Jump to content

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!


Recommended Posts

அதிதீவிரப்போக்கினால் எவ்விடத்தில் நிற்கின்றோம் என்பதை புரியும் நிலையைக் கூட சில மனிதப்பின்டங்களுக்கு தெரியுதே இல்லை. சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேரா என்பார்கள். இதற்கு ஒத்த கொள்கைகள், சிந்தனைகள் இனியும் பயனழிக்காது. அதற்கான சூழல்காரணிகள் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெருந்தப்பாடுடையதாக இல்லை.

சம்பந்தரின் கூற்று சரியானதே. 20 வருடங்கள் கழிந்தாலும் சிறுபான்மையினரிடையே காணப்படும் பரஸ்பர நம்பிக்கையீனம் எதனால் உருவானது?? ஆயுதப்பலப்பிரயோகம் இன்னும் ஓர் சிறுபான்மையினரை தமிழருக்கு எதிராக மாற்றிவைத்துள்ளதும் உண்மையா? என்பதில் சம்பந்தரின் முடிவு சரியான பாதையினைத்தான் தெரிவு செய்துள்ளது.

ஒரு செயலுக்குரிய மாற்றுப் பதில்செயல்கள் உருவாகுவதே இயற்கை. தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ அரசியல், ஆயுத, சமூகநலன்களின் பின்னால் ஒரு சமூகத்தை மற்ற சமூகம் அடக்கி ஆள முற்படுவது பெருத்தப்பாடுடையதாக இதுவரையும் கண்டுள்ளீரா? இல்லைதானே!! இரு சமூகங்களும் ஒன்றில் ஒன்று சாந்திருக்கவேண்டியே நிலையே தவிர பிணக்குகளினால் விலகி இருப்பது எத்தகைய பயனை இச் சமூகங்களுக்கு தரும்?? கூற முடியுமா?? . அதில் சம்பந்தரின் முயற்சி பாராட்டதக்கதே!!

இந்த தெருச்சண்டித்தனம் சமூகத்துக்கு உதவாது. வெட்டுவேன். குத்துவேன். சுடுவேன் இதுகள் கதைக்கும் உதவாததொன்று.

தோழர் பாலன் அல்லது பஷீர் அஸ்லாமு அலைக்கும்

உங்கள் கருத்து சாஸ்வதமானவை. நன்றி. இதையே நாங்களும் விரும்பிகிறோம். எந்த ஒரு உயிரும் பறிக்கப்படலாகாது. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாய் இருப்போம்.

உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.

உங்கள் கருத்தை முஸ்லிம் மக்களிடமும் முன் வைப்பீர்களா?

1967 இல் சாய்ந்தமருதில் இருந்து முஸ்லிம்களால் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டது எந்த இயக்கம் ஆயுதம் தூக்கியதால் நடந்தது?

தமிழ் பாடசாலை பாலிகா வித்தியாலமாய் ஆனது எப்படி?

கரிகாலனை வந்தாரூமூலையில் சந்தித்து காத்தான்குடி கொலைகளை பற்றி கேட்ட நீங்கள் அதற்கு முன், அதே கால கட்டத்தில் நடந்த வீரமுனை, கல்முனை, நிந்தவூர், திராய்கேணி ............. தமிழ் இன அழிப்பை பற்றி அஷ்ரப் அண்ணனிடம் கேட்டிர்களா ? கிழக்கு மாகாணத்தில் இருந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உங்களுக்கு தேவையான கருத்துகளை இங்கு பதிய முற்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

காலதாமதமாயினும், த.தே,க இன் சரியான நடவடிக்கை....பாராட்டுகள்

Link to comment
Share on other sites

காலதாமதமாயினும், த.தே,க இன் சரியான நடவடிக்கை....பாராட்டுகள்

good

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பு இஸ்லாமிய சமூகத்துடன் இணைந்து செல்ல முயற்சிக்கின்றது. அதன் அடைப்படையில் இது வரவேற்கப்படத்தக்கதொரு நகர்வு ஆகும். தமிழ் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையினைப் பாராட்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லைக் காட்டித்தான் தாயகத்தில் வாழ்கின்றார்கள் என்றில்லை. அதுபோல நாங்களும் பல்லைக் காட்டித்தான் வாழவேண்டியும் இல்லை.

முதலில் மனிதர்களாக இருக்கவேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும்.

முஸ்லிம் மக்கள், சிங்களவர்கள், இந்தியர்கள் எல்லாம் தமிழர்களைக் கொன்றுதான் இருக்கின்றார்கள். பழிக்குப் பழியாகத் தமிழர்களும் இவர்களைக் கொன்றிருக்கின்றார்கள். எனினும் சமாதானம் ஒப்பந்தம் முறிந்தபின்னர் புலிகள்கூட பொதுமக்களைக் கூட்டாகக் கொல்லுவதைத் தவிர்த்திருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலுக்குப் பதிலடியாக புலிகள் தென்பகுதியில் சிங்களவர்களைக் கொல்லவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் கூட்டம் தற்போதும் இங்குள்ளதுதான். ஆனால் இத்தகையோர் ஏன் புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடாத்தவில்லை என்பதைப் புரியாதவர்கள்.

உண்மையில் புலிகள்கூட அப்பாவிகளை இலக்குவைப்பது நமது விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த உதவாது என்பதை அனுபவரீதியாக உணர்ந்ததனால்தான் செய்யக்கூடியதாக இருந்தும் செய்யவில்லை.

மனிதன் அடக்குமுறையாளனாக அல்லது அடிமையாகத்தான் வாழமுடியும் என்ற சிந்தனையில் நீங்கள் இருக்கின்றீர்கள். இரண்டுக்கும் இடையே சமத்துவத்துடனும் இருக்கமுடியும் என்ற இன்னுமொரு வழி இருப்பதை உணரவில்லை.

ஆரிய இனம்தான் உலகில் சிறந்த இனம் என்று சொல்லி யூதர்கள் உட்பட மற்றையோரைக் கொன்றுகுவித்த ஜேர்மனியர்கள், உலக யுத்தத்தின் பின்னர் இணங்கிவாழ்வதுதான் சரியான வழி என்பதை உணர்ந்தார்கள்.

அதேபோல் வட அயர்லாந்து மக்களும் இணக்க அரசியலே சரியென்பதை உணரப் பலகாலம் எடுத்தாலும், கடைசியில் இணைந்துதான் வாழ்கின்றார்கள்.

தமிழர்களுக்கும் இப்படியான சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் கிடைத்திருந்தும், "வெட்டு ஒன்று துண்டு இரண்டு" என்ற கொள்கையோடு விடாக்கண்டனாக இருந்ததனால்தான் அழிவுகளைச் சந்தித்து தற்போது கூனிக்குறுகி நிற்கவேண்டிய நிலையில் உள்ளோம். இப்படியான பலவீனமான நிலையில் இருப்பதால்தான் சிங்களவர்கள் நமது தாயகத்தைக் கபளீகரம் செய்வதைக் கூடத் தடுக்கமுடியாமல் நிற்கின்றோம்.

முரண்டுபிடித்து நின்றால் நீங்கள் இன்னும் ஐந்து வருடங்களில் தாயகம் போகும்போது தமிழ்ப்பகுதி என்று ஒரு இடமும் இருக்காது என்பதைக் கண்டுகொள்வீர்கள். எனவேதான் மற்றைய சிறுபான்மை இனங்களோடு ஒன்றுபட்டு நமது தனித்துவத்தைக் காப்பாற்ற முதலில் முனையவேண்டும். இதற்கான முதலடியைத்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செய்துள்ளது.

கூலிக்கு வாந்தி எடுப்பவன் பொய்களை கக்குகிறான் என்றால் நீங்களுமா?

உண்மையும் புலியும்....

1985ம் ஆண்டு நெடுந்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்து பயணிகள் லோஞ்சியை இடைமறித்து சிங்கள காடைகடற்படை எல்லோரையும் வாளால் வெட்டியது. ஒரு ஆறுமாத குழந்தை உட்பட.....

அதை கேள்வியுற்ற புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதி புலேந்திஅம்மான் உடனேயே சில போராளிகளையும் அழைத்து சென்று ஒரு சிங்கள கிரமத்தில் 47ற்கும் மேற்பட்ட சிங்களவர்களை சுட்டுகொன்றார்கள் மீதிபேர்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்.

அது புலேந்திஅம்மானின் தனிபட்ட முடிவு.

தலைமையின் முடிவு............. உடனேயே புலேந்திஅம்மான் திருகோணமலைமாவட்ட தளபதி பொறுப்பில் இருந்து எடுக்கபட்டார். குபரப்பா திருகோணமலை தளபதியாக நியமிக்கபட்டார். புலேந்திஅம்மான் தண்டனையாக சதாரண போராளிகள்போல் சிலகாலம் இருந்தார்.

அதன்பின்பும் புலிகளின் தளபதியொருவரின் தனிபட்ட முடிவால் ஒரு படுகொலை நடந்தது. அவர் ஆறுவருடங்கள் எந்தபதவியுமின்றி சமையல் வேலையில் இருந்தார்.

"மக்களுக்காக போராடும் ஒரு போராளி குழு மக்களை இலக்கு வைப்பது என்பது சொந்த கொள்கைக்கு மாறானது" என்பதே தலைமையின் அன்றைய முடிவும் இன்றைய முடிவும்.

தவிர சந்திரிகா காலத்திலும் "வெற்றி நிற்சயம்' படைநடவடிக்கையின்போது பல சிங்க கிராமங்களில் மக்களை வெட்டினது இராணுவமே............. இராணுவத்திற்கு ஆள்சேர்க்க அவர்கள் போட்ட நரி நாடகம் அது.......

தற்போது மகிந்த போரை தொடங்கியபோதும்........... பல பஸ்களில் குண்டுவெடித்தது. (அதில் ஒன்று வெடிக்குமுன்பே கண்டுபிடிக்கபட்டது இடையில் ஏறிய ஒரு பெண்பயணிக்கு அந்த பொதியின் மேல் சந்தேகம்வர அது தடுக்கபட்டது. 32பேர் பயணித்துகொண்டிருந்த பஸ்சில் ஏறிய பெண்ணுக்கு அந்த பொதியின் மேல் சந்தேகம் வந்ததுதான் மர்மம்)

புலிகளின் மத்தியவங்கி தாக்குதலின்போது பல பொதுமக்கள் கொல்லபட்டார்கள்............. அது தவிர்க்க முடியாததாக இருந்தது மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதனாலேயே பல தாக்குதல்கள் தவிர்க்கபட்டன. மத்தியவங்கி தாக்குதல் அந்த நேரத்தில் தவிர்க்க முடியாததாக இருந்தது. சில கரும்புலி தாக்குதல்கள் மக்கள் கொல்லபடபோகிறார்கள் என்று தெரிந்தவுடனேயே இலக்கு அடைய முன்பே வெடித்து சிதறியிருக்கின்றது.

அந்த தியாகமெல்லாம்.............. நாலு சுவருக்குள் இருந்து நடுநிலமை வாந்தியெடுப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

எதையாவது எழுதினால் ஏதாவது ஒரு சிறிய ஆதாரத்தை வைத்த எழுத வேண்டும் எழுந்தமாதிரத்தில் எழுதுவதால். நீதிபதியாகிவிட முடியாது.

Link to comment
Share on other sites

stan13.gif... வாந்தி ... stan13.gif

இங்கு சிலருக்கு பெரிய பிரட்சனையாக இருக்கிறது! ... சாப்பாடு கீப்பாடு குழப்பித்தான் வாந்தி வரும்மென்று இல்லை, ஏதாவது நாற்றம் பிடித்ததுகளை கண்டாலும், மணந்தாலும் ... தவிர்க்க முடியாமல் போய் விடும்! ... இல்லை எடுக்காமல் வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டிருப்பியள் ஆணால் பேந்து கீழாலை கழிச்சிடும்! ... ஆகவே வாந்தி வந்தால் எடுங்கோ!00020071.gif

Link to comment
Share on other sites

தென் தமிழீழத்தில் முஸ்லீம்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் அழிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை இன்னும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் நிலங்கள் எவ்வளவு என்பது சம்பந்தனுக்கு வால்பிடிக்கும் உறவுகளுக்கு தெரியுமா ? அவர்களால் இராணுவத்திடம் காட்டிக்கொடுக்கப்படுவோம் என்பதனாலேயே தங்களது வீடுகளை சொந்தங்களை பிரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழும்( எனது சகோதரியின் குடும்பமும் அடக்கம்), முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகாமையில் வாழ்ந்த தமிழர்களின் அவலங்களை உணர்வீர்களா? மூதூரில் அரசசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முன்னின்றவர்கள் யாரென்று தெரியுமா? இவற்றுக்கெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் மன்னிப்பு கேட்பார்களா? கேட்க வைக்க சம்பந்தனால் முடியுமா?

இவற்றுக்கெல்லாம் சம்பந்தன் பதில் கூற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழான் அண்ணை

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அவர்கள் மன்னிப்பு கேட்டால்தான் நாம் மன்னிப்பு கேட்போம் என்பது..... அவர்களுடன் எம்மை ஒப்பிடுவதற்கு சமனானது. தவறு நடந்திருப்பின் அதை அடிப்படை மனித அறிவில் இருந்து உரியவர்களிடம் மன்னிப்பு கோருவது என்பது சிறப்பானது.

ஆனால் சம்மந்தன் புலிகளுடன் கூடிசென்றாரா கொலைசெய்வதற்கு...?

அல்லது புலிகளின் முக்கிய போராளியாக இருந்தாரா?

புலிகளின் சார்பில் மன்னிப்பு கோர சம்மந்தன் யார்?

தேர்தல் நேரத்தில் புலியை தெரியாது என்றார்கள்.... இப்போது புலிகள் செய்ததற்கு மன்னிப்பு?

இந்த கேள்விகளுக்கான பதில்களை சம்மந்தன் தந்துவிட்டே அவர்களிடம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும். இது இல்லாத பழியை புலிமீதுபோடுவதற்கு சம்மந்தனை இந்தியா பயன்படுத்தியுள்ளது. பிள்ளையானையும் கருணாவையும் ஓரம்கட்டடினால் தான் கிழக்கில் வாலாட்டலாம் என்பது ஐயாவின் கணக்கு.

எல்லோருக்கும் இப்போது கிடைத்திருப்பது புலியென்ற மேளம். போட்டு முழக்கிறாங்கள்!

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் தமிழர்களைக் கொன்று நிலத்தை அபகரித்தார்கள் என்றால் பதிலுக்குக் முஸ்லிம்களைக் கொலை செய்வதா? இது நியாயமில்லை. :rolleyes:

அவர்கள் தமிழர்களைக் கொலை செய்தால் பதிலுக்கு இலங்கையின் ஜனநாயக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாம். அல்லது ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் ஐநாவுக்கு கடிதங்கள் எழுதியிருக்கலாம். அட.. அதுவும் சரிவராவிட்டால் காந்தீய முறையில் அகிம்சா நெறியில் உண்ணாவிரதம் அல்லது முஸ்லீமே வெளியேறு என்று போராட்டங்கள் நடத்தியிருக்கலாம். இதுபோன்ற பல ஜனநாயக வழிமுறைகள் இருக்க, தமிழர்கள் பதிலுக்கு வன்முறையில் இறங்கியது தவறு. :wub:

1956 முதல் சிங்களவனால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழர் படுகொலைகளுக்குப் பின்னரும் இதே பாணியில் ஜனநாயக வழியில் போராடியிருந்தால் இன்று பயங்கரவாதி பட்டம் நமக்கு கிடைத்திருக்காது. தமிழீழமே கிடைத்திருக்கும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தமிழர்களைக் கொன்று நிலத்தை அபகரித்தார்கள் என்றால் பதிலுக்குக் முஸ்லிம்களைக் கொலை செய்வதா? இது நியாயமில்லை. :o

அவர்கள் தமிழர்களைக் கொலை செய்தால் பதிலுக்கு இலங்கையின் ஜனநாயக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாம். அல்லது ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் ஐநாவுக்கு கடிதங்கள் எழுதியிருக்கலாம். அட.. அதுவும் சரிவராவிட்டால் காந்தீய முறையில் அகிம்சா நெறியில் உண்ணாவிரதம் அல்லது முஸ்லீமே வெளியேறு என்று போராட்டங்கள் நடத்தியிருக்கலாம். இதுபோன்ற பல ஜனநாயக வழிமுறைகள் இருக்க, தமிழர்கள் பதிலுக்கு வன்முறையில் இறங்கியது தவறு. :unsure:

1956 முதல் சிங்களவனால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தமிழர் படுகொலைகளுக்குப் பின்னரும் இதே பாணியில் ஜனநாயக வழியில் போராடியிருந்தால் இன்று பயங்கரவாதி பட்டம் நமக்கு கிடைத்திருக்காது. தமிழீழமே கிடைத்திருக்கும்..! :(

ஓமோம்

நேற்றுப்பிறந்திருந்தாலும் இதை எழுதியிராது

இவ்வளவும் செய்து பாராத இந்த இனத்துக்காக

இந்த பிரபாகரனுக்கு ஏன் தேவையில்லாத வேள்வி

Link to comment
Share on other sites

இலங்கையின் ஜனநாயக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்திருக்கலாம்.

67 கலவரத்தில் புகார் கொடுத்தாங்க ஐயா. உங்கட கம்முனாட்டி காவல்துறை அங்கால காசை வாங்கிட்டு, மிச்சமிருந்த இடங்களில் இருந்தும் தமிழன துரத்திப் போட்டான். ஆனா ஒண்டு, அப்ப நீங்க சொல்ற இந்த பகிரங்க கடிதம் எழுதிற மெதட் இருக்கல்ல. அப்படிச் செய்திருந்தால் தமிழர்களுக்கு ஒரு சுமூகமான அர்த்தமுள்ள ஒரு தீர்வை வழங்கி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் சிங்களவர் பக்கம் நியாயம் இருந்ததன் காரணமாக தமிழரான திரு ராமநாதன் அவர்கள் நம்மை தற்போது உள்ளஉயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு காரணகர்த்தாக்களான நம்மை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சென்று சிங்களவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்ததற்காகவும்

அதன்காரணமாக தமிழர்கள்மேல் முஸ்லிம்களுக்கு வன்மம் ஏற்பட்டதற்காகவும்

தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்ததற்கு எதிராக தமிழர்கள் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்து சிங்களவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும்

அந்த மன உளைச்சல் காரணமாக சத்தியாக்கிரகம் இருந்த தமிழர்களை தாக்கி மண்டைகனை உடைத்ததன் காரணமாக (மண்டை உடைந்தது தமிழனுக்குத்தான் பிரச்சினை இல்லை கேட்கவும் நாதி இல்லை) தாக்கிய காடையர்களுக்கும் பொலிசாருக்கும் கை கால்களில் ஏற்பட்ட காயங்கள் வலி போன்றவற்றிற்காகவும் தமிழன் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

ஓமோம்

நேற்றுப்பிறந்திருந்தாலும் இதை எழுதியிராது

இவ்வளவும் செய்து பாராத இந்த இனத்துக்காக

இந்த பிரபாகரனுக்கு ஏன் தேவையில்லாத வேள்வி

:unsure::(:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்

நேற்றுப்பிறந்திருந்தாலும் இதை எழுதியிராது

இவ்வளவும் செய்து பாராத இந்த இனத்துக்காக

இந்த பிரபாகரனுக்கு ஏன் தேவையில்லாத வேள்வி

இசைகலைஞன் இரட்டை அர்த்தபட எழுதியதை நீங்கள் புரியவில்லை என்று நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்

நேற்றுப்பிறந்திருந்தாலும் இதை எழுதியிராது

இவ்வளவும் செய்து பாராத இந்த இனத்துக்காக

இந்த பிரபாகரனுக்கு ஏன் தேவையில்லாத வேள்வி

:( :( :o

டங்குவாருக்கு, கிரகநிலை சரியில்லைப் போலகிடக்குது. :unsure:

விசுகு நீங்கள் இசை எழுதிய உள்குத்தை கவனிக்காமல் போட்டு மொங்காதேங்கோ... மனுசன் ஏற்கெனவே.... நொந்து போயிருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்ஙகு ஒரு பச்சை குத்தியிருக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.