Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இருபது வருடங்களுக்குப் பின் மன்னிப்புக் கோரி உள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார்.

அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை.அப்படியான ஒன்றாகத்தான் இப்படுகொலை உள்ளது.”

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8268:2010-08-13-07-14-46&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • Replies 90
  • Views 6.3k
  • Created
  • Last Reply

”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை.அப்படியான ஒன்றாகத்தான் இப்படுகொலை உள்ளது.”

விளங்கிக்கொள்ள முடியாத மடையர்கள் எல்லாம் தலைமை வகிக்க தகுதியில்லாதவர்கள்.

  • தொடங்கியவர்

தாயக மண் மீட்ப்புக்காக தமிழிழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள இரணுவத்திற்காகவும் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டார்கள்

இவர்கள்.

றோவினால் நடத்தப்பட்ட நாடகத்துக்கு றோவினால் நாடத்தப்படும் நாடகத்தில் நடிக்கும் ஒரு கூத்தாடியினால் சொல்லப்படும் ''ப்ளஷ்பேக்கு ஸ்டாரி'' இது....

  • கருத்துக்கள உறவுகள்

கத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்ப் படுகொலைகளைச் செய்தவர் இன்று அரசாங்கத்துடந்தானே இருக்கிறார்?? அவர் என்ன சொல்லுறார்?? பகிரங்க மனிப்பு ஏதாவது?? அதுமட்டுமல்லாமல் 1990 இல் மட்டக்களப்பு நகரில் சரணடைந்த 600 சிங்களப் போலீஸ்காரரை களுவாஞ்சிக்குடிக்குக் கூட்டிக்கொண்டு போய் மண்டையில போட்டவர் அம்மான். அதுக்கும் மன்னிப்புக் கேட்கலாம்.

கூட்டணியின் வங்குரோத்து அரசியல் என்கிறது உதைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் மன்னிப்பு கேட்கிறார்? :lol: இவர்தான் கொலை செய்யச் சொன்னவரோ? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

-------

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரி உள்ளார்.

அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”இது ஒரு தவறுதான். 20 வருடத்துக்கு முன் இடம்பெற்ற இத்தவறுக்காக முஸ்லிம் சகோதரகளிடம் மன்னிபுக் கோருகின்றமையில் எமக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் விளங்கிக் கொள்ள முடியாதவை.அப்படியான ஒன்றாகத்தான் இப்படுகொலை உள்ளது.”

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8268:2010-08-13-07-14-46&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

கடைசியாய்...... கூட்டமைப்பும், புலியை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டியதாய் போச்சுது.

.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கூத்தமைப்பு எப்போது புலியில்லாமல் அரசியல் செய்தது??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

"காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு................."

புலிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்ததும் உம்போன்றவர்களுக்கு (மேலே கருத்து சொன்னவர்களுக்கு) நியாயமானதாகவும், நீதியானதாகவும், சமூகத்துக்கு செய்த பாரிய உதவியாகவும் தென்படும் போது...... அதே புலிகள், அதே சமூதாயம் இன்று சின்னாபின்னாமாகி அழிந்து சிதறுண்டுபோகின்ற நிகழ்வு...... மற்ற சமூக மக்களுக்கும் நீதியானதாகவும், நியாயமானதாகவும், சமூகத்துக்கு செய்த பாரிய உதவியாகவும்தானே தோன்ற வேண்டும். அப்படித்தானே நீங்கள் நீயாயம் கற்பிக்கவேண்டும்??

கேவலம் .... விட்ட பிழைகளை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழ்ச்சமூகம்! ... இன்று முள்ளிவாய்க்காலையும் சிங்களம் நியாயப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது??????

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் அழகா புலிப் பாசிசம் பேசிக்கிட்டு துள்ளிக்கிட்டு வாரீங்களே...

1954 இல் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த தமிழினப் படுகொலைக்கு எந்தச் சிங்களவன் மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

1986 இல் இருந்து கிழக்கில் இருந்து செம்மணி ஈறாக மன்னார் தமிழின படுகொலைகள் வரை ஈடுபட்ட ஜிகாத் மற்றும் முஸ்லீம் சிறீலங்கா ஆயுதப் படை.. ஊர்காவல்படை.. மற்றும் முஸ்லீம் காடை ஆயுதக் கும்பல்களின் சார்பாக எவன் மன்னிப்புக் கேட்டான்..!

1900 இல் இருந்து இன்று வரை...சிங்களவன் தென்பகுதிகளில் வெட்டிக் கொன்ற முஸ்லீம்களுக்காக எந்தச் சிங்களவன் மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

மறக்க முடியாத அந்த நாட்களும் எங்கள் நெஞ்சங்களில் பதிந்திருக்கின்றன.

காத்தான்குடி படுகொலையில் 150 பேர் வரை தான் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் என்று வெளியில் சொல்லப்பட்டதே அன்றி அது தொடர்பான நீதி விசாரணை இன்று வரை நடத்தப்படவில்லை.. ஏன்..??!

இந்த நிலையில் சம்பந்தனுக்கு ஏன் இந்த அவசரக் குடுக்குத் தனமோ.. யான் அறியேன்.

செம்மணிப் படுகொலையில் (கிருசாந்தி குமாரசாமி என்ற மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் கூட) முஸ்லீம்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை.. குறிப்பாக முஸ்லீம் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை நீதிவிசாரணையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக எந்த முஸ்லீம் மன்னிப்புக் கேட்டிருந்தான்.

புலிகள் மீது பழி போட்டு கொஞ்சப் பேர் அரசியல் செய்யுறாங்க.. கொஞ்சப் பேர் புலிகளை வைச்சு அரசியல் செய்யுறாங்க.. கொஞ்சப் பேர் புலிப்பாசிசம் பேசியே தங்கட பாசிச வெறிக்கு நியாயம் கற்பிக்கும் அரசியல் செய்யுறாங்க.. தமிழர்களோ புலிகளை வைச்சே வாழ்க்கையை நடத்திக் கிட்டு இருக்காங்க..!

பாவம்.. புலி மட்டும் அழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. இத்தனைக்கும் அது கொள்கைக்காக உறுதியோடு வாழந்ததும் செயற்பட்டதும் தான் அது செய்த குற்றம்..!

Edited by nedukkalapoovan

கத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்ப் படுகொலைகளைச் செய்தவர் இன்று அரசாங்கத்துடந்தானே இருக்கிறார்?? அவர் என்ன சொல்லுறார்?? பகிரங்க மனிப்பு ஏதாவது?? அதுமட்டுமல்லாமல் 1990 இல் மட்டக்களப்பு நகரில் சரணடைந்த 600 சிங்களப் போலீஸ்காரரை களுவாஞ்சிக்குடிக்குக் கூட்டிக்கொண்டு போய் மண்டையில போட்டவர் அம்மான். அதுக்கும் மன்னிப்புக் கேட்கலாம்.

கூட்டணியின் வங்குரோத்து அரசியல் என்கிறது உதைத்தான்.

இரகுநாதா, காத்தான்குடி/ஏறாவூர் படுகொலைகள் சரியா? தவறா? ... கருணா மாண் போட்டுத்த்ள்ளினார், கரிகாலன் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்??? .... உண்மைகள் அருவருக்கும்!

எல்லாரும் அழகா புலிப் பாசிசம் பேசிக்கிட்டு துள்ளிக்கிட்டு வாரீங்களே...

1954 இல் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த தமிழினப் படுகொலைக்கு எந்தச் சிங்களவன் மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

1986 இல் இருந்து செம்மணி ஈறாக மன்னார் தமிழின படுகொலைகள் வரை ஈடுபட்ட ஜிகாத் மற்றும் முஸ்லீம் சிறீலங்கா ஆயுதப் படை.. ஊர்காவல்படை.. மற்றும் காடை ஆயுதக் கும்பல்களின் சார்பாக எவன் மன்னிப்புக் கேட்டான்..!

அப்ப சொல்ல வாறீங்கள் நாங்கள் செய்வதும் சரி, அவங்கள் செய்வதும் சரி??? என்ன???? ..... மனிதத்தை தொலைக்காதீர்கள்!!!! எம் அவலங்களுக்கு நீதி கேட்கும் நாங்கள், நாம் செய்த தவறுகளை பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?????????

... முதலில் மத முரண்பாட்டில் தொடங்கி ... பிரதேச முரண்பாடு ... ஊர் முரண்பாடு .... புதைத்து விட்டோம்!!

முன்பு கிழக்கு மாகாணத்தவர்கள் சில கேள்விகள் கேட்க, காறித்துப்பி உமிழ்ந்தோம், இன்று வன்னி மக்களுடன் கதையுங்கள் ... "யாழ்பானத்தானின் விளையாட்டுக்கு நாங்கள் பலியெடுக்கப்பட்டிருக்கிறோம்" ... என பகிரங்கமாக கதைக்கிறார்கள்! அவர்களையும் திறத்திங்களேன்???

காத்தான்குடி படுகொலையில் 150 பேர் வரை தான் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் என்று வெளியில் சொல்லப்பட்டதே அன்றி அது தொடர்பான நீதி விசாரணை இன்று வரை நடத்தப்படவில்லை.. ஏன்..??!

ம்ம்ம்... யாரார் போன விபரங்கள் தேவையா??? ... செய்த வீரர்களில் ஓரிருவர் லண்டனில் இருக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சொல்ல வாறீங்கள் நாங்கள் செய்வதும் சரி, அவங்கள் செய்வதும் சரி??? என்ன???? ..... மனிதத்தை தொலைக்காதீர்கள்!!!! எம் அவலங்களுக்கு நீதி கேட்கும் நாங்கள், நாம் செய்த தவறுகளை பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?????????

... முதலில் மத முரண்பாட்டில் தொடங்கி ... பிரதேச முரண்பாடு ... ஊர் முரண்பாடு .... புதைத்து விட்டோம்!!

முன்பு கிழக்கு மாகாணத்தவர்கள் சில கேள்விகள் கேட்க, காறித்துப்பி உமிழ்ந்தோம், இன்று வன்னி மக்களுடன் கதையுங்கள் ... "யாழ்பானத்தானின் விளையாட்டுக்கு நாங்கள் பலியெடுக்கப்பட்டிருக்கிறோம்" ... என பகிரங்கமாக கதைக்கிறார்கள்! அவர்களையும் திறத்திங்களேன்???

உங்களுக்கு அடிப்படையே புரியவில்லை எனும் போது யான் என்ன செய்வது.

எது மனிதம். தமிழனை வெட்டிக் கொல்வது.. அவனை விரட்டி அடிப்பது.. அவனின் காணி நிலங்களை பறிப்பது... இவை சிங்களவன் செய்தாலும் சரி முஸ்லீம் செய்தாலும் சரி அது உலக மகா தர்மம்.

அடிக்கிறவன.. துரத்த வாறவன.. பறிக்க வாறவன.. திருப்பி அடிக்கிறது.. தமிழனின் மனிதம் அற்ற செயல்.

இப்படி ஒரு மனிதத்தை எவரும் இங்கு போதிக்கவில்லை.

சிங்கம் புலி கூட தனது எல்லைக்குள் வருவதை விட்டு வைப்பதில்லை. இதுதான் இயற்கை..! இயற்கைக்கு மாறாக ஒரு மனிதம் இருக்க முடியாது. அது போலியானது.

வன்னி மன்னார் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருமலை அம்பாறை.. இந்த ஆறு மாவட்டங்கள் பற்றியும் தமிழர்களை அழகாக பிரிச்சு பேசுறீங்க.. மிச்சம் 19 மாவட்டங்களிலும் உள்ள சிங்களவர்களை ஏன் பிரிச்சுப் பேச மாட்டேங்கிறீங்க. அவங்களும் தான் செத்தாங்க.. சண்டை போட்டு. ஒரு சிங்களவனாவது சொல்லிருப்பான கொழும்பான சொகுசாக இருக்க.. காலியான் யாழ்ப்பாணத்தில சாகிறான் என்று.

சில தமிழ் நாய்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களைப் பார்த்து தாங்களே குரைக்கிற கீழ் புத்தி.

நெல்லையன்.. 1995 இடம்பெயர்வுக்கு முன் வன்னியின் சனத்தொகை ஒரு இலட்சம் இருக்கும். அதன் பின்னர் அதன் சனத்தொகை 3 இலட்சம். அங்கு வாழ்ந்ததும் நீங்கள் உச்சரிக்கும் யாழ்ப்பாணத்தான் தான். செத்ததும் அதிகம் அவன் தான். அதுவும் ஏழை யாப்பாணத்தான்..! புரிஞ்சு கொண்டு எழுதனும்... ஐயா..!

Edited by nedukkalapoovan

செம்மணிப் படுகொலையில் (கிருசாந்தி குமாரசாமி என்ற மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதில் கூட) முஸ்லீம்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை.. குறிப்பாக முஸ்லீம் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை நீதிவிசாரணையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதற்காக எந்த முஸ்லீம் மன்னிப்புக் கேட்டிருந்தான்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் அழிவுகளில், எத்தனை தமிழர்கள் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!!! அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்கள் எம்மவர்களே!!! ஒட்டுக்குழு /ஒட்டில்லாத குழ்க்கள் என்று ஒருபுறம், சிங்கள இராணுவபொலிஸில் உள்ள தமிழர்கள் மறுபுறம், புலிகளுக்குள் அடியிலிருந்து நுணிவரை ஊடுருவி இருந்வர்கள் இன்னொருபுறம் ... இல்லையா?????

ஏன் கருணாவிற்காக கிழக்கு மாகாணத்தை அழியுங்கோவேன்? மாத்தையாவிற்காக வல்வெட்டித்துறையை அழியுங்கோவேன்?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... யாரார் போன விபரங்கள் தேவையா??? ... செய்த வீரர்களில் ஓரிருவர் லண்டனில் இருக்கிறார்கள்!

நீங்கள் மட்டுமல்ல நானும் சொல்லலாம்.நான் தான் செய்ததென்று.

எமக்கு உந்த கேலிக்கூத்தான அறிக்கைகள்... ஆட்களைப் பற்றி நன்கு தெரியும்.

எல்லாத்துக்கும் விசாரணை கமிசன் வைச்சனாங்கள்.. இதுக்கேன் வைக்கல்ல.. ஏன் வைக்க தூண்டல்ல...???!

செம்மணில ஒரு வழக்கில் என்றாலும் முஸ்லீம்களின் பங்களிப்பு வெளிக்கொணரப்பட்டதே.. அதற்காக உங்க வாப்பாவா வந்து மன்னிப்புக் கேட்டான்..???! :lol: :lol: :lol:

நெடுக்கர், உங்கள் வாதங்கள் என்னத்தை சொலிகிறதென்றால் .... சிங்களவன் செய்த அத்தனை அழிவுகளையும் நியாயப்படுத்துகிறீர்கள்!!! ... வேறொன்றுமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரகுநாதா, காத்தான்குடி/ஏறாவூர் படுகொலைகள் சரியா? தவறா? ... கருணா மாண் போட்டுத்த்ள்ளினார், கரிகாலன் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்??? .... உண்மைகள் அருவருக்கும்!

நீதி கிடைப்பதற்கு பிந்தினாலும் கூட. அநீதிக்கு சிறிது காலம் கொண்டாட்டம்தான். பிரபா ஒப்புதல் கொடுக்க... கருணா போட்டுத்தள்ள...... கரிகாலன் கணக்கு எடுத்துக்கொண்டு பத்திரிகை செய்தி சொன்னவர். ஒரு முறை கரிகாலனை கிழக்கு பல்கழகத்தில் சந்திக்கும் நிலை கிடைத்தது. இது சரிதானா? என்று கேள்வி கேட்டதற்கு கரிகாலம் சொன்ன பதில் என்ன தெரியுமா? தலைவரின் உத்தரவு இன்றும் கூட தலைவர் சொன்னால் போட்டுத்தள்ளவேண்டியதுதான்.... அது சரி இப்போ கரிகாலன் இருக்குதோ இல்ல முடிச்சுட்டாங்களோ?

முஸ்லீம்கள் என்றும் ஒதுக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரமாக எம்முடனேயே வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த முஸ்லீம் உறவுகளுக்கு தெரியும், நாம் அழிக்கப்படக்கூடாது, என்பதற்காக யாழ் நிலத்திலிருந்து முஸ்லீம்கள் குறுகிய கால இடைவெளிக்குள் வெளியேற்றப்பட்டது என்பது உண்மைதான், அன்று வெளியேற்றப்பட்டிருக்காவிடின், இருமுனையில் அழிவினை சந்தித்து அன்றே நாம் அழிந்திருக்கவேண்டும் என்பதுவே உண்மை. அவர்களின் திட்டம் நிறைவேறி இருக்குமாயின் அன்றே, யாழ் மட்டுமல்ல, வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களில் அவர்களின் ஆட்சியே நிலவி இருக்கும். அதற்காக நான் படுகொலையினை நியாயப்படுத்தவரவில்லை, படுகொலை என்பது உயிர்வதை, அதை யார் செய்தாலும் வலி ஒன்றுதான் என்பதனை நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் தண்டிக்கப்பட்டார்களே என்று எண்ணும்போதுதான் நாம் அவர்களினை எமது எதிரியாக மாற்றிவிட்டோம் என்பதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் அழிவுகளில், எத்தனை தமிழர்கள் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!!! அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்கள் எம்மவர்களே!!! ஒட்டுக்குழு /ஒட்டில்லாத குழ்க்கள் என்று ஒருபுறம், சிங்கள இராணுவபொலிஸில் உள்ள தமிழர்கள் மறுபுறம், புலிகளுக்குள் அடியிலிருந்து நுணிவரை ஊடுருவி இருந்வர்கள் இன்னொருபுறம் ... இல்லையா?????

ஏன் கருணாவிற்காக கிழக்கு மாகாணத்தை அழியுங்கோவேன்? மாத்தையாவிற்காக வல்வெட்டித்துறையை அழியுங்கோவேன்?

ஒரு புத்தி இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

கருணாவும் மாத்தையாவும் இயக்கத்திற்குள் பிணக்குப்பட்டவர்கள். அது இயக்கத்தின் விடயம்.

முஸ்லீம் ஜிகாத்..ஊர்காவல்படை.. மற்றும் காடைக்கும்பல்கள்.. கை வைத்தது அப்பாவி தமிழ் மக்கள் மீது. கிழக்கில் போய் இந்த தர்மத்தை கதையுங்கோ.. சனம் செருப்பால அடிச்சுக் கலைக்கும்.

மூதூரில் இருந்த ஒரு தமிழரின் வீடுகளும் இன்று உருப்படியா இல்ல. கிண்ணியாவில் அப்படி. மட்டக்களப்பில்.. காத்தான்குடி போன்ற முஸ்லீம் கிராமங்களை அண்டி தமிழ் மக்கள் வாழ முடியாத நிலை. இது காத்தான்குடி சம்பவத்திற்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டாயிற்று.

மன்னாரில் ஜிகாத்தின் அடாவடித்தனங்கள். நாங்களே இதனை நேரடியாக அனுபவித்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் சோனக தெருவுக்குள் போறவைக்கு இருட்டடி விழுந்த ஒரு பயங்கரமான காலமும் இருந்தது. யார் அதை நீக்கியது.. புலிகள் தான். இன்று அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இந்த வன்முறைகள் எல்லாம் உங்கள் பார்வைக்கு புலிப் பழிவாங்கலாகவே தெரியும். ஆனால் உண்மையில்.. புலிகள் நடவடிக்கை எடுக்கும் படி முஸ்லீம்கள் பலர் நடந்து கொண்டனர் என்பது தான் யதார்த்தம்..! இதை உங்கள் போன்றோர் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். நாங்கள் அனுபவித்து கண்டவர்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் என்றும் ஒதுக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரமாக எம்முடனேயே வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த முஸ்லீம் உறவுகளுக்கு தெரியும், நாம் அழிக்கப்படக்கூடாது, என்பதற்காக யாழ் நிலத்திலிருந்து முஸ்லீம்கள் குறுகிய கால இடைவெளிக்குள் வெளியேற்றப்பட்டது என்பது உண்மைதான், அன்று வெளியேற்றப்பட்டிருக்காவிடின், இருமுனையில் அழிவினை சந்தித்து அன்றே நாம் அழிந்திருக்கவேண்டும் என்பதுவே உண்மை. அவர்களின் திட்டம் நிறைவேறி இருக்குமாயின் அன்றே, யாழ் மட்டுமல்ல, வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களில் அவர்களின் ஆட்சியே நிலவி இருக்கும். அதற்காக நான் படுகொலையினை நியாயப்படுத்தவரவில்லை, படுகொலை என்பது உயிர்வதை, அதை யார் செய்தாலும் வலி ஒன்றுதான் என்பதனை நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் தண்டிக்கப்பட்டார்களே என்று எண்ணும்போதுதான் நாம் அவர்களினை எமது எதிரியாக மாற்றிவிட்டோம் என்பதுதான் உண்மை

முஸ்லீம்கள் எமக்கு எதிரியாக்கப்பட்டது என்பது தவறு. அவர்கள் எப்போதுமே தொட்டும் தொடாமலும்.. மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் அரசியல் செய்து வந்தவர்கள் தான். அவர்களை நிரந்தர எதிரியாக்கியது சிங்களமே அன்றி நாமல்ல.

சிங்களவன் எத்தனை தரம் போட்டு மொங்கி இருப்பான். அப்ப எல்லாம் இந்த முஸ்லீம்கள் என்ன வெட்டியா புடுங்கினவை. அவன் கூட ஒற்றுமையா இருக்கல்லையா. நாங்கள் தான் புட்டும் தேங்காய் பூவும்.. என்று அவங்களட்டும் அடி வாங்கினது.

இப்போ தொப்புள் கொடி உறவென்று.. கருணாநிதியிட்ட வாங்கிக் கட்டல்லையா அது போல.

எமக்கும் ராஜதந்திரத்திற்கும் வெகு தூரம்..! அவங்கள் சிங்களவரும் முஸ்லீமும் எங்களை வைச்சு நல்லா பிழைக்கிறாங்கள். நீங்கள் அவங்களுக்கு நீதி தேடிக் கொண்டிருங்கோ.. எங்கட சனத்தை அழிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு..! :lol: :lol:

முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு முன்னுக்கு சில புலிகளின் முக்கியஸ்தகர்களின் கீழ் சிறுவர்களை பலவந்தமாக சேர்த்தல், இணைய விடாமல் தடுத்த பெற்றோர்களை சுட்டுக்கொன்றது, இளம் பெண்களுக்கு மொட்டையடித்து விட்டவைகள் போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றன. இவை அனைத்து சிங்களை/ஒட்டு/ஒட்டில்லாத ஊடகங்களில் கூக்குரலிடப்பட்டன. இவை நீங்கள் அறிந்தவைகளே!

இவற்றை செய்த புண்ணியவான்களான தங்கன்(எனது நண்பருக்கு தெரிந்த ஒரு குடும்பம் தங்கள் பிள்ளையை இணைய விடாமையினால், அப்பெற்றோரை இவர் சுட்டுக் கொன்றாராம்), இலம்பருதி, எளிலன், பாப்பா போன்ற வீராதி வீரர்கள் இன்று சிங்களத்துடன் படுத்தெழும்புகிறார்களாம். இவர்கள் சரணடையவில்லை ... போய்ச்சேர்ந்தார்களாம், அதில் தங்கனுக்கு மாலை போட்டு வரவேற்பாம்!!! ...

என்ன தெரிகிறது இறுதிக்காலங்களில் மக்களை எவ்வளவிற்கு வெறுப்படைய செய்ய முடியுமோ, அதை சிங்களம் இந்த அண்ணையின் பாசறையில் வளர்ந்தவர்களை வைத்தே செய்வித்தது!!! ... இது கற்பனையல்ல ... உண்மை!!!(இவைகளை வேறொரு திரியில் விளக்கமாக ....)

ஏன் தங்கன், எளிலன், இளம்பருதி, பாப்பாக்களுக்காக தமிழினத்தை அழிக்கப் போகிறீர்களா?????

ஓரிருவர் தவறு செய்ய ... ஓர் இனத்தையே பகைத்து விட்டோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புத்தி இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

கருணாவும் மாத்தையாவும் இயக்கத்திற்குள் பிணக்குப்பட்டவர்கள். அது இயக்கத்தின் விடயம்.

முஸ்லீம் ஜிகாத்..ஊர்காவல்படை.. மற்றும் காடைக்கும்பல்கள்.. கை வைத்தது அப்பாவி தமிழ் மக்கள் மீது. கிழக்கில் போய் இந்த தர்மத்தை கதையுங்கோ.. சனம் செருப்பால அடிச்சுக் கலைக்கும்.

மூதூரில் இருந்த ஒரு தமிழரின் வீடுகளும் இன்று உருப்படியா இல்ல. கிண்ணியாவில் அப்படி. மட்டக்களப்பில்.. காத்தான்குடி போன்ற முஸ்லீம் கிராமங்களை அண்டி தமிழ் மக்கள் வாழ முடியாத நிலை. இது காத்தான்குடி சம்பவத்திற்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டாயிற்று.

மன்னாரில் ஜிகாத்தின் அடாவடித்தனங்கள். நாங்களே இதனை நேரடியாக அனுபவித்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் சோனக தெருவுக்குள் போறவைக்கு இருட்டடி விழுந்த ஒரு பயங்கரமான காலமும் இருந்தது. யார் அதை நீக்கியது.. புலிகள் தான். இன்று அது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இந்த வன்முறைகள் எல்லாம் உங்கள் பார்வைக்கு புலிப் பழிவாங்கலாகவே தெரியும். ஆனால் உண்மையில்.. புலிகள் நடவடிக்கை எடுக்கும் படி முஸ்லீம்கள் பலர் நடந்து கொண்டனர் என்பது தான் யதார்த்தம்..! இதை உங்கள் போன்றோர் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். நாங்கள் அனுபவித்து கண்டவர்கள்..!

நீர் சொல்வதை பார்த்தால் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சனத்தினை சுட்டுக்கொன்றது சரி என்று வாதிடுகின்றீரா? நாளை இதே முஸ்லிம்கள் ஒரு கோயில் விழாவில் சனங்களை நூற்றுக்கணக்கில் சுட்டும் வெட்டியும் கொலைசெய்வார்கள் எனில் அதனையும் நீ நியாம் தர்மம், தேசியத்துக்கு தேவையான களையடுப்பு என்று வாதிடிவீரோ? கேவலமான விடங்களுக்கு தமிழர் தலையசைத்து மெளனமாக சாட்சியாக இருந்ததன் விளைகள் எத்தனை என்று அறிவீரோ? எப்படியோ 20 வருடங்களுக்கு பின்னரும் கூட தமிழ் தரப்பு அரசியல் வாதிகளாவது முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கேட்டுக்கொள்வது சற்று மன ஆறுதலையவது தரவில்லையா உமக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் செய்த படுகொலைக்கு தமிழ் மக்களினால் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. அப்பாவி மக்கள் கொலைகளை அரசியலாக்கி நியாயப்படுத்தக் கூடாது. இன்னுமொரு திரியில் பாகிஸ்தானில் அல்லல்படும் மக்களின் அவலத்தைக் கண்டு மகிழ்ச்சியடையும் குரூர மனப்பாங்குள்ள, வக்கிரமான கருத்துக்கள் உள்ளன. சகமனிதர்களை மனிதர்களாக ஏற்கமுடியாத நாம் மனிதாபிமானம் பேசக்கூடாது. மற்றவர்களிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது.

ஏன் கொக்கட்டிச் சோலையில் எமது மக்கள் 150 பேரை 1986 இல் சோனி வெட்டைக்க எங்க போய் இந்தனீங்க..???! அதுக்கு போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வாங்க.. நான் சொல்லுறன் இது அநீதியா என்று.

இந்தச் சம்பவம்.. யார் செய்திருந்தாலும் சோனிகளுக்கு நல்ல பாடம். அதைச் சொல்ல முடியும். இது செய்யப்பட்டிராவிட்டால் இன்று மட்டக்களப்பும் அம்பாறை.. கிண்ணியா போல ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்..! எவன் செய்தானோ அவன் வாழ்க.. என்றே நான் சொல்வேன்.

ஏனெனில் சோனியள் ஒன்றும் எமக்கு நிரந்தர நண்பர்களாக இருக்கவில்லை. அவர்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு தான் எம்மோடு நட்புக்கும் பாவித்தனர். 1987 இல் இந்தியப் படைகள் சோனிகளை தேடி தேடி தாங்கிய போது எம்மோடு கூடித் திரிந்தவர்கள்.. 1990 இல் அதிரடிப்படையோடு சேர்ந்து ஊர்காவல் படை அமைத்து வெட்டிக் கொன்றதையும் மறக்க முடியாது... மனு நீதிச் சோழர்களே..!

தமிழர்கள் செய்த படுகொலைக்கு தமிழ் மக்களினால் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. அப்பாவி மக்கள் கொலைகளை அரசியலாக்கி நியாயப்படுத்தக் கூடாது. இன்னுமொரு திரியில் பாகிஸ்தானில் அல்லல்படும் மக்களின் அவலத்தைக் கண்டு மகிழ்ச்சியடையும் குரூர மனப்பாங்குள்ள, வக்கிரமான கருத்துக்கள் உள்ளன. சகமனிதர்களை மனிதர்களாக ஏற்கமுடியாத நாம் மனிதாபிமானம் பேசக்கூடாது. மற்றவர்களிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது.

வாகரையில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்காலில் மக்கள் அல்லல் பட்ட போது பாகிஸ்தானியர்கள் என்ன கண்ணீரா சிந்திக் கொண்டிருந்தனர். இல்லையே.. மல்ரி பரல் எல்லோ நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் இல்லாத மனிதாபிமானத்தை எப்படி மற்றவர்களிடம் போய் வலியுறுத்துவது. புரியவில்லை.. இந்த நியாயம்..! :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.