Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதிவு, சங்கதி இணயத்தளங்கள் முன்பு இருந்த அதே தாயக உணர்வுடன் இயங்குகின்றனவா?

Featured Replies

அன்பர்களே.. சைமீப காலமாக சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களின் போக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.. முன்பு தாயகத்தினதும், மக்களினதும் அவலங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த இணையங்கள் தற்போது தனி நபர்களை பகிரங்கமாக சாடும் போக்கை கொண்டிருக்கின்றது.. கீழ்வரும் செய்திகள் இதற்கு சான்று பகர்கின்றன..

கே.பி. குழுவா? தமிழ் மக்களா?

http://www.pathivu.com/?p=302

நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு

http://www.pathivu.com/?p=445

தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வள்ர்ப்பதற்கு பதிலாக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தான் அதிகம் தற்போது இடம்பெற்று வருகின்றன.. இதற்காகவா நம் மாவீரர்கள் தமது இன்னுயிரை அர்ப்பணித்தார்கள்..

சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களா...

தற்போதுள்ள நிலையில் நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் ஏன் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது ?

பதிவுக்கும் சங்கதிக்கும் சந்தேகங்கள் இருந்தால் அவைகள் மக்களுக்கு சொல்ல வேண்டியதும் ஊடகம் எனும் அடிப்படையில் அவர்களின் கடமை....

நாளை KP யால் உருவாக்க பட்ட குழுக்களால் பாதிப்பு வரும் போது தமிழ் மக்களுக்கு இந்த ஊடகங்கள் தெரிந்து இருந்தும் விளிப்புணர்வு ஊட்டவில்லை எண்று சொல்ல கூடாது அல்லவா...??

  • தொடங்கியவர்

சொல்ல வேண்டியது அவர்களின் கடமை அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால் இவ்விணையங்களில் வெளிவரும் சில கருத்துக்கள், மக்களிடம் திணிக்கப்படுபவை போன்று தோன்றவில்லையா..?

மற்றப்படி இந்த இணையங்கள் இறுதிப்போர் காலகட்டத்தில் செய்த பங்களிப்பு மகத்தானது அதை மறுதலிக்க முடியாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிந்தவற்றை வெகுசனத்திடம் எடுத்துச்செல்வதுதான் ஊடகதர்மம். பகுத்தாய்வது எமதுகடமை.பதிவிற்கும் சங்கதிக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் நியாயமானதே.

எந்த ஊடகமாயிருந்தாலும் கருத்து உரிமை பறிக்கலாகாது( இந்தியா ஸ்டைல் !!! ??? :wub::wub::lol: ). அதேபோல யாழ் விதித்திருக்கும் தடையை கூட நீக்க வேண்டுகிறேன் . இப்ப்தேல்லாம் நம்மவர்களுக்கு செய்திகளை துலாவ வேண்டி உள்ளது . நீக்கி மட்டும் பாருங்கள் . ஒரே வெட்டு & ஓட்டுதான்

Edited by tamil paithiyam

அன்பர்களே.. சைமீப காலமாக சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களின் போக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.

பிரச்சினை உங்கள் பார்வையில்! வெளியில் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி, பதிவு, தமிழ்நெட் இணையத்தளங்களில் பக்கச்சார்பற்ற செய்திகளை 2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், மேற்படி இணையத்தளங்கள் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்படுபவை.

யார், யார் நடத்துகின்றனர்; எந்த எந்த நாடுகளில் மேற்படி தளங்கள் நடத்தப்படுகின்றன என்கின்ற விபரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால், அந்த விபரங்களை எல்லாம் வெளியிட்டு, அவர்களைப் போன்று காட்டிக்கொடுப்பவர்களாக இருக்க நான் விரும்பவில்லை.

தனிநபர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களை அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி புலிகள் மிரட்டி நிறுத்தியிருக்கின்றனர். அத்தோடு பணிய வைத்து தமக்குச் சார்ப்பாக நடத்தவும் வைத்திருக்கின்றனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்ட இரண்டு இணையத்தளங்களாவன ஒன்று தமிழ்நேசன் மற்றையது புதினம்.

இதில் சில இணையத்தளங்கள் விதிவிலக்காக துணிச்சலாக செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள் வெளியிடுகின்றன. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஏனெனில் இந்த கடதாசிப் புலிகளுக்கு அச்சமுறாது துணிச்சலாக செயற்படுவதற்கு.

எத்தனை நாளைக்கு இந்த அனைத்துலக தொடர்பகம் ஆட்டம் போடும் என்று பார்க்கலாம்.

இப்போது வேண்டுமானால் சந்தர்ப்பங்கள், காலங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், இது நீண்ட நாட்களுக்கு எடுபடாது. இது வரலாறு கற்றுத்தந்த பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவை தமக்குள்ள சந்தேகங்களை மக்களுக்குத் தெரியப் படுத்துவதில் தவறில்லை.ஆனால் தமிழ் மக்கள் எடுத்த முக்கிய அரசியல் நகர்வான நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான செய்திகளை இருட்டடிப்புச் செய்வது ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகத்தானே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.மக்களுக்கு அதனைத் தெரியப்படுத்துவதால் அவர்களுக்கு என்ன நட்டம் வரப்போகிறது?இதுதான் ஊடக தர்மமா?

பிரச்சினை உங்கள் பார்வையில்! வெளியில் இருப்பதாக தெரியவில்லை.

இந்த இணையத்தளத்தை இயக்குபவர்கள் இயக்கத்துக்கு காசு சேர்ப்பவர்கள் இவர்களுக்கு சில ரெண்டுகளை மெயிண்டேன் பண்ணனும் கண்ணு ...இத்தான் இவியலின் வேலை ..இல்லாட்டி சனம் கொடுத்த காசை கேட்கவேண்டும்...இப்பணததை இவர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும்..அவுடி காரில் திரிவதாகவும் தகவல்...சிலர் லண்டனில் அசைலம் அடிச்சிட்டு சோசியல் மணியும் எடுத்திட்டு இணையம் நடாத்துகிறார்களாம்.....

பலரிடம் பொறுப்பாக கொடுக்கப்பட்டிருந்த பொதுப் பணம், கேட்பாரில்லை என்றவுடன் அவர்களிடமே தங்கிவிட்டது உண்மை தான். இது எமது கட்டமைப்பில் உள்ள பிழையாகவும் இருக்கலாம். அண்மைக் காலங்களில் சனம் தாம் கொடுத்த காசை கேட்டுப் பெறுவது நல்லது.

தாயகத்தில் ஒரு சில புதிய அமைப்புகள் மட்டும் சில உருப்படியான வேலைகளை செய்கின்றன ..அதனால் அவற்றுக்கு மட்டும் கொடுங்கள்....

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன....

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும்.

பலரும் பலருடைய கருத்துக்களைப் பலவிமான கோணத்தில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை யாரும் ஏமாற்றுவதற்கு முயன்றால் காலப் போக்கில் அவர்கள் எமாந்து விடுவார்கள்.

அதே வேளையில் பொதுப் பணி என்று வந்துவிட்டால் பலருடைய எதிர்க் கருத்துக்களையும் முறியடிக்கக் கூடிய, பதில் அளிக்கக் கூடிய மன நிலையில் அவர்களும் இருக்க வேண்டும்.

" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டைத் தவிர மற்ற இந்த இணையத்தளங்கள் போர் வெற்றியில் பிழைப்பு நடத்த உதயமானவை. இவற்றிற்கு சமூக இன விடுதலை பற்றிய உண்மையான நேர்த்தியான கொள்கையோ அக்கறையோ அதனை நோக்கிய பிரச்சார நோக்கமோ இலக்குகளோ கிடையாது. அப்படி இருக்க இவற்றை தமிழ் தேசிய இணையத்தளங்களாக அடையாளப்படுத்தி அவற்றிற்கு வலிந்து வாரி அங்கீகாரம் அளிப்பதை தமிழ் மக்கள் நிறுத்திக் கொண்டால்.. இந்த தேவையற்ற பிரச்சனைகளை குழப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

புலிகள் உள்ளே விட்டு தேள் வடிவில் அடிக்கப் போகிறார்கள் என்று எழுதிய பரபரப்பு இன்று எழுதுகிறது தான் அன்றே புலிகளின் அழிவை எதிர்வு கூறிவிட்டதாக. புலிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதாகக் கூட எழுதுகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத பிழைப்புவாத வசன கர்த்தாக்களின் ஜென்மங்களின் பத்திரிகைகளை படித்து அவர்களிற்கு ஊக்கமூட்டியது யார்... நாம் தானே. அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியதும் நாமே. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு.. தமிழர்களை வழிநடத்த பிரபாகரன் போன்ற ஒரு தலைமையே அவசியம். வேறு எந்தத் தலைமையும் தமிழர்களுக்கு சரிவராது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

தானே தன்னை பிராண்டி தோலுரித்து எதிரிக்கு காட்டும் ஓர் கேடுகெட்ட இனம்.. தமிழினம். இதற்கு விடுதலையாவது நாடாவது தேசியமாவது. அப்படி என்றால் எங்க கனடாவில் அசைலம் அடிச்சா கிடைக்குமோ என்று கேட்கக் கூடிய கூட்டமே இந்த இனம். இதுகளுக்காக உயிர்விட்ட சித்திரவதைப்படும் போராளிகள் மக்கள் தான் பாவங்கள்..!

Edited by nedukkalapoovan

தாயகத்தில் ஒரு சில புதிய அமைப்புகள் மட்டும் சில உருப்படியான வேலைகளை செய்கின்றன ..அதனால் அவற்றுக்கு மட்டும் கொடுங்கள்....

எனக்குத் தெரிய "அகில இலங்கை இந்து மாமன்றம்", "கரித்தாஸ்", "மனித நேய நம்பிக்கை நிதியம்" என்பன இடம் பெயர்ந்த மக்களுக்கு சத்தமின்றி அளப்பெரிய சேவைகள் செய்து வருகின்றன.

  • தொடங்கியவர்

யாரும் யாரைப்பற்றியும் கருத்தெழுதட்டும். செய்திகளை இருட்டடிப்பு செய்யாமல் உள்ளதை உள்ளபடியே வெளியிட்டால் போதுமே.

நாம் சந்தரிப்பவாத பத்திரிகயாளர் என வர்ணிக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் இன் சமீபத்தில் வெளியான ஆக்கம் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இணைப்பை கீழே தருகின்றேன். முடியுமானவர்கள் அல்லது விருப்பமானவர்கள் இதனை மொழி பெயர்த்து இங்கேயோ அல்லது வேறு தலைப்புடனோ பதிவேற்றவும். இதே ஜெயராஜின் கட்டுரைகளை முன்பு நான் படிக்க விரும்புவதில்லை. காரணம் அவரின் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாயிருக்கவில்லை. ஆனால் அவை பிற்காலத்தில் நிதர்சனமானது. அதனாலேயெ இதை இங்கே பதிகின்றேன். மாற்றுக்கருத்துக்களை வரவேற்பீர்கள் என எண்ணுகின்றேன்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/1450

எனக்கு விருப்பமோ, இல்லையோ, பிடிக்குதோ இல்லையோ - நான் ஜெயராஜின் கருத்துக்களை (இலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளில்) தொடர்ந்து படிப்பதற்கு காரணம் - அவரது அலசல் திறன். அவரது அலசல் எல்லாம் 100% சரியாக இருக்க வேண்டியதில்லை

எனக் கருதுவதால் எனக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. நீண்ட காலமாக அவரது கருத்துக்களை இலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளில் காணமுடிவதில்லை.

நாம் புலத்தில் வாழ்வதால், நாம் நன்கு அறிந்த தகவல்களை, சிலவேளை அவர் பிழையாக - அது உண்மைபோல் - எழுதும்போது, அதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்ததும் உண்டு.

நாங்கள் லோன் எடுத்து கொடுத்த பணத்தில் அவுடி கார் ஓடுபவர்கள், கிரீஸ் நாட்டுக்கு இரகசியமாக கப்பல் வித்தவர்கள்...இப்பையும் புலி பாயுது , பறக்குது எண்டு கதைவிடாம தாயக்த்தில் உருப்படியான வேலை செய்யும் அமைப்புகளுக்கு பணத்தை ரான்ஸ்பர் செய்து விடவும்..

இல்ல எல்லார் பெயர் லிஸ்டை கொடுக்க வேண்டிய இடத்தில் மக்கள் கொடுப்பார்கள்......

இது எச்சரிக்கை இல்லை கட்டளை

Edited by தராக்கி

கருத்துக்கள் மக்களை நோக்கி நகரட்டும், மக்களுக்குள்ளேயே செல்லட்டும்; மக்கள் முடிவெடுப்பார்கள். மக்களுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு. முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் சிலர் புலிகள் இயக்கத்தை பொறுப்பெடுத்து நடத்த தொடங்கினர் ( முன்னர் விலக்கப்பட்டவர்கள்). அவர்கள் கூட்டம் வைத்து காசு கேட்டபோது மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். ஏன் அண்மையில் சணல்4 தொலைகாட்சி போர்குற்ற செய்திகளை வெளியிட்டதனால் அவங்களை கவனிக்க வேண்டும் சரியில்லைதானே என்று ஒரு குழு காசு கேட்க சனம் குடுத்திருக்கு இதை எல்லாம் எப்படி சொல்ல. சணல் 4 காரங்களை கவனிக்க காசு சேர்க்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டாலே சணல்4 செய்திகளின் நம்பிக்கை தன்மை என்னவாகும்? இதனை எல்லாம் கேட்பவர்களும் கொடுப்பவர்களும் ஜோசிப்பதில்லையா? இதை செய்கின்றவர்களில் நன்கு படித்தவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் வேதையானதொன்று.

இந்த இரண்டு இணையத்தளங்களையும் மக்கள் இப்போது நம்பவதில்லை.பொய்யும் புரட்டும் சேறடிப்பும் தான் இந்த இணையத்தளங்களின் ஊடகக் கொள்கையாகும்.

பாரிசில் தன்னுடைய பாலியல் சேட்டைகளை தொடர்வதற்கான திட்டமிடலை நடத்தும் மூத்தா சாமிகளின் தொடர்பாடல் இடமாக இந்த ஊடகங்களின் பணிமனை மாறிவிட்டது

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், முன்னர் தமிழ்நெட் செய்த பணிகளை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

தமிழ்நெட் இணையத்தளமானது கடந்த வருடம் மே 19-க்குப்பின்னரான காலப்பகுதியில் இருந்து இன்றுவரை அதன் நம்பகத்தன்மை, நடுநிலமை ஆகியவற்றை இழந்துவிட்டது. இதற்கு காரணம் அந்த இணையத்தளத்தினை நடத்தி வருகின்றவர் அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி புலிகளின் பணத்தினைப் பெற்று இயங்குவதே.

இதனை இதில் யாராவது மறுக்க முனைந்தால் சகலவிதமான ஆதாரத்துடனும் என்னால் சமர்ப்பிக்க முடியும். ஆனால், இதுவும் ஒரு காட்டிக்கொடுப்பாகவே முனையும்.

முன்னர் பார்த்து வந்த தொழிலைக் கைவிட்டு முழுநேரமாக தமிழ்நெட்டுக்காக அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி புலிகளின் பணத்தினையும் பெற்று அ(இ)தற்கும் மேலாக தான் இன்னொரு மதியுரைஞராக வருவதற்காக அனைத்துலக தொடர்பகத்தினை தவறான வழிக்கு இட்டுச் செல்பவரில் இவர் மிக மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றார்.

இவற்றை நீங்கள் அவர் வெளியிடும் செய்திகள், ஆய்வுகள் கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். (நாடு கடந்த தமிழீழ அரசினை குழப்ப முயற்சிப்பதில் தமிழ்நெட் காத்திரமான பங்கு வகிக்கின்றது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்)

இதே தமிழ்நெட்டுக்காக உயிரைக்கொடுத்த சிவராம், புலித்தேவன், வன்னிச் செய்தியாளர் உள்ளிட்ட பலருக்கு தமிழ்நெட் தற்போது செய்கின்ற பணி மிக மிகக் கேவலமானது.

முன்னர் தமிழ்நெட் செய்திகளை ஆதாரமாக வெளியிட்ட அனைத்துலக மற்றும் இந்திய ஊடகங்கள் இன்று எவையுமே தமிழ்நெட் செய்திகளை கண்டுகொள்வதில்லை. ஏன் எமது மக்களில் பெருமளவிலானோர் கூட தற்போது பார்வையிடுவதனை தவிர்த்துவிட்டனர். வேண்டுமெனில் இதற்குக்கூட கருத்துக்கணிப்பு நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டைத் தவிர மற்ற இந்த இணையத்தளங்கள் போர் வெற்றியில் பிழைப்பு நடத்த உதயமானவை. இவற்றிற்கு சமூக இன விடுதலை பற்றிய உண்மையான நேர்த்தியான கொள்கையோ அக்கறையோ அதனை நோக்கிய பிரச்சார நோக்கமோ இலக்குகளோ கிடையாது. அப்படி இருக்க இவற்றை தமிழ் தேசிய இணையத்தளங்களாக அடையாளப்படுத்தி அவற்றிற்கு வலிந்து வாரி அங்கீகாரம் அளிப்பதை தமிழ் மக்கள் நிறுத்திக் கொண்டால்.. இந்த தேவையற்ற பிரச்சனைகளை குழப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

புலிகள் உள்ளே விட்டு தேள் வடிவில் அடிக்கப் போகிறார்கள் என்று எழுதிய பரபரப்பு இன்று எழுதுகிறது தான் அன்றே புலிகளின் அழிவை எதிர்வு கூறிவிட்டதாக. புலிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதாகக் கூட எழுதுகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத பிழைப்புவாத வசன கர்த்தாக்களின் ஜென்மங்களின் பத்திரிகைகளை படித்து அவர்களிற்கு ஊக்கமூட்டியது யார்... நாம் தானே. அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியதும் நாமே. ஆனால் ஒன்று மட்டும் தெளிவு.. தமிழர்களை வழிநடத்த பிரபாகரன் போன்ற ஒரு தலைமையே அவசியம். வேறு எந்தத் தலைமையும் தமிழர்களுக்கு சரிவராது. தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

தானே தன்னை பிராண்டி தோலுரித்து எதிரிக்கு காட்டும் ஓர் கேடுகெட்ட இனம்.. தமிழினம். இதற்கு விடுதலையாவது நாடாவது தேசியமாவது. அப்படி என்றால் எங்க கனடாவில் அசைலம் அடிச்சா கிடைக்குமோ என்று கேட்கக் கூடிய கூட்டமே இந்த இனம். இதுகளுக்காக உயிர்விட்ட சித்திரவதைப்படும் போராளிகள் மக்கள் தான் பாவங்கள்..!

நன்றி நெடுக்ஸ்!

நான் இந்தப்பக்கத்திற்கே வருவதை நிறுத்தி விட்டேன், இருந்தும் உங்களது இந்த கருத்து.....பாராட்டுக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.