Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் மனைவி எதிர்ப்பை மீறி நயன்தாரா - பிரபுதேவா திருமண ஏற்பாடு தீவிரம்: பட்டு சேலை, நகைகள் வாங்குகின்றனர்

Featured Replies

நயன்தாரா, பிரபுதேவா திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. முதல் மனைவி ரம்லத் திருமணத்துக்கு இன்னும் சம்மதிக்கவில்லை. அவர் அனுமதி இல்லாமல் நடந்தால் சட்ட சிக்கலில் மாட்ட வேண்டியதிருக்கும்.

எனவே ரம்லத்தை சம்மதிக்க வைக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர். வில்லு படப்பிடிப்பு முடிந்ததுமே நயன்தாராவுடனான காதலை ரம்லத்திடம் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார் பிரபுதேவா.

அப்போது நயன்தாராவை மணந்தாலும் ரம்லத்தை பிரியமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம். எனவே இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதே அவரது விருப்பமாக இருக்கிறது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லையாம். விரைவில் அவரிடம் இருந்து சம்மதம் கிடைக்கும் என நம்புகிறார்.

ஆனாலும் இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார். நயன்தாரா தற்போது கேரளாவில் உள்ள வீட்டில் இருக்கிறார். பிரபுதேவா மும்பையில் “உருமி” படப்பிடிப்பில் உள்ளார். இருவரும் செல்போனில் தொடர்ந்து திருமண வேலைகள் பற்றி பேசி வருகின்றனர்.

கேரளா, அல்லது திருப்பதியில் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார்களாம். ஓரிரு நாளில் பிரபுதேவா படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் வருகிறார். நயன்தாராவும் அங்கு செல்கிறார். இருவரும் திருமணத்துக்கான பட்டு புடவையை விசேஷமாக தயார் செய்ய டிசைனரிடம் ஆர்டர் கொடுக்கின்றனர்.

நகைகளும் வாங்குகிறார்கள். திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேற இருவரும் முடிவு செய்துள்ளனர். இதற்காக புரோக்கர் மூலம் அங்கு பங்களா வீடு தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு தயாராவதற்காக நயன்தாரா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கன்னடத்தில் ஒரு கோடி சம்பளத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பையும் உதறிவிட்டார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10509:2010-09-17-08-20-41&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இரண்டு வருடம் தாங்கும்... இதில் முதலில் விவகாரத்துக்கு அப்ளிகேசன் போடுபவர் நயந்தாராவாகத்தான் இருப்பார்... இது பீல்டு அவுட்டு பிரபுதேவா ஏதோ பரபரப்புக்கு செய்வதாகவே படுகிறது ரைட்டு :rolleyes:

...

நயன்தாராவை மணந்தாலும் ரம்லத்தை பிரியமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம். எனவே இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதே அவரது விருப்பமாக இருக்கிறது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லையாம். விரைவில் அவரிடம் இருந்து சம்மதம் கிடைக்கும் என நம்புகிறார்.

...

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10509:2010-09-17-08-20-41&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396

ஒரு குடும்பத்தை சமாளிக்கிரதிலையே அவனவன் நொந்து நூடுல்ஸ் ஆகிற நிலைமை... இவனாரா இரண்டையும் ஒரே நேரத்தில சமாளிக்கிறேன் எண்டுறான்... ஒரு மனுசன்ர ஆசைக்கு அளவே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தை சமாளிக்கிரதிலையே அவனவன் நொந்து நூடுல்ஸ் ஆகிற நிலைமை... இவனாரா இரண்டையும் ஒரே நேரத்தில சமாளிக்கிறேன் எண்டுறான்... ஒரு மனுசன்ர ஆசைக்கு அளவே இல்லை!

பிரபு தேவாவின் முதல் திருமணமே காதல் திருமணம்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது..... இரண்டாவது கலியாணம் கட்ட சட்டத்தில் இடம் இல்லை என்று நினைக்கின்றேன்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரகாஸ்ராஜும் இரண்டாவது திருமணம் செய்து விட்டாராம் அவரும் முதல் மனைவியை காதலித்து தான் திருமணம் செய்தவராம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபு தேவாவின் முதல் திருமணமே காதல் திருமணம்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது..... இரண்டாவது கலியாணம் கட்ட சட்டத்தில் இடம் இல்லை என்று நினைக்கின்றேன்.

.

முதல் மனைவி சம்மதித்து எழுதிக் குடுத்தால் ரெண்டாவது திருமணம் செய்யலாமாம். :rolleyes: தானைத்தலைவர் தன்மானச் சிங்கம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நெடுங்காலமா ரெட்டைக் குதிரை பூட்டி வண்டி ஓட்டுறதைக் கவனிக்க இல்லையா?? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் மனைவி சம்மதித்து எழுதிக் குடுத்தால் ரெண்டாவது திருமணம் செய்யலாமாம். :rolleyes: தானைத்தலைவர் தன்மானச் சிங்கம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நெடுங்காலமா ரெட்டைக் குதிரை பூட்டி வண்டி ஓட்டுறதைக் கவனிக்க இல்லையா?? :unsure:

அவரது ரெட்டை குதிரையா? :wub: முட்டைக்குதிரையா? :D:D அதாவது மூன்று குதிரையா? அவர் மூன்று பேரை அல்லவா வச்சு இருக்குறார் :lol: அதாவது கலியானம் முடிச்சவர், :lol:அரசன் எவ்வழி குடில்களும் அவ்வழி அரசனை பிடிக்க இவர்கள் இன்னமும் முன்னேற வேண்டும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ரெட்டை குதிரையா? :unsure: முட்டைக்குதிரையா? :wub::D அதாவது மூன்று குதிரையா?

முட்டைக்குதிரைதான் எண்டு ஞாபகம்..! :D ஆனால் சமீபகாலமா தலைமாட்டில ஒண்டு; கால்மாட்டில ஒண்டு எண்டு பார்த்ததா ஞாபகம்..! மற்றக்குதிரைக்கு என்ன நடந்தது எண்டு தெரியேல்ல..! :lol: அதான் ரெட்டைக் குதிரையோட நிப்பாட்டிட்டன்..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றக்குதிரைக்கு என்ன நடந்தது எண்டு தெரியேல்ல..! :unsure:

சச்சி போயிந்தண்டி..மர்கயா.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சச்சி போயிந்தண்டி..மர்கயா.. :unsure:

குதிரை லாயத்தை விட்டு ஒடிவிட்டதா? :rolleyes:

இதுக்குத்தான் லாயத்தை எப்பவும் பூட்டி வைத்திருக்க வேண்டும். :wub:

சச்சி போயிந்தண்டி..மர்கயா.. :mellow:

என்னய்யா ஒரு இழவும் புரியல்ல. சிச்சி போயிட்டு செத்து போயிட்டாவா?

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா ஒரு இழவும் புரியல்ல. சிச்சி போயிட்டு செத்து போயிட்டாவா?

மர்கயா... தெலிய லேதா? நீங்கள் நாயகன் படம் பார்க்கவே இல்லையா? தப்பிலி, இது தப்பில்லையா? :mellow:

நயந்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பு போராட்டம் நடத்த முடிவு

[ Saturday, 18 September 2010, 12:53.14 PM GMT +05:30 ]

நடிகர் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரம்லத்தை புறக்கணித்து இப்போது அவர் நயன்தாராவுடன் சுற்றுகிறார்.

மும்பையில் அளித்த பேட்டியில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன். அவர் எனக்காக பிறந்தவர். விசேஷமானவர், அவரை பிரிந்து என்னால் வாழ முடியாது. பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை சோலை வனமாக மாற்றினார் என்றெல்லாம் வர்ணித்துள்ளார். ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரின் இத்தகைய வார்த்தைகள் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.

நயன்தாராவை திருமணம் செய்வது தனிப்பட்ட விஷயம் என்கிறார். தனது மனைவியை துன்புறுத்தி இன்னொரு பெண்ணை மணப்பது அவருக்கு வேண்டுமானால் தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். இது பெண்களுக்கு எதிரான ஒரு பொது பிரச்சினை. பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு. பிரபுதேவா தனது மனைவியை துன்புறுத்தி நயன்தாராவை மணந்தால் இருவரது படத்தையும் தமிழக பெண்கள் புறக்கணிப்பார்கள்.

ரம்லத்துக்கு எதிராக நடைபெறும் அநீதியை தடுத்து நிறுத்த போராட்டத்தில் குதிப்போம். பிரபுதேவாவிடம் இது பற்றி நடிகர் சங்கம் விசாரித்து ரம்லத்துக்கு நீதி கிடைக்க வழி வகை காண வேண்டும். இல்லாவிட்டால் நடிகர் சங்கம் முன்பும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். நயன்தாராவுக்கும் பெண்கள் சங்கம் மூலம் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறோம். இனனொரு பெண்ணின் வாழ்க்கையில் புகுந்து அந்த குடும்பத்தை சீரழித்தால் சும்மா விடமாட்டோம். சென்னையில் எந்த விழாவுக்கு சென்றாலும் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம்.

தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாராவை கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

http://www.viduppu.com/view.php?2aHHP5e0dNhmA0ecJJZT4b4Yabvcd3j5G3dc2Bnl3a434OT2e22ZLt30

  • கருத்துக்கள உறவுகள்

அவன் யாரையாவது கட்டிக்கிட்டு போகட்டும்.. அதுக்கேன் உந்தப் பொண்டுகள் குத்தி முறியினம். இவையும் பிரபுதேவாவை கட்டப் போகினமா..??!

அடுத்தவன்ர தனிப்பட்ட வாழ்க்கையில மூக்க நுழைக்கிறதே சிலதுகளுக்கு பப்பிளிசிற்றி தேட வசதியா இருக்குது போல..!

பிரபுதேவாவை கண்டிக்கிறவை.. நயனை கண்டிக்கிறவை.. கருணாநிதியையும் அவரின் கால்மாட்டு தலைமாட்டு பொண்டாட்டிகளையும் எல்லோ எதிர்த்துப் போராடனும்..! :mellow::)

மர்கயா... தெலிய லேதா? நீங்கள் நாயகன் படம் பார்க்கவே இல்லையா? தப்பிலி, இது தப்பில்லையா? :mellow:

நாயகன் 20 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன் வன்னியன். 'பாபா மர்கயா ஆப் கோனையா' என்றுதான் வரும்.

சச்சி போயின்தண்டி? பிரியல்ல தலைவா. மிச்சம் தெலுங்கா?

இப்பத்தான் கவலையா இருக்கு தெலுகு பிகர பிரக்கட் பன்னலேன்று.

Edited by thappili

  • தொடங்கியவர்

சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா - கேலிக்கூத்தான ஒரு விருது!

நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஹைதராபாதில் இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழியைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருதினை பசங்க படம் வென்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடுவுக்கு வழங்கப்பட்டது.

அதுவரை எல்லாமே சரியாகத்தான் நடந்தது. அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் என வர்ணிக்கப்படுகிறது திரையுலகில்.

ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபு தேவாவையும், அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நயன்தாராவையும் சிறந்த ஜோடியாகத் (தம்பதியாக - best couple award) தேர்ந்தெடுத்து விருது வழங்கியது இந்தப் பத்திரிகை.

இந்த இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது ஒரு புறமிருக்க, இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்தது கூட இல்லை என்பதுதான் இந்த விருதை கேலிக் கூத்தாக்கிவிட்டது.

"சமூக நியதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் பத்திரிகைகள்தான் பெரிதாக கூறுகின்றது. ஆனால் இன்றைக்கு அதே பத்திரிகையுலகம், சட்டவிரோத உறவுக்குள் வாழும் இருவருக்கு சிறந்த தம்பதி விருது கொடுக்கிறது. எல்லாம் "விளம்பர ஸ்டன்ட்" என்பதைத் தவிர இதை வேறு எப்படிச் சொல்வது?" என்று விழாவுக்கு வந்திருந்த ஒரு இயக்குனர் கோபத்துடன் கூறினார்.

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1285075090&archive=&start_from=&ucat=1&

Edited by KILI TIGER

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.