Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)

Featured Replies

இந்தக் குற்றச்சாட்டு எப்படியானது எனில், ஓட்டை வீழ்ந்து கப்பல் முக்கால்வாசி மூழ்கிக்கொண்டிருக்கும் போது அந்தக்கப்பலை காப்பாற்றுமாறு சிறப்பு தொழில்நுட்பவியலாளரை நியமித்தது போன்றதாகும்.

சரியாகச் சொல்வதனால் யாவும் காலதாமதமாகிவிட்டது.

2002 ம் ஆண்டு தன்னை புலிகள் விலக்கி விட்டார்கள் எண்று KP யே சொல்லி இருக்கிறார்... சில பெண்கள் அழுதவாறு தன் மீதும் இன்னும் சிலர் மீதும் குற்றம் சாட்டியதாகவும் சொல்லி இருக்கிறார்... அதே காலப்பகுதியில் தலைவர் அவரை வன்னிக்கு அழைத்த போது போகாமல் போக்கு காட்டினார்... அதன் பின்னர் அவரை ஓய்வு பெறுமாறு தலைவர் பணித்து இருக்கிறார்... இப்படி நாங்கள் யாரும் சொல்ல வில்லை இதை KP யே சொல்லியவை...

அப்படியான KP யை எப்படி தலைவர் அடுத்த தலைமையாக தெரிவு செய்வார்....?? எந்த நம்பிக்கையில்...?? தன் மீதான விசாரணைக்கு ஒத்துளைக்காமை தான் அடுத்த தலைமை எண்று உங்களால் சொல்லப்படுவபவரின் சிறப்பு குணாதிசயமா...??

KP யிடம் காப்பாத்தும் பொறுப்பை தலைவர் கூப்பிட்டு கொடுத்ததாக சொல்லி இருக்கிறீர்களே உண்மையா...?? இல்லை இந்தியா என்னை பேச அழைக்கிறது அனுமதி தாருங்கள் எண்று கேட்டு வாங்கினாரா KP...?? எது உண்மையாக இருக்கும்...??

Edited by தயா

  • Replies 106
  • Views 8.7k
  • Created
  • Last Reply

2002 ம் ஆண்டு தன்னை புலிகள் விலக்கி விட்டார்கள் எண்று KP யே சொல்லி இருக்கிறார்... சில பெண்கள் அழுதவாறு தன் மீதும் இன்னும் சிலர் மீதும் குற்றம் சாட்டியதாகவும் சொல்லி இருக்கிறார்... அதே காலப்பகுதியில் தலைவர் அவரை வன்னிக்கு அழைத்த போது போகாமல் போக்கு காட்டினார்... அதன் பின்னர் அவரை ஓய்வு பெறுமாறு தலைவர் பணித்து இருக்கிறார்... இப்படி நாங்கள் யாரும் சொல்ல வில்லை இதை KP யே சொல்லியவை...

அப்படியான KP யை எப்படி தலைவர் அடுத்த தலைமையாக தெரிவு செய்வார்....?? எந்த நம்பிக்கையில்...?? தன் மீதான விசாரணைக்கு ஒத்துளைக்காமை தான் அடுத்த தலைமை எண்று உங்களால் சொல்லப்படுவபவரின் சிறப்பு குணாதிசயமா...??

KP யிடம் காப்பாத்தும் பொறுப்பை தலைவர் கூப்பிட்டு கொடுத்ததாக சொல்லி இருக்கிறீர்களே உண்மையா...?? இல்லை இந்தியா என்னை பேச அழைக்கிறது அனுமதி தாருங்கள் எண்று கேட்டு வாங்கினாரா KP...?? எது உண்மையாக இருக்கும்...??

அப்போ கரிநாகம் கருணா தலைவரிடம் நான் அமெரிககாவுடன் பேசுறேன் என்று சொன்னால் தலைவர் தூக்கி கொடுத்து இருப்பாரோ?

நான் நினைக்றேன் நடேசன் அண்ணா தலைவருக்கு தெரியாம கேபீயை பொறுப்பில் போட்டு இருபாரா? சரி கேபீ விடுங்கோ தலைவரையும் விட்ங்கோ பொட்டு அம்மாணையும் விடுங்கோ யார்ப்பா புலிகளின் உண்மையான பிரதிநிதி?

மக்களின் பிரதிநிதி யார் என்று தேர்தல் முலம் மக்கள் உலகுக்கு சொன்னார்கள் இப்போ புலிகள் சொல்லவேண்டும் தங்களின் அமைப்பை நடத்துபவர் யார்?

சரி ஏன் பொட்டு அம்மானை பற்றி கேபீ ஒன்றுமே சொல்லவில்லை குறையும் இல்லை நிறையும் இல்லை பொட்டுக்கும் சமந்தமோ?
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இதுவரைக்காலமும் யுத்தத்தால் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களுக்கும் கே.பியே பொறுப்பு ‐ ஜனநாயக தேசிய முன்னணி

11 August 10 12:52 pm (BST)

இலங்கையில் இதுவரைக்காலமும் தலைவிரித்தாடிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்த யுத்தம் என்பவற்றினால் இரு தரப்பிலும் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களுக்கும் கே.பியே பொறுப்பு கூறவேண்டும் என ஜனநாயக தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது.

ஆயுதம் நிதி மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஒன்றினைத்து விடுதலைப் புலிகளைச் சக்திமிக்க அமைப்பாக மாற்றிய பெருமை கே.பியையே சேரும் என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

இலங்கையில் இதுவரைக்காலும் பல்வேறு இடங்களிலும் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களுக்கும், மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் ஒவ்வொரு தோட்டா சப்தத்திற்கும் கே.பியின் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஆகவே இவ்வாறு பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் காரணமாக இருந்து கொடிய நபரைக் கைது செய்து ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவர் மீது எதுவிதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல், சுகபோகமாகவே வாழ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கூறினார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=28323&cat=1

நெடுக்காலபோவான், உங்கள் ஆதங்கத்தினைப் படித்துப் பார்த்தேன். ஒருபக்கம் பார்த்தால் உங்கள் கருத்துச் சரியாகப் பலருக்குத் தோன்றுகின்ற அதேவேளை அதனை மறுபக்கம் ஆராய்ந்தால் யாரில் சரி-பிழை என எமக்குள் குழப்பங்கள்தான் வரும்.

இவ்வாறு எல்லாம் எழுதுவதால் நான் கே.பி.யைப் புகழ்வதாக பலரும் எண்ணுவார்கள். எனக்கு அதுபற்றியெல்லாம் கவலையில்லை.

கே.பி.யையோ அல்லது கருணாவையோ நீக்கும்போது விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இவர்களால் வரக்கூடிய பின்விளைவுகளை எதிர்பார்க்காமலா அவர்களை விலத்தியிருப்பார்? அப்படியெனில் நீங்களே விடுதலைப் புலிகளின் தலைவரின் மதிநுட்பத்தினையும் தீர்க்கதரிசனத்தையும் கேலி செய்வது போன்றல்லவா உள்ளது.

அடுத்து, கே.பி.யை மீண்டும் வெளியுறவுப் பணிகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் நியமித்த செய்தியை தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களே கொடுத்திருந்தார். நடேசன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரின் அனுமதியின்றி அந்தச் செய்தியினை கொடுத்திருக்க முடியாது.

இது தொடர்பான செய்தி, தமிழ்நெட் இணையத்தளத்தில் இருக்கும் பாருங்கள். அத்துடன், அவர்கள்தான் முதன்முதலில் அவரின் முகத்துடன் கூடிய படத்தினையும் வெளியிட்டிருந்தார்கள் என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். (தமிழர்களின் செய்திகளை வெளிக்கொணர ஒரு இணையத்தளம் தேவை என்று இணையப் புரட்சி தொடங்கிய காலத்தில் தமிழ்நெட் இணையத்தளத்தினை உருவாக்க நோர்வேயில் அடித்தளம் இட்டவர்களில் கே.பி.யும் ஒருவர் என்பதனை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்)

சூசை, பொட்டம்மான் ஆகியோர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றதாக எழுதியிருந்தீர்கள். இது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் சென்றிருந்தால் யார்தான் அவர்களை கைது செய்யமுடியும்? (இவர்கள் சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார்கள் எனில் சிங்கள அரசு எவ்வளவு நல்லவர்கள் என்பதனையும் மறைமுகமாக நீங்களே ஒப்புக்கொள்கின்ற மாதிரியல்லவா இருக்கின்றது)

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கிறார்; இல்லை என்கிற விடயம் தொடர்பான செய்திக் குழப்பத்துக்கு காரணம் தமிழ்நெட் இணையத்தளமும் நெடியவன் குழுவுமே தவிர கே.பி. அல்ல.

அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று கூறினால்தான் புலம்பெயர் மக்களிடம் செயற்பட முடியும் (அதாவது, நிதி அறவிடலாம்) என நெடியவன் குழு கூறி அப்படி நீங்கள் கூறினால்தான் உங்களின் தலைமையை ஏற்போம் என கே.பி.க்கு நெடியவன் குழு கூறியது. இந்தக் குழப்பத்தில் கே.பி.யும் எடுபட்டது என்னவோ உண்மை. ஆனால், இப்படி ஏமாற்றுவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கே.பி. பின்னர் உணர்ந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்த செய்தியை வெளியிட்டார்.

கே.பி.யின் அண்மைய காலச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர் யதார்த்த நிலைக்கு உடன்பட்டுச் செல்ல விரும்புகின்றார். இல்லாத ஒன்றை இருக்கின்றது என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் பார்க்க இருக்கின்ற ஒன்றை வைத்து செயற்படக்கூடிய தன்மையில் அவர் செல்ல விரும்புகின்றார் என்பதே அவரது செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கே.பி. பேட்டியின் ஓரிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால்- கைது செய்யப்பட்டுள்ள தான் அரசுக்கு ஒத்துழைக்காது பிடிவாதமாக இருந்திருப்பேன் எனக் கூறுகின்றார். இந்த இடத்திலேயே அந்த மனிதர் யதார்த்தத்துடன் செயற்பட விரும்புவதனைத்தான் காட்டுகின்றது.

ஒருவேளை நெடியவன் நாளை பிடிபட்டால் வீரத்துடனா செயற்படுவார்? எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து விட்டு தனது குடும்பத்தினை காப்பாற்றிக்கொள்ளத்தான் முயல்வார். அப்போது நீங்களோ நானோ அவரைக் குறை கூறமுடியாது. ஏனெனில் சூழ்நிலை அப்படியானது.

2001 ஆம் ஆண்டு காலகட்டப் பிற்பகுதிகளில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, தமிழேந்தி ஆகியோர் புலத்தில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புக்களில் தலையிடுவதற்கு பேச்சுவார்த்தைக் குழுவில் தமது உறுப்பினர்களை அனுப்பி- அதாவது, புலத்தில் உள்ள கட்டமைப்புக்களில் தமது உறுப்பினர்களை நுழைத்து புலத்தில் பல பிரிவுகளை உருவாக்கினர். (அதாவது, அவர் சு.ப.தமிழ்ச்செல்வனின் ஆள், இவர் தமிழேந்தியின் ஆள், அவர் காஸ்ட்ரோவின் ஆள் எனப் பல பிளவுகளை உருவாக்கினர்)

பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டப்பகுதியானது புலத்தில் உள்ள உண்மையான செயற்பாட்டாளர்களுக்கு தகடு வைக்கின்ற பொன்னான காலமாகவும் இருந்தது என்பதே சரியானது.

அதாவது, களத்தில் உள்ளவர்கள் புலத்தில் உள்ளவர்களை தாமே கட்டுப்படுத்தலாம் என்கிற அதீத நம்பிக்கையினால் முன்னர் கே.பி.யின் கீழ் இருந்த கட்டமைப்புக்களை குழப்புவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இல்லாத பொல்லாததுகளை கூறினர். இங்கே விடுதலைப் புலிகளின் தலைவர் அழைத்தபோது கே.பி. போகாத காரணத்தினால் அவர்மீது சந்தேகங்கங்களை உருவாக்குவதாக எழுதப்பட்டிருக்கின்றது. ஜெயசிக்குறு சமர் இடம்பெற்ற காலத்தில் தனது தகவலை தெரிவிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் தனது பிரதிநிதியாக தமிழேந்தி அவர்களை அனுப்பினாரே தவிர கே.பி.யை வருமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை.

ஒருவேளை நீங்கள் யாவரும் நினைப்பது போன்று கே.பி. அந்த நேரம் சென்று அவர் கைதாகியிருந்தால் அது ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்துக்கே ஆபத்தாக அமைந்திருக்கும். (இவ்வளவற்றையும் நாங்கள் ஆராய்வதனை விட அவர் தனது பாதுகாப்பில் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்கிற விடயத்தினையே நாங்கள் நோக்க வேண்டும்)

புலத்தில் உள்ள தமிழர்களில் யாராவது இப்போதும் ஊரில் வாழ்வது போன்று வேட்டி சாரத்துடன் வீதிகளில் திரியவில்லை. அந்த அந்த நாட்டுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். நான் இங்கே கூற வருவது யாதெனில், களத்தில் உள்ளவர்கள் புலத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்த நினைத்த செயற்பாடானது களத்தில் மக்களை நடத்திய முறை போன்றதே.

அதாவது, நிதி சேகரிப்பிலிருந்து பல விடயங்களைக் கூறலாம். இதுவே முன்னர் கே.பி.யின் கட்டமைப்பு மிகவும் திறமையாக பலரை அணுகி நிதி சேகரிப்புச் செய்ததுடன் ஆயுதங்களையும் அனுப்பியது. காஸ்ட்ரோவின் நிர்வாகம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டபோது எத்தனையோ இடங்களில் அநாகரிகமான முறையில் செயற்பட்டதோடு நிதி சேகரிப்பில் ஈடுபடுவோரை ஊக்கத்துடன் செயற்பட வைப்பதற்கு சேகரிக்கும் நிதியில் குறிப்பிட்ட வீதம் அவர்களுக்கு எனவும் கூறி அவர்களை அநாகரிகமாக செயற்பட வைத்தது.

இங்கே நான் ஒட்டுமொத்தமாக கூற வருவது இதுதான் கே.பி.யால்தான் விடுதலைப் போராட்டம் அழிந்தது என்று கூறுபவர்கள் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்களின் வகைகளில் அடங்குவார்கள்.

விடுதலைப் போராட்டம் அழிந்ததற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன.

அதில் முக்கியமானவை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னை அதிகம் புகழ்பவர்களை நம்புகின்ற அதேவேளை மற்றவர்களைப் பற்றி இவர்கள் கூறுவதனை நம்பி ஏதேச்சதிகாரமாக முடிவுகளை எடுத்திருக்கின்றார். இதில் தமிழ்ச்செல்வன் அதிக பங்காற்றியிருக்கின்றார். தமிழ்ச்செல்வன் தனது விருப்பு-வெறுப்புக்களையே விடுதலைப் புலிகளின் தலைவரிடம் திணித்து வெற்றியும் பெற்றிருக்கின்றார். ஆனால் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்திருக்கின்றது. (இறந்தவர்களை கொச்சைப்படுத்தி எழுதக்கூடாது. ஆனால், பலரும் உண்மைகளை உணராது திரிவுபடுத்தி எழுதுவதனால்தான் நான் இவ்வாறு எழுத வேண்டியிருக்கின்றது)

பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலகட்டப் பகுதியில் நான் வன்னிக்குச் சென்றிருந்தவேளை அங்கே ஒவ்வொரு பிரிவினரும் மற்றப் பிரிவினரைக் கவிழ்கின்ற சிந்தனையோடு இருந்தனரே தவிர அனைவரும் ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்துக்கு தாம் போராடுகின்ற மனநிலையில் இருந்ததாக எனக்குப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் அதிகம் நம்பியிருந்தவர்களாலேயே ஏமாற்றப்பட்டிருக்கின்றார். அவர் ஒதுக்கி வைத்தவர்களே விசுவாசத்தோடு விடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை போராடி வீரச்சாவடைந்திருக்கின்றனர்.

கே.பி.யும் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அவர்களும் எவ்வாறான நண்பர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களிடம் கேட்டால் தெரியும். ஆனால், இந்த இரண்டு பேரையும் கடைசிக்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒதுக்கி வைத்தது துரதிர்ஸ்டவசமான செயற்பாடுகளில் ஒன்றாகவே அமைந்தது.

அது சரி வழமையாக நான் கேட்கின்ற கேள்விகளை மீண்டும் கேட்கின்றேன்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் முள்வேலி தடுப்புக்குப் பின்னால் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கும் புலத்தில் உள்ள நாம் இதுவரை என்ன செய்தோம்?

வடக்கு-கிழக்கில் தீவிரமாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்காவது புலத்தில் நாம் ஏதாவது போராட்டம் செய்தோமா?

இப்படியே தொடர்ந்து அவர் துரோகிதான் இவர் துரோகிதான் என்று கூறிக்கொண்டே இருக்கப் போகின்றோமா?

மீண்டும் நான் கேட்டுக்கொள்வது இதுதான் வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு தற்போது எது தேவை என்பதனை உணர்ந்து அதற்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும். இல்லையெனில் நாம் எதனையும் பேசாது புலம்பெயர் வாழ்வோடு ஒன்றிணைந்து வாழ்ந்துவிட்டுப் போகவேண்டியதுதான். ஏனெனில் அந்த மக்கள் யதார்த்தத்தோடு உடன்பட்டு வாழப் பழகிக்கொண்டிருக்கின்றனர். அதற்குள் கல்லெறிகின்ற வேலைகளை நாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நிர்மலன், முதலில் ... நானும் மே18இற்கு பின் கேபி மீது மிக நம்பிக்கையாக இருந்தவன். கேபியானவர் எம் மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நிச்சயமாக கொண்டு செல்வார் என நம்பியவன். கேபியினது சில லண்டன் முகவர்களோடு சிறிது காலம் தொடர்பும் இருந்தது. அதில் சிலரை முன் கூட்டியே அறிந்தவன்/பழகியவன்! இடையிலேயே நல்ல காலம் சற்று விளங்கியது உண்மைகள்... உங்கள் கருத்துகள் பலவற்றோடு ஒத்தோடும் அதே நேரம் சிலவற்றை ஏற்க முடியவில்லை! கருத்துக்களை பயமின்றி தெரிவித்ததற்கு நன்றிகள்! கடந்த காலங்களில் சரி/பிழைகள் என்ன கருத்துச்சுதந்திரத்தையே கட்டுப்படுத்தி வைத்திருந்ததின் விளைவு இன்று வெளிப்படுகிறது. மேலும் உங்களை ... அவருடன் மிக நெருக்கியவரென நினைக்கிறேன் ....

யுத்த நிறுத்ததுக்கு பின்னுள்ள காலங்களில் பிரபாகரனின் மதிநுட்பம், தூரநோக்கு, செயற்பாடுகள், முடிபுகள் எல்லாம் கேள்விக்குரியதாக மாறியது மட்டுமல்லாது இறுதியில் அழிவையே முடிவாக்கியது! இது கருணாவில் தொடங்கி இடைக்கால இராணுவ செயற்பாடுகள் ஈறாக இன்று கேபியில் முடிபுற்றிருக்கிறது.

கேபியை பொறுத்த மட்டில் ஓர் ஆயுத கடத்தல்காரன். கடந்த காலங்களில் வேறெவ்வித அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் இல்லாதவர். மற்றும் சர்வதேசத்தினால் தேடப்பட்ட முக்கியநபர்(பல வருடங்களுக்கு முன்னமே கேபி சர்வதேச நாடொன்றின் புலனாய்வுத்துறையின் வலையில் வீழ்ந்து விட்டாரென்ற தகவல்களும், 9/11இற்குப்பின்னமும் தாய்லாந்தில் சுதந்திரமாக எப்படி இருந்தார் என்ற தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது வேறுவிடயம்). இப்படியான ஒருவரை சர்வதேசத்திடம் என்ன இந்தியாவிடமே பேச எவ்வாறு பிரபாகரன் உடன்பட்டாரென்பது வியப்பே! எத்தனை நம்பிக்கையான, செயற்திறன் கொண்ட பலர் புலமெங்கும் இருக்க கேபி நியமிக்கப்பட்டார்????????????!!!!!!!!!!!!!!!!

கேபி, தமிழ்நெட்டுக்கு அடித்தளம் இட்டார் என்பது மிகப்பெரிய நகைச்சுவை! உமக்கு தெரிகிறதோ இல்லையோ புலிகள் பல தடவை தமிழ்நெட்டை தமது முழு கட்டுப்பாட்டில் கொணர முயன்றார்கள், முடியவில்லை!!! தமிழ்நெட்டானது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றதே ஒழிய அதை ஒரு போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் வர அதன் நிர்வாகம் அனுமதிக்கவில்லை!!

கேபி யதார்த்தமான நிலைக்கு உடன்பட்டு செல்ல விரும்புகிறார்?!?!.... அங்கு கால காலமாக ஒட்டியிருப்பவர்களினாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை/இயங்க முடியவில்லை/செயற்பட முடியவில்லை என்பது யதார்த்தம்! இதற்கா பேபியை கட்டிப்பிடிக்க வேண்டும்!

பிரபாகரன் உயிருடன் இருப்பாரென்றால் .... என்ன பிரபாகரனுக்காகவா இவ்வளவு கால அழிவுகளின் மத்தியில் போராடியது????? .... இன்று இலங்கையில் அதுவும் சிங்களத்தின் கைகளில் இருந்து கொண்டு பிரபாகர கோசம் எழுப்பும் ஒரே ஒரு வீரன் கேபியே!

ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினர், விடுதலைப் புலிகளின் சகல துறையினரையும் கண்காணித்தனர். புலத்தில் கூட கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் கூத்துக்களை சில மாற்று இயக்கங்களின் இணையத்தளங்கள்/வானொலிகளை மறைமுகமாக பாவித்து, அவர்களின் கூத்துக்களை தடுக்க முற்பட்டார்கள். இதேவேளை களத்தில் தகட்டு ராஜா, பங்கர் ராஜாவின் கைகள் ஓங்க, புலனாய்வாளர்களின் தகவல்கள் குப்பைத்தொட்டியினுள் போகத்தொடங்கின. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் முற்றாகவும் செயலிழந்தது. பங்கர் ராஜா, தகட்டு ராஜா, புகழ் பாடுவோரின் செயற்பாட்டாளர்கள் கூத்துக்கள் களத்தில் மட்டுமல்லாது புலத்திலும் எழும்பி ஆடத்தொடங்க ... முதல் முறையாக சர்வதேச ஊடகங்களில் இவர்களின் "இறுதி யுத்த பணவேட்டை" பரப்பரப்பானது. புலமெங்கும் நடந்த இந்த பணவேட்டை நீண்ட கால ஆதரவாளர்கள், அள்ளிக்கொடுத்தவர்களை கூட சினக்கச் செய்தது! இதற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல கேபியின் காலங்களில் அவரின் பொறுப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஆடிய கூத்துக்கள்!

பங்கர் ராஜாவும், தட்டு ராஜாவும் ஆயுத கொள்வனவை பங்கிட்டு செயற்படுத்த முற்பட்ட பின் ரகசிய செயற்பாடுகள் பரகசியமானது என்பது உண்மைதான். உலகமெங்கும் செயற்பாட்டாளர்கள் கம்பி எண்ணத்தொடங்கினார்கள். இதே சமயம் புலத்தில் நடக்கத்தொடங்கிய கூத்துக்கலை கேபி தன் நாடகத்துக்கு சாதகமாக்கினார். ஆயுதக்கொள்வனவில் அனுபவமற்ற பங்கர் ராஜா/தகட்டு ராஜா பாட்டி, கேபியுடன் முன்னிருந்த சிலரையும் சேர்த்து செயற்பட தொடங்கினார்கள். விளைவு புலிகளின் 15இற்கு மேற்பட்ட ஆயுதக்கப்பல்கள் யுத்தநிறுத்த காலத்தில் கடலுக்கு இரையாகின.

இறுதி அழிவிற்கு முன், கேபி மிக தந்திரமாக தலைமைகளை முட்டாளாக்கி தன்னை முன்னுக்கு கொணரும் நடவடிக்கைகளை மிக சாதுரியமாக செயற்படுத்தி வெற்றியும் கண்டார்.

... களத்திலுள்ள சில தொலைபேசிகளே இறுதி நேரத்தில் இயங்கியது, அவைகளினூடன தொடர்புகளை இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மட்டுமல்லாது சர்வதேச வல்லரசுகளின் புலனாய்வுத்துறையினர் நாடி பிடித்துக் கொண்டிருக்க, சர்வதேசத்தால் தேடப்படும் ஓர் முக்கிய பயங்கரவாத இயக்க செயற்பாட்டாளரான கேபி மட்டும் தாய்லாந்து/ன்மலேசியாவில் இருந்து கொண்டு பல மணி நேரங்கள் கதைத்தாராம்!!!! .....

இன்னுமொன்றை கூற வேண்டும் ... இங்கு லண்டனில் கேபியுடன் நெருங்கி செயற்பட்ட/நேரடித்தொடர்புடைய ஒருவர், வணங்காமண் நாடகம் இறுதி அத்தியாயம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கேபியுடன் கதைத்திருக்கிறார், அப்போது கேபி கூறினாராம் , "இவங்கள் என்னை கேட்டிருந்தால், நான் பசிலுடன் கதைத்து அதனை கொழும்பினூடாகவே அங்கு கொண்டு சேர்த்திருப்பேன்" ....

கேபினாவர், அங்கு சிங்களத்தின் கைகளில் அகப்பட்டிருக்கும் பன்னீராயிரத்துக்கு மேலான போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வு எனும் பெயரில் 60 வருட தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முற்றுப்பெற செய்வதற்கு, சிங்களத்திற்கு ஆயுதமாக்கியிருக்கிறார்!!!!

இறுதியாக கேபியைப் பற்றி, இவரிடம் பிரபாகரன் என்ன யமனும் தப்ப முடியாது!!! :)

Edited by Nellaiyan

நெல்லையன் உமக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு... சரி யார் அந்த தகடு பங்கர் ராஜாகள்...?? :unsure: குழப்ப எண்டு வெளிக்கிட்டால் எதை வேணும் எண்டாலும் சொல்ல முடியும்...! அதுக்கு நீர் நல்ல ஒரு உதாரணம்... ( உண்டியலான் கதை எழுதின அனுப்பவம் நல்லா உதவுகிறது போல.. ))

அப்போ கரிநாகம் கருணா தலைவரிடம் நான் அமெரிககாவுடன் பேசுறேன் என்று சொன்னால் தலைவர் தூக்கி கொடுத்து இருப்பாரோ?

நான் நினைக்றேன் நடேசன் அண்ணா தலைவருக்கு தெரியாம கேபீயை பொறுப்பில் போட்டு இருபாரா? சரி கேபீ விடுங்கோ தலைவரையும் விட்ங்கோ பொட்டு அம்மாணையும் விடுங்கோ யார்ப்பா புலிகளின் உண்மையான பிரதிநிதி?

மக்களின் பிரதிநிதி யார் என்று தேர்தல் முலம் மக்கள் உலகுக்கு சொன்னார்கள் இப்போ புலிகள் சொல்லவேண்டும் தங்களின் அமைப்பை நடத்துபவர் யார்?

செய்தி தணிக்கைக்கு பேர் போன நாடு இலங்கை... அந்த தணிகையை கட்டுப்படுத்துவது இலங்கை புலநாய்வு துறை... அந்த புலநாய்வு துறையின் கட்டுப்பாட்டுக்கை இருக்கும் KP ஒரு செய்தி ஊடகங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பேட்டி குடுக்கிறார்... புலிகள் பற்றிய தகவல்களை எல்லாம் சொல்கிறார்... ( ஊடகங்களுக்கே இவ்வளவு சொல்லுறவர் இலங்கை புலநாய்வுத்துறைக்கு எவ்வளவு சொல்லிக்குடுத்து இருப்பார்...? ) அதோடு இலங்கை புலநாய்வு துறையின் முகவர்களை அடையாளம் போட்டு காட்டுகிறாராம் அவர்.. இலங்கை புலநாய்வு துறைக்கு தகவல்கள் வழங்குவது கஸ்ரோ குழுவில் இருப்பவர்கள் தான் எண்று ... அதை தணிகை செய்யாது இலங்கை புலநாய்வு துறை பிரசுரிக்க அனுமதிக்கிறதாம்...

இதை நம்பி கதை சொல்லும் உங்களை போண்ற ஏமாளிகள் இருக்கும் மட்டும் இன்னும் பல கதைகள் வரும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த நாதாரியை தலைவர் ஓய்வெடுக்க சொன்னால் தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டியதுதானே பிறகு எதுக்கு அலையுது.

நெல்லையன் உமக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு... சரி யார் அந்த தகடு/பங்கர் ராஜாகள்...??

தயா அண்னை, அது உங்களுக்கு தெரியாததல்ல ... தமிழ்ச்செல்வன்/காஸ்ரோ கூட்டுத்தான்! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா அண்னை, அது உங்களுக்கு தெரியாததல்ல ... தமிழ்ச்செல்வன்/காஸ்ரோ கூட்டுத்தான்! :unsure:

மாவீரர்களை இழிவுபடுத்தும் இவர் செயல்கண்டு,

"கொடுவாளினை எடடா கொடியோன் செயல் அறவே, குகை வாழ் புலியே இக்கொடியோன் செயல் அறவே"

அதுக்கு நீர் நல்ல ஒரு உதாரணம்... ( உண்டியலான் கதை எழுதின அனுப்பவம் நல்லா உதவுகிறது போல.. ))

தயா அண்னா, ... உதன் பின்னணிகளை எழுத வெலிக்கிட்டால் நாறும்! விடுங்கோ! ... போனவனை மூளையில்லாமல் பிடித்து பங்கருக்குள் போட்டுட்டு, விசாரனைக்கு வரச்சொன்னால், இங்கிருந்து தகடு கொடுத்த கூட்டம் போகாமல் ஒழிந்து திரிய, பிரித்தானிய அரசு நல்ல சூடாக கொடுக்க, அய்யோ இந்தா பிடியுங்கள் என விட்டு விட .... அவன் பாவி வந்து இங்கு எழும்பி நின்று தாண்டவம் ஆட ... காஸ்ரோக்கள் லண்டனில் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்றொழிய, நாலு ரோட்டிலை நிக்கிறதுகள்தான், அவனுக்கு முரன்பட்டு மிண்டு கொடுத்தது!!! ... இல்லையேல் அவன் இங்கு காஸ்ரோக்களை பென்ட் எடுத்துப் போட்டுத்தான் விட்டிருப்பான்!!!

... பிடிப்பானேன்? பிடித்தவனை விடுவானேன்?? .... காஸ்ரோ!!!!!!???? ... விடுங்கோ! :unsure:

தயா அண்னை, அது உங்களுக்கு தெரியாததல்ல ... தமிழ்ச்செல்வன்/காஸ்ரோ கூட்டுத்தான்! :unsure:

எனக்கு இது தேவை இல்லாத விடயம் எண்டாலும் உங்களுக்கு ஒண்டை சொல்ல வேணும்... ஆயுத கொள்வனவுக்கு கஸ்ரே அண்ணையோ தமிழ் செல்வன் அண்ணையோ எண்றுமே பொறுப்பாக இருந்தது இல்லை... ! கப்பல் கள் பிடி பட்டதுக்கு காரணம் இந்திய உளவு பிரிவு... ஆனால் தகவல்கள் எப்படி போனது எண்று நீண்ட நாட்களாக புரியவில்லை ஆனால் இப்ப தெரியும்... !

முந்தி எல்லாம் யாழுக்கை துணிவாக எழுதுவன்.... ஆனால் இப்ப அப்படி இல்லை... இங்கை பாதுகாப்பான ஒரு உணர்வு எனக்கு இப்ப எல்லாம் இல்லை...!

உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்கோ தவறு இல்லை... ஆனால் தெரியாதவைகளை விட்டு விடுங்கள்...

Edited by தயா

..ம்ம்ம்ம்... தமிழ்ச்செல்வனுடன் இருந்த/செயற்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் ... மீண்டும் அனைத்து ... மே18இற்கு முன்னமே சிங்களத்தின் கைகளில் சரணடைத்தனர் என்ன சிலரை மாலை போட்டு வரவேற்றதாகவும் சிங்களம், தகவல்(இதை கூறியது லண்டனிலுள்ள ஒரு காஸ்ரோ, பெயர் விரும்பின் இங்கு தரலாம், என் மீது கோபப்படாதீர்கள்). தமிழ்ச்செல்வனுக்கு அடுத்தான தங்கன், இளம்பருதி, தயாமோகன், எழிலன், ஜோர்ச், தமிழினி, தயா மாஸ்ரர்....! இனி எழுதுங்கள் .... !!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..ம்ம்ம்ம்... தமிழ்ச்செல்வனுடன் இருந்த/செயற்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் ... மீண்டும் அனைத்து ... மே18இற்கு முன்னமே சிங்களத்தின் கைகளில் சரணடைத்தனர் என்ன சிலரை மாலை போட்டு வரவேற்றதாகவும் சிங்களம், தகவல்(இதை கூறியது லண்டனிலுள்ள ஒரு காஸ்ரோ, பெயர் விரும்பின் இங்கு தரலாம், என் மீது கோபப்படாதீர்கள்). தமிழ்ச்செல்வனுக்கு அடுத்தான தங்கன், இளம்பருதி, தயாமோகன், எழிலன், ஜோர்ச், தமிழினி, தயா மாஸ்ரர்....! இனி எழுதுங்கள் .... !!!!!!

விட்டால் தலைவரையும் எழுதுவியள் சனம் நம்பாது என்று போட்டு விட்டு விட்டியள் போல இருக்கு :unsure::):D

இந்தக் குழப்பங்களுக்கு கேபியைக் காட்டிக் கொடுத்தவர்களே காரணம். கேபி சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒருவர். அவருடைய வாக்குமூலங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

சிறிலங்கா அரசுக்கு கேபி தற்பொழுது தேவைப்படுகிறார். கருணா, டக்ளஸ் போன்றவர்களை விட கேபியே இன்றைக்கு சிறிலங்கா அரசுக்கு முக்கியமானவராக இருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றவர்கள் இருப்பதை விட அந்த இடத்தில் "எம்மவரான" கேபி இருப்பது பற்றி எனக்கு ஒருவிதமான திருப்தி இருக்கிறது.

சிறிலங்கா அரசு கேபியைப் பயன்படுத்துவது போன்று, நாமும் கேபியைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு ஏதாவது உதவ முடியுமா என்று சிந்திப்பதே இன்றைய நிலையில் அறிவுள்ள செயலாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் குழப்பங்களுக்கு கேபியைக் காட்டிக் கொடுத்தவர்களே காரணம். கேபி சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒருவர். அவருடைய வாக்குமூலங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

சிறிலங்கா அரசுக்கு கேபி தற்பொழுது தேவைப்படுகிறார். கருணா, டக்ளஸ் போன்றவர்களை விட கேபியே இன்றைக்கு சிறிலங்கா அரசுக்கு முக்கியமானவராக இருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றவர்கள் இருப்பதை விட அந்த இடத்தில் "எம்மவரான" கேபி இருப்பது பற்றி எனக்கு ஒருவிதமான திருப்தி இருக்கிறது.

சிறிலங்கா அரசு கேபியைப் பயன்படுத்துவது போன்று, நாமும் கேபியைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு ஏதாவது உதவ முடியுமா என்று சிந்திப்பதே இன்றைய நிலையில் அறிவுள்ள செயலாகும்.

எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் காட்டி கொடுக்க பட்டார் என்று, பலர் விடை தேடி கொண்டு இருக்கும் கேள்வி இது. உறுதியாக சொன்னால் பெரிய தலை இடி ஒன்று தீர்ந்தது,

கே. பி சிறீலங்கா அரசுக்கு முக்கியமாக இருப்பதற்கான காரணங்களில் சில, கே.பி புலத்தில் கட்டி வளர்த்து வைத்திருக்கும் சீடர்கள், நாம் வியர்வை சிந்திக் கொடுத்த பணத்தில் கே.பி செய்திருக்கும் முதலீடுகள், அந்த முதலீடுகளின் ஊடாக வரும் வருவாயின் கொடுப்பனவுகளில் இயங்கும் தமிழர் ஊடகங்கள் புலத்து தமிழர் அமைப்புகளுக்குள் இருக்கும் கேபியின் நோக்கத்தை நிறைவேற்றும் தமிழ்தேசிய உணர்வற்ற அடிமைகள் என்பயோகும்.

"கேபி சரணடைந்தார்" என்று திட்டமிட்டு வதந்தியைப் பரப்பி செய்யப்பட்ட சதி அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதை புலனாக்குகின்றது. சரணடைவதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை கேபிக்கு இல்லை. கேபியிடம் இருக்கின்ற வசதிக்கு அவர் யாரும் அறியாத முறையில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

இரண்டாம் உலக யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்த எத்தனையே ஜேர்மனியத் தளபதிகள் தென்னமெரிக்க நாடுகளில் தப்பிச் சென்று வாழ்ந்தார்கள். அவர்களிடம் இருந்த பணம் இதனை சாத்தியமாக்கியது. கேபியும் ஏதோ ஒரு ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

விடுதலைப் போராட்டத்தை தொடர வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் குழப்பவாதிகளிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கின்ற உன்னத பணிக்காகவும் அவர் வெளிப்படையாக இயங்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இதை எதிரி பயன்படுத்திக் கொண்டான். இதனுடன் சுயநலவாதிகளின் காட்டிக் கொடுப்பும் சேர, கேபி கைது செய்யப்பட்டார்.

"போர்க் குற்றம்", "அரசியற் தீர்வு" என்று உலக நாடுகள் செய்கின்ற அழுத்தம் கேபியை உயிரோடு வைத்திருக்கின்ற தேவையை சிறிலங்கா அரசுக்கு கொடுத்தது. புலம்பெயர் மக்களை வென்றெடுப்பதற்கு கேபி பயன்படுவார் என்பதனால் அவரை நல்ல முறையில் பராமரிக்கின்ற கட்டாயத்தையும் சிறிலங்கா அரசுக்கு கொடுத்தது.

சிறிலங்கா அரசின் நலன்களின் பொருட்டே இன்று கேபி உயிரோடு இருக்கிறார். அவருக்கு நல்ல முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது.

பலவீனமாக இருக்கின்ற பொழுது எதிரியோடு தற்காலிகமாக என்றாலும் ஒட்டி உறவாடுவது எமக்கு ஒன்றும் புதிது இல்லை. இப்பொழுது இருப்பது போன்று மிகப் பலவீனமாக நாம் என்றும் இருந்தது இல்லை. இந்த நிலையில் கேபி செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

எமது தேசியத் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அல்லது எமது இனமாவது ஒரு ஓர்மம் மிக்க இனமாக இருந்திருந்தாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் எதிரி மிகத் திறமையாக செயற்பட்டான். தேசியத் தலைவரின் வீரச் சாவில் திட்டமிட்ட பல செயற்கையான மர்மங்களை உருவாக்கியதன் மூலம் எமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினான். எம்மை ஓரணியில் திரள விடாது தடுத்தான்.

தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்பதை மக்கள் நம்பத் தொடங்குகின்ற நேரங்களில் புதிய செய்திகளை பரப்பி எம்மை இரண்டும் கெட்டான் நிலைக்குள் தள்ளினான். இந்தக் குழப்பத்தை மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் கும்பல்களும் பயன்படுத்திக் கொண்டன. இன்றைக்கும் எல்லாம் முடிந்து விட்டது. நாம் விரும்பினாலும் எமது மக்களை தற்போதைக்கு ஓரணியில் திரட்ட முடியாது.

காலம் வரும் வரை பொறுக்கத்தான் வேண்டும். நூறு ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதற்கு எம்மைத் தக்க வைப்போம். தக்க வைப்;பதற்கு எதிரியோடு ஒட்டி உறவாடத்தான் வேண்டும் என்றால் அதையும் செய்வோம்.

யோ சபேசன் ஓடித் தப்புங்கோ வாறார்கள்,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

காலம் வரும் வரை பொறுக்கத்தான் வேண்டும். நூறு ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதற்கு எம்மைத் தக்க வைப்போம். தக்க வைப்பதற்கு எதிரியோடு ஒட்டி உறவாடத்தான் வேண்டும் என்றால் அதையும் செய்வோம்.

இதுதான் உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

கேபி ஓடிப் போய் ஆபிரிக்கா நாடுகளீல் தஞ்சம் கோராததுக்கு காரணம் வன்னிப் புலியை அழித்து முடித்தாகி விட்டது புலம் பெயர் புலிக் கட்டமைப்பை அழிக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளதால் அதுக்கு உதவ வேண்டிய தேவை கேபிக்கு இருந்திருக்கலாம்...அதுக்காக கேபி இலங்கை அரசோடு சேர்ந்திருக்கலாம்...இப்படி எழுதிறதால் நான் நொடியவனுக்கு ஆதரவு என நினைத்து விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2006 ஆண்டில் இருந்தே கேபியை தெரியுமென கோத்தபாய சொன்னதாக டாக்டர் சொன்னதுபொய்யாக இருக்குமோ, டாக்டர் பொய்சொல்லி போட்டார் போலதான் இருக்கும். :unsure::)

இரண்டாம் உலக யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்த எத்தனையே ஜேர்மனியத் தளபதிகள் தென்னமெரிக்க நாடுகளில் தப்பிச் சென்று வாழ்ந்தார்கள். அவர்களிடம் இருந்த பணம் இதனை சாத்தியமாக்கியது. கேபியும் ஏதோ ஒரு ஆபிரிக்க தென்னமெரிக்க நாடுகளில் வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்.

உதெல்லாம் 9/11 உடன் மாறி விட்டது! :unsure:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கேபி ஓடிப் போய் ஆபிரிக்கா நாடுகளீல் தஞ்சம் கோராததுக்கு காரணம் வன்னிப் புலியை அழித்து முடித்தாகி விட்டது புலம் பெயர் புலிக் கட்டமைப்பை அழிக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளதால் அதுக்கு உதவ வேண்டிய தேவை கேபிக்கு இருந்திருக்கலாம்...அதுக்காக கேபி இலங்கை அரசோடு சேர்ந்திருக்கலாம்...இப்படி எழுதிறதால் நான் நொடியவனுக்கு ஆதரவு என நினைத்து விடாதீர்கள்.

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி ஓடிப் போய் ஆபிரிக்கா நாடுகளீல் தஞ்சம் கோராததுக்கு காரணம் வன்னிப் புலியை அழித்து முடித்தாகி விட்டது புலம் பெயர் புலிக் கட்டமைப்பை அழிக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளதால் அதுக்கு உதவ வேண்டிய தேவை கேபிக்கு இருந்திருக்கலாம்...அதுக்காக கேபி இலங்கை அரசோடு சேர்ந்திருக்கலாம்...இப்படி எழுதிறதால் நான் நொடியவனுக்கு ஆதரவு என நினைத்து விடாதீர்கள்.

:unsure::):D:D:lol:

kpdakku.png

... நம்பிக்கைதான் வாழ்க்கை..... கேபியையும், டக்லஸையும் ஒரு தராசில் வைத்து .... டக்கரின் பக்கம் பாரம் கூடப்போல கிடக்கு! ஆதலினால் ஒரு சேஞ்சுக்கு இனி குத்தி டக்லசுக்கு ஆதரவளிக்கலாம் போலுள்ளது. டக்லஸ், கேபி போலல்லாது ... உறுதியான கொள்கை இருக்கிறது ..

1) அன்று தொடக்க இன்று வரை டக்லஸ் சிங்களத்துடன் ஒட்டி இருக்கிறார், கேபி இது வரை புலியுடன் ஒட்டி இருந்து விட்டு நேற்று ஒட்டியவர்!

2) அன்று தொடக்கம் இன்று வரை புலி எதிர்ப்பாளர், கேபி நேற்றிலிருந்துதான் புலி எதிர்ப்பாளர்.

3) அன்று தொடக்கம் இன்று வரை கொலைகளை வெளிப்படையாக சிங்களத்துடன் சேர்ந்து செய்கிறவர், கேபி நேற்றிலிருந்து தொடங்கியும் மறைமுகமாகத்தான் செய்கிறார்.

4) அன்று தொடக்கம் இன்று வரை ......

... ஆகவே கேபியை விட டக்லஸுக்கு அன்று தொடக்கம் இன்று வரை உறுதியான கொள்கை இருக்கிறது. நேற்று சிங்களத்துடன் சேர்ந்த கேபி, நாளை கம்பி நீட்டாது என்பதற்கு உத்தரவாதம் ஒன்றுமில்லை. ஆகவே எம்மக்களுக்கு ஏதும் செய்ய விரும்புவோர் டக்லஸ் மூலம் செய்யுங்கள்!

மற்றும் கடந்த இலங்கை பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் நெடியவன் கும்பலின் ஆதரவு டக்லஸுக்கு இருந்தது. நெடியவன் புலிகள், கஜேந்திர குதிரைக்கு காசைக்கட்டி விட்டதனால்தான் டக்லஸ் மூன்று ஆசனங்களை கூட்டமைப்பிடமிருந்து கைப்பற்றியவர்.

முந்தநாள் கம்பி நீட்டிய கருணாவை நம்ப முடியாதெனில், நேற்று எமக்கு மொட்டை அடித்து சந்தனம் தடவிய கேபியை என்னென்று நம்புவது???

.... கூட்டிக் கழிக்க ... குத்தி பெட்டராக புலப்படுகிறது!00020455.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.