Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த மண் எங்களின் சொந்த மண்-S.Gசாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மண் எங்களின் சொந்தமண் புகழ் S.G.சாந்தன் அவர்களின் கதையையும் ஒருக்கா கேழுங்கேவன் தனிய அவற்ற பாட்ட மட்டும் கேட்டா காணுமே????

நான் அறிந்து அவரின்ட இரண்டு பிள்ளைகள் மாவீரர்கள்........................சிலபேர் மூண்டு எண்டும் சொல்லுகினம் எனக்கு அது வடிவா தெரியாது??

இப்ப அதுகளை எல்லாம் விடுங்கோ கீழ இருக்கிற விடியேவை பாருங்கோ.......

http://http://www.youtube.com/user/nerdovedio#p/u/1/850IssXFswQ

இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணும் சாந்தன் அவர்கள்

துறோகி ஆக்கப்பட்டுவிட்டாரா........

ஆக்கப்பட்டுகொண்டு இருக்கிறாரா............

still in progress Two working days ஆகுமா..............

அல்லது

திறந்த பல்கலைக்கழகம் அவரது துறோகி பட்ட விண்ணப்பத்தை நிராகரிச்சுட்டுதா????

Edited by வெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று கேட்கவா வெடியன். நீங்கள் இருக்கின்ற நாட்டில் அசலம் அடிக்கவோ, அல்லது சிங்கள அரசின கட்டுப்பாட்டுப் பகுதியில் நின்று, தமிழீழம் தான் தீர்வு. புலிகளை முழுமையாக ஆதரிக்க நான் தயார். அவர்கள் தான் எம் உயிர் என்று பகிரங்கமாக நீங்கள் பேட்டி கொடுக்கத் தயார் என்றால் சாந்தன் செய்தது தப்பு என்று சொல்வதற்குத் தகுதி இருக்கு... அசலம் அடிக்கும்போது புலிகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவர்களாலும், சிங்கள அரசாலும் தான் இப்படி ஓடி வந்தேன் என்று வாக்குமூலம் கொடுத்து விட்டு, உயிருக்கு மதிப்பில்லாத சிங்கள அரசின் வதை முகாமில் மாட்டுப்பட்டுத் தவிக்கின்ற ஒருவரைப் பற்றி விமர்சிக்க என்ன தகுதி உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா தூயவரே............

நான் எழுதினதை திரும்ப ஒருக்கா நிதானாய் வாசியுங்கோ அப்பிடியும் அதிண்ட அர்த்தம் விளங்காட்டி அரிட்டையும் அர்த்தம் கேழுங்கோ தெரியாததை கேக்கிறதில தப்பில்ல நான் அப்பிடித்தான் செய்கிறனான்........

தவிர உந்த திறந்த பல்கலைக்கழகங்கலோல சேர்ந்து உங்களுக்கு மாற்றா ஒண்டு சொல்லிபிட்டா உடன பட்டமளிப்பு நடத்தாதேங்கோ. எதோ என்ர சிற்றறிவுக்குட்பட்டதை நான் எழுதுறன் அது எல்லாம் சரியாய் இருக்க நான் ஒண்டும் அகத்தியருமில்ல அதேநேரம் பிழை பிடிக்க நிங்கள் ஒண்டும் குறுமுனியும் இல்லை.

Edited by வெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியரும், குறுமுனியும் ஒரே ஆள் தான். உங்களுக்குப் பட்டம் கொடுக்கின்ற அளவுக்கு உங்களுக்கு அந்த்த தகுதி என்னமும் வரவில்லை. கண்டகண்ட ஆட்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்க நாங்கள் என்ன விசரா?? என்னமும் 4, 5 கருத்து இப்ப டி எழுதும். கொடுக்கின்றது பற்றி யோசிக்கின்றம்.

கே பி மட்டும் என்ன வன்னியில 10.000 போராளிகளுடன் நின்றா சிரிச்சு கொண்டு வாழ்க்கை தான் நம்பிக்கை என்று சொல்லுகிறார் கேபி கடத்தப்பட்டவரா தனாக சென்றவரா என்று கூட சரியாக தெரியாது ஆனால் தூரோகியாக்க மட்டும் கோவணத்தோட ஆக்கள் வந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெடியன் உங்கட வெடி நல்லா விளங்குது.

இந்தப் போராளிகள் எல்லாம் சர்வதேசம் சொல்லி தான் சரணடைந்தவர்கள். அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டியது சிங்கள் அரசின் பொறுப்பு. ஆனால் அது அதைச் செய்யவில்லை.

முதலில் தளபதிகளைக் கொலை செய்தது. பின்னர் சரணடைந்த போராளிகளில் முக்கியமானவர்களைக் கொலை செய்தது. பின்னர் தீவிர போராளிகளை தனியேயேயும் நடுத்தர தீவிர போராளிகளை தனியேயும்.. சாதாரண போராளிகளை தனியேயும் வகைப்படுத்திப் பிரித்தது... சித்திரவதை செய்தது. அடைத்து வைத்தது.

மக்களில் தீவிர ஆதரவாளர்கள்.. நடுத்தர ஆதரவாளர்கள்.. ஆதரவாளர்கள் இவர்களையும் அடைத்து வைத்துள்ளது. மேலோட்ட ஆதரவாளர்களை.. அங்கவீனமுற்ற போராளிகளை இயன்ற வரை விடுதலை செய்துள்ளது. குடும்பத்தினராக உள்ள போராளிகளும் அவர்களின் தீவிர செயற்பாட்டடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிப் போரின் போது சரணடைதல் பற்றி கூச்சல் போட்டவர்கள்.. இந்தப் போராளிகளின் சரணடைவின் பின்னர் மெளனமே காத்தனர். அவர்களை படுகொலை செய்யவும் சித்திரவதை செய்யவும் காரணமாக இருந்தனர்.

இன்றைய சூழலில் இந்த நம்பிக்கைத் துரோகங்களில் இருந்து இந்தப் போராளிகள் வெளிவந்து.. விடுதலை பெற்று.. தாமே தமக்கென்று வாழ்வை தீர்மானிக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது.

அந்த இடத்தில் சிறீலங்கா மாதா நமோ நமோ என்றால் தான் விடுதலை கிடைக்கும் என்றால் அதனை அவர்கள் செய்தாகத்தான் வேண்டும். அது தவிர்க்க முடியாதது. எதிரியின் எல்லைக்குள் நின்று அவனின் ஆயுதங்களுக்குள் நின்று வீரம் பேச முடியாது.

புலம்பெயர்ந்த மக்கள் எத்தனையோ பொய்களை காட்டிக் கொடுப்புக்களை செய்துதான் அசைல வாழ்வின் சுகத்தை அனுபவிக்கின்றனர். அவர்களே அப்படிச் செய்துள்ள போது எதிரியின் பிடியில் இருந்தும் சாவில் இருந்தும் பொய் சொல்லியாவது தப்ப நினைப்பது தவறு அல்ல. இது தப்பி தமது வாழ்க்கையை நிர்ணயப்பதற்கான போராட்டம் என்றே கொள்ள வேண்டும்.

நீங்கள் துரோகத்தனத்திற்கும்.. இதற்கும் வேறுபாடு அறியாதவராக இருக்கிறீர்கள். துரோகத்தனம் என்பது தனக்கு சாதகமான களத்தில் இருந்து கொண்டும்.. தனது கொள்கை இலட்சியத்தை காட்டிக் கொடுத்து பிழைப்பதுதான் துரோகம். இவர்கள் அப்படியல்ல. தமக்கு சாதகமற்ற களத்தில் தமது இலட்சியத்தை மறைத்து.. தம்மை காத்துக் கொள்ள நடத்தும் வாழ்க்கைக்கான போராட்டமே இது. அதனை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்றால்.. இவ்வாறான அநாவசிய கருத்துப் பகிர்வுகளை தவிர்த்திருப்பீர்கள்.

உங்களுக்கு தெரியுமா.. தெரியா.. ரொனி என்ற போராளி.. இந்தியப் படைகளின் உளவாளியாகவே காட்டுக்குள் நுழைந்து பின்னர் இந்தியப் படைகளுக்கு எதிராக ரொனி மிதிவெடிகளை ஆக்கி.. இந்தியப் படைகளின் பல ஊடுருவல்களுக்கு சவாலாக இருந்தவன். இவர்கள் எதிர்காலத்தில் ரொனி போல் வரவேண்டாம். சாதாரண மக்களாக அவர்கள் அவர்களின் வாழ்வை வாழட்டும் என்பதே மக்களின் பெருவிருப்பம்.

அவர்கள் பட்ட துன்பம் போது. இவ்வளவு காலமும் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர்கள்.. எனி போராட்டத்தை முன்னெடுக்கட்டும்.

நாடு கடந்த அரசு கூட இன்று மெளனித்துக்கிடக்கிறது என்றால்.. அதற்கும் இந்தப் போராளிகளின் விடுதலை வாழ்வு பற்றிய கரிசணைதான் முக்கிய காரணம் எனலாம்.

தமிழீழம்.. கிடைக்குதோ இல்லையோ.. ஆனால் இந்தப் போராளிகளின் அவர்களை அங்கீகரித்து நின்ற மக்களின் விடுதலை என்பது முக்கியமானது.. அவசியமானது. அது தமிழீழத்தை விட முக்கியமான ஒன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போரளிகளின் வாழ்வுக்காகத் தான் நாம் மௌனமாக இருக்கின்றோம் என்பது பொய். உங்களின் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். முன்னெடுக்க யாரும் இல்லாத நிலையில் தான் மௌமாக இருக்கின்றோம். சிவானந்தனின் ஐநா நோக்கிய பயணம் என்றவுடன் ஏதோ மக்கள் பின்னால் போகின்றார்களே!. இது எவ்வாறு எனில் யாரவது முன்னெடுத்தால் பின்னால் போகின்ற மனநிலை தான் காரணம். புலத்தில் நடந்த பெரும்பாலனான வீதிப் போராட்டங்கள் தனிமனிதர்களின் உணர்வினால் தான் மக்கள் எழுச்சியாக மாற்றி வைத்தது.

இப்போராளிகளை வைத்து, எம்மைக் கட்டுப்படுத்துவதற்குச் சிங்கள அரசு முயல்கின்றது. அதனால் தான் என்னமும் விடுதலை செய்யத் தயாராக இல்லை.

சாந்தன் அண்ணா வின் புலிகளுடன் ஆன உறவு அரம்பித்தது எப்படி என்றால்? சாந்தன் 2 மனைவிமார் அதில் போற போற இடங்களிம் கைவரிசைகாட்ட வெளிக்கிட்டார் அதனால் அவரை பிடித்து கோட்டையில் கல் உடைக்க முன்னால் போராளிகளுடன் வேலைசெய்ய விட்டது வேலை முடிந்த்தும் போராளிகளும் முன்னால்(துண்டு கொடுத்தவர்கலும்) ஒன்றாக இருந்து ஏதவது நகைசுவயாக பேசி பாடுவது உண்டு அதை கவனித்த ஒரு பொறுப்பாளர் தான் சாந்தனை அண்ணாச்சியை பாடல்கள் பாட சிபர்சு செய்தார் ( முக்கியமாக சாந்தன் மாலை நேரத்தில் படிய பாடல் எல்லாம் பழைய சினிமா பாடலுக்கு தனாக புரட்சிவரிகளை கற்பனையில் உருவாக்கி படினார் அது பிடித்த பின் தான் அவர் புலிகளுக்கு பட தொடங்கினார் ஆனால் அவர் பாடல் ஆசிரியர் இல்லை சொந்தமா தனது பாடலுக்கு பாட்டும் எழுதவில்லை ..........

  • கருத்துக்கள உறவுகள்

கே பி மட்டும் என்ன வன்னியில 10.000 போராளிகளுடன் நின்றா சிரிச்சு கொண்டு வாழ்க்கை தான் நம்பிக்கை என்று சொல்லுகிறார் கேபி கடத்தப்பட்டவரா தனாக சென்றவரா என்று கூட சரியாக தெரியாது ஆனால் தூரோகியாக்க மட்டும் கோவணத்தோட ஆக்கள் வந்து விடுவார்கள்.

கேபி யின் நிலையும் இந்தப் போராளிகளின் நிலையும் ஒன்றல்ல.

கேபி போராட்ட களத்துக்கு வெளியில் இருந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைமறைவாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்டவருக்கு இலட்சியத்தை காத்து தலைமறைவாக வாழத் தெரியாதா என்ற கேள்வி இருக்கிறது.

இருந்தாலும் கேபி கூட மாறிய சூழலுக்கு ஏற்ப கைதியாகி இருக்கலாம். அப்படி இருந்தால் அவரை துரோகி என்று அழைக்க முடியாது.

ஆனால் கேபி பழிவாங்குவதற்காகவோ அல்லது வேறெந்தக் காரணங்களுக்காகவோ.. இலட்சியத்தை காட்டிக் கொடுத்து இன்று போராளிகளின் விடுதலை என்ற விடயத்தை கவசமாக்கி தன்னை உத்தரமராக்க முயல்வாராக இருந்தால் அது துரோகத்தனத்துடன் கூடிய ஒன்றாகவும் நோக்கப்படலாம். இருந்தாலும் போராளிகள் பெறும் நன்மை என்பது துரோகத்தை தாண்டி நிற்கிறது.

இந்தப் போராளிகளின் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்து கைதாகி போய் அவர்களின் விடுதலைக்கு உதவுவாராக இருந்தால் அது தியாக நிலைக்கு அவரை உயர்த்தும்.

எனவே இதில் பல பரிமானங்கள் தொக்கு நிற்கின்றன. அந்த இடைவெளிக்குள் மக்களை குழப்பாமல்.. அவர்களின் நடவடிக்கைகளால் விளையும் நன்மைகள் மக்களை போராளிகளை சென்றடைவதை உறுதி செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

இந்தப் போரளிகளின் வாழ்வுக்காகத் தான் நாம் மௌனமாக இருக்கின்றோம் என்பது பொய். உங்களின் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். முன்னெடுக்க யாரும் இல்லாத நிலையில் தான் மௌமாக இருக்கின்றோம். சிவானந்தனின் ஐநா நோக்கிய பயணம் என்றவுடன் ஏதோ மக்கள் பின்னால் போகின்றார்களே!. இது எவ்வாறு எனில் யாரவது முன்னெடுத்தால் பின்னால் போகின்ற மனநிலை தான் காரணம். புலத்தில் நடந்த பெரும்பாலனான வீதிப் போராட்டங்கள் தனிமனிதர்களின் உணர்வினால் தான் மக்கள் எழுச்சியாக மாற்றி வைத்தது.

இப்போராளிகளை வைத்து, எம்மைக் கட்டுப்படுத்துவதற்குச் சிங்கள அரசு முயல்கின்றது. அதனால் தான் என்னமும் விடுதலை செய்யத் தயாராக இல்லை.

சாந்தன் இலங்கை அரசுடன் இனைந்து செயற்பட்டால் அதில் வருத்தப்பட ஒன்றுமே செய்ய முடியாது அது அவருக்கு உயிருக்க உதரவாதமாவது கொடுக்கும் ஆனால் என் கேள்வி கேபி சிரிச்சு பேசுவதால் அவர் கைது செய்ய படவில்லை சரண்டைந்தார் என்று எப்படி நீங்கள் முடிவு எடுத்திர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போரளிகளின் வாழ்வுக்காகத் தான் நாம் மௌனமாக இருக்கின்றோம் என்பது பொய். உங்களின் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். முன்னெடுக்க யாரும் இல்லாத நிலையில் தான் மௌமாக இருக்கின்றோம். சிவானந்தனின் ஐநா நோக்கிய பயணம் என்றவுடன் ஏதோ மக்கள் பின்னால் போகின்றார்களே!. இது எவ்வாறு எனில் யாரவது முன்னெடுத்தால் பின்னால் போகின்ற மனநிலை தான் காரணம். புலத்தில் நடந்த பெரும்பாலனான வீதிப் போராட்டங்கள் தனிமனிதர்களின் உணர்வினால் தான் மக்கள் எழுச்சியாக மாற்றி வைத்தது.

இப்போராளிகளை வைத்து, எம்மைக் கட்டுப்படுத்துவதற்குச் சிங்கள அரசு முயல்கின்றது. அதனால் தான் என்னமும் விடுதலை செய்யத் தயாராக இல்லை.

ஒரு விடயத்தை நோக்க வேண்டும். உருத்திரகுமாரண்ணன் போன்றவர்கள் தலைவருக்கு ஆலோசகராக இருந்தவர்கள். அவர்களுக்கு மக்களை வழி நடத்தத் தெரியாது என்பது அவ்வளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல.

இன்றைய சூழலில் உருத்திரகுமாரண்ணன் போன்றவர்கள் சூழலை நன்கு அவதானித்து நிதானமாகவே செயற்பட விரும்புகின்றனர்.

அண்மையில் அவர் வழங்கி இருந்த பேட்டியில் கூட கே பியை சாடவில்லை. அதே நேரம் அவரின் செயற்பாடுகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளவும் இல்லை. இது நாடு கடந்த அரசின் இன்றைய நிலையை ஓரளவுக்கு என்றாலும் காட்ட உதவும் என்றே நினைக்கிறேன்.

மற்றும்படி முன்னாள் போராளிகளை, அடைத்து வைத்துள்ள மக்களை, மீள் குடியேற்றத்தை வைத்து சிங்களம் அரசியல் மட்டுமல்ல பேரினவாதத்தை நிலைநாட்டவும் முற்படுகிறது என்பது வெளிப்படை உண்மை. அதில் உங்களின் அந்தக் கருத்தே எனதும்.

Edited by nedukkalapoovan

கேபி போராட்ட களத்துக்கு வெளியில் இருந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைமறைவாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்டவருக்கு இலட்சியத்தை காத்து தலைமறைவாக வாழத் தெரியாதா என்ற கேள்வி இருக்கிறது.

இருந்தாலும் கேபி கூட மாறிய சூழலுக்கு ஏற்ப கைதியாகி இருக்கலாம். அப்படி இருந்தால் அவரை துரோகி என்று அழைக்க முடியாது.

கேபி சொல்கிறார் வன்னியில் எல்லாம் முடிந்தபின் புலத்தில் சேர்ந்து செயற்படவும் தனிப்பட்ட பொறுப்பாளர்களின் கைகளில் தொங்கி கொண்டு இருக்கும் நிதிகளை ஒருங்கைக்கவும் பேசியபோது தான் பிரச்சனை ஆரம்பித்தது என்று போக தலைவர் இறந்து விட்டார் என்று ஏற்றுக் கொள்ளுவதில் என்ன பிரச்சனை புலத்து பூசாரிகளுக்கு வந்த்து? அப்படி தலைவருயிரோடு இருந்தாலும் அவராக எதும் வெளிவிடும் வரை இறந்தவர் இறந்தாதாகவே இருக்கட்டுமே? அதில ந்ல்லது தான் நிறைய இருக்கு.

என்னை பொறுத்த மட்டில் கே பி ஒரு பாதிகப்பட்ட முன்னால் தேசியவாதி அதுவும் புலத்து புது தலைவரால் தான் அனைத்தும் வந்த்து அதில எத ஒரு மாற்றும் இல்லை அதுக்காக இனி கேபியை நம்புவதும் அவர் பின்னால் போவதும் தலைவருக்கு ம் அவரின் எதிர்பார்ப்புக்கலுக்கும் தனி நாட்டு கொள்கைக்கும் நாம் செய்யும் தூரோகம்.

சில நேரம் ஒரு காலத்தில் அனைத்து உண்மையும் வெளிவரும் போது கேபி உண்மையில் தலைவருக்கும் தமிழருக்கும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று தெரியவரும் போது நிச்சையமாக எனது கருத்தில் மாற்றமும் கவலையும் மனவருத்தமும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் சரணடையும்போது அவரால் எந்த விதமான ஆதாயமும் சிங்கள அரசுக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆனால் கேபியோ, கருணாவோ சரணடையும்போது, அல்லது கைது செய்யப்படும்போது இருக்கின்ற நிலை வேறு.எம்முடைய முழு வளமும் அவரால் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது, அல்லது சொல்லப்பட்டிருக்கின்றது. தன்னுடைய உயிருக்குப் பயந்து தான், இவ்வளவு வேலையையும் செய்திருக்கவே சாத்தியம் உண்டு. அன்றி போராளிகளுக்காக என்றால் ஏன் அவர் சரணடைந்து 3 மாத காலம் வரை காத்திருந்தார் என்பதும், இப்படி ஒரு கடத்தல் நாடகம் என்பதும் அவசியமற்றதே.

எது எப்படியோ, கேபி நல்லவர் கெட்டவர் என்பதற்கு அப்பால் அவரது கருத்துக்கு செவி சாய்ப்பது என்பது சிங்கள அரசின் கருத்துக்களை ஏற்பது போன்றதாகவே ஆகி விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

நான் இந்த திரியை இணைத்ததன் நேக்கம் சரிவர புரிபடாமல் இருக்கிறது என நினைக்கிறேன்.....இது எனது எழுத்திலுள்ள குறைபாடாகவும் இருக்கலாம் இதனால் சொல்ல வந்த விடையத்தை தெளிவாக கூறிவிடுகிறேன்......

அதாவது

துறோகி ஆக்கப்பட்டுவிட்டாரா........

ஆக்கப்பட்டுகொண்டு இருக்கிறாரா............

still in progress Two working days ஆகுமா..............

அல்லது

திறந்த பல்கலைக்கழகம் அவரது துறோகி பட்ட விண்ணப்பத்தை நிராகரிச்சுட்டுதா???

என்பதன் முலமாக நான் சும்மா தங்களின் கருத்திற்கு ஒவ்வாத கருத்துடையவர்களிர்கெல்லாம் சகட்டுமேனிக்கு துரோகி பட்டம் குடுக்கும் செயலை விமர்சித்து இருக்கிறேன்..இங்கு கவனிக்க வேண்டும் நான் துரோகி எனும் தமிழ் பதத்திற்கு பதிலாக துறோகி எனும் பிழையான பதத்தையே பாவித்து உள்ளேன் காரணம் எமக்கு துரோகிக்கான அர்த்தமே தெரியாத அதை எழுதக்கூட தெரியாதவர்கள் என்பதை காட்டுவதற்காக.

அதைவிடுத்து இரண்டு /மூண்டு மாவிரர்களின் தந்தையாரான சாந்தனுக்கு துரோகி பட்டம் வழங்கும் இழி பிறவியில்லை நான்.இங்கு இலைங்கையில் என்ன நடக்குது எண்டு தெரியாமா பந்தயக்குதிரைக்கு பணம் கட்டிப்பேட்டு அது தொத்தவுடன் ஏறி விழக்கிற ஆளில்ல பாருங்கோ...

சாந்தன் இருக்கிற இடத்தில இருக்கிற மனுசனாப்பிறந்த எவருமே இவ்வாறு தான் செய்வார்கள்(கவனிக்க சாந்தன் அண்ணா அவர்கள் அந்த ஒரு கொடியின் கீழ் வாழ வேணுமெண்டு சொல்ல பக்கத்திலுருக்கும் சகோதரி மற்றவர்களை பார்த்து சிரிக்கிறார்).

ஏன் பாருங்கோ 2005 ஆண்டு தலைவரும் மாவீரர் தின உரையில மகிந்தர யதார்த்த வாதி எண்டு சொன்னவர் அதுக்காக அவரும் அப்ப துரோகியே???????

எனக்கு விளங்கேல்ல பாருங்கோ.......

துயவருக்கு............பிழை இல்லாம இருக்க நான் ஒண்டும் எல்லாம் தெரிஞ்ச அகத்தியருமில்லை.......அதே நேரம் பிழை பிடிக்கிறதிற்க்கு நீங்களும் எல்லாம் தெரிஞ்ச அகத்தியருமில்லை....(இரண்டிலையும் அகத்தியரை போட்டு ஏன் சும்மா குழப்புவான் என்டிட்டித்தான் வேற வேற பெயரை போட்டன்)

தேழைமையுடன்

வெடியன்

  • கருத்துக்கள உறவுகள்

வெடியன் உங்கட வெடி நல்லா விளங்குது.

இந்தப் போராளிகள் எல்லாம் சர்வதேசம் சொல்லி தான் சரணடைந்தவர்கள். அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டியது சிங்கள் அரசின் பொறுப்பு. ஆனால் அது அதைச் செய்யவில்லை.

முதலில் தளபதிகளைக் கொலை செய்தது. பின்னர் சரணடைந்த போராளிகளில் முக்கியமானவர்களைக் கொலை செய்தது. பின்னர் தீவிர போராளிகளை தனியேயேயும் நடுத்தர தீவிர போராளிகளை தனியேயும்.. சாதாரண போராளிகளை தனியேயும் வகைப்படுத்திப் பிரித்தது... சித்திரவதை செய்தது. அடைத்து வைத்தது.

மக்களில் தீவிர ஆதரவாளர்கள்.. நடுத்தர ஆதரவாளர்கள்.. ஆதரவாளர்கள் இவர்களையும் அடைத்து வைத்துள்ளது. மேலோட்ட ஆதரவாளர்களை.. அங்கவீனமுற்ற போராளிகளை இயன்ற வரை விடுதலை செய்துள்ளது. குடும்பத்தினராக உள்ள போராளிகளும் அவர்களின் தீவிர செயற்பாட்டடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிப் போரின் போது சரணடைதல் பற்றி கூச்சல் போட்டவர்கள்.. இந்தப் போராளிகளின் சரணடைவின் பின்னர் மெளனமே காத்தனர். அவர்களை படுகொலை செய்யவும் சித்திரவதை செய்யவும் காரணமாக இருந்தனர்.

இன்றைய சூழலில் இந்த நம்பிக்கைத் துரோகங்களில் இருந்து இந்தப் போராளிகள் வெளிவந்து.. விடுதலை பெற்று.. தாமே தமக்கென்று வாழ்வை தீர்மானிக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது.

அந்த இடத்தில் சிறீலங்கா மாதா நமோ நமோ என்றால் தான் விடுதலை கிடைக்கும் என்றால் அதனை அவர்கள் செய்தாகத்தான் வேண்டும். அது தவிர்க்க முடியாதது. எதிரியின் எல்லைக்குள் நின்று அவனின் ஆயுதங்களுக்குள் நின்று வீரம் பேச முடியாது.

புலம்பெயர்ந்த மக்கள் எத்தனையோ பொய்களை காட்டிக் கொடுப்புக்களை செய்துதான் அசைல வாழ்வின் சுகத்தை அனுபவிக்கின்றனர். அவர்களே அப்படிச் செய்துள்ள போது எதிரியின் பிடியில் இருந்தும் சாவில் இருந்தும் பொய் சொல்லியாவது தப்ப நினைப்பது தவறு அல்ல. இது தப்பி தமது வாழ்க்கையை நிர்ணயப்பதற்கான போராட்டம் என்றே கொள்ள வேண்டும்.

நீங்கள் துரோகத்தனத்திற்கும்.. இதற்கும் வேறுபாடு அறியாதவராக இருக்கிறீர்கள். துரோகத்தனம் என்பது தனக்கு சாதகமான களத்தில் இருந்து கொண்டும்.. தனது கொள்கை இலட்சியத்தை காட்டிக் கொடுத்து பிழைப்பதுதான் துரோகம். இவர்கள் அப்படியல்ல. தமக்கு சாதகமற்ற களத்தில் தமது இலட்சியத்தை மறைத்து.. தம்மை காத்துக் கொள்ள நடத்தும் வாழ்க்கைக்கான போராட்டமே இது. அதனை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்றால்.. இவ்வாறான அநாவசிய கருத்துப் பகிர்வுகளை தவிர்த்திருப்பீர்கள்.

உங்களுக்கு தெரியுமா.. தெரியா.. ரொனி என்ற போராளி.. இந்தியப் படைகளின் உளவாளியாகவே காட்டுக்குள் நுழைந்து பின்னர் இந்தியப் படைகளுக்கு எதிராக ரொனி மிதிவெடிகளை ஆக்கி.. இந்தியப் படைகளின் பல ஊடுருவல்களுக்கு சவாலாக இருந்தவன். இவர்கள் எதிர்காலத்தில் ரொனி போல் வரவேண்டாம். சாதாரண மக்களாக அவர்கள் அவர்களின் வாழ்வை வாழட்டும் என்பதே மக்களின் பெருவிருப்பம்.

அவர்கள் பட்ட துன்பம் போது. இவ்வளவு காலமும் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவர்கள்.. எனி போராட்டத்தை முன்னெடுக்கட்டும்.

நாடு கடந்த அரசு கூட இன்று மெளனித்துக்கிடக்கிறது என்றால்.. அதற்கும் இந்தப் போராளிகளின் விடுதலை வாழ்வு பற்றிய கரிசணைதான் முக்கிய காரணம் எனலாம்.

தமிழீழம்.. கிடைக்குதோ இல்லையோ.. ஆனால் இந்தப் போராளிகளின் அவர்களை அங்கீகரித்து நின்ற மக்களின் விடுதலை என்பது முக்கியமானது.. அவசியமானது. அது தமிழீழத்தை விட முக்கியமான ஒன்று.

எனக்கு இதை வாசிக்க வியப்பாய் இருக்கிறது...புலிகள் சரணடையப் போகிறார்கள் புலிகளின் வரலாற்றில் சரணடையும் பழக்கம் இல்லை...தலைவர் போராளிகளை சரணடைய சொல்லி இருக்க மாட்டார்.. என்டு தானே எழுதிப் போட்டு இண்டைக்கு இப்படி எழுதுகிறார்...பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்தால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் கைதிகளாக இருக்கின்றவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாய்த்தான் பேச முடியும்.அப்படிச் செய்யாவிட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.அவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதை யாரும் கண்டு கொள்ளப் போவதுமில்லை. ஆனால் சரணடைந்தவர்களையே சுட்டுத் தள்ளிய சிறிலங்கா கைது செய்து கடத்திச் செல்லப்பட்ட? கே .பீ க்கு ராஜமரியாதை?கொடுக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் அவரிடமும் அவரைச்சார்ந்தவர்களிடமும் உள்ளதாகச் சொல்லப்படும் நிதியைக் கையகப்படுத்தவும்தானே ஒழிய வேறுகாரணங்களுக்காக அல்ல.ஏனெனில் சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை நடேசன் புலித்தேவன் ஆகியோரை விட கேபீயே மிகவும் ஆபத்தானவரும் சிறிலங்கா அரசிற்கெதிரான பெரும் குற்றங்களையும் செய்தவராவார்.சர்வதேசப் பொலிசாரால் தேடப்பட்ட ஒருவருக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுப்பது பல கேள்விகளை உள்ளடக்குகிறது.எதுவாயினும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளிக்க முடிந்தால் அது மகிழ்ச்சி தரக்கூடியதே. ஆனால் இப்படிச் சில காட்சிகளைக் காட்டி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கிறோம் என்ற போர்வையில் புலம்பெயர்ந்தவர்களிடம் நிதிசேகரிக்கவும் .அப்படிச் சேகரிக்கப்படும் நிதியை அப்படியே விழுங்கி ஏப்பம் விடவும் சிறிலங்கா அரசு திட்டமிடுகிறது.கைது செய்யப்பட்டவர்களுக்கும் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கும் புனர்வாழ்வளிக்கும் பொறுப்பு சிறிலங்கா அரசினதும் அதற்கு முண்டு கொடுத்த நாடுகளதும் ஆகும.;.எமது உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் எமது உறவுகளுக்கு நேரடியாகவே உதவிசெய்ய வேண்டும்.மக்களையும் போராளிகளையும் வெளியே விட்டால் அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கான உதவிகளை புலம் பெயர்ந்த உறவுகள் நேரடியாகவே செய்யலாம் அதனை முதலில் சிறிலங்கா அரசைச் செய்வதற்கு கேபீ போன்றவர்களும் இங்கிருந்து சென்றவர்களும் முயன்றால் வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடக்குமா?ஆதுதான் அவர்களின் உண்மையான நோகககமா? அதற்கு அவர்களுக்கு ஆற்றல் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ போங்கள்

ஏதேதோ எழுதுகிறீர்கள்

சாந்தன் அண்ணையை பிரான்சிலும் சந்தித்தவன் என்ற முறையில்..

அவர் நினைத்திருந்தால் அப்போதே இங்கு நின்றிருக்கலாம்

அந்த அளவுக்கு உறவினர் உண்டு இங்கு அவருக்கு...

ஆனால் அவரை இந்த நிலையில் பார்த்ததும்

எனது சொந்த சகோதரன்

கூனிகுறுகி நிற்பதைப்போன்ற உணர்வில்

சம்மட்டியால் தலையில் அடித்தது போலிருந்தது எனக்கு..

ஏனெனில் அவருடைய இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை வாசிக்க வியப்பாய் இருக்கிறது...புலிகள் சரணடையப் போகிறார்கள் புலிகளின் வரலாற்றில் சரணடையும் பழக்கம் இல்லை...தலைவர் போராளிகளை சரணடைய சொல்லி இருக்க மாட்டார்.. என்டு தானே எழுதிப் போட்டு இண்டைக்கு இப்படி எழுதுகிறார்...பழைய பதிவுகளை புரட்டிப் பார்த்தால் தெரியும்.

சரணடைதல் விடுதலைப்புலிகள் அமைப்பில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கொள்கை. அதற்காகவே அவர்கள் சயனைட் காவித் திரிந்தனர் என்பதும் யாவரும் அறிந்ததே..!

முள்ளிவாய்க்கால் நிகழ்வென்பது இயக்கத்தின் கொள்கைக்கு அப்பால் மக்களின் வாழ்வுக்கு போராளிகளின் வாழ்வுக்கு என்றானதாகவே எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் விளங்கிக் கொள்வதில் சிரமம் இருந்தது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் நிலவரம் குறித்த செய்திகள் வெளி உலகிற்கு தெரியவில்லை சரிவர.

இன்றைய நிலையில் முள்ளிவாய்க்கால் நிலவரங்களை ஓரளவுக்கு திடமாக கணிக்க முடிகிறது. அந்த நிலையில் கருத்துக்களில் மாற்றங்கள் இருக்கின்றனவே தவிர விடுதலைப்புலிகள் கொள்கை அளவில் சரணடைதல்களை ஊக்குவிக்கவில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முள்ளிவாய்க்காலில் அந்தக் கொள்கையில் தளர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது தீவிர சூழ்நிலை கருதி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அபூர்வமான முடிவும் கூட...!

Edited by nedukkalapoovan

எமது உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் எமது உறவுகளுக்கு நேரடியாகவே உதவிசெய்ய வேண்டும்.மக்களையும் போராளிகளையும் வெளியே விட்டால் அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கான உதவிகளை புலம் பெயர்ந்த உறவுகள் நேரடியாகவே செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் நானும்அறிந்தேன்

இவ்வளவு போராளிகளையும் இழந்து சமர் செய்தாலும்

தமிழருக்கான உரிமைப்போராட்டத்தில் எதுவித மாறுதலையும்கொண்டுவரும் சூழ்நிலை என்று கருதும் நிலை வந்ததால்...

தப்பும் உயிர்கள் தப்பட்டும் என்றநிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக....

name='வெடியன்'

.. எஙேயோ கேட்ட குரல்! .... ஏதோ தன் வாயாலை தன்னைக் காட்டிக் கொடுக்குமாம் :wub:

பொறுங்கோ பொறுங்கோ தலைவர் வெளியில் வரட்டும் 5 ம் கட்ட ஈழப்போர் தொடங்கட்டும் அதுக்கு பிறகு இருக்கு கே பி.. சாந்தன் எல்லாருக்கும் இருக்கு :wub:

பட்டங்கள் கட்டித் திரியும் போக்கிரிகள் யார் என்பது விண்ணப்பம் செய்தவர்களைப் பார்த்தால் தெரியுது.

பல ஆரோக்கியமான கருத்துக்கள். அதற்கு நன்றி.

வாழ்க்கையை மாத்திரமல்ல உயிரை கும்பங்களையே அர்பணித்து போராட்டத்தினை நடத்தியவர்கள் அதன் வெற்றி ஒன்றையே எதிர்பார்த்தார்கள் அதற்காகவே சிந்தித்தார்கள் செயற்பட்டார்கள்.

அந்த வெற்றி கிடைக்காது ஒரு அவலமான முடிவு வரும் என்று ஒருநாளும் எதிர்பார்க்கவும் இல்லை அதற்கு தயார்படுத்தவும் இல்லை. அதை உணர்ந்து கொண்ட பொழுது எல்லா வழிகளிலும் காலம் கடந்து விட்டது.

இருந்தும் இழப்புகளை குறைக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இப்படி சூழ்நிலையில் மற்றவர்கள் மோசமாக செயற்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு பல வரலாற்று உதாரணங்கள் இருக்கிறது.

தாயகத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை போராட்டம் முடிந்து விட்டது. முக்கியமாக இறுதிவரை வன்னியில் இருந்தவர்கள். அவர்கள் தமது அதி உச்ச பங்களிப்பை செய்துவிட்டார்கள். இனி அவர்களது வாழ்வு சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலோடு முரண்படாது இருப்பதன் மூலம் தான் முடியும். அதை செய்வது தான் சரியும் அவர்களிற்கு இருக்கும் ஒரே தெரிவும் அது தான்.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகளும் நடேசன் புலிதேவன் போன்றவர்களின் சரணடைதலும் இதைத்தான் சொல்கிறது. 3 ஆம் தரப்பு மத்தியஸ்தத்தை விரும்பினாலும் அதற்கு இடம் கொடுக்கது சிறீலங்கா இராணுவத்திடமே சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டதன் மூலமே இது தெளிவு படுத்தப்பட்டுவிட்டது. நாம் விரும்பாவிட்டாலும் இது தான் யதார்த்தம்.

புலம்பெயர்ந்தவர்கள் எந்தளவிற்கு "போராட்டம்" "தமிழீழம்" என்று சிறீலங்காவிற்கும் அதன் அரசிற்கும் எதிராக சலசலப்புகளை உருவாக்குகிறார்களோ அந்தளவிற்கு எதிர்வினையாக சிறீலங்கா தாயகத்தில் உள்ள மக்களையும் முன்னால் போராளிகளையும் வைத்து ஏதாவது செய்துகாட்டும். "போராட்டம்" என்றது கடந்த 20...30 வருடங்களாக புலம்பெயர்ந்தவர்களின் எமது வாழ்ககை முறைக்குள் வந்து விட்டது. அதை திடீர் என்று விட்டு விட முடியாது 05-2009 பின்னர். இந்த "போராட்டம்" என்ற சூழல் தான் பலரிற்கு ஒரு அடையாளத்தை கொடுக்கிறது. சிலரிற்கு அது தான் இன்று வாழ்வாதாரமும். 05-2009 பின்னர் யதார்த்தத்தை ஏற்று இயல்பு வாழ்கைக்கு வருவது கடினம். இதற்கு தான் சிறீலங்கா அரசு புனர்வாழ்வு என்று ஒன்றை செய்து பின்னர் அங்குள்ளவர்களை விடுவிக்கிறது. புலம்பெயர்ந்த பூசாரிகளிற்கும் இந்த புனர்வாழ்வு தேவை. அதுவரை விசித்திரமான ஒரு reality show அய் கண்டுகளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ். அடிக்கடி வராவிட்டாலும், இடைக்கிடை வந்து புலம்பெயர் பூசாரிகளினதும் பக்தர்களினதும் புனர்வாழ்வுக்கு உதவுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.