Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடன் ரொபர்ட் பிளெக் சந்திப்பு

Featured Replies

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதி மாளிகையில் காலை உணவுச் சந்திப்பொன்றில் ரொபர்ட் பிளெக் கலந்துகொண்டதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இலங்கை அரச தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோரை ரொபர்ட் பிளெக் சந்தித்துப் பேசுவார் என அமெரிக்க இராஜாங்கச் செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=4371:2010-07-21-06-01-23&catid=1:latest-news&Itemid=107

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34820

============================================

கடந்த வருடம் முள்ளி வாய்க்கால் அவலங்களின் போது, உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், பாராளுமன்றங்கள், மனித உரிமைகள் நிறுவனங்கள், வெள்ளை மாளிகை, ஜக்கிய நாடுகள் சபை, தலைமை செயலகம், என்று எல்லா இடங்களிலும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி இலட்சக் கணக்கில் ஒன்று சேர்ந்தோம். எங்கள் எழுச்சியையும், ஒற்றுமையையும், தமிழ் உணர்வையும் பார்த்து உலகமே வியந்து நின்றது. இதனைப் பார்த்து இலங்கை அரசு திகைத்துப் போனது.

தமிழர்களை அழிக்க அது போட்டு வைத்திருக்கும் குறிப்பேட்டில் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும், பணபலங்களையும், தமிழீழ விடுதலையில் அவர்கள் கொண்டுள்ள ஆத்மார்த்தமான ஈடுபாட்டையும் உடைப்பதற்கும், சிதைத்தழிப்பதற்கும் சிவப்பு மையால் எழுதிக் கோடிட்டுக் கொண்டது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

=========================================

to: BlakeR2@state.gov

cc: secretary@state.gov, SweeneyPJ@state.gov

================

Hon. Robert Blake

Assistant Secretary,

SOUTH AND CENTRAL ASIAN AFFAIRS.

Thanks for your continued efforts in the quest of reconciliation and peace, as now is the time to find a solution to years of ethnic tensions. Unfortunately, most decisions are still made in Colombo and by Sinhalese politicians and the military. While the president and officials promised to reach out to the Tamils in a meaningful way, they really haven't. There has been no real consultation on the development or reconstruction of the north. Sri Lanka’s unwillingness to investigate alleged war crimes and human rights abuses committed by both sides during the final stages of the war is another setback in the reconciliation process.

Although Sri Lanka had many promises on the resettlements, and in most cases they have been empty. Despite many promises, the life has got worse for most ordinary Tamils in Sri Lanka. They feel that the world had abandoned them despite the success of “war on terror” by Sri Lanka.

Finally, continued presence of China in Sri Lanka could have long term implication on India and to the world peace and stability. Should India plunge into political or economical chaos, caused by encircling China, entire world may be threatened. Tamils hope Obama administration would opt “Kosovo solution” should that be the last resort.

Sincerely,

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிளேக் தான் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை திருமலையில் ஆயுதக் கையளிப்பு செய்து ஆரம்பித்து வைத்தவர். அப்போது இவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரா இருந்தவர். சிங்களக் கிராமங்கள் எங்கும் இறங்கி சிங்களவர்களோட கூட ஆடிப்பாடி மகிழ்ந்த மன்னன் இவர்.

இன்று இவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பனவாக உள்ளன.

இவர் வெளியிட்டுள்ள கருத்துக்களாவன..

1. பாங்கி மூன் அமைத்துள்ள ஆணைக்குழுவுக்கு யாருக்கும் தண்டனை அளிக்கும் அதிகாரம் கிடையாதாம்.

2. இது ஆணைக்குழு என்பதிலும் பாங்கி மூனுக்கான ஆலோசனைக்குழு என்பது தானாம் சரி.

3. இலங்கையில் யாரும் போர்குற்றம் தொடர்பில் தண்டிக்கப்படமாட்டார்களாம். அதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லையாம்.

4. விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்ததை இட்டு அமெரிக்கா பெரு மகிழ்ச்சியடைகிறதாம்.

5. இலங்கை அமெரிக்காவின் நீண்ட கால நண்பனாம்.

இவர் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழ் மக்கள் சந்தித்த இடர்கள் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறீலங்கா சீனாவோடு நெருங்குவதை இட்டு அமெரிக்காவும் இந்தியாவும் அதிகம் பயங்கொண்டுள்ளத்தையே.. இவரின் இந்தக் கருத்துக்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. சீனாவோடு நெருங்கிக் கொள்வது போல் சென்று எல்லோரையும் தனக்கேற்ற வகையில் தாஜா பண்ண நன்கு கற்றுக் கொண்டுவிட்டது சிறீலங்கா.

நாம் தான் இந்தியாவே கதி என்று கிடக்கப் போகிறோம். தொடர்ந்தும் இந்த உலகில் அநாதைகளாக அடிமைகளாகவே இருக்கப் போகிறோம் என்பதையே இந்த அறிக்கைகள் தெளிவுறுத்துகின்றன.

எமக்கான இராஜதந்திரம் ஒன்றை வகுத்துச் செயற்படாதவரை ஒற்றுமையோடு செயற்படாத வரை எல்லாரும் எம்மை வைத்து தங்கள் பிழைப்பை ஓட்ட நிற்பார்களே தவிர எமக்கு அணுசரனையாக வரமாட்டார்கள். இது நிச்சயம்..! :lol::blink:

Edited by nedukkalapoovan

இவர் பிளேக் தான் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை திருமலையில் ஆயுதக் கையளிப்பு செய்து ஆரம்பித்து வைத்தவர். அப்போது இவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரா இருந்தவர். சிங்களக் கிராமங்கள் எங்கும் இறங்கி சிங்களவர்களோட கூட ஆடிப்பாடி மகிழ்ந்த மன்னன் இவர்.

இன்று இவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பனவாக உள்ளன.

இவர் வெளியிட்டுள்ள கருத்துக்களாவன..

1. பாங்கி மூன் அமைத்துள்ள ஆணைக்குழுவுக்கு யாருக்கும் தண்டனை அளிக்கும் அதிகாரம் கிடையாதாம்.

2. இது ஆணைக்குழு என்பதிலும் பாங்கி மூனுக்கான ஆலோசனைக்குழு என்பது தானாம் சரி.

3. இலங்கையில் யாரும் போர்குற்றம் தொடர்பில் தண்டிக்கப்படமாட்டார்களாம். அதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லையாம்.

4. விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்ததை இட்டு அமெரிக்கா பெரு மகிழ்ச்சியடைகிறதாம்.

5. இலங்கை அமெரிக்காவின் நீண்ட கால நண்பனாம்.

இவர் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழ் மக்கள் சந்தித்த இடர்கள் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறீலங்கா சீனாவோடு நெருங்குவதை இட்டு அமெரிக்காவும் இந்தியாவும் அதிகம் பயங்கொண்டுள்ளத்தையே.. இவரின் இந்தக் கருத்துக்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. சீனாவோடு நெருங்கிக் கொள்வது போல் சென்று எல்லோரையும் தனக்கேற்ற வகையில் தாஜா பண்ண நன்கு கற்றுக் கொண்டுவிட்டது சிறீலங்கா.

நாம் தான் இந்தியாவே கதி என்று கிடக்கப் போகிறோம். தொடர்ந்தும் இந்த உலகில் அநாதைகளாக அடிமைகளாகவே இருக்கப் போகிறோம் என்பதையே இந்த அறிக்கைகள் தெளிவுறுத்துகின்றன.

எமக்கான இராஜதந்திரம் ஒன்றை வகுத்துச் செயற்படாதவரை ஒற்றுமையோடு செயற்படாத வரை எல்லாரும் எம்மை வைத்து தங்கள் பிழைப்பை ஓட்ட நிற்பார்களே தவிர எமக்கு அணுசரனையாக வரமாட்டார்கள். இது நிச்சயம்..! :lol::blink:

இந்த ரொபேர்ட் பிளேக்கின் கருத்தையிட்டு நாம் பெருதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிரேன், இவர் எப்போது சிங்கள அர்சுக்கு ஆதரவாக அறிக்கை விடுபவர், போர் நடந்து கொண்டு இருந்த போதும் கூட மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் சிங்கள அரசைப் பாராட்டியவர், இவர்து வரலாற்றைப் பார்த்தால் நன்கு புரியும், இந்தியாவில் எப்படி ஒரு சோ ராமசாமியோ அதே போல் தான் இவரும். புலிகளுடனும் இந்த ராஜதந்திரிகள் எல்லாம் கொஞ்சி குலாவினார்கள் ஆனாம் இறுதியில் என்ன நடந்தது, இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா!!!!!!!!!!!

நெடுக்க்ஸ் நானும் ஒன்ரை கற்பனை பண்னிப் பார்த்தேன், அமெரிக்க மேற்கு நாட்டு அரசுகள் தமது நாட்டுப் பிரஜைகள் எவரும் இலங்கைக்குச் செல்லக்கூடாது என தடை விதித்தால் எவ்வலவு நன்றாக இருக்கும், கோலிடே போக இருப்பவர்கள் நிலையை யோசுத்துப் பார்ர்த்தேன் சிரிப்புத்தான் வந்தது, ஒரு வேளை இவர்களே சிங்களவன் ரொம்ப நல்லவன்பா என்று சொன்ன்லும் :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ நா யுத்தத்தில் கொல்லபட்ட மக்களின் எண்ணிக்கையை ஏழாயிரம் என்று மிகவும் குறைத்தே சொல்லிவருகிறது. உண்மையான எண்ணிக்கையை வெளிவிடும்படி நாம் இந்நேர்சிட்டி பிரஸ் மத்தேயு லீயை கேள்வி கேள்வி கேட்ட்கும்படி சொல்ல வேண்டும். ஐநாவுக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டும்.

நோர்வேயின் சமாதானப் பணிகளை குழப்பிய இந்திய சொறிநாய்கள் இதையும் குழப்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பன்றிகளோடு சோந்துவிட்ட இன்னொரு பன்றி..........

இது புதிதாக பினாற்ற ஒன்றும் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா

அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம்

07/21/2010

Play

இதயச்சந்திரனின் செவ்வி யை கேளுங்கள் . விடைகள் கிடைக்கும்

  • தொடங்கியவர்

கதவுக்கு பின்னால் என்ன கதைக்கபட்டது என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

விடுதலைப் புலிகளின் இடம் வெற்றிடமாக உள்ளதால் சிங்களம் மற்றும் சீனா நடத்தி செல்லும் பாதை முதலில் இந்தியவையும் பின்னர் உலக சமநிலையையும் பாதிக்கும். இதை முன்னிலைபடுத்தி எமது விடிவை நாம் பெறவேண்டும்.

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வுக்கு முன்னதாக நல்லிணக்கம் என்பது குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றது ரொபேர்ட் பிளேக்கிடம் கூறிய தமிழ்க் கூட்டமைப்பு

அரசியல் தீர்வுக்கு முன்னதாக இன நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது குதிரைகளுக்கு முன்னால் வண்டியை வைப்பது போன்றதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் தெற்கு, மத்திய, ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போதே அவர்கள் இக்கருத்தைத் தெரிவித்ததாக அறிவருகிறது.

இன ரீதியான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசியல் தீர்வொன்றே வழிசமைத்துக் கொடுக்கும் என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளனர். அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு யோசனைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்வைத்திருக்கவில்லை எனவும் யுத்தம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேல் சென்றுவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அத்துடன், வடபகுதியில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்திருக்கின்ற போதிலும் அப்பகுதியை இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாகவும் ரொபேர்ட் பிளேக்கிடம் அவர்கள் முறைப்பாடு தெரிவித்ததாக அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருவதையிட்டு அமெரிக்கா கவலைப்படவில்லையென ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய அரசியல், வர்த்தக தலைவர்களை கடந்த புதன்கிழமை சந்தித்த பின் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஒவ்வொருவரினதும் தேசிய மட்டத்திலான அபிலாஷைகளை அமெரிக்காவும் சீனாவும் அறிந்துகொண்டிருப்பதாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடயங்கள் குறித்து சீன வெளிவிவகார அமைச்சருடன் தான் கலந்துரையாடி இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். அதேசமயம், ஈரானுடனான இலங்கையின் பிணைப்புகள் தொடர்பான விவகாரத்தை ராஜபக்ஷவுடன் தான் கதைத்திருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கவலைகள் குறித்து இலங்கைத் தலைவர்கள் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரான் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பற்றி இலங்கைத் தலைவர்களுக்குத் தெரிந்திருப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

[ தினக்குரல் ] - [ Jul 26, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.