Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ யார்?

நண்பனா? துரோகியா?

நீ எந்தப்பக்கம்?

மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா?

2009 ஆண்டு மேமாதத்தில்; சிங்கள அரசு சில ஆதிக்கசக்திகளை பலமான பின்புலமாகக் கொண்டு செய்த உச்சமான தமிழ் இனப்படுகொலையின் பின்னான நாட்கள் பலரை ஊமையாக்கி, மன ஊனமாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோவகையில் ஈழத்தமிழர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியே உள்ளனர். அந்த வகையில் நாமும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து வந்த நாட்கள் நாங்கள் சிதறவில்லை உறுதியோடே புலம்பெயர்ந்த நாடுகளின் அனைத்து வழிகளிலும் எங்கள் இன்னல்களை சொல்ல முனைந்தோம். இன்று தோற்றுப்போய் நிற்கிறோம். தோல்விகளுக்குக் காரணம் எதிரிகள் அல்ல. புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களின் தலைமைத்துவத் தளம்பலே நாம் இப்போது எதிர்கொண்டுவரும் பாரிய பின்னடைவிற்கான காரணங்கள்.

தேன்கூட்டில் கல்லெறி விழுந்ததை உணராத தேனீக்கள் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டித் தாக்கத்தொடங்கியதன் பின்விளைவே தாயகத்தை நேசிக்கும் பலரை மௌனிக்க வைத்துள்ளன. ஒன்றை மற்றொன்று தாக்கி அதில் சுவார்ஸ்யம் குறைந்து போன தாக்குதல் தேனீக்கள் இப்போது,

தேன்கூட்டையும் அதற்குள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் தேனீக்களையும் பற்றியே சிந்தித்துக் கொண்டு, அவைக்காக தாக்குதல் குழுக்களின் எந்தப்பக்கமும் சார்ந்து தம்மை இந்தக்குழு என்று அடையாளப்படுத்தாமல் இருக்கும் தேனீக்கள்மீது…. தங்கள் தாக்குதலின் வீச்சை ஆரம்பித்து இருக்கின்றன. அதன் வெளிப்பாடே எங்கள் ஒவ்வொருவர் மீதான சந்தேகமாக இருக்கிறது.

நீ யார்?

நண்பனா? துரோகியா?

நீ எந்தப்பக்கம்?

மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா?

இன்றைய காலத்தில் முரண்பட்டுக் கொள்ளும் தமிழ்த்தேசியவாதிகள் என்று பீற்றிக் கொள்ளும் பலர் தொடுக்கும் தொடர் கேள்விக்கணைகள் இவை.

எல்லோரையும் துரோகிப்பட்டியலில் சந்தேகத்தோடு சேர்த்துவிட்டு சல்லடைபோட்டு பின்புலம்பற்றி ஆராய்கிறார்கள். மௌனம் என்பது சில சமயங்களில் எல்லோரையும் எதிரியாக்கும் என்பது அனுபவ உண்மை.

இன்றைய நிலைப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் கூறாமல் இருக்கும்போதும் பகைவர்களாகவே சந்தேகக்கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். எங்கள் பக்கம் நின்று மற்றவர்களைத் தூற்று இல்லையென்றால் நீ துரோகி என்பது போன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்

எல்லோருக்கும் ஒன்று சொல்லவேண்டும்;. நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டாந்தரப்பிரசையாகத் தமிழரை சிறிலங்கா அரசு வாழும்படி நிர்ப்பந்தித்ததால்தான் இன்று எங்கள் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றது. நிர்ப்பந்தங்கள், திணிப்புகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது. அத்தகைய செயற்பாடுகளை விடுதலையில் வேணவாக் கொண்ட ஒரு சமூகத்தால் செய்ய முடியாது. இந்நிலை மாறுபட்டதாக இருக்குமாயின் அவ்விடத்தில் விடுதலைக்கான அர்த்தம் தெரியாதவர்கள் மட்டுமே நிறைந்திருக்க முடியும். சிந்தனைத் தெளிவு பொறுப்புள்ள நிலையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்.

இப்படி வேற நடக்குதா?

ஏற்கனவே நடக்கிற கூத்தப்பாத்திட்டு மக்கள் வெறுத்துப்போயுள்ளார்கள். இதே நிலை தொடர்ந்தால், மக்களால் இவர்கள் ஒதுக்கப்படப்போவது நிச்சயம். இணையத்தில் மாத்திரமே அரசியல் செய்ய வேண்டிய நிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய திகதியில் இந்த நிமிடம் வரை எம்மக்கள்மத்தியில் நான்பெரிது, நீபெரிது நான் தலைவன் அவர் தலைவன் இவர் தலைவன் எனக்கூறும் அனைவரையும் நான் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறேன். ஒரு தலைவன் வரவுக்காக் காத்திருக்கிறேன். சிலவேளை அத்தலைவன் நான் வாழும் காலத்தில் வராதுவிடலாம் அன்றேல் இன்னமும் ஐம்பது நூறு வருடங்களால் வரலாம் அதுவரை எனது சந்ததி காத்திருக்கும். வீரியம்மிக்க அந்தத் தலைவன் வரவிற்காய். அதுவரை நான் எவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் காலம் எமக்கொரு தலைவனைத் தரும் வல்வை சாகரா, அத்தலைவன் உங்கள் வீட்டிலிருந்தும் வரலாம். உங்கள் கருப்பையிலும் கருவுற்றிருக்கலாம். தவறான சொற்பதங்கள் ஏதாவது இருக்குமென உணர்ந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீ யார்?

நண்பனா? துரோகியா?

நீ எந்தப்பக்கம்?

மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா?

எல்லோரையும் துரோகிப்பட்டியலில் சந்தேகத்தோடு சேர்த்துவிட்டு சல்லடைபோட்டு பின்புலம்பற்றி ஆராய்கிறார்கள். மௌனம் என்பது சில சமயங்களில் எல்லோரையும் எதிரியாக்கும் என்பது அனுபவ உண்மை.

எல்லோருக்கும் ஒன்று சொல்லவேண்டும்;. நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டாந்தரப்பிரசையாகத் தமிழரை சிறிலங்கா அரசு வாழும்படி நிர்ப்பந்தித்ததால்தான் இன்று எங்கள் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றது. நிர்ப்பந்தங்கள், திணிப்புகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது

. அத்தகைய செயற்பாடுகளை விடுதலையில் வேணவாக் கொண்ட ஒரு சமூகத்தால் செய்ய முடியாது. இந்நிலை மாறுபட்டதாக இருக்குமாயின் அவ்விடத்தில் விடுதலைக்கான அர்த்தம் தெரியாதவர்கள் மட்டுமே நிறைந்திருக்க முடியும். சிந்தனைத் தெளிவு பொறுப்புள்ள நிலையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்.

எம்மை மீறி எவரும் எங்கும் வளர்ந்து விடமுடியாது

மக்களுக்கு முன்னால் வரவேண்டி இருப்பதால்

அவர்களால் ஒரு எல்லைக்கப்பால் செல்ல முடியாது

எனவே நாம் விழிப்பாக இருப்போம்

தமிழனுக்கு நாடு தேவை என்பதை எதிரியே ஊட்டினான்

ஊட்டி வருகின்றான்.

தேவை இருக்கும் போது மீதி.................???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமைத்துவம் என்பது தவம்

எம்மினத்தைப் பொறுத்தவரை அத்தவசீலர் மேதகு தலைவர் வே. பிரபாகரனே அன்றி வேறு எவரும் இந்த நூற்றாண்டுக்குள் உருவாக முடியாது.

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது

நீ யார்?

நண்பனா? நீ எந்தப்பக்கம்?

இப்போது மனிதாபிமானிகள் என்று ஓர் புதுக்கிளையை தொடங்கி அதைவைத்து கிண்டல் செய்கின்றார்கள். ஆக்களை மட்டம் தட்டுவதற்கு துரோகி, எட்டப்பன் எனும் பதங்கள் நீங்கி இப்போது மனிதாபிமானி எனப்படுகின்ற பதம் வலுமிக்க ஓர் 'ஆயுதச்சொல்' ( :wub: ) போல் பரவலாக பயன்படுத்தப்படுவதாக தெரிகின்றது. யாராவது ஒருவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படாவிட்டால் நீங்களும் அவரை 'மனிதாபிமானி' என்று ஏளனமாக கூறி உங்கள் தரப்பு வாதத்தை நிலைப்படுத்திக் கொள்ளலாம். பிரயோகம் செய்து பாருங்கள்.

Edited by கலைஞன்

நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா?

இவை நல்ல கேள்விகள். காலத்துக்கு தேவையான கேள்விகள். கருத்துக்களை உள்வாங்கி எமதினத்துக்கு சரியான பாதையில் செல்ல ஓர் வழி காட்டும் என நம்புவோம்.

எமக்கு "ஒரு சரியான வழி" "தலைவன்" என வரும்வரை நாம் சும்மாகவும் இருக்க முடியாது. இவற்றை உருவாக்க நாமும் எம்மால் ஆனதை செய்யவேண்டும். முதலில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நடவடிக்கைகளை அலச வேண்டும், புரிதல் வேண்டும்.

நாம் அனைவருமே கீழ் உள்ள எல்லாவற்றையும் இல்லை எதாவது ஒன்றை செய்யலாம்:

-இல்லை எம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை ஒற்றுமை ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை மொழி ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

  • கருத்துக்கள உறவுகள்

நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா?

இவை நல்ல கேள்விகள். காலத்துக்கு தேவையான கேள்விகள். கருத்துக்களை உள்வாங்கி எமதினத்துக்கு சரியான பாதையில் செல்ல ஓர் வழி காட்டும் என நம்புவோம்.

எமக்கு "ஒரு சரியான வழி" "தலைவன்" என வரும்வரை நாம் சும்மாகவும் இருக்க முடியாது. இவற்றை உருவாக்க நாமும் எம்மால் ஆனதை செய்யவேண்டும். முதலில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நடவடிக்கைகளை அலச வேண்டும், புரிதல் வேண்டும்.

நாம் அனைவருமே கீழ் உள்ள எல்லாவற்றையும் இல்லை எதாவது ஒன்றை செய்யலாம்:

-இல்லை எம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை ஒற்றுமை ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

- இல்லை எம்மை மொழி ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

நீங்கள் சொல்வது புரியவில்லை

நல்ல கேள்வி என்கிறீர்கள்

ஆனால் அதென்ன மக்களவையா? நாடு கடந்தஅரசா?

அதென்ன நீ எந்தப்பக்கம்

ஏன் தமிழன் இரண்டிலும் இருக்க முடியாதா..?

தங்களுக்கு தெளிவு இல்லையெனில் மற்றவர்களுக்கு ஆலோசனை எப்படி...?

புரியவில்லை

விளக்கம் தரமுடியுமா...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நீங்கள் ஒரு தெளிவான நீர்மட்டம் அதாவது ஒரு நீச்சல் குளத்தில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர் மாதிரி.

பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா போன்றதாகத்தான் உங்கள் கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.

"நல்ல கேள்வி என்கிறீர்கள்"

கேள்விகள் கேட்பது பயனுள்ளது. அவற்றை கேட்பவர்களை ஒரு விதத்தில் நாம் ஊக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுது தான் நாம் ஒரு நல்ல முடிவை பெறலாம்.

" ஆனால் அதென்ன மக்களவையா? நாடு கடந்தஅரசா? அதென்ன நீ எந்தப்பக்கம் ஏன் தமிழன் இரண்டிலும் இருக்க முடியாதா..?"

நிச்சயமாக இரண்டிலும் இருக்கலாம். ஏன் இன்னும் வேறு அமைப்புக்களுக்கும் அதரவு அளிக்கலாம். ஆனால் அந்த ஆதரவின் பின்னால் அந்த ஆதரவை பெரும் அமைப்புக்களுக்கு ஒரு கடமை உண்டு.

தமக்கு ஆதரவு அளிக்கும் மக்களுக்கு விசுவாசமாக நடப்பதுடன் முடிந்தளவுக்கு மக்களுக்கு தமது நடவடிக்கைகளுக்கு விளக்கங்களையும் தர வேண்டும். மக்கள் அமைப்புக்களை இனம் காணும் திறமை கொண்டவர்கள். சரியானவர்களை இனம் கண்டு அவர்களை ஆதரிப்பார்கள்.

"தங்களுக்கு தெளிவு இல்லையெனில் மற்றவர்களுக்கு ஆலோசனை எப்படி...?"

இதை ஆலோசனை என்பதை விட எனது கருத்தாக பாருங்கள்.

"புரியவில்லை விளக்கம் தரமுடியுமா...?"

என்னால் முடிந்தளவுக்கு விளக்கம் தந்துள்ளேன் என எண்ணுகிறான். இல்லையெனில் கேளுங்கள் நிச்சயம் பதில் அளிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

" ஆனால் அதென்ன மக்களவையா? நாடு கடந்தஅரசா? அதென்ன நீ எந்தப்பக்கம் ஏன் தமிழன் இரண்டிலும் இருக்க முடியாதா..?"

நிச்சயமாக இரண்டிலும் இருக்கலாம். ஏன் இன்னும் வேறு அமைப்புக்களுக்கும் அதரவு அளிக்கலாம்.

ஆனால் அந்த ஆதரவின் பின்னால் அந்த ஆதரவை பெரும் அமைப்புக்களுக்கு ஒரு கடமை உண்டு.

தமக்கு ஆதரவு அளிக்கும் மக்களுக்கு விசுவாசமாக நடப்பதுடன் முடிந்தளவுக்கு மக்களுக்கு தமது நடவடிக்கைகளுக்கு விளக்கங்களையும் தர வேண்டும். மக்கள் அமைப்புக்களை இனம் காணும் திறமை கொண்டவர்கள். சரியானவர்களை இனம் கண்டு அவர்களை ஆதரிப்பார்கள்.

கேளுங்கள் நிச்சயம் பதில் அளிப்பேன்.

மீண்டும் ஒரு கேள்வி தங்களிடம்

மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பை நாலு பேர் திசை திருப்பமுடியுமா..?

மக்களின் பார்வையின் கீழ் உள்ள ஒரு அமைப்பை நாலுபேர்விற்றுவிடமுடியுமா..?

"மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பை நாலு பேர் திசை திருப்பமுடியுமா..? மக்களின் பார்வையின் கீழ் உள்ள ஒரு அமைப்பை நாலுபேர்விற்றுவிடமுடியுமா..? " கேள்விக்கு நன்றி.

நிச்சயமாக முடியும்.

ஆனால் ஒரு காத்திரமான அரசியல் அமைப்பை ( கட்டமைப்புக்கள் உள்ள including trasparency ) திசை திருப்பவோ விற்கவோ முடியாது, மக்கள் விழிப்புடன் இருந்தால்.

நாடு கடந்த அரசும் சரி மக்கள் அவையும் சரி ஒரு மக்கள் சனநாயக அமைப்பு. ஆம் பல்வேறு ஏற்ற தாக்கங்கள் சனநாயகத்தில் இருந்தாலும் சனநாயகமே உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆம், இந்திய சனநாயகம் வேறு அமெரிக்க வேறு சிறிலங்கா வேறு.

மீண்டும் உங்கள் கேள்விக்கு போனால், புலம் பெயர் மக்கள் விழிப்பாக இருந்தால் இது சாத்தியமாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தெளிவாக இருக்கின்றேன்

இவை அனைத்திலும் நான் பங்கு கொண்டுள்ளேன்

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்துக்கும்

இல்லை எம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஒரு பத்து நிமிடம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையையும் http://www.nytimes.com/ ( மேலோட்டமாக)

அதன் கருத்துபக்கங்களையும் பாருங்கள் http://www.nytimes.com/pages/opinion/index.html?8dpc

அமெரிக்க மக்களாட்சியை புரிதல் உலக ஆட்சியை ஓரளவுக்கு புரிய உதவும்.

இல்லை எம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

உலக தமிழர் பேரவை போல் உலக தமிழர் பொருளாதார பேரவை (Global Tamil Economic Forum) ஒன்று தேவை. எமக்குள் நாம் முடிந்தளவு வர்த்தகங்கள் செய்ய வேண்டும்.

http://www.tamilbizcard.com/ ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=75944 )

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75944

இல்லை எம்மை ஒற்றுமை ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்;

எம்மை நாம் மதிக்க, அன்பு வைக்க யாழ் களத்துக்கு வர வேண்டும் :-)

இல்லை எம்மை மொழி ரீதியில் பலப்படுத்தல் வேண்டும்

www.khanacademy.org போல தமிழ் படிக்க பேலும் வளர்க்க புது யுத்திகள் தேவை. தொழில் நுட்பங்களும் தமிழில் நுழைய வேண்டும் (Google)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களவையெண்டாலென்ன ந.க.அ.எண்டாலென்ன எமது இலட்சியத்தை முன்னெடுப்பவர்கள் எவராயிருந்தாலும் நாங்கள் எங்கட ஆதரவைக்கொடுப்பம்.எல்லாக்கட்சியிலயும் இருப்பம்.ஆனா....இதிலிருந்து எவராவது கே.பி. மாதிரியோ தயாமாஸ்ரர் மாதிரியோ குத்துக்கரணமடிச்சா சங்குதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களவையெண்டாலென்ன ந.க.அ.எண்டாலென்ன எமது இலட்சியத்தை முன்னெடுப்பவர்கள் எவராயிருந்தாலும் நாங்கள் எங்கட ஆதரவைக்கொடுப்பம்.எல்லாக்கட்சியிலயும் இருப்பம்.ஆனா....இதிலிருந்து எவராவது கே.பி. மாதிரியோ தயாமாஸ்ரர் மாதிரியோ குத்துக்கரணமடிச்சா சங்குதான்.

நாட்டுக்கட்டை இது கருத்துக்களம் இந்தக்கருத்துக்களத்தில் சங்கூதிகள் தேவையில்லை. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ்த் தேசியத்தின் பக்கம்.யார் தமிழ்த் தேசியத்தில் உறுதியாக நிற்கிறார்களோ அவர்கள் பக்கம். இன்றைய சூழ்நிலையில் புலத்தில் அரசியல் செய்பவர்கள் யாரும் ஒளிந்திருந்து அரசியல் செய்யத் தேவையில்லை.நா.க.அரசையும் ஆதரித்தேன். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மறுவாக்களிப்புக்கும் வாக்களித்தேன்.நா.க.அரசை மக்களவை வெறுக்கவில்லை.அதன் தலைமைப்பீடத்தைக் கைப்பற்றவே முயற்சிக்கிறார்கள் போல் தெரிகிறது.நா.க.அரசின் பிரதமர் எல்லோருக்கும் தெரிந்தவர்.ஆனால் அவருக்கு எதிராக சேறடிப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத மாயமானாக ஏன் இருக்க வேண்டும்.மக்கள் முன் வந்து தங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கலாமே.அவர்கள் கருத்துக்கள் தெளிவானதாக இருந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள்.ஒரு கட்சி அரசு என்பது சர்வாதிகாரம்.நா.க.அரசுக்குள் 2 (கட்சிகள்) கருத்துக்களைக் கொண்டவர்கள் இருப்பது ஆரோக்கியமானதே.சன நாயக அரசுக்கு அது நல்ல உதாரணம். ஆனால் எதிர்க் கட்சியை இயக்குபவர்கள் வெளிப்படையாக இயங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். யார் நீங்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா?

"எங்கள் பக்கம் நின்று மற்றவர்களைத் தூற்று இல்லையென்றால் நீ துரோகி என்பது போன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்

எல்லோருக்கும் ஒன்று சொல்லவேண்டும்;. நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டாந்தரப்பிரசையாகத் தமிழரை சிறிலங்கா அரசு வாழும்படி நிர்ப்பந்தித்ததால்தான் இன்று எங்கள் விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றது. நிர்ப்பந்தங்கள், திணிப்புகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது. அத்தகைய செயற்பாடுகளை விடுதலையில் வேணவாக் கொண்ட ஒரு சமூகத்தால் செய்ய முடியாது. இந்நிலை மாறுபட்டதாக இருக்குமாயின் அவ்விடத்தில் விடுதலைக்கான அர்த்தம் தெரியாதவர்கள் மட்டுமே நிறைந்திருக்க முடியும். சிந்தனைத் தெளிவு பொறுப்புள்ள நிலையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். "

இந்த வசனங்களைதானே நாங்கள் காலம் காலமாக சொல்லிக்கொண்டுவருகின்றோம்.இன்று தங்களுக்குள் பிளவு வந்தவுடன் அதே அஸ்திரத்தையே அவர்கள் தங்களுக்குளும் பாவிக்கின்றார்கள்.இவர்களுக்கு தெரிந்தது தன் கருத்துடன் உடன் படாவிட்டால் துரோகி,கைகூலி.

நாடு கடந்த அரசு,மக்கள் பேரவை இவைகடந்து பரந்த தமிழர் உலகமொன்றுண்டு.முள்ளிவாய்காலின் பின் அந்த கருத்தே பெரும்பாலான தமிழர் மத்தியில் பிரதிபலிக்கின்றது.இந்த ஊடக பலத்தை வைத்து கொஞ்ச நாட்களுக்கு "கொண்டாட்டம்"போடப் போகின்றார்கள்.அவ்வளவும் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.