Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!!

Featured Replies

இப்ப சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் எப்படி புலிகளை பலவீனமாக்கினோம் என்று வெளிப்படையாக சிங்கள அரசு சொல்வது போல், சில வருடங்களின் பின் "நாம் எப்படி புலம் பெயர் தமிழ் மக்களின் பலத்தை உடைத்து எல்லாவற்றையும் பலவீனமாக்கினோம்" என்றும் சொல்வார்கள். அப்போதும் 'உச்' கொட்டின படி எம் தலைவிதியை நொந்து கொண்டு "எமக்கு இராசதந்திரம் தெரியாது' என்று புலம்புவோம்.....

தமிழனாக பிறந்ததை விட என் வாழ்வில் நான் செய்த கேடு கெட்ட விடயம் ஒன்றுமில்லை...

... உண்மையாக நாம் எம்மினத்தின் விடிவில் அக்கறை கொண்டிருந்தால் ... இந்த புலத்தில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக எல்லோரையும் குழப்பி, காட்டிக் கொடுத்து வரும் ... இந்த நெடியவன் தலையிலான அனைவரையும் இங்குள்ள காவல்துறைக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் .... இதன் மூலம் துரோகி பட்டம் கிடைக்குமானால் ... அதை விட சந்தோஷமான விடயம் ஒன்றுமில்லை! ... இதை யார் செய்வார்களோ ... அவர்களை பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும்! ...

Edited by Nellaiyan

மாத்தையா புலிகளால் கைத்து செய்ய பட்டு விசாரணைகளின் போது ஒவ்வொரு நாளும் புலிகளின் ஒவ்வொரு தளபதிக்கும் தனக்கும் தனது சதிக்கும் தொடர்பு எண்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.... அதில் கேணல்களான தீபன் அண்ணை, ஜெயம் அண்ணை , சொர்ணம் அண்ணை , தொடக்கம் பல தளபதிகள் பொறுப்பாளர்கள் அடக்கம்... அதிலை தீபன் அண்ணையும் ஜெயம் அண்னையும் விசாரிக்க பட்டதுமே மாத்தையாவின் நோக்கம் தெளிவாக புரிந்து விட்டது...

இப்ப KP யின் நோக்கமும் அப்படித்தான்... நாடுகடந்த அரசை சிதைப்பதுவே .... இதை தான் கெகலிய சொன்னவன் என்ன விலை கொடுத்தேனும் நாடுகடந்த அரசை சிதைப்போம் எண்று ... அதுக்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன எண்று...

சரியாகச் சொன்னீர்கள். அதுதான் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. அவர் வருவார் இவர் வருவார் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். சென்றுவந்த 9 பேரும் இனியொரு முறை செல்வார்களோ தெரியாது.

இங்கே பல மூத்த போராளிகள் இவ்வாறான எழுத்துக்களை நிறுத்தும்படி பலதடவை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் இவர்கள் தொடந்து இவ்வாறு செய்வதன் பின்னணி இதுதான்.

அண்மையில் தாங்கள் சிலரை காட்டிக் கொடுப்பதற்கும் விடுதலைப்புலிகளின் மூத்த பேராளிகள் சிலர் புலத்தில் இயங்குகிறார்கள் எனபதை உலகநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கும் விடுதலைப்புலிகளின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி பதிவு சங்கதி விடயம் தொடர்பாக இராம சுபனின் பேரில் ஒரு பொய் அறிக்கையை இவர்களே வெளியிட்டுவிட்டு அதற்கு தாங்கள் எற்கனவே தாயரித்து வைத்த காகிதப்புலிகள் என்ற மறுப்பறிக்கையை தாங்களே விடுகிறார்கள்ஐயோ பாவம் ஸ்கைப்பில் கொன்பிறன்ஸ் சிஸ்டத்தில்; இருந்து எல்லோருடனும் கதைத்துவிட்டு அதை கட்பண்ணாமல் இந்த அறிக்கை மோசடியை செய்யும் விடயத்தை இவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதை சம்பந்தப்பட்ட பலர் ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பதாக அறிகிறோம்.

ஆக மொத்தத்தில் சிறீலங்கா அரசுக்காக கருணா மூலமாக வேலை செய்யும் இந்தக் கும்பல் எல்லோரையும் முட்டாளாக்கப் பார்க்கிறது

ஒக்டோபர் மாதம் இவர்களுக்கு எதிராக தொடரப்போகும் வழக்குக்கான ஆதாரங்களை நாங்கள் பெருமளவுக்கு திரட்டிவிட்டோம்;; இந்த வழக்கின் போது நிச்சயமாக இவர்கள் எவ்வாறு ஈழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்கள் காட்டிக் கெடுக்கிறார்கள் என்ற பல உண்மைகள் வெளிவரும்.

அது வரை தயவு செய்து விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சொல்வது தான் உண்மை என்பதை புரிந்து கௌ;ளுங்கள்.இந்தக் கும்பல் செல்வதை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று 32 ஆயிரம் மாவீரர்களின் பேரால் மன்றாட்டமாக கேட்டக் கொள்கிறேன்

அந்த மூத்தததததததததததததததததததததத நீங்களும் இன்ரபோல் லிஸ்டிலையாம் உங்:கள எப்புடி கே.பி.விüட்டுவைப்:பறாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

தற்போது நாடு கடந்த அரசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்

எம்மோடு நின்றவர்கள் எமக்காக பாடுபட்டவர்கள்

ஆனால் அவர்கள்மீது நாம்பலவாறு தூற்றிக்கொண்டிருக்கின்றோம்

அவர்களை நம்பி வாக்களித்தநாம்...

அவர்களுக்கு தொடர்ந்து இடைஞ்சல்களையே செய்தபடியுள்ளோம்

இது நல்லதல்ல...

அதற்கு மாறாக

அவர்களுக்கு என்ன தேவை

அவர்களது அடுத்த நடவடிக்கை என்ன

அவர்களது வேலைப்பளு என்ன

அவர்கள் எம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார்கள்.....

போன்றவற்றை அறிந்து அவர்களுடன் தொடர்புகளைப்பேணி

அவற்றை செய்து கொடுத்தலே தற்போது நாம் செய்யவேண்டியவை.

இதையே நான் செய்கின்றேன்

அதனால்தான் நான் தெளிவாக உள்ளேன்

மற்றவர்களையும் அவர்களுடன் இணையுமாறு கேட்கின்றேன்நன்றி

என்னைப்பொறுத்தவரை

தற்போது நாடு கடந்த அரசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்

எம்மோடு நின்றவர்கள் எமக்காக பாடுபட்டவர்கள்

ஆனால் அவர்கள்மீது நாம்பலவாறு தூற்றிக்கொண்டிருக்கின்றோம்

அவர்களை நம்பி வாக்களித்தநாம்...

அவர்களுக்கு தொடர்ந்து இடைஞ்சல்களையே செய்தபடியுள்ளோம்

இது நல்லதல்ல...

அதற்கு மாறாக

அவர்களுக்கு என்ன தேவை

அவர்களது அடுத்த நடவடிக்கை என்ன

அவர்களது வேலைப்பளு என்ன

அவர்கள் எம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார்கள்.....

போன்றவற்றை அறிந்து அவர்களுடன் தொடர்புகளைப்பேணி

அவற்றை செய்து கொடுத்தலே தற்போது நாம் செய்யவேண்டியவை.

இதையே நான் செய்கின்றேன்

அதனால்தான் நான் தெளிவாக உள்ளேன்

மற்றவர்களையும் அவர்களுடன் இணையுமாறு கேட்கின்றேன்நன்றி

தேவையான கருத்து. தொடர்ச்சியாக இடைஞ்சல் கொடுத்துகொண்டிருந்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டு போய்விடுவார்கள். சிங்களவன் கஷ்டப்பட்டு செய்ய நினைத்ததை தமிழர்களே செய்து முடித்து விடுவார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடன் கதைத்ததில்...

தமது நேரத்தையும்

தமது சொந்த பணத்தையும்

செலவளித்து

மக்களிடமும் கேலிப்பேச்சு வேண்டிக்கொண்டிருப்பதாக கவலைப்பட்டார்கள்

... மே18 முள்ளிவாய்க்கள் அவலங்கள் நடந்து ஒரு வருடம் தாண்டி விட்டது ... புலத்தில் மே18இற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பல கட்டமைப்புகள் இயங்கின, அதிலொன்றே காஸ்ரோவின் சர்வதேச பிரிவு! ... இவர்களுக்கிடையேயான தொடர்புகளோ, கருத்தொற்றுமைகளோ எந்தக்காலத்திலும் நல்லதாக இருந்ததில்லை, காஸ்ரோக்கள், மற்றவற்றை முழுமையாக விழுங்கவோ/அழிக்கவோதான் மே18இற்கு முன்னம் கூட முனைந்தனர்!!

ஆனால் மே18 இற்குப்பின் ... இந்த நெடியவன் தலைமையிலான காஸ்ரோக்கள் ..

1) மாற்று இயங்கங்கள் மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் ஏனைய புலத்தில் இயங்கிய அமைப்புகளோடு தொடர்பு கொண்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட முயலவில்லை!

2) கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை மீளாய்வு செய்து சரியான பாதையில் செயற்பட முயற்சிக்கவே இல்லை!

3) சரி/பிழ/தவறுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கே துரோக பட்டமளித்து இவர்களும், இவர்களுடைய பினாமிகளின் ஊடகங்களும் செயற்பட்டதுதான் இதுவரை இவர்கள் செய்தது!

4) ....

... இவர்களின் இந்த புரியாத புதிரான செயற்பாடுகளுக்கு காரணம், இவர்கள் கைகளில் இருக்கும் பணங்களும், இவர்களுடைய/இவர்களின் பினாமிகளின் பெயர்களில் முதலிடப்பட்டவைகளுமே! இவற்றை காப்பதற்கே இவர்கள் இக்கூத்தை ஆடுகிறார்கள்! மே18இற்கு முன், கடந்த ஒரு வருடங்களாக புலத்தில் சேகரித்த நிதி எவையும் களத்துக்கு போகவில்லை, மாறாக இவர்களினால் முடக்கப்பட்டுள்ளது!

இவர்களது இச்செயற்பாடுகளே, விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளுடன் கடந்த காலங்களில் இயங்கிய பலரை சிங்களத்தின் வலையிலும் வீழ்த்தியுள்ளது/இணைய வைக்கிறது!!!

குறிப்பாக நாடு கடந்த தமிழீழ செயற்பாடுகளை முற்றாக முடக்குவதிலேயே இவர்களின் குறி உள்ளது! அதற்கு தொடர்ந்து இப்படியான வதந்திகளை(இணையத்தள செய்திகளுக்கு மேலாக அநாமதேய மெயிலுகள், கைத்தொலைபேசி தகவல்கள், ..) பரப்பி வருகிறார்கள்!!

... மே18இன் உடனான தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவிற்கு இந்த காஸ்ரோக்களே மிகப்பெரிய பங்காளிகள் ... கடந்த யுத்த நிறுத்த காலங்களில் புலம்பெயர் தேசம் வந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தகர்கள் பலர்(ஏறக்குறைய அனைவரும்) இலங்கை/இந்திய/சர்வதேச புலனாய்வுத்துறையினரின் வலைகளில் வீழ்வதற்கு இவர்களே இடைத்தரகர்களாக செயற்பட்டுள்ளனர்.

இன்று நெடியவன் தலைமையிலான காஸ்ரோக்களும், கேபியும் இணைந்தே செயற்படுவதாக தெரிகிறது! இரு கும்பல்களின் இலக்கும் ...

எமது இனத்தை அழிக்க, சிங்களத்துக்கு துணைபோவதே!!

சிங்களத்துக்கு காட்டுக் கொடுப்பதுவே!

ப்லம்பெயர் மக்களை குழப்புவதுமே!

... இவ்விரு கும்பல்களும் சிறிலங்கா புலனாய்வாளர்களினாலே இயக்கப்படுகிறது??

1995ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த பால்குடி நெடியவனுக்கு தேசியத்தலைவர் பட்டம் கேட்குதோ???? இப்பால்குடி இவ்வளவு விரைவில் எப்படி முன்னுக்கு வந்தார்??

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடம்

கேள்விகளும்

கோரிக்கைகளும்

வசைபாடுதலும்

வம்புக்கிளுத்தலும்

வகைப்படுத்தலும்

.................................???

இருக்கே தவிர

பதில்இல்லை

வழி இல்லை

ஒற்றுமைக்கான முயற்சி இல்லை

தெளிவு இல்லை

புரிதல் இல்லை

உழைப்பு இல்லை

மருந்தும் இல்லை............

இல்லை இல்லை இல்லை...........

காஸ்ரோக்களே!

தங்களிடம்

கேள்விகளும்

கோரிக்கைகளும்

வசைபாடுதலும்

வம்புக்கிளுத்தலும்

வகைப்படுத்தலும்

.................................???

இருக்கே தவிர

பதில்இல்லை

வழி இல்லை

ஒற்றுமைக்கான முயற்சி இல்லை

தெளிவு இல்லை

புரிதல் இல்லை

உழைப்பு இல்லை

மருந்தும் இல்லை............

இல்லை இல்லை இல்லை...........

கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன் வழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி :

Dr. Joseph Chandrakanthan, Bioethicist, Centre for Clinical Ethics. 15.08.2010

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.

தமிழர்களும் சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் ஓர் பண்பாட்டு வழமை உள்ளது. அது என்னவெனில் பிணக்குகளால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் பல பெரும் பாலும் திருமணத்தில் அல்லாமல் மரணச் சடங்கிலேயே ஒன்று சேருகின்றன.

தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரு பாலாருமே பாரிய சாவுகளையும் முடிவில்லாத மரணச் சடங்குகளையும் கொலைகளையும் அங்கவீனங்களையும் சிதைவுகளையும் பாரிய அழவிலான தனியார் சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் இழந்து உள்ளோhம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம். இந்த நிலை இனிமேலும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. எமது மண்ணிலே போரின் இறுதி நாட்களில் நடந்து முடிந்த பாரிய மனித அவலத்தை இந்த சுதந்திர உலகம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். இவர்களுடைய நல் எண்ணத்திலும், தர்மத்திலும் நாம் தங்கியிருக்க முடியாது. எவ்வளவோ விடையங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையும் விட இன்னும் எவ்வளவோ விடயங்கள் அவசியமானவை. பண்பாட்டுரிமை, மொழியுரிமை, பிரதேச உரிமை என்பன அனைத்து இனங்களுக்கும் முக்கியமானவை.

ஆனால் அவற்றிலும் பார்க்க உணவு, உடை, சுகாதாரம், இருப்பிடம் என்பன அவற்றையும் விட மிக மிக முக்கியமானவையாகவும் பின்போடப்பட முடியாதவையுமாகும். நேர்டொ (Nநுசுனுழு) அமைப்பு எமது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் செய்யாவிடினும் அதை யாராவது ஆரம்பித்து வைக்கவேண்டும். அனாதை சிறார்களுக்கும், விதவைகளுக்கும் உணவளிக்கவும், அகதி முகாம்களில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கவும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளவர்களை சென்று பார்க்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்பார்க்க முடியாது. எமது சிறார்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு நாம் முதற்படி எடுத்தாக வேண்டும். எமது சார்மனைக்கதிரை விமர்சனம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கும், முகாம்களில் இருப்பவர்களுக்கும் எந்த நன்மையையும் தரப்போவதில்லை. உண்மையான மனிதாபிமானச் சேவை செய்பவர்கள் ஊடாகத் தான் நாம் அவர்களைச் சென்றடையலாம்.

கலாநிதி சந்திரகாந்தன் அவர்கள்

ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில்

உயிரியல் விஞ்ஞானத்திலும், சமய கற்கை நெறியிலும் பேராசிரியராக உள்ளதுடன்,

யாழ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தின் ஸ்தாபகருமாவர்.

சந்திர காந்த பாதிரியார் ... 1995ம் ஆண்டு யாழ் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி லண்டன் வந்தபோது, சிங்களத்தின் அடக்குமுறைகளை விபரித்தபோது கண்ணீர் சொரிய பலர் கேட்டோம், அதற்கு மேல் விடுதலைத்தீயை புலத்தில் உறுதியாக/எத்தடை வரினும் முன்னெடுக்க வேண்டும் என்பதை ஜேசுவை கொண்டும் சத்தியம் செய்து சொன்னார் ... புல்லரித்தோம் அப்போது! ... இன்று ... இது!!! நாளை ... எதோ????

படித்தனீங்கள் அல்லோ???? இது வரை எங்கிருந்தனீங்கள்??? ஏன் இதுவரை உதுகள் உங்கள் அறிவுசார் மூளைக்கு தெரியவில்லை??? ஏன் உறுதியாக அப்போதே கூறியிருக்கலாம்தானே?? சுடலை ஞானமோ அல்லது எங்கை காத்து வீசுதென்று சாய காவலிருந்தனீர்களோ???

உது ஒருபுறம் கிடக்க பாதிரியார், நாம் எல்லாத்தையும் விட்டு சேரத்தயார்! ஆனால் சிங்களவன் எம்மை சேர்க்க தயாரா??? குடியேற்றங்களை அவன் நிறுத்துவானா?? தமிழ் மக்கள் மானத்துடனும்/மரியாதையுடனும் வாழ ஏற்ற தீர்வை தருவானா?? ...?????????? ... உதையும் ஒருக்கால் கேட்டு விட்டு, இன்னொரு விரிவுரை ஆற்றுங்கோவன் பாதிரியாரே!!

வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனியார் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லையென்றும் இராணுவ நிலைகள் அரச காணிகளில் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் எவ்விதமான இராணுவக் குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வில்லையென்றும் குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (17) பிற்பகல் சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக் காதிருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதுடன் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் காடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டதால், வன்னியின் காட்டுப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு ஏழு, ஹோட்டன் பிளே சிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத் தில் இடம்பெற்ற விசாரணையில் சுமார் இரண்டரை மணித்தியாலமாக பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளித்தார்.

பாதுகாப்பு நிலைகளைப் படிப்படியாக வேறிடங்களுக்கு மாற்றி வருகிறோம். ஆனால், தனியார் காணிகளில் எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை. பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும். அரச காணிகளிலேயே பாதுகாப்பை ஸ்தாபித்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேடே கோத்தபாயவே சொல்லி விட்டார் இனி வடகிழக்கில் தேனாறும் பாலாறும் ஓடப் போகிறது.

அவர் சொன்னாராம் இவர் இணைக்கிறாராம்.

உது ஒருபுறம் கிடக்க பாதிரியார், நாம் எல்லாத்தையும் விட்டு சேரத்தயார்! ஆனால் சிங்களவன் எம்மை சேர்க்க தயாரா??? குடியேற்றங்களை அவன் நிறுத்துவானா?? தமிழ் மக்கள் மானத்துடனும்/மரியாதையுடனும் வாழ ஏற்ற தீர்வை தருவானா?? ...?????????? ... உதையும் ஒருக்கால் கேட்டு விட்டு, இன்னொரு விரிவுரை ஆற்றுங்கோவன் பாதிரியாரே!!

தாங்கள் இவ்வளவு நாளும் எழுதியவற்றில் உருப்படியான ஒரு கருத்து.ஒரு பச்சைப்புள்ளி இந்தக் கருத்துக்கு மட்டும்.

உது ஒருபுறம் கிடக்க பாதிரியார், நாம் எல்லாத்தையும் விட்டு சேரத்தயார்! ஆனால் சிங்களவன் எம்மை சேர்க்க தயாரா??? குடியேற்றங்களை அவன் நிறுத்துவானா?? தமிழ் மக்கள் மானத்துடனும்/மரியாதையுடனும் வாழ ஏற்ற தீர்வை தருவானா?? ...?????????? ... உதையும் ஒருக்கால் கேட்டு விட்டு, இன்னொரு விரிவுரை ஆற்றுங்கோவன் பாதிரியாரே!!

தமிழர்கள் முதல் தென்னிலங்கையில் வாழ்வதை விடுவார்களோ? வீடு கொட்டல் லொட்ஜ் எல்லாம் கட்டி அங்க இருக்கின்றீர்கள். நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டியிருக்கின்றீர்கள். எல்லாத்தையும் காவிக்கொண்டு தங்கட சொந்த இடமான வடகிழக்குக்கு வருவார்களோ? சிங்களச்சனம் தமிழன்ட இடத்தில குடியேறினா என்ன புத்த விகாரை கட்டினால் என்ன? சிங்களவன் அடிக்க அடிக்க அவன்ட இடத்தபோய் வாழத்தொடங்கியது முதல்ல தமிழர்கள்தானே? அரவாசி சனம் அவன்ட இடத்தில இருந்துகொண்டு எங்கட இடத்துக்கு அவன் வரக்கூடாது என்கிறது முதல்ல என்ன நியாயம்? இன்றய அளவில் தமிழர்களில் பாதி இஸ்லாமியத் தமிழர்கள் அவர்களை ஒதுக்கிவிட்டு மலயகத்தமிழக்களும் தென்னிலங்கையில் இருக்க. வடகிழக்கில் இருந்து தென்னிலங்கையில் போனவர்கள் அங்கேயே இருக்க. பத்து லட்சத்துக்கும் மேல புலம்பெயர்ந்திருக்க. பிரதேசவாதமாக கிழக்கு விரிசல் விழுந்திருக்க யாழ்குடாநாடு சிங்களத்துடன் அனுசரித்திருக்க எஞ்சிய 3 லட்சம் மக்களுக்கும் தமிழீழத்தை பெற்றுத்தர சர்வதேசம் கொடிகாட்டும் என்று நம்பியவர்கள் நாங்கள். இப்ப நிலமை அதைவிட மோசம்.. முதல்ல தமிழீழத்தை சிங்களவன் பிரித்து தர முற்பட்டாலும் பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் பொருளாதார நலன் பிரதேசவாதம் மத இறுக்கம் போன்ற காரணிகளால் அதை ஏற்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதே யதார்த்தம். தமிழர்கள் வாழ்வு சிங்களவர்களுடன் இணைந்துதான் என்பது சிங்களவரின் விருப்பத்திற்கு அப்பால் தமிழர்களின் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வெளிநாட்டுக்கு ஓடினால் என்ன தென் பகுதிக்கு ஓடினால் என்ன அது வடக்கு கிழக்கில் சிங்கள அரசின் கொடுமையால் ஓடியவர்கள்.இப்போ வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குடி பெயரும் சிங்களவர்கள் அடாத்தாக தமிழர் நிலங்களை அபகரித்து வாழ்கிறார்கள்.புலிகள் இருந்த போது அடக்கி வாசித்தவர்கள் இப்போ ஓடி ஒடி காணிகள் பிடிப்பதும் சந்திக்கு சந்தி புத்தர் சிலையும் வைக்கிறார்கள்.

தென்பகுதிக்கு போன தமிழர்களை உதாரணமாக எடுத்தால்,வெள்ளவத்தையில் சந்திக்கு சந்தி வைரவர் சிலையை வைக்க முடியுமோ? அப்படி வைக்க முடியுமாயின் தமிழருக்கு பிரச்சனையே இல்லையே?

தெற்கிலும் அடிமை, வடக்கிலும் அடிமை வாழ்வு தானே தமிழர்கள் வாழ்கிறார்கள்? இது தான் யதார்த்தம்.

இதுவரை நடந்த சம்பவம் இதுதான்.....

முள்ளிவாக்காலுக்கு பிறகு புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய அறிவித்தல் வந்தவுடன் சிறீலங்கா அரசு கொஞ்சம் அதிகமாகவே பயப்பிட்டது.

அதை அழிக்க என்ன செய்யலாம் என்ற சிறீலங்கா அரசு யோசித்தது.அப்போது தான் கேபிக்கு நெடியவனுக்கமான முரண்பாடு அதற்கு தெரிய வந்தது. இதை பயன்படத்த அவர்கள் திட்ட மிட்டார்கள்;

சிங்கப்பூரில் இருந்து இயங்கும் பயங்கரவாத தத்துவாசிரியர்? கருணா ... உட்டபட 5 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது.

இந்தக் குழு முதலில் நெடி பிரிவன் நெருங்கிய சகாவான மலேசியா ராஜன் என்பவரை கைக்குள் போட்டுக் கொண்டது.(இவர் இப்போது சிறலங்கா அரசாங்கத்தோடு வெளிப்படையாக கொழும்பில் இருந்து செயற்படுகிறார்)அவர் மூலமாக கேபி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதுடன் கேபிக்கும் நெடியவன் பிரிவுக்குமான முரண்பாட்டை யும் வளர்த்து. நாடுகடந்த அரசுக்கு போட்டியாக மக்கள் பேரவைகளையும் உருவாக்கும் திட்டம் சிங்கப்புரில் கருக் கொண:டு ராஜன் மூலமாக நோர்வேக்கு வருகிறது.

கேபி துரோகி கேபியோடு முன்னர் செயற்பட்டவர்கள் துரோகிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உரிய முறையில் வழிநடத்தக் கூடிய மூத்த போராளிகள் துரோகிகள் என்ற பிரச்சாரத்தை புலத்தில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சிங்கப்பூரில் இருந்து வருகிறது.

எல்லாரையும் குழப்பி அடிக்க புரட்டுக்களோடு எவ்வளவு பெரிய பொய்யர்கள் KP க்கு ஆதரவாக கிழம்பி இருக்கிறீயள் எண்டதுக்கு இது நல்ல சாட்ச்சி...

சந்தேக நபர்களுக்கு விடுதலைப் புலி உறுப்பினரான மலேஷியவைச் சேர்ந்த ராஜன் என்பவர் நிதி வழங்கினார். இவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஒரு மில்லியன் ரூபா அனுப்பியிருந்தார்

Eelanatham

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74471&pid=605609&st=0&#entry605609

தமிழர்கள் வெளிநாட்டுக்கு ஓடினால் என்ன தென் பகுதிக்கு ஓடினால் என்ன அது வடக்கு கிழக்கில் சிங்கள அரசின் கொடுமையால் ஓடியவர்கள்.

இது உண்மையில் உண்மையா?

சிங்கள அரசின் ஒடுக்குமுறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பொருளாதரா மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்தவர்களே 90 வீதத்திற்கும் மேலானவர்கள். புலப்பெயர்வின் பெரும்பான்மை புலம்பெயரக்கூடிய பணம் இருந்தவர்களாலேயே சத்தியப்பட்டது. சிங்கள ஒடுக்குமுறையால் அனைத்தையும் இழந்த அகதிகளில் வறுமைப்பட்டோர் எவரேனும் பத்து இருபது லட்சங்கள் கொடுத்து புலப்பெயர முடிந்ததா? இன்றும் பல லட்சம் அகதிகள் தமிழ்நாட்டிலும் உள்நாட்டிலும் இருக்கின்றார்கள் இவர்களால் புலம்பெயர முடிந்ததா? 58 லும் 83 லும் சிங்களவர்கள் தென்னிலங்கையில் எத்தனை அடி போட்டார்கள் அப்படி இருந்தும் அங்கே போய் ஒட்டிக்கொள்ளவில்லை? ஏன் சிங்கள ஒடுக்குமுறைக்கெதிரான போரில் இருந்து அன்னியப்படும் மனோநிலை எமக்கு வந்தது? இங்கே பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் புலிகளாலும் ஆபத்து என்றே பதியப்பட்டது. சிங்கள ஒடுக்குமுறையை நான் மறுக்கவில்லை ஆனால் நிச்சயம் புலப்பெயர்வுக்கு சிங்கள ஒடுக்குமுறை மட்டும் காரணம் இல்லை என்பது உண்மை.

இப்போ வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குடி பெயரும் சிங்களவர்கள் அடாத்தாக தமிழர் நிலங்களை அபகரித்து வாழ்கிறார்கள்.புலிகள் இருந்த போது அடக்கி வாசித்தவர்கள் இப்போ ஓடி ஒடி காணிகள் பிடிப்பதும் சந்திக்கு சந்தி புத்தர் சிலையும் வைக்கிறார்கள்.

சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது. சிங்கள ஆக்கிரமிப்பு தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது குடியேறும் ஒவ்வொரு சிங்களவனிடமும் இலங்கைத் தீவு எங்களது என்ற ஒரு உணர்வு இருக்கின்றது. இதே உணர்வோடு எம்மால் மீள எமது பகுதிகளுக்கு செல்ல முடியுமா? உண்மையில் சிங்களவன் உயிரைக்கொடுத்து போராடி மேலதிகமாக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்கின்றான். எம்மால் அவனளவு ஒற்றுமையுடன் போராடி தடுக்க முடிந்ததா? சிங்கள ஒடுக்குமுறையை காரணம் காட்டி உண்மையில் நாம் தப்பித்துக்கொள்வது எம்மை நாமே ஏமாற்றுவதாகவே உணர்கின்றேன். எமக்குள் இருக்கும் பிரச்சனைகளே சிங்கள ஆக்கிரமிப்புக்கான பெரியளவு அதிகாரத்தை வழங்கியது.

தென்பகுதிக்கு போன தமிழர்களை உதாரணமாக எடுத்தால்,வெள்ளவத்தையில் சந்திக்கு சந்தி வைரவர் சிலையை வைக்க முடியுமோ? அப்படி வைக்க முடியுமாயின் தமிழருக்கு பிரச்சனையே இல்லையே?

தெற்கிலும் அடிமை, வடக்கிலும் அடிமை வாழ்வு தானே தமிழர்கள் வாழ்கிறார்கள்? இது தான் யதார்த்தம்.

தெற்கு வடக்கு மட்டும் இல்லை கப்பலில் கனடா வந்து கெஞ்சிக்கொண்டிருப்பதும் அடிமைவாழ்வுதான். நானும் அடக்கம். ஆனால் அடிமைத்தனம் என்பது ஒரு உணர்வு. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். எல்லா இனங்களிலும் இது சாத்தியம் இல்லை. எமக்கு முதன் முதலில் சாதி ரீதியாக ஒரு அடிமைத்தன உணர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. தனி மனித மனதில் சமூக மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. சுயமரியாதையில் அடிப்படையில் பங்கம் ஏற்பட்டுவிட்டது. இதுவே எமது ஒற்றுமை எதிர்ப்புணர்வை சீரளித்த உளவியல் காரணி. பெரும்பாலானவர்களுக்கு நான் உட்பட அடிமை வாழ்வு இயல்பானது. சாதராணமானது. கரும்புலி வெடி வெடி என்று வெடித்துக்கூட இந்த உணர்வை சரிப்படுத்த முடியவில்லை. இறுதியில் அடிமை உணர்வே வென்றது.

(எனது கருத்துக்களை தர்க்கமாக எடுக்காமல் என்னொருவகை சிந்தனை முறையாக எடுக்கவும்)

இது உண்மையில் உண்மையா?

சிங்கள அரசின் ஒடுக்குமுறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பொருளாதரா மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்தவர்களே 90 வீதத்திற்கும் மேலானவர்கள். புலப்பெயர்வின் பெரும்பான்மை புலம்பெயரக்கூடிய பணம் இருந்தவர்களாலேயே சத்தியப்பட்டது. சிங்கள ஒடுக்குமுறையால் அனைத்தையும் இழந்த அகதிகளில் வறுமைப்பட்டோர் எவரேனும் பத்து இருபது லட்சங்கள் கொடுத்து புலப்பெயர முடிந்ததா? இன்றும் பல லட்சம் அகதிகள் தமிழ்நாட்டிலும் உள்நாட்டிலும் இருக்கின்றார்கள் இவர்களால் புலம்பெயர முடிந்ததா? 58 லும் 83 லும் சிங்களவர்கள் தென்னிலங்கையில் எத்தனை அடி போட்டார்கள் அப்படி இருந்தும் அங்கே போய் ஒட்டிக்கொள்ளவில்லை? ஏன் சிங்கள ஒடுக்குமுறைக்கெதிரான போரில் இருந்து அன்னியப்படும் மனோநிலை எமக்கு வந்தது? இங்கே பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் புலிகளாலும் ஆபத்து என்றே பதியப்பட்டது. சிங்கள ஒடுக்குமுறையை நான் மறுக்கவில்லை ஆனால் நிச்சயம் புலப்பெயர்வுக்கு சிங்கள ஒடுக்குமுறை மட்டும் காரணம் இல்லை என்பது உண்மை.

சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது. சிங்கள ஆக்கிரமிப்பு தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது குடியேறும் ஒவ்வொரு சிங்களவனிடமும் இலங்கைத் தீவு எங்களது என்ற ஒரு உணர்வு இருக்கின்றது. இதே உணர்வோடு எம்மால் மீள எமது பகுதிகளுக்கு செல்ல முடியுமா? உண்மையில் சிங்களவன் உயிரைக்கொடுத்து போராடி மேலதிகமாக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்கின்றான். எம்மால் அவனளவு ஒற்றுமையுடன் போராடி தடுக்க முடிந்ததா? சிங்கள ஒடுக்குமுறையை காரணம் காட்டி உண்மையில் நாம் தப்பித்துக்கொள்வது எம்மை நாமே ஏமாற்றுவதாகவே உணர்கின்றேன். எமக்குள் இருக்கும் பிரச்சனைகளே சிங்கள ஆக்கிரமிப்புக்கான பெரியளவு அதிகாரத்தை வழங்கியது.

தெற்கு வடக்கு மட்டும் இல்லை கப்பலில் கனடா வந்து கெஞ்சிக்கொண்டிருப்பதும் அடிமைவாழ்வுதான். நானும் அடக்கம். ஆனால் அடிமைத்தனம் என்பது ஒரு உணர்வு. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். எல்லா இனங்களிலும் இது சாத்தியம் இல்லை. எமக்கு முதன் முதலில் சாதி ரீதியாக ஒரு அடிமைத்தன உணர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. தனி மனித மனதில் சமூக மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. சுயமரியாதையில் அடிப்படையில் பங்கம் ஏற்பட்டுவிட்டது. இதுவே எமது ஒற்றுமை எதிர்ப்புணர்வை சீரளித்த உளவியல் காரணி. பெரும்பாலானவர்களுக்கு நான் உட்பட அடிமை வாழ்வு இயல்பானது. சாதராணமானது. கரும்புலி வெடி வெடி என்று வெடித்துக்கூட இந்த உணர்வை சரிப்படுத்த முடியவில்லை. இறுதியில் அடிமை உணர்வே வென்றது.

(எனது கருத்துக்களை தர்க்கமாக எடுக்காமல் என்னொருவகை சிந்தனை முறையாக எடுக்கவும்)

வடககிழக்கில் உள்ள அனைத்து தமிழரும் ஆயுதம் தூக்கினால் தமிழீழம் கிடைத்துவிடுமா?

ஒரு சிறுபான்மை மக்கள் ஆயுத போராட்டத்தில் போராளிகள் தொகை வெற்றியை தரும் என்பது முட்டாளின் கனக்கு( ஆனால் வீரம் என்பது தொகையை மீறியது)

வடககிழக்கில் உள்ள அனைத்து தமிழரும் ஆயுதம் தூக்கினால் தமிழீழம் கிடைத்துவிடுமா?

ஒரு சிறுபான்மை மக்கள் ஆயுத போராட்டத்தில் போராளிகள் தொகை வெற்றியை தரும் என்பது முட்டாளின் கனக்கு( ஆனால் வீரம் என்பது தொகையை மீறியது)

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் வடகிழக்கில் இருப்பது. தமது இருப்பிடம் மீது பற்றுவைத்திருப்பது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழராக இருப்பது. புறநிலையில ஒரு சிங்களவர் பார்வையில் தமிழர் என்றால் அதற்குள் இஸ்லாமியத் தமிழர்கள் மலயகத் தமிழர்கள் மற்றும் சாதி மத பிரதேசவாதபேதம் அற்று எல்லாத் தமிழர்களும் அடக்கம். ஆனால் அகநிலையில் எங்களுக்குள் இது என்றைக்கும் சாத்தியப்பட்டதில்லை. போராளிகள் தொகை வீரம் என்பதுக்கு முன் எமது உரிமைகள் குறித்து ஒரு கருத்தில் நின்றவர்கள் தொகை என்ன? தமிழீழம் என்ற விருப்பம் மட்டும் ஒரு நிலைப்பட்ட கருத்தாக முடியாது. இந்த கருத்துக்கும் செயற்பாட்டிற்கும் கீழ் நின்ற மக்கள் தொகை என்ன? இறுதியில் 3லட்சம் தான். அதுவும் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையாக்கப்படுகின்றது. எமது இந்த சிதைவுபடுத்தப்பட்ட நிலையானது சிங்கள அரசபயங்கரவாதம் நியாயமாகவும் எமது உரிமைப்போர் பயங்கரவாதமாகவும் முடிந்தது. எமது உரிமைப்போர் ஒரு பயங்கரவாதக் குழுவின் பயங்கரவாதச் செயலாக சர்வசாதாரணமாக முடிந்தது. அவர்களிடம் இருந்து மக்களை சிங்கள அரசு மீட்டதாக காட்சிப்படுத்தப்பட்டது. 2 லட்சம் மக்களை மீட்டது. மிகுதி 45 லட்சமும் ஏற்கனவே இந்தக் குழுவுடனோ அதன் கருத்தின் பின்னாலோ வலுவாக இல்லை. போராட என்று வெளிகிட்ட ஏனைய குழுக்கள் அனைத்தும் அரசுடன் இணைந்திருந்தது. எது ஒடுக்குமுறை எது பயங்கரவாதம் என்பது குழப்பமாக இருந்தது. சிறுபான்மை இனங்களுக்கு சார்பாக உலக வல்லரசுகளின் நீதி இல்லை என்பது ஒரு புறம் மறுபுறம் எமது உரிமைப்போராட்டம் ஒரு நீதியை சர்வதேசத்திடம் இருந்து பெறக்கூடிய தகுதியில் இருந்ததும் இல்லை.

வீரம் தொகையை மீறியது என்பதை மறுப்பதற்கில்லை முழு இலங்கையையும் பாதிக்கவல்ல இரசாயன குண்டு ஒன்றை ஒருவன் வைத்திருந்தால் அவனின் முன்னால் இலங்கை அரசு மண்டியிட வேண்டியும் நேரிடலாம் ஆனால் வீரம் மட்டும் உரிமையை பெற்றுத்தந்துவிடாது என்பதை வரலாறு சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தவர்கள், வன்னிப் பகுதியினர், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர், மலையகத்தோர் என்பதான இந்த தனித்துவ அடையாளங்களைக் கணக்கில் கொள்ளாத தேசிய அரசியல் இனி சாத்தியமில்லை. இத்தனை சிறிய பிரதேசத்துக்குள் இத்தனை அடையாளங்களை உள்ளடக்கக் கூடிய அரசியல் எப்படிச் சாத்தியமாகும் என்கிற கேள்வி எழலாம் . இதே போன்ற சின்னஞ்சிறிய தென்னாசிய நாடான நேபாள முன்னுதாரணம் இங்கே நமக்குப் பயன்படக்கூடும்.

சுமார் 22.8 மில்லியன் மக்கள் மட்டுமே உள்ள அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 22 சாதிகள் 59 உள்நாட்டு இனக் குழுக்கள் 93 மொழிகள் இன்று நிலவுகின்றன.

இந்த 93 மொழிகளில் 6 முக்கியமானவை. இதைத்தவிர சுமார் 1800 மைல் நீளமுள்ள திறந்த எல்லை வெளியே உள்ளே வந்து வளம்மிக்க ‘தராய்’ சமவெளியில் கடந்த சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழியினரான ‘மாதேசிகள்’ எனப் பலதரப்பட்ட அடையாளத்தினரும் இணைந்து வசித்து வரும் நாடு அது. ‘பர்வதியா’க்கள் எனப்படும் மலைப்பகுதியைச் சேர்ந்த பிராமண - சத்திரியர்களே அங்கே ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துபவர்கள். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 13 +18 = 31 சதம். ஆனால் 70 சத அளவில் அரசு பதவிகள், கட்சித் தலைமை எல்லாம் இவர்கள் கையில். ‘ஜனஜாதிகள்’ எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் 59 உள்நாட்டுத் தேசிய இனங்கள், மாதேசிகள் மறறும் 20 சத அளவிலான தலித்துகள், 4 சத முஸ்லிம்கள் ஆகியோர் காலம் காலமாக அடையாளமும் அதிகாரமும் மறுக்கப்பட்டவர்கள். இந்தியாவைப் போலவே அங்கும் தலித்துக்களே ஆகக் கீழாய் உள்ளனர்.

1990 வரை இங்கே பலகட்சி ஐனநாயக ஆட்சிமுறை கிடையாது. நிர்வாக அதிகாரமுள்ள மன்னராட்சியில் அரசனே எல்லா அதிகாரமும் உடையவன். இந்து அரசாக நேபாளம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 1991ல் முதலாவது மக்கள் புரட்சி (ஐன அந்தோலன்) ஏற்பட்டு பலகட்சி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. 2006 ல் நடைபெற்ற இரண்டாம் ஐன அந்தோலன் முடியாட்சியைத் தூக்கியெறிந்து குடியாட்சியை இன்று அங்கே உருவாகியுள்ளது.

முதல் ஐன அந்தோலனுக்கும் இரண்டாம் ஐன அந்தோலனுக்குமிடையிலுள்ள வித்தியாசம் முடியாட்சி நீக்கப்பட்டு குடியாட்சி நிறுவப்பட்டது மட்டுமல்ல. மாறாக இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு. அது பல்வேறு அடையாளங்களும் உள்வாங்கப்பட்ட தேர்தல் முறையும் ஆடசி அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதுதான்

90 களுக்குப் பின் ஏற்பட்டுள்ள இந்த அடையாள உறுதிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட நேபாள மக்கள் தமது அடையாள உறுதிப்பாட்டிற்காகவும் அதிகாரத்தில் தமக்கான பங்கிற்காகவும் தொடர்ந்து போராடினர். ஜனஜாதிகள், மாதேசிகள், தலித்கள் ஆகியோர் தனித்தனி அமைப்புகளை அமைத்து அரசு பதவிகளிலும் ஆட்சியிலும் தமது பங்கைக் கோரினர். ‘ஜனஜாதி ஆதிவாசி மகாஜன சங்கம்’, ‘மாதேசி ஜனதிகார முன்னணி’, ‘தலித் ஜனஜாதிக் கட்சி’ முதலியன சில குறிப்பிடத்தக்க அமைப்புகள்.

நேபாள மைய நீரோட்டக் கட்சிகளான ‘நேபாள காஙகிரஸ்’ மற்றும் ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி’ முதலியன இந்தத் தனித்தனி அடையாளங்களை அங்கீகரிக்க மறுத்தன. ‘நேபாள மாவோயிஸ்ட் கட்சி மட்டுமே இந்த வேறுபாடுகளை அங்கீகரித்தது. மக்கள் யுத்தத்தை அறிவித்து (1996) ஆயுதப் போராட்டத்தின் மூலம் முதலில் ஒன்பது சுயாட்சிப் பிரதேசங்களை பிரகடனப்படுத்தியபோது அவற்றில் ஆறு, இன அடையாளங்களின் அடிப்படையிலேயே அமைந்தன. அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாகவிருந்த இனத்தவருக்கே கட்சியிலும் ஆட்சியிலும் தலைமை அளிக்கப்பட்டது. கட்சியின் மையக் குழு உறுப்பினர்களிலும் அவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஒரு மாகாணத்தின் தலைவராக தலித் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

முதன்முதலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தலை நடத்த வேண்டுமென ஜனஜாதிகளும், மாதேசிகளும் போராடியபோது அதை முழுமையாக ஆதரித்துப் பேச்சுவார்த்தைகளில் அதை நிபந்தனையாக்கியவர்களும் மாவோயிஸ்டுகளே*.

இறுதியில் மொத்தமாக உள்ள 601 பாராளுமன்ற இடங்களில் 40 சதத்தை (240 இடங்கள்) இந்தியாவிலுள்ளதுபோல அதிகம் வாக்குப்பெற்ற வேட்பாளர்கள் வெற்றிபெறும் நேரடித் தேர்தல் மூலம் நிரப்புவது எனவும், அறுபது சதத்தை (335 இடங்கள்) கட்சிகள் பெற்ற வாக்கு வீதத்தின் அடிப்படையில் நிரப்புவது எனவும் மீதி 26 இடங்களை புதிய அரசு நியமிக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேற்சொன்ன முறையில் பிரதிநிதித்துவம் பெறாத சிறு பிரிவுகளக்கு இந்த 26 இடமும் பிரித்துத் தரப்பட வேண்டும். வீதாசார அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தாம் பெற்ற இடங்களைப் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்தளித்தல் நிபந்தனையாக்கப்பட்டது. இதன்படி தலித்துகளுக்கு 13 சதம், மாதேசிகளுக்கு 31.2சதம், ஜனஜாதியினருக்கு 37.8 சதம், பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு 4 சதம் எனப் பிரிக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு பிரிவிலும் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக: ஏதேனும் ஒரு கட்சி 100 இடங்களைப் பெற்றுள்ளதென்றால் அதில் 13 தலித்துகள் இடம்பெற வேண்டும். இந்த 13 பேரில் குறைந்தது 6பேர்கள் தலித் பெண்களாக இருக்க வேண்டும். இதேபோல் இட ஒதுக்கீடும் மிகவும் நுணுக்கமாக எல்லோரும் உரிய பங்கு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டுத் தேர்தல் முறைக்கு வந்தபோது பேச்சுவார்த்தைகளில் நெகிழ்ச்சியுடன் பலவற்றை விட்டுக்கொடுத்த போதும் மூன்று அம்சங்களில் அவர்கள் உறுதியாயிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இவற்றை எதிர்த்த மைய நீரோட்டக் கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்றனர். அந்த மூன்று அம்சங்கள்:

1. முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியாட்சி அமைக்கப்பட வேண்டும்.

2. தேர்தல் மூலம் புதிய அரசியல் சட்ட அவை உருவாக்கப்பட வேண்டும்.

3. எல்லோரும் பங்கேற்கும் இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இவை நிறைவேற்றப்பட வேண்டும்.

மாவோயிஸ்டுகள் இது 21ம் நூற்றாண்டு என்பதைப் புரிந்துகொண்டு தமது புதியபாதையை வகுத்தனர். தம்மை மாவோயிஸ்டுகள் என அழைத்துக்கொண்டபோதும் 20ம் நூற்றாண்டுக்கான மாவோவின் பாதை அப்படியே இன்று பொருந்தாதென அறிவித்தனர். அதனாலேயே நேபாளப் பாதை ‘பிரசாண்டா பாதை’(மாவோ பாதையல்ல) என அழைக்கப்படுகிறது. மாவோவின் ‘புதிய ஜனநாயக’த்திற்குப் பதிலாக 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம்” என்கிற கருத்தாக்கத்தை வைக்கின்றனர். ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பதற்குப் பதிலாக “பல கட்சி ஆட்சிமுறையே பரவலான சகல மக்களின் அதிகாரத்திற்கும் வழிவகுக்கும்” என்கின்றனர்.

சொல்கிற அனைத்தையும் அவர்கள் நேர்மையாக நடைமுறைப்படுத்துகின்றனர். பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் முதலியவற்றைக் கால அவகாசம் பெறும் யுக்தியாகவின்றி மிக்க நேர்மையோடு அவற்றை செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5

நேபாளத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்கிறேனே என நினைக்காதீர்கள். நமது சூழலுக்கும் நேபாளத்திற்குமுள்ள பொருத்தப்பாட்டையும் நேபாள மாவோயிஸ்டுகள் மாறியுள்ள உலகச் சூழலை கணக்கில் எடுத்துக்கொண்ட பாங்கையும் சுட்டிக்காட்டுவதற்காகவும் அதன்மூலம் நாமேதும் கற்றுக்கொள்ள இயலுமா எனச் சிந்திக்கும் நோக்கிலும் மட்டுமே இவற்றைச் சொன்னேன்.

உலகம் பெரிய அளவில் மாறுகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. பூனை கண்களை மூடிக்கொண்டது போல மாற்றங்களுக்கு முகங் கொடுக்காமல் பழைய பல்லவியை நாம் பாடிக்கொண்டிருக்க முடியாது.

ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் அவசியத்தை நாம் மறுக்காத போதும் உலக அளவில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தேக்கங்களையும் எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் ஊடாடியுள்ள தார்மீக நியாயங்களை மீறிய கொடுமைகளையும் நாம் சிந்திக்காதிருக்க இயலாது.

எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் அநீதியான கொலைகள், அழித்தொழிப்புகள், ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுப் போர்முனைகளில் பலி கொடுக்கப் படுகின்றனர். எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் பெரிய அளவில் நிதி ஊழல்கள் நடைபெறுகின்றன. யாசிர் அரபாத்தின் ஃபடா இயக்கம் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

யாசிர் அரபாத் தன இறுதிக் காலத்தில் காந்தியின் பேரனைச் சந்தித்து அஹிம்சை பற்றிக் கதையாடியதை எல்லாம் கூட நாம் கவனிக்காதிருக்க இயலாது.

திறந்த மனத்துடன் நாம் பல்வேறு சாத்தியப்பாடுகளையும் யோசிக்க வேண்டும். எக் காரணம் கொண்டும் அறம் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து நாம் வழுவி விடக் கூடாது. பல்வேறு அடையாளங்களையும் அங்கீகரித்து ஏற்கும் மனப்பக்குவம் இல்லாத இயக்கங்களுக்கு எதிர்காலம் இல்லை. எல்லா நாடுகளிலும் இன்று அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் உள்ளனர். தேசியம் என்கிற இறுக்கமான வரையறையை தாண்டி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். தேசியத்தைத் தாண்டிய ஒரு வாழ்முறையை இன்று புலம் பெயர்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசியம் தாண்டிய ஒரு அரசியலையும் கூட நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இதன் பொருள் ஒரு பெருந்தேசிய ஒடுக்கு முறையை சகித்துக் கொள்வதல்ல. மாறாக இந்தப் பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் இன்னொரு அடையாள ஒடுக்குமுறைக்கு காரணமாகிவிடக் கூடாது. அத்தகைய ஒடுக்குமுறைக்கு காரணமாகும் ஒரு போராட்டமும் இயக்கமும் இன்றைய சூழலில் வெற்றி பெற இயலாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அடையாள அரசியலின் எல்லைகளையும் வரம்புகளையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்த அரசியலில் சரியோ தவறோ இந்திய அளவிலான கட்சிகளே ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டன. அடையாள அரசியலை முன்வைத்த சாதி மற்றும் பிராந்திய அடைப்படையிலான கட்சிகள் இறுதிவரை ஒரு நிலைபாடு எடுக்காமலும் தொலைநோக்கில் பிரச்சனையை பரிசீலிக்காமலும் குறைந்தபட்ச உடனடி லாபங்கள், பதவிகள் ஆகியவற்றை மனதிற்கொண்டு முடிவெடுத்தன.

அது போன்ற போக்கை நாம் தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இன்றைய அரசுகளின் பாசிசப் போக்குகளையும் ஒடுக்கு முறைகளையும் நாம் நியாயப்படுத்திவிட இயலாது இந்த எச்சரிக்கையோடுதான் நாம் அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=176

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.யின் பேட்டியை திரிவுபடுத்தி வெளியிட்டதுடன், அந்தப் பேட்டியினை வெளியிட்ட ஊடகத்தினையும் இருட்டடிப்புச் செய்து- தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பேட்டியினை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க...

இணைப்பு: KP: Past is the Past

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.