Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம்

Featured Replies

காவோலை விழ குருத்தோலை பார்த்து சிரிக்கும் என்று கூறுவார்கள். நேற்றைய குழந்தைகள் இன்றைய இளைஞர்கள், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். சாத்திரி அண்ணா ஆரம்பித்த இந்தக்கருத்தாடலை நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. ஒருநாளின் பின்பே பல பின்னூட்டல்கள் குறிப்பிட்ட கருத்தாடலிற்கு உள்ளதை பார்த்துவிட்டு உள்ளே என்ன நடைபெறுகின்றது என்று அவதானித்தேன். அங்கு எழுதப்பட்டுள்ள பெரும்பாலான பின்னூட்டல்களில் வக்கிரத்தன்மை காணப்பட்டது. இதன் பின்னணியில் வயது துவேசம் காணப்பட்டது, எனவே எனது கருத்துக்களையும் கூறினேன். ஓர் ஐம்பது வயது அல்லது அதற்கு மேற்பட்ட அகவையுடைய யாழ் கள உறவிற்கு அல்லது யாழ் வாசகரிற்கு பின்னடைவான ஓர் உளநிலை, தடுமாற்றம், அல்லது உளவேதனை இங்குள்ள வக்கிரமான வயது, துவேச எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் மூலம் ஏற்படக்கூடாது என்பதே என்னை தொடர்ச்சியாக ஆர்வத்துடன் இந்தக்கருத்தாடலில் பங்குகொண்டு கருத்துக்கள் கூறுவதற்கான தூண்டுதலாக விளங்கியது.

நகைச்சுவைக்காக நாங்கள் மற்றவர்களை கிண்டல் செய்கின்றோம், மட்டம் தட்டுகின்றோம். ஆனால், சில சமயங்களில் நாம் எதிர்பாராத வகையில் மிகவும் படான் என்று நினைத்த ஒருவர் வாழ்வில் பிரகாசிக்கின்றார். நான் கனடாவிற்கு வந்தபோது எனக்கு ஒருவர் "நீ தான் அடுத்த கனேடிய பிரதமரோ தெரியாது" என்று நகைச்சுவையாக கூறி வழியனுப்பினார். நான் அந்த உறவை அடிக்கடி நினைத்துப்பார்ப்பேன். இதுபற்றி பலருக்கு நகைச்சுவையாக கூறுவது உண்டு. ஒருவனை வாழ்த்துவதற்கு நல்லதொரு உள்ளம் வேண்டும். உளம் திறந்து வாழ்த்துவது எல்லோராலும் முடியாது, ஆனால் வசைபாட மட்டும் பெரும்பாலானவர்களினால் முடிகின்றது. இன்று பலராலும் கிண்டல் செய்யப்பட்ட தணிகாசலம் வாழ்க்கையில் பிரகாசித்து, சமூகத்தில் மிகுந்த மதிப்பு பெற்ற ஒருவராக மிளிரக்கூடும். எனவே, மற்றவனை மட்டம் தட்டுவதை தவிர்ப்பது பற்றி நாம் சற்று நிதானமாக சிந்திக்கலாம்.

நான் சாத்திரி அண்ணாவிடம் கேட்டுக்கொள்ளும் ஓர் விடயம்.. தற்செயலாக தணிகாசலம் அவர்கள் உங்களை மீண்டும் தொடர்புகொண்டால்.. அவரிடம் யாழில் நாங்கள் கருத்தாடல் செய்த குறிப்பிட்ட இந்த கருத்தாடலை நேரம் கிடைக்கும்போது வாசிக்குமாறு கூறுங்கள். நன்றி.

Edited by கரும்பு

  • Replies 187
  • Views 14.5k
  • Created
  • Last Reply

நிச்சயமாக இங்கு அவரது சுயநலம் உள்ளது. யார் இல்லை என்று கூறினார்கள்?

56 வயது உடையவர் ஓர் அப்பு - கிழவர் என்று சொல்வதற்கு இல்லை. கமலகாசனும், ரசனிக்காந்தும் தமது 56, 61 வயதுகளில் இளங்குமரிகளுடன் குதி தெறிக்க ஆடுவதை எம்மால் பார்த்து கைதட்ட முடிகின்றது. ஆனால்.. நம்மவர் ஒருவர் 56 வயதுடையவர் என்றால் அப்பு என்று கூறி கிண்டல் செய்கின்றோம், ஒதுக்கி வைக்கின்றோம். வயதுபோனவர்கள் ஆற்றல் அற்றவர்கள் உடல் பலவீனமானவர்கள் எனும் stereotypeஐ மறுதலிக்கவே அவர்கள் படங்களை இணைத்தேன். த.வி.பு தலைவரும் ஐம்பது வயது சொச்சம் உடையவர். உங்கள் பாசையில் அந்த அப்புவை நம்பி ஒரு பெரிய தேசத்தையே ஒப்படைத்து தமிழர் தலைவிதியையே தீர்மானிக்கலாம் என்றால் ஒரு முப்பது வயது பெண்ணிற்கு வாழ்வு கொடுப்பதற்கு ஏன் 56வயது நபர் ஒருவரால் முடியாது? மண்டேலா மூன்றாம் தரமாக திருமணம் செய்தபோது அவருக்கு வயது 80, அவரது மூன்றாவது மனைவியைவிட அவருக்கு 27 வயதுகள் அதிகம். உங்கள் பாசையில் நாளைக்கோ நாளன்றைக்கோ மண்டையை போடக்கூடிய 80 வயது நபர் ஒருவரை ஏன் ஒருவர் திருமணம் செய்யவேண்டும்? அவ்வளவு பெரிய தலைவருக்கு ஏன் 80 வயதில் திருமணம் தேவைப்படுகின்றது? தலைவர் என்றால் என்னவும் செய்யலாம், அதை ஏற்றுக்கொள்வீர்கள், ஆனால், ஓர் சாதாரண மனிதன் என்றால் 56 வயது என்றதும்... கோயில், குலம் என்று புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு பரலோகம் போவதற்கு தன்னை ஆயத்தப்படுத்தும் அலுவல்களை மாத்திரம் செய்யவேண்டும்?

இதை நான் ஏற்றுக் கொண்டதாக எப்படி சொல்லுகிறீர்கள்? எந்த சூழ்நிலையிலும் இப்படியானவைகளை ஆதரிக்க/நியாயப் படுத்த மாட்டேன் என்று தான் குறிப்பிடு இருந்தேன்.

Edited by குட்டி

நான் சாத்திரி அண்ணாவிடம் கேட்டுக்கொள்ளும் ஓர் விடயம்.. தற்செயலாக தணிகாசலம் அவர்கள் உங்களை மீண்டும் தொடர்புகொண்டால்..

அவரிடம் உங்கள் நேசக்கரத்தின் வரையறைகளுக்குள் இது அடங்கவில்லை என கூறிவிடுங்கள், நன்றி.

தணி, இளம்பெண்ணை துணையாக விரும்புவதோ அல்லது முதிய பெண்ணை துணையாக விரும்புவதோ அவரது தனிப்பட்ட விடயம். அதில் யாரும் தலையிடப்போவதில்லை. ஆனால் இவர் ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஆதரவு கேட்டு நிற்கும் நலிந்தவர்களின் இயலாமையை தனக்கு சாதகமாக பாவிக்க பார்க்கிறார்.

வயது வித்தியாசம், வேலை, தகுதி, மொட்டை, சொட்டை, :blink: .......... etc.... திருமணம் முடிக்கப்போகும் / சேர்ந்து வாழப்போகும் இரு மனங்களின் தனிப்பட்ட விடயம்.

மாட்டை பற்றி எழுத சொன்னால்,

அதைப் பற்றி தெரியாதவர்கள் மாட்டை கொண்டு மரத்தில் கட்டி விட்டு மரத்தை பற்றி எழுதுவதுவது வழக்கம். 9 பக்கம் சென்றுள்ளது.

இத்திரியில் விவாதித்து வெல்வது நோக்கமல்ல. பாதிக்கப்பட்டவர்களை (vulnerable ) தங்கள் தேவைகளுக்கு (abuse ) பாவிக்க வேண்டாம் என்பதே.

தவித்த முயல் அடிப்பது, எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்குவது இவற்றைத்தான் ஏற்க முடியவில்லை.

பாவம் சனம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

56 வயது மனிதர் ஒரு சுயநலவாதி.

இந்த தலைப்பை வாசித்து தனது மனதை மாற்றிக்கொண்டு பல நல்ல சீர்திருத்த செயல்களில் ஈடுபடுவாரானால் சிறப்புக்குறியவராக கருதப்படுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தணிகாசலத்தின் பிரச்சனைக்கு பெரும்பாலானவர்களின் கருத்து அவரிற்கு நேசக்கரம் அமைப்பினுடாக உதவக்கூடாது என்பதாக அமைகின்றது அந்த முடிவினை நேசக்கரம் அமைப்பும் எடுத்திருக்கின்றது. இன்றிரவு தணிகாசலம் அவர்களுடன் தொடர்புகொண்டு நேசக்கரம் அமைப்பினால் உங்களிற்கு உதவ முடியாது என்றும் ஆனால் அவரிற்கு தனிப்பட்ட ரீதியாக ஒரு உதவிமட்டும்செய்ய முடியும் என்று சொல்லிஎன்னால் ஒழுங்கு பண்ணி கொடுக்கப்பட்டது அது ஊரில் உள்ள ஒரு பத்திரிகை நண்பர் ஒருவரின் தொ.பே இலக்கத்தினை கொடுத்து ஊரிற்கு போனதும் அவருடன் தொடர்பு கொண்டு அவரது பத்திரிகையில் மணமகள் தேவை என்கிற ஒரு விளம்பரத்தினை போடுங்கள் அதில் உங்கள் விபரம் மற்றும் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதனையும் தெளிவாக குறிப்பிடுங்கள் யாராவது தொடர்பு கொண்டால் மிகுதி விடயங்களை எனது பத்திரிகை நண்பரின் உதவியுடன் செய்யுங்கள் என்று கூறியது மட்டுமல்லாமல் ஊரிற்கு போக முதல் யாழ் இணையத்தில் நடந்த விவாதங்களையும் ஒரு முறை படித்துவிட்டு போகச்சொல்லி அவரிற்கு யாழ் களத்தினை எப்படி பார்ப்பது என்றும் ஒரு யாழ்களம் பற்றிய அறிமுகத்தினை கொடுத்துள்ளேன்.

அதே நேரம் தெளிவுகளிற்காக அவரிடம் சில கேள்விகளையும் கேட்டிருந்தேன் அவை

1)உங்களிற்கு ஊரில் உறவுகள் நண்பர்கள் யாரும் இல்லையா?? அப்படி அவர்கள் இருந்தால் ஏன் என்னுடன் தொடர்பு கொண்டீர்கள்??

இதற்கு அவரின் பதில் ..முதலில் மறுமணம் செய்யும் முடிவினை ஊரில் மட்டுமல்ல இங்கும்தான் உறவுக்காரர்களிடமும் நண்பர்களிடமும் தெரிவித்த பொழுது அவர்களிடமிருந்து வந்த உடனடி பதில் பேரப்பிள்ளையும் பிறந்திட்டிது இந்த வயதிலை உனக்கு இது தேவையா என்பதுதானாம். அவர்கள் எவருமே என்னுடைய தனிமையையும் என்னுடைய தேவைகளையும் புரிந்து கொள்ளவில்லையென்றார்.அது மட்டுமல்ல இந்த முடிவினால் என்னுடைய பிள்ளைகள்கூட என்னுடன் இப்பொழுது கதைப்பதில்லை அதனால்தான் என்னுடன் சம்பந்தமேயில்லாத இன்னொருவர் மூலம் முயற்சிக்கலாமென நினைத்து என்னுடன் தொடர்பு கொண்டதாக கூறினார்.

2)அந்த 3வது நபராக நேசக்கரத்தினை நீங்கள் ஏன் தெரிவு செய்தீங்கள்?? அதுவும் பிள்ளையள் இல்லாத விதைவை பெண்ணை உறவாக்கிகொள்ள விரும்பினீங்கள்??

வானொலியில் உங்கடை நிகழ்ச்சியளை அடிக்கடி கேக்கிறனான் அதிலை விதைவையள் பற்றிய விபரங்களும் அவையளிற்கு தொழில் செய்ய உதவிதரசொல்லி சொல்லுறனீங்கள் அப்பதான் யோசிச்சன் ஒரு விதைவையை செய்தால் அவருக்கும் ஒரு வாழ்க்கை துணை கிடைச்சமாதிரியிருக்கும். ஆனால் அவருக்கு பிள்ளையிருந்தால் அது என்னை ஏற்று கொள்ளுமா இல்லையா எண்டிற பிரச்சனை அதுமட்டுமில்லை இங்கை கூப்பிடுற ஸ்பொன்சர் பிரச்சனையும் இருக்கு.அதே நேரம் இஞ்சை புதிசாய் வாறவை இப்ப உள்ள சட்டப்படி கட்டாயம் மொழி படிக்க பள்ளிக்கூடம் போகவேணும் அப்பிடி போற இடங்களிலை ஒரு விதைவைபெண் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் என்கிற படியாலை வெளிநாடு வந்தாலும் வெளிநாட்டு கலாச்சாரம் இங்கத்தைய நடைமுறையிலை மாறிப்போகாமல் என்னோடையே அன்பாய் இருப்பார் என்றார்

இவருடைய இரண்டாவது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் என்னுடைய 3 கேள்வியான 30 வயதிற்குள்தான் எதற்காக பெண் வேண்டும் என்று கேட்டீர்கள் என்பதற்கு சரியான பதிலை அவரால் தரமுடியவில்லை..எனக்கும் அதற்குமேல் அவரை நோண்ட விருப்பம் இல்லை எனவே இங்கு கருத்தெழுதியவர்கள் கூறியது போல் இந்த கருத்துக்களை படித்து அவரில் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்படால். எதற்கும் அவர் ஊரில் இருந்து திரும்பி வந்ததும் என்னுடன் தொர்பு கொள்வார் அல்லது எனது பத்திரிகை நண்பன் விடயங்களை அறியத் தருவான் அப்பொழுது தணிகாசலம் யாரை எப்படியானவரை திருமணம் செய்தார். அல்லது செய்யவே இல்லையா என்பதனை நிச்சயம் இங்கு உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன் அதுவரை மேலே கருத்து பகிர்ந்த அனைவரிற்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்.தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தணிகாசலத்திற்கு புது வாழ்வுகிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

பிரச்சனையை அணுகிய விதம் நன்று சாத்திரி அண்ணா அதுக்காக ஒரு பச்சை.

மற்றயது 56 வயதை கிழவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கிருக்கும் அந்த வயது ஆக்கள் யாராவது தாங்கள் கிழவன் எண்டு ஏற்றுக்கொள்ளுவினமோ? இப்போது அவரை கிழவன் எண்டு சொல்லுற ஆக்களுக்கு அந்த வயசு வரும்போது தான் புரியும்.

எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு விஷயம் தான் ஞாபஹத்துக்கு வருது.

எனது அப்பா வழியில் மிகவும் நெருங்கிய இரத்த உறவினர் ஒருவர் யூகேயில் இருக்கிறார். அவருக்கு ஒரு 45 வயசு இருக்கும். அவருக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்தும் பெற்றுவிட்டார். பல வருடங்களாக தனிமையில் தான் இருக்கிறார். அவருக்கு எமது ஊரில் உள்ள, எமது உறவினர் ஒருவர் ஒரு பெண்ணை இவருக்கு ரெண்டாம் தாரமாக்க கேட்டார். அவருக்கு அந்த அக்கா பெறாமகள் முறை, அப்பாக்கும் அந்த உறவினருக்கும் மச்சாள் முறை.. அவருக்கும் அப்போது ஒரு 30 வயசு இருக்கும். அவர் சுமாரானவர் படிக்கவில்லை ஆனால் நல்ல அன்பான குடும்பப் பாங்கான பெண், திருமணம் செய்யாதவர். அவருக்கு அண்ணப் பிளவு எனும் பிரச்சனை பிறந்ததில் இருந்தே இருந்தது அதனால் அவரது திருமணங்கள் தடைப் பட்டிருக்கும் என நினைக்கிறன். அந்த அக்காவுக்கும் இதிலே விருப்பம் இருந்தது. பின்னர் எதோ காரணங்களுக்காக அந்த திருமணம் நடைபெறவில்லை. எமது குடும்பமும் அதை அவ்வளவு விரும்பவில்லை என நினைக்கிறன். அந்த அக்காவுக்கு இரு தங்கைகள் போராளிகளாக் இருந்தார்கள். இதனால் சமாதான காலத்துக்கு பின்னர் அவர் வன்னிக்கு போய் அங்கு போராளிகளான தனது தங்கைகளுடன் வசித்து வந்தார். சமாதான காலத்தில் ஒருமுறை எங்களது வீட்டுக்கு வந்து தான் விசுவ மடுவில் இருப்பதாகவும். இயக்க உதவியுடன் கோழி மாடு மற்றும் சிறு தோட்டம் செய்வதாகவும் மகிழ்ச்சியா இருப்பதாகவும் கூறி "தம்பி நீங்கள் கட்டாயம் அங்க (வன்னிக்கு) வந்தா எங்கட வீட்டையும் வாங்கோ" எண்டு சொல்லிப்போட்டு போனவர். அதுதான் நான் கடைசியா அவரைக் கண்டது. நானும் படிக்க எண்டு அவுசுக்கு வந்திட்டன். பின்னர் யுத்தம் நடந்த போது இடம்பெற்ற ஒரு எறிகணைத்தாக்குதலில் அவர் உடல் சிதறி பலியாகிவிட்டார். நான் யோசிப்பதுண்டு, அவர் அப்பிடி வாழ்க்கைப் பட்டிருந்தால் இன்று பிரித்தானியாவில் உயிரோடாவது இருப்பார் எண்டு. :blink:

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஊரில் இருந்து திரும்பி வந்ததும் என்னுடன் தொர்பு கொள்வார் அல்லது எனது பத்திரிகை நண்பன் விடயங்களை அறியத் தருவான் அப்பொழுது தணிகாசலம் யாரை எப்படியானவரை திருமணம் செய்தார். அல்லது செய்யவே இல்லையா என்பதனை நிச்சயம் இங்கு உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன்

சாத்திரி . நீங்கள் பதில் அளித்த விதம் சிறப்பு.

அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை இருக்கும் பெண்கள் பொருளாதாரத்தை விட எந்த வகையிலை உங்களை விட தாள்ந்தவர்கள்....?? புலம் பெயர்ந்த கிழவன்கள் என்பதோ , இல்லை கன்னிகளியாத ஆண்களோ , மீட்ச்சியின் அடையாளம் இல்லை... புலம் பெயர்ந்த பெண் ஒருவர் போய் ஊரில் திருமணம் செய்ய பெரிதும் முன்வருவதில்லை, அப்படி நடந்தாலும் அபூர்வமகவே நடக்கிறது... ஆனால் ஆண் போய் திருமண செய்வதை எங்கட சமூகம் மீட்ச்சி என்கிறது... அதை பெரிதும் எதிர்பார்க்கிறது...

புலம் பெயர்ந்த ஆண் என்பது டாக்குத்தர் இஞ்சினியர், போல படித்து வாங்கின பட்டமா...?? இங்கை வந்து தமிழ் கடைகளிலையும் வேலை செய்து கொண்டோ அல்லது அரசாங்க பிச்சை காசிலை வாழ்வதை அந்த பெண்ணின் கரை சேர்தல் எண்று எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது....??? பாசையும் தெரியாது பிற மக்களின் தொடர்பு களும் இல்லாமல் எத்தினை பெண்கள் மன உலைச்சலுக்குள் இருக்கிறார்கள்.... இதை எப்படி உங்களால் மீட்ச்சி என அழைக்க முடிகிறது...

இலங்கையை விட்டு தமிழ் மக்கள் வெளியிலை வாறதுதான் மீட்ச்சி எண்றால் அதுக்கு எல்லாருமாக சேர்ந்து பாடுபடலாம்... ஆனால் ஒரு இளம் விதவைக்கு ஒரு கிழவன் எண்டாலும் பறவாய் இல்லை எண்டு கட்ட நினைப்பது மிகவும் வெதனையான செயல்...

அண்ணா என்னுடைய கருத்து என்பது வேறு ஆனால் உலகத்தில் நடப்பது வேறு என்னுடைய சொந்த கருத்தைக் கேட்டால் எனது பதில் 56 வயது நபர் 30 வயதிற்கும் குறைவான ஒரு பெண்ணை மணம் முடிக்க நினைப்பது ஒரு கேடு கெட்ட செயல்.அதை நான் எந்த விதத்திலும் ஆதரிக்க மாட்டேன்.இது என் சொந்தங்களுக்கு நடந்தால் கட்டாயம் அதை தடுத்து நிறுத்தத் தான் பார்ப்பேன்.ஆனால் ஊர் உலகத்தில காலம்,காலமாக பெண்களுக்கு இது தான் [இப்படி அநியாயம்] நடக்கிறது.அது யுத்தம் நடை பெற்ற பிறகு வன்னியில் மட்டும் இல்லை யுத்தம் தொடங்க முதல் யாழில் கூட பெண்களின் விருப்பத்தைக் கேட்டு திருமணம் செய்ய ஒரு பெற்றோரும் நினைப்பதில்லை.

ஒரு பெண் கஸ்டப்பட்ட,நடுத்தர வர்க்கத்தில் பிறந்தால் அப் பெண் எவ்வளவு படித்திருந்தாலும்[அதுவும் குடும்பத்தின் மூத்த பெண்ணாய் இருந்தால்],படிக்கா விட்டாலும் முதல் அவர்கள் திருமணம் பேசுவது வெளிநாட்டு மாப்பிள்ளை தான்.மாப்பிள்ளை என்ன படித்திருக்கார்,அவர் என்ன வேலை செய்கிறார்,அவர் ஒழுக்கமானவரா எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.ஊரில் பெற்றோர்கள் நினைப்பது எப்படியாவது பெண்ணைக் கட்டி குடுத்து விட்டால் அவளும் வெளி நாட்டுற்குப் போய் உழைத்தால் மற்ற சகோதர,சகோதரிகளை கூப்பிடுவார்கள் அத்தோடு பொருளாதார ரீதியில் தாங்களும் பலம் வாய்ந்தவர்களாக மாறலாம் என்பது அவர்களது கருத்து...தணிகாசலத்தை கட்ட வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட பெண்கள் மட்டும் இல்லை யாழில் இருக்கும் பெண்களே ஒத்துக் கொள்வார்கள் இதை நாங்கள் தடுத்து நிறுத்தினால் உடனே அவர்கள் சொல்வார்கள் எங்களுக்கு அவர்கள் நல்ல வரப் போறதைப் பார்த்து எரிச்சல் அது தான் அத் திருமணத்தை தடுத்து நிறுத்தப் பார்க்கிறோம் என்பார்கள்.அது தான் உண்மை. இப்படியான திருமணங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமானால் முதலில் அப் பெண்கள் தைரியமாய் எதிர்க்க வேண்டும்,அப் பெண்ணின் பெற்றோரும்,சகோதரர்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும்,புலம் பெயர் நாட்டில் பெண்கள் படும் கஸ்டங்களையும்,துன்பங்களையும் அங்குள்ளவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்[ஆனால் எப்படித் தான் அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் அவர்களுக்கு காசு,அந்தஸ்து தான் முக்கியம்.]

சாஸ்திரி அண்ணா எடுத்த முடிவு நல்லது.எனக்கு இத் திரியில் கவலை ஒரு பெண்களும்[என்னைத் தவிர] தங்கள் கருத்தை இத் திரியில் வைக்கவில்லை என்பது தான்.

தணிகாசலம் நேர்மையாக உள்ளதை உள்ளபடி ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக கேட்டுள்ளார்

அந்தநேர்மைக்காக முதலில் அவரை பாராட்டவேணும்

தட்டிய கதவு தவறாக இருக்கலாம் நீங்கள் சரியான கதவை காட்டிவிடுங்கள்

சாஸ்திரி அண்ணா எடுத்த முடிவு நல்லது.எனக்கு இத் திரியில் கவலை ஒரு பெண்களும்[என்னைத் தவிர] தங்கள் கருத்தை இத் திரியில் வைக்கவில்லை என்பது தான்.

மௌனம் சம்மதம்

தணிகாசலம் கேடடதில் தப்பில்லையென நினைத்தார்களோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ்! அவருக்கு சரியான இடம் நோக்கி கை காட்டியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்னுடைய கருத்து என்பது வேறு ஆனால் உலகத்தில் நடப்பது வேறு என்னுடைய சொந்த கருத்தைக் கேட்டால் எனது பதில் 56 வயது நபர் 30 வயதிற்கும் குறைவான ஒரு பெண்ணை மணம் முடிக்க நினைப்பது ஒரு கேடு கெட்ட செயல்.அதை நான் எந்த விதத்திலும் ஆதரிக்க மாட்டேன்.இது என் சொந்தங்களுக்கு நடந்தால் கட்டாயம் அதை தடுத்து நிறுத்தத் தான் பார்ப்பேன்.ஆனால் ஊர் உலகத்தில காலம்,காலமாக பெண்களுக்கு இது தான் [இப்படி அநியாயம்] நடக்கிறது.அது யுத்தம் நடை பெற்ற பிறகு வன்னியில் மட்டும் இல்லை யுத்தம் தொடங்க முதல் யாழில் கூட பெண்களின் விருப்பத்தைக் கேட்டு திருமணம் செய்ய ஒரு பெற்றோரும் நினைப்பதில்லை.

ஒரு பெண் கஸ்டப்பட்ட,நடுத்தர வர்க்கத்தில் பிறந்தால் அப் பெண் எவ்வளவு படித்திருந்தாலும்[அதுவும் குடும்பத்தின் மூத்த பெண்ணாய் இருந்தால்],படிக்கா விட்டாலும் முதல் அவர்கள் திருமணம் பேசுவது வெளிநாட்டு மாப்பிள்ளை தான்.மாப்பிள்ளை என்ன படித்திருக்கார்,அவர் என்ன வேலை செய்கிறார்,அவர் ஒழுக்கமானவரா எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.ஊரில் பெற்றோர்கள் நினைப்பது எப்படியாவது பெண்ணைக் கட்டி குடுத்து விட்டால் அவளும் வெளி நாட்டுற்குப் போய் உழைத்தால் மற்ற சகோதர,சகோதரிகளை கூப்பிடுவார்கள் அத்தோடு பொருளாதார ரீதியில் தாங்களும் பலம் வாய்ந்தவர்களாக மாறலாம் என்பது அவர்களது கருத்து...தணிகாசலத்தை கட்ட வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட பெண்கள் மட்டும் இல்லை யாழில் இருக்கும் பெண்களே ஒத்துக் கொள்வார்கள் இதை நாங்கள் தடுத்து நிறுத்தினால் உடனே அவர்கள் சொல்வார்கள் எங்களுக்கு அவர்கள் நல்ல வரப் போறதைப் பார்த்து எரிச்சல் அது தான் அத் திருமணத்தை தடுத்து நிறுத்தப் பார்க்கிறோம் என்பார்கள்.அது தான் உண்மை. இப்படியான திருமணங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமானால் முதலில் அப் பெண்கள் தைரியமாய் எதிர்க்க வேண்டும்,அப் பெண்ணின் பெற்றோரும்,சகோதரர்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும்,புலம் பெயர் நாட்டில் பெண்கள் படும் கஸ்டங்களையும்,துன்பங்களையும் அங்குள்ளவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்[ஆனால் எப்படித் தான் அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் அவர்களுக்கு காசு,அந்தஸ்து தான் முக்கியம்.]

சாஸ்திரி அண்ணா எடுத்த முடிவு நல்லது.எனக்கு இத் திரியில் கவலை ஒரு பெண்களும்[என்னைத் தவிர] தங்கள் கருத்தை இத் திரியில் வைக்கவில்லை என்பது தான்.

இதே கவலை எனக்கும் இருந்தது ஆனால் பெண்சுதந்திரம் என்று ஆண்கள் மட்டும் கத்துவதால் எதுவும் ஆகாது என்பதனை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.