Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வொப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள்.

அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன்.

வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபிரித்து ,மீசையும் வைச்சிருக்காம் பார்க்க சகிக்க முடியவில்லையாம் என்கிறாள்.நான் என்னத்த செய்ய, போனமுறை பார்த்த பெடியனுக்கு மொட்டை என்று நக்கலடித்தாள் இப்ப பார்த்த பெடிக்கு முடி அதிகமாம்.

அதற்கு முதல் பார்த்த பெடியன் மம்ஸ் பேப் என்றாள் அதாவது அம்மா பிள்ளையாம் ,அம்மாவுக்கு பின்னால் திரிகிறானாம்,ஆனபடியால் அவன் வேண்டாம் என்றாள்.

சரி அப்ப உம்முடையா அண்ணனின் பெடியன் ஊரில டாக்டராக வேலை செய்யிறான் அவனை கூப்பிட்டு கட்டி வைப்போமோ? என்று நான் கேட்க உள்ளே இருந்த நிசி ஒடி வந்து நோ டட் எனக்கு சிறிலங்கா போய்ஸை கட்டி வைக்க வேண்டாம்.அவர்கள் எல்லாம் என்னுடைய கல்சருக்கு சரி வரமாட்டினம்.அது என்னடி உனக்கு என்று ஒரு கல்சர்,நாங்கள் எல்லோரும் ஒரே கல்ச்சரில் இருக்கிற ஆட்க தானே,அம்மாவின் சொந்தம் வேற பிறகு என்ன கல்சர் கதை கதைக்கிறாய்!!

இல்லை டட் நான் இங்க வளர்ந்தனான் எனக்கு அங்கு வளர்ந்தவர்கள் சரிவராது.இங்கு வாழ்ந்த போய்ஸ்தான் சரிவரும் என்று நினைக்கிறேன்.அப்ப வெள்ளைகாரனையோ கட்டப்போகிறாய் என்று ஏக்கத்துடன் தாயார் கேட்க,உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது என்று எனக்கு தெரியாது,கோபத்துடன் கதவை சாத்தியபடியே உள்ளே சென்று தூங்கிவிட்டாள் நிசி..

யாரையாவது லவ் பண்னுகிறாளோ தெரியவில்லை,அதுதான் எல்லாத்தையும் வேண்டாம் என்று சொல்லுகிறாள் போல கிடக்குது,நீர் மெல்லமாக கேட்டுபாரும்.

சீ ..ச்சீ ...அவள் அப்படி செய்யமாட்டாள்,நான் அப்படி வளர்க்கவில்லை.என்கன்ட ஆட்களுக்குள் இப்ப யார் யார் எந்த சாதி என்று கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு இப்ப எல்லோரும் படிச்சவங்களாக இருக்கு. ஊரிலயாவது பெடியன்களை பார்த்தவுடன் ஒரளவுக்கு தெரியும் ஆனால் இங்க எங்களையும் விட அவங்கள் மேல அல்லோ இருக்கிறான்கள் படிப்பிலும் சரி ,பொருளாதாரத்திலும் சரி.உப்படித்தான் வாசுகியின் மகள் என்கன்ட ஆட்களில் ஒருவனை லவ் பண்னி போட்டுது என்று சந்தோசப்படு கலியாணம் கட்டிவைச்சவங்கள்.கலியாணத்தன்று தான் தெரியும் அவையள் எங்களைவிட குறைஞ்சவையள் என்று,ஆனபடியால் நான் என்கன்ட சாதிப்பிரச்சனை பற்றி வடிவாக சொல்லி வைச்சிருக்கிறன் ,அவள் லவ் பண்ணமாட்டள் நீங்கள் பயப்பட வேண்டாம் என்றபடியே அருகில் இருந்த தேனீரை தந்தாள்.

இப்ப உந்த வெளிநாட்டில ஒருத்தரும் பெரிதாக சாதி பார்க்கிறதில்லைதானே,நீர் மட்டும் ஏன் தூக்கி பிடித்துகொண்டு இருக்கிறீர்,அது சரி உம்முடைய இரண்டாவது அண்ணனின் பெடியன் சிங்களத்தியை கட்டியிருக்கிறான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறீயள்,ஆனால் மற்றவன் தமிழனுக்குள்ள சாதி மாறி கட்டினால் நக்கல் கதை உங்களுக்கு என்றவுடன் ,எங்கன்ட ஆட்களை சுரண்டாவிடில் உங்களுக்கு நித்திரை வராதே என்றபடியே சண் டிவியை ஒன் செய்தாள்.

சிங்களவரில் உந்த சாதிபிரிவினை இல்லை என்று உங்களுக்கு தெரியும்தானே,அதுபோக அண்ணனின் பெடியன் கட்டின பெட்டை மகிந்தாவின் ஒன்றைவிட்ட தம்பியின் மனிசியின்ட ஒன்றைவிட்ட அக்காவின் மகள் .

அப்ப மகிந்தா ரொயல் பமிலி அவையளுக்குள்ள நீங்கள் கட்டிய படியாள் நீங்களும் ராயல் பமிலி என்று சொல்லுறீயள்.ம்ம்ம்ம்ம்ம்ம்

நிசியை கூப்பிட்டுகொண்டு நீரும் ஒருக்கா இங்கவாரும்.

பிள்ளை நிசி நானும் ஒரு காலத்தில வொப்தான்,அதாவது ஒரு காலத்தில் அகதியாக வந்தவன் தான்,அதற்கு பிறகு படிச்சு பட்டம் பெற்று நல்ல உத்தியோகம் பார்க்க வெளிக்கிட்டனான்.இப்ப நீ பார்க்கும் குறும்தாடியும்,வாயை திறந்தால் ஆங்கிலம் ,பொழுது போக டெனிஸ் விளையாடும் அப்பா ஒருகாலத்தில வொப் ,இங்கு வரும் பொழுது கன்ன உச்சியுடன் மீசையை வைத்திருந்தனான்.ஏன் உன்னுடைய அம்மாவும் இப்ப பார்க்கிற மாதிரியில்லை,அவவும் முகத்தில் எண்ணை வளியும்,இரட்டை பின்னல்,ஸ்கேர்ட் ,பிளவுஸ் சுடன் தான் வந்தவ,இப்ப தலமயிரை வெட்டி போட்டு ஜீன்ஸும் போட்டுக்கொண்டிருக்கிறா.

நாங்கள் எங்களை அறியாமாலேயே இந்த மேற்கத்தைய விழுமியங்களை பின்பற்றி எங்களை மாற்றிப்போட்டோம்.எங்களுடைய இந்த தோற்றத்தை பார்த்து பரம்பரை பரம்பரயாக நாங்கள் இந்த தோற்றத்துடன் வாழ்ந்தவர்கள் என்று எண்ணிவிடாத,இன்றைய வொப் தான் நாளைய கதாநாயகர்கள்.

வெளிநாட்டுக்கு வரும் பொழுது அப்படிதான் இருப்பார்கள் ,5,6 வருடங்களுக்கு பிறகு மேற்கத்தைய விழுமியங்களை பரம்பரையாக பின்பற்றுபவர்கள் போல நடப்பார்கள்.நீ இங்கு பிறந்து வளர்ந்த படியால் உனக்கு உன்னுடைய அப்பா அம்மாவின் வொப் கோலங்கள் புரியவில்லை.உனக்கு விபரம்தெரியும் வயசு வரும் பொழுது கொம்மாவும் நானும் வொப் தோற்றத்தில் இருந்து மேற்கத்தைய தோற்றத்திற்கு நிறத்தைதவிர எனையவற்றை மாற்றி கொண்டுவிட்டோம்....

எங்கன்ட ஆட்களில் 90ம்வீதமானவர்கள் வொப் கோலத்தினர்தான் வரும் பொழுது என்பதை மற்றும் நீ நினைவில் வைத்திரு.

Edited by putthan

  • Replies 60
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமா புலம்பெயர் தமிழர் வீடுகளில காணப்படும் பிரச்சினைகள்தான்..! நல்ல கதையை தந்தமைக்கு நன்றிகள் புத்ஸ்..! அதுசரி.. மகளின் பதில் என்ன என்பதை சொல்லாமல் விட்டுட்டீங்களே..! :lol: அல்லது தொடருமா? :lol:

புத்தன் சாதி பிரச்சனைகள் பற்றி கதையில எழுதாமல் விடுறது நல்லது என்று நினைக்கிறன். ஏன் என்றால் கதையில இவற்றை எழுத சனம் அப்பிடி என்றால் கதைதானே உண்மையில இப்படி எல்லாம் நடக்கிறது இல்லை என்று ஓர் பிரமையை தங்களுக்குள்ள ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். சும்மா வாய்க்கு இனிப்பாக இருக்கும் வகையில நம்மவர்கள் முற்போக்குத்தனமாகவும், தேசியத்தனமாகவும் கதைப்பீனம். ஆனால்... தங்கட பிள்ளைகளை சாதி பார்க்காமல் கலியாணம் கட்டவோ காதலிக்கவோ விடுவீனமோ என்று பாருங்கோ.

புத்தன் அண்ணா, புலம்பெயர் நாடுகளில், எம்மவர்களின் சமூக பிரச்சனைகளை, யதார்த்தமாக எழுத கூடிய ஆற்றல் உங்களுக்கு நிறையவே உள்ளது. இது போன்ற கதைகளை நீங்கள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமா புலம்பெயர் தமிழர் வீடுகளில காணப்படும் பிரச்சினைகள்தான்..! நல்ல கதையை தந்தமைக்கு நன்றிகள் புத்ஸ்..! அதுசரி.. மகளின் பதில் என்ன என்பதை சொல்லாமல் விட்டுட்டீங்களே..! :lol: அல்லது தொடருமா? :lol:

மகள் இப்படியே வெள்ளி பார்த்து கொண்டிருந்து போட்டு சீனாக்காரன் ,ஒரு வெள்ளையை கட்ட வேண்டியதுதான் :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் சாதி பிரச்சனைகள் பற்றி கதையில எழுதாமல் விடுறது நல்லது என்று நினைக்கிறன். ஏன் என்றால் கதையில இவற்றை எழுத சனம் அப்பிடி என்றால் கதைதானே உண்மையில இப்படி எல்லாம் நடக்கிறது இல்லை என்று ஓர் பிரமையை தங்களுக்குள்ள ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். சும்மா வாய்க்கு இனிப்பாக இருக்கும் வகையில நம்மவர்கள் முற்போக்குத்தனமாகவும், தேசியத்தனமாகவும் கதைப்பீனம். ஆனால்... தங்கட பிள்ளைகளை சாதி பார்க்காமல் கலியாணம் கட்டவோ காதலிக்கவோ விடுவீனமோ என்று பாருங்கோ.

நீங்கள் சொல்லுவது சரிதான் கரும்பு.... எழுதவும் பேசவும்தான் சரி........

சாதிப்பிரச்சனையை புலத்திலயாவது கொஞ்சம் குறைக்க முயற்சிக்கலாம் காரணம் புலத்தில சீனாக்கரன்,குஜாராத்தி,பன்சாப்,கேரளா ,சின்களவன் என்று கட்டலாம் என்றால் இதுவும் சாத்தியம் என்று சொல்லத்தான்

புத்தன் அண்ணா, புலம்பெயர் நாடுகளில், எம்மவர்களின் சமூக பிரச்சனைகளை, யதார்த்தமாக எழுத கூடிய ஆற்றல் உங்களுக்கு நிறையவே உள்ளது. இது போன்ற கதைகளை நீங்கள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

நன்றிகள் அபிராம் ..

புத்தர் கதையை முடித்த விதம் சரி .சிறுகதையின் முடிவை சொல்ல கூடாது வாசகர் தான் தீர்மானிக்கவேண்டும் ,,,புத்தர் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்த கதை இது தான்,,,

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் நாளாந்தம் நடப்பவற்றை கதையாக கொண்டு செல்வதில் நீங்கள் தான் நம்பர் 1...வாழ்த்துகள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை நல்ல படிப்புப் படித்தும் வெளி நாடு வந்து மலசலகூடங்களை கழுவிப் பிழைப்பு நடத்தும் ஒரு சிலருக்குக் கூட இன்னும் புத்தி தெளியவில்லை.

புத்தன் உங்கள் மகள் குடும்பத்திற்கேற்ற மணமகனை கண்டுபிடித்த மாதிரித்தான்!

அது வேண்டாம் இது வேண்டாம் என்று சொல்லிக் கடைசியில் அவவும் அதற்க்குள்ளேயே விழப் போறா :lol:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எமது பிள்ளைகள் அனைவரின் வாயிலும் அடிக்கடி தவளும் சொல் இதுதான்

இதைக்கதையாக்கிய புத்தனுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

இதேநேரம் இந்த மாதிரியான எண்ணத்துடன் உள்ள பிள்ளையை

அங்கிருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கோ

அங்கிருந்து வரவழைத்தோ கட்டிவைப்பதை தவிருங்கள்

இந்த இடைவெளி அதிகரிக்குமே தவிர குறையாது.

அவர் 5 வருடத்தில் தன்னை மாற்ற..

இவர் 10 வருடம்முன்னுக்கு போயிருப்பார் என்பது எனது கருத்து

அதைவிட இதே போட்டியாகத்தான் வாழ்க்கையிருக்குமே தவிர....

மற்றவை தூர போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ புத்துமாமா உங்களைத் திருத்தவே ஏலாது. நீங்க குறுந்தாடிய வைச்சாலும்.. மனிசிமார் கட்டை தலைமயிரா வெட்டினாலும்.. மூஞ்சில ஒட்டி இருக்கும்.. எல்லாம்.

ஆனா இங்க பிறந்து வளர்ந்தவைக்கு கிறீம் போட்டு ஸ்ரெயிட்னர் போட்டு கை கால் மயிர் புடுங்கி.... எல்லாம் பளிச்சென்று இருக்கும். தம்பி மாரும்.. ஜெல்லில அடிச்சுக் கிடிச்சு.. எல்லாம் சூப்பரா இருக்கும்.

ஆனா என்ன.. பழக்க வழக்கங்கள் மட்டும் அப்படியே ஒட்டிக்கிட்டு இருக்கும்..! தோற்றத்தில தான் மாற்றம். உள்ளுக்க ஒன்றும் மாறினதா தெரியல்ல. ஒன்றைத் தவிர.. நடை உடை சாப்பாடு என்று.. அடித்தவனை காப்பி அடிக்கிறதைத் தவிர..! அதுக்கும் ஒரு விளக்கம் வைச்சிருக்கினம்.. கல்சரோட மிங்கிள் ஆகினமாம். அடி செருப்பால.. ஒரு நாளும் இவைய வெள்ளைக்காரன் விரும்பி ஒரு பங்சனுக்கு இன்வைட் பண்ணுறதில்ல. ஏனாம்..??! இவையா தொத்திக் கொண்டால் அல்லது வலிஞ்சு கூப்பிட்டாச் சரி.

அவங்களப் பொறுத்தவரை இவை எல்லாம் அசைலம்... அங்க இருந்து வந்தா என்ன.. வந்ததுக்கு பிறந்தா என்ன. எல்லாம் ஒன்றுதான் வெள்ளைக்காரனுக்கு. :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களப் பொறுத்தவரை இவை எல்லாம் அசைலம்... அங்க இருந்து வந்தா என்ன.. வந்ததுக்கு பிறந்தா என்ன. எல்லாம் ஒன்றுதான் வெள்ளைக்காரனுக்கு.

நெடுக்ஸ்! அடிச்சா சிக்சராத்தான் விழுகுது! :lol:

நல்ல கதை புத்தன்! மதராசி சொன்னதுபோல் முடிவு வாசகரிடம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='26 July 2010 - 03:12 PM' timestamp='1280157147' post='600581']

.. ஒரு நாளும் இவைய வெள்ளைக்காரன் விரும்பி ஒரு பங்சனுக்கு இன்வைட் பண்ணுறதில்ல. ஏனாம்..??!

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்கு நாம் உடன்படணும் என்றால்

எமது பிள்ளைகளை

இவர்களுடன் பழகுவதற்கோ

அழைப்புக்களில் பங்கு பற்றுவதற்கோ

நாம் அனுமதிக்கின்றோமா..???

என்பதற்கு விடை காணணும் முதலில்..

பொடிக்கோ பொண்ணுக்கோ வயது 27 இருக்கும்

எப்ப ஏதாவது விசேசத்துக்கு கூப்பிட்டாலும்

அப்பாட்ட கேட்டு சொல்லணும் அம்மா என்ன சொல்கிறாவோ தெரியாது என்று சொன்னால்...

எவன் திருப்பி கூப்பிடுவான்.....???

27 வயதிலும் அப்பா அம்மாட்ட கேட்க வேணுமோ..! கடவுளே.. இதுகள் ஊரில எந்த மூலைக்க இருந்திட்டு வந்த தாய் தகப்பனுக்கு பிறந்ததுகள்..!

நாங்க எல்லாம் ஏல் (18+) எடுத்த பிறகு அப்பா அம்மா எங்க போற வாறா என்றே கேட்கிறதில்ல. நம்பிக்கை. பொடி எனி தவறான வழில போகாது என்றது. அதுவும் கொழும்பில எவ்வளவோ காடைத்தனங்கள்..! ஆனால்.. புலம்பெயர் நாட்டில 27 வயதிலும்.. அப்பா அம்மாவை கேட்கிற சீவன்களா என்றா ஆச்சரியமா இருக்குது. உண்மையா இப்படியும் இருக்கினமா...??! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

10 தரம் கேட்டால் ஒருமுறை அனுமதிக்கும் தாய் தகப்பனை பலரைக்கண்டிருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதில் அப்பா,அம்மா அடக்காமல் விட்ட பலனைத் தான் இப்ப அனுபவிக்கிறாங்கள் போல கிடக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல புத்தன் அண்ணை நல்லாக் கலக்கியிருக்கிறீங்கள். நான் முன்பும் குறிப்பிட்டது போல உங்கள் படைப்புக்களில் நக்கல் கலந்த ஒர் உறுதியான சமூகப் பார்வை இருக்கும். வாழ்த்துக்களும் நன்றிகளும் :lol:

அதுசரி உந்த எண்ணை வழியிற மூஞ்சையையும், ரெட்டைப் பின்னலையும், ஸ்கேர்ட் அன்ட் பிளவுஸையும் பாத்திட்டும் உவையள்தான் தேவதைகள் எண்டு திரியிற யாழ்ப்பாணத்துப் பொடியள் பாவங்கள், கிணத்துத் தவளைகள், போன பிறப்பில என்ன அநியாயம் செஞ்சாங்களோ தெரியேல்ல...... அவங்களின்ட விதி அப்பிடி....... ஆரைப் போய் குற்றஞ்சாட்டிறது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

18 வயதில் அப்பா,அம்மா அடக்காமல் விட்ட பலனைத் தான் இப்ப அனுபவிக்கிறாங்கள் போல கிடக்குது :lol:

அக்கோய் எங்களுக்கு 12 வயதிலேயே சுயபுத்தி வந்திட்டுது அக்கோய். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது பிஞ்சில் பழுத்ததுகள்....

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உந்த எண்ணை வழியிற மூஞ்சையையும், ரெட்டைப் பின்னலையும், ஸ்கேர்ட் அன்ட் பிளவுஸையும் பாத்திட்டும் உவையள்தான் தேவதைகள் எண்டு திரியிற யாழ்ப்பாணத்துப் பொடியள் பாவங்கள், கிணத்துத் தவளைகள், போன பிறப்பில என்ன அநியாயம் செஞ்சாங்களோ தெரியேல்ல...... அவங்களின்ட விதி அப்பிடி....... ஆரைப் போய் குற்றஞ்சாட்டிறது! :D

நீங்க இரட்டைப் பின்னல்.. எண்ணை வழியுற மூஞ்சி என்று சொல்லுறியள்.. ஆனா சிங்களவன்.. அதுகளுக்குத்தான் "காட்" கொடுக்கிறான். :D:lol:

14jaffna04.jpg

-----------------------------------------------------------

அதாவது பிஞ்சில் பழுத்ததுகள்....

உங்களுக்கு அறிவு வர பிந்தினதுக்காக இப்படியா சொல்லுறது. அப்ப நாங்க உங்களை முத்தின பிஞ்சுகள்.. என்று சொல்லலாமா..! :lol::D

-------------------------------------------------------

எல்லா நேரமும் ஜப்னா கேர்ஸை நக்கல் அடிக்கக் கூடாது.

வேலிக்க இருந்து மொடேனாயும் வருவினம்...

****

Edited by மோகன்
படம் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

.

திருமணம் என்றாலே வீட்டில் நடக்கும் சம்பாசணைகள். எல்லா இடமும் ஒரு மாதிரித்தான் போலை இருக்குது.

நல்ல ஒரு குடும்ப கதையை தந்த புத்தனுக்கு நன்றி.

.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

காவாலிஇ ழn 26 துரடல 2010 - 05:49 Pஆஇ ளயனை:

அதுசரி உந்த எண்ணை வழியிற மூஞ்சையையும்இ ரெட்டைப் பின்னலையும்இ ஸ்கேர்ட் அன்ட் பிளவுஸையும் பாத்திட்டும் உவையள்தான் தேவதைகள் எண்டு திரியிற யாழ்ப்பாணத்துப் பொடியள் பாவங்கள்இ கிணத்துத் தவளைகள்இ போன பிறப்பில என்ன அநியாயம் செஞ்சாங்களோ தெரியேல்ல...... அவங்களின்ட விதி அப்பிடி....... ஆரைப் போய் குற்றஞ்சாட்டிறது!

இதை எங்கே எழுதினீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இது என்னை கொஞ்சம் யோசிக்கவைத்தது

அதாவது

எமக்கிடையே ஆன இடைவெளி இப்படியும் அதிகரிக்கின்றதா என்பதே அது.

ஆனால் நான் இங்கு எழுதியது

விருப்பமில்லாத பிள்ளைகளை அப்படி கட்டிக்கொடுக்கக்கூடாது என்றுதான்.

ஆனால் தங்களது கேள்விக்கு எனது இன்னொரு அனுபவத்தை எழுதலாம் என்று தோன்றுகிறது.

எனது மகனுக்கு 16 வயது இருக்கும்போது

அவன் உயர்தரம் படித்தபோது

அவனுக்கு சிறு தாடி மற்றும்இலேசாக மீசை வந்திருந்தது

இத்தனைக்கும் அவன் இங்கு பிறந்தவன்

முகச்சவரம் செய்ய போவதாக அடிக்கடி கேட்பான்

நான் முடியுமானவரை தவிர்க்கவேண்டும் என்று சொல்லி பிற்போட்டுவந்தேன்.

இறுதியாக பிள்ளை அழாத குறையாக

அப்பா என்னை ஊரிலிருந்து எப்ப வந்தனீ என்று பகிடி செய்கிறார்கள்

என்னால் வகுப்பில் இருக்கமுடியல..

வெளியிலும்வரமுடியல.. என்ற பின்தான் முகச்சவரம் செய்ய விட்டேன்.

இன்று ஒவ்வொரு நாளும் விழந்து விழுந்து அவர் முகச்சவரம் செய்யும்போதும்

இன்னும் கொஞ்ச நாளைக்கு பேசாமல் இருந்திருக்கலாம் என்று அவர் மனம் சொல்லும் என்று நினைக்கின்றேன்

ஆனால் என்னிடம் சொல்லமாட்டான்

எனவே அங்குள்ளவர்கள் வடிவாகத்தான் இருக்கிறார்கள்

அறிவாளிகள்தான்

அங்கு வந்தால் இவர்களும்அவர்களது ஸ்ரைலுக்கு வந்து விடுவார்கள்

இங்கு வந்தால்

அவர்களும்

எண்ணெய் வைக்காத

மீசை வைக்காத

வயத்தை ஒட்டிப்பிடிக்கும் உடுப்பு போடும்

இவர்களது ஸ்ரைலை பின்பற்றுவார்கள்

இது ஒன்றும் தப்பாக தெரியவில்லை.

.......ஏன் உன்னுடைய அம்மாவும் இப்ப பார்க்கிற மாதிரியில்லை,அவவும் முகத்தில் எண்ணை வளியும்,இரட்டை பின்னல்,ஸ்கேர்ட் ,பிளவுஸ் சுடன் தான் வந்தவ,இப்ப தலமயிரை வெட்டி போட்டு ஜீன்ஸும் போட்டுக்கொண்டிருக்கிறா.

நான் என்ரை மனிசி மட்டும்தான் இப்படி எண்டு நினைச்சனான். கட்டைத் தலைமுடியோடையும் வடிவாகத்தான் இருக்கிறாள்.

கதை சுப்பர்.

பரவாயில்லை, வீட்டுக்குள்ள இருந்து கொண்ட்டே "வொப்பை" பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீங்க்ள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.