Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தமக்கு தாமே குழு தோண்டி விட்டார்களாம்; தமிழர்களை அரசாங்கத்துடன் சேர்ந்து பணி செய்யட்டுமாம் - ஜோய் மகேஸ்வரன்

Featured Replies

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியமை பெரும் தவறு என்றும், பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் ஜோய் மகேஸ்வரன் கூறியுள்ளார்.

ஜோய் மகேஸ்வரன் 2002-2005 வரை பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் அதன் பின்னர் குழுவில் இருந்து விலக்கப்பட்டவர். பின்னர் 2009 இல் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின்னர் கே.பி. பத்மநாதனின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேச்சுவாத்தையில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தமக்கு தாமே புலிகள் குழி தோண்டிவிட்டதாக நீண்ட நாள் ஆய்வின் பின்னர் கண்டுபிடித்து கூறியுள்ள ஜோய் மகேஸ்வரன். இனிமேல் புலிகள் தழைப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் மஹிந்தவுடன் பேசுவதே ஒரே வழி என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் புலம்பெயர் மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழ் மக்களிற்கான புனர்வாழ்வு நடவடிகையினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் பேராசிரியர் எலியாஸ் அவர்களின் நினைவு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளதாக கொழும்பு டெய்லினியூஸ் தெரிவித்துள்ளது.

ஈழ நாதம்

தற்போதுதான் சங்கதி இணையத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது போல ஈழநாதம் இணையம் சரியான செய்திகளை வெளியிட முன்வரவேண்டும். அல்லது அதனை நடத்துபவர்கள் எவ்வாறு தனிமனித விரோதங்களை வெளிக்காட்டுகிறார்கள் என்பதை உணர்த்தவேண்டிய நிலை எல்லோருக்கும் உண்டு.

குறித்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்டவன் என்ற வகையில் இச்செய்தி முழுப்பொய்யானது. உதயம் நடேசன் என்பவர் தகவலை திசை திருப்பும் விதத்தில் இன்னொரு பேராசிரியர் கூறிய கருத்தை மகேஸ்வரன் கூறியது போல செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதனை முழுமையாக நம்பிய ஈழநாதம் இணையம் இப்போது இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈழநாதம் இணையத்தை நடத்துபவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அல்லது சரியான வழியில் இணையதளம் முன்கொண்டுசெல்லுவதற்கு உண்மையான பற்றாளர்கள் இன்னும் உண்டு என்பதை மறக்ககூடாது.

குறிப்பு - அக்கூட்டத்தில் பேசிய அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானால் உரியவர்கள் அவசியம் இருப்பின் அறியதாருங்கள்.

Edited by vishal

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி vishal

தங்கள் நேரத்துக்கும்

ஆதாரகரமான வாதத்துக்கும்

முதலில் எம்மை பிரிப்பவரை அனுமதியாதிருப்போம்

எமக்காக உழைத்தோரை தூற்றாதிருப்போம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் இந்தியப் படைகளிடம் புலிகள் தோற்ற போதும் புலிகளின் வெளிநாட்டுக்கு ஓடிய வாலுகள் சொல்லிக் கொண்டிருந்தன.

இன்றை உலக அரசியலுக்கு ஏற்ப புலிகள் மாற வேண்டிய தேவை இருந்தது.

தேசிய தலைவர் இறுதிவரை யுத்தத்திற்கு போக விரும்பி இருக்கவில்லை. முன்னைய காலங்களில் எல்லாம் புலிகளாக வலிந்து யுத்தத்திற்குப் போய் அதை தாக்குப் பிடித்து நின்றிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் மட்டும் தான் புலிகள் வலிந்து யுத்தத்தைச் செய்யவில்லை..! அதனால் தான் இராணுவ ரீதியில் தோற்றுப் போயினர்.

ஒருவேளை 2004 இல் பேச்சு முறிவடைந்த கையோடு தலைவர் யுத்தத்தை ஆரம்பித்திருந்தால்.. இன்று நிலைமை மாறி இருந்திருக்கலாம். கருணாவும் ஓடி இருக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது. அநாவசிய கடல் இழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம்.

சந்திரிக்கா கடலில் படகொன்றை மூழ்கடித்த போதே யுத்ததிற்கு போயிருக்க வேண்டும். அப்படிப் போய் தோற்றிருந்தாலும்.. இதைத்தான் சொல்வார்கள்.. ஐயோ வலிஞ்சு போய் அடிச்சிச்சனம்.. குழிக்க விழுந்திட்டனம் என்று. இப்பவும் அதைத்தான் சொல்லினம். :lol:

இந்த யுத்தத்தை திருமலையில் சம்பூரில் இருந்து ஆரம்பித்தது சந்திரிக்கா அரசு தான். அதை மகிந்த மாவிலாறில் இருந்து தொடர்ந்தார். புலிகள் செய்தது தற்காலிக தாமதச் சமர் மட்டுமே.

புலிகள் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தார்களே அன்றி அவர்களாக போய் குழியில் விழவில்லை. குழி தோண்டி விழ வைக்கப்பட்டார்கள். புலிகளுக்கு குழிந்தோண்டியவர்கள் ஓர் நாள் பழிவாங்கப்படும் நாளும் வரும்..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

2001 செப்ரம்பர் 11 இல் நடந்த அல்கைடாவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னாலான உலக மாற்றத்தை புரிந்துகொள்ளாமலும், பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையீனத்துடனும் சாணக்கியமற்றதன்மையுடன் நடந்துகொண்டதன் விளைவு என்று KP சொல்லுகின்றார். அவரும் குழிதோண்டினாரா? :lol:

புலிகள் வலிந்து போருக்குச் செல்ல முடியாத ஒரு சூழலை.. அதாவது பயங்கரவாததிற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்க மேற்குலகு தனக்கு சார்ப்பான ஆக்கிரமிப்பு யுத்தங்களை தொடுத்த போது புலிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள்.

அதனால் தான் பேச்சுக்களில் இருந்து வெளியேறி தமது அரசியல் இலக்கை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உலகுக்கு கூறிக் கொண்டார்கள். ஆனால் மீண்டும் போருக்குள் செல்லவில்லை.

சந்திரிக்கா பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை செய்த போதும் புலிகள் போருக்குச் செல்லவில்லை. புலிகள் தாங்களாக போரை ஆரம்பிக்க முடியாத சூழலில் தான் சிங்களம் கருணாவையும் பிளவு படுத்தி புலிகளை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் இறங்கியது.

புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க இந்தியாவும் இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டது. புலிகளின் இராணுவ ரீதியான வெற்றிகளும் பொறிமுறைகளும் சர்வதேச தீவிரவாதத்தை பெரிதும் கவர்ந்து கொண்டதால்.. அது அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தல் என்று மேற்குலகும் முடிவு கட்டிக் கொண்டது. புலிகளின் கரும்புலித் தாக்குதல் வடிவத்தை கைவிடும் படி அமெரிக்கா பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது.

இதனை எல்லாம் புலிகள் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தனர்.

ஒருமுறை பொட்டம்மான் பேசும் போது.. கரும்புலிகளை அனுப்புவதில் எமக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவர்களே எமது மக்களின் தடை நீக்கிகள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ தொழில்நுட்பத்தை புலம்பெயர்ந்த மக்கள் வழங்க முன் வர வேண்டும் என்றார்.

அதுமட்டுமன்றி.. எனி ஒரு யுத்தம் வந்தால் அது இறுதி யுத்தமாகவே இருக்கும். எனியும் இந்த யுத்தத்தை நீட்டிக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்தையும் விடுதலைப்புலிகளின் தலைமை வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமன்றி சிறீலங்கா இராணுவம் கிழக்கை பிடித்த பின்னரும் கூட வன்னியில் மக்கள் யுத்தத்தை ஆரம்பிக்கும் படி தேசிய தலைவருக்கு கடிதம் எழுதினர். ஆனால்.. புலிகள் அப்படியொரு நிலையை எப்போதுமே வைத்திருந்ததில்லை. ஈழப்போர் வரலாற்றில் புலிகள் தான் பேச்சுக்களின் பின் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாமே ரகசியமானதாக இருந்துள்ளது.

இங்கு மக்கள் கடிதம் எழுதியது என்பது சர்வதேசத்துக்கான செய்தியாகவே இருந்தது. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை.. மக்கள் மீது யுத்தம் திணிக்கப்ப்படுவதால் மக்கள் எம்மீது யுத்தப் பணியை திணிக்கின்றனர் என்று சொல்ல முற்பட்டனர் புலிகள்.

ஆனால் எதிரி தன்னை மிகவும் பலப்படுத்திக் கொண்டிருந்ததால்.. புலிகள் வலிந்து போய் சமர் செய்யும் நிலையை தவிர்த்து பெரும் ஆளணி.. படைப்பல எதிரியை எதிர்கொண்டு சமராடுவது என்று மட்டும் நிறுத்திக் கொண்டனர்.

இதனை இரண்டு வடிவில் புலிகள் கையாண்டனர். ஒன்று யுத்தத்தை இருக்கும் படைப்பலத்தைக் கொண்டு எதிர்கொள்வது. இரண்டாவது தாங்களா யுத்தத்தை விரும்பவில்லை.. தொடரப்பட்ட யுத்ததுக்கான எதிர் சமர்களையே செய்கிறோம் என்பதை உலகுக்கு சொல்வதாக இருந்தது.

அதுமட்டுமன்றி சிங்கள அரசு யுத்தத்தை தீவிரப்படுத்திய போதும் புலிகள் யுத்த நிறுத்தம் செய்து கொண்டிருந்தனர். இவையெல்லாம் புலிகள் தங்களைச் சுற்றி வலுவான இராணுவ சுற்றி வளைப்பொன்றை உலகம் செய்து விட்டதை உணர்ந்ததன் விளைவு.

அதுமட்டுமன்றி வழமையாக மாவீரர் தின உரைகளில் போருக்கு முக்கியமளிக்கும் தலைவர்.. கடந்த சில ஆண்டுகளில் போர் பற்றியே பேசியதில்லை. மாறாக சர்வதேச மையம் கொள்ளல்கள்.. பொருண்மிய வளர்ச்சிகள்.. அதற்கேற்ப தமிழீழம் செயற்பட வேண்டிய வழிமுறைகள்.. ஒருவேளை போராட்டம்.. இக்கட்டுக்குள் போனால்..(வெளிப்படையாக அதைச் சொல்லா விட்டாலும்..) அதனை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு.. அதனைப் புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

புலிகள் புலம்பெயர் மக்களிடம் முழுப் பணியையும் ஒப்படைக்கும் அறிவிப்பை செய்த போதே அவர்கள் தம்மைப் பற்றிய முடிவை எடுத்துவிட்டனர். இருந்தாலும் இறுதிவரை போரை எதிர்கொள்வது என்ற முடிவில் இருந்தும் அவர்கள் மாறவில்லை.

புலிகள் முற்றாக தோற்பதை விரும்பாத சக்திகளும் புலிகள் பலவீனமாவதை கண்டு அவர்களை முற்றாக அழிப்பதையே விரும்பினர். புலிகளின் இருப்பை தமக்கான அச்சுறுத்தலாகவே பல நாடுகள் பார்த்தன.

அது எவ்வளவு உண்மை என்பதை இன்று காண்கிறோம். இன்று எமது மண்ணில் சீன இராணுவம் நிற்கிறது.. இந்திய இராணுவம் நிற்கிறது.. அமெரிக்க இராணுவம் நிற்கிறது.. பாகிஸ்தான் விமானப்படை நிற்கிறது.. இத்தனையும் மனிதாபிமானப் பணி.. கண்ணி வெடி அகற்றல் பணி.. இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் பணி என்று வந்து நிற்கின்றன.

இவ்வளவு படைகளுக்கும் இடைஞ்சலாக இருந்தவர்கள் புலிகள். இதனை விட பிற இராஜதந்திர நகர்வுகளை தடுக்க அல்லது தாமதப்படுத்தக் கூடிய சக்திகளாக புலிகளின் இராணுவக்கட்டமைப்பு தெற்காசியாவில் வளர்ந்திருந்தது. குறிப்பாக இல்மைண்ட் தோண்டிய ஜப்பான் கப்பல்களுக்கு புலிகளோடு பேரம் பேசியே அவற்றை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.

இலங்கையின் வடக்குக் கிழக்கை நேரடியாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இருந்தன உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும். புலிகளின் விமானங்களால் தனது அணு உலைகளுக்கே ஆபத்து என்றது இந்தியா.

எந்த பிராந்திய வல்லரசும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத கண்காணிக்கப்பட முடியாத ஒரு பிராந்தியம் இருப்பதை விரும்பாது. ஏனெனில் அதனூடு தனக்கு ஆபத்து எப்போதும் வரலாம் என்பதை அது அறியும். புலிகள் இந்தியாவோடு நேரடிப் பகமை காட்டா விட்டாலும்.. அவர்கள் காட்டிய நட்பை இந்தியா நம்பவில்லை. மாறாக புலிகளும் இந்தியாவை முழுமையாக நம்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து 1995 யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்ட போது பெரும் நிம்மதி பெருமூச்சை விட்ட நாடு இந்தியா. அதனை ஆதரித்து அறிக்கையும் விட்டுக் கொண்டது. தனது கண்காணிப்புக்குள் இல்லாத பிரதேசத்தை புலிகள் பரிபாலனம் செய்வதை எந்த உலக நாடும் விரும்பவில்லை.

அதன் பின்னணியில் எழுந்ததுதான் புலிகள் மீதான கூட்டு இராணுவ நடவடிக்கை. அதனை சிறீலங்கா தனக்கான பலமாக்கி தனக்கான வெற்றியாக்கி இன்று அந்தக் கூட்டு இராணுவ பலத்தை அளித்த சில நாடுகளோடு பகைத்துக் கொண்டாலும் பிற நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து தனது சிங்களப்பேரினவாதத்தை தமிழர் தாயகம் எங்கும் நிலைநாட்டி வருகிறது.

உண்மையில்.. கே பி சொன்னது போல் புலிகளுக்கு அல்குவைடா தாக்குதலின் பின் அச்சுறுத்தல் இருந்தது என்பது சரி. ஆனால் அதனை தேசிய தலைவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது பொய். கே பி அரசியல் பணி செய்தவரல்ல. அன்ரன் அண்ணா தான் அதைச் செய்தவர். அவர் 2007 வரை இயக்கத்துக்காக உழைத்தவர். அவர் சர்வதேச மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து அதற்கேற்ப தலைவருக்கு ஆலோசனை வழங்கியவர்.

புலிகள் 2000ம் ஆண்டு கச்சேரியை அடைந்த போது.. அமெரிக்கா B52 போர் விமானங்களை அனுப்பி நிலைமையை கண்காணிக்கும் அளவிற்குச் சென்றது. இந்தியப் படைகள் திருவனந்த புரத்தில் ஒரு தரையிறக்கத்துக்காக தயாராக வேண்டி இருந்தது. இந்த ஒரு நிலையை உலக வல்லாதிக்க சக்திகளின் நிம்மதியான இராஜதந்திரத் திட்டங்களை நிலைதடுமாறச் செய்யும் சக்தியோடு புலிகள் இருப்பதை எந்த வல்லாதிக்க சக்தியும் விரும்பவில்லை. இதனை புலிகள் நன்கு அறிந்திருந்தனர். யோகி அண்ணன்.. பாலகுமார் அண்ணன் போன்றோரின் பேச்சுக்களில் இருந்து இதனை அவதானிக்க முடிந்தது.

இருந்தாலும்.. விடுதலைப்புலிகளின் சக்திக்கு மீறிய வகையில்.. உலக நாடுகளின் சக்தி அமைந்ததும்.. போரியல் ரீதியில் வன்னி பெரும் படை வலுப் பிரயோகத்துக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய பூகோள அமைப்பைக் கொண்டிராததும்.. இராணு வழங்கலால் தனிப்பட்டுப் போகக் கூடியதுமான போர்க்களத்தில்.. புலிகள் இறுதியில் சரணடைவுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானதே அன்றி புலிகள் தம்மால் இயன்ற வரை போராடியே இருந்தனர். இதுதான் உண்மை..!

இன்று எல்லாம் முடிந்த பின்.. தமது பிழைப்புக்காக பொய் சொல்பவர்கள்.. பலவாறு பல சொல்வார்கள். கடந்த கால நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்திருந்தால்.. இவர்களின் அண்டப்புழுகுகளை அப்பட்டமாகக் காணலாம்.

புலிகளை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உலகம் எடுத்திருந்தது என்பது தான் புலிகளின் அழிவுக்கு காரணமானது. அதற்கு அல்குவைடாவின் தாக்குதலும் ஒரு காரணமே அன்றி அதுவே முழுக்க்காரணம் அல்ல. புலிகள் உலக கண்காணிப்புக்களை மீறி நிலத்தை பரிபாலனம் செய்ததே அவர்களின் அழிவுக்குக் காரணமானது. அதாவது பிரகடனப்படுத்தாத தமிழீழத்தை புலிகள் நிறுவியதே அவர்கள் செய்த குற்றம்.

இன்றும் புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக காட்டுக்குள் இருந்து மட்டும் செயற்பட்டிருந்தால்.. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவர்களுக்கு தேடி வந்து உதவி இருக்கும். ஏனெனில் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிராந்தியத்தில் தமது செல்வாக்கை இராஜதந்திர நகர்வுகளை செய்ய.

தலைவர் மக்களுக்காக விரைந்து தமிழீழம் மீட்கப் போய் தான் இன்று அழிந்து போனார் என்பதே உண்மையின் தரிசனம். புலிகள் காட்டுக்குள் பதுங்கி இருந்திருந்தால்.. இன்றும் இப்போதும் இந்தப் போராட்டம் நீண்டிருக்கும். ஆனால் தமிழீழம் பெறப்பட்டிருக்காது. உலக நாடுகள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருக்கும்.

எனவே புலிகள் தோற்றது.. அல்லது தோல்வியை தேடிக் கொண்டது.. தமிழீழத்தை அடைவதற்கான மாற்று வழியை தேடுங்கள் என்று சொல்லவே அன்றி.. தமிழீழத்தை கைவிடுங்கள் என்றல்ல.

ஆனால் நடப்பதோ.. தலை கீழாக. அதுதான் வருத்தமானது. இதனை எப்போதுதான் மக்கள் உணரப் போகின்றனரோ...???!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தற்போதுதான் சங்கதி இணையத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது போல ஈழநாதம் இணையம் சரியான செய்திகளை வெளியிட முன்வரவேண்டும். அல்லது அதனை நடத்துபவர்கள் எவ்வாறு தனிமனித விரோதங்களை வெளிக்காட்டுகிறார்கள் என்பதை உணர்த்தவேண்டிய நிலை எல்லோருக்கும் உண்டு.

குறித்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்டவன் என்ற வகையில் இச்செய்தி முழுப்பொய்யானது. உதயம் நடேசன் என்பவர் தகவலை திசை திருப்பும் விதத்தில் இன்னொரு பேராசிரியர் கூறிய கருத்தை மகேஸ்வரன் கூறியது போல செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதனை முழுமையாக நம்பிய ஈழநாதம் இணையம் இப்போது இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஈழநாதம் இணையத்தை நடத்துபவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அல்லது சரியான வழியில் இணையதளம் முன்கொண்டுசெல்லுவதற்கு உண்மையான பற்றாளர்கள் இன்னும் உண்டு என்பதை மறக்ககூடாது.

குறிப்பு - அக்கூட்டத்தில் பேசிய அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானால் உரியவர்கள் அவசியம் இருப்பின் அறியதாருங்கள்.

இவ்வாறு கொழும்பு டெய்லி நியூ|ஸ் பத்திரிகையில் போடப்பட்டதைத்தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகேஸ்வரன் அந்த செய்திக்கு இன்னமும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தனி நபர்களை குழப்புவதும் , தவறான முறையில் விமர்சனம் செய்வதும் ஈழ நாதத்தின் நோக்கம் அல்ல. முடிந்தால் ஜோய் மகேஸ்வரனின் உரையினை editor@eelanatham எனும் முகவரிக்கு அனுப்புங்கள். கூடவே கொழும்பு டெய்லினியூஸ் பத்த்ரிகைக்கும் அனுப்பி வையுங்கள்.

அவரது தமிழ் வடிவத்தினை கட்டாயம் பிரசுரிக்க வேண்டும். நன்றி

Edited by உமை

அவரது உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. இங்கு நினைவுக்கூட்டம் யாருக்காக நடத்தப்பட்டது என்பதைக்கூட உங்களால் சரியாக வெளிப்படுத்தமுடியவில்லை. பேராசிரியர் எலியாஸ் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். பேராசிரியர் எலியாஸ் அல்ல. அவர் மாமனிதர் பேராசிரியர் எலியேசர்.

ஒவ்வொருவருவரும் எழுதுவீர்கள். அதற்கு மறுப்பறிக்கை எழுதவேண்டும். பின்னர் அவர்தான் திட்டமிட்டு எல்லாம் செய்தவர் என்று இன்னொரு இணையத்தில் எழுதுவீர்கள்.

அவர்கள் அனைவரின் உரையும் ஆங்கிலத்தில் தான் அமைந்திருந்தது. அவற்றை இங்கு வெளியிடமுடியும். அவ்வாறு வெளியிட்டால் ஈழநாதம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் என அறிவித்தால் அதனை செய்யமுடிம். அதற்கான அறிவித்தல் நேரடியாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வலிந்து போருக்குச் செல்ல முடியாத ஒரு சூழலை.. அதாவது பயங்கரவாததிற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்க மேற்குலகு தனக்கு சார்ப்பான ஆக்கிரமிப்பு யுத்தங்களை தொடுத்த போது புலிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள்.

அதனால் தான் பேச்சுக்களில் இருந்து வெளியேறி தமது அரசியல் இலக்கை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உலகுக்கு கூறிக் கொண்டார்கள். ஆனால் மீண்டும் போருக்குள் செல்லவில்லை.

சந்திரிக்கா பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை செய்த போதும் புலிகள் போருக்குச் செல்லவில்லை. புலிகள் தாங்களாக போரை ஆரம்பிக்க முடியாத சூழலில் தான் சிங்களம் கருணாவையும் பிளவு படுத்தி புலிகளை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் இறங்கியது.

புலிகளை பலவீனப்படுத்தி அழிக்க இந்தியாவும் இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டது. புலிகளின் இராணுவ ரீதியான வெற்றிகளும் பொறிமுறைகளும் சர்வதேச தீவிரவாதத்தை பெரிதும் கவர்ந்து கொண்டதால்.. அது அமெரிக்காவிற்கும் அச்சுறுத்தல் என்று மேற்குலகும் முடிவு கட்டிக் கொண்டது. புலிகளின் கரும்புலித் தாக்குதல் வடிவத்தை கைவிடும் படி அமெரிக்கா பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டது.

இதனை எல்லாம் புலிகள் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தனர்.

ஒருமுறை பொட்டம்மான் பேசும் போது.. கரும்புலிகளை அனுப்புவதில் எமக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவர்களே எமது மக்களின் தடை நீக்கிகள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ தொழில்நுட்பத்தை புலம்பெயர்ந்த மக்கள் வழங்க முன் வர வேண்டும் என்றார்.

அதுமட்டுமன்றி.. எனி ஒரு யுத்தம் வந்தால் அது இறுதி யுத்தமாகவே இருக்கும். எனியும் இந்த யுத்தத்தை நீட்டிக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்தையும் விடுதலைப்புலிகளின் தலைமை வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமன்றி சிறீலங்கா இராணுவம் கிழக்கை பிடித்த பின்னரும் கூட வன்னியில் மக்கள் யுத்தத்தை ஆரம்பிக்கும் படி தேசிய தலைவருக்கு கடிதம் எழுதினர். ஆனால்.. புலிகள் அப்படியொரு நிலையை எப்போதுமே வைத்திருந்ததில்லை. ஈழப்போர் வரலாற்றில் புலிகள் தான் பேச்சுக்களின் பின் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாமே ரகசியமானதாக இருந்துள்ளது.

இங்கு மக்கள் கடிதம் எழுதியது என்பது சர்வதேசத்துக்கான செய்தியாகவே இருந்தது. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை.. மக்கள் மீது யுத்தம் திணிக்கப்ப்படுவதால் மக்கள் எம்மீது யுத்தப் பணியை திணிக்கின்றனர் என்று சொல்ல முற்பட்டனர் புலிகள்.

ஆனால் எதிரி தன்னை மிகவும் பலப்படுத்திக் கொண்டிருந்ததால்.. புலிகள் வலிந்து போய் சமர் செய்யும் நிலையை தவிர்த்து பெரும் ஆளணி.. படைப்பல எதிரியை எதிர்கொண்டு சமராடுவது என்று மட்டும் நிறுத்திக் கொண்டனர்.

இதனை இரண்டு வடிவில் புலிகள் கையாண்டனர். ஒன்று யுத்தத்தை இருக்கும் படைப்பலத்தைக் கொண்டு எதிர்கொள்வது. இரண்டாவது தாங்களா யுத்தத்தை விரும்பவில்லை.. தொடரப்பட்ட யுத்ததுக்கான எதிர் சமர்களையே செய்கிறோம் என்பதை உலகுக்கு சொல்வதாக இருந்தது.

அதுமட்டுமன்றி சிங்கள அரசு யுத்தத்தை தீவிரப்படுத்திய போதும் புலிகள் யுத்த நிறுத்தம் செய்து கொண்டிருந்தனர். இவையெல்லாம் புலிகள் தங்களைச் சுற்றி வலுவான இராணுவ சுற்றி வளைப்பொன்றை உலகம் செய்து விட்டதை உணர்ந்ததன் விளைவு.

அதுமட்டுமன்றி வழமையாக மாவீரர் தின உரைகளில் போருக்கு முக்கியமளிக்கும் தலைவர்.. கடந்த சில ஆண்டுகளில் போர் பற்றியே பேசியதில்லை. மாறாக சர்வதேச மையம் கொள்ளல்கள்.. பொருண்மிய வளர்ச்சிகள்.. அதற்கேற்ப தமிழீழம் செயற்பட வேண்டிய வழிமுறைகள்.. ஒருவேளை போராட்டம்.. இக்கட்டுக்குள் போனால்..(வெளிப்படையாக அதைச் சொல்லா விட்டாலும்..) அதனை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு.. அதனைப் புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

புலிகள் புலம்பெயர் மக்களிடம் முழுப் பணியையும் ஒப்படைக்கும் அறிவிப்பை செய்த போதே அவர்கள் தம்மைப் பற்றிய முடிவை எடுத்துவிட்டனர். இருந்தாலும் இறுதிவரை போரை எதிர்கொள்வது என்ற முடிவில் இருந்தும் அவர்கள் மாறவில்லை.

புலிகள் முற்றாக தோற்பதை விரும்பாத சக்திகளும் புலிகள் பலவீனமாவதை கண்டு அவர்களை முற்றாக அழிப்பதையே விரும்பினர். புலிகளின் இருப்பை தமக்கான அச்சுறுத்தலாகவே பல நாடுகள் பார்த்தன.

அது எவ்வளவு உண்மை என்பதை இன்று காண்கிறோம். இன்று எமது மண்ணில் சீன இராணுவம் நிற்கிறது.. இந்திய இராணுவம் நிற்கிறது.. அமெரிக்க இராணுவம் நிற்கிறது.. பாகிஸ்தான் விமானப்படை நிற்கிறது.. இத்தனையும் மனிதாபிமானப் பணி.. கண்ணி வெடி அகற்றல் பணி.. இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தும் பணி என்று வந்து நிற்கின்றன.

இவ்வளவு படைகளுக்கும் இடைஞ்சலாக இருந்தவர்கள் புலிகள். இதனை விட பிற இராஜதந்திர நகர்வுகளை தடுக்க அல்லது தாமதப்படுத்தக் கூடிய சக்திகளாக புலிகளின் இராணுவக்கட்டமைப்பு தெற்காசியாவில் வளர்ந்திருந்தது. குறிப்பாக இல்மைண்ட் தோண்டிய ஜப்பான் கப்பல்களுக்கு புலிகளோடு பேரம் பேசியே அவற்றை பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.

இலங்கையின் வடக்குக் கிழக்கை நேரடியாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இருந்தன உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும். புலிகளின் விமானங்களால் தனது அணு உலைகளுக்கே ஆபத்து என்றது இந்தியா.

எந்த பிராந்திய வல்லரசும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத கண்காணிக்கப்பட முடியாத ஒரு பிராந்தியம் இருப்பதை விரும்பாது. ஏனெனில் அதனூடு தனக்கு ஆபத்து எப்போதும் வரலாம் என்பதை அது அறியும். புலிகள் இந்தியாவோடு நேரடிப் பகமை காட்டா விட்டாலும்.. அவர்கள் காட்டிய நட்பை இந்தியா நம்பவில்லை. மாறாக புலிகளும் இந்தியாவை முழுமையாக நம்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து 1995 யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்ட போது பெரும் நிம்மதி பெருமூச்சை விட்ட நாடு இந்தியா. அதனை ஆதரித்து அறிக்கையும் விட்டுக் கொண்டது. தனது கண்காணிப்புக்குள் இல்லாத பிரதேசத்தை புலிகள் பரிபாலனம் செய்வதை எந்த உலக நாடும் விரும்பவில்லை.

அதன் பின்னணியில் எழுந்ததுதான் புலிகள் மீதான கூட்டு இராணுவ நடவடிக்கை. அதனை சிறீலங்கா தனக்கான பலமாக்கி தனக்கான வெற்றியாக்கி இன்று அந்தக் கூட்டு இராணுவ பலத்தை அளித்த சில நாடுகளோடு பகைத்துக் கொண்டாலும் பிற நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து தனது சிங்களப்பேரினவாதத்தை தமிழர் தாயகம் எங்கும் நிலைநாட்டி வருகிறது.

உண்மையில்.. கே பி சொன்னது போல் புலிகளுக்கு அல்குவைடா தாக்குதலின் பின் அச்சுறுத்தல் இருந்தது என்பது சரி. ஆனால் அதனை தேசிய தலைவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பது பொய். கே பி அரசியல் பணி செய்தவரல்ல. அன்ரன் அண்ணா தான் அதைச் செய்தவர். அவர் 2007 வரை இயக்கத்துக்காக உழைத்தவர். அவர் சர்வதேச மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து அதற்கேற்ப தலைவருக்கு ஆலோசனை வழங்கியவர்.

புலிகள் 2000ம் ஆண்டு கச்சேரியை அடைந்த போது.. அமெரிக்கா B52 போர் விமானங்களை அனுப்பி நிலைமையை கண்காணிக்கும் அளவிற்குச் சென்றது. இந்தியப் படைகள் திருவனந்த புரத்தில் ஒரு தரையிறக்கத்துக்காக தயாராக வேண்டி இருந்தது. இந்த ஒரு நிலையை உலக வல்லாதிக்க சக்திகளின் நிம்மதியான இராஜதந்திரத் திட்டங்களை நிலைதடுமாறச் செய்யும் சக்தியோடு புலிகள் இருப்பதை எந்த வல்லாதிக்க சக்தியும் விரும்பவில்லை. இதனை புலிகள் நன்கு அறிந்திருந்தனர். யோகி அண்ணன்.. பாலகுமார் அண்ணன் போன்றோரின் பேச்சுக்களில் இருந்து இதனை அவதானிக்க முடிந்தது.

இருந்தாலும்.. விடுதலைப்புலிகளின் சக்திக்கு மீறிய வகையில்.. உலக நாடுகளின் சக்தி அமைந்ததும்.. போரியல் ரீதியில் வன்னி பெரும் படை வலுப் பிரயோகத்துக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய பூகோள அமைப்பைக் கொண்டிராததும்.. இராணு வழங்கலால் தனிப்பட்டுப் போகக் கூடியதுமான போர்க்களத்தில்.. புலிகள் இறுதியில் சரணடைவுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானதே அன்றி புலிகள் தம்மால் இயன்ற வரை போராடியே இருந்தனர். இதுதான் உண்மை..!

இன்று எல்லாம் முடிந்த பின்.. தமது பிழைப்புக்காக பொய் சொல்பவர்கள்.. பலவாறு பல சொல்வார்கள். கடந்த கால நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்திருந்தால்.. இவர்களின் அண்டப்புழுகுகளை அப்பட்டமாகக் காணலாம்.

புலிகளை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உலகம் எடுத்திருந்தது என்பது தான் புலிகளின் அழிவுக்கு காரணமானது. அதற்கு அல்குவைடாவின் தாக்குதலும் ஒரு காரணமே அன்றி அதுவே முழுக்க்காரணம் அல்ல. புலிகள் உலக கண்காணிப்புக்களை மீறி நிலத்தை பரிபாலனம் செய்ததே அவர்களின் அழிவுக்குக் காரணமானது. அதாவது பிரகடனப்படுத்தாத தமிழீழத்தை புலிகள் நிறுவியதே அவர்கள் செய்த குற்றம்.

இன்றும் புலிகள் ஒரு கெரில்லா அமைப்பாக காட்டுக்குள் இருந்து மட்டும் செயற்பட்டிருந்தால்.. அமெரிக்கா உட்பட பல நாடுகள் அவர்களுக்கு தேடி வந்து உதவி இருக்கும். ஏனெனில் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிராந்தியத்தில் தமது செல்வாக்கை இராஜதந்திர நகர்வுகளை செய்ய.

தலைவர் மக்களுக்காக விரைந்து தமிழீழம் மீட்கப் போய் தான் இன்று அழிந்து போனார் என்பதே உண்மையின் தரிசனம். புலிகள் காட்டுக்குள் பதுங்கி இருந்திருந்தால்.. இன்றும் இப்போதும் இந்தப் போராட்டம் நீண்டிருக்கும். ஆனால் தமிழீழம் பெறப்பட்டிருக்காது. உலக நாடுகள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டிருக்கும்.

எனவே புலிகள் தோற்றது.. அல்லது தோல்வியை தேடிக் கொண்டது.. தமிழீழத்தை அடைவதற்கான மாற்று வழியை தேடுங்கள் என்று சொல்லவே அன்றி.. தமிழீழத்தை கைவிடுங்கள் என்றல்ல.

ஆனால் நடப்பதோ.. தலை கீழாக. அதுதான் வருத்தமானது. இதனை எப்போதுதான் மக்கள் உணரப் போகின்றனரோ...???!

பாராட்டுக்கள்!!!

இன்றை உலக அரசியலுக்கு ஏற்ப புலிகள் மாற வேண்டிய தேவை இருந்தது.

:lol:

உலக ஓட்டத்துக்கு ஏற்ப நன்னாக மாறினார்கள்! :lol:

தேசிய தலைவர் இறுதிவரை யுத்தத்திற்கு போக விரும்பி இருக்கவில்லை. முன்னைய காலங்களில் எல்லாம் புலிகளாக வலிந்து யுத்தத்திற்குப் போய் அதை தாக்குப் பிடித்து நின்றிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில் மட்டும் தான் புலிகள் வலிந்து யுத்தத்தைச் செய்யவில்லை..! அதனால் தான் இராணுவ ரீதியில் தோற்றுப் போயினர்.

image012.gif

இச்செய்தி உண்மையோ, பொய்மைய்க்கு அப்பால் .... யுத்தம் முடிந்து தோல்வி என்ன அழிக்கப்பட்ட பின் .. உடனடியாக விடப்பட்ட தவறுகளை மீளாய்வு செய்து அடுத்த கட்டத்துக்கான நகர்வுகளை மேற்கொள்வதை விடுத்து, அண்னையின் பாசறையில் வளர்ந்த கண்மணிகள், தமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் என்ன பதவிகளையும்/பணங்களையும் தக்க வைக்க மயிர் பிடிச்சண்டையில் ஈடுபட்டார்களே ஒழிய, இத் தொலை நோக்கற்ற செயற்பாடுகள், அண்ணையின் பாசறைக் கண்மணிகள் ஒவ்வொருவரையும் சிங்களத்தின் கால்களில் வரிசையாக சென்று விழ வைக்கிறது!

சிங்களம் விரும்பிய/செய்ய முனையும் இச்செயற்பாடுகளை சிறப்பாக இன்று புலத்தில் உள்ள காஸ்ரோக்கள் செய்து முடிக்கிறார்கள்! :lol:

... 2002ல் யுத்த நிறுத்தம் வந்து பேச்சுவார்த்தை ஆரம்பமானது .... புலத்துக்காஸ்ரோகள் ஏறக்குறைய ஓரிருவருடங்களுக்குள்ளேயே "2008ல் மணிபக் கரண்டி" கொடுத்து உலகெங்கும் இறுதியுத்ததுக்கான பணவேட்டியில் இறங்கி விட்டார்கள். ... என்ன இந்த மேற்குலக அரசியல்/இராணுவ வட்டாரங்கள். இந்த இறுதியுத்த நிதி வேட்டையை, பார்த்தும், கேட்டும் ... பார்க்காதது/கேட்காதது போல் இருப்பார்கள் என்றா நினைத்து விட்டார்கள் எம் புலத்து காஸ்ரோக்கள்??????

பயங்கரவாத அரசுகளின் அடிவருடிகள், அந்த நயவஞ்சகர் கூட்டத்தின் சதித் திட்டங்களை விட்டுவிட்டு, புலிகளில் வலிந்து குற்றம் காணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு கொழும்பு டெய்லி நியூ|ஸ் பத்திரிகையில் போடப்பட்டதைத்தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகேஸ்வரன் அந்த செய்திக்கு இன்னமும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தனி நபர்களை குழப்புவதும் , தவறான முறையில் விமர்சனம் செய்வதும் ஈழ நாதத்தின் நோக்கம் அல்ல. முடிந்தால் ஜோய் மகேஸ்வரனின் உரையினை editor@eelanatham எனும் முகவரிக்கு அனுப்புங்கள். கூடவே கொழும்பு டெய்லினியூஸ் பத்த்ரிகைக்கும் அனுப்பி வையுங்கள்.

அவரது தமிழ் வடிவத்தினை கட்டாயம் பிரசுரிக்க வேண்டும். நன்றி

டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு அனுப்பி ஒரு பிரயோசனமுமில்லை. அவர்கள் புலி ஆதரவற்ற வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் அடிபட்டாலும் புலிகள் அடிபட்டவை என்று பொய்யான செய்திகளைத்தான் இப்பத்திரிகை வெளியிட்டு வருகின்றது.

90களில் கடைசிப் பகுதிகளில் இலண்டன் சவூத் கோல் பக்கம் நடைபெற்ற தமிழர் விழா ஒன்றில் சில காவாளிகள் அடிபட்டார்கள். இதனால் அவ் விழா நிறுத்தப்பட்டது. இக்காவாளிகளை சிங்களம் தமிழர்களின் விழாக்களில் குழப்புவதற்காக அனுப்புவதுண்டு. ஆனால் டெயிலி நியூசில் புலிகள் உட்சண்டை என்று செய்தி வெளியிட்டது.

அவுஸ்திரெலியாவில் வசித்த சிங்கப்பூரில் பிறந்த மயூரன் சுகுமார் என்பவர் சில வெள்ளைக்காரர்கள், சீனர்கள் துணையுடன் இந்தோனேசியாவில் போதை வஸ்து கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளார். உடனே விடுதலைப்புலிகள் போதைவஸ்து கடத்தும் போது கைது செய்யப்பட்டவர்கள் என்று தலைப்புச் செய்தியை டெய்லி நியூஸ் வெளியிட்டது. இதில் சிங்கப்பூரில் பிறந்த மயூரன் சுகுமார், வெள்ளைக்காரர்கள், சீனர்கள் எல்லோரையும் ஈழத் தமிழராகச் சொல்லி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உதயம் நடேசன் என்பவர் தகவலை திசை திருப்பும் விதத்தில் இன்னொரு பேராசிரியர் கூறிய கருத்தை மகேஸ்வரன் கூறியது போல செய்தியை வெளியிட்டுள்ளார்.

உதயம் பத்திரிகை சிங்களம் வீசும் காசுக்கு தமிழர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த புலி எதிர்ப்புச் செய்திகளை பலவருடங்களாகச் செய்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்து தமிழர்கள், மலேசியா, மொரிசியஸ் தமிழர்கள் வீதிகளில் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளில் கேட்கும் போது, இந்த நடேசனும் சில புலம்பெயர் வாழும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுபவர்களும், பாசில் இராசபக்சாவைச் சந்தித்தபின்பு, மகிந்தா செய்வது சரி என கருத்து வெளியிட்டு இருந்தார்கள்.

" எனவே புலிகள் தோற்றது.. அல்லது தோல்வியை தேடிக் கொண்டது.. தமிழீழத்தை அடைவதற்கான மாற்று வழியை தேடுங்கள் என்று சொல்லவே அன்றி.. தமிழீழத்தை கைவிடுங்கள் என்றல்ல." - நன்றி

இன்னும் காலம் கடந்து விடவில்லை. பல வழிகளிலும் முயற்சி செய்வோம். நம்பிக்கை கொள்வோம். எமக்கும் காலம் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.