Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கம் தெரிந்தால், தயவு செய்து அறியத் தாருங்கள்

Featured Replies

பொதுவாக ஒரு சாதாரண மனிதன் இரண்டு முறை அல்லது ஐந்து முறை தும்முவதுடன் தும்மல் நின்று விடுகிறது. சிலருக்கு ஒரு நேரம் பத்து பதினைந்து தடவையாவது தும்மல் வரும், தும்மியே களைத்து விடுகிறார்கள்... மூக்கு அடைத்தும் விடுகிறது... இது ஓரிரு நாட்களுக்கு மட்டும் இல்லை பல ஆண்டுகளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போது தும்மல் வாறது ஒருபக்கம் இருக்க, பொது வாங்கனங்களில் இருக்கும் போது தும்மல் ஆரம்பித்து சங்கடப் படுத்துகிறது. தும்மல் தானே என்று இதுவரைக்கும் வைத்தியரின் ஆலோசனை கேட்கவில்லை.

- எதனால் இப்படி ஏற்படுகிறது?

- சுவாசக் குழாயில் ஏதும் பிரச்சனையா?

- அல்லது பயப்பிட வேண்டிய அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லையா?

விளக்கம் தெரிந்தால், தயவு செய்து அறியத் தாருங்கள்.

-நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கோடை காலம் ஆரம்ப மாகி விட்டது . இங்கு ஒருவகைபூ மஞ்சள் நிறம் ...அதன் மகரந்தம் காரணமாக் சிலருக்கு அலர்ஜி .இதனால் தும்மல் ...ஏற்படுகிறது. சிலருக்கு கண் கடிக்கும் .....மூக்கு சிந்தும் .... சூழல் மாசு ,,,,, ஒவ்வாமை .....சிலருக்கு carpet dust ( அலர்ஜியாக் இருக்கலாம் ) ...இது தான் எனக்கு தெரிந்த விளக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாக ஒரு சாதாரண மனிதன் இரண்டு முறை அல்லது ஐந்து முறை தும்முவதுடன் தும்மல் நின்று விடுகிறது. சிலருக்கு ஒரு நேரம் பத்து பதினைந்து தடவையாவது தும்மல் வரும், தும்மியே களைத்து விடுகிறார்கள்... மூக்கு அடைத்தும் விடுகிறது... இது ஓரிரு நாட்களுக்கு மட்டும் இல்லை பல ஆண்டுகளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போது தும்மல் வாறது ஒருபக்கம் இருக்க, பொது வாங்கனங்களில் இருக்கும் போது தும்மல் ஆரம்பித்து சங்கடப் படுத்துகிறது. தும்மல் தானே என்று இதுவரைக்கும் வைத்தியரின் ஆலோசனை கேட்கவில்லை.

- எதனால் இப்படி ஏற்படுகிறது?

- சுவாசக் குழாயில் ஏதும் பிரச்சனையா?

- அல்லது பயப்பிட வேண்டிய அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லையா?

விளக்கம் தெரிந்தால், தயவு செய்து அறியத் தாருங்கள்.

-நன்றி

இது பயப்பட வேண்டிய விடயம், அலர்கியாக இருக்கலாம், இதை கவனியாது விட்டால் காலப்போக்கில் சுவாசபை அழற்சி ஏற்பட வாய்ப்பு உண்டு, அதுவே பின்னர் பீலிசமாக்கி விடும் பீலிசம் என்பது எந்த நேரமும் மூக்கில் இருந்து நீர்வடிந்து கொண்டு இருக்கும், பரம்பரம்பையினருக்கு தொய்வு வருத்தம் இருந்தால் இதன் தொடர்சியாக வர வாய்பு இருக்கிறது, சிலருக்கு வசந்த காலத்தில் மட்டும் இந்த பிரச்சினை இருக்கும், மகரந்த அலர்கி, சிலருக்கு குளிர்கலத்தில் இருக்கும், சிலருக்கு, தூசும் அலர்கியாக இருக்கும், சிலருக்கு படுக்கைஅறை பெட்சீட்டுகளெ அலர்கியாக இருக்கும் இவர்கள் அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கபடும் படுக்கைகளை பாவிக்க வேண்டும் , வைத்திய ஆலோசனை பெற்று மூக்குக்கு ஸ்பிரே அடிப்பதன் மூல்லம் இதை கட்டுக்குள் வைத்திருக்கலாம், மாற்ற முடியாது என கருதுகிறேன், மாற்ற முற்பட்டால் வேறு ஏதவது பிரச்சினை வர வாய்பு இருக்கிறது, எதற்கும் வைத்திய ஆலோசனை பெறுவது நலம்.

காரணம் இரண்டு இருக்கலாம்...

தூசு துணிக்கைகளால் ஏற்படும் அலர்ச்சியாலும் இது வரலாம்... வேலை செய்யும் இடமோ இல்லை வீடே தூசாக இருப்பது ஐரோப்பாவில் ஒண்றும் புதிது இல்லைதானே... இது ஆண்டின் எந்த வேளையிலும் வரலாம்... அது இளவேணில் காலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...

அருகில் இருக்கும் chemist க்கு போய் கேட்டீர்கள் எண்றால் இதுக்கான குளிசைகளை தருவார்கள்... சரி வரவில்லை எண்றால் வைத்தியரை நாடுகள்..

இது பற்றி விளக்கமாக இங்கு எழுதி இருக்கிறார்கள் படித்து பாருங்கள்...

dust allergy

http://www.exitallergy.com/allergy-articles/dust-mite-allergy-symptoms.php

மற்றது Hay fever உங்களால் Pollen எண்று அழைக்கப்படும் மகரந்தம் சுவாசிப்பதாலும் குறிப்பாக அந்த மகரந்தம் உங்களின் கண்களில் நேரடியாக படுவதாலும் இது ஏற்படுகின்றது.... கண்கள் எரிச்சலுடன் மூக்கினால் நீர் வடிதல், காய்ச்சல் போண்ற அறிகுறிகள் இருக்கும்...

அனேகமான வெள்ளைகள் கொஞ்சம் வெய்யில் வந்தாலும் கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு வெளியில் போவதின் இரகசியம் இதுதான்...

http://www.bbc.co.uk/health/physical_health/conditions/in_depth/allergies/allergicconditions_hayfever.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ean ennal munpupol thamilil elutha mudiyavilla?

Edited by அரசி

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் முழவதும் இப்படி தும்மல் இருக்குது என்றால் எனக்கு தெரியாது ஆனால் கோடைகாலம் தொடங்கும் போது தான் என்றால் மேல நிலாமதி மற்றும் தயா சொன்ன காரனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி இந்த தும்மலும், மூக்கடைப்பும் குளிர்காலத்திலா, கோடை காலத்திலா இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்.

கோடை காலம் என்றால் நிச்சயமாக பூக்களின் மகரந்த பரவலால் ஏற்படும் ஒவ்வாமையே ஆகும்.

அதற்கு காது, மூக்கு, தொண்டை (HNO) வைத்தியரை அணுகி ஒவ்வாமை சோதனை செய்து பார்க்க வேண்டும்.

எந்தப் பூ வகை ஒவ்வாமையாக இருக்கின்றது என்று கண்டு பிடித்து அந்த மாதங்களில் அவதானமாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவில் பரந்து காணப்படும் Birken என்னும் மரத்தின் மகரந்தம் 500 கிலோ மீற்றர் வரை பரவக்கூடியது.

http://www.donnerwetter.de/pollen/info.htm

வருடம் முழுக்க இதே பிரச்சினை இருந்தால் வீட்டில் உள்ள கார்பெற், மெத்தை, படுக்கை விரிப்பு, போர்வை (கோழி இறகு) போன்றவற்றாலும், வளர்ப்பு மிருகங்களாலும் ( பூனை, நாய், பறவை),உணவு வகைகளாலும் ( தக்காளிப்பழம், கத்தரிக்காய்) போன்றவற்றாலும் வர சாத்தியம் உண்டு.

இதனை அடியோடு மாற்றலாம் என நினைக்கவில்லை. வைத்தியரின் ஆலோசனை பெற்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மற்றும் படி ஓரி முறை தும்மினால்..... யாரோ உங்களை நினைக்கின்றார்கள் என்று அர்த்தம்.

அது யார் என்று கண்டு பிடிப்பது சுலபம். 26 எண்களுக்குள் ஒரு எண்ணை நினையுங்கள். அந்த எண்ணில்..... எந்த ஆங்கில எழுத்து வருகின்றதோ..... அவர் தான் உங்களை நினைத்தவர். உடனே அவருக்கு தொலை பேசி எடுத்து, ஏன் என்னை இப்ப நினைத்தனீர் என்று கேட்டால்...... அடுத்த முறை தும்மல் வராது. :lol:

.

Edited by தமிழ் சிறி

ean ennal munpupol thamilil elutha mudiyavilla?

தமிழ் எழுத்துரு மாற்றம் செய்யவேண்டும்

clean cut என உள்ளதை பாமினி என்று மாற்றிவிடுங்கள்

Edited by vvsiva

ஒவ்வாமையினால் ஏற்படும் தும்மலாக இருந்தால் விரைவில் தகுந்த சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆஸ்மா வருவதற்கு வாய்ப்பு உண்டு. பிரான்சில் ஏறத்தாள 25 வீதமானவர்களுக்கு பல்வேறு காரணங்களினால் அலர்ஜியும் அதில் பெரும்பாலானவர்களுக்கு ஆஸ்மாவும் உள்ளது.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணியை வைத்தியர் மூலம் கண்டுபிடிக்கலாம். அக் காரணியின் தாக்கம் குறைவான காலப் பகுதியில் அதனை சிறிது சிறிதாக உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் உடல் அதனை எதிர்க்கும் திறனைப் பெற்றுக் கொள்ளும். இந்த முறையானது சிலருக்குச் சரிவருவதில்லை. இவர்கள் ஒவ்வாமை அதிகமாக உள்ள காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் மாத்திரை உட்கொள்ள வேண்டும். இவ்வகையான மாத்திரைகள் உடல் சோர்வை உண்டாக்கும். முன்பு இங்கு வருடத்திற்கு ஒரு தடவை ஊசி போட்டுக் கொண்டால் அவ் வருடம் முழுவதும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். ஆனால் அது உடலுக்குக் கேடானது என்று நிறுத்தி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களோ இல்லை உங்களை சார்ந்தவர்களோ நீண்ட காலமாக தும்மல்(sneezing )

வருத்ததால் அவதிப்படுபவர்களா இருந்தால் காலம் தாழ்த்தாது தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வதே சிறந்த வளி.அனேகமாக இந்த தும்மல் வருத்தம் என்ன காரணிகளால் ஏற்படுகிறது என்பதை எனக்கு முன் வந்தவர்கள் கூறி விட்டார்கள். இந்த தும்மல் வருத்தம் பொதுவாக மக்கள் பாவிக்கும் வாசனைத் திரவியங்கள் சாடையாக மணந்து கொண்டாலே சிலருக்கு தும்மல்,கண்களால் நீர் வடிதல் எண்டு பலதும் பத்தும் தொடங்கி விடும்.வீட்டில் ஊதுபத்தி,தசாங்கள்,மற்றும் உடலுக்கு அடிக்கும் வாசனைத்திரவியங்கள் என்பனவற்றை தவிருங்கள்.

நீங்கள் சாதரணமாக உட்கொள்ளும் உணவை ஒரு கிழமைக்கு நீங்களாகவே பரீட்சித்துப் பாருங்கள்...உதாரணத்துக்கு..முட்டை,பால்,சீஸ்,சில மரக்கறிவகைள்,நீங்கள் விரும்பிச் சாப்பிடும் கடலுணவு இவற்றை கண்டறிந்து....அந்த குறிப்பிட்ட நாட்களில் உங்கள் உடலில் ஏற்படக் கூடிய மாற்றத்ததை மனதில் வைத்துக் கொண்டு,மீண்டும் ஒரு கிழமைக்கு சாப்பிடாமல் விட்டுப் பாருங்கள்..கண்டிப்பாக உடலில் மாற்றம் ஏற்படும்.அப்படி மாற்றம் எதுவும் ஏற்படாது விட்டால் மருத்துவரை அணுகுங்கள்.இந்த தும்மல் வருத்தம் உங்களுக்கு கோடை காலத்தில் தான் வருகிறது எண்டால் வீட்டில்,மற்றும் நாம் போகும் இடங்களில் ஏற்படுகிறது எண்டால் அது அவ்வப்போது ஏற்படும் கால மாற்றத்தின் தாக்கமே...எல்லாம் எங்கள் மனதைப் பொறுத்தது தான்.நான் மேலே குறிப்பிட்ட சில விடயங்களை நீங்களாகவே செய்து பாருங்கள்.நன்றி.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

கருத்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

குடும்பத்தில் யாருக்கும் இப்படி இல்லை. அலர்ஜியாக இருக்கலாம் என்று நினைத்து பாமசியில் கேட்டு Piriton எனப் படும் அலர்ஜி மருந்து சிலமுறை பாவித்ததுப் பார்த்தது, அதை உபயோகிக்கும் பொது சாதாரண நிலையைவிட அதிகமான சோர்வுத் தன்மை கூடிக் காணப்பட்டதால் பகல் நேரம் போடுவதைத் தவிர்த்தாகவேண்டி ஆனது. வெயில் நாட்களில் மட்டும் இல்லை பொதுவாக குளிர் நாட்களிலும் ஏற்படுவதுண்டு.

இம்முறையும் பார்த்துவிடு உங்கள் கருத்துப் படி குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று இருக்கிறேன்.

-மீண்டும் நன்றிகள்

போன் எடுத்து காது அறுபடுறதை விட தும்மிக் கொண்டே இருக்கலாம் சிறி அண்ண... :lol:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன் குட்டி

எனக்கும் இப்படியொரு நிலையிருந்தது

மருத்துவம் செய்தும் பெரிதாக குறையவில்லை

ஊருக்கு போய் 2 மாதம் நின்றுவந்தேன்

முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஆனால் தாங்கள் முதலில் செய்யவேண்டியது குளிர் பானங்கள், ஜேக்கற் மற்றும் குளிர்சாதனபெட்டியிலிருந்து எடுத்து உடன் சாப்பிடுவது எதுவானாலும் தவிர்க்கவும்

வாழைப்பழம் மற்றும் தங்களுக்கு ஒத்துவராத பழங்கள் காய்கறிகளை தவிர்க்கவும்

இவற்றை செய்தாலே அரைவாசிக்கு குறைந்துவிடும்

வைத்தியரை அணுகி தும்மலை நிறுத்துவதற்கான மாத்திரையை பாவிக்கவும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கும் நன்றி விசுகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.