Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!!

Featured Replies

ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்தறிந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்குழு அமைப்பதற்கு முடிவெடுத்தமையின் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதை தெரிந்துகொண்ட சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்தியாவுக்கு எதிராக கடும் சீற்றத்தில் உள்ளார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இந்தியாவின் இந்த மறைமுக தாக்குதலுக்கு எதிராக தமது தரப்பின் இராஜதந்திர தாக்குதலை மேற்கொள்வதற்கு மகிந்த தரப்பு தற்போது உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா காண்பித்த ஒப்பந்தங்களிலெல்லாம் கையெழுத்திட்டு, இந்தியாவை அனுசரித்து போவதாக தனது தரப்பு நல்லெண்ண சமிக்ஞையை காண்பித்த மகிந்த, கொழும்பு வந்தவுடன் சீனாவுடன் தனக்குள்ள ஆத்மார்த்தமான உறவினை பிரதிபலிக்கும் வகையில் வேறு பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டதுடன் இந்தியா விரோதப்போக்கினையும் அரசு மட்டத்தில் வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பம் முதல் மகிந்தவின் இந்தியாவுக்கு மசியாத போக்கினால் சீற்றமடைந்திருந்த இந்தியா, மகிந்தவின் இந்தியா விஜயத்தின் பின்னரான நடவடிக்கைகள் மேலும் கடுப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனால், மகிந்தவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பிராந்தியத்தில் தனக்கெதிரான எந்த சக்தியும் தலைதூக்கமுடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கும்வண்ணம் எடுத்துக்கூறுவதற்கும், சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா.வின் நிபுணர்குழு அமைக்கும் நடவடிக்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு வழங்கியிருக்கிறது.

ஐ.நா.வின் இந்த நிபுணர்குழு அமைப்பு, சிறிலங்காவுக்கு சர்வதேச அளவில் கரும்புள்ளியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் போர்க்குற்ற விவகாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது இந்தியாவின் திட்டம். அத்துடன், தன் மீதான இந்த அழுத்தத்திலிருந்து விடுப்பட்டுகொள்வதற்கான வழியை தேடி சிறிலங்கா, இந்தியாவை நாடி வரும் என்பதும் அதன்மூலம் தனது சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்பதும் இந்தியா போட்டுள்ள மனக்கணக்கு.

ஆனால், இந்தியாவின் இந்த இரகசிய தாக்குதலை தெரிந்துகொண்டுள்ள மகிந்த தற்போது இந்தியா நினைத்தவாறான நிகழ்ச்சிநிரலுக்குள் அகப்படாது இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகளுக்கு திட்டமிட்டுவருவதாக தெரிகிறது.

இதன்படி, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது இந்தியாவும் முழுமையாக தம்முடன் இணைந்துகொண்டது என்பதையும் இந்தியா எவ்வாறான உதவிகளை தமக்கு அளித்தது என்பதையும் இந்தியப்படையினர் களமுனையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் மகிந்த தரப்பு அம்பலப்படுத்தலாம் என்று தெரியவருகிறது.

அத்துடன், அண்மையில் மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் சிக்கலுக்கு மகிந்த நேரடியாக சென்று அந்நாட்டு விவகாரத்துக்கு தீர்வு வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், பிராந்தியத்தில் சிறிலங்கா ஒரு பலமான சக்தி என்று குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவுக்கும் வகையிலான நடவடிக்கையே என்றும் கருதப்படுகிறது.

தனது நடவடிக்கைகளை சிறிலங்கா பகிரங்கப்படுத்தும் என்ற முன்னெச்செரிக்கை திட்டம் எதுவும் இல்லாமல் இந்தியா, விட்டேந்தியாக சிறிலங்காவின் மீது இரகசிய நகர்வுகளை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனினும், இனிவரும் வாரங்கள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பனிப்போர் காலமாகவே காணப்படும்.

- இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - மகிந்த, கோத்தபாயா...... இந்தியா- சோனியா, மன்மோகன்சிங்......ஐநா - பான்கிமூன், நவனீதம்பிள்ளை..... உவயளுக்குள்ளதான் உந்த இரகசியமும் பின்னணியும் இருக்குதா?

பலரும் எழுதும் கட்டுரையளைப் பார்த்தால் சிதம்பர சக்கரத்தைப் பேய்பார்த்த மாதிரியிருக்குது.

எந்தமட்டத்தில என்னமாதிரி உந்த ரகசிய வேலையளெல்லாம் நடக்குது எண்டு விளங்குதில்லை.

கட்டுரையாளர்கள் உந்த ரகசிய வேலைத் திட்டங்கள் எவ்வாறு செய்யப் படுகின';றன என்பதையும் கொஞ்சம் விளக்கி எழுதினால் வாசிக்கிற எங்களுக்கு இந்த ரகசிய ராஜதந்திரமெல்லாம் எப்படி நடக்குது? பெரிய நாடுகளும் நிறுவனங்களும் அந்த வேலையளை எப்படிச் செய்யுது எண்ட விபரம் விளங்கும்.

உது விளங்காமல் கட்டுரையளப் பார்க்கிறபோது எல்லாம் ஒரு சாதி உடான்ஸ் மாதிரித் தெரியுது.

எழுதியிருக்கிறதை சும்மா... கிளு கிழுப்பாய் வாசிச்சுப் போறதை விட்டுட்டு.....

கஸ்ரமான கேள்வி எல்லாம் கேட்டு, அவையளின்ரை பிழைப்பை கெடுத்திடாதேங்கோ....

அது தானே.... அவையளே சொல்லியிருக்கினம், வட்டாரங்கள் தெரிவித்தன என்று. :D

.

  • கருத்துக்கள உறவுகள்

பான் கி மூன், முன்னொரு நாளில் இந்தியாவுக்கான தென் கொரிய நாட்டுத் தூதுவர் என்று அறிந்த ஞாபகம். அப்படியானால் இந்தியாவின் சொல்லை ஓரளவுக்கு மூன் கேட்கும் என ஒத்துக்கொள்ளலாம்.

இந்த நிபுணர் குழு அமைந்ததே ஏதோ ஒரு தரப்பு காலைவாரி விட்டதன் காரணமாகத்தான். அது இந்தியாவாக இருக்கும் என்று நினைக்க வழியிருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

As Sri Lanka Minister Blocks 150 UN Staff, UN Nambiar Assured by Kohona

..........................

Before Inner City Press could ask if the UN had yet spoke with any of the three Rajapaksa brothers who run the country, UN Associate Spokesman Farhan Haq specified the “high level” meeting: it was between the “chef de cabinet” of Secretary General Ban Ki-moon, Vijay Nambiar, and Sri Lanka's Permanent Representative at the UN, Palitha Kohona. Video here, from Minute 9:37.

http://www.innercitypress.com/sri1unassure070710.html

மேலே உள்ளது இன்னர்சிற்றிபிரஸ் தளத்தில் வந்துள்ளது. பான் கி மூனை ஆட்டுவிக்கக்கூடியது யார்? :D

பான் கி மூன், முன்னொரு நாளில் இந்தியாவுக்கான தென் கொரிய நாட்டுத் தூதுவர் என்று அறிந்த ஞாபகம். அப்படியானால் இந்தியாவின் சொல்லை ஓரளவுக்கு மூன் கேட்கும் என ஒத்துக்கொள்ளலாம்.

இந்த நிபுணர் குழு அமைந்ததே ஏதோ ஒரு தரப்பு காலைவாரி விட்டதன் காரணமாகத்தான். அது இந்தியாவாக இருக்கும் என்று நினைக்க வழியிருக்கிறது. :D

உண்மை,உண்மை,உண்மை

'இந்தியா விரும்பிய போரை நாங்கள் நடத்தி முடித்தோம்' என்று மகிந்தா ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார்.

'இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார்பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜய சிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம்' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார்.

இந்த யுத்தத்துக்காகஇந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார்.

'இந்தியாவுக்கு நன்றி' என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களக் காடையர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே. அதற்கு என்ன அர்த்தம்? உண்மையைத்தானேசொல்கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப்படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப்படிப் பேச முடியும்?

ஏழு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதிகளில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத்தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்டபொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு. காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்... என்று வடபுலத்துத் தலைவர்கள் பெயரை அதிகம் வைத்துக்கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கிரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத்திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரியார் பெயரோ உண்டா? காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாரில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தா லும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம்தான் சொல்லும்!" - சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

.

இசைக்கலைஞனின் இன்னர்சிற்றி இணைப்பிற்ற்கும், அகூதாவின் சீமானின் இணைப்பிற்கும் நன்றி.

இந்த நேரம் தமிழர் தரப்பு ஒன்று பட வேண்டிய நேரம்.

இதனையும் தவற விட்டு...... ஈழத்தமிழர் மாறி, மாறி சேறு அடித்துக் கொண்டிருந்தால்.....

இனி ஒரு தமிழனும் ஈழத்தில் மிஞ்ச மாட்டான்.

.

Edited by தமிழ் சிறி

எல்லோருக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தைச் சொல்லப் போகிறார்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள்... இலங்கையை எதாவது ஒரு புள்ளியில் ராஜதந்திர ரீதியில் தள்ள இது சரியான நேரம்....

(இந்தியா X சீனா)

(சீனா X மேற்குலகு)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள்... இலங்கையை எதாவது ஒரு புள்ளியில் ராஜதந்திர ரீதியில் தள்ள இது சரியான நேரம்....

(இந்தியா X சீனா)

(சீனா X மேற்குலகு)

உங்களது ஆதங்கம் நியாயமானது.

அதற்கு எட்டு கோடி தமிழர் ஒரே முடிவை எடுத்து இந்திய நடுவணரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கட்சியரசியலுக்கப்பால் தமிழர் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் சாத்தியமாகும் தமிழருக்கான விடியல்.

ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!!

சுத்த பிதற்றல்.

ஈழத் தமிழர் படுகொலையில் இந்திய பயங்கரவாதிகள் பங்களிப்பு பாரியது. இந்திய பயங்கரவாதிகளும் தம்மை பாதுகாக்க முயலுவரே ஒழிய சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்படமாட்டார்கள்.

'இந்தியா விரும்பிய போரை நாங்கள் நடத்தி முடித்தோம்' என்று மகிந்தா ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார்.

'இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார்பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜய சிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம்' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார்.

இந்த யுத்தத்துக்காகஇந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார்.

'இந்தியாவுக்கு நன்றி' என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களக் காடையர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே. அதற்கு என்ன அர்த்தம்? உண்மையைத்தானேசொல்கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப்படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப்படிப் பேச முடியும்?

ஏழு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதிகளில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத்தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்டபொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு. காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்... என்று வடபுலத்துத் தலைவர்கள் பெயரை அதிகம் வைத்துக்கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கிரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத்திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரியார் பெயரோ உண்டா? காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாரில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தா லும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம்தான் சொல்லும்!" - சீமான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.