Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழக்கறிஞர்களின் நிலை கவலைக்கிடம்? சிவதம்பியோ விருந்தில்……

Featured Replies

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ அறிஞர்களும் இந்த மாபலி விருந்தில் கை நனைக்க கோவை சென்றுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் அவர்கள் குறித்த எந்த விதமான செய்தியையும் கருணாநிதியின் ஊடகங்களோ ஆளும் வர்க்க நீதிமன்றங்களோ பேசாமல் தவிரிக்கின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யபப்ட்ட மனுவில், ” வழக்கறிஞர்களைப்

பார்வையிட வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி கேட்டோம். சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடருபவர்களுக்கு அனுமதி அளிக்கச் சிறை விதிகளில் இடமில்லை என சிறை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் உதவி அளிக்கவும், அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது வழக்கறிஞர்கள் ஆணையரையோ, முடியாத பட்சத்தில் மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரை ஆணையராக நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், துரைசாமி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் ஏ.கே.ராமசாமி அதற்கு பதிலலித்த அரசு கூடுதல் பிளீடர் ராஜசேகரன், மத்திய சிறையில் இருந்த வழக்கறிஞர்கள் மு.ராஜேந்திரன், ம.பா.நடராஜன், கு.ஞா.பகத்சிங், அ.விஜயபாரதி, பி.ஏ.கே.ராஜா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிகிச்சையை ஏற்க மறுத்து வருகின்றனர் என்றார். இந்தநிலையில், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் நியமித்தும் பயன் இல்லை. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே,

மருத்துவமனையில் உள்ளவர்கள் நிலை குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி டீனும், சிறையில் உள்ள எழிலரசு குறித்து சிறை கண்காணிப்பாளரும் புதன்கிழமை காலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது டிவிஷன் பெஞ்ச்.

(This website and its Articles are copyright of inioru.com – © inioru.com 2007-2010. All rights reserved. For republication or reproduction please provide the complete link of the article and the name of this website. email:inioru@gmail.com).(இனியொரு இணையத் தளத்தில் வெளிவரும் கட்டுரைகளை மீள்பதிவு செய்யும் போது கட்டுரைக்கான தொடுப்பையும் தயவுசெய்து வெளியிடவும். அச்சு மீள்பதிவிற்கு அனுமதி பெற inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்.)

http://inioru.com/?p=14231

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான எதிரியை விட்டுவிட்டு ஏனைய எல்லோருடனும் மோதுவது என்பதுதான் எமது தோல்விகள் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நாம் பழியை தோல்வியில் இருந்து சிங்கள அரசோ தனது பிரதான எதிரியான போராளிகளுக்கு எதிராக ஏனைய எல்லோரையும் முழு உலகத்தையும் அணி திரட்டுவதில் தொடர்ந்தும் குறியாய் இருக்கிறான்.

பிரதான எதிரியைத் தவிர்த்து ஏனைய எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவது நண்பர்களை ஆதரவாளர்களாக்குவது என்பதுதான் எதிரியின் அணுகுமுறையாக எப்பவும் இருந்தது இருக்கிறது. நாமோ பிரதான எதிரியை விட்டு விட்டு ஏனைய அணியினரை எதிரிகளாக்குவதிலும் போட்டுத் தள்ளுவதிலும் நட்ப்பு முரண்பாடுகளுக்கு துரோகி பட்டம்கட்டி அவர்களை எதிரியாக்குவதிலும்தான் இன்னும் மினக்கெடுகிறொம்.

எதிரியை மட்டும் தனிமைப் படுத்துவதும் ஏனையவரை வெவ்வேறு மட்டங்களில் வென்றெடுப்பதும் தான் அரசியல் இராஜதந்திரத்தின் முதல் பாடம். நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அரசியல் கலப்புள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புக் கிளம்[புவது வேறு.அத்தகைய அழுத்தம் நன்மைதரலாம் தராமல்போகலாம். ஆனால் நாம் தமிழ் நாட்டு அரசியலில் தலையிட்டு பகை வளர்ப்பது மீண்டும் தோல்விக்கே இட்டுச் செல்லும்.

எண்பதுகளின் முதல் பாதியில் எம்ஜிஆர் கருணா நிதி மோதலில் நடுவு நிற்காமல் பக்கம் சார்ந்ததும் ரெலோ மோதலை இந்தியாவுடனான மோதலாக பிரச்சாரம் செய்து செயல்பட்டதும் என நமது பிழையான இராசத்ந்திரத்தை இனியாவது நாம் திருத்த வேணும். பிழைகளல்ல பிழைகளில் இருந்து கற்றுக்கொள்ளாதமையே நமது குறைபாடு. தோல்வியல்ல தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளமையே எமது குறைபாடு.

ஈழத் தமிழர் விடிவுக்கும் விடுதலைக்கும் மகிந்த அரசுடன் மோதுவதை விட்டுவிட்டு கலைஞர் அரசை திட்டித் தீர்ப்பதிலும் நம்மெல்லோரதும் தாய்மொழியின் செம்மொழி மாநாட்டை எதிர்ப்பதும் நமது மீட்ச்சிக்கும் விடுதலைக்கும் என்ன விதத்தில் பங்களிக்கப் போகிறது? லாபத்தைத் தரும்போடுகிறது. தெரிந்தால் சொல்லுங்க

Edited by poet

  • தொடங்கியவர்

நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்று எவ்வாறு தீர்மனிக்க முடியும்? நாம் அனாதரவான நிலையில் இந்த உலகைப் பார்த்துக் கதறிய போது எமக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் இந்த வழக்குரைஞர்கள்,மாணவர்கள் சாதாரண தமிழ்னாட்டு உழைக்கும் மக்கள்.இவர்கள் தான் எமது நண்பர்கள்.இந்த உண்மையான ஆதரவுத் தளத்தையும் அவர்களின் போராட்டத்தையும் அடக்கியது திசைதிருப்பியதும் இந்த முத்துவேலு கருணானிதி.இவர் ஏன் அவ்வாறு செய்தார்? அவருக்கு நாங்கள் என்ன கெடுதல் செய்தோம்? அவர் செய்தது அவரின் நலனை அவரின் குடும்ப நலனை அவரின் அரசைப் பாதுகாக்க , கடலின் மறுமுனையில் இருக்கும் தமிழர்களைப் படுகொலை செய்வதற்க்கு உடந்தையாக இருந்தார்.இன்றும் இது பற்ரி அய்னாவே பேசும் போது ஒரு தமிழ் முதலமைச்சர் சில மைல்களுக்கு அப்பால் இருப்பவர் வாய் திறக்காமால் தமிழுக்கு விழா எடுகிறாராம்.அவர் எமது நண்பனாம்.உலகில் அரசியல் என்பது நலங்களின் அடிப்படையிலையே இயங்கிறது,இந்த உண்மைக்கு அப்பால் அரசியலில் வேறு ஒன்றும் இல்லை.எமது உண்மையான நட்புச் சக்திகளுடன் இணைந்து இந்த கேடு கெட்ட சந்தர்ப்பவாத மனித நேயமற்ற வேட தாரியை அம்பலப்படுத்தாமால் இந்த நிலமையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது.

நீங்கள் சொல்வதைப் போல் சிறிலங்கா அரசு எலோருடனும் நண்பனாக் இருக்கவில்லை அது எல்லாச் சக்திகளிடையேயும் இருக்கும் முரண்பாடுகளையே தனக்குச் சாதகமாகப்பாவிக்கிறது.இதில் அது சீனாவையும் யப்பானையுமே தனது உண்Mஐயான நேச சக்திகளாக எண்ணுகிறது.அத்தோடு தமிழர் விரோத நிலையில் இருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் அதன் வழியில் தமிழ்னாட்டைக் கொள்ளை இட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைன் நலனையும் அடிப்படியாக அவைத்தே இயங்கிறாது.இதில் கருணானிதி தனது சொத்தைப் பாதுகாப்பாரா உங்கலுக்காKஅக குரல் கொடுப்பாரா?மீண்டும் மீண்டும் நாம் ஏமாறுவது எமது உண்மையான நட்ப்புச் சக்திகளை சர்வர இனம் காணமையே.

கருணாநிதி தனது கடமையைச் செய்யத் தவறிய ஒரு சுயநலகாரர். தனது தவறை மறைப்பதற்கு செம்மொழிக்கு விழா எடுத்துள்ளார். தமிழனுக்கு ஒரு நாடு கிடைப்பதற்கு தன்னால் முடிந்ததை செய்யத் தவறியவரை மன்னிப்பது எல்லோராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ANC பல நாடுகளில் உள்விவகாரங்களில் மாட்டிக்கொள்ளாமல் அந்தந்தந்த நாட்டு ஆழும் கட்சிகளதும் எதிர்கட்ச்சிகளதும் அதிதீவிர வாதிகளதும் நட்ப்பை பெறுவதில் வெற்றி பெற்றார்கள். அரபு நாடுகளைப் பொறுத்து PLO இத்தகைய அணுகுமுறையை கைக்கொண்டது. கடந்த அரைநூற்றாண்டு போராட்ட வரலாற்றில் சாண்டிஸ்டாவில் இருந்து தென் ஆபிரிக்கா எரித்திரியா கிழக்கு தீமோர் வரைக்கும் வெற்றி பெற்றவர்களின் பொது நிலைபாடுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள தவறிவிட்டோம். . பல்வேறு கருத்துள்ளவர்களது ஐக்கிய முன்னணியும் முதல் எதிரியைத் தவிர ஏனையோரது ஆதரவை வென்றெடுப்பதுமே அடிப்படை உத்தியாக இருந்தது. எங்கள் எதிரி சிங்கள அரசுதான். முதல் எதிரியைத் தவர்த்து ஏனைய எதிரிக்களையும் நாம் வெல்ல அனைத்து வழிகளில்ம் முயல வேண்டும்.

எரித்திரியா விடுதலை இயக்கம் தென் எருத்திரிய முஸ்லிம்களை நட்பு வட்டத்துக்குள் வைத்திருப்பதற்க்காக எல்லாவித அரசியல் உபாயங்களையும் விட்டுக் கொடுப்புகளையும் கையாண்டார்கள். அவரகள் முஸ்லிம்கலை எதியோப்பியாவுக்குள் துரத்தியிருந்தால் பயங்கரவாத முத்திரையோடு பிராந்திய அரபு நாடுகளின் எதிர்ப்புகளையும் தேடி அழிந்திருப்பார்கள். நமது தோல்வியில் இருந்தும் ஏனையவர்களது வெற்றியில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுகொண்டாகவேண்டும். இதுவரை நாம் சர்வதேச உறவுகள் தொடர்பாக இயந்திர பாங்கான வரட்டு வாதங்களையே அரைத்த மாவாக அரைத்துக் கொண்டிருந்தோம். நாம் மிக மிக சின்ன இனம். செயல் சாத்தியமான அரசியலை செய்யாவிட்டால் மேலும் மேலும் சிதைந்துபோவோம்.

சிங்களவர் உலக நாடுகளோடு நட்பாடவில்லை முரண்பாடுகளையே கையாண்டார்கள் என்கிற வாதம் இராயதந்திர அடிப்படைகளோடு முரண்படுகிறது. அரசியலில் நட்பென்பது அடிப்படையில் தமது ஆதரவு வட்டத்தை பெருக்குவதும் அதன்மூலம் எதிரியின் ஆதரவு வட்டத்தை சுருக்குவதுமாகும் . ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் முரண்பாடுகளைக் கையாழுவது சாதகமானது. தனிமைப் படும் வகையில் முரண்பாடுகளைக் கையாளுவது பாதகமானது. சிங்களவர்கள் முரண்பாடுகளை தம்மை தனிமைப் படுத்தும் வகையில் கையாளவில்லை. சிங்களவர் முரண்பாடுகளைக் கையாண்டு குறிப்பிட்ட காலத்துக்கு தமது ஆதரவு வட்டத்தைப் பெருக்கினார்கள். உலகத்தில் இருந்து தமிழரைத்தான் தனிமைப் படுத்தினார்கள். எனவே அவர்கள் தேசிய சர்வதேசிய அரசியல் அறிவும் இராச தந்திரமும் வெற்றிகரமாக செயல்பட்டே உள்ளது.நாமும் நம்மைத்தான் தனிமைப் படுத்தினோம்.

தமிழ் நாட்டில் இந்தியாவில் உள்ள உள் முரண்பாடுகளை எங்கள் இனத்தின் பெயரால் கையாளுவது ஆபத்தானது. . எம்ஜிஆர் கலைஞர் முரண்பாடு இந்திய எதிர்ப்பாய் ரெலோ பிரச்சினையைக் கையாண்டமை போன்ற தவறுகளை தனியாராகச் செய்வது வேறு முரண்படும் அணிகளை தனி நபராக ஆதரிப்பது அவரர்வர் அரசியல். வீழ்ந்து கிடக்கும் இனத்தின் பெயரில் செய்வது வரலாற்றுத் தவறாகும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இதற்க்குமேல் சிந்திக்க மட்டுமே உள்ளது. எனது பக்கத்தில் எழுத ஒன்றும் இல்லை.

Edited by poet

ஈழத்தமிழனின் பிரதான எதிரி சிங்களவனா இந்தியனா தமிழனா என்று பட்டிமன்றம் நடத்தலாம். மூன்று தரப்பும் ஒன்றை ஒன்று விஞ்சியது. இந்த மூன்றும் தான் எம்மை சிதைப்பதும் அழிப்பதும். சிங்களவனை பிரதான எதிரியாக சித்தரித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. எமது விடுதலை என்பது எமக்குள் இருக்கும் சீர்கேடுகளை சரி செய்வதிலும் இந்தியாவை வால்பிடிப்பதில் இருந்து விலகுவதிலும் வெற்றிபெற்றாலே சிங்களவனிடம் இருந்து விடுதலை சாத்தியமாகும். விளக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாகவே இந்தியா மீதான எமது எதிர்பார்ப்பின் பலன் இதுவரை இருந்து வருகின்றது. தமிழக அரசியல்வாதிகள் இதுவரை ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து தமது சுயநல அரசியலே செய்துவருகின்றனர். தமது ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக எமது அவலங்களையும் உயிர்களையும் பகடைக்காய்களாக பயன்படுத்திவந்துள்ளனர். இன்று நடக்கும் செம்மொழி மாநாடும் இந்த ஓட்டுப்பொறுக்கி கட்சி அரசியலுக்கானதே அன்றி மொழிக்கானது இல்லை. மனுசன் இருந்தால் தான் மொழியே தேவை இங்கே மனுசன் முக்கியம் இல்லை அவன் பேசும் மொழி முக்கியம் என்பதும் அதுக்கு வக்காலத்தும் எவ்வளவு கேவலம் !

ANC PLO அல்லது வேறு நாட்டு விடுதலைப்போராட்டங்கள் அதன் அணுகுமுறைகள் அனுபவங்கள் அல்லது எவ்விதமான இசங்களும் எமது விடுதலைக்கு ஒத்துவராது. எமது பிரச்சனை உலகில் வாழும் அனைத்து இனக்குழுமங்களில் இருந்தும் வித்தியாமானது. இதன் தீர்வுக்கான வழி எம்மால் மட்டுமே உருவாக்க முடியும். அழுதும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்பது போல் எமக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்கு உரிய வழிகளை நாம் தான் சுயமாக தேடவேண்டும். எல்லாவற்றுக்கும் முதல் நாம் சிங்களவனுக்கு அடிமை என்பதை தெளிவாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஏற்றுக்கொள்ளப்பட்டாலே அதிலிருந்து விடுதலை சாத்தியமாகும். கருணாநிதியே பெரியார் சொன்னதை மேற்கோள்காட்டி ஒரு அடிமை என்னுமொரு அடிமைக்கு உதவ முடியாது என்று ஈழத்தமிழனுக்கு சொல்லியிருக்கின்றார். அந்த அடிமையை வால்பிடித்து அல்லது அதன் ஆதரவை பெற்று இந்த அடிமை விடுதலைபெறுவது? எமது விடுதலை என்பது இந்திய அதிகாரவர்க்கத்திடம் இருந்து தமிழகத் தமிழனின் விடுதலையுடனும் பின்னிப்பிணைந்தது என்பதே முள்ளிவாய்கால் முடிவு கூறிய செய்தி. அதற்கு முதலில் இந்த கூட்டிக்குடுக்கும் கருணாநிதி வகையறாக்களை எதிர்க்கவேண்டும்.

இது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய விடயம்.முதலில் நாம் தெளிவு பெறவேண்டும்.நாளுக்கு நாள் எமது அரசியல் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது.தலைமைகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தமிழர்களின் அபிலாசைகளை மாற்றிக் கொண்டிருக்க முடியாது.இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.

எல்லாவற்றிற்கும் முதலில் நல்ல சக்திகள் ஒன்றுபட்டு ஒரு அரசியல் அமைப்பை தொடங்க வேண்டும்.

இது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய விடயம்.முதலில் நாம் தெளிவு பெறவேண்டும்.நாளுக்கு நாள் எமது அரசியல் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது.தலைமைகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தமிழர்களின் அபிலாசைகளை மாற்றிக் கொண்டிருக்க முடியாது.இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.

எல்லாவற்றிற்கும் முதலில் நல்ல சக்திகள் ஒன்றுபட்டு ஒரு அரசியல் அமைப்பை தொடங்க வேண்டும்.

யார் தலைமையில் ஒன்று படுவது ???

  • கருத்துக்கள உறவுகள்

யார் தலைமையில் ஒன்று படுவது ???

யார் தலைமையில் ஒன்றுபடுவது என்பதல்ல இன்றய காலத்தின் கேழ்வி.

ஒரு சறுக்கலின் ஒரு தோல்வியின் பின் அல்லது ஒரு மாற்றம் ஏற்படும் பொழுதில் உலக இயக்கங்கள் காங்கிரஸ் என்கிற பெயரில் மாநாடு நடத்தி முரண்பட்ட குழுக்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பேசி அரசியல் விவாதன்களுக்கூடாக அடுத்த காலக் கட்ட அரசியலுக்கான பொது வேலைத் திட்டத்தை விவாதிக்க வேண்டும். அத்தகைய ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்க்காக தமக்குள் முரண்பாடுகளை பேசித் தீர்க்கவோ இயலாதாயின் பின்படுத்தவோ இன விடுதலை முயற்ச்சிகளுக்குக் கீழ் படுத்தவோ முடியுமா என்பதை கண்டறிதல் வேண்டும்.

நாம் விடுதலையில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் குறைந்த பட்சம் பொது பிரச்சினைகளிலாவது முரன்பாடுகளோடும் சேர்ந்து வேலை செய்ய முன்வரவேண்டும். இதற்க்கான வாய்ப்புகளை உருவாகவும் நாம் ஒருமுறை கூடி இருந்து பேசவேண்டும். இத்தகைய அரசியல் மாநாடுகளில் குறைந்த பட்ச்சம் பொதுப் பிரச்சினைகளிலாவது ஒன்று சேரக்கூடியவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது வளக்கம். எம்மிடம் இல்லாத இந்த அரசியல் நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்கவேண்டும்.

ஒருங்கிணைப்புக்குழு புலனாய்வு மேலும் எனக்குத் தெரியாத ஏனையகுழுக்கள் நாடுகடந்த அரசு என்கிற எல்லா குழுவினரும் எனது இந்த வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.எனது நண்பர்கள் சர்வே முரளி செல்வின் கிபி.அரவிந்தன் பாலசிங்கம் ராஜன் அன்புக்குரிய உருத்திரகுமாரன் நெடியவன் போன்ற சகலரும் நான் கனடாவிலும் இலங்கையிலும் சந்திதவர்கள். இடைவழியில் இருப்பதால் நான் இங்கு பெயர் சொல்லாத நண்பர்கள், எல்லோரும் தம் தம் முரண்பாடுகளோடு ஓரிரு நாட்க்கள் சந்தித்து விவாதிப்பது என முடிவெடுத்தால் ஏதாவது ஒரு விடிவு கிடைக்கலாம்.

இத்தகைய மாநாட்டின் ஆலோசனைக் குழுவிலும் இறுதி நிகழ்விலும் இதயசந்திரன் அருஸ் இளையதம்பி தயனந்த ஜெயானந்த மூர்த்தி துரைரத்தினம் போன்ற பத்திரிகையாளர்களும் சண்முக ரத்தினம் எம்.எஸ்.பாண்டியன் பினாங் மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் சேரன் போன்ற அறிஞர்களின் ஆலோசனை பொது வேலைத்திட்டத்தை வரவதற்க்கு உதவும்.

தயவு தாட்ச்சணியமில்லாமல் விமர்சனம் சுயவிமர்சனத்தோடு எல்லா விடயங்களையும் நெறியுடனும் நேர்மையுடனும் பேசி தீர்க்க முயலுவதுதான் இன்று விடுதலை தொடர்பாக வைக்க வேண்டிய முத அடியாகும். அதன்பின்னரே சேர்ந்து வேலை செய்ய முடியுமா முடியாதா என்கிற விடயம் ஒவ்வொரு குழுவுக்கும் புரியும். இன்றைய பிழவுகள் அவசர குடுக்கைத் தனமானதும் தனிமனித தனமானதுமாகும்.

அத்தகைய ஒரு மாநாட்டின் தாரக மந்திரம் ”பன்முகக் கருத்துக்களுடன் மக்கள் விடுதலைக்காக ன சந்திப்பு” என்பதுபோன்ற ஒன்றாக ஒன்றாக இருக்கலாம்.

சர்வே முரளி செல்வின் கிபி.அரவிந்தன் பாலசிங்கம் ராஜன் அன்புக்குரிய உருத்திரகுமாரன் நெடியவன் போன்ற சகலரும் நான் கனடாவிலும் இலங்கையிலும் சந்திதவர்கள். இடைவழியில் இருப்பதால் நான் இங்கு பெயர் சொல்லாத நண்பர்கள்இ எல்லோரும் தம் தம் முரண்பாடுகளோடு ஓரிரு நாட்க்கள் சந்தித்து விவாதிப்பது என முடிவெடுத்தால் ஏதாவது ஒரு விடிவு கிடைக்கலாம்.

வணக்கம், ஐயா, நீங்கள் வாழும் நாட்டில், வாழும் பலருடைய பெயர்களைப் பதிவு செய்துள்ளீர்கள், நன்றி, இவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மக்கள் அறிந்துகொள்வதற்கு, ஐயா இவர்களிடம் ஓரு நேர்காணல் கண்டு வெளியிடலாம் அல்லவா?

Edited by kalaivani

மே 18 உடன் இப்படியான ஒரு நிலைப்பாடு வரும் என்றுதான் நான் நம்பினேன்.நடந்தவைகள் நடந்தவைகளாக இனிஒரு செயல்திட்டத்துடன் தமிழன் உலகம்முழுவதும் ஒன்று சேர்ந்து(கடைசி ஒரு குறிப்பிட்ட பகுதியினராவது) வேலை செய்வார்களென்று எதிர்பார்தேன்.

இது என்னடா என்றால் அண்ணை எப்ப எழும்புவார் திண்ணை காலியாகும் என்ற நினைப்பில்தான் பலர் போராட்டத்திலெயே தொடர்ந்து இருந்திருக்கின்றார்கள் என்ற மாதிரி உஇருக்குது.எதோ ஒன்றும் நடக்காத மாதிரி இனி அடுத்த கட்ட போராட்டம் என்று அவனவன் தான் தான் விரும்பியபடி ஆளுக்கொரு தீர்வுகளுடன் அலைகின்றார்கள்.

மக்களுக்கு என்ன நடகின்றதென்றே விளங்கவில்லை .

இவர்கலெல்லாரையும் விட இப்போ அரசாங்கத்துடன் சேர்ந்து மண்ணில் உள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவி செய்ய நினைப்பவர்கள் தான் சரிபோல் எனக்கு படுகின்றது.

அண்ணோய்,

மே 18 உடன் இப்படியான ஒரு நிலைப்பாடு வரும் என்றுதான் நான் நம்பினேன்.நடந்தவைகள் நடந்தவைகளாக இனிஒரு செயல்திட்டத்துடன் தமிழன் உலகம்முழுவதும் ஒன்று சேர்ந்து(கடைசி ஒரு குறிப்பிட்ட பகுதியினராவது) வேலை செய்வார்களென்று எதிர்பார்தேன்.

...இது சரிதானுங்கோ! ^_^

..... இவர்கலெல்லாரையும் விட இப்போ அரசாங்கத்துடன் சேர்ந்து மண்ணில் உள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவி செய்ய நினைப்பவர்கள் தான் சரிபோல் எனக்கு படுகின்றது.

... ஆனால் இது தப்புங்கோ!! :lol:

... எதோ சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு செய்தது/செய்து கொண்டிருக்கிறது/செய்யப் போகிறது ... நாம்தான் ... அவர்களை விட்டு தொலைவில் நிற்கிறோம் என்பது போல் சிலரது கருத்துக்கள்!!

... போராளிகளை காப்பாற்ற வேண்டும்/விடுவிக்க வேண்டும் என்பதற்க்காக சிங்களவனது காலில்!!!!!!!!!!!!!!??????????? .....

  • தொடங்கியவர்

[ஃஉஒடெ நமெ='பொஎட்' டடெ='23 Jஉனெ 2010 - 11:59 PM' டிமெச்டம்ப்='1277333946' பொச்ட்='594113']

ஆண்C பல நாடுகளில் உள்விவகாரங்களில் மாட்டிக்கொள்ளாமல் அந்தந்தந்த நாட்டு ஆழும் கட்சிகளதும் எதிர்கட்ச்சிகளதும் அதிதீவிர வாதிகளதும் நட்ப்பை பெறுவதில் வெற்றி பெற்றார்கள். அரபு நாடுகளைப் பொறுத்து Pளோ இத்தகைய அணுகுமுறையை கைக்கொண்டது. கடந்த அரைநூற்றாண்டு போராட்ட வரலாற்றில் சாண்டிஸ்டாவில் இருந்து தென் ஆபிரிக்கா எரித்திரியா கிழக்கு தீமோர் வரைக்கும் வெற்றி பெற்றவர்களின் பொது நிலைபாடுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள தவறிவிட்டோம். [/ஃஉஒடெ]

என்சிக்கும் பிஎலோக்கும் ஒரு இந்தியவோ கருணானிதியோ அருகில் இருக்கவில்லை.மேலும் இவர்கள் எல்லாம் முதலில் தமக்குச் சார்பாக இயங்கக் கூடிய அமைப்புக்கள் தனி நபர்கள் என்று துவங்கித் தான் ஈற்றில் மேற்குலகில் அரசுகலஈயும் அரச இயந்திரத்தையும் மாற்றினார்கள்.இவர்கள் எங்கேயும் தம்மை ஒடுக்கும் அரசையோ அல்லது அதன் கூட்டுச் சக்திகள்யோ வாழ்த்தி வணங்கவில்லை.இந்த சக்திகளை கூடியவரை மக்கள் மத்தியில் அம்ப்லப்படுதினார்கள்.அவ்வறு அமபலப்படுத்த அவர்கள் எல்லா நாடுகளிலும் தமது ஆதரவுத் தளங்களையே பயன் படுதினார்கள்.மேம்போக்காக உலக அரசிய்லைப்பார்க்காமால் இன்னும் ஆளாமாகப் பாருங்கள் வாசியுங்கள். அவதானியுங்கள்.

[ஃஉஒடெ நமெ='பொஎட்' டடெ='23 Jஉனெ 2010 - 11:59 PM' டிமெச்டம்ப்='1277333946' பொச்ட்='594113']

. பல்வேறு கருத்துள்ளவர்களது ஐக்கிய முன்னணியும் முதல் எதிரியைத் தவிர ஏனையோரது ஆதரவை வென்றெடுப்பதுமே அடிப்படை உத்தியாக இருந்தது. எங்கள் எதிரி சிங்கள அரசுதான். முதல் எதிரியைத் தவர்த்து ஏனைய எதிரிக்களையும் நாம் வெல்ல அனைத்து வழிகளில்ம் முயல வேண்டும். . [/ஃஉஒடெ]

எத்ரி யார் என்பது தான் இங்கே உள்ள பிரச்சினை.இந்திய உபகண்ட அரசியல் இந்தியாவோடு பின்னிப் பிணைந்தது.அதிலும் இலங்கை அரசியல் இந்திய உபகண்ட்டத்தோடு அன்னியோன்யமானது.இந்தியாவில் இருக்கும் கலை கலாச்சார மாற்றங்கள் சமூக அமைப்பு என்பன இலங்கைலும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.இங்கே ஆண்டாண்டு காலமாக் ஐருக்கும் ஆரியர் திராவிடர் பிராமணியீஅம் என்னும் உள் முரண்பாடுகள் இந்திய அரசியலில் தாக்கம் செலுதுகின்றன,குறிப்பாக தேசிய இனங்களின் சுயனிர்ணயம் என்பது இந்திய மத்திய ஆளும் வர்க்கத்திற்க்கு முழு இந்திய தேச நலனை விட மிக முக்கியமானதாக இருக்கின்றது.காலம் காலமாக நாங்கள் இதைப் பார்க்கலாம்.முரண்பட்ட நலங்களில் இருந்து கூட்டு முன்னணி அமைக்க முடியாது.ஆண்டானுக்கும் அடிமைக்குமான முன்னணியே அமைக்க முடியும்.

ஃஉஒடெ நமெ='பொஎட்' டடெ='23 Jஉனெ 2010 - 11:59 PM' டிமெச்டம்ப்='1277333946' பொச்ட்='594113']

எரித்திரியா விடுதலை இயக்கம் தென் எருத்திரிய முஸ்லிம்களை நட்பு வட்டத்துக்குள் வைத்திருப்பதற்க்காக எல்லாவித அரசியல் உபாயங்களையும் விட்டுக் கொடுப்புகளையும் கையாண்டார்கள். அவரகள் முஸ்லிம்கலை எதியோப்பியாவுக்குள் துரத்தியிருந்தால் பயங்கரவாத முத்திரையோடு பிராந்திய அரபு நாடுகளின் எதிர்ப்புகளையும் தேடி அழிந்திருப்பார்கள். நமது தோல்வியில் இருந்தும் ஏனையவர்களது வெற்றியில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுகொண்டாகவேண்டும். இதுவரை நாம் சர்வதேச உறவுகள் தொடர்பாக இயந்திர பாங்கான வரட்டு வாதங்களையே அரைத்த மாவாக அரைத்துக் கொண்டிருந்தோம். நாம் மிக மிக சின்ன இனம். செயல் சாத்தியமான அரசியலை செய்யாவிட்டால் மேலும் மேலும் சிதைந்துபோவோம். [/ஃஉஒடெ]

இலங்கைக்குள் மட்டுமல்ல இந்திய உபகண்டம் எங்கனம் அடக்கப்படும் மக்களிடையே கூட்டு முன்னணி அமைக்கப் பட வேண்டும் என்னும் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை.கூட்டு முன்னணி என்பது மக்களின் விடுதலைக்கான அடிப்படியில் இருந்தே அமைக்கப்பட முடியும்.மக்களை அடக்கி ஆளும் ஒரு குடும்ப ஆட்ச்சி நடாத்தும் ஒருவருடன் கூட்டு முன்னணி அமைப்பது எங்கனம் மக்களின் விடுதலையைப்பெர்ருத் தரும் என்பது புரியாத புதிர். நாம் சிதனிததற்க்கு இத்தகைய பிழையான அரசியலே காரணம்.அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது நீங்கள் தான்.தமீழத் தேசிய விடுதலைப் போரை இந்திய உபகண்ட்டத்தில் நிகழும் விடுதலைப் போராகப் பார்க்காமால் அதனை வன்னிக்குள் குறிக்கியதலையே நாம் பலமிழந்து கேட்க்க எவரும் இன்றி முள்ளிவாய்க்காலில் அழித்து ஒழிக்கப்பட்டோம்.அதனால் தான் கீபியினூடாக் ஐந்தியாவின் ரோ குடுத்த கயிற்றைப் பற்ரி எம்மை நாமே சுருக்கிட்டுக் கொண்டோம்.

Edited by narathar

  • தொடங்கியவர்

//சிங்களவர் உலக நாடுகளோடு நட்பாடவில்லை முரண்பாடுகளையே கையாண்டார்கள் என்கிற வாதம் இராயதந்திர அடிப்படைகளோடு முரண்படுகிறது. //

இன்றைய செய்திகளைப் படித்தால் தெரியும் சிங்கள தேசம் யாருடன் இபோது முரண்படுகிறது என.அவர்கள் தங்கள் பேரினவாத நலங்களை என்றும் விட்டுக் கொடுக்காமலே இதுவரை புகோள பிராந்திய அரசியல் முரண்பாடுகளைப் பயன் படுத்தி வந்துள்ளார்கள்.இது தான் அவர்கள் செய்யும் இராசதந்திரம்,இதற்க்கு அப்பால் வேறு என்ன இதில் இருக்கிறது என்பதை நீங்கள் தான் விளக்க வேணும்.முரண்பாடுகளை எமது நலங்களுக்குச்ச் சாதகமாகக் கையாளுதல் தான் சர்வதேச அரசியல் இதற்க்கு அப்பால் வேறு எதை நீங்கள் இராயதந்திர அடிப்படி என்று சொல்கிறீர்கள்? இந்திய உபகண்ட்டத்தில் இருக்கும் முரண்பாடு என்ன, தமிழ நாட்டில் இருக்கும் முரண்பாடு என்ன இதில் யார் எமது நேச சக்திகள், இருக்கின்ற முரண்பாட்டில் நாம் எந்த அரசியல் நிலை எடுப்பது எமது நலனைப் பாதுகாக்கும் இவற்ரின் அடிப்படியிலையே எமது இராசதந்திர அசைவியக்கம் இருக்க முடியுமே தவிர, இதற்க்கு வேறு எந்த குறுக்கு வழிவகையும் கிடையாது.

//அரசியலில் நட்பென்பது அடிப்படையில் தமது ஆதரவு வட்டத்தை பெருக்குவதும் அதன்மூலம் எதிரியின் ஆதரவு வட்டத்தை சுருக்குவதுமாகும் . ஆதரவு வட்டத்தை பெருக்கும் வகையில் முரண்பாடுகளைக் கையாழுவது சாதகமானது. தனிமைப் படும் வகையில் முரண்பாடுகளைக் கையாளுவது பாதகமானது. சிங்களவர்கள் முரண்பாடுகளை தம்மை தனிமைப் படுத்தும் வகையில் கையாளவில்லை. சிங்களவர் முரண்பாடுகளைக் கையாண்டு குறிப்பிட்ட காலத்துக்கு தமது ஆதரவு வட்டத்தைப் பெருக்கினார்கள். உலகத்தில் இருந்து தமிழரைத்தான் தனிமைப் படுத்தினார்கள். எனவே அவர்கள் தேசிய சர்வதேசிய அரசியல் அறிவும் இராச தந்திரமும் வெற்றிகரமாக செயல்பட்டே உள்ளது.நாமும் நம்மைத்தான் தனிமைப் படுத்தினோம். //

ஏற்கனவே விளக்கியது தான் நமது நலங்களில் இருந்தே முரண்பாடுகளைக் கையாள முடியுமே தவிர, நலன்களை விட்டு விட்டு எடுக்கப்படும் எந்த அரசியல் நகர்வும் ,சரணகதியிலையே முடியும்.டக்கிளசு முதல் கேபி வரை இது தான் கதை.

//தமிழ் நாட்டில் இந்தியாவில் உள்ள உள் முரண்பாடுகளை எங்கள் இனத்தின் பெயரால் கையாளுவது ஆபத்தானது. . எம்ஜிஆர் கலைஞர் முரண்பாடு இந்திய எதிர்ப்பாய் ரெலோ பிரச்சினையைக் கையாண்டமை போன்ற தவறுகளை தனியாராகச் செய்வது வேறு முரண்படும் அணிகளை தனி நபராக ஆதரிப்பது அவரர்வர் அரசியல். வீழ்ந்து கிடக்கும் இனத்தின் பெயரில் செய்வது வரலாற்றுத் தவறாகும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இதற்க்குமேல் சிந்திக்க மட்டுமே உள்ளது. எனது பக்கத்தில் எழுத ஒன்றும் இல்லை.////

முரண்பாடுகளை நமது எதிரிகள் கையாள்கிறார்கள் இந்திய அரசு கையாளுகிறது ஆனால் நாம் கையாள முடியாது இதில் எதாவது தர்க்கம் இருக்கிறதா? இராசதந்திரம் என்பதே முரண்பாடுகளைக் கையாளுதல் என்னும் போது, நாம் முரண்பாடுகளைக் கையாளாமால் வேறு எதைத் தான் செய்வது.இந்தியா எங்கனம் இருக்கின்ற நேச சக்திகளுடன் கூட்டணி வைப்பது அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவது, இந்திய ஆளும் வர்க்கத்தை அம்ப்லப்படுத்துவது அதன் அடிவருடியாகத் தொழிற்படும் கருணானிதியை அம்பலப்படுத்துவது இது தான் நாம் செய்யக் கூடிய அரசியல்.கருணாந்தியை வாழ்த்தும் ஒவ்வொரு கணமும் நாம் கருணானிதி செய்யும் துரோக அரசியலையும் வாழ்த்தி வணங்குகின்றோம்.இந்த அங்கீகாரமே ஈழத் தமிழரின் பலவீனமாக் இருந்து வந்துள்ளது.இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்று சொல்லிச் க்cஒல்லியே இந்தியா எம்மை முதுகில் பலதடவை குத்தியும் நாம் மீண்டும் மீண்டும் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.என்று திரும்பி நிற்க்கிறோமோ அன்று தான் இந்தியா எம்மைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

1மேம்போக்காக உலக அரசிய்லைப்பார்க்காமால் இன்னும் ஆளாமாகப் பாருங்கள் வாசியுங்கள். அவதானியுங்கள்.” நாரதர் அவர்கள் என் அறியாமையை அம்பலப் படுத்தி வலங்கிய அறிவுரை. இந்த அறிவிலிமேல் கருணையு அக்கறையும் கொண்டு வளங்கிய அறிவுரை. தங்கள் அறிவுரைக்கு நன்றி. ஒழுங்காக உங்கள் எழுத்துக்கலை வாசித்து அறிவை வளர்க்கும் ஆர்வம் உள்ளது. அனாலும் நீங்கள் தொடர்ந்து எழுதுவதில்லை.

2‘

ஈழத்தமிழனின் பிரதான எதிரி சிங்களவனா இந்தியனா தமிழனா என்று பட்டிமன்றம் நடத்தலாம். மூன்று தரப்பும் ஒன்றை ஒன்று விஞ்சியது. இந்த மூன்றும் தான் எம்மை சிதைப்பதும் அழிப்பதும். சிங்களவனை பிரதான எதிரியாக சித்தரித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை’ நாரதர் அவர்கள்.

ஐயாசிங்களவரை முதல் எதிரியாக்குவதை சிங்களவரைவிட தீவிரமாக எதிர்க்கிறீர்கள்.

மீன்தின்ன ஆசைப்பட்ட பசித்த ஈழத் தமிழ் பஞ்சைப் பராரிகளுக்கு சிங்கள கரையில் வலை விரிப்பது வீண்வேலை இந்தியக் கடலை வற்றடித்தால் காலம் உள்ளளவும் மீனென்ன கருவாடே தின்னலாம் என்கிற உங்கள் ஆலோசனை பிரமாதம்.

3

உங்கள் திறமைக்கு எதிர்காலத்தில் இன்னொரு முள்ளிவாய்க்கால் என்ன வாட்டர்லூவையே உருவாக்கிவிடலாம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Edited by poet

ஐயாசிங்களவரை முதல் எதிரியாக்குவதை சிங்களவரைவிட தீவிரமாக எதிர்க்கிறீர்கள்.

மீன்தின்ன ஆசைப்பட்ட பசித்த ஈழத் தமிழ் பஞ்சைப் பராரிகளுக்கு சிங்கள கரையில் வலை விரிப்பது வீண்வேலை இந்தியக் கடலை வற்றடித்தால் காலம் உள்ளளவும் மீனென்ன கருவாடே தின்னலாம் என்கிற உங்கள் ஆலோசனை பிரமாதம்.

3

உங்கள் திறமைக்கு எதிர்காலத்தில் இன்னொரு முள்ளிவாய்க்கால் என்ன வாட்டர்லூவையே உருவாக்கிவிடலாம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

poet , சிங்களவர்களை பிரதான எதிரியாக இன்று சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக பலத்துடன் போராடும் போது இருந்த எதிரி என்ற உணர்வும் செயற்பாடும் இன்றைய நிலையில் கையில் எடுக்க முடியாது. இன்று உங்கள் பாசையில் எதிரியின் முற்றுமுளுதான கட்டுப்பாட்டுக்குள் எம்மவர்கள் வாழ்வு அமைந்துவிட்ட நிலையில் எதிரியாக உணர்ந்து செயற்பட்டு எம்மை தக்கவைக்க முடியாது. தாயகத்தில் இருந்து வெளியேறி புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் சிங்களவரை எதிரியாக சித்தரிப்பதிலும் உடன்பாடு கிடையாது ஏனெனில் தாயக மக்கள் சிங்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றார்கள். நாம் எத்தகைய அடிமை நிலைக்குள் இருக்கின்றோம் என்பதை உதாசீனப்படுத்தி எதிரி என்று வரையறுத்து அவர்களுடன் வாழமுடியும்?? இன்றய காலகட்டத்தில் தமிழர் சிங்களவர் என்பதை கடந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே தமிழர் தம்மை தக்கவைக்க முடியும். இது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்.

சிங்கள கரையில் வாழும் வரையும் சிங்களக் கடலில் தான் மீன்பிடித்து தின்ன வேண்டும்.

உங்கள் இந்தியப் பாசமும் பற்றும் எந்த அடிப்படையில் என்பது எனக்குத் தெரியாது. கடந்த ஐம்பதாண்டுகாலத்திலான இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையையும் அதன் செயற்பாட்டையும் அனுபவமாக ஏற்றுக்கொள்வது அவசியமாகின்றது. அதிலிருந்து படிப்பினை அவசியமாகின்றது. இந்தியா என்ற தேசம் உள்ளவரை ஈழத் தமிழர்களை இலங்கை மீதான தனது ஆதிக்கத்துக்கு பயன்படுத்திக்கொண்டே இருக்கும். நாம் இலங்கையார்களாக இருந்து எம்மை இந்தியா தனது நலன்களுக்கு பயன்படுத்துவதில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்திய நாட்டாமைகளுக்கு கால் பிடித்துவிட்டால் ஏதாவது பொட்டலம் சிங்களவரிடம் வாங்கித்தருவார்கள் என்று பசியில் பரிதவிக்கும் ஈழத்தமிழனுக்கு வழிகாட்டாதீர்கள். பசி என்று தட்டை நீட்டுபவனுக்கு தட்டில் எச்சில் துப்பிவிடும் கேடுகெட்ட குணம்படைத்ததே இந்திய அதிகாரவர்க்கமும் அதன் அரசும். மில்லியன் கணக்கான தனது சொந்த மக்களை தீண்டாமையில் இருந்த இந்த கணனி யுகத்திலும் விடுவிக்க முடியாத ஜனநாயக விரோத இந்திய அரசு ஈழத்தமினுக்கு உரிமைகள் பெற்றுத்தரும்? இதற்கெல்லாம் என்ன அடிப்படை?

போன கிழமை தோழர் பத்மநாபாவின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு போயிருந்தேன்.அதில் பங்கு பற்றிய பலர் மிக அரசியல் தெளிவுடன் இருந்தார்கள் .எமது போராட்டம் இலங்கையில் மாத்திரம் நேர்மையான சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து ஒரு தீர்வை தமிழனுக்கு எடுத்தாலொளிய மூன்றாந்ததரப்பை எமது பிரச்சனைகளுக்குள் தலையிட வைத்து நாம் ஒரு தீர்வும் காணமுடியாதென்றார். 83 இல் தமிழனை கொல்ல நின்ற சிங்களவனைவுட தமிழனை காக்க நின்ற சிங்களவன் 10 மடங்கு அதிகம் என்றார்.எனக்கு சிங்களவனுடன் பழகிய அனுபவம் அதிகமில்லை.பலரின் கருத்துக்கள் தெளிவாகவும் சரியானதும் போல் இருந்தது.

நம்மட தேசியவாதிகளை நான் கணக்கில் எடுப்பதே இல்லை ஏனெனில் அவர்களின் அரசியல் அறிவும் நேர்மையும் எனக்கு நன்கு தெரிந்ததுதான்.

போன கிழமை தோழர் பத்மநாபாவின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு போயிருந்தேன்.அதில் பங்கு பற்றிய பலர் மிக அரசியல் தெளிவுடன் இருந்தார்கள் .எமது போராட்டம் இலங்கையில் மாத்திரம் நேர்மையான சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து ஒரு தீர்வை தமிழனுக்கு எடுத்தாலொளிய மூன்றாந்ததரப்பை எமது பிரச்சனைகளுக்குள் தலையிட வைத்து நாம் ஒரு தீர்வும் காணமுடியாதென்றார். 83 இல் தமிழனை கொல்ல நின்ற சிங்களவனைவுட தமிழனை காக்க நின்ற சிங்களவன் 10 மடங்கு அதிகம் என்றார்.எனக்கு சிங்களவனுடன் பழகிய அனுபவம் அதிகமில்லை.பலரின் கருத்துக்கள் தெளிவாகவும் சரியானதும் போல் இருந்தது.

நம்மட தேசியவாதிகளை நான் கணக்கில் எடுப்பதே இல்லை ஏனெனில் அவர்களின் அரசியல் அறிவும் நேர்மையும் எனக்கு நன்கு தெரிந்ததுதான்.

தோழர் அர்ஜுன், ... புரட்சிகர வணக்கங்கள்! ... நீங்கள் சொல்வது போல் சிங்களவன் நல்ல...வன்!!!!!??? 48இல் இருந்து இன்று வரை அவன் ஒன்றுமே செய்யவில்லை, எமக்கு! ... எம்மை பாதுகாத்து, எமக்கான உரிமைகளை தந்து .. சீரும்/சிறப்புமாக ... வாழவிட்டிருக்கிறான்!!!!????

தோழரே! ... சிங்களவனோடு சேர்ந்து ... மீண்டும் சேர்ந்து ... செய்த, எத்தனை ஒப்பந்தங்கள் கிளித்தெறியப்பட்டிருக்கின்றன! ... நீங்கள் சிங்களவனோடு பேசித்தீர்கலாம் என்றால் ... ஏறக்குறைய இந்திய இராணுவம் வெளியேறி சில வருடங்களிலேயே சிங்களவனோடு ஒட்டி... ஒட்டி ... ஒட்டி சேர்ந்து செயற்பட்டனீங்கள்! அது ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேல்! ஏன் நீங்கள் சொன்ன சிங்களவனால் ஒட்டி இருந்த உங்களோடு சேர்ந்தி இனப்பிரட்சனைக்கு ஒரு தீர்வை காண முடியவில்லை!! .. புலியை சாட்டுவீர்கள்??? ... புலி அழிந்து விட்டது ... இனியாவது அவனால் ஒரு தீர்வை முன் வைக்க உங்களால் கூற முடியுமா???

அவற்றுக்கு மேல் புலிகளின் இறுதிக்கால நோர்வே பேச்சுக்கு முன்னமே, வேறு சில நாடுகளின் துணையுடன்(இந்தியா உட்பட, திம்புப்பேச்சுவார்த்தௌ) ஏன் சென்றனீர்கள்??? 10 மடங்கு நல்லவனான சிங்களவனை நம்பாமல், ஒரு சர்வதேச உத்தரவாததுடன்(இந்தியா உட்பட) எமக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்று தானே?????

.. எமக்கு கிடைத்த ஒரிரு நல்ல சந்தர்ப்பங்களை(இந்திய/இலங்கை ஒப்பந்தம் உட்பட) எமது அரசியல் மந்தத்தினால் கைநழுவ விட்டு விட்டோம்!

... ஆனால் அதற்காக உங்கள் தோழர்கள் அக்காலங்களில் நடத்திய கொலை வேட்டைகளை மறக்கவா முடியும்???? என் கண் முன்னாலேயே என் உறவினர்களான மூன்று வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்கள் புலிகளல்ல, புலி ஆதரவாளருமல்ல, நீங்கள் அஞ்சலித்த தோழர் பத்மநாபாவினாலும், தோழர் வரதராசப் பெருமாளினாலும் கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றுக்கு செல்லவில்லை என்ற காரணத்திப்னால் இக்கொலைகள்! .. இப்படிப் பல பல பல கொலைகள்!!.. ஆனால் நீங்கள் அஞ்சலியுங்கோ!!!

தோழர் ... பாருங்கள் ... இற்றைக்கு 60 வருடங்களுக்கு மேலாக(ஆயுதம் நாம் தூக்கியது 80களில்)... சிங்களவன் செய்யும் இனவழிப்பு, கலாச்சார அழிப்பு, நிலப்பறிப்பு, சமூக சீர்கேடுகளை கூட கதைக்க முடியாமல், எம் மத்தியில் தான் பிழைகள் உள்ளன என்ற வாதமே உங்கள் தோழர்களிடம்!! ... ஏனெனில் புலத்தில் கூட உங்கள் தோழர்கள் கதைக்க முடியாமல் வாய்ப்பூட்டு!!! ...

தோழர், ... உங்களுக்கு தெளிவாக/புரியும்படி கதைத்த தோழர்களின் இன்றைய ... சட்டியினுள் இருந்து அடுப்புக்குள் விழுந்த ... நிலைதான்!! ... உந்த தோழர்கள் சரணாகதி! ... சொல்வதை செய்ய வேண்டுமே ஒழிய வேனொன்றும் அவர்களால் இயலாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் இன்றைய முதல் எதிரி இன்றைய இந்தியாவும் அதன் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுமே.

இந்தியாவின் இறையாண்மை என்று சொல்லிக் கொண்டு ஈழத் தமிழரின் வாழ்க்கையில் விளையாடும் இந்திய அரசை

சிங்கள இனவெறியரின் தமிழின அழிப்பிற்கு சகல உதவிகளையும் வழங்கும் இந்திய அரசை

தென்னாசியாவின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழரின் நிலங்களை ஆக்கிரமிக்கும் இன்றைய இந்திய அரசை

சமாதானப் படை என்று கூறிக்கொண்டு ஈழத்தமிழப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இந்திய அரசை

என்னவென்று சொல்லச் சொல்கின்றீர்கள்?

பொது எதிரி சிங்கள அரசாக இருந்தாலும் முதலில் வெல்லப்பட வேண்டியது இன்றைய இந்திய அரசும் அதன் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுமே.

இல்லையேல் ஈழத்தமிழன் மீண்டும் விழித்தெழும் போது இவர்கள் தான் முதலில் குறுக்கெ வந்து நிற்பார்கள்.

வாத்தியார்

**********

சிவத்தம்பி மாணவர்களின், பாடசாலை ஆசிரியர்களின் கட்டுரைகளை திருடி தனது ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்து பிழைப்பு நடத்தியவர் என்பது யாழ் பல்கலை சமூகத்தினர் அறிந்த செய்தி.

ஆரம்பத்தில் கொம்யூனிஸவாதியாக தன்னை அறிமுகப்படுத்திய சிவத்தம்பி, தனக்கு வால் பிடிப்பவர்களுக்கு (அரைவேக்காட்டு மாணவர்களுக்கு), தனது ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் மாணவர்களுக்கு, தனது பதவிநிலையை பயன்படுத்தி பல்கலைக்கழக வேலைகளில் உள்வாங்கி தனக்கென ஒரு விசிறிப் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சிவத்தம்பியின் அரைவேக்காட்டு இலக்கியவாதிச் சுயரூபம் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.

வணக்கம். வாத்தியார்

எமது விடுதலைக்கு முதல் எதிரியாக இந்தியாவே இருந்து வருகின்றதென்பதை நாம் உரத்துக்கூறவேண்டும். இந்தியா எம்மைத் தொடர்ந்து அழித்து வருகின்றது. எமது தற்போதைய தலைமைகள் தொடர்ந்து இந்தியாவிற்குச் சாமரம் வீசி உரிமைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் செயற்படுகின்றன.

இந்தியா எமக்குச் செய்த அழிவுகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். சர்வதேசத்தில் இந்தியாவின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்.

செம்மொழி மகாநாட்டிற்கு போனதற்காக பேராசிரியர் சிவத்தம்பியின் அறிவிலும் குறை காணுவது அறிவிலித்தனம்.

30 வருடங்கள் இதைத்தான் செய்தோம் இனி இவற்றை விட்டு விடுங்கள்.

இலங்கை தமிழ் பத்திரிகைகளில் அவ்வப்போது வரலாற்று குறிப்புகளை எழுதி வருபவர்களை தொடர்புகொண்டு கேளுங்கள் - அவர்கள் சொல்வார்கள் சிவத்தம்பியின் திருட்டு வேலைகளை.

நாங்கள் உங்களைப்போல் கனடாவில் இருந்துகொண்டு, கனவில் போராளித் தலைவர்களுக்கு அறிவுரைகள் கூறி காலத்தை வீனடித்தவர்கள் இல்லை. நேரடியாக கேட்டவற்றை எழுதுகிறோம்.

நேரடியாக கேட்டவை எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் சிவத்தம்பியுடன் நேரடியாக விவாதிக்க தயார். அவருடன் உங்களுக்கு தொடர்பிருந்தால் கேட்டுச் சொல்லுங்கள்.

வணக்கம். வாத்தியார்

எமது விடுதலைக்கு முதல் எதிரியாக இந்தியாவே இருந்து வருகின்றதென்பதை நாம் உரத்துக்கூறவேண்டும். இந்தியா எம்மைத் தொடர்ந்து அழித்து வருகின்றது. எமது தற்போதைய தலைமைகள் தொடர்ந்து இந்தியாவிற்குச் சாமரம் வீசி உரிமைகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் செயற்படுகின்றன.

இந்தியா எமக்குச் செய்த அழிவுகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஒரு பிரச்சார இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும். சர்வதேசத்தில் இந்தியாவின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்.

இதுவும் மிக மிக அவசியமான நடவடிக்கை.

இந்திய பயங்கரவாதிகள் ஜனநாயக வேடத்தில் சுதந்திரமாக நடமாட, நீதி நியாயம் நேர்மையானவர்களுக்கு கிடைக்காது. தர்மம் நிலைக்காது.

"நாங்கள் உங்களைப்போல் கனடாவில் இருந்துகொண்டு, கனவில் போராளித் தலைவர்களுக்கு அறிவுரைகள் கூறி காலத்தை வீனடித்தவர்கள் இல்லை. நேரடியாக கேட்டவற்றை எழுதுகிறோம்."

யார் போராட்டத்திற்கு கூடச் செய்தார்களென்பது இல்லை பிரச்சனை.

கனவில் இல்லை நிஜத்திலேயே நாலு இயக்கத்தலைவர்களை சந்தித்தனான்.அந்த லெவலில தான் அண்ணை நான் இந்தியாவில் இருந்தேன்.

இதையெல்லாம் போய் உங்களுக்கு சொல்லிக் கொண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.