Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் மஹிந்தரை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாவுக்கான தமிழர்கள்!

Featured Replies

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திபோது இடம்பெற்ற போர்க் குற்றங்களின் சூத்திரதாரி என்கிற வகையில் அவரை ஏன் கைது செய்ய முடியாது? என்று வினவி உள்ளது.

போர்க்குற்றம் புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பலரை அமெரிக்கா முன்னைய நாட்களில் கைது செய்து உள்ளது. நாஸிகள் பலரையும் குற்றங்கள் இடம்பெற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் கூட அமெரிக்கா கைது செய்திருந்தது, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் முன்பு இடம்பெற்றிருக்கும் அக்கைதுகள் முன்னுதாரணங்கள் ஆகி விட முடியுமா? என்பதே இவ்வமைப்பின் சந்தேகம் ஆகும்.

ஏனெனில் மஹிந்தரின் விவகாரம் வித்தியாசமானது .மஹிந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எந்த நீதிமன்றம் ஒன்றினால் முன்வைக்கப்பட்டிருப்பவை அல்ல. மாறாக சர்வதேச மக்கள் அமைப்புகளான- சர்வதேச நெருக்கடிகள் குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமைகள் முன்வைக்கப்பட்டு வருவன ஆகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் இராணுவத்தினரால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன என இவ்வமைப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில் அகதிகளுக்கான பாதுகாப்பான பிரதேசங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றின் மீது வலிந்து குண்டுகள் வீசுதல், மனிதாபிமான உதவிகள் செய்யும் நிறுவனங்களின் மீதான வன்முறைத்தாக்குதல் போன்றவை அநேகமாக எல்லோராலும், எவ் வகையான வரைவிலக்கணங்களின் கீழும் போர்க்குற்றங்களாக கருதப்படுவன தானே? என்று பிரதம நீதியரசரிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டோர் எதுவித விசாரணைகளுமில்லாமல் கொலைசெய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு என்றும் ஆனால் இவ்வாதாரங்கள் எந்த நீதிமன்றத்தினாலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்றும் இந்நிலையில் அமெரிக்க நீதிமன்று ஒன்று ஏன் விசாரிக்கக் கூடாது? என்றும் இவ்வமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.

பொஸ்னியாவில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று அறிக்கைகள் தெரிவித்தபோது அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் தலையிட்டன என்று இவ்வமைப்பு பிரதம நீதியரசருக்கான கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து ஊடகங்களுக்கு முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

நாம் சட்டவல்லுனர்கள் அல்லர், பிரதம நீதியரசருக்கான எமது கடிதம் அவரின் கருத்தைக் கேட்கும் முகமாகவே எழுதப்பட்டது.எழுதப்பட்ட விடயம் மிகவும் சிக்கலான விடயம் ,எனவே உயர்-சட்ட ஆலோசனை தேவை.

பிரதம நீதியரசர் ரொபேட்ஸ் அவரது கருத்தை எம்முடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம். அவரது கருத்து பொதுக்கருத்தாடல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என நாம் நம்புகின்றோம். சட்டத்தரணிகளும்,நீதிபதிகளும் இது பற்றி பேசும் நிலை வர வேண்டும்."

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9415:2010-08-31-09-41-18&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

நல்ல முயற்சி.

ஆனால் எதிர் காலத்திலாவது, அரசியல் பொது விடயங்களில் தமிழர் தரப்பு தனிப்பட்ட நபர்களின் பின்னால் வால் பிடிக்கும் வகையில், கில்லரி பின்னாலும், ஒபாமா பின்னாலும், பிரதமர்களாக உள்ளவர்கள், பதவிகளில் உள்ளவர்கள் பின்னால் அலையும் கீழ்தர தந்திரங்களை கைவிட முன்வரவேண்டும்.

தமிழர் தரப்பு ராஜதந்திரமாக, அரசில் உள்ளவர்களுடன் மட்டுமல்லாது, பிரதான எதிர்க்கட்சியினருடனும் நட்பான தொடர்புகளை பேணி அந்த நாட்டு அரசியலினுள் தமிழர் பிரச்சினையை கலக்காமல், அந்த நாட்டு அரசியல்வாதிகள் சகலரும் தமிழர் பிரச்சினையை அறியும் வண்ணம், சகலரும் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்துக்கள் கொள்ளும் வண்ணம் பார்க்கவேண்டும்.

இந்திய, இலங்கை அரசியலுக்குரிய சாக்கடைத் தனத்துடன், ஒருவர் பின்னால் அலைவது குறுகிய நன்மையை தருவது போல இருந்தாலும், நீண்ட காலத்தில் பின்னடைவுகளையே தரும்.

16 வருடங்களின் முன்னர் கிளிண்டன் பின்னால் அலைந்ததால், புஷ் தரப்புடன் நெருக்கமாக முடியாமல் போனதும், முன்பு எம். ஜி. ஆர். பின்னால் அலைந்ததால் கருணாநிதி ஆதரவை இழந்ததும், பின்னர் கருணாநிதி பின்னால் அலைய முற்பட்டு ஜெயலலிதாவின் ஆதரவை இழந்ததும், இறுதியில் சகலரும் ஏதோ காரணத்தை சொல்லி கைகழுவ வழி ஏற்பட்டதையும் ஞாபகப்படுத்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

Tamils for Obama to Supreme Court: Can the U.S. Arrest Rajapaksa?

Tamils for Obama, a political group of American Tamils, wrote to Chief Justice of the Supreme Court John Roberts asking for his opinion on whether Mahinda Rajapaksa (president of Sri Lanka and possible author of crimes committed during the recent Sri Lankan civil war) can be arrested as he travels through the U.S. this fall.

Can the U.S. arrest Sri Lankan President Mahinda Rajapaksa as he travels through this country to visit the United Nations this fall?

Tamils for Obama asked that question in a letter to Supreme Court Chief Justice John Roberts.

"The United States has arrested and deported accused war criminals in the past," explained a spokesman for the Tamil American group. "Our country arrested accused Nazis decades after the crimes they were supposed to have committed took place, so this is not unprecedented.

"We guess that this is different because the accusations come from international civilian organizations--the International Crisis Group, Amnesty International, Human Rights Watch, and so forth--rather than courts of law. They say that there is plenty of evidence that Sri Lankan government forces, which were ultimately commanded by President Rajapaksa, committed what would probably be considered war crimes.

"The international organizations mention the government's intentional shelling of civilian refugees in protected areas, intentional shelling of hospitals, and violent actions against humanitarian organizations," the spokesman said. "Those would be war crimes by almost anybody's definition."

The spokesman also said that "There was also evidence of execution without trial of prisoners. The evidence hasn't been tested by any court yet, but we hope an American court will be willing to look at it."

"We also noted that the U.S. and NATO intervened when there were reports of atrocities being committed in Bosnia," the spokesman added. "Armed intervention is at least as serious as legal intervention, or so we think.

"We know we are not legal experts," said the Tamils for Obama spokesman. "Our letter to Chief Justice Roberts is to ask his opinion. This is a complicated matter, so we know that high-level legal knowledge is required. We hoped that Mr. Roberts would share his thoughts with us."

"We also hope this matter will become something for public discussion. If we can get lawyers and judges talking about it, we think that this is step in the right direction."

The spokesman mentioned that similar letters had been sent to U.S. Attorney General Eric Holder and Acting Solicitor General Neal Katyal , New York State Attorney General Andrew Cuomo, Senator Patrick Leahy (Chairman of the Senate Judiciary Committee) and the other eight Supreme Court justices.

To read the whole letter go to: www.Tamilsforobama.com/Letters/Letter_to_John_Roberts831.html

To read the Tamil version of the press release go to the link: www.Tamilsforobama.com/pressrelease/PR_Letter_to_John_Roberts831_tamil.html

Tamils for Obama's letter to Chief Justice Roberts concluded with links to accounts of President Rajapaksa's war time behavior. These included:

To read accounts of Mr. Rajapaksa's wartime conduct from the International Crisis Group: http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx

To read accounts of Mr. Rajapaksa's wartime conduct from Human Rights Watch: http://www.hrw.org/en/news/2009/05/08/sri-lanka-repeated-shelling-hospitals-evidence-war-crimes

Tamils for Obama is a politically active association of Tamil Americans. The group believes that the ultimate solution to ethnic strife in Sri Lanka will necessarily include some form of political separation of Sri Lankan Tamils from the government dominated by the majority Singhalese. Tamils for Obama supports peaceful measures that if believes advance this goal of a political solution to Sri Lanka's ethnic problems.

Tamils are an ethnic group living mainly in the northeast of Sri Lanka and southern India. During the final weeks of the recent civil war, the Sri Lankan government killed about 1,000 Tamil civilians per day, according to the United Nations, and about 40,000 in 2009. The Tamil are a population in Sri Lanka has borne the brunt of a civil war they regard as genocide. One-third of the Tamil population has fled the island and formed a substantial diaspora overseas. Tamils for Obama is comprised of Tamils who have settled in the U.S. or who were born in the U.S.

To contact the group, call at (617) 765-4394 and speak to, or leave a message for, the Communication Director, Tamils for Obama.

www.TamilsForObama.com

http://www.prweb.com/releases/2010/08/prweb4439864.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஏனிந்த விபரீத விளையாட்டு? புலம்பெயர் தமிழரின் இவ்வாறான நடவடிக்கைகளால் தாயக மக்களின் கழுத்தை இன்னும் நெரிக்கப் போறாங்கள்..! மிச்ச ஆக்களாஇயும் இப்பிடி கொல்லத் திட்டமோ? இணக்க அரசியல் பண்ணினால் என்ன? இங்க இருந்து தாயக மக்களின் புனர்வாழ்வுக்கு கேபி அண்ணா மூலமா காசை அனுப்பிறதை விட்டிட்டு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உலக வல்லரசுகளுக்கு இப்போது மகிந்தா உலகம் போற்றும் குறு நில மன்னன்.

தனது நாட்டில் முளுமையாகப் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாகக் கொக்கரிக்க வருகின்றார்.

இந்தியா சீனா விட்டு வைத்த மிச்சம் மிகுதி ஏதாவது இருந்தால் தாங்களும் பங்கு போடலாம் என்று மேற்குலகம் காத்திருக்கின்றது.

மேற்குலகம் அவருக்குச் செங்கம்பள வரவேற்பு அளிக்கும்.

அது சரி மகிந்தவை எந்த நாட்டு அரசாங்கம் போர்க்குற்றவாளி என்று அறிவித்தது.

இலங்கையில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது என ஒருசில அமைப்புக்கள் தான் அறிவித்துள்ளன.

எல்லாவற்றையும் தலையிலை அள்ளிப்போடத்தானே சரத் ஐயாவை உள்ள வைத்திருக்கினம்.

வாத்தியார்

*********

அமெரிக்கா மனித உரிமைகளை பேச்சளவில் அன்றி உண்மையாக மதிக்கும் நாடென்றால், சாக்குப் போக்கு சொல்லாமல், நிச்சயமாக கைது செய்யவேண்டும்.

இதில் அமெரிக்காவின் சுயரூபம் தெரியவரும்.

August 31, 2010

Tamils for Obama to the Chief Justice of the Supreme Court John Roberts on a visit to the U.S by Rajapakse in the fall.

Ref: Can the U.S. arrest Mahinda Rajapaksa?

Dear Justice Roberts:

President Mahinda Rajapaksa of Sri Lanka is expected to visit Manhattan this fall to speak at the United Nations.

Amnesty International, Human Rights Watch, various United Nations officers, and the International Crisis Group have all accused Sri Lankan functionaries and military men of war crimes committed during the recent Sri Lankan civil war. All of these purported criminals, of course, reported to and took their orders from President Rajapaksa. If they are guilty of the crimes of which these numerous international bodies claim they are guilty, then the moral and legal responsibility for these crimes rests with President Rajapaksa.

The accusations arise from the government’s intentional shelling of civilian refugees, intentional shelling of hospitals, and violent actions against international observers and humanitarian organizations. There was also evidence of execution without trial of prisoners.

We are seeking your opinion. Is it possible to arrest a criminal who is a foreign national passing through the United States for crimes of which he has not yet been tried or convicted? Rajapaksa certainly will also have some form of diplomatic status, which will further complicate this issue.

The United States has arrested and deported, even decades after the alleged crimes, individuals accused of crimes committed during the Nazi era. When a crime is ongoing and/or in progress, as in Bosnia, the United States has intervened to prevent the crime from continuing. These precedents occur to us when we hear of President Rajapaksa’s visit to our country, but we are not experts. We are therefore asking you if it is possible for American officials to place President Rajapaksa under arrest as he passes through the United States.

We are eager hear from you on this matter.

Thank you.

Sincerely,

Tamils for Obama

info@TamilsforObama.com

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பேச்சு வார்த்தைக்கு என்று வி.புலிகளையும்,இலங்கை அரசையும் கூப்பிட்டு விட்டு பின்னர் அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகள் அமெரிக்காவுக்கு வர முடியாது என கூறி புலிகளை ஓரம் கட்டியது இதே அமெரிக்கா தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் பேச்சு வார்த்தைக்கு என்று வி.புலிகளையும்,இலங்கை அரசையும் கூப்பிட்டு விட்டு பின்னர் அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதால் புலிகள் அமெரிக்காவுக்கு வர முடியாது என கூறி புலிகளை ஓரம் கட்டியது இதே அமெரிக்கா தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ம்ம்ம் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தததில் கைச்சாத்திட்ட பிறகும் பயன்ங்கர்வாத்ததை கைவிட வேண்டும் என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டு திரிஞ்சவை, நான் நினைக்கிறேன் நுணா நீங்கள் 2003ம் ஆண்டு வொஷிங்டனில் நடை பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தைப் பற்றி என்று, இங்கே தான் புலிகளை ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பம் ஆனது, ஆனால் இது புரியாமல் எங்கட் அறிவாளிகல் சிலர் "உவங்கள் உதை 2002-03 காலப் பகுதிய்லேயே வடிவாக பேசி முடித்திருக்க வேண்டு சும்மா குழப்பி எல்லத்தையும் அழித்துப் போட்டங்கள்" என்று புலிகளைத் திட்டீனம்

இந்திய தமிழின படுகொளையாலர்களின் உதவிப் பட்டியல்களையும், கொலைஞர் கருநாய்நிதியின் கடிதங்களையும் வைத்து சேது கால்வாய்க்கு குறுக்காக பாலம் கட்டிவிடலாம். ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை. வட இந்திய பயங்கரவாதிகளை வட பகுதிக்குள் விடாமல் இருப்பது நல்லது.

சீனா சொன்னால் செய்து முடிக்கும், என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் அதிகரித்துவிட்டது. நம்பக் கூடிய சீனர் ஊடாக வட பகுதிக்கு ஒரு நல்ல வீதி கிடைக்கும் என் நம்பலாம்.

இந்தச் செய்தியை அமெரிக்க அரசியல் வாதிகளின் காதுகளில் போட்டால் - பலன் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தததில் கைச்சாத்திட்ட பிறகும் பயன்ங்கர்வாத்ததை கைவிட வேண்டும் என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டு திரிஞ்சவை, நான் நினைக்கிறேன் நுணா நீங்கள் 2003ம் ஆண்டு வொஷிங்டனில் நடை பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தைப் பற்றி என்று, இங்கே தான் புலிகளை ஓரங்கட்டும் நடவடிக்கை ஆரம்பம் ஆனது, ஆனால் இது புரியாமல் எங்கட் அறிவாளிகல் சிலர் "உவங்கள் உதை 2002-03 காலப் பகுதிய்லேயே வடிவாக பேசி முடித்திருக்க வேண்டு சும்மா குழப்பி எல்லத்தையும் அழித்துப் போட்டங்கள்" என்று புலிகளைத் திட்டீனம்

"2003ம் ஆண்டு வொஷிங்டனில் நடை பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தைப் பற்றி "

என்பது தான் சரியானது.நன்றி Dash.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.