Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கைதான் வாழ்க்கையாம்... மகிழ்ச்சியாக சொல்கிறார் இலங்கை அரச கைதி KP...

Featured Replies

http://www.globaltamilnews.net/

4ஆம் இணைப்பு‐ நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி என்ற செல்வராஜா பத்மநாதன்‐வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது‐

நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார் கே.பி @ Yahoo! Video

05 August 10 06:49 am (BST)

விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பணியாற்றிய கே.பி.என்ற குமரன் பத்மநாதன் வடபகுதிக்கு விஜயம் செய்து, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தமை தொடர்பான வீடியோ படம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 23 ஆம் திகதி கே.பி. வெளிநாட்டை சேர்ந்த தமிழர்களுடன் வட பகுதிக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அந்த விஜயம் தொடர்பான வீடியோ படம் வெளியாகி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த நிலையில் எந்த ஒரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக மாற்ற தேவையான விதிமுறைகள் சட்டத்தில் இருப்பதாக கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். எனினும் கே.பி. தொடர்பில் செயற்படுத்தப்படுவது எந்த வகையான நடவடிக்கை என்பதை தன்னால் தற்போது கூற முடியாது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.

கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன் அண்மைய நாட்களில் தன்னை தமிழ் மக்களிடையே வெளிப்படுத்தி வருகிறார். புலம்பெயர் மக்களிடையே தனது அரச சார்பற்ற நிறுவனத்திற்கு உதவியும் கோரி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வீடியோ ஒளிப்பதிவை அரசாங்கம் வெளிப்படுத்தி உள்ளது. இது தனிப்பட்ட வகையில் யாகூ ஒளிப்பதிவு பதிவேற்றல் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27816&cat=1

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

கைதியாக இருப்பவர் இப்படித்தான் கதைக்க முடியுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

கேபீயூடாகத் தமது சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள அபிவிருத்தி, பௌத்தமயமாக்குதலுக்காகத் தமிழரிடமே நிதியை பெறும் திட்டம். இதில் உள்ளேயிருந்து சோரம் போறவர விட்டாலும் வெளியயிருந்து சோரம் போறவை இதுக்காகவே காத்திருந்தினமோ! மே 18 க்காவே காத்திருந்தினமோ!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் நிதியை கேபி வைத்து, என்ன அபிவிருத்தி செய்து கிழித்தார் என்று முதலில் பட்டியல் இட்டால், புலத்தமிழரிடம் பணம் கேட்பதில் நியாயம் உண்டு. இத்தனை சொத்துக்களையும் சிங்கள அரசின் கையில் கொடுத்துவிட்டு, ஒரு துளி பணம் கூடத் தமிழ்மக்களுக்குக் கிடைக்காத நிலையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், புலத் தமிழர்களின் பணமும் எப்படிப் பயன்படுத்தப்படும்??

உண்மையில் புலத்ததமிழர்களிடம் இருந்து பணத்தைப் பறிக்கப் போடுகின்ற நாடகமே

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பயங்கரவாதியாக கைதுசெய்யப்பட்டு சிரையில் எந்த வித சித்திரவதைகூட இல்லாமல் மக்களுக்கு முன் பேட்டி கொடுக்கும் முதலாவது ஆள் இவராக தான் இருக்கும். இவரை நம்பி ஒரு கூட்டம் பின்னால் இழுபடுகினர்.இவ்வளவு அவலத்துக்கு பின்பும் எமது மக்கள் பாடம் படிக்கவில்லை எனில்....

2003 இல் இருந்து பல வருடமாக கேபி அனைத்து பொறுப்பில் இருந்தும் பனிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் அது தெரியுமா? இறுதியில் தலைவரை வெளியே எடுக்க ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து அந்த காசுக்கு கூட அனுமதி கொடுக்க படவில்லை என்று இறுதுவரை வன்னியில் நிண்டவர் ஒருவர் சொன்னதாக செய்தி கேபியில்ட இறுதி நேரத்தில் பெரும் தொகையில்நிதி இல்லை அனைத்தும் புலத்தில் தான் கட்டுப்பாட்டில் இருந்த்து இருக்கு இன்னும்.

தலைவர் சரன் அடைந்தால் அவரை சித்திரவதை செய்து ஆசை எல்லாம் திர்ந்த பின் கொலுவதிலும் பார்க்க அவரை சிரிக்க வைத்து அரசியல் செய்யும் பக்கும் சிங்களவனிடம் தற்போது இருக்கு அவன் முட்டாளுக்கு முட்டாள் .

.... உந்த ஒன்பதுகளில் ஒன்றைப்பற்றி, அதன் ஊரைச் சேர்ந்தது ஒன்று எழுதியதிலிருந்து ....

உங்களுக்குத் தெரியாததா?

ஸ்ரீபதி சிவனடியான் யார்?

ஒரு துரும்பு!

பெரிய புலிப் பினாமிகளெல்லாம் இந்த மனிதரை முன் தள்ளிவிட்டுத் தாம் பெரிய செல்வத்தோடு ஒதுங்கியுள்ளார்கள்?.

இந்தக் கரம்பொன் மனிதன் எனது வீட்டின் முன்னால் சயிக்கிள் மிதித்துச் செல்லும்போதே இவரது பள்ளி வாழ்வில் இவர் விளம்பரந்தேடியென அறிவேன்!

ஆனால்,இவ் மனிதர் வெறும் அப்பாவியாகப் பெரிதும் இருந்துகொண்டதும், பிராங்பேர்ட்டில் தமிழ் மன்றமமைத்துத் தமிழர்களிடம் மந்திர வித்தை காட்டுவதுமாக இருந்துவிட்டுப், இப்போது புலிப் பினாமிகளுக்குச் செக்கிரட்டியாக இருப்பதன் மர்மம் எனக்கு விளங்கவில்லை.

இது எதனால்?

புலிகள் இவரை முன் தள்ளித் தமது காரியத்தைச் செய்யவா?

அற்ப விளம்பரப் பிரியரான எனது ஊர் ஸ்ரீபதியோ இப்போ பெருஞ் சிறுத்தை…

நினைக்கச் சிரிப்பாக இருக்கு…

என்ன அண்ணையின் பாசறைகளில் வளர்க்கப்பட்ட/சேர்க்கப்பட்ட சாக்கடைகள்!

"நம்பிக்கைதான் வாழ்க்கை" அதில் பல அர்த்தங்கள் இருக்கலாம். சில காலம் பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

unnudaiya naNpan yaar enRu sol nii yaar enpaathai naan solkiReen enRaar peeRnaadsoo!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சரன் அடைந்தால் அவரை சித்திரவதை செய்து ஆசை எல்லாம் திர்ந்த பின் கொலுவதிலும் பார்க்க அவரை சிரிக்க வைத்து அரசியல் செய்யும் பக்கும் சிங்களவனிடம் தற்போது இருக்கு அவன் முட்டாளுக்கு முட்டாள் .

பின்னை யோகியையும்,பாலகுமாரையும் விட்டுபோட்டு

என்றை கே.பி யை மட்டும் தூக்கி வைத்து ஆடுவது

யேனுங்க?

2003 இல் இருந்து பல வருடமாக கேபி அனைத்து பொறுப்பில் இருந்தும் பனிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் அது தெரியுமா? இறுதியில் தலைவரை வெளியே எடுக்க ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து அந்த காசுக்கு கூட அனுமதி கொடுக்க படவில்லை என்று இறுதுவரை வன்னியில் நிண்டவர் ஒருவர் சொன்னதாக செய்தி கேபியில்ட இறுதி நேரத்தில் பெரும் தொகையில்நிதி இல்லை அனைத்தும் புலத்தில் தான் கட்டுப்பாட்டில் இருந்த்து இருக்கு இன்னும்.

காசை குடுத்திருந்தால் ஜேம்ஸ் பாண்டை அனுப்பி மீட்டிருப்பாங்களோ? இன்னுமா உதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கிறீர்கள். இறுதிவரை இருந்தனாங்கள் என்று பலபேர்(வன்னியில கால் வைக்காதவை கூட); கிளம்பியிருக்கினம் புலுடாவிட அதுல ஒருத்தரை தான் நீங்க சந்திச்சு இருப்பீங்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆதரவில் ஆப்கானிஸ்தானில் சரணடைந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கும் இவற்றிற்கும் உள்ள ஒற்றுமை..!

அடிப்படையில் இதெல்லாம் உலக பொலிஸ்காரனின் வேலைத்திட்டங்களில் ஒன்று. பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்.. உலகில் ஜனநாயகத்தை ஸ்தரப்படுத்தும் அமெரிக்காவின் ஆயுத ஜனநாயகத்தின் வேலைத்திட்டங்களோடு ஒருங்கிணைந்தவையே இவை.

  • கருத்துக்கள உறவுகள்

2003 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறுப்புகளில் இருந்து நான் விலகிக்கொண்டேன்: கே பி

நேர்காணல் | August 1, 2010 at 5:21 pm

--------------------------------------------------------------------------------

கே பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் உள்ளுர் பத்திரிகை ஒன்று நடத்திய நேர்காணல் அண்மையில் பிரசுரமாகியிருந்தது. எனினும் அந்த பத்திரிகையில் வெளியாகாத நேர்காணல்கள் கீழே தரப்படுகின்றன.

பத்திரிகையாளர் – அரசாங்கத்துடன் உங்களுக்கு உள்ள பரிமாற்றங்கள் எவை?

கே.பி – பரிமாற்றமா அதன் அர்த்தம் என்ன? என்ன சொல்கிறீர்கள்?

பத்திரிகையாளர் – அரசாங்கம் உங்களை வைத்து என்ன செய்யபோகிறது. ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்களிடம் இருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சவின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர்கள். இதன் காரணமாகவே உங்களை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள்.

கே.பி – சிரிப்பு.. அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது. 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக்கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை. அவையாவும் வீணான பிரசாரங்களாகும். எனக்கு இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.

பத்திரிகையாளர் – கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்கள்?

கே.பி – பல கப்பல்கள் இறுதியுத்தத்தின் போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

பத்திரிகையாளர்- கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்படவில்லை. உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்கும்தானே?

கே.பி – இரண்டு மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சில வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.

பத்திரிகையாளர் – உங்களை எங்கே பிடித்தார்கள்?

கே.பி – மலேசியாவில்…

பத்திரிகையாளர் – தாய்லாந்தில் என்ன நடந்தது?

கே.பி – தாய்லாந்து தொடர்பாக கூறப்பட்டவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் நான் மலேசியாவிலேயே பிடிக்கப்பட்டேன்.

பத்திரிகையாளர் – உங்களை யார் பிடித்தது?

கே.பி – மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச்சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர் இதன் பின்னர் விமானத்தின் வர்த்தக வகுப்பில் அமரச்செய்யப்பட்டு நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.

பத்திரிகையாளர் – என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்? தற்போது என்ன நினைக்கிறீர்கள்?

கே.பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.

பத்திரிகையாளர் – உங்களை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?

கே.பி – ஆம். நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவவேண்டும். கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கிறேன்.

பத்திரிகையாளர் – யுத்தத்தின் இறுதிக்காலத்தில் உங்களது பணி என்னவாக இருந்தது?

கே.பி – நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உட்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை

பத்திரிகையாளர் -உங்களின் பொறுப்புகள் எவை? ஆயுதக்கடத்தலா? அல்லது வங்கி வைப்புகளின் பொறுப்பாளரா?

கே.பி – நான் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாக இருந்தேன். நான் சமாதான முயற்சியாளராக செயற்பட்டேன்.

பத்திரிகையாளர் – உங்கள் வசம் அதிகளவு பணம் இருந்தது உண்மையா?

கே.பி – 2003 ஆம் ஆண்டில் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள்ள நிலைமை எனக்கு தெரியாது. நான் 2003 ஆம் ஆண்டு எனது பொறுப்பை முடித்துக்கொண்டபோது அதிகளவு கடன்களே இருந்தன.

பத்திரிகையாளர்- இலங்கைக்கு எப்போது கடைசியாக விஜயம் செய்தீர்கள்?

கே.பி – ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டபோது கடைசியாக இலங்கைக்கு வந்தேன்.

பத்திரிகையாளர்- மலேசியாவில் இருந்து இலங்கை வந்ததன் பின்னர் மட்டக்களப்புக்கு போயிருக்கிறீர்களா?

கே.பி – இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்த போது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.

பத்திரிகையாளர் – உங்களுடைய பழைய யுத்த களத்திற்கு சென்ற போது எவ்வாறு கவலைப்பட்டீர்கள்?

கே.பி – முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன்.

பத்திரிகையாளர்- நீங்கள் அரசாங்கத்துக்கு பணம் எதனையும் கொடுக்கவில்லையா?

கே.பி – நான் சொல்வது உண்மையாகும். பணம் வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

பத்திரிகையாளர்- உங்களுக்கு எத்தனை வயது? குடும்பம் பிள்ளைகள்?

கே.பி – எனது மனைவியும் தாய்லாந்தில் இருக்கிறாள். 18 வயது மகளும் தாய்லாந்தில் இருக்கிறாள்.

பத்திரிகையாளர் – அவர்கள் உங்களுடன் நாளாந்தம் தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுகிறார்களா? அவர்கள் உங்களை பார்ப்பதற்கு வருகிறார்களா?

கே.பி – வாரத்திற்கு மூன்று நாட்கள் அவர்களுடன் கதைப்பேன். சிலவேளைகளில் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள்.

பத்திரிகையாளர் – புலம்பெயர்ந்தவர்களின் குழுவுடன் நீங்கள் வன்னி சென்றீர்களா?

கே.பி – வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்ந்தோம்.

பத்திரிகையாளர் – யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தில் அழித்துப்போன சொத்துக்கள் குறித்து உணர்கிறீர்களா?

கே.பி – நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறோம்.

பத்திரிகையாளர்- சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்ன?

கே.பி – சிலர் உண்மையை பேசுகிறார்கள். பலர் பிரபா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகின்றனர். நான் முகாம்களுக்கு சென்றபோது அங்கு உள்ள இளைஞர்களும், யுவதிகளும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்யவேண்டும் என கூறுகின்றனர்.

பத்திரிகையாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கே.பி – உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்பவில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்குண்டுண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்.

பத்திரிகையாளர் -உங்களது கைது பற்றி ஏதாவது அறிந்திருந்தீர்களா?

கே.பி – இல்லை. ஆச்சரியமாக நடந்தது. ஹோட்டலுக்கு மலேசிய புலனாய்வாளர்கள் வரும் வரை எனக்கு எதுவும் தெரியாது.

பத்திரிகையாளர் – அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?

கே பி – இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்

http://www.aathavanonline.com/?p=3022

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.

இந்த நிலையில் உள்வர் எப்படி அவலப்பட்ட மக்களுக்கு உதவுவார் அவரை நம்பி யார் பணம் கொடுக்கப் பேகிறார்கள்.அவருக்கே அவருடைய நிலமை தெரியாதபோது புலத்தில் இருந்து போனவர்கள் என்ன புடுங்பப் போகிறார்கள் தமிழரின் ஒற்றுமையைச் சிதைப்பதைத் தவிர.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாக உள்ள ஒரு சந்தேகம். உண்மையில் கேபி என புலிகளினால் உள்வாங்கப்பட்ட நபர் தற்போது கேபி என முகம் காட்டும் நபர்தானா? பல வருட அனுபவத்தினை கொண்டு செயற்பட்ட அக் "கேபி" இக்கும் தற்போது வெளிக்கிட்டிருக்கும் இக் "கேபி" க்கும் இடையில் சொல், செயல், சிந்தனை என்வற்றுக்கிடையில் பாரிய வித்தியாசம் உள்ளதாகவே தெரிகின்றது. முதலில் இங்கு "கேபி" என்கின்ற மனிதரில் ஆள்மாறாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவே புலப்படுகின்றது. காகம் நிக்க பனம்பழம் விழுத்த கதையாக.....புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் "கேபி" என்கின்ற வார்த்தை இலங்கையில் பிரபல்யப்படுத்தப்படுவதாகவும் தென்படுகின்றது.

யாராவது கேபியின் உருவ வளர்ச்சிப்போக்கினை அவதானித்து திறனாய்வு செய்யக்கூடியவர்கள் இச் சந்தேகத்தினை தெளிவு படுத்த முடியுமா?

நம்பிக்கைதான் ... கேயண்ணா பீயாண்ணா கைது/சரன் என்ன இலங்கைக்கு போகும் கடைசி நேரத்தில் ஆடிய நாடகம் ...

நாடகத்தின் பெயர்: "கேயண்னா பீயண்ணா கைது செய்யப்படுகிறார்".

... இந்த நாடகம் கேயண்ணா பீயண்ணா சில மாதங்களாக அரங்கேற்றி வந்தார். ஆனால் கதை வசனம், டைரக்ஷன் அவர் எழுதவில்லையாம், ஆனால் தான் தான் என்று சொல்கிறாராம். நாங்களும் பார்த்தும்/கேட்டும் சூடு பறக்க விசிலடித்து கூக்குரலிட்டோம்! கேயண்னா பீயண்ணாவும் உலகமெங்கும் உள்ள பலருக்கு போனுக்கு மேல் போன் போட்டு சிலரை வளைத்து நாடகத்தில் பங்கு பற்றினார். அதில் பலருக்கு நாடகத்தின் இனி வரப்போகும் அங்கங்கள் என்னவென்று தெரியாது ..... கிட்டத்தட்ட சின்னத்திரை நாடகம் போல ...

நாடகமும் சூடு பிடிக்க, கேயண்ணா பீயாண்ணாவோ இறுதியில் வரும் கிளைமாக்ஸ்ஸுக்கு மேலாக இடையிலும் ஒரு பெரியதொன்றை திணித்தார். அதை மிக தத்துரூபமாக எடுத்து உண்மையாக்க சிலர் கேயண்ணா பீயண்ணாவுடன் அகப்பட்டனர். அதில் நடிப்பதற்காக கேயண்ணா பீயண்ணாவுடன் மாட்டுப்பட்ட லண்டனிலிருக்கும் நடேசரின் தம்பிமாரும், மகனும் தெரியாமல் பங்கு பற்றினார்களாம்.

.... கேயண்ணா பீயண்ணாவோ தான் லங்கா மாதாவை போய் தரிசித்து நமோ நமோ ஓதப்போவதை சொல்லாமல் கைது தான் என்று உலகிற்கு சில நம்பிக்கையான ஆட்கள் கூறினால்தான் பிறர் நம்புவார்கள் என்ற சரியான கணக்கும் போட்டு இதில் நடேசரின் குடும்பமே சரியானது என கணக்கிட்டு, மலேசியாவுக்கு அழைத்து இந்த காட்சியை அரங்கேற்றினாராம் .....

அந்த முக்கிய காட்சியில் கேயண்ணா பீயண்ணா ஆனவர் நடேசரின் தம்பி/மாருடனும், மகனுடனும் தீர்க்கமாக எதிர்கால நிலைமைகளை விளங்கப்படுத்தி நடித்துக் கொண்டிருக்க, தொலைபேசி அழைத்ததாம். ... இருங்கள் வருகிறேன் ... என்று சென்றவர் ... இன்று கிளைமாக்ஸில் ... நம்பிக்கைதான் வாழ்க்கையாம்!!!!!!!!!

கேயண்ணா பீயண்ணா - உலக நடிகர்கள் எவராவது இவனுக்கு நிகராகுமா??????

Edited by Nellaiyan

பின்னை யோகியையும்,பாலகுமாரையும் விட்டுபோட்டு

என்றை கே.பி யை மட்டும் தூக்கி வைத்து ஆடுவது

யேனுங்க?

இந்த நக்கல் நயாண்டிகளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை..................

யோகி யும் பாலகுமாரன் அண்ணையும் வன்னியில் நின்று போராடியவர்கள் இதுவரை வன்னியில் என்ன நடந்த்து என்று கண்னால் கண்டவர்கள் அதை விட இவர்களை இவர்களை எப்படி தான் சித்திரவதை செய்தோ பனத்தை காட்டியோ ஆடமபர வாழ்க்கையில் முலமோ நீண்டகாலத்துக்கு வைத்து இருக்க மூடியாது ஆனால் கேபி அப்படி இல்லை போராட்டம் பல சிக்கல் அடைந்த போதும் சரி உடலை வருத்தி காடுகளுக்குள் நீண்டகாலம் கஷ்டப்பட்டவர் இல்லை பல கோடிகள் காசுடன் ஒரு கிங் மேக்கர் போல் செயற்பட்டவர் அதை விட பாலகுமாரன் அண்னையையும் சரி ஜோகி அண்னையையும் சரி இலங்கையை மீறி எந்த நாட்டிலும் தண்டனைக்கு உரியவர்கள் இல்லை ஆனால் கேபி அப்படி இல்லை அவரை எந்த நாட்டிலும் கைது செய்யலாம் தண்டனை கொடுக்கலாம் அதுவும் சட்டவிரோத ஆயுத கடத்தலுக்கு ஏன் இந்தியா கூட அவரை சும்மா ராஜீவு கொலையில் சேர்த்து போட்டு காத்து இருக்கு இது முழுக்க முழுக்க கேபி காட்டி கொடுக்கப்பட்டார் இப்போது அவர் காட்டி கொடுக்கிறார் அது தான் உண்மை............

நம்பிக்கைதான் ... கேயண்ணா பீயாண்ணா கைது/சரன் என்ன இலங்கைக்கு போகும் கடைசி நேரத்தில் ஆடிய நாடகம் ...

நாடகத்தின் பெயர்: "கேயண்னா பீயண்ணா கைது செய்யப்படுகிறார்".

... இந்த நாடகம் கேயண்ணா பீயண்ணா சில மாதங்களாக அரங்கேற்றி வந்தார். ஆனால் கதை வசனம், டைரக்ஷன் அவர் எழுதவில்லையாம், ஆனால் தான் தான் என்று சொல்கிறாராம். நாங்களும் பார்த்தும்/கேட்டும் சூடு பறக்க விசிலடித்து கூக்குரலிட்டோம்! கேயண்னா பீயண்ணாவும் உலகமெங்கும் உள்ள பலருக்கு போனுக்கு மேல் போன் போட்டு சிலரை வளைத்து நாடகத்தில் பங்கு பற்றினார். அதில் பலருக்கு நாடகத்தின் இனி வரப்போகும் அங்கங்கள் என்னவென்று தெரியாது ..... கிட்டத்தட்ட சின்னத்திரை நாடகம் போல ...

நாடகமும் சூடு பிடிக்க, கேயண்ணா பீயாண்ணாவோ இறுதியில் வரும் கிளைமாக்ஸ்ஸுக்கு மேலாக இடையிலும் ஒரு பெரியதொன்றை திணித்தார். அதை மிக தத்துரூபமாக எடுத்து உண்மையாக்க சிலர் கேயண்ணா பீயண்ணாவுடன் அகப்பட்டனர். அதில் நடிப்பதற்காக கேயண்ணா பீயண்ணாவுடன் மாட்டுப்பட்ட லண்டனிலிருக்கும் நடேசரின் தம்பிமாரும், மகனும் தெரியாமல் பங்கு பற்றினார்களாம்.

.... கேயண்ணா பீயண்ணாவோ தான் லங்கா மாதாவை போய் தரிசித்து நமோ நமோ ஓதப்போவதை சொல்லாமல் கைது தான் என்று உலகிற்கு சில நம்பிக்கையான ஆட்கள் கூறினால்தான் பிறர் நம்புவார்கள் என்ற சரியான கணக்கும் போட்டு இதில் நடேசரின் குடும்பமே சரியானது என கணக்கிட்டு, மலேசியாவுக்கு அழைத்து இந்த காட்சியை அரங்கேற்றினாராம் .....

அந்த முக்கிய காட்சியில் கேயண்ணா பீயண்ணா ஆனவர் நடேசரின் தம்பி/மாருடனும், மகனுடனும் தீர்க்கமாக எதிர்கால நிலைமைகளை விளங்கப்படுத்தி நடித்துக் கொண்டிருக்க, தொலைபேசி அழைத்ததாம். ... இருங்கள் வருகிறேன் ... என்று சென்றவர் ... இன்று கிளைமாக்ஸில் ... நம்பிக்கைதான் வாழ்க்கையாம்!!!!!!!!!

கேயண்ணா பீயண்ணா - உலக நடிகர்கள் எவராவது இவனுக்கு நிகராகுமா??????

நடேசனின் தம்பியும் மகனும் ஒரு முட்டாள்கள் போல?

கே.பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.

இந்த நிலையில் உள்வர் எப்படி அவலப்பட்ட மக்களுக்கு உதவுவார் அவரை நம்பி யார் பணம் கொடுக்கப் பேகிறார்கள்.அவருக்கே அவருடைய நிலமை தெரியாதபோது புலத்தில் இருந்து போனவர்கள் என்ன புடுங்பப் போகிறார்கள் தமிழரின் ஒற்றுமையைச் சிதைப்பதைத் தவிர.

இயக்க காசில் படிக்க அனுப்ப அதையும் செய்யாம வெளிநாட்டில் இருந்து வந்த பெண் மேல கண்டதும் காதலோ காமமோ ஏதோ வந்து கலியானமும் கட்டி நோர்வையில் தற்போது பல மில்லியோன் காசுடன் இருக்கும் நெடியவனை கேளுங்கள் சொல்லுவான்

கே.பி – எனது மனைவியும் தாய்லாந்தில் இருக்கிறாள். 18 வயது மகளும் தாய்லாந்தில் இருக்கிறாள்.

பத்திரிகையாளர் – அவர்கள் உங்களுடன் நாளாந்தம் தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுகிறார்களா? அவர்கள் உங்களை பார்ப்பதற்கு வருகிறார்களா?

கே.பி – வாரத்திற்கு மூன்று நாட்கள் அவர்களுடன் கதைப்பேன். சிலவேளைகளில் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள்.

இலங்கை அரசின் செல்லப் பிள்ளை கே பி சொந்தமாக முடிவு எடுத்து சொந்த மனைவி பிள்ளையை பார்க்க போக நேரம் இல்லை மனைவியும் மகளும் வந்து பார்க்கும் அளவுக்கு கேபி ல இலங்கை அரசுக்கு நம்பிக்கையாம்.

இனி சில பேர் எழுத போகினம் கேபி 2 தரம் சிங்கபூர் வந்தார் 4 தடவை தாய்லாந்த் போனார் 5 டஹ்டவை இந்தியா சென்றார் என்று இப்படி . :wub::D:D

நடேசனின் தம்பியும் மகனும் ஒரு முட்டாள்கள் போல?

தம்பி சசி,

கேயண்ணா பீயண்ணா நடேசரின் தம்பி, மகன்களை மட்டும் முட்டாள் ஆக்கவில்லை, இங்கு லண்டனில் மட்டும் பலரை முட்டாள்களாக்கினார் கேயண்ணா பீயண்ணா. பலர் அவர் அடுத்த கட்டத்துக்கு எங்களை கொண்டு செல்லப்போகிறார் என்று, மலேசியா வரை பறந்து சென்று சந்தித்து வந்தார்கள், இங்கு எனக்கு பக்கத்திலும் இருக்கிறார்கள்!

நீர் இப்பதான் கேயண்ணா பீயண்ணாவுக்காக விசிலடிக்கத் தொடங்கியிருக்கிறீர், நாங்கள் மே18 இனுடனேயே தொடங்கினாங்கள் ஆக்கும். யாழில் பழைய பதிவுகளை பாரும். இப்ப தெளிந்திருக்கிறம் ஆக்கும்.

மலேசியாவிலை நடந்தது என்வென்று நடேசனின்ரை அண்ணணன் அதுதான் றிச்சாட் அம்மான் வாயை திறந்து பகிரங்கமாக சொல்ல வேண்டியதுதானே எதுக்கு பம்முறார்.அவர் வாயை துறக்காததாலை அவரும் இதிலை பங்காளி எண்டுதான் நினைக்க தோன்றுது

சிங்கள பயங்கரவாதிகளின் கைகளில் கோமாளிகள் ஆகிக்கொண்டிருக்கும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

யோகி யும் பாலகுமாரன் அண்ணையும் வன்னியில் நின்று போராடியவர்கள் இதுவரை வன்னியில் என்ன நடந்த்து என்று கண்னால் கண்டவர்கள் அதை விட இவர்களை இவர்களை எப்படி தான் சித்திரவதை செய்தோ பனத்தை காட்டியோ ஆடமபர வாழ்க்கையில் முலமோ நீண்டகாலத்துக்கு வைத்து இருக்க மூடியாது ஆனால் கேபி அப்படி இல்லை போராட்டம் பல சிக்கல் அடைந்த போதும் சரி உடலை வருத்தி காடுகளுக்குள் நீண்டகாலம் கஷ்டப்பட்டவர் இல்லை பல கோடிகள் காசுடன் ஒரு கிங் மேக்கர் போல் செயற்பட்டவர் அதை விட பாலகுமாரன் அண்னையையும் சரி ஜோகி அண்னையையும் சரி இலங்கையை மீறி எந்த நாட்டிலும் தண்டனைக்கு உரியவர்கள் இல்லை ஆனால் கேபி அப்படி இல்லை அவரை எந்த நாட்டிலும் கைது செய்யலாம் தண்டனை கொடுக்கலாம் அதுவும் சட்டவிரோத ஆயுத கடத்தலுக்கு ஏன் இந்தியா கூட அவரை சும்மா ராஜீவு கொலையில் சேர்த்து போட்டு காத்து இருக்கு இது முழுக்க முழுக்க கேபி காட்டி கொடுக்கப்பட்டார் இப்போது அவர் காட்டி கொடுக்கிறார் அது தான் உண்மை............

புலிகளின் தலைமையை தவிர யாருக்குமே கடந்த 30 வருடங்களாக இலங்கை அரசுகு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஒரிரு மாதங்களில் இலங்கை அரசு சவால் விட்டு விட்டு ஆளை பிடிப்பது என்பது ஒரு நாடகமே. 30 வருடமாக சிங்களவர்களுடனேயே இருக்கும் டக்கிளசில் நம்பிக்கை இல்லாமல் சில நாட்களிலேயே மகிந்தவின் மிக நம்பிக்கைக்கு உரியவராக இவர் கிங் மேக்கர் என்பதால் மாறிவிட்டாராம்.

அத்தோடு இவர் உண்மையில் தலைவரால் உலக அமைப்புக்கு பொறுப்பாக விடப்பட்டவர் வைகாசி 19ம் திகதி அரசுக்கு மிண்டு கொடுக்கும் சோதியின் வானொலிக்கு(கனடா) பேட்டி கொடுத்ததன் மர்மம் என்ன?

ராஜீவ் காந்தி கொலையில் இவர் சம்பந்த படவில்லை என்று இந்திய புலனாய்வு சொல்லியுள்ளது. இவர் பம்பாயில் அத்தருணம் இருத்ததாகவும் ராஜீவ் கொலையுடன் சம்பந்த படவில்லை என்றும் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தான் அவர்களது தேடப்படும் நபர்கள் நிரலில் இருக்கிறார்கள்.காசும்,கப்பல்களும் தன்னிடம் இல்லையாம். பிறகு ஏன் இவரை ஏன் இந்திய அரசுக்கு தேவைப்பட போகிறது?

ஒரு உண்மையான தமிழ்ப் பயங்கரவாதியை இப்பதான் பார்க்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.