Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் விடுதலை

Featured Replies

சீமான் விடுதலை...........முக நூலில் கிடைத்த செய்தி..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை மகிழ்ச்சியான செய்தியை தந்த வீணாவுக்கு நன்றி. :rolleyes::)

.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி தலைமை உறுப்பினர் சீமான் விடுதலை. தேசிய பாதுகாப்புச் சட்டம் அவர் விடயத்தில் செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

----------------------

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தன் கீழ் சீமானை தமிழக அரசு கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து நாளை சீமான் விடுதலை ஆகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44880

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம்மான செய்தி..

அண்ணன் சீமான் வாழ்க்க.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி தலைமை உறுப்பினர் சீமான் விடுதலை. தேசிய பாதுகாப்புச் சட்டம் அவர் விடயத்தில் செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

----------------------

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தன் கீழ் சீமானை தமிழக அரசு கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து நாளை சீமான் விடுதலை ஆகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44880

Director_Seeman.jpgseeman22.jpg

தமிழக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பந்தம் பிடிக்கவே..... சீமானை கைது செய்தது.

உச்ச நீதிமன்றம், அந்தக் கைது செல்லாது என்று தீர்ப்பளித்ததின் மூலம், கருணாநிதிக்கு நல்ல மூக்குடைப்பு கிடைத்துள்ளது.

இவ்வளவு காலமும் சீமானை சிறையில் வைத்திருந்ததற்க்கு, தமிழக அரசு சீமானிடம் மன்னிப்புக் கேட்டு, நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: நல்ல செய்தி வீணா. உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.
  • தொடங்கியவர்

இன்று காலை மகிழ்ச்சியான செய்தியை தந்த வீணாவுக்கு நன்றி. :rolleyes::)

.

:D :D

:) நல்ல செய்தி வீணா. உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

நன்றி அண்ணா :) :)

Edited by வீணா

"சீமான் விடுதலை" - மிக நல்ல செய்தி.

அண்ணன் சீமான் பணி தொடரவேண்டும், தொடரும். மக்கள் ஆதரவை தொடர்ந்தும் திரட்ட வேண்டும்.

ஒரு பலமான கட்சியாக, சக்தியாக இன்னும் வளர வேண்டும்.

அரசியல் எதிரிகள் விடயத்தில் கொஞ்சம் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்; தம்பி வீணாவுக்கு நன்றிகள் :)

தானைத் தலீவருக்கு நடுவிரல்..!

:rolleyes:

வாழ்த்துக்கள்!!!! ...

சிமானுக்கு ஒரு வேண்டுகோள் ... "நா காக்க" ...!!! .... சிமானின் தமிழின பற்றில், உணர்வில் எவ்வித ஐயமுமில்லை ... ஆனால் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, கடந்த காலங்கள் போல் சிறைவாசம் மட்டுமல்லாமல் நிரந்தரமாக செயற்பாடுகள்/அரசியலை முடக்கியே விடும்!!... காத்திருக்கிறார்கள்!!!!! ... அவதானம்!

... இங்கு புலத்தில் இருந்து பலர் ... அதில் சிலர் தமிழின உணர்வாளர்களின் வேஷத்தில் ... தூண்டுவார்கள் ... எல்லையை மீற!!! ... அவதானம்!!!

... கடந்த ஓரு வருடங்களுக்கு முன்பு ... புலத்தில் இருந்து சிலர், தமிழின உணர்வாளர்களின் வேஷத்தில் தமிழகம் சென்று ... மே18இற்கு சில வாரங்களுக்கு உள்ளாகவே ... நெடுமாறன், ராமதாஸ், தொல் திருமாவளவன், .வைகோவும் என நினைக்கிறேன் ... போன்றோரை சந்தித்தது/செய்ய முற்பட்டது .... இனியும் வேறு முகமூடிகளுடன் ... முடக்க முற்படுவார்கள்/கங்கணம் கட்டியபடியும் உள்ளார்கள்!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் விடுதலை சொல்லும் செய்தி..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பினரும், காவல்துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை போலவே நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது பாய்ந்திருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உடைத்தெறிந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், குறிப்பாக ஜன்பத் ரோட்டு அம்மாவையும், அவர்தம் குடும்பத்தையும் குறி வைத்து சீமான் தாக்கியதை ரசிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு கொடுத்த பிரஷ்ஷரில் நமது ஊழல்களின் தந்தை எதையாவது செய்து தான் காங்கிரஸுக்கு நண்பன் என்பதைக் காட்ட நினைத்தார். இதற்காக அவர் கையாண்டது சீமானின் கைது நடவடிக்கையை..!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து, கடந்த ஜூலை 10-ம் தேதியன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசிய பேச்சைக் குறி வைத்தே இந்தக் கைது சம்பவங்கள் நடந்தன.

இந்தக் கூட்டத்தில் வன்முறையை தூண்டியதாகவும்-158-ஏ (ஐ.பி.சி.), 2 இனங்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும் வகையில் பேசுவது, ஐ.பி.சி., 188 - அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் பேசியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீமான் இதனை எதிர்பார்த்து தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸ் தரப்பில் மூன்று சிறப்புப் படைகளை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 12, 2010 அன்று எப்போதும்போல வீட்டிலோ, அல்லது யார் கண்ணிலும்படாமலோ போலீஸாரை சந்திக்க விரும்பாத சீமான், சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு நேரில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது விளக்கத்தை அளித்த பின்பு போலீஸாரிடம் சரணடைய முடிவெடுத்திருந்தார்.

ஆனால் அவரை பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே விடக் கூடாது என்கிற நமது மாநிலத்தை ஆள்வோரின் சர்வாதிகார உத்தரவின்படி நிறைய தள்ளுமுள்ளுகளுக்குப் பின்பு பெரியார் சிலை அருகே அவரைக் கைது செய்து கொண்டு சென்றது ஆளும் எஜமானர்களுக்கு விசுவாசமான போலீஸ் படை.

சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொலைதூரத்தில் வைத்தால்தான் தொல்லைகள் கொஞ்சம் தீரும் என்று நினைத்து வேலூரில் தனிமைச் சிறையில் அடைத்தனர்.

இதன் பின்பு ஜூலை 17-ம் தேதி சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு விசாரணையில்லாமல் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்கிற விஷயத்தைவிட, சீமான் மீது பிறப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டமே செல்லாது என்றுதான் சீமான் தரப்பு வழக்கறிஞர் அதிகமாகப் பேசியிருக்கிறார்.

சீமானுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட “தேசிய பாதுகாப்புச் சட்ட மீறலினால் கைது” என்கிற அந்த உத்தரவில் கையொப்பமிட்டவர் அன்றைய சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த சஞ்சய் அரோரா.

அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த ராஜேந்திரன் லண்டனில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்காக சென்றிருந்ததால் ஆணையர் பணியினரை சஞ்சய் அரோராவே கூடுதல் பொறுப்பாக மேற்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் “இப்படியொரு உத்தரவில் கையொப்பமிட மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டும்தான் தகுதியும், அனுமதியும் உண்டு. கூடுதல் ஆணையருக்கு இல்லை. ஆகவே இந்த உத்தரவே செல்லாது. எனவே சீமானை விடுதலை செய்ய வேண்டும்” என்பதுதான் சீமான் தரப்பு வழக்கறிஞரின் இறுதியான வாதம்.

இதற்கு இவர் கொடுத்த வலுவான ஆதாரம்.. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்படும் உத்தரவைப் பிறப்பிக்க மாநகர ஆணையர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் வேறொரு வழக்கில் முன்பு ஒருமுறை பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றத்தில் தனது தரப்பு ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளார் சீமான் தரப்பு வழக்கறிஞர்.

“அன்றையக் கூட்டத்தில் சீமான் பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் எதையும் பேசவில்லை..” என்றெல்லாம் சீமானின் வழக்கறிஞர் வாதாடியிருந்தாலும், இந்த ஒரு விஷயமே தற்போது சீமானை விடுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கிறது.

இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞரோ, மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரமும் உள்ளதாக வாதாடியிருக்கிறார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக் காட்டி சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து, அவருக்கு விடுதலையளித்து உத்தரவிட்டுள்ளனர்.

சீமான் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதியிலிருந்து இன்று டிசம்பர் 9-ம் தேதிவரையிலும் கிட்டத்தட்ட 5 மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். நாளை உறுதியாக விடுதலையாக இருக்கிறார்.

இப்போது எனது கேள்வி..! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் இருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தகவல்கள், ஆலோசனைகள் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு முன்கூட்டியே தெரியாதா..?

இருவரும் ஒரே அளவிலான வழக்கறிஞர்கள்தானே.. இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வகையான தீர்ப்புகள் ஆண்டு வரிசைப்படியும், குற்றப் பிரிவுகள் வரிசைப்படியும்தான் புத்தகங்களாக வெளி வந்திருக்கிறதே.. போதாக்குறைக்கு இணையத்தில் ஒரு நொடியில் பிரிண்ட் அவுட் எடுக்க முடிகிறதே..

இத்தனை வசதிகள் இருந்தும் உச்சநீதிமன்ற உத்தரவை சீமான் தரப்பு வக்கீல் தாக்கல் செய்யும்வரையில் அரசுத் தரப்பு வக்கீல் என்ன செய்து கொண்டிருந்தார்..? இது பற்றி அரசுக்கு ஆலோசனையே தரப்படவில்லையா..?

ஒருவேளை அரசு வக்கீலுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாது என்று சொன்னால் அவர் இந்தப் பதவிக்கே லாயக்கிலாதவராகிவிடுவாரே..? முன்பே தெரியும் என்றால் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்றாகிவிடுமே..?

சீமானை சிறை வைத்தது ஜூலை 12. அவருக்கான தேசிய பாதுகாப்புத் தடைச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஜூலை 17. ஆக 5 நாட்கள் இடைவெளியில்தான் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அப்படியிருக்கும்போது இப்படியொரு உத்தரவை பிறப்பிக்கப் போகும் முன் அரசின் உள்துறை இலாகாவினர், சட்டத் துறையை அணுகி மாநகர ஆணையர் இல்லாத நிலையில் அது மாதிரியான உத்தரவை கூடுதல் ஆணையர் இடலாமா..? அதற்குச் சட்டத்தில் இடமுண்டா.. இல்லையா..? என்றெல்லாம் ஆலோசனை கேட்டிருக்கக் கூடாதா..?

ஏனெனில் ஆணையரும், கூடுதல் ஆணையரும், அரசுத் தரப்பு வக்கீலும், உள்துறை இலாகாவினரும் அரசு சம்பளம் பெறுபவர்கள். அரசுக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள். அதற்கான பொறுப்பானவர்கள். இவர்கள் எடுக்கும் எந்தச் செயலும் மக்களைப் பாதித்தால் அதற்கு முழுப் பொறுப்பாக வேண்டியது தமிழக அரசுதானே...!

உள்துறைச் செயலாளர் இது பற்றிய நோட்டீஸை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பும்போதே சட்டத் துறையினரிடம் கலந்தாலோசித்துவிட்டு அதன் பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தால் தனக்கு அத்தகைய அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பது அப்போது கூடுதல் ஆணையருக்குத் தெரிந்திருக்குமே..? இதனால் சீமான் கைது பிரச்சினையே வராமல் போயிருக்குமே ..?

ஒருவேளை உள்துறையிடமிருந்து வந்த உத்தரவை அப்படியே எந்திரம்போல் கூடுதல் ஆணையர் செயல்படுத்தியிருந்தால் இதற்கான நியாயங்கள் இவரிடமிருந்துதான் முதலில் பெறப்பட வேண்டும்..

இது பற்றி சட்டத் துறையிடம் விளக்கம் கேட்கச் அறிவுறுத்தாமல் இருந்திருந்தால் தமிழக அரசின் உள்துறையும், உள்துறை பொறுப்பை வகிக்கும் முத்தமிழ் அறிஞரும் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்..!

ஏனெனில் இந்த முறைகேடான உத்தரவால் சீமான் என்ற மனிதரின் தனி மனித உரிமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீமான் இந்த முறைகேடான சட்ட விதிமுறை மீறலால் கடந்த 5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பொன்னான 150 நாட்கள் வீணாகியிருக்கின்றன. இந்த நாட்களுக்கு இப்போது யார் பொறுப்பாவது..?

அவர் வெளியில் இருந்திருந்தால் சில லட்சங்களை தனது குடும்பத்திற்காக சம்பாதித்திருப்பார். அந்தச் சூழல் அப்போது இருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட காரணத்தினால் அவர் இழந்த லட்சங்களை இப்போது அரசு இவருக்கு நஷ்டஈடாகத் திருப்பித் தருமா..?

நான் முதல் பத்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த வழக்கின் விவாதங்களை வைத்து சீமான் நிச்சயம் விடுதலையாவார் என்றுதான் சினிமா வட்டாரத்திலும், பத்திரிகைகள் வட்டாரத்திலும், வழக்கறிஞர்களின் சேம்பரிலும் பேசப்பட்டு வந்தது.

இப்படி ஒரு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமே இது சட்ட விரோதச் செயல் என்று தெரிந்திருக்கும் அளவுக்கு தனது சட்ட விரோதச் செயலை ஒரு மாநில அரசே முன் வந்து செய்திருப்பது மிகக் கேவலமானது..!

இப்படி இல்லாத ஒரு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேறொரு ஆட்சியினர் தற்போதைய முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவரை உள்ளே தூக்கிப் போட்டால், தற்போதைய முதலமைச்சர் என்ன செய்வார்..?

விதி என்று சொல்லி சிறைக்கு நேரில் வந்து அழைத்துப் போவாரா..? மாட்டார் அல்லவா..? முரசொலியில் நாலு பக்கத்துக்கு கவிதை எழுதி தீட்டியிருப்பாரே..! தனது உடன்பிறப்புக்களை உசுப்பிவிட்டு தமிழகத்தை ரத்தக் களறியாக்கிருப்பாரே..!

அன்றைக்குத் தன்னை நடுராத்திரியில் காவல் துறையினர் கைது செய்தபோது அவரும், அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் என்னமாய் துடித்தார்கள். துவண்டார்கள். வானமே இடிந்து விழுந்துவிட்டதைப் போல எப்படி கூப்பாடு போட்டார்கள்..?

ஏன் சீமான் என்றொரு மனிதன் மட்டும் இவர்களது கண்ணுக்கு மனிதனாக, ஒரு தமிழனாகத் தெரியவில்லை..!

அவருக்கு மட்டுமே சிந்துவது ரத்தம்.. மற்றவர்களுக்கு என்றால் அது தண்ணீரா..?

அரசுகள் நினைத்தால் தனி மனிதனின் உரிமைகளை முடக்கலாம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை இந்தியாவிலும், தமிழகத்திலும் இதற்கு முன்பும் நாம் கண்டிருக்கிறோம். இப்போது சீமானை வைத்து நாம் அறிந்து கொள்கிறோம்..!

தமிழக அரசின் தற்போதைய அவலட்சணமான நிர்வாக முறைகேட்டுக்கு இதுவும் ஒரு உதாரணம்..!

டிஸ்கி : சீமானின் பேச்சு சட்ட விதிமீறலா? இந்திய இறையாண்மையை மீறியதா என்கிற விஷயத்திற்குள் நான் போகவில்லை. கைதே சட்ட விரோதம் என்கிறபோது அதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்..?

Read more: http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_3247.html#ixzz17f1yAOvd

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலூர் சிறையிலிருந்து இயக்குநர் சீமான் விடுதலை ஆகி வெளிவந்துள்ளார்.

,மேலதிக தகவல்கள் விரைவில்...

http://meenagam.org/

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு வாழ்த்துக்கள், நன்றி வீணா! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

.

சிறையில் இருந்து சீமான் விடுதலை: நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு

தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை மீனவர்களுக்கு எதிரான சில கருத்துகளை சீமான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

தன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, இன்று (10.12.2010) மதியம் 2.35 மணி

அளவில் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் வந்திருந்தனர். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் முழக்கம் அமைப்பைச் சேர்ந்த ஷாகுல் அமீது, இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், பேராசிரியர் தீரன், இயக்குநர் கௌதமன், இயக்குநர் பாலா, மதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி, மதிமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் டி.ராஜா. வேலூர் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் சீமானை கைகுலுக்கி கட்டி அணைத்து வரவேற்றனர்.

நன்றி நக்கீரன்

.

  • தொடங்கியவர்

அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்; தம்பி வீணாவுக்கு நன்றிகள் :D

தானைத் தலீவருக்கு நடுவிரல்..!

:rolleyes:

:lol: :lol:

சீமானுக்கு வாழ்த்துக்கள், நன்றி வீணா! :D

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் தம்பி சீமான்

ஈழ மக்கள் தங்களது ஒற்றுமையையும் அதனூடான பலத்தையும் செயலையுமே எதிர்பார்க்கின்றார்கள் என்பது தங்களுக்கு தெரியாததா....?

சொல் விட்டெறிந்து செயற்படுவீர்

பிரபாகரனின் தம்பி நீர் புரிந்து கொள்வீர் எம்மை..............

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.