Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு அவமானமாம் - அரச ஊதுகுழல்கள் பரா, திகா

Featured Replies

மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக ஒருசில லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை முட்டாள் தனமான ஒரு விடயம் எனவும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர், அரச ஊதுகுழலும் கட்சிக்கு துரோகம் விளைவித்தவருமாகிய பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில், சற்றுமுன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த ஊதுகுழல் பிரபா கணேசன் மஹிந்த ராஜபக்ஷ்வினை உரையாற்றவிடாது, புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முட்டாள் தனமானதொரு விடயம். இதனால் இலங்கையில் ஏதும் நடந்துவிடப்போவதில்லை.

இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்விற்கு வெறுப்பு ஏற்படும். அதனால் இலங்கையில் உள்ள தமிழ்களுக்கு கிடைக்கும் நிவாரணம்கூட கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. யுத்தம் முடிந்து சமாதானம் நிலவிவரும் இக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்துகெட்ட தமிழ் மக்களுக்கென அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வேளையில், புலம் பெயர் தமிழர்கள் அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்காது, அவர்களுடன் இணைந்து அபிவிருத்தி திட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும். என்றும் கூறியுள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளவில்லை, ஒருசில தமிழர்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர், ஆனாலும் அனைத்து தமிழர்களுக்கும் தற்போது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இவ் ஊடகவியலாளர் மாநாட்டிலே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ஓர் தமிழின படுகொலை வாதி என்றால் அந்த படுகொலைவாதியினை நியாயப்படுத்தும் பிரபா கணேசன், திகாம்பரம் போன்ற அரச ஊது குழல்கள் மிகப்பெரிய படுகொலைவாதிகள் என்றே கூறவேண்டும்.

தென் இலங்கை, மலையக தமிழர்களின் வாக்கினைப்பெற்று அவர்களது வியர்வையினையும் இரத்தத்தையும் உறிஞ்சும் அட்டைகளாக வாழும் இந்த இரு முட்டாள்களுக்கும் தமிழர்களின் உணர்வு பற்றியும் அவர்களின் போராட்டம் பற்றியும் என்ன தெரியும்.

மஹிந்தவிடம் கூலிபெறும் இந்த கூலிகளிற்கு தமிழர்களின் போராட்டம் அல்லது தமிழர் நலன் பற்றி பேச என்ன அருகதை உள்ளது.

ஈழநாதம்

ஒருவேளை தனக்கும் ஒரு மந்திரி பதவி கிடைக்குமா என எண்ணுகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

canthearyou.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்விற்கு வெறுப்பு ஏற்படும். அதனால் இலங்கையில் உள்ள தமிழ்களுக்கு கிடைக்கும் நிவாரணம்கூட கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.

அவர்களே சொல்கின்றனர்

ராஐபக்ச நல்லவர் இல்லையென்று.

நன்றி

டி.பீ.எஸ். ஜெயராஜ் கூட கிட்ட தட்ட இந்த தொனியில் தான் தனது கட்டுரையில் சொல்லி இருந்தார் .

"Let it be remembered that Mahinda Rajapaksa is the elected President of Sri Lanka. Any insult to him will be regarded as an affront to the people of Sri Lanka whether Sinhala,Tamil, Muslim or Burgher."

http://dbsjeyaraj.com/dbsj/archives/1855

இது நல்ல காமெடி.

Edited by nadodi

இனங்களுக்கான இணக்கம் என்பது பெரும்பான்மை இனம் என்ன செய்தாலும் கூனிக் குறுகி நின்று அவர்கள் மனங்கோணாமல் நடக்கவேண்டும் என்று புதிய வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்.

மகிந்த உண்மையில் தமிழர்களை, முஸ்லிம்களை மதிப்பதாக இருந்தால் போர் முடிந்த கையோடு ஓர் அரசியல் தீர்வை முன்வைத்திருக்கலாம். ஆனால் மகிந்தவின் தீர்வு தம்பதீபக் கோட்பாடுதான் என்பதைத் தெரியாதமாதிரி டி.பி.எஸ் எழுதுகின்றார்.

இந்த டி பி எஷ் ஒரு ஊடக.......................

ஆஆஆஆ... இப்படி போட்டால் தலைப்பை ...

.... "மஹிந்தவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், மாற்றுக்கருத்து மாமணித்/நடுநிலைமைத் தமிழர்களுக்கு அவமானமாம்" ...

... சரியாக இருக்கும்!!

உந்த ஜெயராசாவினால் கனடாவிலை ஆரம்பிக்கப்பட்ட மஞ்சரி என்ற பத்திரிகை மக்களினால் புறக்கணிக்கப்பட்டபோது மண்கவ்வியதாக அறிந்தோம்..எது எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் இன்னும் உறுதியாக இருப்பது சிந்திக்கவேண்டியவை...

  • தொடங்கியவர்

இவருக்கு ஊதியம் கொடுத்து எழுதுவிக்கவும், அதனை பிரசுரிக்கவும் தான் சிங்கள அரசு மற்றும் பக்க..... நாடுகள் இருக்கின்றனவே அதுவரை அண்ணாச்சி வாழ்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.