Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டிறுதிப்பதிவு

Featured Replies

கடிவாளங்கள்

அண்மையில் ஒருவர் “குறைநினைக்கமாட்டீர்கள் என்றால் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றார். என்ன என்றபோது “நீங்கள் நாத்திகரா?” என்றார். நான் நாத்திகனா ஆத்திகனா என்பது கிடக்க, இக்கேள்வி என்னை ஏன் காயப்படுத்தும் என்று அவர் எண்ணினார் என்பது தான் எனக்குப் பெருவிந்தையாய் இருந்தது. அவர் மூன்று ஆண்டுகளிற்கு முன்பு மதம் மாறிய ஒருவர். அவரது பிரார்த்தனைக் கட்டமைப்பில் நாத்திகன் என்பது காயப்படுத்தும் வார்த்தை என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். இவ்வாறே சமவுடமைப்பொருளாதார இயக்கத்தின் அங்கத்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்களை மேட்டுக்குடி என்றோ குட்டி முதலாளி என்றோ அழைத்தால் அவர்கள் குளம்பித் தடுமாறுவததை அவதானிக்கமுடியும். ஈழத்தமிழர் ஒருவரைத் துரோகி என்று அழைத்தால் அத்தமிழ் முகத்திலும் மேற்படி ரேகைகள் அவதானிக்கப்படக்கூடியன. இவை அனைத்தினதும் இவற்றைப் போன்ற இன்னும் ஆயிரமாயிரம் வாhத்தைகளினதும் அடிப்படை ஒன்றுதான். அதாவது, ஒரு விடயத்தில் தளம்பலற்ற நம்பிக்கையினை அவ்விடயத்தில் ஈடுபட்டுள்ளோர்கள் மீது உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையே இது. சுருங்கச்சொன்னால் இத்தகைய பதங்கள் ஒரு கடிவாளத்தின் பங்கு வகிப்பன.

வழமையின் சொகுசுகளைத்துறந்து கடினமான பாதைகளில் செல்லவிழைவோர், கடினங்கள் காரணமாகத் தமது பாதையினை விட்டுவிட்டுப் பழைய சொகுசுநிலைக்குத் திரும்பிவிடலாமா என குறறைந்தபட்சம் சிலநேரங்களிலாவது நினைப்பது தவிர்க்கமுடியாதது. உடல், உள வருத்தங்கள் கொள்கைப்பிடிப்பைத் தகர்க்கும் வல்லமை படைத்த உபாதைகள். அவ்வகையில், வழமையின் சொகுசுகளிற்குப் புறம்பான பாதைகளில் இத்தகைய வார்த்தை உத்திகள் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடியன. ஆயுதபோராட்டக்காலத்திலும் துரோகி என்ற சொல்லுத் தேவைசார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் எமது பழைய அடிப்படைகள் மாறிப்போய்விட்டு இன்றைய நிலையிலும் துரதிஸ்ரவசமாக இ;க்கடிவாளங்கள் அர்த்தமின்றி உபயோகிக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காலாவதியாகிப்போன துரோகிப் பதம்

துரோகி என்ற பதம் இன்று அர்த்தமின்றி உபயோகிக்கப்படுகின்றது என்று எவ்வாறு கூறமுடியும்? முன்னைய நாளில் துரோகி என்ற வரைவிலக்கணத்திற்குட்பட்டவர்கள் மட்டுமன்றி; இன்னும் புதியவர்களும் நாம் முன்னர் அறியாதவர்களும் கூடச் சேர்ந்து தமிழீழம் என்ற இலட்சியத்திற்கு எதிராக இன்றும் வேலைசெய்து கொண்டுதானே இருக்கிறார்கள். எங்கள் இலட்சியம் தமிழீழம் என்றால் அதற்கு எதிராக வேலை செய்யும் எம்மவர்களை நாங்கள் துரோகிகள் என்று அழைப்பதில் என்ன பிழை? என்ற கேள்வி; எதிர்பார்க்கப்படக்கூடியது.

முதலில் தமிழ்ஈழம் என்ற இலக்கை உடையவர்கள் அனைவரும் அவ்விலக்கை அடைவதற்கான ஒரே வழிமுறையினைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறமுடியாது. அதுவும் எமக்கான வழிமுறை என்று இருந்த ஒன்று முடிந்து புதிய திட்டவட்டமான வழிமுறையெதுவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடாத நிலையில் ஒரு வழிமுறை இன்னொன்றை நிராகரிக்க முடியாது. இது தேடல்களின் விசாரணைகளின் காலம். அதைப்போன்றே தமிழனின் நலன்களிற்குத் தமிழீழம் தான் தீர்வு என்பதை ஏற்க மறுப்பவர்களைத் துரோகி எனவும்முடியாது—வேண்டுமானால் தமிழீழத் தீர்வை ஆதரிப்பவர்கள் தமிழீழத்திற்குப் புறம்பான தீர்வை வேண்டுபவர்களை போட்டியாளர் எனலாம். ஆனால் தமிழீழத்தீர்வையோ அல்லது அத்தீர்விற்கான குறிப்பிட்ட ஒரு வழிமுறையினையோ ஆதரிக்காதவர்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களிற்கும் எதிரிகள் என்பதோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழர்க்கும் இவர்கள் துரோகிகள் என்பதோ ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது.

ஒருவர் எந்த இடத்தில் வீடுவாங்குவது, யாரை மணம்முடிப்பது, எப்படியான வாழ்வு முறையினை மேற்கொள்வது என்பது போன்ற விடயங்களில் மற்றையவர்கள் தான் அவரிற்காக முடிவெடுப்பார்கள், ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவோடு குறிப்பிட்ட நபர் உடன்படாவிட்டால் அவரைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைப்பார்கள் என்று ஒரு நடைமுறை முன்மொழியப்பட்டு; அது பற்றிய கருத்துக் கேட்டால் மிகப்பெரும்பான்மையானோர் அந்டைமுறையினை நிராகரிப்பார்கள். அடாவடி என்பார்கள். ஆனால் தமிழர்களிற்கான தமிழரின் போராட்டம் என்று அனைத்து ஈழத்தமிழனின் பெயரிலும் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை விடயத்தில் மட்டும், இன்னதைத் தான் சொல்லலாம் இப்படித்தான் சொல்லலாம் என்று ஒரு வரையறை எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழத்தமிழினத்தின் போராட்டம் ஈழத்தமிழினத்தின் அபிலாசைகள் என்ற பதங்களை உண்மையில் விளங்கிக் கொள்ளும் எவரும், அனைத்துத் தமிழர்சார்பிலும் ஒருசிலர் முடிவெடுப்பதையோ, எடுக்கப்பட்ட முடிவுகளோடு உடன்படாதவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவதையோ, ஏதேனும் ஒரு வழிமட்டும் தழிழர் போராட்டவழிமுறையாகத் அறிவிக்கப்படுவதையோ ஆதரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு தமிழனின் பெயரிலும் சிந்திக்கப்படும் போராட்டம் பற்றிச் சிந்திப்பதற்கும் கருத்துக் கூறுவதற்குமான உரிமை ஒவ்வொரு தமிழனிற்கும் உண்டென்பதை ஏற்க மறுப்பின், எத்தகைய தமிழ் ஈழத்தை நாங்கள் இன்றைய நிலையில் கனவு காண்கின்றோம்?

தமிழீழம், போராட்டம், நாட்டுப் பற்று, தமிழரின் அபிலாசை முதலிய விடயங்கள் துரதிஸ்ரவசமாக எங்கள் வாழ்வில் வெறும் வார்த்தைகளாக மட்டும் இன்று ஆகி விட்டன. இவ்வார்த்தைகளின் ஆன்மா என்ன. இவ்வார்த்தைகள் எங்கிருந்து பிறந்தன, இவ்வார்த்தைகளை ஆதரிப்பது என்றால் உண்மையில் என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளை எல்லாம் பலர் இப்போது கேட்பதில்லை. முப்பது வருடங்களிற்கு முன்னர் உணரப்பட்ட வார்த்தைகளைக் காவித்திரிகிறோமே அன்றி அவற்றின் அர்த்தம் பற்றிச் சிந்திக்க மறுக்கின்றோம். எங்கள் இனத்தை நேசிக்கும் எவரிற்கும் இந்நிலை கவலைஅளிப்பது.

புலிகளினால் தலைமைதாங்கப்பட்ட எங்களின் ஆயுதப்போராட்ட முறைமை தற்போது முடிந்துள்ளது. இன்னுமொரு ஆயுதப்போரட்டம் ஈழத்தில் தொடங்கப்பட்டாலும் கூட, அதுவும் புலிகள் என்று அழைக்கப்பட்டாலும் கூட, அது முன்னைய வடிவங்கள் பலவற்றை ஒத்திருந்தாலும் கூட, முன்னைய பாத்திரங்கள் அதில் அங்கம் வகித்தாலும் கூட அது முன்னையதாக இருந்துவிடமுடியாது. பழைய பாடங்களில் இருந்து கற்ற புதிய முறைமையாகவே அது கிளம்பத்தலைப்படும். வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும் எந்த முயற்சியும் தோற்ற வடிவங்களை மாற்றியமைத்தே வெளிப்படும். இந்நிலையில், முடிந்துபோன ஒரு முறைமையின் ஒரு வழமையை மட்டும—அதாவது துரோகி என்ற பதத்தின் பிரயோகத்தை மட்டும்--அவ்வழமை உருவானதற்கான காரணகாரியங்களைச் சிந்தியாது தொடாந்தும் பாவிப்பது என்பது எப்படிப்பார்த்தாலும் அர்த்தமற்றதே. அர்த்தமற்றது என்பது மட்டுமன்றி, துரோகி என்ற வார்த்தையின் உபயோகம் எதிர்கால நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டையாக, சக தமிழர்களின் வளங்களை எமது போராட்டம் பாவிக்கமுடியாதவாறு அவர்களை எம்மிலிருந்து துரத்துவதாக, எம்மைச் சிதைத்து எமது ஆதரவுத்தளத்தைச் சுருக்குவதாக அமையுமேயாயின் அது துரோகி என்ற வார்த்தைப்பிரயோகம் செய்யும் துரோகத்தனமாக மாறிப்போகும் முரண்நகையே நிகழும். அதாவது தமிழீழ இலட்சியத்தைச் சுவாசிக்கின்றோம் அதற்காக உழைக்கின்றோம், எம்மவரின் எதிர்கால சுபீட்ச்சத்தைக் கனவு காணுகின்றோம் என்று சொல்லியபடி எம்மவர்களைத் தூரப்படுத்தி, துரத்தி எம்மை நாட்டுப்பற்றாளர்களாக நாம் காட்டிக்கொண்டிருப்பதற்குத் துரோகி ஏவுகணைகளைச் சுட்டுக்கொண்டிருப்போமேயாயின், நாம் கூறுகின்ற ஈழத்தமிழர்க்கான ஈழத்தமிழரின் போராட்டம் என்பதனைத் தடக்கி வீழத்திய துரோகத்தனம் எம்முடையதாய் ஆகும். துரோகி என்ற சொல்லின் மூலம் துரோகம் செய்த முரண்நகை நிகழும்;.

காந்தியும் திலீபனும்

இந்தியசுதந்திரம் கிடைத்தது காந்தியாற் தானா என்பது விவாதத்திற்குரியதாய் நாற்பதுகளில் தொடங்கிய ஜோர்ச் ஓர்வலின் கட்டுரை தொட்டு இன்றுவரை தொடர்கிறது. ஆனால்இந்திய சுதந்திரத்தில் காந்தியின் பங்கு மக்களைத் திரட்டுவதில் ஆற்றிய தன்னிகரற்ற பங்கினை எவரும் மறுக்கமுடியாது, அதுவும் இந்தியம் என்பதே தைக்கப்பட்ட ஒன்றாய் இருக்கையில் இந்திய சுதந்திரம் என்ற ஒன்றிக்காக சுதந்திரத்தை ஒரேகனவாக அனைவரும் வரித்துக்கொள்ளும் வகையில் ஆக்கியது காந்தி. இது எவ்வாறு நடந்தது என்று சிந்திப்பது இன்றைய நிலையில் எமக்கும் பயன்படும். எனது அறிவிற்கு எட்டியவரை காந்தியின் வெற்றியின் அடிப்படையாக நான் கருதுவது காந்தி தனது மக்களை அவர்களாகப் புரிந்துகொண்டமையினையே.

அதாவது, சந்திரபோசொடு சேர்வது என்றால் ஒருவர் தனது நடைமுறை வாழ்வில் இருந்து விலகி தான் அறிந்திராத ஒரு அந்நிய பாதையில் பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும். ஆனால் காந்தியோடு சேர்வதை வீட்டில் இருந்தபடி செய்யலாம், வேலைக்குப் போய் வந்து செய்யலாம், குடும்பமாகச் சேர்ந்து செய்யலாம், ஒரு நாளைக்கு ஒரு சிலமணிநேரம் மட்டும் செய்யலாம். ஒருவன் தனது வாழ்வை அதிகம் மாற்றாது நோகாது பங்கெடுக்கக்கூடியது காந்தியின் முறைமை. மேலும், நாம் ஒத்துக்கொள்ளுகின்றோமோ இல்லையோ, இந்தியாவிற்கு என்று சில குணாம்சங்கள் உண்டு. விரதம், ஒறுப்பு, துறவறம், அகிம்சை என்பன எதுவுமே காந்தி கஸ்ரப்பட்டு உருவாக்கியவை அல்ல. இவை அனைத்தும் இந்திய உளவியலில் ஏற்கனவே பரிணமித்து நின்ற சயம் சார்ந்த விடயங்கள். காந்தி செய்தது எல்லாம், அந்த மக்களின் நம்பிக்கைகளை, அந்த மக்களின் பெறுமதிகளைத் திரட்டி, திரட்டப்பட்ட அந்தப் பொதுமையின் புதிய பிரயோகம் ஒன்றை அவர்களிற்குக் காட்டியது மட்டுமே. காந்தியிடம் மக்கள் ஈர்க்கப்பட்டமைக்கான காரணம் காந்தி அவர்களைப் பெரும்பாலும் பிரதிபலித்தமையே.

நெருப்பாற்றைக்கடப்பது தியாகிகளிற்கும், புரட்சியாளர்களிற்கும், போராளிகளிற்கும் கைவரக்கூடியது. ஆனால் மக்கள் என்பவர்கள் தியாகிகளோ புரட்சியாளர்களாகவோ போராளிகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. மக்கள் மக்களாகத் தான் இருப்பார்கள் என்ற ஒன்று மட்டும் தான் நாம் நம்பக்கூடியது. ஆக எந்த ஒரு நீண்டகால போராட்ட வழிமுறையும் மக்கள் எம்மோடு சேர்ந்து நெருப்பாற்றைக் கடக்கச் சம்மதிப்பர் என்ற அடித்தளத்தில் எடுக்கப்படமுடியாது. இதைத் தான் முள்ளிவாய்க்கால் எம் முகங்களில் அறைந்த சொல்லி நிற்கிறது.

கனடாவில் எந்த வித பங்களிப்பும் செய்ய மறுத்து, புலிகளையும் தலைவரையும் தூசித்தபடி இருந்த சிலர் மூச்சிற்கொருதடவை தாங்கள் திலீபனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக்கொள்வதை நான் கண்டுள்ளேன். புலிகளைத் தூசிக்கும் பல மட்டங்களில் திலீபனைப் போற்றுவது ஒரு நாகரிகச் செயல் என்ற அளவிற்கு இவ்விடயம் இருந்தது. அப்போதெல்லாம் இவர்களோடு மூச்சிரைக்க விவாதங்கள் அவசியப்பட்டது. ஆனால் அவர்கள் தூங்கவில்லை தூங்குவதுபோல் நடித்தார்கள் என்பதைக் காலப்போக்கில் காணமுடிந்தது. அவர்களின் பிரச்சினை, உண்மையில் என்னவென்றால், தம்மால் செய்யமுடியாததைப் புலிகள் செய்கிறார்கள் என்பது. அதாவது வைத்தியனையும், நாலு ஏயினையும் முன்னர் மதித்த சமூகம் இப்போது மாவீரரே அதியுயர் மரியாதை என்கிறது. நாட்டுப்பற்றாளர் போன்ற விடயங்களும் புகழப்படுகின்றன. தமது நாலு ஏயும் பட்டமும் பின்தள்ளப்பட்டுவிட்டன. எனினும் இந்த சமூக அங்கீகாரம் சார்ந்து தம்மால் புலியில் சேரவோ, கனேடிய சட்டங்களோடு போராடி நாட்டுப்பற்றாளர் ஆகவோ முடியாது. ஆனால் அப்பப்போ வேண்டுமானால் சுழற்சி முறை உண்ணாவிரதம் செய்வதற்கு அவர்கள் எப்போதும் தயார். தம்மால் திலீபன் போன்று உயிர்விடமுடியாது ஆனால் களத்திற்குப் போகாட்டியும் ஊரிற்குள் சென்றிக்கு நிற்கும் ஹெல்ப்பரைப்போல தம்மால் சுழற்சிமுறை உண்ணாவிரதம் செய்யமுடியும். இதனால் ஒருவேளை நாட்டுப்பற்றுக் கம்பளம் தமக்கும் விரிக்கப்படலாம என்ற ரீதியில் திலீபனை அல்ல திலீபத்தைப் அவர்கள் புகழ்ந்தார்கள். காந்தியின் பிரமிப்பு, வெள்ளைக்காரனும் காந்தியைப் போற்றுவது மற்றும் சமய போதனைகள் முதலியனும் கூட இவர்களின் மனநிலையில் செல்வாக்குச் செலுத்தியமை அவதானிக்கமுடிந்தது. எல்லோரையும் போல எனக்கும் இது அருவருப்பாகவே அன்று தெரிந்தது. ஆனால் முள்ளிவாய்கால் அறைந்த அறையிலிருந்து சுதாகரித்துக் காந்தியுடன் கூட்டிக்களித்தப் பார்த்தால் தவறு எங்களதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

எங்களின் போராட்டத்தில் எங்களவர் அனைவரும் கரம்கோர்க்கவேண்டும் என்பது எங்களது உண்மையான அவாவாக இருப்பின் எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் பங்கேற்கச் சித்தமாயிருக்கும் முறைமைகளையும் நாம் சிந்தித்தே ஆகவேண்டும். மக்கள் மக்களாகத் தான் இருப்பார்கள் என்ற அடிப்படையினை நாம் மறந்துவிடமுடியாது.

இத்தால் நான் சொல்ல வருவது

கடந்த ஒன்றரை வருடமாக நிறையப்பேசிவிட்டோம். கடமைக்குச் சில செயல்களும் செய்தோம் என்றபோதும் உருப்படியாய் அதிகம் இல்லை. எந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியும் பிரச்சினையினைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் ஆரம்பிக்கமுடியும். இன்றைய நிலையில் உலகைச்சேர்ப்பதற்கு முன்னர் நாங்கள் எங்களைச் சேர்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். நெருப்பாற்றைக் கடக்க வரச்சொன்னால் அதிகம்பேர் வரமாட்டார்கள். அவர்களின் பெறுமதிகள் அவர்களின் நம்பிக்கைகள் திரடப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகத்தேவையின்றி, அவர்கள் தங்கள் வாழ்க்கையினை நிறுத்திவைக்கத் தேவையின்றி, வேலைக்குப் போனபடி நாட்டிற்கும் வேலைசெய்யும் வழிமுறை கைக்கொள்ளப்படுவது தவிர்க்கமுடியாதது. ஹிஸ்புல்லா ஒரு ஆயதப் போராட்டத்தையே வேலைக்குப் போனபடி நடாத்துகின்றது என்கையில் புலத்தில் நிச்சயம் எங்களால் எங்களை அதிகம் ஒறுக்காது ஈழத்தமிழரி;ன் எதிர்காலம் சார்ந்து முனையக்கூடியன ஏராளம் உண்டு. ரகசியமாய்க்கூடி, தலைமைத்துவம் சார்ந்து குத்திமுறிந்த புலத்தின் நேற்றைகள் மறக்கப்படவேண்டும். “யாரும் ஒருவர் எங்களிற்காய்ப் போராடவேண்டும் என்ற நிலை மாறவேண்டும்” என்ற கருத்துப் பலரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளபோதும் இப்பதிவு அக்கூற்றை இன்னுமொருபடி உட்சென்று பார்க்கக் கூறுகிறது. இனிப்போராட்டம் என்றால் அது பெரும்பான்மையானோர் பங்காளர் ஆகும் வடிவத்தில் மட்டுமே நடக்கவேண்டு;ம் என்கிறது.

ஆனால் இன்னார் தான் செயற்பாட்டாளர் என்ற நிலையும் இன்னவை தான் செயல் என்ற நிலையும் நாம் நிறுத்தமுடியாத மனநிலை. ஒருசாரார் இப்போதைக்கு இம்மனநிலையினை மாற்ற உடன்படார். இல்லை மாறுங்கள் என்று முரண்டுபிடித்தால் துரோகம் என்பார்கள். எனவே அவர்கள் அதைச் செய்யட்டும். அந்தச் செயலிலும் செயற்பாட்டாளர்களிலும் உடன்பாடுடையவர்கள் அதை ஆதரிக்கட்டும். ஆனால் எவரும் சும்மாயிருக்கமுடியாது என்பதே இப்பதிவின் ஆதங்கம். நாடு போராட்டம் என்ற அடையாளங்களை இட்டுக்கொண்டு தான் எவரும் வேலை செய்யவேண்டும் என்பதில்லை. அனைவரும் ஈழத்தமிழர் என்ற அடையாளம் சார்ந்து பங்களிக்கப்பல வழிகள் உள்ளன. எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் பரபரக்க முடியாது. அவைஅவை அவைஅவைக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளட்டும். அனைவரும் ஈழத்தமிழர் என்ற எமது பொதுமையின் நலன்சார்ந்து பங்களிக்கக் கூடிய சில முயற்சிகள் எனக்குப்பட்டன. எமது போராட்டம் பற்றிய சிந்தனை மக்கள்மயப்படவேண்டும் என்ற முனையில், எனக்குப்பட்டவை பட்டவகையில் கீளே பகிரப்படுகின்றன:

1. வாழுகின்ற நாட்டை அதன் புதுமைகளை நடைமுறைகளை வெற்றி ரகசியங்களைப் புரிந்து கொள்ளுதல். இப்புரிதல்கள் சார்ந்து எம்மைப் பற்றிச் சிந்தித்தல்.

2. உலகின் அனைத்து மக்கள் சார்ந்தும், வெற்றி பெற்ற போராட்டங்கள், தோற்றுப் போன போராட்டங்களின் படிப்பினைகள் என நிறைந்து கிடக்கும் நாவல், கட்டுரை மற்றும் எழுத்துக்களை வாசித்துப் புரிந்து கொள்ளுதல். எமது வளரும் புரிதல்களிற்கேற்ப எம்மைப் பற்றிச் சிந்தித்தல்.

3. தங்கள் மட்டங்களில் கிழமைக்கு ஒரு தடவையோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவை ஈழத்தமிழனின் பொதுமை சார்ந்த தங்களது கருத்துக்களைப் பகிர்வதற்கான சந்திப்புக்களை எற்படுத்தித் தங்களிற்குள் பட்டதைப் பட்டபடி கதைப்பதற்கான ஒரு நாளினை ஒதுக்குதல். இந்நாள் மகிழ்வாய் இருப்பதற்கான மதுபானம் முதற்கொண்டு அனைத்தும் சேர்த்து ஒரு பாட்டி போன்று நடந்தாலும் இந்நாளில் தமிழனின் பொதுமை சார்ந்து மட்டுமே கதைப்பது என்ற வரைமுறையினை ஏற்படுத்திக் கொள்ளல்.

4. தங்களிற்கு நம்பிக்கையானவர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எழுதி விவாதித்தது ஆவணப்படுத்தி வைத்தல்.

5. தத்தமது மட்டங்களில் ஒருவருடத்திற்கு ஒருமுறையோ அல்லது வசதிப்பட்ட நேரத்திலோ தங்கள் சிந்தனைகளைப் புத்தமாக்கி வெளியிடல்.

6. வேற்று இனத்தவரோடு அனைவராலும் இரசிக்கப்படக்கூடிய எம் பொதுமை சார்ந்த விடயங்களைக் கலந்துரையாடுவதன் மூலம் எங்கள் ஆதங்கங்களை அபிலாசைகளைப் பதிவு செய்தல்.

7. ஈழம் முதலிய பாரிய வார்த்தைகளை விட்டு, அனைவரும் விளங்கும் பொதுமை சார்ந்த சமூக வியடங்களை மற்றையவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களிலும் மேடைகளிலும் சுவாரசியமாகக் கலந்துரையாடல்.

8. எங்களது பிரச்சினை என்ன என்பதைக் கூட நண்பர்கள் மத்தியில் அடிப்படையில் இருந்து ஆராய்தல். பிரச்சினையின் அடிப்படைகள், சாத்தியமான தீர்வுகள் பற்றிக் கதைத்தல்.

9. தங்கள் மட்டங்களில் விடயங்களைக் கதைத்து ஒரு தெளிவு நிலை அடைபவர்கள் அதை சமூக ஊடகங்கள் வாயிலாகச் சமூகத்துடன் பகிரவிழைதல். சுமூகம் துரோகி முத்திரை மறந்து கருத்துக்களைக் கேட்கத் தொடங்கல்.

10. எமது ஊடகங்கள் ஒன்று கூடி எமது பொதுமை பற்றி கருத்துப்பரிமாற்றங்களிற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.

11. ஈழத்தின் பொருளாதார மேப்பாடு, முதலீடுகளிற்கான உலகின் உத்தரவாதங்கள், முதலியன பற்றிய முனைதல்கள்.

மொத்தத்தில் போராட்டம் என்பதனை நடைமுறை வாழ்விற்கு அப்பாற்பட்ட யாகம் என்ற மனநிலை துறந்து வாழ்வோடு சேர்ந்து எமது உரிமைகளை எவ்வாறு நிலைநாட்டுதல் என்றவகையிலமைந்து முயற்சிகளும் தேடல்களுமே இன்று பெரும்பான்மைத் தமிழரைப் பங்காளர் ஆக்கவல்ல பிணைக்கவல்ல வழிமுறை ஆகமுடியும். இதை நோக்கி அடிப்படைகளில் இருந்து பல விடயங்கள் மீளத்தொடங்கப்படவேண்டிய தேவை மறுக்கமுடியாததாகவே எனக்குப் படுகின்றது.

Edited by Innumoruvan

  • Replies 53
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.அலசி ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்.கட்டுரையின் தொடக்கத்திற்கும்,மிகுதி கட்டுரைக்கும் என்ன சம்மந்தம் என விளங்கவில்லை?...முதல் வரியை வாசித்தவுடன் யோசித்தேன் மதம் மாற்றம் சம்மந்தமாக எழுதப் போறீர்களோ என :rolleyes:

ஈழத் தமிழ் சார்ந்து பொது நலன் சார்ந்து பங்களிக்கக் கூடிய சில முயற்சிகள் என 10 விடயங்கள் எழுதி இருந்தீர்கள்;

1)// வாழுகின்ற நாட்டை அதன் புதமைகளை நடைமுறைகளை வெற்றி ரகசியங்களைப் புரிந்து கொள்ளுதல்.//

புதமைகள் என்டால் என்ன? புதுமைகளை தான் குறீப்பிட்டீர்களா?

3. //தங்கள் மட்டங்களில் கிழமைக்கு ஒரு தடவையோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவை ஈழத்தமிழனின் பெர்துமை சார்ந்த தங்களது

கருத்துக்களைப் பகிர்வதற்கான சந்திப்புக்களை எற்படுத்தித் தங்களிற்குள் பட்டதைப் பட்டபடி கதைப்பதற்கான ஒரு நாளினை

ஒதுக்குதல். இந்நாள் மகிழ்வாய் இருப்பதற்கான மதுபானம் முதற்கொண்டு அனைத்தும் சேர்த்து ஒரு பாட்டி போன்று நடந்தாலும்

இந்நாளில் தமிழனின் பொதுமை சார்ந்து மட்டுமே கதைப்பது என்ற வரைமுறையினை ஏற்படுத்திக் கொள்ளல்.//

இதில் பொதுமை என்டால் என்ன? பொதுவானது என்ட அர்த்தமா?...இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? எல்லாரும் குடித்து,வெறீத்து விட்டு புலியை தூற்ற ஒர் களமாய் இச் சந்திப்பு அமையும்.அதை விடுத்து ஆக்க பூர்வமாய் எதாவது செய்வார்கள் என நினைக்கிறீர்களா?

7.// ஈழம் முதலிய பாரிய வார்த்தைகளை விட்டு, அனைவரும் விளங்கும் பொதுமை சார்ந்த சமூக வியடங்களை மற்றையவர்களுடன்

சேர்ந்து தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களிலும் மேடைகளிலும் சுவாரசியமாகக் கலந்துரையாடல்.//

இனிமேல் ஈழக் கோரிக்கை பற்றீ கதைக்க கூடாது என சொல்ல வருகிறீர்களா?

  • தொடங்கியவர்

ரதி,

முதலில் எழுத்துப் பிழைகளிற்கு மன்னிக்கவும். பாமினி எழுத்துரு பாவித்து எழுதி ஒட்டுவதால் சில சமயம் இந்தப்பிரச்சினை. பிறகு திருத்திவிடுகிறேன்.

ஈழக்கோரிக்கை எடுக்கக்கூடாது என்று கூறவில்லை: இருவிடயம் முதலில் ஈழக்கோரிக்கை என்றால் என்ன என்பது பற்றிச் சிந்திக்கக்கூறுகின்றது. அடுத்தது ஈழத்தீர்வினைத் தவிர்த்த தீர்வு பற்றியசிந்தனைகள் முன்வைக்கப்படுகையில் குறைந்தபட்சம் அதைப்பரிசீலிக்கும் மனநிலை வேண்டும் என்கிறது. பிறகு விரிவாக எழுதுகிறேன்...

ஏதோ சொல்ல வந்தவிடயத்தை சரியாக சிந்தித்துவிட்டு எழுதும்போது குழம்பியிருக்கின்றீர்கள்.

சிந்தனையை தூண்டும் விதமான ஆக்கபூர்வமான ஒரு பதிவு. நிறைய விடயங்களை அலசியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

அதாவது, சந்திரபோசொடு சேர்வது என்றால் ஒருவர் தனது நடைமுறை வாழ்வில் இருந்து விலகி தான் அறிந்திராத ஒரு அந்நிய பாதையில் பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும். ஆனால் காந்தியோடு சேர்வதை வீட்டில் இருந்தபடி செய்யலாம், வேலைக்குப் போய் வந்து செய்யலாம், குடும்பமாகச் சேர்ந்து செய்யலாம், ஒரு நாளைக்கு ஒரு சிலமணிநேரம் மட்டும் செய்யலாம். ஒருவன் தனது வாழ்வை அதிகம் மாற்றாது நோகாது பங்கெடுக்கக்கூடியது காந்தியின் முறைமை. மேலும், நாம் ஒத்துக்கொள்ளுகின்றோமோ இல்லையோ, இந்தியாவிற்கு என்று சில குணாம்சங்கள் உண்டு. விரதம், ஒறுப்பு, துறவறம், அகிம்சை என்பன எதுவுமே காந்தி கஸ்ரப்பட்டு உருவாக்கியவை அல்ல. இவை அனைத்தும் இந்திய உளவியலில் ஏற்கனவே பரிணமித்து நின்ற சயம் சார்ந்த விடயங்கள். காந்தி செய்தது எல்லாம், அந்த மக்களின் நம்பிக்கைகளை, அந்த மக்களின் பெறுமதிகளைத் திரட்டி, திரட்டப்பட்ட அந்தப் பொதுமையின் புதிய பிரயோகம் ஒன்றை அவர்களிற்குக் காட்டியது மட்டுமே. காந்தியிடம் மக்கள் ஈர்க்கப்பட்டமைக்கான காரணம் காந்தி அவர்களைப் பெரும்பாலும் பிரதிபலித்தமையே.

காந்தி வாங்கிக்கொடுத்ததாக கருதப்படும் சுதந்திரம் ஒரு தரப்புக்கே சாதகமாக அமைந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதே போல் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திலும் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் கட்டுப்பாடுகளாக ஒழுக்க நெறிகளாக போராட்ட அமைப்புக்களால் உள்வாங்கப்பட்டது. முப்பது வருடகால போராட்ட தக்கவைப்பில் இதன் பங்கும் பெருமளவு இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கோரிக்கை எடுக்கக்கூடாது என்று கூறவில்லை: இருவிடயம் முதலில் ஈழக்கோரிக்கை என்றால் என்ன என்பது பற்றிச் சிந்திக்கக்கூறுகின்றது. அடுத்தது ஈழத்தீர்வினைத் தவிர்த்த தீர்வு பற்றியசிந்தனைகள் முன்வைக்கப்படுகையில் குறைந்தபட்சம் அதைப்பரிசீலிக்கும் மனநிலை வேண்டும் என்கிறது. பிறகு விரிவாக எழுதுகிறேன்...

இன்று சில புத்திசீவிகள் சொல்லி வரும் விடயமும் இதுதான்.. தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு.. இன்னொரு தீர்வை நோக்கி செல்லும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று. இவர்களின் கற்பனை சித்திரம்.. அல்லது கோட்பாடு.. புலிகள் ஆயுதத்தை தூக்கி.. அழிஞ்சு.. தமிழீழக் கோரிக்கையை மக்களிடத்தின் திணித்துவிட்டு சென்றுவிட்டனர் என்பது..!

நான் நினைக்கிறேன்.. இந்தக் கோரிக்கைகள்.. புத்திசீவித்தத்தால் எழுந்தவையல்ல.. சந்தர்ப்ப சூழ்நிலையால் எழுந்தவை என்று.

1987 இல் தேசிய தலைவர் ஆயுத ஒப்படைப்பை செய்துவிட்டு சுதுமலையில் பேசியதும்.. புத்திசீவிகள்.. கேள்வி கேட்டார்கள்.. பிரபாகரன் தமிழீழத்தைக் கைவிட்டாரோ என்று.

1990 இல் பிரமேதாசவோடு பேசும் போது மாற்றுக்குழு ஆயுத தாரிகள் இந்தியப் படைகளோடு ஒட்டிக்கொண்டு புலிகள் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள் நாங்கள் தமிழீழப் பிரகடனம் செய்யப் போகிறோம்.. இந்தியா அதை அங்கீகரிக்கப் போகிறது என்று கதையளந்து கப்பல் ஏறினார்கள்.

1995 இல் புலிகள் சந்திரிக்கா அம்மையாரோடு பேசும் போது இடைக்கால தீர்வு பற்றிப் பேசிய போதும் புத்திசீவிகள் பதறி அடித்தார்கள்.. புலிகள் தமிழீழத் தீர்வை கைவிட்டுட்டிடுவாங்களோ.. தங்களுக்கு போட்டியா வந்திடுவாங்களோ என்று.

2001 இல் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்த போதும்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று மாற்றி உச்சரிக்கப்பட தொடங்க வன்னி தமிழீழத்தை கைவிட்டு விட்டது என்று சொன்னார்கள்.

அதன் பின்னர் சுனாமி கட்டமைப்பு.. இடைக்கால நிர்வாக சபை கட்டமைப்பு என்று புலிகள் வரைந்து கொடுத்த போது புத்திசீவிகள் பதறிப் போனார்கள்.. புலிகள் தப்பிடுவாங்களோ என்று.

பின்னர் 2006 மகிந்த போரை தொடங்கிய போதே புத்திசீவிகளுக்கு நிம்மதி வந்தது. முள்ளிவாய்க்காலில் முடிந்த போதே பலருக்கு மூச்சே வந்தது.

இப்போ.. அவர்கள்.. சொல்லும் எழுதும் சித்தாந்தம் மாற்றி யோசி.. தமிழீழம் புலிகளின் கொள்கை.. அது அடையுறது சாத்தியமில்லாதது.. அதைக் கேட்டுத்தான் இத்தனை இழப்பும் என்று.

ஆனால் உண்மை..

தந்தை செல்வாவோ.. புலிகளோ தமிழீழம் கேட்டதோடு அதையே வலியுறுத்திக் கொண்டு நிற்கவில்லை. உறுதியாக இருந்தார்கள்.. புலிகள் தமிழீழத்துக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வை வலியுறுத்தியே வந்தார்கள்.

தமிழீழம் கேட்ட புலிகள் 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி இடைக்கால நிர்வாக சபை அமைக்க ஒத்துக்கொண்டார்கள். 1995 இல் ஒரு இடைக்கால தீர்வுக்கு புலிகள் வர சம்மதிதார்கள். 2004 இல் மீண்டும் இடைக்கால தீர்வுக்கு புலிகள் வந்ததோடு.. அதற்கான வரைபையும் சர்வதேச நிபுணத்துவ உதவிகளோடு முன் வைத்தார்கள்.

இவற்றை எல்லாம் எங்கட புத்திசாலிகள் சாதுரியமா மறந்திடுவினம்.. இல்ல மறைச்சிடுவினம். புலிகள் முட்டாள்கள்.. தமிழீழம் என்று கட்டிக்கிடந்து அழிஞ்சாங்கள் என்று காட்டினால் தான்.. கூட்டமைப்பும்.. மாற்று ஆயுதக் குழுக்களும்.. புலம்பெயர் புண்ணாக்குகளும் இன்னும் 50 வருசத்திற்கு சிங்களவரோடு இணக்க அரசியல் செய்து காலத்தை வியாபாரத்தை ஓட்டலாம்.

இன்றைய நிலவரப்படி.. புலிகளாலேயே எட்டப்பட முடியாத தமிழீழத்துக்கு குறைந்த பட்சமான எந்தத் தீர்வுகளையும்.. தமிழ் புத்திசீவிகள் எப்படித்தான் மாற்றி யோசிச்சும் வெல்ல முடியாது. ஏனெனில்.. புலிகள் பல வழிகளிலும் ஏலவே மாற்றி யோசிச்சு விட்டுத்தான் சென்றுள்ளனர். விரும்பினால்.. ஐக்கிய இலங்கைக்குள் சிங்களப் பேரினத்தின் அங்கமாக தமிழர்களை இனங்காட்டும் காரியத்தை செய்யுங்கோ.. தீர்வு கிட்டும். அதுதான் உங்கட புத்திசாலித்தனத்துக்கு சிறந்த தீர்வாக இருக்கும். :blink::lol:

Edited by nedukkalapoovan

சிந்தனையை தூண்டும் விதமான ஆக்கபூர்வமான ஒரு பதிவு. நிறைய விடயங்களை அலசியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

காந்தி வாங்கிக்கொடுத்ததாக கருதப்படும் சுதந்திரம் ஒரு தரப்புக்கே சாதகமாக அமைந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதே போல் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திலும் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் கட்டுப்பாடுகளாக ஒழுக்க நெறிகளாக போராட்ட அமைப்புக்களால் உள்வாங்கப்பட்டது. முப்பது வருடகால போராட்ட தக்கவைப்பில் இதன் பங்கும் பெருமளவு இருக்கின்றது.

சுகன் நீங்கள் எங்கு பதில் எழுதினாலும் இந்த கேள்விக்கு பதில் எழுதிவிட்டு எழுதவும்.

மாற்று கருத்து மாணிக்கமான உங்களுக்கு இந்த கேள்வி இன்னும் கண்ணில்படவில்லை என்று நினைக்கும் போது அருவருப்பாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78531&view=findpost&p=625768

இதற்கு பதில் தரும்வரை எங்கு நீங்கள் கருத்து எழுதினாலும் இந்த கேள்வியை கொண்டுவந்து இணைப்பேன் என்று மனவருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். :lol:

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கோரிக்கை எடுக்கக்கூடாது என்று கூறவில்லை: இருவிடயம் முதலில் ஈழக்கோரிக்கை என்றால் என்ன என்பது பற்றிச் சிந்திக்கக்கூறுகின்றது. அடுத்தது ஈழத்தீர்வினைத் தவிர்த்த தீர்வு பற்றியசிந்தனைகள் முன்வைக்கப்படுகையில் குறைந்தபட்சம் அதைப்பரிசீலிக்கும் மனநிலை வேண்டும் என்கிறது. பிறகு விரிவாக எழுதுகிறேன்...

தண்ணீர் மனித வாழ்விற்கு அவசியமானது. தண்ணீர் மறுக்கப்பட்ட நிலையில் தாகத்தோடு தேடிப் பார்த்தோம் எங்காவது தண்ணீரை மொண்டு தாகம் தீர்க்கலாமா என்று..... எங்களுக்காக எவரும் தண்ணீர் தரவில்லை..... அடுத்த கட்டம் எங்களுக்கான தண்ணீரைப் பெறுவதற்கு நாங்களே கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தோம். மண்ணைக் கிண்டி பாறைகளையும் பெயர்த்து... இதோ பாறைகளுக்கு அடியில் நீரின் கசிவு தென்படுகிறது. இன்னும் சிறிது தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். மண்ணைக் கிண்டி பாறைiயைப்பிளந்தவர்கள் நிறையக்களைத்தும் நலிந்தும் உடல் புண்பட்டும் இருக்கும்போது மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து அடுத்த கட்ட வேலைக்கு கை கொடுக்காமல் தாகத்தோடு இருப்பவர்களிடம் கிணறு என்றால் என்ன? அதைப்பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கிறதா என்று பாடம் எடுப்பதைப் போன்று இருக்கிறது இன்னுமொருவன் உங்களுடைய கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது தமிழ்மக்களின் அதி உயர்தீர்வாக கருதப்பட்டதற்கு சிங்களம் எதையுமே தரமறுத்ததுதான் காரணமே ஒழிய தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்களமக்கள் தமது தமிழருக்கான தீர்வை வைக்கவேண்டும் என்று கேட்டபடியேதான் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்த புலிகளும் சிங்கள மக்களிடம் தீர்வைக்கேட்டபடியேதான் இருந்தனர்.

இறுதியாகக்கூட பேச்சுவார்த்தையிலும் பலமுறை சிங்களத்திடம் தீர்வை முன் வைக்குமாறும் அதை பரீசிலிக்க தாம் தயார் எனவும் கேட்டபடியே இருந்து அவர்கள் தீர்வை வைக்காது பேச்சுவார்த்தையில் காலத்தை வீணடிப்பதைத்தவிர்க்கவே பல அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்களின் உதவியோடு பிரான்சில் வைத்து இடைக்காலதீர்வு வரையப்பட்டது.

பல வெளிநாடுகள் இதை ஒரு நல்லவரைவு நல்ல ஆரம்பம் என்று ஏற்றுக்கொண்டும் இதையும் சிங்களம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

பின்பு நடந்தவை யாவரும் அறிந்தவை.

எனவே வரலாறு எம்முன்பே நடந்தது. அதை இயலாமையின் காரணமாக திரிவுபடுத்துவோமாயின் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்கி மீண்டும் இன்றையநிலைக்குவரவே வழிவகுக்கும்.

போங்கையா உங்களது ஆராய்ச்சியும் சுய விமர்சனங்களும். உருப்படப்போவதில்லை தாங்கள். தமிழனை உருப்பட விடப்போவதுமில்லை.

Edited by விசுகு

பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நன்றி.

கீழ் வரும் கருத்தை கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்: "கடந்த ஒன்றரை வருடமாக நிறையப்பேசிவிட்டோம். கடமைக்குச் சில செயல்களும் செய்தோம் என்றபோதும் உருப்படியாய் அதிகம் இல்லை. "

தாயகத்தில் மக்கள் தொடர்ந்து ஒரு கொடுமையான இராணுவ கட்டமைப்புக்குள் வைக்கப்பட்டு அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் மறுக்கப்படுகின்றன. புலத்தில் உள்ள மக்கள் பலவாறு குழம்பிய நிலையில் இருந்தார்கள், சரியான பாதை எதுவென் தெரியாமல் தடுமாறினார்கள், சர்வதேசமும் சிங்களமும் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்த்தார்கள்.

இத்தனைக்கும் மத்தியில் கீழ்வரும் செயற்பாடுகள் பெரு வெற்றிகரமான செயற்பாடுகள் என பார்க்கப்படலாம்:

- ஐ. நா. க்கு அழுத்தம் கொடுத்தல்: ஒரு பரிந்துரை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதை தமிழகர் தரப்பு பயன்படுத்தும் இடத்து முதலில் ஒரு நிரந்தர ஆணைக்குழுவும் அதனூடாக பல எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்

- ஜி. எஸ். பி. பிளஸ் நிற்பட்டப்பட்டது, தொடரும் "பகிஸ்கரி சிங்களம்" போராட்டங்கள்

- தமிழகத்தில் தொடர்ந்தும் உணர்வுகள் தக்கவைக்கப்பட்ட வண்ணம் உள்ளன

- தொடரும் மனித உரிமை மீறல்கள், மறுக்கப்படும் அரசியல் தீர்வுகள் பல தரப்பாலும் உலகத்திற்கு சொல்லப்படுகின்றது. இதன் மூலம் எமது மக்களின் அவலங்கள் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகின்றது

- பல காத்திரமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது ( நாடு கடந்த அரசு, தமிழர் பேரவைகள், உலகத் தமிழர் பேரவை )

காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும்.

1.விடாமுயற்சி

2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை

3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு

இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எமது இனத்திற்கு பயன்படும் விடயத்தில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்ற நினைவில் காலையில் எழ வேண்டும். அதேபோல் மாலையில் தூக்கத்திற்கு போகும்பொழுது இன்று எதை உருப்படியாக எமது இனத்திற்கு செய்தோம் என்பதை எண்ண வேண்டும் இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

Edited by akootha

சுகன் நீங்கள் எங்கு பதில் எழுதினாலும் இந்த கேள்விக்கு பதில் எழுதிவிட்டு எழுதவும்.

மாற்று கருத்து மாணிக்கமான உங்களுக்கு இந்த கேள்வி இன்னும் கண்ணில்படவில்லை என்று நினைக்கும் போது அருவருப்பாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள்.

http://www.yarl.com/...ndpost&p=625768

இதற்கு பதில் தரும்வரை எங்கு நீங்கள் கருத்து எழுதினாலும் இந்த கேள்வியை கொண்டுவந்து இணைப்பேன் என்று மனவருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்

.

உங்கள் பதிவுக்கு நன்றிகள்

பிரான்சில் உள்ள சுகன் நான் இல்லை. நான் கனடாவில் இருப்பவன் பிரான்சுக்கு போனதும் கிடையாது.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கூறிய அனைவரிற்கும் நன்றி. சிற்பி "எனது கருத்தை நான் தெளிவாகக்கூறவில்லை" என்ற உங்களது கருத்தை உள்வாங்கிக்கொள்கின்றேன். அத்தோடு உங்கள் பார்வையில் குளப்பகரமாகத் தெரியும் ஒருபதிவு சார்ந்து வெறும் ஊகத்தின் அடிப்படையில் பின்னூட்டமிடுவதைத் தவிர்த்து, பதிவு தெளிவில்லை என்று கூறிய உங்களது பண்பை மனப்பூர்மவாக மதிக்கின்றேன். மிக்க நன்றி.

அடுத்து, துரதிஸ்ரவசமாகப் பதிவு நீண்டுவிட்டமையால் பின்னூட்டத்தில் அவசரத்தில் இடப்பட்ட ஒரு வரி மட்டும் பதிவின் சாராம்சமாக ஆகி இரு கருத்துக்கள் இந்த ஒருவரி சார்ந்து மட்டும் அமையநேர்ந்துவிட்டது. எனினும் அவ்வரியும் நான் எழுதியது தான் என்ற வகையில் அவ்வரி சார்ந்து எழும் பின்னூட்டங்களும் நியாயமானவையே.

நெடுக்காலபோவான், உங்கள் கருத்தை நீங்கள் கூறியமைக்கு நன்றி. நீண்ட பதிவிற்காய் வருந்தி, நேரம் கிடைக்கும் போது இயலுமெனின் பின்னூட்ட ஒருவரி மட்டுமன்றி முளுப்பதிவையும் ஒருமுறை வாசிக்கும் படி (நீங்கள் பின்னூட்டமிட்டமையால் மட்டுமே வாசிக்கும்படி கேட்கின்றேன்) தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு உங்கள் கருத்தை நீங்கள் கூறுவதும் எனது பார்வையாக நீங்களாக ஒன்றைக் கூறுவதும் ஒன்றல்ல என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். ஒருவேளை, நீங்கள் கூறியது என்னை நோக்கியது அல்ல பொதுவானது எனின், எனது புரிதலைத் திருத்திக்கொள்கிறேன்.

வல்வைசகாரா, உங்களது கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களது பார்வையில், எமது இன்றைய நிலையானது, ஈழத்தமிழர்கள் ஏற்கனவே அடிப்படைகளைப்; புரிந்து ஒன்று சேர்ந்து செயற்பட்டுக் கிணறு வெட்டி இன்னமும் அரை அங்குலம் தோண்டினால் நீர் ஊற்றைப் பெற்றுவிடலாம் என்ற நிலையில் நிற்பதை ஒத்திருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். இன்றைய எமது இனத்தின் நிலை இது தான் என்பதை நீங்களும் நானும் ஏற்றுக்கொள்ளுவோமேயாயின் நிச்சயம் "அடிப்படை" பற்றிச் சிந்திக்கக்கூறும் எனது பதிவு அடாவடியானது தான் பொறுப்பற்றது தான். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ கிணற்றில் நீர் வரவேண்டும் எமது தாகம் தீரவேண்டும் என்பதில் எனக்கு 100 வீதம் உடன்பாடுண்டு. எனக்கும் உங்களிற்குமிடையேயான இவ்விவாதம் சார்ந்த ஒரே முரண்பாடு இன்றைய எமது நிலை என்னவென்பது மட்டும் தான். இதில் உங்களது புரிதலே சரியாக இருக்கவேண்டும் என்று நானும் பிரார்த்திக்கின்றேன். அத்தோடு எமது இனத்தின் இன்றைய நிலை சார்ந்த உங்களது புரிதல் சரியாயின் நிச்சயம் எனது இப்பதிவு கடாசப்படவேண்டியது என்பதையும் மனப்பூர்மாகக் கூறிக்கொள்கின்;றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் போராட்டத்தில் எங்களவர் அனைவரும் கரம்கோர்க்கவேண்டும் என்பது எங்களது உண்மையான அவாவாக இருப்பின் எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் பங்கேற்கச் சித்தமாயிருக்கும் முறைமைகளையும் நாம் சிந்தித்தே ஆகவேண்டும். மக்கள் மக்களாகத் தான் இருப்பார்கள் என்ற அடிப்படையினை நாம் மறந்துவிடமுடியாது.

மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு "முழக்கம்" தற்போது தெளிவாக இல்லை. தமிழ் மக்களின் எதிர்கால வாழ்விற்கு தமிழீழம்தான் சரியான தீர்வாக இருக்கும் என்பதும் உண்மையாக இருந்தாலும், தனிநாடு பெறக்கூடிய சந்தர்ப்பம் நழுவிப் போயுள்ளதாகவே தெரிகின்றது.

நீண்டகாலம் இயக்கத்தில் இருந்த எனது நண்பர் ஒருவர் தமிழரிடம் "உயர்குழாம்" (elite society) இல்லாததுதான் மிகப்பெரிய பலவீனம் என்றார். புலிகள் ஒன்றை ஒருவாக்க முயன்றார்கள், ஆனால் முள்ளிவாய்க்காலில் அழிந்துவிட்டது.

  • தொடங்கியவர்

...நீண்டகாலம் இயக்கத்தில் இருந்த எனது நண்பர் ஒருவர் தமிழரிடம் "உயர்குழாம்" (elite society) இல்லாததுதான் மிகப்பெரிய பலவீனம் என்றார். புலிகள் ஒன்றை ஒருவாக்க முயன்றார்கள், ஆனால் முள்ளிவாய்க்காலில் அழிந்துவிட்டது.

கிருபன் உங்களின் நண்பரின் மேற்படி விடயம் சிந்திக்கவைக்கின்றது.

இவ்விவாதத் தலைப்புச் சார்ந்தும் கிருபனின் மேற்படி பின்னூட்டம் சார்ந்தும், நூல் ஆர்வலர்களிற்கு ஒரு குறிப்பு: பெரு நாட்டில் பிறந்த மாரியோ வாற்கஸ் இல்லோசா என்ற இவ்வாண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற நாவலாசிரியரின் "கொன்வர்சேசன் இன் த கத்தீட்ற்றல"; என்ற நாவலைத் தற்போது வாசித்துக்கொண்டிருக்கேன்றேன். இன்னமும் அரைவாசிகூடத்தாண்டாதபோதும் இந்நூலைச் சிபாரிசுச் செய்வதற்குப் பொறுக்முடியவில்லை. நிச்சயம் எங்கள் போராட்ட வரலாறு, புரட்சி என்பன சார்ந்தும் வாசிக்கக்கூடிய மிகசுவாரசியமான நாவல்களில் இதுவுமொன்று. முதல் நூறு பக்கங்கள் ஆவது இந்நூலின் வாசிப்புப் பரிட்சயப்படுவதற்குத் தேவைப்படும்--ஏனெனில் ஒரு பந்தியில் கூட பல திரிகள் பின்னப்படும் வித்தியாசமான எழுத்துமுறை. ஆனால் இடதுசாரியம், எங்கள்போராட்டம், உலகநடப்பு,புரட்சி,அரசியல்,தத்துவம் போன்ற விடயங்களில் ஆர்வமுள்ள அனைவரையும் நிச்சயம் இந்நூல் கவரும். வேலைக்கு ஓய்வுபோட்டு வாசித்து முடிக்கலாமா என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இந்நூல் வாசித்தவரை என்னைக்கவர்ந்துள்ளது.

"Conversation in the Cathedral": Mario Vargal Llosa

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், உங்கள் கருத்தை நீங்கள் கூறியமைக்கு நன்றி. நீண்ட பதிவிற்காய் வருந்தி, நேரம் கிடைக்கும் போது இயலுமெனின் பின்னூட்ட ஒருவரி மட்டுமன்றி முளுப்பதிவையும் ஒருமுறை வாசிக்கும் படி (நீங்கள் பின்னூட்டமிட்டமையால் மட்டுமே வாசிக்கும்படி கேட்கின்றேன்) தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு உங்கள் கருத்தை நீங்கள் கூறுவதும் எனது பார்வையாக நீங்களாக ஒன்றைக் கூறுவதும் ஒன்றல்ல என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். ஒருவேளை, நீங்கள் கூறியது என்னை நோக்கியது அல்ல பொதுவானது எனின், எனது புரிதலைத் திருத்திக்கொள்கிறேன்.

நன்றி

உங்களின் பதில் கருத்து ஒன்றை மேற்கோள் காட்டி நடைமுறைக் காலத்தில் மாற்றுக்கருத்து என்ற போர்வையில் தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மக்கள் கைவிட வேண்டும் என்பது போன்றதான தொனியில் கருத்துப் பகிரப்படுவதும்.. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் ஒரே கொள்கையான தங்களை விஞ்சின சிந்தனை கூடாது.. என்ற பாணியிலான கருத்துக்களும்.. புலிகள் வன்முறை வாதிகள்.. அவர்களுக்கு தமிழீழம் தவிர வேற எதுவும் தெரியாது.. அதனால் அழிந்து தொலைஞ்சார்கள்.. அவர்களுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தொழிற்பட தெரியாது என்று பல வியாக்கியானங்கள் இங்கே சமீப காலமாக முளைத்து வருகின்றன. இதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மாவீரர்களை நினைவு கூறுவது கூட அவசியமா என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுரை.. ஏன் ஊடக அவியலாளர்கள் கருத்துக் கூட வெளியிடுகின்றனர்.

இந்த நேரத்தில் நான் இறுதியில் குறிப்பிட்டது போல்.. அநேக தமிழ் புத்தி சீவிகள்.. சிங்களப் பேரின தேசியத்துக்குள் தமிழர்களை அடைத்து வைப்பதன் மூலம்.. ஐக்கிய சிறீலங்காவுக்குள் ஒன்றாக இருக்கலாம் என்று போதிக்க முற்படும் வேளையில் மகிந்தவோ இவர்களை எல்லாம் விஞ்சி ஐக்கிய சிறீலங்காவுக்கு ஒரே தேசிய கீதம்.. அது தேசிய மொழியான சிங்களத்திலேயே எனிப் பாடப்பட வேண்டும் என்று சட்டம் வேறு இயற்றி விட்டிருக்கிறார்.

இதை எல்லாம் மிஞ்சி.. இனி ஒரு தீர்வு.. தமிழ் புத்திசீவிகளின்.. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் தொண்டையில் இருந்து தான்.. முளைக்க வேண்டும்.

புலிகளை விட தமிழினத்தின் பேரழிவுக்கு காரணமானவர்கள்.. தமிழ் புத்திசீவிகளும்.. இந்த மாற்றுக் கருத்து மாணிக்கங்களும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கிடையாது. இவர்களின் அறிவுபூர்வமற்ற சுயநல நடவடிக்கைகளே புலிகளின் அழிவுக்கும் தமிழ் மக்களின் இன்றைய நிற்கதி நிலைக்கும் மூல காரணம். இந்த நிலையில்.. இவர்களின் மாற்று யோசியை ஒட்டிய கருத்துக்கள் எமக்கு அவசியம் தானா..???! என்பதையே இங்கு உங்களின் கருத்தோடு மேற்கோள் காட்டி வினவி இருக்கிறேன். அது உங்களின் கட்டுரைக்கான நேரடிக் கருத்துப் பகிர்வல்ல. :lol:

மக்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு "முழக்கம்" தற்போது தெளிவாக இல்லை. தமிழ் மக்களின் எதிர்கால வாழ்விற்கு தமிழீழம்தான் சரியான தீர்வாக இருக்கும் என்பதும் உண்மையாக இருந்தாலும், தனிநாடு பெறக்கூடிய சந்தர்ப்பம் நழுவிப் போயுள்ளதாகவே தெரிகின்றது.

ஆனால் இப்போது தமிழீழம் கூடிய சாத்தியம் என எண்ணக்கூடிய நிலைப்பாடுகளும் உண்டு.

அதாவது, முன்பு தனி நாட்டை, தமிழீழத்தை விரும்பாத இந்தியா, சிங்களத்தை பொறுத்தவரையில் இன்று ஏமாந்துள்ளது. அது நிச்சயாமாக சீனாவின், தன்னை சுற்றிய வலைப்பின்னலை விரும்பவில்லை. இதனால் தனது நீண்ட கால இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அது எண்ணக்கூடும். அதுவும் ஒரு சோவியத் யூனியன் போல இல்லை ஒரு யுகோஸ்லோவியா போல உடையலாம் என பார்கின்றது. அமெரிக்காவும் மேலைத்தேய நாடுகளும் ஒரு பலமான இந்தியாவை பல காரணங்களுக்காக விரும்புகின்றன.

எனவே இந்தியா இப்போதைக்கு தானும் பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவின் அதிகாரத்தை குறைக்க முயன்று வருகின்றது. இதை எவ்வளவு தூரம் சிங்களம் அனுமதிக்கும் மற்றும் சீனாவின் அகன்ற கால் எவ்வாறு பதியப்படும் என்பன இந்தியாவால் அவதானிக்கப்படும். அப்பொழுது தனி நாடே சாத்தியம் என்ற ஒரு தீர்வும் முன்வைக்கப்பட்டு ஆராயப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிவாளங்கள்

அண்மையில் ஒருவர் “குறைநினைக்கமாட்டீர்கள் என்றால் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றார். என்ன என்றபோது “நீங்கள் நாத்திகரா?” என்றார். நான் நாத்திகனா ஆத்திகனா என்பது கிடக்க, இக்கேள்வி என்னை ஏன் காயப்படுத்தும் என்று அவர் எண்ணினார் என்பது தான் எனக்குப் பெருவிந்தையாய் இருந்தது. அவர் மூன்று ஆண்டுகளிற்கு முன்பு மதம் மாறிய ஒருவர். அவரது பிரார்த்தனைக் கட்டமைப்பில் நாத்திகன் என்பது காயப்படுத்தும் வார்த்தை என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். இவ்வாறே சமவுடமைப்பொருளாதார இயக்கத்தின் அங்கத்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்களை மேட்டுக்குடி என்றோ குட்டி முதலாளி என்றோ அழைத்தால் அவர்கள் குளம்பித் தடுமாறுவததை அவதானிக்கமுடியும். ஈழத்தமிழர் ஒருவரைத் துரோகி என்று அழைத்தால் அத்தமிழ் முகத்திலும் மேற்படி ரேகைகள் அவதானிக்கப்படக்கூடியன. இவை அனைத்தினதும் இவற்றைப் போன்ற இன்னும் ஆயிரமாயிரம் வாhத்தைகளினதும் அடிப்படை ஒன்றுதான். அதாவது, ஒரு விடயத்தில் தளம்பலற்ற நம்பிக்கையினை அவ்விடயத்தில் ஈடுபட்டுள்ளோர்கள் மீது உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையே இது. சுருங்கச்சொன்னால் இத்தகைய பதங்கள் ஒரு கடிவாளத்தின் பங்கு வகிப்பன.

வழமையின் சொகுசுகளைத்துறந்து கடினமான பாதைகளில் செல்லவிழைவோர், கடினங்கள் காரணமாகத் தமது பாதையினை விட்டுவிட்டுப் பழைய சொகுசுநிலைக்குத் திரும்பிவிடலாமா என குறறைந்தபட்சம் சிலநேரங்களிலாவது நினைப்பது தவிர்க்கமுடியாதது. உடல், உள வருத்தங்கள் கொள்கைப்பிடிப்பைத் தகர்க்கும் வல்லமை படைத்த உபாதைகள். அவ்வகையில், வழமையின் சொகுசுகளிற்குப் புறம்பான பாதைகளில் இத்தகைய வார்த்தை உத்திகள் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடியன. ஆயுதபோராட்டக்காலத்திலும் துரோகி என்ற சொல்லுத் தேவைசார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் எமது பழைய அடிப்படைகள் மாறிப்போய்விட்டு இன்றைய நிலையிலும் துரதிஸ்ரவசமாக இ;க்கடிவாளங்கள் அர்த்தமின்றி உபயோகிக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காலாவதியாகிப்போன துரோகிப் பதம்

துரோகி என்ற பதம் இன்று அர்த்தமின்றி உபயோகிக்கப்படுகின்றது என்று எவ்வாறு கூறமுடியும்? முன்னைய நாளில் துரோகி என்ற வரைவிலக்கணத்திற்குட்பட்டவர்கள் மட்டுமன்றி; இன்னும் புதியவர்களும் நாம் முன்னர் அறியாதவர்களும் கூடச் சேர்ந்து தமிழீழம் என்ற இலட்சியத்திற்கு எதிராக இன்றும் வேலைசெய்து கொண்டுதானே இருக்கிறார்கள். எங்கள் இலட்சியம் தமிழீழம் என்றால் அதற்கு எதிராக வேலை செய்யும் எம்மவர்களை நாங்கள் துரோகிகள் என்று அழைப்பதில் என்ன பிழை? என்ற கேள்வி; எதிர்பார்க்கப்படக்கூடியது.

முதலில் தமிழ்ஈழம் என்ற இலக்கை உடையவர்கள் அனைவரும் அவ்விலக்கை அடைவதற்கான ஒரே வழிமுறையினைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறமுடியாது. அதுவும் எமக்கான வழிமுறை என்று இருந்த ஒன்று முடிந்து புதிய திட்டவட்டமான வழிமுறையெதுவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடாத நிலையில் ஒரு வழிமுறை இன்னொன்றை நிராகரிக்க முடியாது. இது தேடல்களின் விசாரணைகளின் காலம். அதைப்போன்றே தமிழனின் நலன்களிற்குத் தமிழீழம் தான் தீர்வு என்பதை ஏற்க மறுப்பவர்களைத் துரோகி எனவும்முடியாது—வேண்டுமானால் தமிழீழத் தீர்வை ஆதரிப்பவர்கள் தமிழீழத்திற்குப் புறம்பான தீர்வை வேண்டுபவர்களை போட்டியாளர் எனலாம். ஆனால் தமிழீழத்தீர்வையோ அல்லது அத்தீர்விற்கான குறிப்பிட்ட ஒரு வழிமுறையினையோ ஆதரிக்காதவர்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களிற்கும் எதிரிகள் என்பதோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழர்க்கும் இவர்கள் துரோகிகள் என்பதோ ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது.

ஒருவர் எந்த இடத்தில் வீடுவாங்குவது, யாரை மணம்முடிப்பது, எப்படியான வாழ்வு முறையினை மேற்கொள்வது என்பது போன்ற விடயங்களில் மற்றையவர்கள் தான் அவரிற்காக முடிவெடுப்பார்கள், ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவோடு குறிப்பிட்ட நபர் உடன்படாவிட்டால் அவரைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைப்பார்கள் என்று ஒரு நடைமுறை முன்மொழியப்பட்டு; அது பற்றிய கருத்துக் கேட்டால் மிகப்பெரும்பான்மையானோர் அந்டைமுறையினை நிராகரிப்பார்கள். அடாவடி என்பார்கள். ஆனால் தமிழர்களிற்கான தமிழரின் போராட்டம் என்று அனைத்து ஈழத்தமிழனின் பெயரிலும் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கை விடயத்தில் மட்டும், இன்னதைத் தான் சொல்லலாம் இப்படித்தான் சொல்லலாம் என்று ஒரு வரையறை எதிர்பார்க்கப்படுகின்றது. ஈழத்தமிழினத்தின் போராட்டம் ஈழத்தமிழினத்தின் அபிலாசைகள் என்ற பதங்களை உண்மையில் விளங்கிக் கொள்ளும் எவரும், அனைத்துத் தமிழர்சார்பிலும் ஒருசிலர் முடிவெடுப்பதையோ, எடுக்கப்பட்ட முடிவுகளோடு உடன்படாதவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவதையோ, ஏதேனும் ஒரு வழிமட்டும் தழிழர் போராட்டவழிமுறையாகத் அறிவிக்கப்படுவதையோ ஆதரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு தமிழனின் பெயரிலும் சிந்திக்கப்படும் போராட்டம் பற்றிச் சிந்திப்பதற்கும் கருத்துக் கூறுவதற்குமான உரிமை ஒவ்வொரு தமிழனிற்கும் உண்டென்பதை ஏற்க மறுப்பின், எத்தகைய தமிழ் ஈழத்தை நாங்கள் இன்றைய நிலையில் கனவு காண்கின்றோம்?

தமிழீழம், போராட்டம், நாட்டுப் பற்று, தமிழரின் அபிலாசை முதலிய விடயங்கள் துரதிஸ்ரவசமாக எங்கள் வாழ்வில் வெறும் வார்த்தைகளாக மட்டும் இன்று ஆகி விட்டன. இவ்வார்த்தைகளின் ஆன்மா என்ன. இவ்வார்த்தைகள் எங்கிருந்து பிறந்தன, இவ்வார்த்தைகளை ஆதரிப்பது என்றால் உண்மையில் என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளை எல்லாம் பலர் இப்போது கேட்பதில்லை. முப்பது வருடங்களிற்கு முன்னர் உணரப்பட்ட வார்த்தைகளைக் காவித்திரிகிறோமே அன்றி அவற்றின் அர்த்தம் பற்றிச் சிந்திக்க மறுக்கின்றோம். எங்கள் இனத்தை நேசிக்கும் எவரிற்கும் இந்நிலை கவலைஅளிப்பது.

புலிகளினால் தலைமைதாங்கப்பட்ட எங்களின் ஆயுதப்போராட்ட முறைமை தற்போது முடிந்துள்ளது. இன்னுமொரு ஆயுதப்போரட்டம் ஈழத்தில் தொடங்கப்பட்டாலும் கூட, அதுவும் புலிகள் என்று அழைக்கப்பட்டாலும் கூட, அது முன்னைய வடிவங்கள் பலவற்றை ஒத்திருந்தாலும் கூட, முன்னைய பாத்திரங்கள் அதில் அங்கம் வகித்தாலும் கூட அது முன்னையதாக இருந்துவிடமுடியாது. பழைய பாடங்களில் இருந்து கற்ற புதிய முறைமையாகவே அது கிளம்பத்தலைப்படும். வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும் எந்த முயற்சியும் தோற்ற வடிவங்களை மாற்றியமைத்தே வெளிப்படும். இந்நிலையில், முடிந்துபோன ஒரு முறைமையின் ஒரு வழமையை மட்டும—அதாவது துரோகி என்ற பதத்தின் பிரயோகத்தை மட்டும்--அவ்வழமை உருவானதற்கான காரணகாரியங்களைச் சிந்தியாது தொடாந்தும் பாவிப்பது என்பது எப்படிப்பார்த்தாலும் அர்த்தமற்றதே. அர்த்தமற்றது என்பது மட்டுமன்றி, துரோகி என்ற வார்த்தையின் உபயோகம் எதிர்கால நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டையாக, சக தமிழர்களின் வளங்களை எமது போராட்டம் பாவிக்கமுடியாதவாறு அவர்களை எம்மிலிருந்து துரத்துவதாக, எம்மைச் சிதைத்து எமது ஆதரவுத்தளத்தைச் சுருக்குவதாக அமையுமேயாயின் அது துரோகி என்ற வார்த்தைப்பிரயோகம் செய்யும் துரோகத்தனமாக மாறிப்போகும் முரண்நகையே நிகழும். அதாவது தமிழீழ இலட்சியத்தைச் சுவாசிக்கின்றோம் அதற்காக உழைக்கின்றோம், எம்மவரின் எதிர்கால சுபீட்ச்சத்தைக் கனவு காணுகின்றோம் என்று சொல்லியபடி எம்மவர்களைத் தூரப்படுத்தி, துரத்தி எம்மை நாட்டுப்பற்றாளர்களாக நாம் காட்டிக்கொண்டிருப்பதற்குத் துரோகி ஏவுகணைகளைச் சுட்டுக்கொண்டிருப்போமேயாயின், நாம் கூறுகின்ற ஈழத்தமிழர்க்கான ஈழத்தமிழரின் போராட்டம் என்பதனைத் தடக்கி வீழத்திய துரோகத்தனம் எம்முடையதாய் ஆகும். துரோகி என்ற சொல்லின் மூலம் துரோகம் செய்த முரண்நகை நிகழும்;.

காந்தியும் திலீபனும்

இந்தியசுதந்திரம் கிடைத்தது காந்தியாற் தானா என்பது விவாதத்திற்குரியதாய் நாற்பதுகளில் தொடங்கிய ஜோர்ச் ஓர்வலின் கட்டுரை தொட்டு இன்றுவரை தொடர்கிறது. ஆனால்இந்திய சுதந்திரத்தில் காந்தியின் பங்கு மக்களைத் திரட்டுவதில் ஆற்றிய தன்னிகரற்ற பங்கினை எவரும் மறுக்கமுடியாது, அதுவும் இந்தியம் என்பதே தைக்கப்பட்ட ஒன்றாய் இருக்கையில் இந்திய சுதந்திரம் என்ற ஒன்றிக்காக சுதந்திரத்தை ஒரேகனவாக அனைவரும் வரித்துக்கொள்ளும் வகையில் ஆக்கியது காந்தி. இது எவ்வாறு நடந்தது என்று சிந்திப்பது இன்றைய நிலையில் எமக்கும் பயன்படும். எனது அறிவிற்கு எட்டியவரை காந்தியின் வெற்றியின் அடிப்படையாக நான் கருதுவது காந்தி தனது மக்களை அவர்களாகப் புரிந்துகொண்டமையினையே.

அதாவது, சந்திரபோசொடு சேர்வது என்றால் ஒருவர் தனது நடைமுறை வாழ்வில் இருந்து விலகி தான் அறிந்திராத ஒரு அந்நிய பாதையில் பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும். ஆனால் காந்தியோடு சேர்வதை வீட்டில் இருந்தபடி செய்யலாம், வேலைக்குப் போய் வந்து செய்யலாம், குடும்பமாகச் சேர்ந்து செய்யலாம், ஒரு நாளைக்கு ஒரு சிலமணிநேரம் மட்டும் செய்யலாம். ஒருவன் தனது வாழ்வை அதிகம் மாற்றாது நோகாது பங்கெடுக்கக்கூடியது காந்தியின் முறைமை. மேலும், நாம் ஒத்துக்கொள்ளுகின்றோமோ இல்லையோ, இந்தியாவிற்கு என்று சில குணாம்சங்கள் உண்டு. விரதம், ஒறுப்பு, துறவறம், அகிம்சை என்பன எதுவுமே காந்தி கஸ்ரப்பட்டு உருவாக்கியவை அல்ல. இவை அனைத்தும் இந்திய உளவியலில் ஏற்கனவே பரிணமித்து நின்ற சயம் சார்ந்த விடயங்கள். காந்தி செய்தது எல்லாம், அந்த மக்களின் நம்பிக்கைகளை, அந்த மக்களின் பெறுமதிகளைத் திரட்டி, திரட்டப்பட்ட அந்தப் பொதுமையின் புதிய பிரயோகம் ஒன்றை அவர்களிற்குக் காட்டியது மட்டுமே. காந்தியிடம் மக்கள் ஈர்க்கப்பட்டமைக்கான காரணம் காந்தி அவர்களைப் பெரும்பாலும் பிரதிபலித்தமையே.

நெருப்பாற்றைக்கடப்பது தியாகிகளிற்கும், புரட்சியாளர்களிற்கும், போராளிகளிற்கும் கைவரக்கூடியது. ஆனால் மக்கள் என்பவர்கள் தியாகிகளோ புரட்சியாளர்களாகவோ போராளிகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. மக்கள் மக்களாகத் தான் இருப்பார்கள் என்ற ஒன்று மட்டும் தான் நாம் நம்பக்கூடியது. ஆக எந்த ஒரு நீண்டகால போராட்ட வழிமுறையும் மக்கள் எம்மோடு சேர்ந்து நெருப்பாற்றைக் கடக்கச் சம்மதிப்பர் என்ற அடித்தளத்தில் எடுக்கப்படமுடியாது. இதைத் தான் முள்ளிவாய்க்கால் எம் முகங்களில் அறைந்த சொல்லி நிற்கிறது.

கனடாவில் எந்த வித பங்களிப்பும் செய்ய மறுத்து, புலிகளையும் தலைவரையும் தூசித்தபடி இருந்த சிலர் மூச்சிற்கொருதடவை தாங்கள் திலீபனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக்கொள்வதை நான் கண்டுள்ளேன். புலிகளைத் தூசிக்கும் பல மட்டங்களில் திலீபனைப் போற்றுவது ஒரு நாகரிகச் செயல் என்ற அளவிற்கு இவ்விடயம் இருந்தது. அப்போதெல்லாம் இவர்களோடு மூச்சிரைக்க விவாதங்கள் அவசியப்பட்டது. ஆனால் அவர்கள் தூங்கவில்லை தூங்குவதுபோல் நடித்தார்கள் என்பதைக் காலப்போக்கில் காணமுடிந்தது. அவர்களின் பிரச்சினை, உண்மையில் என்னவென்றால், தம்மால் செய்யமுடியாததைப் புலிகள் செய்கிறார்கள் என்பது. அதாவது வைத்தியனையும், நாலு ஏயினையும் முன்னர் மதித்த சமூகம் இப்போது மாவீரரே அதியுயர் மரியாதை என்கிறது. நாட்டுப்பற்றாளர் போன்ற விடயங்களும் புகழப்படுகின்றன. தமது நாலு ஏயும் பட்டமும் பின்தள்ளப்பட்டுவிட்டன. எனினும் இந்த சமூக அங்கீகாரம் சார்ந்து தம்மால் புலியில் சேரவோ, கனேடிய சட்டங்களோடு போராடி நாட்டுப்பற்றாளர் ஆகவோ முடியாது. ஆனால் அப்பப்போ வேண்டுமானால் சுழற்சி முறை உண்ணாவிரதம் செய்வதற்கு அவர்கள் எப்போதும் தயார். தம்மால் திலீபன் போன்று உயிர்விடமுடியாது ஆனால் களத்திற்குப் போகாட்டியும் ஊரிற்குள் சென்றிக்கு நிற்கும் ஹெல்ப்பரைப்போல தம்மால் சுழற்சிமுறை உண்ணாவிரதம் செய்யமுடியும். இதனால் ஒருவேளை நாட்டுப்பற்றுக் கம்பளம் தமக்கும் விரிக்கப்படலாம என்ற ரீதியில் திலீபனை அல்ல திலீபத்தைப் அவர்கள் புகழ்ந்தார்கள். காந்தியின் பிரமிப்பு, வெள்ளைக்காரனும் காந்தியைப் போற்றுவது மற்றும் சமய போதனைகள் முதலியனும் கூட இவர்களின் மனநிலையில் செல்வாக்குச் செலுத்தியமை அவதானிக்கமுடிந்தது. எல்லோரையும் போல எனக்கும் இது அருவருப்பாகவே அன்று தெரிந்தது. ஆனால் முள்ளிவாய்கால் அறைந்த அறையிலிருந்து சுதாகரித்துக் காந்தியுடன் கூட்டிக்களித்தப் பார்த்தால் தவறு எங்களதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

எங்களின் போராட்டத்தில் எங்களவர் அனைவரும் கரம்கோர்க்கவேண்டும் என்பது எங்களது உண்மையான அவாவாக இருப்பின் எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளும் பங்கேற்கச் சித்தமாயிருக்கும் முறைமைகளையும் நாம் சிந்தித்தே ஆகவேண்டும். மக்கள் மக்களாகத் தான் இருப்பார்கள் என்ற அடிப்படையினை நாம் மறந்துவிடமுடியாது.

இத்தால் நான் சொல்ல வருவது

கடந்த ஒன்றரை வருடமாக நிறையப்பேசிவிட்டோம். கடமைக்குச் சில செயல்களும் செய்தோம் என்றபோதும் உருப்படியாய் அதிகம் இல்லை. எந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியும் பிரச்சினையினைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் ஆரம்பிக்கமுடியும். இன்றைய நிலையில் உலகைச்சேர்ப்பதற்கு முன்னர் நாங்கள் எங்களைச் சேர்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். நெருப்பாற்றைக் கடக்க வரச்சொன்னால் அதிகம்பேர் வரமாட்டார்கள். அவர்களின் பெறுமதிகள் அவர்களின் நம்பிக்கைகள் திரடப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகத்தேவையின்றி, அவர்கள் தங்கள் வாழ்க்கையினை நிறுத்திவைக்கத் தேவையின்றி, வேலைக்குப் போனபடி நாட்டிற்கும் வேலைசெய்யும் வழிமுறை கைக்கொள்ளப்படுவது தவிர்க்கமுடியாதது. ஹிஸ்புல்லா ஒரு ஆயதப் போராட்டத்தையே வேலைக்குப் போனபடி நடாத்துகின்றது என்கையில் புலத்தில் நிச்சயம் எங்களால் எங்களை அதிகம் ஒறுக்காது ஈழத்தமிழரி;ன் எதிர்காலம் சார்ந்து முனையக்கூடியன ஏராளம் உண்டு. ரகசியமாய்க்கூடி, தலைமைத்துவம் சார்ந்து குத்திமுறிந்த புலத்தின் நேற்றைகள் மறக்கப்படவேண்டும். “யாரும் ஒருவர் எங்களிற்காய்ப் போராடவேண்டும் என்ற நிலை மாறவேண்டும்” என்ற கருத்துப் பலரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளபோதும் இப்பதிவு அக்கூற்றை இன்னுமொருபடி உட்சென்று பார்க்கக் கூறுகிறது. இனிப்போராட்டம் என்றால் அது பெரும்பான்மையானோர் பங்காளர் ஆகும் வடிவத்தில் மட்டுமே நடக்கவேண்டு;ம் என்கிறது.

ஆனால் இன்னார் தான் செயற்பாட்டாளர் என்ற நிலையும் இன்னவை தான் செயல் என்ற நிலையும் நாம் நிறுத்தமுடியாத மனநிலை. ஒருசாரார் இப்போதைக்கு இம்மனநிலையினை மாற்ற உடன்படார். இல்லை மாறுங்கள் என்று முரண்டுபிடித்தால் துரோகம் என்பார்கள். எனவே அவர்கள் அதைச் செய்யட்டும். அந்தச் செயலிலும் செயற்பாட்டாளர்களிலும் உடன்பாடுடையவர்கள் அதை ஆதரிக்கட்டும். ஆனால் எவரும் சும்மாயிருக்கமுடியாது என்பதே இப்பதிவின் ஆதங்கம். நாடு போராட்டம் என்ற அடையாளங்களை இட்டுக்கொண்டு தான் எவரும் வேலை செய்யவேண்டும் என்பதில்லை. அனைவரும் ஈழத்தமிழர் என்ற அடையாளம் சார்ந்து பங்களிக்கப்பல வழிகள் உள்ளன. எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் பரபரக்க முடியாது. அவைஅவை அவைஅவைக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளட்டும். அனைவரும் ஈழத்தமிழர் என்ற எமது பொதுமையின் நலன்சார்ந்து பங்களிக்கக் கூடிய சில முயற்சிகள் எனக்குப்பட்டன. எமது போராட்டம் பற்றிய சிந்தனை மக்கள்மயப்படவேண்டும் என்ற முனையில், எனக்குப்பட்டவை பட்டவகையில் கீளே பகிரப்படுகின்றன:

1. வாழுகின்ற நாட்டை அதன் புதுமைகளை நடைமுறைகளை வெற்றி ரகசியங்களைப் புரிந்து கொள்ளுதல். இப்புரிதல்கள் சார்ந்து எம்மைப் பற்றிச் சிந்தித்தல்.

2. உலகின் அனைத்து மக்கள் சார்ந்தும், வெற்றி பெற்ற போராட்டங்கள், தோற்றுப் போன போராட்டங்களின் படிப்பினைகள் என நிறைந்து கிடக்கும் நாவல், கட்டுரை மற்றும் எழுத்துக்களை வாசித்துப் புரிந்து கொள்ளுதல். எமது வளரும் புரிதல்களிற்கேற்ப எம்மைப் பற்றிச் சிந்தித்தல்.

3. தங்கள் மட்டங்களில் கிழமைக்கு ஒரு தடவையோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவை ஈழத்தமிழனின் பொதுமை சார்ந்த தங்களது கருத்துக்களைப் பகிர்வதற்கான சந்திப்புக்களை எற்படுத்தித் தங்களிற்குள் பட்டதைப் பட்டபடி கதைப்பதற்கான ஒரு நாளினை ஒதுக்குதல். இந்நாள் மகிழ்வாய் இருப்பதற்கான மதுபானம் முதற்கொண்டு அனைத்தும் சேர்த்து ஒரு பாட்டி போன்று நடந்தாலும் இந்நாளில் தமிழனின் பொதுமை சார்ந்து மட்டுமே கதைப்பது என்ற வரைமுறையினை ஏற்படுத்திக் கொள்ளல்.

4. தங்களிற்கு நம்பிக்கையானவர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எழுதி விவாதித்தது ஆவணப்படுத்தி வைத்தல்.

5. தத்தமது மட்டங்களில் ஒருவருடத்திற்கு ஒருமுறையோ அல்லது வசதிப்பட்ட நேரத்திலோ தங்கள் சிந்தனைகளைப் புத்தமாக்கி வெளியிடல்.

6. வேற்று இனத்தவரோடு அனைவராலும் இரசிக்கப்படக்கூடிய எம் பொதுமை சார்ந்த விடயங்களைக் கலந்துரையாடுவதன் மூலம் எங்கள் ஆதங்கங்களை அபிலாசைகளைப் பதிவு செய்தல்.

7. ஈழம் முதலிய பாரிய வார்த்தைகளை விட்டு, அனைவரும் விளங்கும் பொதுமை சார்ந்த சமூக வியடங்களை மற்றையவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களிலும் மேடைகளிலும் சுவாரசியமாகக் கலந்துரையாடல்.

8. எங்களது பிரச்சினை என்ன என்பதைக் கூட நண்பர்கள் மத்தியில் அடிப்படையில் இருந்து ஆராய்தல். பிரச்சினையின் அடிப்படைகள், சாத்தியமான தீர்வுகள் பற்றிக் கதைத்தல்.

9. தங்கள் மட்டங்களில் விடயங்களைக் கதைத்து ஒரு தெளிவு நிலை அடைபவர்கள் அதை சமூக ஊடகங்கள் வாயிலாகச் சமூகத்துடன் பகிரவிழைதல். சுமூகம் துரோகி முத்திரை மறந்து கருத்துக்களைக் கேட்கத் தொடங்கல்.

10. எமது ஊடகங்கள் ஒன்று கூடி எமது பொதுமை பற்றி கருத்துப்பரிமாற்றங்களிற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.

11. ஈழத்தின் பொருளாதார மேப்பாடு, முதலீடுகளிற்கான உலகின் உத்தரவாதங்கள், முதலியன பற்றிய முனைதல்கள்.

மொத்தத்தில் போராட்டம் என்பதனை நடைமுறை வாழ்விற்கு அப்பாற்பட்ட யாகம் என்ற மனநிலை துறந்து வாழ்வோடு சேர்ந்து எமது உரிமைகளை எவ்வாறு நிலைநாட்டுதல் என்றவகையிலமைந்து முயற்சிகளும் தேடல்களுமே இன்று பெரும்பான்மைத் தமிழரைப் பங்காளர் ஆக்கவல்ல பிணைக்கவல்ல வழிமுறை ஆகமுடியும். இதை நோக்கி அடிப்படைகளில் இருந்து பல விடயங்கள் மீளத்தொடங்கப்படவேண்டிய தேவை மறுக்கமுடியாததாகவே எனக்குப் படுகின்றது.

இதைத்தானே ஒட்டு குழுக்கள் இப்ப செய்து கொண்டு இருக்கினம், தண்ணி அடிக்கினம், அரசியல் பேசுகினம், தொடர்ந்து ஆராச்சி செய்யினம்,ஈழம் ,புலிக்கொடி என்பதை மறக்க சொல்லிகினம். தமிழ் ஈழம் என்பது சாத்தியம் அற்றது என்கினம், தேசியக்கொடி இல்லாது போராட்டம் செய்ய சொல்லுகினம், சனத்தை பொறுத்தவரையும் மிகவும் தெளிவாக இருக்கினம், தேசியக்கொடி இல்லாதது என்று தமிழன் போராட்டம் செய்கிறானோ அன்றே அவன் தனது சுயத்தை இழந்து விடுகிறான், நடக்கும் போராட்டம் யார் செய்கிறான் யாருக்கு எதிராக செய்கிறான் என்பதை உலகத்துக்கு விளங்கபடுத்துவதிலேயே அவனது சக்தி விரயமாகி விடும், துரோகி என்பவன் என்றும் துரோகியே, ஒரு மக்கள் போராளி எப்போது வேணும் என்றாலும் துரோகி ஆகிவிட முடியும், ஆனால் துரோகி ஆனவன் எப்போதும் துரோகியே ,அவன் எக்காலத்திலும் ஒரு மக்கள் போராளி ஆக முடியாது. என்பதில் மக்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

...ோங்கையா உங்களது ஆராய்ச்சியும் சுய விமர்சனங்களும். உருப்படப்போவதில்லை தாங்கள். தமிழனை உருப்பட விடப்போவதுமில்லை.

விசுகு,

சுயவிசாரணைகள் அநாவசியமானவை என்ற அடிப்படையில் நீங்கள் இட்டுள்ள கருத்துடன் என்னால் ஏன் உடன்படமுடியவில்லை என்பதை நீங்கள் யாழ் களத்தில் இட்ட இரு விடயங்கள் சார்ந்து கூறலாம் என நினைக்கின்றேன்.

1. கிளிநொச்சியில் வாழும், தனது இரண்டு குழந்தைகளை போராட்டத்தில் இழந்த உங்களது சகோதரர் இயக்கம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்கள் சில சார்ந்து அவரை நீங்கள் எதிரியாகக்கருதியதாயும், எனினும் பின்னர் இயக்கத்துடன் உங்களிற்கிருந்த செல்வாக்குக் காரணமாய் அவரிற்கு நீங்கள் தேவைப்பட்டதாயும் கூறியிருந்தீர்கள். போராட்டம் பற்றி விமர்சனம் வைத்தவர் உங்கள் சகோதராயினும், அவர் தனது இரு பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தவர் ஆயினும் போராட்டம் பற்றிய உங்களிற்கு உடன்பாடில்லாத கருத்துக் கூறியதால் பிரான்சில் வசிக்கும் நீங்கள் அவரை எதிரியாகக் கருதியதாகக் கூறியிருந்தீர்கள்.

2. பிரான்சில் வாழ்கின்ற உங்கள் பிள்ளைகள் தாயகம் செல்லும் போது பிரான்சின் பழக்கத்திற்கேற்ற வசதிகள் இருக்கவேண்டும், வசதியின்மை சார்ந்து ஈழம்மீது அவர்களிற்கு வெறுப்பு வந்துவிடக்கூடாது என்று உங்கள் பிள்ளைகள் அங்கு கால்வைக்கும் முன்பே இங்கிருந்து அவ்வசதிகளைச் செய்துவிட்டு அவர்களைக் கூட்டிச் சென்றதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள்.

மேற்படி இரு கருத்துக்களையும் (அதுவும் முதலாவதோடு சேர்த்து இரண்டாவதைப் படிக்கையில்) எந்தவித சங்கடமுமின்றிக் கூறமுடிகின்ற உங்களிற்குச் சுயவிசாரணை தொடர்பில் இருக்கின்ற கருத்தினை என்னால் புரியமுடிகிறது ஆனால் எங்கள் போராட்டம் தொடர்பில் இவ்வாறன மனவமைப்பினை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. சுயவிசாரணை இருக்கும் பட்சத்தில் மேற்படி கருத்துக்களைக் கூறுமுன் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் போதாவது சற்றுத் தயக்கம் பிறக்கும், அவ்வாறான தயக்கம் ஆரோக்கியமான தமிழ் சமூகம் நோக்கி அனைவரிற்கும் ஏற்புடைய சமூகம் நோக்கி நடாத்தும் என்பதே எனது கருத்து.

நன்றி,

நன்றி உங்கள் வெளிப்படையான கருத்திற்கு.

Edited by Innumoruvan

உங்கள் பதிவுக்கு நன்றிகள் பிரான்சில் உள்ள சுகன் நான் இல்லை. நான் கனடாவில் இருப்பவன் பிரான்சுக்கு போனதும் கிடையாது.

இவ்வாறான வினாக்களிற்கு நீங்கள் பதில் அளிக்கத்தேவயில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இங்கு பகலவன் என்பவர் தன்னை யார் என்று கூறிக்கொண்டா யாழ் களத்தில் கருத்தாடல் செய்கின்றார்? பலரிற்கு கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தருணத்தில் தனிநபர் பற்றி ஆராய்ச்சி செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஏதாவது புலனாய்வுத்துறையில் வேலை செய்கின்றார்கள் போலும். :lol:

தண்ணியடிச்சு வாற வெறி விடிந்தால் போய்விடும் அடிக்காமலே இருக்கும் வெறிகள் பாரதூரமானவை.(பனாடிக்).எதையும் கண்மூடித்தனமா நம்பும்,செய்ய சொல்லும்.இதில் இருந்து தான் பயங்கரவாதம் உண்டாகின்றது.ஆனால் இது உலகம் எங்கும் வியாபித்துள்ளது.இதை இலகுவாக சொல்வதானால்"கண்மூடித்தனமாக நம்புவது" என்று கொள்ளலாம்.

எமது போராட்டத்திலும் பலர் இந்த நிலைக்கு உள்ளாகினார்கள்.இதனால் எதிரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் ,பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமே முன்னிறுத்தப்படுமே ஒழிய எதிரியை எப்படி வெல்லாலாம் என்று சமயோசிதமாக சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள்.

இன்றும் ராஜபக்சாவை கண்டவுடன் கூட்டமாக ஓடி துரத்த நினைப்பது அதனால் தான்.மனதில் ஒரு சிறு ஆத்மதிருப்தி.எதிரியை வெல்ல நாம் திட்டமிட்டு செயற்படவேண்டும்.அதுவே எமக்கு ஒரு நிரந்தர விடிவைத்தரும்.

கிணற்றை இன்னமும் அரை அங்குலம் வெட்ட நீர்வந்து விடும் என்றுதான் பலர் நம்பினார்கள்.நம்ப பண்ணினார்கள்.ஆனால் இதே போக்கில் வெட்டிக்கொண்டு போனால் தண்ணீரல்ல பூதம் தான் வரப்போகின்றது எனவும் பலருக்கு விளங்கியிருந்தது.இதை விளங்காமல் விட்டது தான் எமது இன்றைய நிலை.

.

உங்கள் பதிவுக்கு நன்றிகள்

பிரான்சில் உள்ள சுகன் நான் இல்லை. நான் கனடாவில் இருப்பவன் பிரான்சுக்கு போனதும் கிடையாது.

நன்றி சுகன் உங்கள் பொறுமையான பதிலுக்கு.

இவ்வாறான வினாக்களிற்கு நீங்கள் பதில் அளிக்கத்தேவயில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இங்கு பகலவன் என்பவர் தன்னை யார் என்று கூறிக்கொண்டா யாழ் களத்தில் கருத்தாடல் செய்கின்றார்? பலரிற்கு கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தருணத்தில் தனிநபர் பற்றி ஆராய்ச்சி செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஏதாவது புலனாய்வுத்துறையில் வேலை செய்கின்றார்கள் போலும். :)

கேள்வி கேட்கப்பட்டவரே பதிலளித்த பின்னர் உங்கள் கோபம் எதற்கு. சிலவேளைகளில் மாற்று கருத்து மாணிக்க சங்க தலைவரான உங்களிடம் கேட்டுவிட்டு தான் பதில் சொல்ல வேண்டும் என்று சட்டம் போட்டு வைத்திருக்கிறீங்களா. ?

சந்தேகங்களை தீர்பதற்கு எங்களை வெளிபடுத்த வேண்டிய தேவை இல்லை.

இன்னொமொருவன் உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கும், எங்கள் போராட்டத்தில் மக்களை ஒற்றுமை படுத்தவேண்டிய கடைபாட்டுகாக நீங்கள் எடுக்கும் சிரத்தையும் பாராட்டப்பட்ட வேண்டியது.

இருந்தாலும் நீங்கள் உங்கள் கருத்துகளை ஒரு பக்கம் மட்டுமே குற்றம் சாட்டுவது போல அமைந்த்துள்ளமை வருந்ததக்கது. மாற்று கருத்தாளர்களுடன் ஒற்றுமை ஏற்பட முதல் வழிமுறையாக நான் கருதுவது அவர்கள் புலிகளின்/மக்களின் கடந்த கால போராட்ட வழிமுறைகளை விமர்சிக்காது, புதிய வழிமுறைகளையும், புதிய தீர்வுக்கான நடைமுறையையும் விவாதிப்பதால் மட்டுமே சாத்தியம்.

அவர்கள் புதிய தீர்வுகளை முன்வைக்காது, புலிகளையும் புலிகளின் செயற்பாட்டாளர்களையும் விமர்சித்து தங்கள் கருத்துகளுக்கு ஆட்சேர்ப்பதால் தான் நீண்ட இடைவெளி காணபடுகிறது என்பது என் அபிப்பிராயம்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன..?

இரண்டாவதாக மாற்று கருத்தாளர்களுக்கும் இது போன்ற ஒரு கட்டுரையை அவர்களுக்காக வரைந்து அவர்களையும் ஒற்றுமைபடுத்த முயற்சிக்கலாமே..??

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

சுயவிசாரணைகள் அநாவசியமானவை என்ற அடிப்படையில் நீங்கள் இட்டுள்ள கருத்துடன் என்னால் ஏன் உடன்படமுடியவில்லை என்பதை நீங்கள் யாழ் களத்தில் இட்ட இரு விடயங்கள் சார்ந்து கூறலாம் என நினைக்கின்றேன்.

1. கிளிநொச்சியில் வாழும், தனது இரண்டு குழந்தைகளை போராட்டத்தில் இழந்த உங்களது சகோதரர் இயக்கம் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்கள் சில சார்ந்து அவரை நீங்கள் எதிரியாகக்கருதியதாயும், எனினும் பின்னர் இயக்கத்துடன் உங்களிற்கிருந்த செல்வாக்குக் காரணமாய் அவரிற்கு நீங்கள் தேவைப்பட்டதாயும் கூறியிருந்தீர்கள். போராட்டம் பற்றி விமர்சனம் வைத்தவர் உங்கள் சகோதராயினும், அவர் தனது இரு பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தவர் ஆயினும் போராட்டம் பற்றிய உங்களிற்கு உடன்பாடில்லாத கருத்துக் கூறியதால் பிரான்சில் வசிக்கும் நீங்கள் அவரை எதிரியாகக் கருதியதாகக் கூறியிருந்தீர்கள்.

2. பிரான்சில் வாழ்கின்ற உங்கள் பிள்ளைகள் தாயகம் செல்லும் போது பிரான்சின் பழக்கத்திற்கேற்ற வசதிகள் இருக்கவேண்டும், வசதியின்மை சார்ந்து ஈழம்மீது அவர்களிற்கு வெறுப்பு வந்துவிடக்கூடாது என்று உங்கள் பிள்ளைகள் அங்கு கால்வைக்கும் முன்பே இங்கிருந்து அவ்வசதிகளைச் செய்துவிட்டு அவர்களைக் கூட்டிச் சென்றதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள்.

மேற்படி இரு கருத்துக்களையும் (அதுவும் முதலாவதோடு சேர்த்து இரண்டாவதைப் படிக்கையில்) எந்தவித சங்கடமுமின்றிக் கூறமுடிகின்ற உங்களிற்குச் சுயவிசாரணை தொடர்பில் இருக்கின்ற கருத்தினை என்னால் புரியமுடிகிறது ஆனால் எங்கள் போராட்டம் தொடர்பில் இவ்வாறன மனவமைப்பினை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. சுயவிசாரணை இருக்கும் பட்சத்தில் மேற்படி கருத்துக்களைக் கூறுமுன் அல்லது எழுதிக்கொண்டிருக்கும் போதாவது சற்றுத் தயக்கம் பிறக்கும், அவ்வாறான தயக்கம் ஆரோக்கியமான தமிழ் சமூகம் நோக்கி அனைவரிற்கும் ஏற்புடைய சமூகம் நோக்கி நடாத்தும் என்பதே எனது கருத்து.

நன்றி,

நன்றி உங்கள் வெளிப்படையான கருத்திற்கு.

இருந்தாலும் நீங்கள் உங்கள் கருத்துகளை ஒரு பக்கம் மட்டுமே குற்றம் சாட்டுவது போல அமைந்த்துள்ளமை வருந்ததக்கது. மாற்று கருத்தாளர்களுடன் ஒற்றுமை ஏற்பட முதல் வழிமுறையாக நான் கருதுவது அவர்கள் புலிகளின்/மக்களின் கடந்த கால போராட்ட வழிமுறைகளை விமர்சிக்காது, புதிய வழிமுறைகளையும், புதிய தீர்வுக்கான நடைமுறையையும் விவாதிப்பதால் மட்டுமே சாத்தியம்.

அவர்கள் புதிய தீர்வுகளை முன்வைக்காது, புலிகளையும் புலிகளின் செயற்பாட்டாளர்களையும் விமர்சித்து தங்கள் கருத்துகளுக்கு ஆட்சேர்ப்பதால் தான் நீண்ட இடைவெளி காணபடுகிறது என்பது என் அபிப்பிராயம்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன..?

இரண்டாவதாக மாற்று கருத்தாளர்களுக்கும் இது போன்ற ஒரு கட்டுரையை அவர்களுக்காக வரைந்து அவர்களையும் ஒற்றுமைபடுத்த முயற்சிக்கலாமே..??

இதற்கான பதிலை பகலவன் மிகத்தெளிவாக இங்கு தந்துள்ளார் இன்னுமொருவன்

அதனால் அது பற்றி எழுதவிரும்பவில்லை.

ஆனால் நான் வேறு திரிகளில் எழுதிய இரு கருத்துக்களை இங்கு உதாரணப்படுத்தியிருப்பது தங்கள்மீதான எனது அபிப்பிராயத்தை மிகவும் தாழ்த்திவிட்டது. ஏதோ எல்லாம் படித்து ஆராய்ச்சி செய்யும் தங்களுக்கு வேறு திரிகளுக்கு எழுதிய அதுவும் அந்த திரிகளிற்கு ஒப்ப எழுதியவற்றை எடுத்துவந்து தங்களது திரிக்கு எழுதியதை மெழுக வாந்தி எடுத்திருப்பது அபத்தமான கருத்துப்பஞ்சத்தையும் உண்மை தங்களிடம் இல்லை என்பதையுமே காட்டுகிறது.

கருத்து 1. அவரது தற்போதைய நிலையை சொல்வதற்காகவே அக்கருத்து சொல்லப்பட்டது. அதையும் எழுதுங்கள்

கருத்து 2. ஏன் இங்கிருந்து போய் அங்கு வாழ விரும்புகிறார்கள் இல்லை என்பதற்கான திரி அது. எனது பிள்ளைகளையும் எனது தாய்மண்மீது பற்றுவைக்க நான் செய்யவேண்டியவை அவை. . மண்மீதும் போராட்டத்தின்மீதும் அவர்களை இணைக்க நான் செய்பவை இவை. உண்மையில் அந்த முயற்சியை உண்மையில் நீங்கள் பாராட்டியிருக்கவேண்டும்.

சுய விமர்சனம் என்பது ஊருக்கு உபதேசமல்ல நண்பரே

அது என்னிலிருந்து

பெற்றோர்கள்

சகோதரங்கள்

பிள்ளைகள்

உறவினர்

ஊரவர்

தேசியம் என்றே விரியும்

அதை நான் ஒழுங்காகவே செய்கின்றேன்

அத்துடன் எனது சகோதரனையே புடம்போட்டதால்தான் அவர் இன்று பிரபாகரனைத்தேடுகிறார். அதை ஏன் தாங்கள் வாசிக்காமல் விட்டீர்கள்.....???

Edited by விசுகு

  • தொடங்கியவர்

பகலவன்,

எமது மக்கள் எமது போராட்டம் பற்றி எவ்வாறு ஒன்றுபடலாம், இன்று ஏன் நாங்கள் ஒன்று பட்டுச் செயற்படவில்லை என்ற எனது ஆதங்கதை, இவ்வினத்துள் ஒருவனாக எனக்குப்பட்டதைப் பட்டதாக என்னினத்துடன் பதியப்படும் கருத்து புலி எதிர்ப்பு என்று முத்திரை குத்தப்படுவதைப் புரியமுடியவில்லை. கரகோசம் தான் எனது நோக்கமாக இருப்பின் நாலு வார்த்தை இங்கு கரகோசம்தரக்கூடியவர்கள் எதிர்பாhக்;கும் கோணத்தில் எழுதி மாபெரும் நாட்டுப்பற்றாளான என்னை நான் சித்தரிக்கலாம். ஆனால் எனது பிரச்சினை எம்மக்கள் ஏன் இன்னும் வெற்றி பெறவில்லை என்ற வலியில் இருக்கின்னறது. ஏதிலிகளாக இன்னும் எம்மக்கள் கேட்டுக்கேள்வியின்றி நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையைப் பற்றியது. ஒரு பிரச்சினை என்பது என்ன என்பதைப் புரிவதில் இருந்து தான் அதன் தீர்வு பற்றிய சிந்தனை ஆரம்பிக்கப்படக்கூடியது என்பதை பூரணமாக நான் நம்புகின்றேன். மேலும் உலகத்தை எங்கள் சார்ந்து மாற்றுவது எப்படி என்று சிந்திப்பதற்கு முன்னர் எங்களின் வளங்கள் முழவதும் எங்களிற்காக ஏன் பயன்படவில்லை என்று சிந்திப்பதை அவசியமாய்க் கருதுகின்றேன். மற்றவனைத் திருத்துவதைக் காட்டிலும் என்னைத் திருத்துவது இலகு என்பதால், என்னைச் சார்ந்து எனது பொதுமையான எனது மக்கள் சார்ந்து சிந்திக்க விழைகின்றேன், இவ்வகையில், எம்மக்களை எம்மக்கள் சார்ந்து விளங்கிக் கொள்ளத் தலைப்படுகையில் எம்மக்களின் குணாம்சங்கள் பற்றிப் பேசவேண்டியது அவசியப்படுவதாய் எனக்குப் படுகின்றது. என்னபை; பொறுத்தவரை புலிகள் என்பவர்கள் எங்களிற்குள் இருந்து எங்களிற்காகப் போராட எழுந்தவர்கள். எங்களிற்குள் இருந்து வந்தவர்களில் எங்களின் பலங்களோடு சேர்ந்து சில சமயங்களில் எங்களின் பலவீனமங்களும் தெரியலாம். ஆனால் இங்கு நான் பேசுவது புலிகள் பற்றியது அல்ல எங்களைப் பற்றியது.

மேலும் எனது சுயவிசாரணை என்பது என்னைச் சார்ந்து தான் அமையமுடியும். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ, எனது கடந்தகாலம் முழவதும் போராட்ட ஆதரவுத்தளத்துள் மட்டுமே அமைந்திருந்து , எனது உற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆதரவாளர்களாகவே அமைந்திருக்கும் நிலையில் என்னைச் சார்ந்தும் எனக்குத் தெரிந்தவர்களைச் சார்ந்தும் தான் என்னால் சுயவிசாரணை செய்யமுடியும். நீங்கள் கேட்கின்றீர்களே என்பதற்காக, எனக்குத் தெரியாத நீங்கள் குறிப்பிடும் அணிகள்; சார்ந்து சுயவிசாரணை ஒன்றை என்னால் எழுத முடியாது. அத்தோடு, நீங்கள் பாவிக்கும் மாற்றுக்கருத்து என்ற பதத்தோடு எனக்குப் பிரச்சினையில்லை. உங்கள் கருத்தாக நீங்கள் முன்வைக்கும் ஒரு கருத்து சார்ந்து, நீங்கள் அடையவிரும்பும் அதே இலக்கு நோக்கி இன்னுமொரு கருத்தை நான் முன்வைத்தால் அதனனை நீங்கள் மாற்றுக்கருத்து என்று தான் அழைக்கமுடியும். வுpவாதத்தில் விவாதிப்பவர்கள் அனைவரும் மாற்றுக்கருத்தாளர்கள் தான். அந்தவகையில் இப்பதிவ மாற்றுக் கருத்தாளர்களையும் சார்ந்தது தான். நான் நினைக்கிறேன் நீங்கள் கேட்பது, எதிரியின் நிகழ்ச்சிநிரலிற்கு அமைய எதிரியோடு சேர்ந்து எமது இனத்தின் நலன்களிற்கு எதிராக இயங்கும் நம்மவர்களைப் பற்றியது என்று. எனது பார்வையில் இவர்களும் எதிரிகள் தான். எதிரிகள் பற்றிச் சிந்திக்காது போராட முடியாது என்பதை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இந்தப்பதிவு எங்களைப் பற்றிப் பேசுவதற்காக மட்டும் அமைந்திருக்கின்றது.

விசுகு,

எப்போதும் கூட்டத்தில் கோவிந்தா போடும் வகையில் கருத்து எழுதுகிறீர்கள். பகலவன் எழுதிய கருத்திற்கும் நீங்களும் நானும் பேசிய கருத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதாய் எனக்குப் படவில்லை. மற்றும், எனது பதிவு ஒரு நொடியில் நடந்த ஒரு சம்பவம் பற்றியது செய்தி அல்ல. மாறாக, எமது இனம் என்ற பொதுமையின் தொடரும் சிந்தனை பற்றியது. அவ்வகையில், யாழ்களம் என்பதும் எமது பொதுமையின் சிந்தனைகளை, அதுவும் வருடக்கணக்கில் வெளிப்படும் சிந்தனைகளைத், தாங்கி வைத்திருக்கும் ஒரு ஆவணம். அவ்வகையில், இங்கு பேசப்படும் இனத்தின் சிந்தனை சார்ந்து, அதிலும் குறிப்பாகப் புலம்பெயர்ந்த சமூகத்தின் சிந்தனை சார்ந்து பேசப்படுவதற்கு, அதிலும் குறிப்பாக நீங்கள் தேவை இல்லை என்று கூறும் ஒரு விடயம் எதனால் தேவைப்படுகின்றது என்று காட்டுவதற்கு உங்களின் சிந்தனையாக இதே களத்தில் நீங்கள் பதிந்த கருத்துக்களைப் பாவிப்பது முற்றிலும் நியாயமானதாகவே எனக்குப் படுகின்றது. எனது சமூகத்தில் நான் அவதானித்தவற்றைப் பற்றி எழுதுவதைப்போன்றே, நீங்களும் எனது சமூகத்துள் ஒருவர் என்ற வகையில் உங்கள் சிந்தனையும் இந்த விவாதத்திற்கு ஏற்புடையது. ஆனால் முன்னர் ஒரு சிந்தனை இருந்தது என்பதற்காக என்றைக்கும் அச்சிந்தனையினை நீங்கள் மாற்றமுடியாது என்றோ மாற்ற மாட்டீர்கள் என்றோ நான் கூறவில்லை. சுயவிசாரணை என்பதே ஆரோக்கியமான சிந்தனை மாற்றங்களை நோக்கியது தான். அவ்வகையில் இங்கு உங்கள் கருத்து உங்களை காலாதிகாலத்திற்கும் ஒதுக்கி வைப்பதற்காகக் கூறப்படவில்லை, மாறாக சுயவிசாரணை ஏன்தேவைப்படுகிறது என்று சிந்தனைமாற்றம் வேண்டிக் காட்டப்படுகிறது.

அதாவது தனது குழந்தைகள் வசதியின்மை சார்ந்து தனது தயாகத்தை வெறுத்துவிடுவதற்கான சாத்தியம் உள்ளதை ஒரு தந்தையாயகப் புரிய முடிகின்ற உங்களிற்கு, தனது இரு குழந்தைகளையும் போராட்டத்தில் இழந்த உங்களது சகோதரரின் விமர்சனங்களை உள்வாங்கமுடியாது அவரிற்கு எதிரிப்பட்டம் குடுக்கும் அவசியம் எழுகின்றது. அது மட்டுமல்லாது தனது இரு குழந்தைகளையும் போராட்டத்தில் இழந்த ஒருவரை, அவரின் குழந்தைகள் போராடி இறந்த அதே போராட்டத்திடம் இருந்து விடுவிக்க புலத்தில் இருந்து சென்ற உங்களின் செல்வாக்குத் தான்; தேவைப்பட்டது என்று மார்தட்ட முடிகிறது. இவ்வாறான ஒரு நிலை அங்கிருந்ததா இல்லையா என்று நான் கூறவில்லை. மாறாக நீங்கள் கூறுகின்ற உங்களது சிந்தனை எனது பார்வையில் ஆரோக்கியமற்றதாகப் படுகின்றது என்றே கூறுகின்றேன். அதாவது தாயகத்தையும், அம்மக்களையும் எங்கள் போராட்டத்தையும் உண்மையில் நாங்கள் எங்களதாக, எங்களால் செய்ய கூடிய வகைகளில் சிந்திக்கவேண்டும் என்பதே இப்பதிவு. என்குழந்தையின் நலன் சார்ந்து தந்தையாகச் சிந்திக்க முடிபவன், எனது இனத்தின் விடுதலை சார்ந்து மற்றையவர்கள் பற்றி அவர்களது குழந்தைகள் பற்றியும் என்னால் செய்யக்கூடியன சார்ந்து, எனது பெறுமதிகள் சார்ந்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்குச் சுயவிசாரணை அவசியம் என்கிறேன்.

உங்கள் சகோதரர் இன்று பிரபாகரனைத் தேடுகிறாரா, முன்னர் தூசித்தாரா என்பது அல்ல இங்கு விவாதம். முhறாக உணர்வாளர்களின் மகுடமாக நீங்கள் உங்களைச் சித்தரித்தபடி, உங்கள் வீட்டில் நீ;ஙகள் சிந்திப்பதற்கு முற்றிலும் அந்நியமாக எவ்வாறு போராட்டம் சாhந்;து சிந்திக்கிறீர்கள் என்பதைக் கூறுவதற்காக மட்டுமே உங்களது கருத்துக்கள் காட்டப்பட்டன.

கருத்து / மாற்றுகருத்து

பொதுவாக பெரும்பான்மை மக்களால் விரும்பப்படுவது கருத்தாகவும்

அந்த பெரும்பான்மை மக்களின் எண்ணங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் மாற்றுகருத்துக்களாகவும் பார்க்கப்படுகின்றது.

எமது இன்றைய தாயக நிலைமையில் பெரும்பான்மை மக்கள் எமது வாழ்வியல் நிலைக்கவேண்டும் என்றால் நாம் ஏதோ ஒரு விதத்தில், அரசியல் ரீதியாக போராடியோ இல்லை மாற்று வழிகளை சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க தேடவேண்டும் என முயலுகிறார்கள். இந்த பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்வாங்கி இந்த வட்டத்துக்குள் இருந்து அதற்குள்ளேயே கருத்து விவாதங்களை வைத்து முன்னெடுப்பது ஒரு உண்மையான மாற்றுகருத்தாக மக்களால் பார்க்கப்படும்.

இந்த வட்டத்துக்குள் சேராமல், அந்த பெரும்பான்மை மக்களின் கருத்துக்களை உள்வாங்காமல், மாற்றுகருத்துக்கள் என்ற பெயரில் நடைமுறை சாத்தியமற்ற கருத்துக்களை வைப்பது விரைவில் பிசுபிசுத்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.