Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட்டின் எதிர்காலம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பரிமாணம்

கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.

காயம்காரணம்

கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமேவீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.

பணம் முக்கியம்

இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.

நன்மை உண்டு

ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம்

பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=1&Value2=3172&Value3=I

குறுகிய பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட போட்டிகள் நல்லது என்று நான் நினைக்கின்றேன் பையா. குறிப்பாக ஒருசில துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் நீக்கப்படுவதற்கும், பலநூறு புதிய வீரர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் இது உபயோகமாகக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கட்டும் ஏனைய விளையாட்டுக்கள்(ex:superbowl) போல வியாபாரமயமாக்கப்பட்டு முடிவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்படும் நிலையை நோக்கி செல்கிறது.ஒரு சூதாட்டமாக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட போட்டிகள் நல்லது என்று நான் நினைக்கின்றேன் பையா. குறிப்பாக ஒருசில துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் நீக்கப்படுவதற்கும், பலநூறு புதிய வீரர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் இது உபயோகமாகக்கூடும்.

உள்ளத சொல்ல போனா மச்சான் 20/20 கிரிக்கெட் அப்ப வந்து இருக்கனும் இப்ப கிரிக்கட் விளையாட்டு இன்னும் பெமஸ் ஆக்கி இருக்கும் என்று நினைக்கிறன்..europaவில அப்ப கிரிக்கெட் பெமஸ் ஆகாததுக்கு காரனம் உந்த டெட்ஸ் விளையாட்டுத் தான்.. யாராவது 5 நாள் இருந்து ஒரு விளையாட்டை பார்ப்பாங்களா இல்லை என்ன 20/20 என்ரா 4 மனித்தியாலத்தில் முடிவு தெரியும் நான் கூட டெட்ஸ் விளையாட்டை அதிகம் பார்ப்பது இல்லை மச்சான் ஸ்கோர் மட்டும் பார்ப்பேன். 20/20 என்ரா எல்லா விளையாட்டும் பார்ப்பேன்..கொஞ்ச காலம் கழிச்சு பாருங்கோ மச்சான் கிரிக்கெட் விளையாட்டில 20 ஓவர் விளையாட்டுத் தான் நிலைச்சு நிக்கும்..இப்ப கூட ஆக்கள் அதை தான் பார்க்கினம்..ஜபியல் விளையாட்டுக்கு உலக்க மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு.. இங்கை இருக்கிற அக்கா மார் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுது என்ரா கானும் அந்த மாரி பாப்பினம் விளையாட்டை :):D:D

நான் யாழ்ப்பாணத்தில இருந்த காலத்தில் யாழ் இந்துக்கல்லூரி மைதானத்திலும், ஏனைய சில இடங்களிலும் ஆறு, இரண்டு பந்துபரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டிகள் வைப்பார்கள் பையா. அது ஓர் வித்தியாசமான அனுபவம். குறுகிய பந்துபரிமாற்றங்களை கொண்ட போட்டிகள் காரணமாக பலவித மாற்றங்கள் வரலாம். ஒரு காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் இல்லாமலே போகலாம்.

இன்றைக்கு One day International - நியூசிலாந்து அணி இந்திய அணியை 200 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது. ஸ்கோர் பார்க்க இல்லையோ?

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்தில இருந்த காலத்தில் யாழ் இந்துக்கல்லூரி மைதானத்திலும், ஏனைய சில இடங்களிலும் ஆறு, இரண்டு பந்துபரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டிகள் வைப்பார்கள் பையா. அது ஓர் வித்தியாசமான அனுபவம். குறுகிய பந்துபரிமாற்றங்களை கொண்ட போட்டிகள் காரணமாக பலவித மாற்றங்கள் வரலாம். ஒரு காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் இல்லாமலே போகலாம்.

இன்றைக்கு One day International - நியூசிலாந்து அணி இந்திய அணியை 200 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது. ஸ்கோர் பார்க்க இல்லையோ?

டெஸ்ட் விளையாட்டு பார்த்தா நித்தா தான் வரும் ஹிஹிஹி :huh:

ஒம் மச்சான் நான் இண்டைக்கு நடந்த ஒரு நாள் விளையாட்டை பார்த்தேன் www.bet365.com இதிலை நேரடி ஒளிபரப்பு பன்னினவை . ஒரு தடங்களும் இல்லாமல் பாத்தேன் விளையாட்டை..இந்தியா இப்படி தோல்வி அடையும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை..இந்தியாட தொடக்கம் சரி இல்லை என்று தான் சொல்ல வேனும்..நியுசிலாதின் வேக்க பந்தில இந்தியா சுருன்டு போச்சு :o:wub:

  • 2 months later...

பையா இன்று பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. ஓட்டவிபரம் பார்த்தீர்களோ? Razzaq செஞ்சுரி 10 ஆறுகள் அடங்கலாக. நான் இடையிடையே cricinfoஇல் ஓட்டவிபரம் பார்த்தேன். Razzaq அபாரஆட்டம். தோற்கவேண்டிய போட்டி Razzaqமூலம் வெற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட எல்லேயும் இதுபோல சுவாரிசியமானதுதான்..ஏனோ பெரிதாக விளையாடப்படுவதில்லை..அது இங்குள்ள பேஸ்பால் க்கு ஒப்பானது.. பேஸ் பால் பற்றி தெரிந்தவர்கள் சிறிது எழுதினால் நல்லம் எப்படி ஸ்கோர் பண்ணுவது..

கிரிகெட் பற்றி முந்தி பெரிய விவாதம் நடந்து ( இந்திய - பாகிஸ்தான் சண்டை போல) பால் போடுவதா பேட் பண்ணுவதா என்று..அது பல விடயங்களில் தங்கியிள்ளது. ஒன்று நடக்கிற மேட்ச் டெஸ்ட் ஆ ODI (ஒருவர் 10 ஓவர் தான் போடமுடியும் ) , நடக்கிற இடம், (பிட்ச்) , அன்றைய வானிலை, மற்றது அப்பதோ உள்ள சட்டங்கள், இப்ப பவர் play கொண்டுவரப்பட்டது கிட்டடியில்..நான் நினைக்கிறன் 85 -90 அப்படியான சட்டங்களை உருவாக்குவதில் பணம் நிறைய விளையாடும்..

மற்றது..இங்கே வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் கிரிக்கெட் செத்ததிர்ற்கு காரணம் (அவர்களில் நல்ல பல்லேர்ஸ் இருந்தார்கள்,) அமெரிக்காவில் உள்ள பாஸ்கட் பால்,.ஆனால் அமெரிக்காவில் கிரிகெட் வருமானால் முதலில் இலாபம்/ அல்லது நல்ல டீம் வருவது வேஸ்ட் இண்டீஸ் ஆக தான் இருக்கும்.

மற்றது முத்தைய சந்ததியோடு பார்க்கையில் பட்டிங் இப்ப பாதுகாப்பானது..இலகுவானது, அதே நேரத்தில் TV அதிகளவில் உள்ளதால் ஒருவரின் தவறுகள் இலகுவாக அடையாளம் காணப்பட்டு மீண்டும் மீண்டும் அதே தவறுக்கு வழி வகுக்கப்படும்..சனத்திர்ற்கு 3 rd மான் இலும், சச்சினுக்கு ஸ்லிப் இலும்..

நான் 3 ஆம் வகுப்பில பற் தூக்கின ஆள்.இன்னமும் கிரிகெட் தான் வாழ்க்கை .அது 5 நாளோ 50 ஓவரோ 20 20 ஓ எனக்கு பிரச்சனையில்லை.லண்டனில் பியருடன் டெஸ்ட் மட்ச் பின்னர் கரேபியனில் ரம்முடன் 50 ஓவேர்ஸ் இந்தியாவில் சேப்பாக்கில் 20 20 .

அடுத்த உலக கோப்பைக்கு இப்பயே நண்பர்கள் புக் பண்ணிவிட்டார்கள் நான் கடைசி நிமிட ஆள் இப்பவும் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

மல்கம் மார்ஸ் பந்து போடும் போது பந்து தெரியாது ஆனால் கூச் ஓfபில நான்கு அடிப்பார் அதுதான் கிரிக்கெட்.நானும் கொஞ்சம் அப்படித்தான்.அப்ரிடி அடிப்பது மாதிரி முதல் மூன்றுபோலும் சிக்ஸர் அடிக்க சிங்களவன் பந்தை எறிந்துவிட்டு போய்விட்டான் வயிட்டாக.

எல்லே அல்லது பேஸ்போல் - இதை அறிமுகமாக்கி மற்றும் ஊக்கிவிப்பது நல்லம். இந்த போட்டி ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • சராசரியாக மூன்று மணித்தியாலங்கள் எடுக்கும் ஒரு ஆட்டத்துக்கு
  • விறுவிறுப்பனதும் வேகமானதுமான விளையாட்டு
  • இங்கு உள்ள அணிகளுக்கு விளையாடும்பொழுது கோடிகணக்கில் சம்பாதிக்கலாம்.

வட அமெரிக்காவில் விளையாடப்படும் மூன்று பெரிய விளையாட்டுகளில் ஒன்று.

ஆசியாவில் ஜப்பான், தென் கொரிய போன்ற நாடுகள் சிறப்பாக ஆடுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒம் மச்சான் நான் நேற்று விளையாட்டை பார்த்தன் ராசாத்தின்ட மட்டை அடி அந்த மாரி...!! பாக்கிஸ்த்தான் வீரர்களின்ட விளையாட்டு கொஞ்ச நாளா நல்லாவே இல்லை..ரசாத்தின்ட மட்டை அடியால நேற்று அவைக்கு வெற்றி இல்லாட்டி அதுவும் தோல்வி தான்...!!

இப்ப கிரிக்கேட்டில நல்ல ஸ்ரோங்க்கான ரீம் என்ரா இந்தியா சிறிலங்கா சவுத்ஆபிரிக்கா தான் மச்சான் ...

2011 உலக கோப்பை சிமி பினலுக்கு இந்த 3ரீம்மும் கட்டாயம் போக்கும் பாருங்கோ...!!

பையா, எதிர்வரும் உலககோப்பையில் தென் ஆபிரிக்கா அம்லாவும் ஒரு கை பார்ப்பார் போல் உள்ளது. இன்றும் ஓர் செஞ்சுரி. அவரின் ஆட்டவிபரத்தை பாருங்கள்:

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St

ODIs 35 34 4 1834 140 61.13 1982 92.53 6 9 180 10 16 0

ஒருநாள் ஆட்ட சராசரி 61.13

116147.1.jpg

தகவல் மூலம்: Hashim Amla

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா, எதிர்வரும் உலககோப்பையில் தென் ஆபிரிக்கா அம்லாவும் ஒரு கை பார்ப்பார் போல் உள்ளது. இன்றும் ஓர் செஞ்சுரி. அவரின் ஆட்டவிபரத்தை பாருங்கள்:

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St

ODIs 35 34 4 1834 140 61.13 1982 92.53 6 9 180 10 16 0

ஒருநாள் ஆட்ட சராசரி 61.13

116147.1.jpg

தகவல் மூலம்: Hashim Amla

ஒம் மச்சான் நான் விளையாட்டை பார்த்தன் நேற்று

அமலா நல்ல ஒரு வஸ்மன் தான் மச்சான்.. நிதானமாய் ஆடவும் தெரியும் அதிரடியா ஆடவும் தெரியும் அமாலுக்கு...! :):D

இன்று நடந்த சிறிலங்கா அவுஸ்ரேலியா விளையாட்டை பார்த்திங்களா மச்சான் என்னால நம்ப முடிய வில்லை இன்று நடந்த விளையாட்டை :lol:

ஆம் ஓட்டவிபரம் பார்த்தேன் பையா. இலங்கை அணிக்கு அதிசயமான ஓர் வெற்றி. மலிங்கவும், மத்தியூசும் ஒன்பதாம் விக்கெற் சோடியில் சாதனை 130 சொச்சம் ஓட்டங்கள் என்று நினைக்கின்றேன். இந்த சாதனை 1983ம் ஆண்டு கபில்தேவும், சர்வாணி(?) ஒன்பதாம் விக்கெற் சோடி ஏற்படுத்திய ஓட்ட எண்ணிக்கையான 120 சொச்சத்தை முறியடித்துள்ளது. குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் கபில்தேவ் 175 ஓட்டங்கள் பெற்றார் என்று கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியா அணியின் ஆட்டங்களில் அண்மைக்காலத்தில் சோர்வு காணப்படுகின்றது. வருகின்ற உலககோப்பையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிவரை செல்லாவிட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்போது பொண்டிங்கும் விளையாடுவது குறைவு போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஓட்டவிபரம் பார்த்தேன் பையா. இலங்கை அணிக்கு அதிசயமான ஓர் வெற்றி. மலிங்கவும், மத்தியூசும் ஒன்பதாம் விக்கெற் சோடியில் சாதனை 130 சொச்சம் ஓட்டங்கள் என்று நினைக்கின்றேன். இந்த சாதனை 1983ம் ஆண்டு கபில்தேவும், சர்வாணி(?) ஒன்பதாம் விக்கெற் சோடி ஏற்படுத்திய ஓட்ட எண்ணிக்கையான 120 சொச்சத்தை முறியடித்துள்ளது. குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் கபில்தேவ் 175 ஓட்டங்கள் பெற்றார் என்று கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியா அணியின் ஆட்டங்களில் அண்மைக்காலத்தில் சோர்வு காணப்படுகின்றது. வருகின்ற உலககோப்பையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிவரை செல்லாவிட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்போது பொண்டிங்கும் விளையாடுவது குறைவு போல.

எத்தனையோ கிரிக்கெட் பார்த்து இருக்கிறன் மச்சான் , ஆனால் நேற்றையான் விளையாட்டை மாரி முந்தி ஒருக்காலும் பார்த்தது இல்லை... :lol:

அவுஸ்ரேலியா நல்ல ரீம்மா தான் இருந்தது.. கில்லி சைமன்ஸ் ஹேய்டன் மாட்டின் மக்கிரத் அவங்க எல்லாரும் ஓய்வு எடுக்க.. அவுஸ்ரேலியா ரீம்மின் வீழ்ச்சி அப்ப்டியே தெரிஞ்சது...!

2011 உலக்க கோப்பையை இந்தியா இல்லாட்டி சிறிங்கா தான் தூக்கும் போல தெரியுது :D

யாழிழ் இருக்கிற மானிக்கங்களுக்கு அந்த இரண்டு ரீம்மையும் பெரிசா பிடிக்காது , பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னை துரோகி என சொன்னாலும் எனக்கு கவலை இல்லை இலங்கை வர வேண்டும் அல்லது இங்கிலாந்து :D

  • கருத்துக்கள உறவுகள்

------

யாழிழ் இருக்கிற மானிக்கங்களுக்கு அந்த இரண்டு ரீம்மையும் பெரிசா பிடிக்காது , பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று :lol::lol:

யார் பையா... அந்த மானிக்கங்கள். :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னை துரோகி என சொன்னாலும் எனக்கு கவலை இல்லை இலங்கை வர வேண்டும் அல்லது இங்கிலாந்து :rolleyes:

இது உங்கட பகல் கனவாய் தான் இருக்கும் ரதி அக்கா..! இங்கிலாந்து கோப்பை தூக்கிரது :wub::lol:

யார் பையா... அந்த மானிக்கங்கள். :lol::wub:

சிறி அண்ணா அது ஒரு லிஸ்ட் போட்டு சொல்லலாம்

  • 2 weeks later...

நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்பஜன் மிக நன்றாக விளையாடுகின்றார். பந்துவீச்சில் மட்டுமன்றி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 8வது இலக்க வீரராக சென்று பல ஆறுகள் அடங்கிய இரண்டு செஞ்சுரிகள் அடித்துள்ளார். ஆட்டவிபரம் பார்த்தீர்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்பஜன் மிக நன்றாக விளையாடுகின்றார். பந்துவீச்சில் மட்டுமன்றி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 8வது இலக்க வீரராக சென்று பல ஆறுகள் அடங்கிய இரண்டு செஞ்சுரிகள் அடித்துள்ளார். ஆட்டவிபரம் பார்த்தீர்களோ?

ஒம் மச்சான் ஸ்கோர் பார்ர்த்தன் இப்ப... போன கிழமை ஒரு 100 இந்த முறை ஒரு 100 கர்பாயன் நல்லா மட்டையால அடிச்சு இருக்கிறான் அவன்ட பழைய எதிரி கூட செர்ந்து... :unsure:

  • 2 weeks later...

அவுஸ்திரேலியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடக்கின்றது. ஓட்டவிபரம் பார்த்தீர்களோ? இரண்டாவது இனிங்சிஸ் இங்கிலாந்து முதல் மூன்று வீரர்களும் செஞ்சுரி போட்டுள்ளார்கள். 501/1 சொச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடக்கின்றது. ஓட்டவிபரம் பார்த்தீர்களோ? இரண்டாவது இனிங்சிஸ் இங்கிலாந்து முதல் மூன்று வீரர்களும் செஞ்சுரி போட்டுள்ளார்கள். 501/1 சொச்சம்.

முதல் இனிங்சில் அவுஸ்ரேலியான்ட பந்து வீச்சு நல்லா இருந்திச்சு , இரன்டாவது இனிங்சில் பந்து வீச்சு துப்பரவா நல்லாவே இல்லை...!! விளையாட்டு டிராவில முடிஞ்சு இருக்கு...மைக்கில் கிலாக்ன்ட் விளையாட்டு மறு படியும் மந்தம் :D

டெஸ்ட் துடுப்பாட்டத்தில் தற்போதுள்ள முதல்தர வீர்ர்களின் பட்டியல் இன்று வந்துள்ளது பார்த்தீர்களோ? மட்டையடியில் சச்சின் இரண்டாம் இடம். முதலிடம் இலங்கை அணித்தலைவர் சங்கவிற்கு. இலங்கை அணி மகேல, சமரவீர மட்டையடியில் முதல் பத்தில் நிற்கின்றார்கள். ஹர்பஜனை பந்துவீச்சில் முதல் பத்தில் காணவில்லை. சகலதுறையில் கூட முதல் பத்தில் இல்லை, ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

20 க்கு 20 போட்டியினால் டெஸ்ட் போட்டியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்று இந்திய ஊடகத்தில் வந்த செய்தியை கரும்பு இணைத்திருக்கிறார். இந்தியாவைப் பொருத்தமட்டில் உண்மை. ஆனால் அவுஸ்திரெலியாவில் அண்மையில் சிறிலங்காவுக்கு எதிராக அவுஸ்திரெலியா 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20 - 20 போட்டிகள் நடைபெற்றது. இந்த 4 போட்டிகளிலும் வந்த பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இங்கிலாந்து அவுஸ்திரெலியாவுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தைப் பார்க்கவந்த இரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அவுஸ்திரெலியாவில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இலங்கை, இந்தியாவில் பல டெஸ்ட் போட்டிகள் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நடைபெறாமால் இருப்பதும் இரசிகர்கள் கலந்து கொள்வது குறைவு. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களதேஸ் போன்ற நாடுகளில் தங்களது அணி வெல்லும் போது மட்டும் பார்க்கிறார்கள். தோற்கும் சந்தர்பங்களில் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் அவுஸ்திரெலியா, இங்கிலாந்தில் தங்களது அணி தோற்கும் போது மைதானத்தை விட்டு வெளியேறாது போட்டிகளைப் பார்த்து இரசிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தபுன்ட ரீம் இப்படி அடி வேன்டுது,,,தோல்விய நோக்கி அவுஸ்ரேலியா

என்னால முடியல அப்படி இருந்த அவுஸ்ரேலியா ரீம்மா இப்படி .

அவுஸ்ரேலியாக்கு எல்லா பக்கமும் அடி விழுது, போன மாசம் சொறிலங்கன் போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி போட்டு போய்யிட்டாங்கள் அதுக்கு முதல் மாசம் இந்தியனிட்டை அடி வேண்டினவை , இப்ப இங்கிலாந்திட்டை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.