப்பது சிறிலங்காவின் தேசியக்கொடி. தமிழினப் படுகொலைக்கு துணையாக இருந்த காங்கிரசு அரசுக்கு ஆதரவு அளித்த கலைஞரின் சன் தொலைக்காட்சி வெளியிட்ட வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என்று சொன்ன இவர்களின் வீட்டில் காசு கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.

நிர்மலன் எழுதியது அத்தனையும் உண்மை.மற்ற நாடுகளில் என்ன மாதிரி என எனக்கு தெரியாது. கனடாவில் எலக்சனுக்கு நின்றவர்கள் பெரும்பாலானோர் கனேடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.எழுதிவைத்துக் கொள்ளுங்கள் கிட்டடியில் அவர்களுக்குள் பிரச்சனை வரும்.

ஒரு நாளைக்கு எப்படியும் 2,3 தரம் நான் காரில் போகும் போது ஈழவேந்தனை காண்பேன்.இந்த வயசு போன நேரத்தில் நாலுமுழம் வெள்ளை வேட்டியும் ஒரு டீ சேட்டுடனும் கையில் ஒரு பையுடனும் பார்க்க பாவமாக இருக்கும்.அந்தாளை போய் எம் பீ ஆக்கிப் போட்டாங்கள். என்ன கறுமமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் எனது கருத்தும்.எனக்கு மட்டும் இல்லை இங்க இருக்கிற பலருக்கும் இது தெரியும்.ஆனால் சின்ன திருத்தம்.தமிழரை மட்டும் இல்லை.முழு இலைங்கையும் ஒரு கோட்டுக்கு மேல போவதை அந்த நாய்கள் விரும்பாதுகள்.அது சிங்களவனுக்கும் தெரியும்.அதாவது இலங்கையில் உண்மையான அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுவதை எப்பாடுபட்டாவது தடுக்கும்.

தமிழர் பொருளாதாரரீதியாக முன்னேறுவதை தடுப்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? தமிழ்நாடு இந்தியாவில் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் மாநிலங்களில் ஒன்று. ஆகவே தமிழரின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் தமிழரின் பொருளாதாரவளர்ச்சி அதிகரித்தால், தமிழருக்காக ஒரு நாடு என்ற கோரிக்கைக்கு ஆதரவு குறையும். இதுவே இந்தியாவின் தேவை. ஆகவே இலங்கையிலும் தமிழர் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதனால் இந்தியா பயன்பெற இருக்கிறது. மாறாக பொருளாதாரத்தை முடக்கினால் இந்திய எதிர்ப்பு உணர்வும் கிளர்ச்சியும் மீண்டும் அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு வேண்டாத ஒன்று.

உதாரனத்துக்கு போர் முடிந்துவிட்டது என்று அரசு அறிவித்த பின் வட கிழக்கில் அமைதியும் அபிவிருத்தியும் ஏற்பட்டு வருகுது அங்கு பாலாறும் தேனாறும் ஓடுது என்று உள்ளூர் மக்களுக்கும் வெளி உலகுக்கும் காட்ட சிங்களம் தலையால நடக்குது.அப்படியான நேரத்தில் யாழில் ஏற்பட்டுருக்கும் பதட்டம்(கடத்தல் ' வதந்திகள்,கொலை என்பன சாட்ச்சி.)

கடத்தல்களும், கொலைகளும் நடப்பதற்கு காரணம் இலங்கை புலனாய்வு துறைக்கு ஆதரவாக செயற்படும் தமிழர் குழுக்களுக்கு உள்ள சட்டத்துக்கு அப்பாற்பட்ட வலிமை. இந்த குழுக்களின் பயன்பாடு நிறைவு பெறும் காலம் நெருங்கி வருகிறது. ஆகவே இவர்கள் கொள்ளை அடித்து சேர்க்க கூடிய பணத்தை சேர்த்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். இவர்களுடன் இராணுவ புலனாய்வு பிரிவும் கொள்ளையில் பங்கு கொள்கிறார்கள். இந்தியாவோ, இலங்கை அரசோ இவற்றில் பங்கு கொள்வதால் பயன்பெறுவதாக தெரியவில்லை. இலங்கை அரசு இராணுவத்தினதும், தமிழ் குழுக்களினதும் ஆதரவில்லாமல் இந்த கொள்ளை கொலைகளை நிறுத்தும் வலுவற்று இருக்கிறது. பணமுடையால் இலங்கையில் சட்டம் ஒழுங்கு பெருமளவு சீரழிந்து வருகிறது. சில வருடங்களில் இலங்கை உலகில் மிகவும் ஆபத்தான நாடாக தோற்றம் பெறும் நிலை சாத்தியமாக தெரிகிறது. தமிழ் பகுதி இந்தியாவின் முயற்சியால் பாதுகாப்பான பிரதேசமாக உருவாக கூடிய சாத்தியமும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் எழுதியது அத்தனையும் உண்மை.மற்ற நாடுகளில் என்ன மாதிரி என எனக்கு தெரியாது. கனடாவில் எலக்சனுக்கு நின்றவர்கள் பெரும்பாலானோர் கனேடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள்.எழுதிவைத்துக் கொள்ளுங்கள் கிட்டடியில் அவர்களுக்குள் பிரச்சனை வரும்.

கனடாவில் தேர்தலில் நின்றவர்களில் பெரும்பாலோர் கனடா மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் என்று சொல்லுறீர்கள். ஆனால் வாக்களித்தவர்கள் கனடா வாழ் மக்கள். அவர்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் கனடா மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களா? ஏற்றுக் கொள்ளப்படாதவர்களா?

நாடு கடந்த அரசு பற்றிச் சிங்கள அரசு பயம் கொள்கிறது என்பதற்கு அதன் நடவடிக்கைகளே காட்டிக் கொடுக்கின்றன.காரணம் இதற்குப் பயங்கரவாத முலாம் பூசுவது கடினம்.உதவிக்கு இந்தியாவோ சீனாவோ வரமுடியாது.அவர்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது.ஆகவே அவர்கள் உள்ளே புகுந்துள்ளவர்களை வைத்துத்தான் குழப்பம் செய்ய முனைவார்கள்.வெளிப்படைத்தனமை இங்கே நிலவினால் அவர்கள் உள்ளே புகுந்தாலும் அவர்களின் குழப்பம் எடுபடாது போகும் எதற்கும் ஏற்பாட்டாளர்களும் மக்களும் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் எழுதியது சரியே. இந்தியா, சீனா இந்த நாடுகடந்த அரசிற்கான எதிர் நடவடிக்கையில் இறங்காது. அப்படி இறங்கினால் அது மேற்குலக நாடுகளுக்கு இலங்கையரசை தமது முழு வலைக்குள் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது போலாகிவிடும்.

எனது எண்ணம் என்னவெனில், நாடு கடந்த அரசைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அமெரிக்காவின் தயவை நாடும். அப்படியொரு நிலையேற்பட்டால் என்ன முடிவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.