Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுதுங்கள்,அறிந்து கொள்வோம்,எம்மை நாமே.....???புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசுக்குறுவில் தலைவர் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டு நின்றபோது கருணாதானம் வந்து காப்பாற்றினார் என்று முன்பு சொன்னார்கள்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் .இது .

ஆமா சார்.. ஜெயசிக்குறு சமரை எப்படி எதிர்கொள்வது என்று தலைவர் முழிச்சுக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தவை தான் வந்து உங்களுக்கு சொன்னவை.

ஜெயசிக்குறு சமர் வரலாற்றுச் சமராக நடந்த ஒரு நீண்ட சமர். அதற்கு போராளிகளை தளபதிகளை பல இடங்களில் இருந்தும் தலைவர் நகர்த்தி இருந்தார். தலைவர் ஜெயசிக்குறு சமரை வெறும் தடுப்புச் சமராக மட்டும் நடத்தவில்லை. வலிந்து தாக்குதல் சமர்களையும் நடத்தினார். அதனால் பல்வேறு தளபதிகளையும் அழைத்தார்.

கருணாவிற்கும் ஒரு பகுதியும் எதிர் சமருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் கருணா தயக்கத்தோடு தான் செயற்பட்டிருந்தார். ஆயுதம் காணாது.. அது காணாது என்று ஆயிரம் குறைகள். இருந்தும் தலைவர் தான் தேவையானவற்றை வரவழைத்துக் கொடுத்து ஜெயசிக்குறு எதிர் சமரை அழித்தொழிப்பு யுத்தமாக மாற்றியவர். இறுதியில் அதுவே ஓயாத அலைகள் 3 ஆய் பரினமித்தது.

ஓயாத அலைகள் 3 க்கு போராளிகளை தளபதிகளை தயார் செய்யும் வேலையையும் ஜெயசிக்குறு சமரையும் எதிர்கொள்ளவே தலைவர் கிழக்கில் இருந்தும் தளபதிகளை படையணிகளை வன்னிக்கு நகர்த்தி இருந்தார். வன்னியின் இருப்பில் தான் போராட்டத்தின் இருப்பே இருந்தது. ஏனெனில் கிழக்கில் அதன் பூகோள அமைப்பு நிரந்தரமாக நிலத்தை தக்க வைக்கும் அளவில் இருக்கவில்லை. கருணா கிழக்கில்.. இராணுவம் ஆட்பற்றாக்குறையால் விலகிச் சென்ற இடங்களில் பரிபாலனம் செய்தாரே அன்றி.. சமர் செய்து இடங்களை மீட்கவில்லை.

ஆனால் வன்னி அப்படி அன்று. அங்கிருந்த எல்லா இராணுவ முகாம்களும் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டே அந்த மண் விடுவிக்கப்பட்டிருந்தது. 1990 களின் (இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு) ஆரம்பத்தில் இருந்து வன்னியை மீட்பதையே தலைவர் முதன்மை பணியாகக் கொண்டிருந்தார். கொக்காவில்.. மாங்குளம்.. பூநகரி.. முல்லைத்தீவு.. ஆனையிறவு என்று வன்னிக்கான தடைக்கற்களை அழிப்பதையே தலைவர் பிரதானமாகச் செய்து கொண்டிருந்தார். காரணம்.. வன்னியின் பூகோள அமைப்பு அன்றைய சிறீலங்காவின் இராணுவ பலத்திற்கு முகம் கொடுத்து அந்த நிலத்தை தக்க வைக்கக் கூடிய நிலைக்குள் இருந்ததால்.

ஆனால் கிழக்கில் நிலை அப்படியல்ல. சில இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டாலும்.. போராளிகள் அழித்தொழிப்பு சமரை செய்துவிட்டு பின்வாங்கி விடுவார்கள். நிலத்தை தக்க வைக்க முடியாத நிலை அங்கிருந்தது.

வன்னி தான் எல்லாப் போராளிகளுக்கும் புகலிடமாக.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் மையம் கொள்ளக் கூடிய நிலமாக இருந்தது. அதை இன்று நாம் தெளிவாகக் காண்கிறோம். தலைவர் அதை 1980களின் பிற்பகுதியிலேயே உணர்ந்திருந்தார்.

இருந்தாலும் சிறீலங்கா இராணுவத்தின் இராணுவக் கட்டமைப்பின் பரிமான வளர்ச்சி.. அந்நிய தேசங்களில் இருந்து சிறீலங்காவுக்கு கிடைத்த இராணுவ உதவிகள்..வன்னியை தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய அளவுக்கு போராளிகளால் போனது. அந்த நிலையில் தான் வன்னி இழக்கப்பட்டு.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிப் போராட்டம் முடிவையும் எட்டியது. ஒருவேளை தலைவர் வன்னியை 1990 இல் விட்டுக் கொடுத்திருந்தால்.. 1995 சூரியக் கதிரோடு போராட்டம் ஓய்வுக்கு வந்திருக்கும்...! 20 ஆண்டுகளுக்கு போராட்டத்தை நீட்டிக்கச் செய்தது வன்னி மண் என்பதையும் பலர் சுலபமாக மறந்துவிட்டு வன்னிப்புலிகள் எங்கின்றனர். வன்னி தான் கிழக்கு வடக்குப் போராளிகளுக்கு அடைக்கலம் தந்து தமிழீழத்தை உச்சரிக்க செய்து கொண்டிருந்ததை மறந்துவிட்டார்கள்.

வன்னியை பழிக்கும் ரதி அக்கா போன்றவர்கள்.. சொந்த தாயை பழிக்கும் இழி செயலை செய்பவர்களுக்கு சமன்..!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று எப்பவும் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் சொரனை கெட்ட உங்களைப் போன்றதுகளுக்கு தங்களின் சொந்த இனம் அடிமைப்பட்டுப் போனதை இட்டு கொஞ்சமும் கவலை இல்ல. :D:lol::D

நீங்கள் எல்லாம் முன்னாள் போராளிகளாக எப்படி இருந்தீர்களோ தெரியவில்லை. அதற்கான எந்தத் தகுதியும் உங்களிடம் இல்லையே. சொந்த மண்ணின் மீதே பற்றில்லாத நீங்கள் முன்னாள் போராளியா. எடுபிடியா இருந்துபோட்டு.. பப்பாகாயை செருகிட்டு திரிஞ்சிட்டு கனடாவுக்கு ஒடினது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு காலத்தில் கனபேர் செய்தவையாம். அந்த வகை தான் நீங்கள் போல..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நான் வன்னிப் புலி என்டு எழுதி விட்டேன் பிரதேசவாதத்தை வளர்க்கிறேன் என சொல்கிறீர்கள்...நான் முதலாவது எழுதிய கருத்தில் இது பற்றி ஒன்டுமே கதைக்கவில்லை...நான் அப்படி எழுதியது தப்பு என்டால் அதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் மட்டக்களப்பு மக்கள் பிரதேசவாதம் பார்க்கிறார்கள் என குறிப்பாக சுட்டிக் காட்டிய நெடுக்ஸ் முதலில் மன்னிப்பு கேட்கட்டும் அதன் பின் நான் கேட்கிறேன்...நாங்கள் மற்றவரை என்ன வேண்டுமானாலும் மற்றவர் எங்களை ஒன்டும் சொல்லக் கூடாது.

தம்பி நெடுக்ஸ் தமிழ்செல்வன் அரசியல்துறைப் பொறுப்பாளர் ...அவர் இதே மாதிரி எத்தனை கதைகள் கதைத்திருக்கார்...நீங்கள் எல்லோரும் வெவ்வேறு பதிவுகளில் அவரை நக்கல் அடிக்கவில்லை...கருணா இயக்கத்தை விட்டுப் போன பிறகு யாருடன் தொடர்பு வைத்தால் எங்களுக்கு என்ன?...நான் என்ன அவர் நல்லவன் உத்தமன் என்டா சொன்னேன்...நான் எழுதியது அவர் இயக்கத்தில் இருக்கும் போது எப்படி இருந்தார் என்டு தானே தவிர இயக்கத்தை விட்டு பிரிந்து அரசோடு சேர்ந்து நிற்பவரைப் பற்றி நாங்கள் ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்...தேசியத் தலைவர் மாத்தையாவைப் பற்றி இந்தியாவில் இருந்து போய் சந்தித்த அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு சொன்னார்[அவரது பெயர் மறந்து விட்டது]...சொன்னது மட்டும் இல்லாமல் மாத்தையாவை கூட்டி வந்து அப் பெண்ணிற்கு காட்டினார்கள்...உங்களுக்கு தெரியாது என்டால் வடியாய் யாரிடமாவது விசாரித்து விட்டு வந்து எழுதுங்கள்.

வணக்கம் சகோதரி/சகோதரன் ரதி!

நான் அரசியல் சம்பத்தப்பட்ட விடயங்களிற்கு இப்போது கருத்து எழுதுவதில்லை..ஏதோ எழுத தூண்டுகிறீர்கள்...நீங்கள் ஏதோ ஒரு முடிவுடன் வந்துள்ளீர்கள்..அதை யாராலும் மாற்ற முடியாது என்று நினைக்கிறேன்..

எனது கருத்தும் நெடுக்ஸ் கருத்தும் ஒரேமாதிரியானதே. கண்ணால் கண்ட பல உண்மைகள் அதில் அடங்கியுள்ளன .இதைவிட விபரமாக, ஆதாரங்களுடன் எழுதி எனது மனதை பழைய நிலைக்கு கொண்டுபோக விரும்பவில்லை...

முக்கியமாக நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறமாதிரி தெரிகிறது..அதென்ன என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்...

வல்வைலிங்கம் அண்ணா உங்கள மாதிரித் தான் பல பேர் எல்லாம் தெரியும் கண்லாலே கண்டனான் என்பார்கள் ஆனால் எழுத மாட்டார்கள்...தலைப்பு என்னவென்டு தெரியும் தானே இது தான்//எழுதுங்கள்,அறிந்து கொள்வோம்,எம்மை நாமே.....???புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை//நான் எழுதிய கருத்துகளை முதலாவதில் இருந்து வடிவாய் வாசியுங்கள் அதற்கு பின் பதிலளியுங்கள்...நான் இங்கு எங்குமே கருணாவிற்கு ஆதர‌வாய் எதுவும் எழுதவில்லை...நான் முந்தி நட‌ந்ததையே எழுதினேன்...நான் எழுதினது எல்லாம் பொய் என்டால் நீங்கள் கண்ட‌தை எழுதுங்கள் நான் அறிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா ஆண்டாண்டு காலமாக பெண்களை அட‌க்க ஆண்கள் கையில் எடுக்கும் ஆயுதத்தையே நீங்கள் எடுப்பீர்கள் என நான் எதிர் பார்க்கவில்லை.

இவளவு சீக்கிரம் குட்டுடைபடும் என்று நீங்களும் எதிர்பாத்து இருக்க மாட்டீர்கள் நானும் எதிர்பாக்கவில்லை நீங்கKள் இருந்த இடங்களை சொல்லுஙகள்.

ஏன் மண்டையில் போட‌வா? மோகன் அண்ணாவுக்கு வேண்டுமானால் நான் யார் எனக் காட்டுகிறேன்...உங்களுக்கு எல்லாம் என்னை இனம் காட்ட‌ வேண்டிய தேவை எனக்கு இல்லை...முடிந்தால் கருத்தை கருத்தால் வெல்லப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நான் இங்கு எழுதிய கருத்துகள் எதிலுமே தலைவரை தாழ்த்தியோ,கருணாவை உயர்த்தியோ அல்லது புலிகளை தாழ்த்தியோ எழுதவில்லை...நான் முன்பு நடந்ததைத் தான் எழுதினேன்...நாங்கள் எல்லாரும் சேர்ந்து பிழை விட்டோம் இனி மேல் பிழை விட கூடாது என்பதற்காகத் எழுதினேன்...வன்னிப் புலி ஆதரவாளர் என்ட ஒரு வார்த்தை தெரியாத்தனமாய் எழுதி விட்டேன் ஆனால் வன்னி மண்ணை பற்றி நான் எங்குமே தப்பாய் எழுதியதாய் ஞாபகம் இல்லை...தலைப்பை எல்லோரும் ஒருக்கால் திரும்பி பாருங்கள்...அதுவும் நானாகத் தொடங்கவில்லை கதை கதையாம் பகுதியில் நெடுக்ஸ் தேவையில்லாமல் ஒட்டுக் குழுக்களையும்,கருணாவையும் என்னையும் சேர்த்து வைத்து எழுதினபடியால் தான் நானும் எழுத வேண்டீ வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நான் வன்னிப் புலி என்டு எழுதி விட்டேன் பிரதேசவாதத்தை வளர்க்கிறேன் என சொல்கிறீர்கள்...நான் முதலாவது எழுதிய கருத்தில் இது பற்றி ஒன்டுமே கதைக்கவில்லை...நான் அப்படி எழுதியது தப்பு என்டால் அதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் மட்டக்களப்பு மக்கள் பிரதேசவாதம் பார்க்கிறார்கள் என குறிப்பாக சுட்டிக் காட்டிய நெடுக்ஸ் முதலில் மன்னிப்பு கேட்கட்டும் அதன் பின் நான் கேட்கிறேன்...நாங்கள் மற்றவரை என்ன வேண்டுமானாலும் மற்றவர் எங்களை ஒன்டும் சொல்லக் கூடாது.

தம்பி நெடுக்ஸ் தமிழ்செல்வன் அரசியல்துறைப் பொறுப்பாளர் ...அவர் இதே மாதிரி எத்தனை கதைகள் கதைத்திருக்கார்...நீங்கள் எல்லோரும் வெவ்வேறு பதிவுகளில் அவரை நக்கல் அடிக்கவில்லை...கருணா இயக்கத்தை விட்டுப் போன பிறகு யாருடன் தொடர்பு வைத்தால் எங்களுக்கு என்ன?...நான் என்ன அவர் நல்லவன் உத்தமன் என்டா சொன்னேன்...நான் எழுதியது அவர் இயக்கத்தில் இருக்கும் போது எப்படி இருந்தார் என்டு தானே தவிர இயக்கத்தை விட்டு பிரிந்து அரசோடு சேர்ந்து நிற்பவரைப் பற்றி நாங்கள் ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்...தேசியத் தலைவர் மாத்தையாவைப் பற்றி இந்தியாவில் இருந்து போய் சந்தித்த அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு சொன்னார்[அவரது பெயர் மறந்து விட்டது]...சொன்னது மட்டும் இல்லாமல் மாத்தையாவை கூட்டி வந்து அப் பெண்ணிற்கு காட்டினார்கள்...உங்களுக்கு தெரியாது என்டால் வடியாய் யாரிடமாவது விசாரித்து விட்டு வந்து எழுதுங்கள்.

அக்கோய் தங்களின் இரண்டாம் கருத்து கருணாவைப் போலவே அத்தனை பிரதேசவாதத்தையும் கக்கி நிற்கிறது. அதனைக் கண்டு தான் நான் இந்தத் தலைப்புக்குள் கருத்தெழுத வந்தேன்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணி என்று சொல்லி கருணா மக்களை விரட்டி அடித்ததையும் மறந்துவிட்டீர்கள் போல. நான் கண்டிருக்கிறேன்.. யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்த மட்டக்களப்பு மக்கள்.. யாழ்ப்பாணத்தவர்களை யாழ்ப்பாணி என்று சொல்லக் கேட்டு. இதற்குள் பிரதேசவாதம் இன்றி என்ன இருக்கிறது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமை இவற்றை களைய பெரும்பாடு பட்டது என்பது உண்மை.

தேசிய தலைவரா மாத்தையா பற்றி எதுவும் தானா சொல்லவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருப்பார். அதிலும் அவர் துரோகி என்று எவரையும் குறிப்பிட்டதில்லை. துரோகத்தனங்களை பார்த்திருக்கிறேன் என்று தான் சொல்வார். ஆனால் கருணா பற்றி தேசிய தலைவரின் முடிவை தமிழ்செல்வன் அண்ணா பகிரங்கமாகத்தான் அறிவித்தார். கருணா பற்றி தேசிய தலைவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.

இயக்க கட்டுப்பாடுகள் விதிமுறைகள் மீதியதற்காக கருணா இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாகவே அறிவிக்கப்பட்டார். அதற்கு முதல் கருணாவிற்கு விசாரணைக்கு வர உத்தரவுகள் பறந்தன. ஆனால் அந்தத் துரோகி துரோகத்தையே முதன்மைப்படுத்தி நின்றான். அவன் சொந்த மக்களுக்கு மட்டுமன்றி அவனை வளர்த்த தலைவருக்கே துரோகம் செய்த ஒருவன். அவனை நம்பிய போராளிகளையே பலியிட்டு தன் சுயநலத்தை பார்த்த ஒருவன். அதனால் தான் தான் ஆரம்பித்த இயக்கத்தையே கலைத்துவிட்டு இப்போ சிங்களப் பேரினவாதக் கட்சியில் ஒட்டி இருக்கிறான். அவனை போற்றும் உங்களை என்னென்பது..! :wub::D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் எழுதிய கருத்தை முதலில் வடிவாய் வாசித்து விட்டு கருத்து எழுதுங்கள்...ஒரு விடயம் தெரியா விட்டால் மற்றவர்களீடம் கேட்டு எழுதுங்கள்...தேசியத் தலைவர் காட்டுக்குள் வைத்து மாத்தையாவைப் பற்றீ அப் பெண் நிருபருக்கு மட்டும் வழங்கிய பேட்டி எல்லா இனையத்திலும் வந்திருந்தது...நான் கருனாப் பற்றீ புகழவில்லை உண்மையைத் தான் எழுதினேன்...சுட்ட தோசையே திருப்பி,திருப்பி சுடாதீர்கள் :wub: ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ஏன் தலைவரோ,பொட்டம்மானோ கருணாவின் துரோகம் பற்றீ வாயே திறக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் எழுதிய கருத்தை முதலில் வடிவாய் வாசித்து விட்டு கருத்து எழுதுங்கள்...ஒரு விடயம் தெரியா விட்டால் மற்றவர்களீடம் கேட்டு எழுதுங்கள்...தேசியத் தலைவர் காட்டுக்குள் வைத்து மாத்தையாவைப் பற்றீ அப் பெண் நிருபருக்கு மட்டும் வழங்கிய பேட்டி எல்லா இனையத்திலும் வந்திருந்தது...நான் கருனாப் பற்றீ புகழவில்லை உண்மையைத் தான் எழுதினேன்...சுட்ட தோசையே திருப்பி,திருப்பி சுடாதீர்கள் :o ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ஏன் தலைவரோ,பொட்டம்மானோ கருணாவின் துரோகம் பற்றீ வாயே திறக்கவில்லை?

அக்கா நீங்கள் தான் அடி நுனி தெரியாமல்.. ஒரு பெண் கேட்டாள் தலைவர் சொன்னார் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தலைவர் போராட்டம் பற்றி வெளியிட்ட பூரணமாக ஒளிவீச்சில் கூட மாத்தையா பற்றி பெரிதாகக் குறிப்பிடவில்லை. நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.. தலைவர் துரோகங்களை பற்றி எல்லாம் பொதுவாக பேசுவதில்லை. எந்த மாவீரர் தின உரையிலும் இவர்களை பற்றி அவர் உச்சரித்தது கிடையாது. பொதுவாக துரோகம் என்றே சொல்வார்.

கருணா இயக்கத்தை விட்டு விலக்கப்பட்ட பின் அவருக்கு முக்கியம் அளிக்கவில்லை இயக்கம். மாத்தையாவும் கருணாவும் ஒன்றல்ல. மாத்தையா தலைவர் காலத்தில் இருந்து இயக்கத்தில் இருந்தவர். கருணா இடையில் சேர்ந்து.. தலைவரால் வளர்க்கப்பட்டவர். அவரைப் பற்றி தலைவர் பொட்டம்மான் போன்றவர்கள் முக்கியம் அளிக்க வேண்டிய தேவையில் இருக்கவில்லை. காரணம்.. கருணா இயக்கத்தை விட்டே விலக்கப்பட்டு இயக்க உறுப்பினர் அற்ற நிலையில் அவரைப் பற்றி பேசுவது இயக்கத் தலைமைக்குத்தான் அவப்பெயர்.

நீங்கள் அதை வைச்சே கருணா நல்லவர்.. வல்லவர்.. என்று காட்ட நினைக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை என்கிறீர்கள்.

தலைமைக்கு மேலால் உங்களுக்கு கருணாவைப் பற்றிய உண்மை தெரிஞ்சிருக்கு எனும் போது.. நீங்களே தேசிய தலைவராக இருந்திருக்கலாமோ என்று யோசிக்கிறன். முடியல்ல அக்கா உங்கட காமடி. அதுக்குள்ள எங்களுக்கு வகுப்பெடுக்க நினைக்கிறீங்க..! :wub::D :D :o:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மன்னிக்கவும் அந்தப் பெண் பத்திரிகையாளரின் பெயர் அனிதா பிரதாப்...உங்களுக்கு தெரிந்திருக்காது ஏனென்டால் நீங்கள் சின்னப் பிள்ளை தானே...இணைப்பை தேடி எடுத்து வாசியுங்கள்...முக்கியமாக இந்த நூலை ISLAND OF BLOOD வாசியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும்படி கேட்டது

நடந்தவற்றை

தெரிந்தவற்றை

நல்லதை

கெட்டதை

என்பதுதான்

ஆனால் தாங்கள் தங்கள் தலைவரை இங்கு நிறுத்த முயல்கின்றீர்கள்

அதைவிட

எம்மை அவமதிக்கும் நோக்கோடு எமது ஒற்றுமையை குலைக்கும்நோக்கோடு வஞ்சகரால் எடுத்துக்கொள்ளப்பட்ட சொற்களை பயன்படுத்துகின்றீர்கள்

அத்துடன் எமக்குள் ஏற்பட்ட பிளவுகளையும் சிறுதவறுகளையும் தொடர்ந்து எழுதுகின்றீர்களே தவிர....

தமிழருக்கான அடுத்த கட்டத்துக்கான நம்பிக்கை தரும் எந்த கருத்தையும் தாங்கள் முன் வைக்கவில்லை

அவர் அரசோடு சேராவிட்டால்

தங்கள் தலைவர் அவர்தான் என்பதன் மூலம் எமது தலைவரை தண்டித்துக்கொண்டு

நான் எங்கே அவரை அவமதித்தேன் என்று சுழி ஓடுகின்றீர்கள்

நீங்கள் மட்டக்களப்பில் வாழ்ந்ததாக சொல்லும் தங்கள் பூர்வீகம் பற்றி எழுத தயங்குவதன் காரணம் நாமறிவோம்.

அதைச்சொன்னால் தங்களுக்கு முரளியால் தொந்தரவு வரலாம் என்ற பயம் ஏற்புடையதே.

ஆனால் இதே முரளியை தாங்கள் சந்தித்ததுண்டா...?

நான் சந்தித்துள்ளேன்அவர் புலியாக இருந்தபோது.....

அதன்பிறகு பார்த்தது தொலைக்காட்சியில்

தொடை நடுங்கியபடி யூஸ் குடித்தபடி..

புலி நடுங்கி அன்று தான் பார்த்தேன் நான்.

என்ன காரணம் தெரியுமா...

செய்தவை அவ்வளவு கேவலமானவை.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்...

உங்களால் இங்கு வைக்கப்படும் தகவல்கள் வரலாறு போன்றவை, ஆகவே இவை தொகுக்கப்படவேண்டியவை அதாவது இந்த திரியின் கீழ் அல்ல, ஒரு திரியை ஆரம்பியுங்கள்.

அப்போது தான் புரியாத, தெரியாத பல விடயங்கள் வெளிவர அல்லது தெளிவடைய சந்தர்ப்பம் ஏற்படும்.

எங்களது இழப்புக்கள், அழிவுகள், தோல்விகள் வேண்டாத விவாதம் செய்யப்படவேண்டிய விடயமல்ல, இவை ஒரு தேசிய இனத்தின் சுதந்திர சம்பந்தப்பட்ட விடயங்கள்,

இந்த திரியின்கீழ் வைக்கப்படும் கருத்துக்களை பார்க்கும்போது திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லி பல விடயங்களை உண்மையாக்க முயற்சிசெய்வது போல் தோன்றுகின்றது அல்லது சிலரை சட்ட சிக்கலில் மாட்டிவிடும் முயற்சிபோலும் தோன்றுகின்றது....

எது எப்படியிருப்பினும் நான் யாரின் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை அதாவது இத்துடன் இந்த திரியின்கீழ் எதுவும் எழுதுவதாக இல்லை.

ஆமா சார்.. ஜெயசிக்குறு சமரை எப்படி எதிர்கொள்வது என்று தலைவர் முழிச்சுக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தவை தான் வந்து உங்களுக்கு சொன்னவை.

ஜெயசிக்குறு சமர் வரலாற்றுச் சமராக நடந்த ஒரு நீண்ட சமர். அதற்கு போராளிகளை தளபதிகளை பல இடங்களில் இருந்தும் தலைவர் நகர்த்தி இருந்தார். தலைவர் ஜெயசிக்குறு சமரை வெறும் தடுப்புச் சமராக மட்டும் நடத்தவில்லை. வலிந்து தாக்குதல் சமர்களையும் நடத்தினார். அதனால் பல்வேறு தளபதிகளையும் அழைத்தார்.

கருணாவிற்கும் ஒரு பகுதியும் எதிர் சமருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் கருணா தயக்கத்தோடு தான் செயற்பட்டிருந்தார். ஆயுதம் காணாது.. அது காணாது என்று ஆயிரம் குறைகள். இருந்தும் தலைவர் தான் தேவையானவற்றை வரவழைத்துக் கொடுத்து ஜெயசிக்குறு எதிர் சமரை அழித்தொழிப்பு யுத்தமாக மாற்றியவர். இறுதியில் அதுவே ஓயாத அலைகள் 3 ஆய் பரினமித்தது.

ஓயாத அலைகள் 3 க்கு போராளிகளை தளபதிகளை தயார் செய்யும் வேலையையும் ஜெயசிக்குறு சமரையும் எதிர்கொள்ளவே தலைவர் கிழக்கில் இருந்தும் தளபதிகளை படையணிகளை வன்னிக்கு நகர்த்தி இருந்தார். வன்னியின் இருப்பில் தான் போராட்டத்தின் இருப்பே இருந்தது. ஏனெனில் கிழக்கில் அதன் பூகோள அமைப்பு நிரந்தரமாக நிலத்தை தக்க வைக்கும் அளவில் இருக்கவில்லை. கருணா கிழக்கில்.. இராணுவம் ஆட்பற்றாக்குறையால் விலகிச் சென்ற இடங்களில் பரிபாலனம் செய்தாரே அன்றி.. சமர் செய்து இடங்களை மீட்கவில்லை.

ஆனால் வன்னி அப்படி அன்று. அங்கிருந்த எல்லா இராணுவ முகாம்களும் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டே அந்த மண் விடுவிக்கப்பட்டிருந்தது. 1990 களின் (இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு) ஆரம்பத்தில் இருந்து வன்னியை மீட்பதையே தலைவர் முதன்மை பணியாகக் கொண்டிருந்தார். கொக்காவில்.. மாங்குளம்.. பூநகரி.. முல்லைத்தீவு.. ஆனையிறவு என்று வன்னிக்கான தடைக்கற்களை அழிப்பதையே தலைவர் பிரதானமாகச் செய்து கொண்டிருந்தார். காரணம்.. வன்னியின் பூகோள அமைப்பு அன்றைய சிறீலங்காவின் இராணுவ பலத்திற்கு முகம் கொடுத்து அந்த நிலத்தை தக்க வைக்கக் கூடிய நிலைக்குள் இருந்ததால்.

ஆனால் கிழக்கில் நிலை அப்படியல்ல. சில இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டாலும்.. போராளிகள் அழித்தொழிப்பு சமரை செய்துவிட்டு பின்வாங்கி விடுவார்கள். நிலத்தை தக்க வைக்க முடியாத நிலை அங்கிருந்தது.

வன்னி தான் எல்லாப் போராளிகளுக்கும் புகலிடமாக.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர் மையம் கொள்ளக் கூடிய நிலமாக இருந்தது. அதை இன்று நாம் தெளிவாகக் காண்கிறோம். தலைவர் அதை 1980களின் பிற்பகுதியிலேயே உணர்ந்திருந்தார்.

இருந்தாலும் சிறீலங்கா இராணுவத்தின் இராணுவக் கட்டமைப்பின் பரிமான வளர்ச்சி.. அந்நிய தேசங்களில் இருந்து சிறீலங்காவுக்கு கிடைத்த இராணுவ உதவிகள்..வன்னியை தொடர்ந்து தக்க வைக்கக் கூடிய அளவுக்கு போராளிகளால் போனது. அந்த நிலையில் தான் வன்னி இழக்கப்பட்டு.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிப் போராட்டம் முடிவையும் எட்டியது. ஒருவேளை தலைவர் வன்னியை 1990 இல் விட்டுக் கொடுத்திருந்தால்.. 1995 சூரியக் கதிரோடு போராட்டம் ஓய்வுக்கு வந்திருக்கும்...! 20 ஆண்டுகளுக்கு போராட்டத்தை நீட்டிக்கச் செய்தது வன்னி மண் என்பதையும் பலர் சுலபமாக மறந்துவிட்டு வன்னிப்புலிகள் எங்கின்றனர். வன்னி தான் கிழக்கு வடக்குப் போராளிகளுக்கு அடைக்கலம் தந்து தமிழீழத்தை உச்சரிக்க செய்து கொண்டிருந்ததை மறந்துவிட்டார்கள்.

வன்னியை பழிக்கும் ரதி அக்கா போன்றவர்கள்.. சொந்த தாயை பழிக்கும் இழி செயலை செய்பவர்களுக்கு சமன்..!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று எப்பவும் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் சொரனை கெட்ட உங்களைப் போன்றதுகளுக்கு தங்களின் சொந்த இனம் அடிமைப்பட்டுப் போனதை இட்டு கொஞ்சமும் கவலை இல்ல. :D:wub::D

நீங்கள் எல்லாம் முன்னாள் போராளிகளாக எப்படி இருந்தீர்களோ தெரியவில்லை. அதற்கான எந்தத் தகுதியும் உங்களிடம் இல்லையே. சொந்த மண்ணின் மீதே பற்றில்லாத நீங்கள் முன்னாள் போராளியா. எடுபிடியா இருந்துபோட்டு.. பப்பாகாயை செருகிட்டு திரிஞ்சிட்டு கனடாவுக்கு ஒடினது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு காலத்தில் கனபேர் செய்தவையாம். அந்த வகை தான் நீங்கள் போல..! :o

அன்று அத்தனையையும் வெளிநாடுகளிலிருந்து வழங்கியது மற்றைய பதிவில் நீங்கள் திட்டும் கே; பி தான்

அடுத்ததாக ஜெயசுக்குறு வின் நாயகன் என்று கருணாவை புகழ்ந்தது தலைவர்தான். அதுமட்டுமில்லாமல் புலிகளின் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்கு கருணாவினுடையது என்னு அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை புத்தகத்திலை எழுதியிருக்கிறா.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா ஆண்டாண்டு காலமாக பெண்களை அட‌க்க ஆண்கள் கையில் எடுக்கும் ஆயுதத்தையே நீங்கள் எடுப்பீர்கள் என நான் எதிர் பார்க்கவில்லை.

காக்கைவன்னியனை கதாநாயகனாய் நினைக்கிற கலிகாலத்திலை வாழுறமடி தங்கச்சி :wub::D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் நடந்ததை தான்[கண்ணால் கண்டதை] எழுதினேன்...இனிமேல் நடக்கப் போறதை எழுத அரசியல் ஞானி இல்லை...இனிமேலாவது எல்லோரும் ஓர் குடைக்குள் ஒன்றாக இருக்க வேண்டும் எனத் தான் எழுதினேன்...உங்களுக்கு நான் எழுதிய கருத்து மட்டும் தான் பிரதேசவாதத்தை தூண்டுவது போல இருக்குது ஆனால் நெடுக்ஸ் எழுதிய ஒரு கருத்திலும் உங்களால் பிரதேசவாதக் காண முடியவில்லை இதில் இருந்து தெரிகிறது உங்களது கருத்தின் நம்பகத் தன்மை...நான் அப்படி எழுதியது பிழை என்டால் முதலில் நெடுக்ஸ்சை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் பின்பு நான் மன்னிப்பு கேட்கிறேன்..உங்கள மாதிரித் தான் பல பேர் இங்கு கருணாவை சந்தித்த நான்,தலைவரை சந்தித்த நான் எனப் படம் காட்டி திரிகிறார்கள்...நீங்கள் உண்மையாகவே கருணாவை சந்தித்து இருந்தாலும் அதற்கும் இந்த திரிக்கும் என்ன சந்தர்ப்பம்...நான் இங்கு எனது எந்தக் கருத்திலும் இதற்கு தலைவர் பொறுப்பு எனக் கூறவில்லை...தலைவரை சுற்றியுள்ளவர் விட்ட பிழை எனத் தான் எழுதினேன் தலைவருக்கு உண்மையைக் கூறாமல் மறைத்தல் போன்றவற்றால் தான் நிலைமை இந்த அளவிற்குப் போனது.

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன் இப்ப தலைவர் இல்லை...தலைவர் இல்லை என்டு நீங்கள் கூட்டனிக்கோ அல்லது கேபிக்கோ ஆதரவு கொடுக்காமலா இருக்கிறீங்கள்...கேட்டால் தலைவர் சொன்னார் ஆதரவு கொடுத்தேன் என்பீர்கள்...நான் முந்தி நடந்தவற்றை தான் எழுதினேன் அப்போது எனக்கு விபரம் தெரியாத வயது அப்போது எனது ஆதரவு கருணாவுக்கு தான் இருந்தது...எங்கள் சிறு வயது ஹீரோவாக அவர் தான் இருந்தார் அதனால் அவர் புலிகளை விட்டுப் பிரிந்தாலும் எங்கள் ஆதரவு அவருக்கு தான் என்டு இருந்தது...எல்லாவற்றிக்கும் மேலாக எனது குடும்பம் அங்கு தான் வசித்தது...அவரை ஆதரிப்பதன் மூலம் புலிகளையோ,தலைவரையோ எதிர்க்கும் கருத்தினை நாங்கள் கொண்டிருக்கவில்லை...என்னை என் முகம் காட்ட சொல்றீங்களே உங்கட முகத்தை முதலில காட்டுங்கள் பார்ப்போம்...நான் திரும்பவும் எழுதுகிறேன் நான் கருணா ஆதரவாக கருத்துகளை எழுதுகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது உங்கட மடைத்தனம் அதற்கு நான் ஒன்டுமே செய்ய இயலாது.

நான் வல்வைலிங்கம் ஒர் சிறந்த கருத்தாளர் என நினைத்தேன் அது தப்பு என்டு தற்போது தான் விளங்குகிறது....நான் ஏதாவது நியாயமாய் கேட்டால் அதற்குப் பதில் தர முடியவில்லை அதற்குள்ள அவரை பிடித்துக் கொடுக்கிற வேலையைத் தான் நான் இப்ப செய்யப் போகிறேன்...சசி அண்ணா என்னிடம் கேட்ட மாதிரி அவரிடம் நான் கேட்ட நானா முகத்தை காட்ட சொல்லி...நெடுக்ஸ் இவரை நம்பி எழுதினால் அந்த மாதிரி தான் இருக்கும்...எல்லோரும் பிழை விடுவதுண்டு தலைவர் சொன்னவரா தான் கடவுள் என்டு தலைவரும் ஒர் உண்ர்வுகள் உள்ள ஒர் மனிதர் தான்...உங்கள மாதிரி ஆட்கள் உசுப்பேற்றி,உசுப்பேற்றி தான் புலியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறீங்கள்.

கொஞ்ச காலமாய் யாழில் ஆண்களின் சுயரூபம் வெளி வரத் தொடங்கி இருக்குது...நன்றி குமாரசாமி அண்ணா நீங்கள் சொன்ன இந்த கருத்து உங்கள் மனைவி,பிள்ளைகளுக்கே போய் சேரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று அத்தனையையும் வெளிநாடுகளிலிருந்து வழங்கியது மற்றைய பதிவில் நீங்கள் திட்டும் கே; பி தான்

அடுத்ததாக ஜெயசுக்குறு வின் நாயகன் என்று கருணாவை புகழ்ந்தது தலைவர்தான். அதுமட்டுமில்லாமல் புலிகளின் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்கு கருணாவினுடையது என்னு அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை புத்தகத்திலை எழுதியிருக்கிறா.. :)

அவர்கள் இருவரும் இருக்கும் வரை அனுபவித்து விட்டு இப்போது ஓடிப்போனவர்கள் பட்டியலில் சேர்ந்து இருக்கிறார்கள். :):lol::lol:

கருனாவை ஹீரோவா கதைச்சால் சுயரூபம் வெளிவராது விசுவரூபம்தான் வெளிவரும், பிராபாகரன் அவன் அந்த முருகனுக்கே நிகரானவன்.உண்மைமையை பேசி பழகுங்கள் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். :D:D:D

காக்கைவன்னியனை கதாநாயகனாய் நினைக்கிற கலிகாலத்திலை வாழுறமடி தங்கச்சி

உது தமிழ் சினிமா பாக்கிறதால வாற வியாதி, :lol::lol:

இங்கு கருத்தெழும் பலர் தமிழனின் விடிவில் அக்கறையுள்ளவர்களே.சரியோ பிழையோ விடிந்தால் படுக்க மட்டும் இதே நினைவில் வாழ்பவர்கள் ஆனால் சிலர் தம்மை ஏதோ உயிர் கொடுக்க துடிக்கும் போராளிகள் போல் தங்களை காட்டி பெயர் வாங்க நினைப்பவர்கள்..இவர்கள் தங்கள் கருத்துக்களை குறிப்பாகத்தான் எழுதுவார்கள்.ஏனெனில் இவர்களுக்கும் போராட்டதிற்கும் எதுவித தொடர்பும் இல்லை.இவர்கள் மற்றவர்கள் உண்மையை எழுதும் போது அதை தாங்க முடியாமல் இவன் துரோகி,ஏஜென்ட் என்று தலைப்பையே திசை திருப்பி தங்களை விசுவாசிகளாக காட்டுவதில் தான் இவர்களின் நோக்கம் .யார் செத்தாலென்ன யார் அழிந்தாலென்ன இவர்களுக்கு அக்கறையில்லை.

சன் பிச்செர்ஸ்படத்தை பார்க்காதையுங்கோ என்று வானொலியிலும் இணயத்திலும் விளாசிவிட்டு முதல் சோவிற்கு நிற்பார்கள்.எமது இனம் தோற்றுக் கொண்டே இருப்பதற்கு எதிரியையும்,துரோகியையும் விடவும் இந்த நடிகர்கள் தான் முதல் காரணம்.

உண்மையாகத்தான் கேட்கின்றேன் முடிந்தால் உலகத்திலுள்ள எல்லா தமிழமைப்புகளும் சேர்ந்து "எந்திரனை" புரக் கணிப்போம் என ஒரு முடிவெடுங்கள் பார்ப்போம்.ஏனேனில் ஊர்வலத்தில கொடியுடன் நின்று படம் காட்டி விட்டு, சிறிலங்கா பொருட்களை புறக்கணியுங்கோ எனக் கத்திவிட்டு வரும் வழியில் சிறீலங்கன் பொருட்களுடன் வீடு வருவினம் இது நான் கண்ணால் கண்டவை.ஏனேனில் இவர்கள் சொல்ல்வதெல்லாம் மற்றவர்களுக்கே ஒழிய தமக்கல்ல.

பலரின் பின்னோட்டங்களை வாசிக்க சிரிப்பாக இருக்கின்றது.ஜெயசுக்குறுவில் தலைவர் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டு நின்றபோது கருணாதானம் வந்து காப்பாற்றினார் என்று முன்பு சொன்னார்கள்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் .இது .

தலைவர் முழிச்சு கொண்டு நிண்டவர் உவர்தான் பக்கதில நின்று தட்டி எழுபி விட்டவர்மாதிரி கதைக்கிறார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று அத்தனையையும் வெளிநாடுகளிலிருந்து வழங்கியது மற்றைய பதிவில் நீங்கள் திட்டும் கே; பி தான்

அடுத்ததாக ஜெயசுக்குறு வின் நாயகன் என்று கருணாவை புகழ்ந்தது தலைவர்தான். அதுமட்டுமில்லாமல் புலிகளின் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்கு கருணாவினுடையது என்னு அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை புத்தகத்திலை எழுதியிருக்கிறா.. :)

எனக்கு உங்கள் சில பேரின் வாதத்தின் அடிப்படை விளங்கவில்லை.

கே பி தனியாளாக இயங்கி ஆயுதங்களை வாங்கி அனுப்பிக் கொண்டிருக்கவில்லை. கேபி எனப்படுபவர் சர்வதேச உளவு மற்றும் பாதுகாப்பு வலை அமைப்புக்களால்.. 1998 இற்கு (அப்போதுதான் அமெரிக்கா புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டது... இந்தியா 1991 இல் போட்டது.) முன்னரே கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்.

கேபியிடம் தலைவர் சில முக்கிய பொறுப்புக்களை வழங்கி இருந்தாரே தவிர கேபி மட்டும் இயக்கத்துக்காக தனித்து இயங்கியதில்லை.

வெளியில் தெரியாத பலர் அதில் உள்ளடங்கி இருக்கிறார்கள். அதைப்பற்றிய ஆராய்ச்சி எமக்கு அவசியமில்லை. அது எமது இனத்தின் எதிர்காலத்துக்கு அநாவசிய ஆபத்துக்களையே தேடித்தரும்.

தென்பகுதியில்.. ஒரு தாக்குதல் திட்டத்திற்கே 4 அணிகளை ஒன்றுக்கொன்று அறியாத வகைக்கு கள மிறக்கும் தலைவர்.. மிக முக்கிய பணி ஒன்றில் கேபியையே நம்பிக் கொண்டிருந்தார் என்பது கேட்கிறவன்.. கேணயன் என்றால் எருமை மாடு ஏரோ பிளேன் ஓடுமாம் என்ற கணக்கில் இருக்கிறது.

கருணா மட்டும் ஜெயசிக்குறு தாக்குதலை வழி நடத்தவில்லை. கருணாவே புலம்பெயர் நாடு ஒன்றுக்கு வந்த வேளையில் சொல்லி இருக்கிறார்.. தங்களின் பணி ஜெயசிக்குறு எதிர் சமர் செய்வதில் அதிகம் இருந்தது என்று. ஆனால் தலைவரோ வேறு தாக்குதல் திட்டங்களையும் அப்போது வைத்திருந்தார். அவற்றில் பலவேறு தரப்பினரும் பங்களித்திருக்கின்றனர். தலைவர் கூட களத்தில் நின்றதை கருணா ஒப்புக் கொண்டுள்ளார். ஜெயசிக்குறு எதிர் சமர் என்பது கருணாவின் தனித்த ஒரு செயற்பாட்டு வெற்றியல்ல. அப்படிக் காட்டுவது தவறானது.

கருணாவின் இந்தப் பேச்சுக்கும் அவரின் இன்றைய நிலைபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள்..

ரதி அக்கா போன்றவர்கள் இவருடைய இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு கருத்தெழுத முன் வர வேண்டும். ஒரு விடயத்தை அரையும்குறையுமாக அறிந்து வைத்துக் கொண்டு அதையே உண்மையாக காட்டி துரோகங்களுக்கு உண்மைச் சாயம் பூசுவதை எனியும் எனியும் அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்யவும் முடியாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72623

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் நடந்ததை தான்[கண்ணால் கண்டதை] எழுதினேன்...இனிமேல் நடக்கப் போறதை எழுத அரசியல் ஞானி இல்லை...இனிமேலாவது எல்லோரும் ஓர் குடைக்குள் ஒன்றாக இருக்க வேண்டும் எனத் தான் எழுதினேன்...உங்களுக்கு நான் எழுதிய கருத்து மட்டும் தான் பிரதேசவாதத்தை தூண்டுவது போல இருக்குது ஆனால் நெடுக்ஸ் எழுதிய ஒரு கருத்திலும் உங்களால் பிரதேசவாதக் காண முடியவில்லை இதில் இருந்து தெரிகிறது உங்களது கருத்தின் நம்பகத் தன்மை ...நான் அப்படி எழுதியது பிழை என்டால் முதலில் நெடுக்ஸ்சை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் பின்பு நான் மன்னிப்பு கேட்கிறேன்..உங்கள மாதிரித் தான் பல பேர் இங்கு கருணாவை சந்தித்த நான்,தலைவரை சந்தித்த நான் எனப் படம் காட்டி திரிகிறார்கள்...நீங்கள் உண்மையாகவே கருணாவை சந்தித்து இருந்தாலும் அதற்கும் இந்த திரிக்கும் என்ன சந்தர்ப்பம்...

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன் இப்ப தலைவர் இல்லை...தலைவர் இல்லை என்டு நீங்கள் கூட்டனிக்கோ அல்லது கேபிக்கோ ஆதரவு கொடுக்காமலா இருக்கிறீங்கள்...கேட்டால் தலைவர் சொன்னார் ஆதரவு கொடுத்தேன் என்பீர்கள்...நான் முந்தி நடந்தவற்றை தான் எழுதினேன் அப்போது எனக்கு விபரம் தெரியாத வயது அப்போது எனது ஆதரவு கருணாவுக்கு தான் இருந்தது...எங்கள் சிறு வயது ஹீரோவாக அவர் தான் இருந்தார் அதனால் அவர் புலிகளை விட்டுப் பிரிந்தாலும் எங்கள் ஆதரவு அவருக்கு தான் என்டு இருந்தது...எல்லாவற்றிக்கும் மேலாக எனது குடும்பம் அங்கு தான் வசித்தது... அவரை ஆதரிப்பதன் மூலம் புலிகளையோ,தலைவரையோ எதிர்க்கும் கருத்தினை நாங்கள் கொண்டிருக்கவில்லை...என்னை என் முகம் காட்ட சொல்றீங்களே உங்கட முகத்தை முதலில காட்டுங்கள் பார்ப்போம்...நான் திரும்பவும் எழுதுகிறேன் நான் கருணா ஆதரவாக கருத்துகளை எழுதுகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது உங்கட மடைத்தனம் அதற்கு நான் ஒன்டுமே செய்ய இயலாது.

நான் வல்வைலிங்கம் ஒர் சிறந்த கருத்தாளர் என நினைத்தேன் அது தப்பு என்டு தற்போது தான் விளங்குகிறது....நான் ஏதாவது நியாயமாய் கேட்டால் அதற்குப் பதில் தர முடியவில்லை அதற்குள்ள அவரை பிடித்துக் கொடுக்கிற வேலையைத் தான் நான் இப்ப செய்யப் போகிறேன்...சசி அண்ணா என்னிடம் கேட்ட மாதிரி அவரிடம் நான் கேட்ட நானா முகத்தை காட்ட சொல்லி...நெடுக்ஸ் இவரை நம்பி எழுதினால் அந்த மாதிரி தான் இருக்கும்...எல்லோரும் பிழை விடுவதுண்டு தலைவர் சொன்னவரா தான் கடவுள் என்டு தலைவரும் ஒர் உண்ர்வுகள் உள்ள ஒர் மனிதர் தான்...உங்கள மாதிரி ஆட்கள் உசுப்பேற்றி,உசுப்பேற்றி தான் புலியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறீங்கள்.

கொஞ்ச காலமாய் யாழில் ஆண்களின் சுயரூபம் வெளி வரத் தொடங்கி இருக்குது...நன்றி குமாரசாமி அண்ணா நீங்கள் சொன்ன இந்த கருத்து உங்கள் மனைவி,பிள்ளைகளுக்கே போய் சேரட்டும்.

ஒன்று தாங்கள் சிறு பிள்ளையாக இருந்தபோது..

தங்களுக்குஹீரோவாக இருந்தவரை

எமக்கு நடுவயது இருந்தபோது நாம் கண்ட ஒருவரை

எமக்கு நல்ல தலைவர் என்று அறிமுகப்படுத்த முயலும் தாங்கள்..

அதை நிறுவ எம்மை முட்டாள் என்பதும் மடமைத்தனமாக நாம் சிந்திப்பதாக கர்ச்சிப்பதும் தோல்வியின் வெளிப்பாடு சகோதரி.

அடுத்தது

முரளி என்றால் பிரதேச வாதம் தான் எனக்கு முதல் ஞாபகம்வரும்

ஏனெனில் கட்டிய துணியுடன் எம்மக்களை, ஏன் தங்களையும் தான் ஓடவிரட்டியவன் அவன்.

அடுத்தது

தங்களிடம் நான் கேட்ட கேள்விகள் எதற்கும் விடை கிடையாது ஏன்....???

அதே நேரம் யான் அவரை புலியாகத்தான் சந்தித்தேன் என்று குறிப்பிட்டேன்

அதை இங்கு குறிப்பிட காரணம்

தாங்கள் கேட்டவற்றை எழுதுகின்றீர்கள்

நான் அவருடன் இருந்து பார்த்தவற்றை எழுதுகின்றேன் என்பதைச்சொல்லவே....

அரசாங்கத்துடன் சேராது அவர் தனியே நின்றிருப்பாராயின் தங்கள் தலைவர் இன்றும் அவர்தான் என்பதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்

அப்படியாயின்

தமிழரோடும் சேராது சிங்களவனோடும் சேராத தங்கள் தலைவர் அல்லது தளபதி எத்தனை நாள் நிலைப்பார் அல்லது எந்த தேசத்தை ஒருவாக்கி தருவார் என்று எழுதினால் அடியேன் அறிந்த கொள்ள ஆவலாக இருக்கின்றேன் சகோதரி.

இன்றும் தங்களின் தலைவரின் குற்றங்களை ஒரு பெண்ணாக இருந்தும் மறைக்கும் தாங்கள்..

அவரது மனைவி கூட இன்று அவரை நிராகரித்துள்ளாரே ஏன் என்றாவது சொல்வீர்களா...???

பதிலில் கண்ணியத்தையும்

கருத்தாளர்களுக்கான மரியாதையும் எதிர்பார்க்கின்றேன்

தங்களது பல பதில்களில் சுடும் வார்த்தைகள் பல பாவிக்கப்பட்டிருப்பதை இங்கு மரியாதையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா முதலில் நான் எங்கே சுடு வார்த்தைகளைப் பாவித்தேன் என சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம்...நான் எப்போது கருணாவைத் தலைவர் என கொண்டாடினான்...இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலுமே நான் பிரபாகரனைத் தவிர வேறு எவரையுமே தலைவராகக் கொண்டாடவில்லை...முதல் கருத்தில் நீங்களே எழுதினீர்கள் நான் கருணாவிற்கு பயந்து தான் முகத்தை காட்டவில்லை என பிறகு நீங்களே இப்படி எழுதுகிறீர்கள்...அண்ணா நீங்கள் நான் எழுதிய பதிவுகளை வடிவாய் வாசிக்காமல் வீம்புக்கு எழுத வருகிறீர்கள்...நான் நெடுக்ஸ்சுக்கு எழுதிய பதிலிலேயே எழுதி விட்டேன் அரசோடு சேர்ந்து நிற்பவர் என்ன செய்தாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை என்டு...அவரது அவரை எதிர்த்தால் எனக்கு என்ன...அவர் யாரோடு உறவு வைத்தால் எனக்கு என்ன அது அவரது தனிப்பட்ட பிரச்சனை... அவர் அரசோடு சேராமல் நியாயமான கொள்கைகளோடு அரசுக்கு எதிராகப் போராடி இருந்திருதால் எனது ஆதரவு அவருக்கு இருந்திருக்கும் இதற்காக புலிகளை நான் எதிர்க்கிறேன் என அர்த்தம் இல்லை...அவர்களை[புலிகளோடு கருணாவை] எப்படியாவது சேர்த்து வைப்பதில் தான் முயற்சி செய்திருப்பேன்.

நான் எனக்கு வந்த சந்தேகத்தை தான் எழுதினேன்...எனது சந்தேகம் நீங்க வேண்டுமாயின் நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்களாவது பதில் சொல்லுங்கள்;

1)கருணா இயக்கத்தில் இருக்கும் போது ஒழுக்கம் இல்லாமல் நடந்திருந்தால்

ஏன் தலைவர் அவரை திரும்ப,திரும்ப புலம் பெயர் நாட்டிற்கு பேச்சு வார்த்தைக்கு அனுப்பினவர்[கிழக்கு மாகணத்தில் இருந்து ஒருவர் போக வேண்டுமானால் நல்ல அரசியல் தெரிந்த ஒருவரை அனுப்பவில்லை]?

2)ஏன் தலைவரோ,பொட்டம்மானோ கருணா துரோகி என சொல்லவில்லை[மாத்தையாவை சொன்னதிற்கு ஆதாரம் இருக்கிறது]

உங்களது எழுத்துகள் மூலம் தான் நீங்கள் தான் கருணாவை தியாகியாக்க,தலைவராக்க முயற்சி செய்கிறீர்கள் நான் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தம்பி நெடுக்ஸ் கருத்தெழுதும் போது நீங்கள் ஓன்டுக்கு இரண்டு தரம் யோசித்து எழுதுங்கள்...ஒரு பதிவில் ஒன்டை எழுதிப் போட்டு மற்றை பதிவில் இன்னொன்டை எழுதிப் போட்டு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப் பட்டு முளிக்கிறது நீங்கள் தான் நான் இல்லை...ஒர் கருத்தை போட்டிக்கு எழுத வேண்டும் என எழுதாமல் யோசித்து எழுதுங்கள்...நான் கேட்ட கேள்விக்கு என்னும் பதில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவைப் பற்றி நான் எழுதியதிற்கு எதிராக உங்களால் முடிந்தால் பதில் எழுதுங்கள் புரிந்து கொள்கிறேன்...அந்தளவிற்கு புரிந்து கொள்ள முடியாதா முட்டாள் இல்லை நான்.

உங்கள மாதிரித் தான் பல பேர் இங்கு கருணாவை சந்தித்த நான்,தலைவரை சந்தித்த நான் எனப் படம் காட்டி திரிகிறார்கள்....

.என்னை என் முகம் காட்ட சொல்றீங்களே உங்கட முகத்தை முதலில காட்டுங்கள் பார்ப்போம்..

நான் திரும்பவும் எழுதுகிறேன் நான் கருணா ஆதரவாக கருத்துகளை எழுதுகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது உங்கட மடைத்தனம் அதற்கு நான் ஒன்டுமே செய்ய இயலாது.

நான் வல்வைலிங்கம் ஒர் சிறந்த கருத்தாளர் என நினைத்தேன் அது தப்பு என்டு தற்போது தான் விளங்குகிறது

கொஞ்ச காலமாய் யாழில் ஆண்களின் சுயரூபம் வெளி வரத் தொடங்கி இருக்குது...நன்றி குமாரசாமி அண்ணா நீங்கள் சொன்ன இந்த கருத்து உங்கள் மனைவி,பிள்ளைகளுக்கே போய் சேரட்டும்.

இவை நேரடியாக எம்மை நோக்கி பாவிக்கப்பட்ட சுடு சொற்கள்

மறைமுகமாக எத்தகையோ....

இந்த அரசியல் திரியால் என்ன பலன்? இன்றைய அரசியல் இக்கட்டு நிலையில் இருந்து மீழ்வதற்கும், நாம் முன்னேறி செல்வதற்கும் இந்த திரியாலும், இடம்பெறும் உரையாடல்களாலும் ஏதாவது கிடைக்கப் போகின்றதா? ஒருத்தர் மீது ஒருத்தர் வன்மம் கொள்ளவும், கோபம் கொள்ளவுமே உதவுகின்றது

அனேகமாக இந்த திரியினை மூடப் போகின்றேன்

அக்கா கருணா விதித்த நிபந்தனைகள் நீங்கள் கூறிய புலிசார்பு ஊடகம்களில் வரமுன்னர் BBC யில் அவர் பேட்டி குடுத்து இருந்தார்..அவர்கள் 3 பேரையும் விலத்தினால் தான் மீண்டும் இணைவேன் என்று ......

arjun ஜெயசுக்குறு நடவடிக்கையில் தலைவர் முழிச்சு கொண்டு இருந்ததாக எழுதி இருந்தீர்கள் கருணா வந்து தான் எல்லாவற்றையும் முடித்தார் என்று கூறினீர்கள்..dbs ஜெயராஜ் எழுதிய தீபன் அண்ணா பற்றிய கட்டுரையினை வாசிச்சு பாருங்கள்.....புளியம்குளத்தில் என்ன நடந்தது என்பது புரியும்

அவர் எழுதியதை நீங்கள் நம்புவீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மூடத் தான் வேண்டும் என்டால் மூடுங்கள் நிழலி...கருத்தை கருத்தால் வெல்ல முடியாதவர்கள் தான் இப்படி ஏதாவது குற்றச்சாட்டு பிடித்துக் கொண்டு இருப்பார்கள்...நானாகத் தொட‌ங்கவில்லை எல்லோரும் சேர்ந்து தொட‌ங்கினார்கள் நான் எனது கருத்தை எழுதினேன் ...மற்றப் படி நான் கருணாவுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை...என் கருத்து மூலம் நிர்வாவத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும்.

விசுகு அண்ணா இந்தக் கருத்து...நான் இந்தக் கருத்தினை எழுதியதில் என்ன பிழை...இதற்கு முன்னர் வெவ்வேரு பகுதிகளீல்,ஏன் இந்தப் பகுதியில் கூட‌ கு.சா என்னை நக்கல் அடிக்கும் போது அது உங்கள பாதிக்கவில்லை...ஏன் நீங்கள் எழுதிய கருத்து கூட‌ என்னை ஒன்டும் தெரியாத முட்டாள் மாதிரி பாவித்துத் தான் எழுதி இருந்தீர்கள்...நீங்கள் செய்தால் பிழை இல்லை அதே நான் செய்தால் பிழை...ஆனால் உங்கள சுட்டிக் காட்டியதும் அது உங்களூக்கு வலிக்கிறது...கருத்தை கருத்தால் வெல்ல முடியாதவர்கள் தான் இப்படி ஏதாவது நொண்டிச் சாட்டு எழுதுவார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதாவது நமக்கு பிரயோசனமான கருத்தை வைத்ததாக தெரியவில்லை

நீங்கள் எழுதியவற்றையும்

ஏற்றுக்கொண்டவைகளையும் தாங்களே மறுத்தவண்ணம் உள்ளீர்கள்

நான் எனது கொள்கையில் தெளிவாக இருக்கின்றேன்

எது தமிழனுக்கு சரி என்பதில் எனக்கு தளம்பல் கிடையாது

அப்படிச்செய்திருக்கலாம்

இப்படிச்செய்திருக்கலாம் என்ற எந்த சொதப்பலும் எனக்கு கிடையாது

ஏனென்றால் அதனூடாக நானும் பயணித்தேன்

பயணித்துக்கொண்டிருக்கின்றேன்

தங்களிடம்மாற்று வழி இருந்தால்

முன் வையுங்கள்

தமிழருக்கு ஏதாவது அதன்மூலம் கிடைக்குமென்றால்

ஏற்பேன்

மற்றும்படி சிங்களத்தின் பாலில் விழுங்கள் கிடைக்கும் எல்லாம் என்பவர்களை எமக்கு அறிமுகப்படுத்தாதீர்கள்

நன்றி சகோதரி

வணக்கம்

இத்துடன் நிறுத்துகின்றேன்

நிழலி

நிறுத்துவதற்கு முன்

நானும் அதை எதிர்பார்த்தே இத்திரியை ஆரம்பித்தேன்

ஆனால் வன்னிப்புலிகள் என்றும் அவரே இன்றும் எனது தலைவர் என்றதும் எனது நோக்கம் மாறிவிட்டது

இன்னும் சிலரது முகம் தெரியட்டும்

கொஞ்சம் பொறுங்கள்

நன்றி

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.