Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்ற்போலினால் தேடப்படும் நபரை அண்மையில் சந்தித்த மருத்துவட் அருண்குமாரின் பேட்டி.

Featured Replies

62 வருசத்துக்கும் முன்னம் ஜீ ஜீ பொன்னம் பலம் போன பல்லக்கிலை போய் தமிழரின் பிரச்சினையை தீர்க்க எண்டு ஒரு கோஸ்ரி கிழம்பி இருக்கு...! அதே ஜீ ஜீ பொன்னம்பலம் 77 லை வட்டுக்கோட்டை தீர்மானம் இயற்ற முன்நிண்றார் எண்ட வரலாறுகள் தெரியாதவை எல்லாம் சிங்களவன் சொன்னதை செய்வான் எண்டு நம்பிக்கை தெரிவிக்கினம்...

62 வருட வரலாறு குடுக்காத படிப்பினையை ஏற்க்காதவர்கள் நாங்கள் சொல்லியா கேக்க போகினம்...??

  • Replies 78
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதே மருத்துவர் கூறிய கருத்தை அவருடன் சென்ற மற்றவர்களும் கூறினால் நம்பலாம். அது எப்படி இவர் மட்டும் இவ்வாறு கூறுகிறார். இது அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி இணையத்தளமான தமிழ்நெட், அந்த மருத்துவருக்கு பணம் கொடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வழியில் அவரை மிரட்டி பணியவைத்து பொய் கூற வைத்திருக்கின்றனர். (இது சாத்தியமானதும் கூட. அன்றிலிருந்து தமிழ்நெட் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார் என்று மக்களை நம்பவைப்பதற்காக பகீரத பிரயத்தனம் செய்வது அனைவருக்கும் தெரிந்த விடயம்)

2006 ஆம் ஆண்டு எல்லாம் கே.பி.யை சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி சந்தித்தது என்று கூறுவது எல்லாம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது? இன்டர்போலால் தேடப்படுகின்ற நபராகவும் அதேவேளை சிறிலங்கா அரசாலும் தேடப்படும் நபராக இருப்பவராக இருக்கின்றவரையா அந்த அதிகாரி சந்தித்திருப்பார்? அப்படியெனில் புலிகளின் புலனாய்வுத்துறை பலவீனமானதா? இவ்வளவும் தெரிந்தா கே.பி.யை விடுதலைப் புலிகள் அனைத்துலக உறவுத்துறைச் செயலாளராக நியமித்தனர்?“

அனைத்துலக தொடர்பகத்தினைச் சேர்ந்தவர்களே விடுதலைப் புலிகளின் தலைவரையும் அந்த அமைப்பின் புலனாய்வுத்துறையையும் கேலி செய்வது மிகவும் வேதனையானது.

எழுந்தமானமாக கருத்துக்களை விதைப்பதனை விட ஒவ்வொருவரும் ஆழ யோசிக்கின்ற அதேவேளையில் சிறிது யதார்த்த ரீதியாக சந்திக்கவும் வேண்டுகின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்துலக தொடர்பகத்தினருக்கு ஏதாவது ஒரு விடயம் தேவைப்படுகின்றது. தற்போது கே.பி. விவகாரம் பெரிதுபடுத்தப்படுகின்றது. அடுத்து என்ன விடயத்தினை தூக்கிக்கொண்டு திரியப் போகின்றார்கள் என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

முள்வேலிக்குள் இருக்கின்ற 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களையும் விடுதலைப் புலிகளின் தலைவரை நம்பி போராடச் சென்ற 15 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் இன்று தடுப்பு முகாம்களுக்குள் இருக்கின்றனர். தயவுசெய்து அவர்களை வெளியே எடுப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை புலத்தில் உள்ளவர்கள் சிந்தியுங்கள்.

இதே மருத்துவர் கூறிய கருத்தை அவருடன் சென்ற மற்றவர்களும் கூறினால் நம்பலாம். அது எப்படி இவர் மட்டும் இவ்வாறு கூறுகிறார். இது அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடி இணையத்தளமான தமிழ்நெட், அந்த மருத்துவருக்கு பணம் கொடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வழியில் அவரை மிரட்டி பணியவைத்து பொய் கூற வைத்திருக்கின்றனர். (இது சாத்தியமானதும் கூட. அன்றிலிருந்து தமிழ்நெட் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார் என்று மக்களை நம்பவைப்பதற்காக பகீரத பிரயத்தனம் செய்வது அனைவருக்கும் தெரிந்த விடயம்)

ஆக நீங்கள் பட்டம் குடுத்தால் அவை வாங்கி கொண்டு அமத்தி கொண்டு இருக்க வேண்டும்... ஆனால் உங்களை அவை ஏதும் சொல்லி போட கூடாது... குய்யோ முறையோ எண்டு அழ ஆரம்பிச்சுடுவியள்...

  • தொடங்கியவர்

அ) முள்வேலிக்குள் இருக்கின்ற 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களையும்

ஆ) விடுதலைப் புலிகளின் தலைவரை நம்பி போராடச் சென்ற 15 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் இன்று தடுப்பு முகாம்களுக்குள் இருக்கின்றனர்.

தயவுசெய்து அவர்களை வெளியே எடுப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை புலத்தில் உள்ளவர்கள் சிந்தியுங்கள்.

இந்த கேள்விகளுக்கு இதிலும் வேறு இடங்னளிலும் பல ஆக்கபூர்வமான இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு விட்டன:

மக்கள் போராளிகள் நிலங்கள் எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டியன. அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்க முடியாது.

இவற்றை எப்படி யார் செய்யலாம்?

இவற்றுக்குள் சிங்களம் தான் இலாபம் அடைவதையும் குறியாகக் கொண்டிருக்கின்றது:

அ) போராளிகள் மக்களை பராமரிக்க சர்வதேசம் மூலம் பணம் கறத்தல்

ஆ) சிங்களத்தின் போர்க்குற்றங்களை மறைப்பது

இ) தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இல்லாமல் அழிப்பது

இவை பற்றி யோசிப்பது பலன் அளிக்கலாம்.

a) தனிப்பட்டவர்கள் எதோ ஒரு வழியில் போராளிகள் மக்களை பாதுகாத்தல்

b) இலங்கை இனவாத அரசில் ஒரு நம்பிக்கை வைத்து அதனுடன் தனிப்பட்டரீதியில் முயற்சித்தல்

c) தமிழ் அரசியல் கட்சிகள் ஊடாக முயற்சித்தல்

d) எமது அமைப்புக்கள் ( நாடு கடந்த தமிழீழ அரசு) ஊடாக முயற்சித்தல்

e) ஐ நா அமைப்புக்கள் ஊடாக முயற்சித்தல்

f) வேற்று மனித நேய அமைப்புகள் ஊடாக முயற்சித்தல்

g) சர்வதேசம் ஊடாக முயற்சித்தல்

இதை யார் செய்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல. எதை எப்படி செய்கிறார்கள் என்பதே முக்கியம்.

இலட்சியம் முக்கியம், இந்த இலட்சியத்துக்காக ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் தம்மையே கொடுத்தனர் அவர்கள் இலட்சியம் காப்பாற்றபட வேண்டும், விடுதலை தீ அணையாது பாதுகாக்க வேண்டும்.

மக்கள் போராளிகள் நிலங்கள் எல்லாமே பாதுகாக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்க முடியாது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் பேரவையில் அங்கம் வகிக்கின்ற மருத்துவர் இவர். இவரின் கருத்துக்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. உளவு பார்ப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை ஊடாக அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிகள் செட்டப் செய்து அனுப்பியது. இந்தக் கதை இப்போது பிரித்தானியாவில் பிரபலம்.

பிரித்தானிய தமிழர் பேரவையில் அங்கம் வகிக்கின்ற மருத்துவர் இவர். இவரின் கருத்துக்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. உளவு பார்ப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை ஊடாக அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிகள் செட்டப் செய்து அனுப்பியது. இந்தக் கதை இப்போது பிரித்தானியாவில் பிரபலம்.

KP யையும், கோத்தாவையும் ஒண்றாக சேர்ந்த்து அவர் சந்தித்த கதை உண்மை தானே... இல்லை அதுவும் பொய் எண்டு ஒரு கண்டு பிடிப்பை செய்ய போறியளோ...??

  • தொடங்கியவர்

இன்று பல மாற்றங்கள் வலி சுமந்த காலங்களில் இருந்து நிகழ்ந்துள்ளன. இவை யாவுமே "செய்து பலன் இல்லை" என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.

அ) யுத்த போர்க்களுக்கான விசாரணை

இன்று ஐ.னா. சபை இதைப்பற்றி "பார்க்க" ஒரு குழு அமைத்து இருப்பது ஒரு வெற்றியாக பார்க்கலாம்.

இதன் மூலம் ஒரு மக்கள் கணிப்பு (referendum) ஐ நாவின் மேற்பர்வையில் (UN force deployed) நடத்தப்பட வைக்க புலம் பெயர் மக்கள் முயற்சிக்க வேண்டும்.

ஆ) பொடுளாதார தடை

ஜி எஸ் பி நிற்பாட்டப்படின் எமது ஒரு சிறு வெற்றியாக அது பார்க்கப்படலாம். இதன் மூலம் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழக்கும் சிங்களம். சரிந்து வரும் உலகப் பொருளாதாரத்தில் இது ஒரு பாரதூராமான விளைவை கொடுக்கலாம்.

தொடர்ந்து பொருளாதார தடைகள் கோரி எமது பேனா போராட்டங்களை கொண்டு செல்வோம்.

KP யையும், கோத்தாவையும் ஒண்றாக சேர்ந்த்து அவர் சந்தித்த கதை உண்மை தானே... இல்லை அதுவும் பொய் எண்டு ஒரு கண்டு பிடிப்பை செய்ய போறியளோ...??

செய்தாலும் செய்வார்கள்... ஆச்சரியப் படுவதற்கு இல்லை... ( truth hurts) :(

  • தொடங்கியவர்

எனது நாட்டில் நான் இந்த மண்ணின் பிரசை ( இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ...).

கே பி என்பவரை சர்வதேச காவல்துறை தேடி வருகின்றது. இவரை பிடித்து தரச்சொல்வது சிங்களமும் இந்தியாயும்.

அ) இவர் ஏற்கனவே சிங்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ( சிங்களம் இன்னும் ஒரு படமும் வெளியிடவில்லை) ஏன் சிங்களம் இதை சர்வதேச காவல்துறையிடம் சொல்லவில்லை?

ஆ) இவரை தரும்படி ஏன் இந்தியா கேட்கவில்லை?

இ) இவருடன் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு வைத்தால் பணம் ( அபிவிரித்திக்கு) கொடுத்தால் இங்கு ஒரு சட்டப்பிரச்சனையும் வராது என, நான் இந்த மண்ணின் பிரசை, யார் உறுதியாக சொல்லுவார்கள்?

எதை சிங்களம் ஒளிக்க முனைகின்றது? ஏன்? எதற்காக?

இதன் பதில்களில் பல மாயங்கள் மறைந்திருக்கலாம்.

:(:(

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் சூடான சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. யூன் 15 முதல் யூன் 20 வரை லண்டன், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்டகுழு கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் அழைப்பில் இலங்கை சென்று திருப்பி இருந்தது. நாடு திரும்பியவர்கள் ஒரு வாரகாலமாக மௌனம் காத்தனர். தேசம்நெற், ரிபிசி ஊடகங்கள் இலங்கை சென்று திரும்பியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் மறுநாளே அவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்தனர்.

இந்த விஜயம் தொடர்பாக தேசம்நெற், ரிபிசி இல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பிபிசி தமிழோசையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டவர்களில் ஒருவரான சார்ள்ஸ் அன்ரனிதாஸ் நேற்று (யூன் 28 2010) ஒரு நேர்காணலை வழங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை, ‘டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் பயணம் செய்யவில்லை. அவ்விஜயம் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை’ யென அவ்வமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நெற் டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமாரின் நேர்காணலை இன்று (யூன் 29, 2010) வெளியிட்டது. ஆனால் இந்த நேர்காணல் இருநாட்களுக்கு முன் (யூன் 27 2010) பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நெற் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட சார்ள்ஸ் இனதும் அருட்குமாரினதும் நேர்காணல்கள் முற்றிலும் முரண்பட்ட தகவல்களை வழங்குகின்றது. இலங்கைக்குச் சென்றது யார் யாரைச் சந்தித்தது, எங்கெங்கு சென்றது என்ற தகவலைத் தவிர ஏனைய உள்ளடக்கங்களில் இருவரும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களையும் தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த விஜயத்தினை கே பி யே ஏற்பாடு செய்ததாகவும் இந்த விஜயத்திற்கு முன்னதாகவே கே பி இங்குள்ளவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டதாகவும் இந்த நேர்காணல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சென்றவர்கள் கே பி யை முதலில் சந்தித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கபில ஹெந்தவிதாரண, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் படை அதிகாரிகளையும் சந்தித்தாக இவ்விருவருமே தெரிவித்துள்ளனர்.

சார்ள்ஸ் தனது பேட்டியில், ‘‘நாங்கள் இந்த அழைப்பிற்காக கனநாளாகக் காத்திருந்தோம். நாங்கள் வன்னி முகாம்களுக்கு, போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களுக்கு செல்ல விரும்புவதை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம் பல காலமாகப் பதில் வரவிலை.’’ என்று தெரிவித்தவர், கே பி அவர்களின் ஏற்பாட்டால் இது சாத்தியமானதாகத் தெரிவித்தார். இவ்விஜயத்திற்கு முன்னதாக கே பி தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஆனால் மற்றையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் சார்ள்ஸ் தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த அருட்குமார், ‘‘என்னை வரச்சொல்லிக் கேட்ட ஆளிடம் நான் அங்கு வந்தால் பிரச்சினை இருக்காதா என்று கேட்க, அவர் சொன்னார், ‘ஸ்ரீலங்கன் கவர்மன்ற் செல்வராஜா பத்மநாதனுக்கால் தான் இதை அரேஞ் பண்ணுகிறது. அதால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. உங்களை ஒரு விஐபி போலத்தான் ரீற் பண்ணுவார்கள்’ என்று சொன்னார். அப்படி ஒரு உத்தரவாதத்தைத் தந்தபடியால்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.’’ என்று தெரிவித்து உள்ளனர்.

தங்கள் விஜயத்தின் போது பொதுமக்களைப் போராளிகளைச் சந்தித்தது பற்றி, ‘‘ஐடிபி காம்புகளுக்குப் போய் ஆட்களைச் சந்திக்க என்றுதான் போனது ஆனா அங்க வின்டோவால் பார்த்தமாதிரி எங்களை பிறியா சந்திக்கவிடவில்லை. எங்களைச்சுற்றி முன்னாலை பின்னாலை எல்லாம் சுற்றிக்கொண்டு நிண்டவை. ஆக்களை அங்கு என்ன நடக்குது என்று சொல்ல விடேல்லை. 16ம் திகதி கிளிநொச்சிக்குச் சென்றம். அங்கு மக்கள் ஒருத்தரையும் சந்திக்கவிடேல்லை. அடுத்தநாள் வவுனியாவில் 2007, 2008ல் இயக்கத்தில் சேர்ந்த போராளிகள் உள்ள பாடசாலைக்கு கூட்டிச் சென்றவை. அங்கையும் அவர்களுடன் தனிய கதைக்க விடாமல் அவை சுத்திக்கொண்டு நிண்டவை. பிறகு மனிக்பாமில் சோன் 4க்கு எங்களைக் கூட்டிச்செல்லக் கேட்க அவர்கள் அதை சாதுரியமாக விட்டுப்போட்டு சோன் 2க்கு கூட்டிச்சென்றார்கள். அங்க ஒராளிட்டை தம்பி எங்க இருந்து வந்தனி? என்ன படிக்கிறாய்? எந்தப் பள்ளிக்கூடம் என்று கேட்க அவருக்கு எந்தப் பள்ளிக்கூடம் என்று தெரியெல்லை. அவருக்கு கொன்ரினியூ பண்ணேலாமப் போச்சு அப்பதான் எங்களுக்கு விளங்கிச்சு அவை ஆமியின்ர ஆள் என்று.’’ அருட்குமார் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி குறிப்பிடும் சார்ள்ஸ்,”மக்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பிரிஅரேஞ்மன்ற் மீற்றிங்கிலும் செய்யப்பட்டு இருந்தது. தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொது மக்களை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது. கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்களையும் சந்திக்கக் கூடியதாய் இருந்தது. விடுதலைப் புலிப் போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கும் சென்று பார்க்கக் கூடியதாக இருந்து. நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் ஏ எல் ஸ்ரூடன்சை மாத்திரம் தான் பார்க்கக் கூடியதாய் இருந்தது.’’

அருட்குமார் தனது பேட்டியில் சுயாதீனமாக யாருடனும் சந்திக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்பயணம் முற்றிலுமாக இலங்கை அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயணம் என்பதை முழுமையாக அறிந்து சென்றிருந்த அருட்குமார் தன்னை சுயாதீனமாக மக்களையும் போராளிகளையும் சந்திக்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையை எப்படிப் பெற்றார். இலங்கைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருடன் மேற்கொண்ட விஜயத்தில் என்ன சுயாதீனம் காண விளைந்தார். ஆனால் சார்ள்ஸ், ‘‘தந்த சந்தர்ப்பத்தையும் வைத்துக் கொண்டு பொதுமக்களையும் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறியக்கூடிய சான்ஸ் எங்களுக்குக் கிடைத்தது.’’ என்று பொசிட்டிவ் ஆகவே தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். சார்ள்ஸ் இவ்விஜயத்தை பொசிடிவ்வாகவே அணுகி உள்ளதை அவருடைய பல பதில்களில் இருந்து காணலாம்.

குமரன் பத்மநாதன் பற்றி அருட்குமார், ‘‘நான் இங்க இருந்து வெளிக்கிட்டுப் போகேக்க செல்வராசா பத்மநாதனுக்கால ஏதாவது செய்யலாம் என்று நினைச்சுத்தான் போனது. அங்க திரு கோத்தபாய ராஜபக்ச உள்ளுக்கு வரேக்க செல்வராஜா பத்மநாதன் எழுந்து அவரை ஆரத்தழுவ முற்பட்டார். அதே எனக்கு பார்க்க ஒரு அந்தரமா இருந்திச்சு. கபில ஹெந்தவிதாரனவின்ர மாஸ்டர் மைன்ட்ல தான் இதெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தான் நான் நினைச்சன். ஆனா பிறகு இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் சொல்கிறார் நான் இவரை 2006ல் சந்தித்தனான் என்று. எனக்கு 2006ல் எங்கு சந்திச்சவை என்று விளங்கேல்ல. என்னோட வந்த ஆக்களும் அதைத்தான் யோசிச்சு இருக்கினம். அந்தக் கேள்வியை திரு செல்வராஜா பத்மநாதனிடம் திருப்பிக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்கேல்ல. அவர்கள் சொல்ல வாறது என்ன என்றால் உங்களுக்காளையோ வேறுவழியாலையே டயஸ்போராவை காலடியில் கொண்டுவருவம் இதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.’’ என்றார்.

குமரன் பத்மநாதன் பற்றிய சார்ள்ஸின் கருத்து அருட்குமாரின் கருத்தில் இருந்து முற்றாக மாறுபட்டதாக இருந்தது. ‘‘எங்கட மக்களை நாங்கள் பார்க்க விரும்புகிறம். எங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ரிப்பியுஜி காம்புகளையும் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தம். குறிப்பாக பழைய போராளிகளைச் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தம். நாங்கள் எடுத்த முயற்சிளை குமரன் பத்மநாதன் தான் நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடியதான சூழ்நிலையை உருவாக்கி இருந்தார். தான் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை நாடிநிற்கிறேன். மக்களின் ஒத்தழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்று கேட்டிருந்தார். இப்படி ஒரு சூழ்நிலைக்குள் பத்மநாதன் அவர்கள் வந்தது எங்களுக்கு சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது…. ஆனால் நாங்கள் கண்டது கே பி தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார். அவரின் கையில் விலங்கிடப்படவில்லையே தவிர எப்போதும் நான்கு பேர் காவலுக்கு நிற்பதை நாங்கள் கண்டோம். அவர் இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குக் கீழ் இருப்பதாகச் சொல்லலாம் ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்துடன் கோப்ரேற் பண்ணுகிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சில விசயங்களில் உறுதியாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.’’ என்று சார்ள்ஸ் குமரன் பத்மநாதன் பற்றிய தனது கருத்தை வெளியிட்டார். அருட்குமாரின் கருத்துக்கள் நம்பிக்கையீனத்தின் அடித்தளத்தில் இருந்து உருவாகி இருப்பதையும் சார்ள்ஸின் கருத்துக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

‘‘எல்ரிரிஈ இன் காசுகள் நிறைய வெளிநாடுகளில் இருக்கின்றது அந்தக் காசை நாட்டை கட்டியெழுப்ப பாவிக்க வேண்டும் என்று கேட்க அப்ப நான் கேட்டன் ரிஆர்ஓ வின் பண்டுகள வைச்சிருக்கிறீங்கள் தானே அதில ஸ்ராட் பண்ணங்கோ என்று. அதுக்கு அவர் நீங்கள முதலில் அந்தக் காசுகளைக் கொண்டுவாங்கோ அதுக்குப் பிறகிட்டு இதுகளைப் பார்ப்பம் என்றார்.’’ என நிதி பற்றிய விடயத்தில் அருட்குமார் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் பற்றி சார்ள்ஸ் குறிப்பிடும் போது, ‘‘அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் என்னவாக இருந்தாலும் தமிழ் மக்கள் மடையர்கள் அல்ல கண்மூடித்தனமாக நடப்பதற்கு. நாங்களும் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பணத்தை திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்பது பற்றிய எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.’’ எனத் தெரிவித்தார்.

இந்த விஜயம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவுத்தளத்தில் இது கணிசமான பிளவை ஏற்படுத்தி உள்ளது. அருட்குமாரின் கூற்றுப்படி இந்த இலங்கை விஜயத்தை அந்த நோக்கிலேயே அரசு திட்டமிட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அருட்குமார் குமரன் பத்மநாதனை பச்சையாகத் துரோகி என்று சொல்லாமல் சுற்றிவளைத்து அதனையே தனது நேர்காணலில் வெளிப்படுத்தி உள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இனவாதத்தை நியாயப்படுத்தி வருவதாகவும் தமிழ் மக்களை அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் அருட்குமார் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டமே கே பி இன் தமிழர் புனர்வாழ்வு மையம் – ரீஆர்சி என்கிறார் அருட்குமார்.

அருட்குமார், சார்ள்ஸ் உட்பட ஒன்பதுபேர் சென்று வந்த இவ்விடயம் அவர்கள் இலங்கை செல்வதற்கு முன்னரேயே உத்தியோகபூர்வமற்ற முறையில் உரையாடப்பட்டு வந்தது. ‘இவர்கள் செல்கிறார்கள் என்ன விடயம் எமக்கு முன்னரே தெரியும்’, என பிரிஎப் உடன் நெருக்கமாக பணியாற்றுபவர் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆனால் பிரிஎப் இந்த விஜயம் பற்றி தங்களுக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை என நேற்று (யூன் 28 2010) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மரணமாகிய செய்தியை ஜிரிவி ஒலி பரப்பியது. அச்செய்தி ஒலிபரப்பப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜிரிவி தாக்குதலுக்கு இலக்கானது. அதனைத் தொடர்ந்து ஜிரிவி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ”தலைவர் தலைமறைவாகி பாதுகாப்பாக உள்ளார்”, என அறிவித்தது. இது பற்றி ஜிரிவி ஊடகத்தினரிடம் கேட்டபோது. ”நாங்கள் என்ன செய்ய. ரிவியை நடத்த வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். உண்மை அறிய மக்கள் விரும்பாவிட்டால் என்ன செய்ய?” எனப் பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பீடுகையில் ‘’வந்த தொலைபேசி அழைப்புகளும் மிரட்டல்களும் போனை எடுக்கவே பயமாக இருந்தது’’ எனவும் தெரிவித்தார்.

அருட்குமாரின் கருத்துக்கள் ஆச்சரியமானதோ அல்லது புதியவையோ அல்ல. அதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் அறிந்தே உள்ளனர். அருட்குமார் இலங்கை செல்வதற்கு முன்பே இக்கருத்தை அறிந்தே வைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கைதியாக உள்ளவருடன் சேர்ந்து சுயாதீனமாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என எவ்வாறு எண்ணி இலங்கை சென்றார் என்பது ஆச்சரியமானது. இல்லையேல் தகவல் பெறுவதற்காக சென்றிருக்க முடியும்.

சென்றவர்கள் செல்லமுன் அல்லது வந்தவுடன் தங்களது நிலைப்பாடுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அருட்குமாருடைய தொலைபேசி கூட செயலிழந்த நிலையிலேயே இருந்தது. மாறாக ஊடகங்கள் தகவல் அறிந்து செய்திகளை வெளியிட்டு கேள்விகளை எழுப்பிய பின்னரே அழுத்தங்கள் காரணமாக மக்களுக்கு கதை சொல்லப் புறப்பட்டு உள்ளார். அதுவே இந்த முரண்பட்ட தகவல்களின் பின்னணி பற்றிய பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றது.

மக்களுக்கு இந்த விஜயத்தில் நடந்த உண்மைகளை அறிவதற்கு பூரண சுதந்திரம் உண்டு. இந்த விஜயத்தில் பங்கு கொண்ட ஏனையவர்களும் தங்கள் மௌனத்தைக் கலைப்பதன் மூலமே மக்கள் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து ஒரு முடிவுக்கு வரமுடியும்.

வாங்கோ பாண்டர்007 அன்ட் கோ! வரவேற்கிறோம்! :(

பிரித்தானிய தமிழர் பேரவையில் அங்கம் வகிக்கின்ற மருத்துவர் இவர். இவரின் கருத்துக்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. உளவு பார்ப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை ஊடாக .... செட்டப் செய்து அனுப்பியது. இந்தக் கதை இப்போது பிரித்தானியாவில் பிரபலம்.

இந்த டாக்டர், அப்படி சென்றிருப்பாராயின் வாழ்த்துக்கள்! ... உண்மை அறிய தன்னலமற்று மேற்கொண்ட பயணம் ...

... ஆரம்பத்தில் கேபியின் சரவெடி தொடங்கியபோது, என் போன்றவர்கள் விசிலடித்தனர்!!! ஆனால் கேபியின் முகம் தொடர்பாக பல கேள்விகள், ஊகங்கள், சந்தேகங்கள் பலரால் எழுப்பப்பட்டபோது, என் போன்றவர்கள் ... கேபி தொடர்பான உண்மை முகத்தை ஆதாரங்களுடன் முன் வையுங்கள் ... என்று கேட்டோம்! இல்லையா???

இதோ, இன்று .... ஒன்பதுகளில், சிறிலங்கா அரசுடன் நெருக்கமாக செயற்படும், கடந்த காலங்களில் பிரித்தானியாவிலுள்ள தமிழர் அமைப்புகளுக்குள் புகுத்தப்பட்டு செயற்பட்டு வந்த ... முன்னால் திம்பு ரெலோ சாள்ஸும் சென்று வந்திருக்கிறார்(அவர் இன்று கதைப்பது வேறாகினும், கேபியின் நிலை தொடர்பாக தெளிவாக குறிப்பிடுகிறார்).

... இதற்கு மேல் எமக்கென்ன ஆதாரங்கள் தேவை???????????

இக்கேபியின் நாடகம் புலம்பெயர் தேசத்தவர்களை குழப்பவும், சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் போர்க்குற்றங்களிலிருந்து விடுபடவுமே நடாத்தப்படுகிறது¬!!!!

  • தொடங்கியவர்

அன்பிற்கினிய தமிழ் மக்களே!

என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலை 2010 யில் வெளியிடப்பட உள்ளது.

மனதை உலுக்கும் 500 க்கும் மேற்பட்ட இனப்படுகொலை படங்கள், 40 க்கும் மேற்பட்ட வகைப்பாடுகள்..200 க்கும் மேற்பட்ட பக்கங்கள்..

மனசாட்சியை உறுத்தும் 100 க்கும் மேற்பட்ட மனிதநேயவரிகள்.

மண் வரலாறு,அடக்குமுறை வரலாறு,துயர வரலாறு-

1956 -2010 படுகொலை அட்டவணை.

மொத்தத்தில் 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகவல்கள்

இப் புத்தகம் இனப்படுகொலையின் பட்டியலாக, உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை, தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வெளியாக உள்ளது. உலகமக்கள்,உலக தமிழர்கள் அனைவரையும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக்கப்போகும் இந்த ஆவணம் ஈழவிடுதலைக்கு மௌனப் புரட்சியாக இருக்கும்.

இந்நூலுக்கான அணிந்துரையை தமிழரல்லாத சர்வதேசிய தளத்தில் மதிப்புமிக்க உண்மைக்கு குரல் கொடுக்கும் மனித உரிமைகளை மதிக்கும் பெரும் மனிதர்களிடம் கேட்டு பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று ஆவண வெளியீட்டுக் குழு முடிவு செய்துள்ளது.

ஆதலால் அவ்வாறான மனிதர்களின் மின்னஞ்சல் முகவரிகள் தங்களிடம் இருக்குமானால் உடனே praba.k865@gmail.com ( Mobile no. 9486486321 ) க்கு தெரியப்படுத்தவும்.

மேலும் இந்நூலை இன்னும் சில தினங்களில் அச்சுக்கு அனுப்பவேண்டிய அவசர நிலையில் போதுமான பணம் கிடைக்கபெறவில்லை. தமிழின படுகொலைகள் குறித்தும் ஈழ விடுதலை குறித்தும் உலக மக்களுக்கு சரியான புரிதலை கொடுக்கவல்ல இந்த புகைப்பட ஆவண நூல் வெளிவர அணைத்து தமிழ் அமைப்புகளும், தமிழர்களும் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவியை விரைவாக செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்

-என்ன செய்யலாம் இதற்காக?

ஆவண வெளியீட்டுக் குழு.

தமிழ்நாடு.

  • தொடங்கியவர்

'கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்'

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100628_diasporatamilandkp.shtml

இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார்.

கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.

இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார்.

'' அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் ஆதரவாளர்கள் தயவு செய்து சொல்லுங்கள்..முள்ளி வாய்க்கல் அழிவுக்கும் கேபிக்கும் ஒரு சம்மந்தம் இல்லையா...இல்லையாயின் அதை நிருபியுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வருகிறது கேபிக்கு காசு கொடுத்து போராளிகளை விடுவிப்பதலலஇ சிறீலங்கா அரசு கேபியை துருப்புச் சீட்டா பயன்படத்தப் பாக்குது.போர் குற்ற விசாரணை என்ற ஒன்று நடந்தால் அதில் முக்கிய சாட்சி கேபி.அதனால் அவரை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய அவர் சொல்வதை கேட்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது.

இதை நாங்கள் அதாவது புலம் பெயாந்த சமூகம் பயன் படுத்த வேண்டும்.

சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று நாங்கள் கேபிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனக்கு கிடைத்த தகவல் முதற்கட்டமாக 5000 போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கேபி கோரிக்கை வைத்திருக்கிறாராம்இஇது கொழும்பிலுள்ள அரசியல் கட்சி வட்டாரம் ஒன்றுக் கூடாக நான் உறுதிப்படுத்திய தகவல்.அப்படி 5ஆயிரம் போராளிகள் விடுதலை செய்ப்பட்டால் வரவேற்க வேண்டுமா வேண்டாமா? இதுதான் எனது கேள்வி இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு போராளியணின் விடுதலையும் மக்கியமானது அதுவும் பெண் போராளிகளின் பாதுகாப்பும் விடுதலையும் முக்கியமானது.

இதை தமிழ் நெட் ஈமுரசு கனவான்களால் செய்ய முடியுமா ? ஏன்பது தான் என்னுடைய கேள்வி?

இப்ப பேட்டி குடுத்த உந்த டாக்குத்தரை தமிழ் நெட்கனவான் செட்பண்ணி ஆனுப்பினதாகவும் இப்ப ஒரு தகவல் வந்திருக்குஎனக்க தமிழ் நெட் இந்த பேராட்டத்துக்கு என்ன செய்தவர் ஊரிலை என்ன செய்தவர் எண்டது அக்கு வேற ஆணிவேறா தெரியும்.ஈழப் போராட்டத்துக்கு அதிகம் துரொகம் செய்தது ஆர் எண்டால் முதல் இந்த கனவானின் பெயரைத் தான் நான் சொல்லுவன்இஅதுக்குபிறகு தான் கருணா மற்றவை எல்லாம் கரணாவை பிளவு படுத்தினதே உவர் தான் எண்டதும் சிவராமின்ரை அறிமுகத்தை வைத்து உவர் தென் தமிழீழத்திலை நகர்த்தின காய் நகர்த்தலகள் எத்தினை பேருக்கு தெரியும் உருவரை தெரிஞ்சுவங்க்ள இப்ப இஞ்சைதான் இருக்கிறங்கள்இஒண்டல்ல இரண்டல் பத்துக் கணக்கில் தங்களை வெளிப்படுத்தினால் காட்டிக் கொடுக்கப்படுவோம எண்ட பயம் அவங்களிட்டை இன்னமும் இருக்கு;

காசோ அல்லது கே.பி யின்ர சாட்சியமோ சிங்களவனுக்குக் கொடுத்தால் அவன் நாங்கள் கேட்கிறதத் தருவான் எண்டு என்ன நம்பிக்கை உத்தரவாதம் இருக்கு? இது தான் கேள்வி இப்ப. இதுக்கு உங்களிட்டப் பதில் இல்லை, ஆனா எனக்குத் தெரியாத யாரோவையெல்லாம் இழுத்துப் பேசுறியள். உங்கட நோக்கம் ஒரு நியாயமான கேள்விக்குப் பதில் சொல்றதில்லை, யாருக்கோ வக்காலத்து வாங்கிறது மட்டும் தான் எண்டு தெரியுது, இனி உங்களிட்டக் கேள்விகள் கேட்க மாட்டன் யோசிக்காதையுங்கோ! ஆனா ஒரு சின்ன சுட்டிக் காட்டல், இன்னொரு இடத்தில நீங்கள் தான் கேட்கிறீங்கள் இப்படி: " போர்க்குற்ற விசாரணை செய்தால் சிங்களவனைத் தூக்கிலயா போடப் போறாங்கள் இங்க?" . இப்ப வந்து போர்க்குற்ற விசாரணைக்கு சிங்களவன் வயித்தால போற அளவுக்குப் பயப் பட்டு கே.பியின்ர காலில விழப் போறதா எழுதிறியள். என்ன நடந்தது? இதில எது நிதானமா எழுதினது, எது மப்பில எழுதினது? :(

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ பாண்டர்007 அன்ட் கோ! வரவேற்கிறோம்! :lol:

இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாம் உண்மையோ நெல்லையன் :lol: :lol: :lol:

கேபியின் ஆதரவாளர்கள் தயவு செய்து சொல்லுங்கள்..முள்ளி வாய்க்கல் அழிவுக்கும் கேபிக்கும் ஒரு சம்மந்தம் இல்லையா...இல்லையாயின் அதை நிருபியுங்கள்?

இண்டைக்கு எல்லாரும் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு யார் மேல குற்றம் சுமத்தலாம் என்று தான் அலையினம். ஒராள் கிடைச்சால் காணும் போட்டு தாக்குவினம். உண்மையில முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கே பி மட்டும் இல்லை நீங்கள் நாங்கள் எல்லாரும் தான் காரணம் கண்டியளோ. அங்கை சண்டை நடக்கேக்கை இங்கை விடலை பசங்க கூட கடலை போட்டவங்க எல்லாம் இப்போ கேள்வி கேட்க தொடங்கிட்டினம். ஊர் உருபட்ட மாதிரி தான் :lol: :lol: :lol:

உங்களுக்கும் ஒரு பழமொழி பாருங்கோ. ஒரு விரல் யாரையாவது சுட்டி காட்டி பழி போட்டால், மிச்ச நாலு விரலையும் உங்களை தான் காட்டுது எண்டு மறந்து விடாதையுங்கோ.

சரி அப்ப நான் வரட்டே.. :lol:

இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாம் உண்மையோ நெல்லையன் :lol: :lol: :lol:

நண்றிகள் பாண்டர் அன்ட் கோ! ... ஏதோ ஒன்று தன் வாயாலை கெடுமாம்??? அப்படி உந்த எழுத்துக்களே, பாண்டர் அன்ட் கோவை வயித்துக்குள்ளால் வந்த குழந்தாய் கூட அடையாளம் கண்டிடும் ... அவ்வளவு நமோ நாமோ ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன பிரச்சனை??

முள்ளிவாய்க்கால் அழிவுக்குத் தலைவர் தான் முழுக் காரணம் எண்டு சொன்னால் எல்லாம் சரிதானே??

அப்ப, தலைவர் செய்த பிழையை கே.பீ அண்ணா தன்ர சாதுரியத்தாலையும், ராஜதந்திரத்தாலையும் சிங்கள அரசுடன் சேர்ந்து சரி பண்ணப் போறார்?! அதுக்கு நாங்கள் செய்ய வேன்டியது என்னவெண்டால், சிங்கள அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களைப் பற்றியோ அல்லது தமிழரின்ர அரசியத் தீர்வு உரிமை பற்றியோ கதைக்கக் கூடாது, ஆனால் எல்லாருமாச் சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்ப இங்க இருந்து காசு அனுப்ப வேணும். அப்படித்தானே??

அட, மூ...களே, நாட்டைக் கட்டியெழுப்புறதுதான் எங்கட நோக்கமெண்டால் என்ன மயித்துக்கு இவ்வளவு காலமும் லட்சக்கணக்கில சனத்தை சாகக் குடுத்து தாயகம், விடுதலை எண்டெல்லாம் போராடின்னாங்கள்??

டக்கிளசாலையும், கருணாவாலையும், இன்னும் கவுரவத் துரோகிகளாலையும் செய்ய முடியாததை கே. பீ அண்ணா செய்யப் போறாரோ??கேக்கிறவன் கேணையன் எண்டால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

நெடியவன் பற்றி எமக்கு எதுவும் தெரியாது ! அது பற்றி விவாதிக்கவும் விரும்பவில்லை

ஆனால்

கேபி பேச்சு வரும் போதெல்லாம் அது பற்றி விமர்சிக்காமல் நெடியவன் கஸ்றோ என்று மாட்டை மரத்தில் கட்டி விட்டு மரத்தை பற்றி விமர்சிக்கும் உங்கள் கூட்டம் பற்றி இயல்பாகவே சந்தேகம் எழுகின்றது

சரி கேபி யும் அவரது கூட்டமும் சிறிலங்காவுடன் கை கோர்த்து தமிழீழம் பெற்றுக் கொடுக்கவா போகின்றது ?

சிறிலங்காவின் கூலிகளான துரோகிகளால் கூட ஒரு துரும்பைக் கூட தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருக்க கைதியாக உள்ள கேபி தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டப் போகின்றார் என்று படம் காட்டுகின்றீர்கள் !!!

அல்லது அங்குள்ள மக்களுக்காவது ஏதாவது செய்து விட்டார்களா ?

கஸ்ரோ உயிருடன் இல்லாத போதும், சிறிலங்காவின் கைதியாகவோ சுகபோகியாகவோ இல்லாத போது

கேபி கூட்டமான நீங்கள் மாவீரரான கஸ்ரோவை துரோகியாக காட்டி உங்களது வன்மத்தை, துரோகத்தைக் காட்டி வருவதும் அதை காவி வந்த உங்களுக்கு தெரியதா ?

பிபிசி எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் அது இந்திய உளவுத்துறையின் பாசறை என்பதும் தெரியும்

ஏன் பிபிசி ஏனையவர்களை பேட்டி எடுக்கவில்லை எப்போது தமது விசுவாசிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதும் காவி வருவதும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் பற்றி எமக்கு எதுவும் தெரியாது ! அது பற்றி விவாதிக்கவும் விரும்பவில்லை

***

இரண்டு பக்கமும் தெரிஞ்சால் விமர்சியுங்க. இல்லை ஒரு பக்கமும் விமர்சிக்காமல் உங்கட வேலையை பாருங்க. சொல்ல வந்திட்டாங்கள். :lol: அவன் பிழை இவன் பிழை என்று. அவன் என்ன நாடுக்கு செய்தான் இவன் என்ன நாட்டுக்கு செய்தான் என்றதை விட்டிட்டு, இனி எல்லாருமா என்ன செய்யலாம் என்று யோசியுங்க.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

62 வருசத்துக்கும் முன்னம் ஜீ ஜீ பொன்னம் பலம் போன பல்லக்கிலை போய் தமிழரின் பிரச்சினையை தீர்க்க எண்டு ஒரு கோஸ்ரி கிழம்பி இருக்கு...! அதே ஜீ ஜீ பொன்னம்பலம் 77 லை வட்டுக்கோட்டை தீர்மானம் இயற்ற முன்நிண்றார் எண்ட வரலாறுகள் தெரியாதவை எல்லாம் சிங்களவன் சொன்னதை செய்வான் எண்டு நம்பிக்கை தெரிவிக்கினம்...

62 வருட வரலாறு குடுக்காத படிப்பினையை ஏற்க்காதவர்கள் நாங்கள் சொல்லியா கேக்க போகினம்...??

இவையள் நாங்கள் சொல்லி கேட்பதற்கு ஒன்றுமில்லை...............

எமக்கு சிங்கள புலநாய்வின் செய்திகளை காவி வருவதற்கு ஓதிவிடபட்டவர்கள்.

யாள்களத்தில் பல ஊடுருவல் இருப்பதை கண்டறியுங்கள்............ சிங்களவனின் அடுத்த நகர்வு இணையதளங்களை மனம்மாற்றுவதே.

அது ஆசையை காட்டி மோசம்படுத்தலாகவும் இருக்கலாம்........

ஆயுத்தை காட்டி மிரட்டபடுவதாகவும் இருக்கலாம்........

ஆனால் ஒருவரின் போக்கை கண்டறிய கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

சோறிநாய்களுக்கு பதில் எழுதுவதில் எந்த பயனும் இல்லை........... அதுகள் சோறியவே வந்ததுகள் சோறிந்துகொண்டே இருக்குங்கள்.

சோறிய வேண்டிய தேவை எமக்கு என்ன இருக்கின்றது???

  • கருத்துக்கள உறவுகள்

இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாம் உண்மையோ நெல்லையன் :lol: :lol: :lol:

இண்டைக்கு எல்லாரும் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு யார் மேல குற்றம் சுமத்தலாம் என்று தான் அலையினம். ஒராள் கிடைச்சால் காணும் போட்டு தாக்குவினம். உண்மையில முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கே பி மட்டும் இல்லை நீங்கள் நாங்கள் எல்லாரும் தான் காரணம் கண்டியளோ. அங்கை சண்டை நடக்கேக்கை இங்கை விடலை பசங்க கூட கடலை போட்டவங்க எல்லாம் இப்போ கேள்வி கேட்க தொடங்கிட்டினம். ஊர் உருபட்ட மாதிரி தான் :lol: :lol: :lol:

உங்களுக்கும் ஒரு பழமொழி பாருங்கோ. ஒரு விரல் யாரையாவது சுட்டி காட்டி பழி போட்டால், மிச்ச நாலு விரலையும் உங்களை தான் காட்டுது எண்டு மறந்து விடாதையுங்கோ.

சரி அப்ப நான் வரட்டே.. :lol:

சனங்கள் அழிந்து கொண்டு இருக்கும் போதும்,தற்போதும் அரசோடு சேர்ந்து கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்தது உங்கள மாதிரி ஆட்களாய் தான் இருக்கும்...கேட்ட‌ கேள்விக்கு பதில் இல்லை...உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் மட்டும் தமிழருக்கு அழிவு தான் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் சந்திக்க போகும் போது துரோகியாகினார் திரும்பி வந்ததும் கீரோ ஆகிவிட்டார்.

போகும் போது அவரை துரோகியென்று கத்தியவர்களுக்கு ஒன்று விளங்கவேண்டும் அவர் போயிருக்காவிட்டால் எங்களுக்கு இவ்வளவு விடயங்களும் தெரியவந்திருக்க மாட்டாது.சும்மா பட்டம் கொடுகின்றவேலையை கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டி வையுங்கோ.

நிண்டவன் போனவனையெல்லாம் போட்டதும் பட்டம் கொடுத்ததும் தான் போராட்டம் என்று நாம் செய்தது. ஒன்றிற்கு முடிவு வந்து விட்டது மற்றதற்கும் வந்தால் ஒரு படி தாண்டிவிடுவோம்

போனது எல்லாம் டாக்டரை போல உண்மை பேசுவினம் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள், போனதில ஒண்டுதான் பிபிசிக்கு சொல்லி இருக்கு கேபி இலங்கை அரசின் கட்டுபாட்டில் இருந்தாலும் இலங்கை அரசுக்கு கட்டுபட்டு நடக்கவில்லை சுயமாக முடிவு எடுக்கிரார் என்று, இதை எதில் கொண்டு போய் சேர்பது

இதைத்தான் நானும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றேன்

போய் வரட்டும்

உண்மையை உணர்ந்து வரட்டும்

போகும்போது இவர் என்னநிலையில் போனாலும்

அங்கு எதுவும் கிடைக்காது என்பதையும் எவ்வாறு எம்மக்கள் வைத்திருக்கப்படுகின்றனர் என்பதையும் உணர்ந்து வந்துள்ளார்

இனி தெளிவாக இருப்பார்

டாக்டர் ஒன்றை தெளிவாய் சொல்லி இருக்கிறார் அங்கு போவபவர்கள் அவர்களின் வலைக்குள் விழுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கு என்று, போனது ஒன்பது உண்மையை உலகுக்கு சொன்னவர் ஒருவர்தானே.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 ஆம் ஆண்டில் இருந்து கேபிக்கு இலங்கை அரசுடம் தொடர்பு, இது ஒரு சாதாரண வாக்கியம் இது எத்தனை உயிர்களை பலிகொண்டது எத்தனை பேரின் நம்பிக்கைகளை நாசம் செய்தது. முன்பு ஒரு கதை உலாவி வந்தது முன்பு ஒரு முறை மலேசியாவில், கேபி கைதான போது பிரனவ்முகர்ஜி சென்று வெளியில் எடுத்து விட்டு வந்தது என்று அன்றில் இருந்து கேபி றோவின் கைகளில் என்று, 2006இல் இருந்து இலங்கை அரசுடன் தொடர்பு என்றால் கப்பல் கப்பலாக சனத்திடம் வாங்கிய காசில் ஆயுத்தை வாங்கி அனுப்பி விட்டு அது செல்லும் பாதையையும் இலங்கை அரசுக்கு காட்டி கொடுத்தது இந்த துரோகியா? அடுத்து அடுத்து கப்பல்கள் அடிபட்டதன் பின்னனியில் இருந்தது இந்த துரோகியா? தலைவரும், போராளிகளும் எவ்வளவு நம்பிக்கையில் கடைசிவரை இருந்திருப்பார்கள் கப்பல் வரும் அடிபட்டு மக்களையும் தம்மையும் காப்போம் என்று, :lol::lol: தலைவர் கடைசி வரை எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்திருப்பார் ஆயுதம் வரும் வரும் என. :lol::lol::lol: களைகள் இனம்காட்டப்பட வேண்டியவர்கள் அல்ல வேருடன் அழிக்கபட வேண்டியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.