Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் குண்டு வெடிக்கும் ......

Featured Replies

"இலங்கையர்" ஆகுதல் பற்றிய மகிந்த சிந்தனை, குண்டு வெடிப்பைத்தான் இலங்கையில் திணிக்கின்றது

பெருப்பிக்கசிறுப்பிக்க

"இலங்கையராதல்" என்று, மகிந்தா எதைக் கருதுகின்றார்.

1.நாம் அனைவரும் சிங்களவராதல்

2.மகிந்த குடும்பம் நாட்டை ஆளுதல்

இதுவல்லாத எதையும், மகிந்தாவின் பாசிச சிந்தனை இன்று முன்வைக்கவுமில்லை, கோரவுமில்லை. ஆம் இதைத்தான் வடக்கின் "வசந்தமும்" கிழக்கில் "விடியலும்" திணிக்கின்றது. இதை வன்முறை மூலம், அடக்கி ஒடுக்கி உருவாக்கும் நடைமுறையும், அது சார்ந்த சிந்தனையும் தான் இன்று நாடு முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இந்த மகிந்த சிந்தனை தான், இன்று நாம் இலங்கையராக மாறத் தடையாக உள்ளது. தானும் தன் குடும்பமும் நாட்டைச் சுரண்டி ஆள நினைக்கும் சர்வாதிகாரம் முதல் சிங்களப் பேரினவாதத்தை கொண்டு சிறுபான்மை மக்களை ஒடுக்கி அழிக்கும் சிந்தனை வரை, மக்களை ஆளமாகப் பிளந்து விடுகின்றது.

இணக்கமற்ற, ஜனநாயகமற்ற வன்முறைகள் மூலம், அடக்கியாள்வதன் மூலம் சமூகப் பிளவுகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றது. நாம் இலங்கையராக இருக்க வேண்டும் என்றால், இலங்கையின் அரசியல் சமூகப் பொருளாதார சட்ட அமைப்பு இனம், மதம், பால், சாதி, வர்க்கம்.. கடந்தாக இருக்க வேண்டும்;. இதன் பொருள் மக்களை பிரித்தாளும் ஆட்சியமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும். யுத்தத்தின் பின் இலங்கையில் இனம், மதம், பால், சாதி, வர்க்கப்.. பிளவுகள் மேலும் மேலும் அதிகரித்துச் செல்லுகின்றது. முரண்பாடுகள் நுட்பமாகி கூர்மையாகின்றது. சமூகங்களையும், மக்களையும் இணைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க அரசியலும், அதற்கான முன்முயற்சியும் நடைமுறையில் கிடையாது. ஆனால் சமூக முரண்பாடுகள் கூர்மையாகின்றது. இந்த முரண்பாடுகள் தனிநபர் பயங்கரவாத வலதுசாரிய குண்டு வெடிப்பு மூலம் வெளிப்படும் பொதுச்சூழல் காணப்படுகின்றது. இது எந்த நேரத்திலும், எந்த வடிவிலும் வெடிக்கலாம்;. இதற்கு புலிகள் அவசியமில்லை. அரசின் இன்றைய நடவடிக்கைகளே போதுமானது. அவைகளை புலத்துப் புலிகள் உரிமை கோரி, பிழைத்துக் கொள்ளும் காலம் வரலாற்றின் முன் உள்ளது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

இதற்கு மாறாக நாம் இலங்கையராக இருக்க வேண்டும் என்றால், இந்த அரசு தன்னையும், தனது ஆட்சி நிர்வாக அலகுகளையும் மாற்றி அமைக்க வேண்டும். உழைத்து வாழும் மக்கள், தான் அல்லாதவனை ஒடுக்கி வாழ்வது கிடையாது. அந்த தேவை அவனுக்கு கிடையாது. அவன் தன்னையொத்த மற்றவனும் உழைத்து வாழும் வாழ்வில் இருந்து, மானம்கெட்ட வகையில் கையேந்தியோ அல்லது அடித்துப் பறித்தோ அல்லது ஏமாற்றியோ தின்பது கிடையாது.

யார் உழைத்து வாழவில்லையோ, அவன் தான் மற்றைய மக்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி, தன்னை மேன்மைப்படுத்திக் காட்டுகின்றான். மற்றவனை ஓடுக்கியும், தாழ்த்தியும், அவனின் உழைப்பை பிடுங்கித் தின்னுகின்றான். இனம், மதம், பால், சாதி, வர்க்கம்.. என்று எங்கும், இதை நாம் காணமுடியும். இந்த வகையில் அரசும், அரசு இயந்திரமும் இந்தப் பிளவில்தான் தன்னை முன்னிறுத்துகின்றது. மக்களின் ஒற்றுமையில் அல்ல. வேற்றுமையை அகலமாக்கி, அவர்களைச் சுரண்டி தாங்கள் ஆள்வதை உறுதி செய்வதே அரசின் போக்காக உள்ளது. நாம் இலங்கையராக, எம்மை நாம் ஆள்வது கிடையாது. ஒரு குடும்ப சர்வாதிகாரம் எம்மை ஆள்கின்றது.

இப்படி இங்கு குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவி பாசிசத்தை ஏவும் மகிந்த, நாம் "இலங்கையர்" என்று கூற வேண்டும் என்று கூறுவது எதை? தங்கள் குடும்ப ஆட்சியை ஏற்று, அனைவரும் சிங்களவராகி விட்டால், அனைவரும் பௌத்தர் ஆகிவிட்டால், நாம் அனைவரும் "இலங்கையர்" ஆகிவிடுவோம் என்கின்றார். ஆம் பௌத்த, சிங்கள பேரினவாதத்தை தங்கள் தலைமையில் நாடு முழுவதும் திணிப்பதைத்தான், அவர் "இலங்கையர்" ஆதல் என்கின்றார். மாறாக இனம், மதம், பால், சாதி, வர்க்கம்.. கடந்த இணக்கமான சமூகத்தை உருவாக்குவதன் மூலமல்ல.

சமூக பிளவுகளையும், மனிதப் பிளவுகளையும்; விரிவாக்கி, ஆதிக்கம் பெற்றவனுக்கு அடிமையாக அடங்கிப்போ என்கின்றது மகிந்த சிந்தனை. இதன் மூலம் தங்கள் அடையாளத்தை இழந்து, ஒடுங்கி அடங்கி வாழ்தலைத்தான் "இலங்கையர்" ஆதல் என்கின்றது மகிந்த சிந்தனை.

இந்த வகையில் தான், வடக்கில் (அதுவும் யாழ்ப்பாணத்தில்) சிங்களத்தில் தேசிய கீதத்தை பாடவைத்தல் மூலம் "இலங்கையர்" ஆதல் சாத்தியம் என்று மகிந்தா சிந்தனை கூறுகின்றது. பாசிசம் இப்படித்தான் "இலங்கையர்" ஆதல் பற்றி எல்லாம் சிந்திக்கின்றது. இதற்கு ஆமாப் போடும் நக்குண்ணிக் கூட்டம் துதிபாடுகின்றது. சொந்த மக்கள் மேல் அனைத்தையும் திணிக்கின்றது. அதிகாரத்தைக் கொண்டும், அடக்குமுறையைக் கொண்டும், அனைவரையும் "இலங்கையர்"ராக்க முனைகின்றது. நாட்டை ஆளும் அதிகார வர்க்கங்கள் முதல் அரசு இயந்திரம் வரை, இந்த வகையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரம்பற்ற அதிகாரம் மூலம் சட்டத்தின் ஆட்சி கூட சேடமிழுக்கின்றது.

இனமுரண்பாட்டை கடந்தகால பேரினவாதிகள் தான் உருவாக்கியதாக கூறிக்கொண்டவர்கள் தான், இன்று நாட்டை ஆள்பவர்கள். தாங்கள் அதைக் களைய முனைவதாக கதையளந்தவர்கள் தான், தொடர்ந்தும் இன முரண்பாட்டைக் கூர்மையாக்குகின்றனர். இணக்கமான இணங்கிய இனம் கடந்த மனித சிந்தனையும் வாழ்வையும் உருவாக்குவதற்கு பதில், இணக்கமற்ற வன்முறை மூலம் இனங்களை ஒடுக்கி இணக்கத்தை உருவாக்குவது பற்றி மகிந்த பாசிசம் கொக்கரிக்கின்றது. இதற்கேற்ப பெட்டைக் கோழிகளோ முட்டை போடுகின்றது. "அபிவிருத்தி அரசியல்", "இணக்க அரசியல்".. என்று முட்டையைக்காட்டி, மக்களின் விடுதலையை இனவழிப்பின் ஊடாக காட்டுகின்றனர். அகதி முதல் புனர்வாழ்வு பெற்ற புலிகள் வரை, வாழ வழியற்று கையேந்தி நிற்கின்றனர். சுனாமி முதல் முள்ளிவாய்க்கால்கள் வரை, மக்கள் சந்தித்த இழப்புகளில் இருந்து மீளவில்லை. அதை சொல்லித் திரட்டிய பணத்தில் கொழுத்த கூட்டம், மேலும் கொழுக்கின்றது. இப்படியிருக்கின்றன "அபிவிருத்தி அரசியல்", "இணக்க அரசியல்" முதல் பிழைப்புவாத "எதிர்ப்பு அரசியல்" வரை.

இந்த நிலையில் தேசியகீதத்தை சிங்களத்தில் பாடவைத்து இலங்கையராக்கும் முயற்சியில், சிங்களப் படைகள் முதல் தமிழ் மந்திரிகள் வரை தமக்குத்தாமே மாலைகள் அணிவித்தபடி பவனி வருகின்றனர்.

ஆம் திட்டமிட்ட குடியேற்றங்கள், திட்டமிட்ட பௌத்த ஆலயங்கள், இராணுவ சிவில் பேரினவாத ஆட்சி முதல் சிங்களத்தில் தேசிய கீதத்தை பாட வைத்தல் வரை, அனைத்தும் இன இணக்கத்துக்கு பதில் புதிய இனப் பிளவுகளை உருவாக்கி வருகின்றது. மீண்டும் குண்டு வெடிக்கும் என்பதை, இது தெளிவாக புலனாக்குகின்றது. மீண்டும் புலிகள் தேவையில்லை. அரசின் இந்த நடத்தைகள், குண்டை வைப்பதற்குரிய வெடிகுண்டுகள்தான். தனக்கு எதிராக குண்டை வைக்குமாறு, அரசு தன் சொந்த நடவடிக்கை மூலம் இன்று முடுக்கிவிட்டுள்ளது.

தனது குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவி நாட்டு மக்களை சுரண்டியும் ஒடுக்கியும் நிற்கும் அரசு, தன்னை தற்காத்துக் கொள்ள சமூக முரண்பாடுகள் தேவைப்படுகின்றது. மக்களை தன்சொந்த ஒடுக்குமுறையில் இருந்து ஏமாற்ற, மறுபடியும் குண்டு வெடிப்புகள் தேவைப்படுகின்றது. இனப்பிளவை விரிவாக்கி, இனவழிப்பை இணக்கமற்ற வழிகளில் திணிப்பதன் மூலம், ஏற்படும் முரண்பாடுகளையும் வன்முறையையும் கொண்டு நாட்டை பிளவுபடுத்தி தன்னை தற்காத்துக்கொள்ள முனைப்பாக இனவாத அரசு முனைகின்றது.

பி.இரயாகரன்

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரஜா அண்ணே என்ன கனவு கினவேதும் கண்டியளே ?

இதை தான் சைத்தான் வேதம் ஓதுறது எண்டுறது....

இது வரைக்கும் புலிப்பயங்கரவாதிகள், புலிப்பாசிச வாதிகள் எண்டு அதுக்கு காரணமாய் குண்டு வெடிப்புக்களை சொன்னவருக்கு இப்ப குண்டு வெடிக்க வேணுமாம்...

வருகுது வாயிலை...

  • தொடங்கியவர்

புலி எதிர்ப்பு அரசியலை. தமிழின அழிப்பு அரசியலாக செயற்படுத்திய மாமாக்களுடன் (மாற்றுக்கருத்து மாணிக்கங்களுடன்) இரஜாகரன் ஒப்பிடுவது எந்தளவிற்கு சரியாக இருக்குமோ தெரியவில்லை?? .. இரஜாகரன், கடந்த காலங்களில் சில விடுதலைப்புலி உறுப்பினரின் அரசியல் அறிவற்ற செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்! அதன் விளைவே அவரின் கடந்த கால பல எழுத்துக்கள்! ... ஆனால் எந்தக்காலத்திலும் இனவழிப்பிற்கு ஒட்டுக்கும்பல்கள் போல் சிங்களத்துடன் இணைந்து இயங்கவில்லை!

இவர்கள் போன்றோர்கள், இனியாவது காலத்தின் தேவையறிந்து செயற்பட முன் வர வேண்டும்! ... இது ஒரு ஆரம்பமா????

இது ஒரு ஆரம்பமா????

இல்லை.. காலம் கடந்த ஞானம்.

கரிகளால் கிறுக்கப்படும் தொடக்கக் கீறல்களை எரிச்சலுடன் அழித்த மூடர்கள் இந்த சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் என்பதை அறியாத பேதைகள். அத்திவாரமே பெயர்க்கப்பட்டுவிட்டது... இனி உங்கட உரிமைகள் எல்லாம் பகல் கனவுத்தான் போங்கோ

:)

பலர் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்போலிருக்கு,

சிலர் தாங்கள் பிடித்த புலிக்கு இன்னமும் மூன்று கால்கள்தானாம்.

இராயகரன் குமணனை வதைமுகாமில் ஒருமுறைகண்டதாக எழுதிய ஞாபகம்.

ஏன் தோற்றோம் என்பதற்கு சுயவிமர்சனம் செய்து பார்க்காவிட்டால் அடுத்தமுறையும் அழிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

கடைசியா எங்க கொண்டுபோய் கொட்டணுமோ

கொட்டியாச்சு..... :)

  • கருத்துக்கள உறவுகள்

வர்க்க முரண்பாடு; சோசலிசம்; சித்தாந்தம் இன்னம் 2 ;3 சொற்களை வைத்தே காலத்தை ஓட்டுறாங்கப்பா!புலிகளை அழிக்கும் வரை சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துவிட்டு இப்ப குண்டு வெடிக்க வேணுமாம்.எழுத்து மட்டும்தான் இவர்களின் வேலை.செயலில் ஒன்றும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

புலி எதிர்ப்பு அரசியலை. தமிழின அழிப்பு அரசியலாக செயற்படுத்திய மாமாக்களுடன் (மாற்றுக்கருத்து மாணிக்கங்களுடன்) இரஜாகரன் ஒப்பிடுவது எந்தளவிற்கு சரியாக இருக்குமோ தெரியவில்லை?? .. இரஜாகரன், கடந்த காலங்களில் சில விடுதலைப்புலி உறுப்பினரின் அரசியல் அறிவற்ற செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்! அதன் விளைவே அவரின் கடந்த கால பல எழுத்துக்கள்! ... ஆனால் எந்தக்காலத்திலும் இனவழிப்பிற்கு ஒட்டுக்கும்பல்கள் போல் சிங்களத்துடன் இணைந்து இயங்கவில்லை!

இவர்கள் போன்றோர்கள், இனியாவது காலத்தின் தேவையறிந்து செயற்பட முன் வர வேண்டும்! ... இது ஒரு ஆரம்பமா????

என்ன சொல்ல வருகின்றீர்கள்...அப்படி என்ன பாதிக்கப்பட்டு விட்டிருந்தார். 30 நாள் கூடத் தேறாத நிலையில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அது கூட விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவர் நடந்து கொண்ட முறைக்காக. தன்னுடைய சொந்தப் பிரச்சனையை வைத்து, ஒரு விடுதலைப் போராட்டத்தின் தேவை, அதன் தார்ப்பரியத்தை 21 வருடங்களாக உணர்ந்து செயற்பட முடியாதவர் கருத்தை வைத்து விடுதலைப்புலிகளின் அறிவற்ற செயல் என்று எப்படி எழுத முடியும்.அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு நியாயமாக இருந்தது??

தன்னை விளம்பரப்படுத்துவதிலும், தன் இருப்பை நிறுத்துவதற்காகவும் அவர் என்ன வேணுமாலும் கதைப்பார். அதை வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளைக் குறைவாக எழுதுவதை ஏற்க முடியவில்லை. இந்த விடுதலைப் போராட்டத்திற்காக பலர் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். தியாகத்தையும் செய்திருக்கின்றனர். அவர்களோடு ஒப்பிடக் கூட அருகதை அற்றவர் இவர்.

ஆயினும் இவரின் மன மாற்றம்( விளம்பரமற்ற நிலையில் இருப்பின்) வரவேற்கப்பட வேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் உள்ள கருத்திற்கு விமர்சனம் அல்லது அதை ஏற்றுக் கொள்கிறோம் அல்லது அதனை எதிர்க்கிறோம் என்று உங்கள் நோக்கில் தோன்றும் கருத்துக்களை இங்கு பதிவிட்டு விவாதித்தலே பண்பானது. கடந்த காலங்களின் கசப்புணர்வைத் தேக்கி வைத்து சாட்டையாகச் சொடுக்குவதில் எத்தகைய நன்மையும் இடம்பெறப்போவதில்லை. மாறாக பிளவுகளும் சர்ச்சைகளும் அதிகரித்து நாம் பலவீனப்படுத்தப்படுவதற்கு நாமே வழிகோலுவதாக அமைந்துவிடும். இன்றைய நாட்களில் எமக்கு வீரத்தைக் காட்டிலும் விவேகமே அதிகமான தேவையாக இருக்கிறது.

உண்மை
  • தொடங்கியவர்

என்ன சொல்ல வருகின்றீர்கள்...அப்படி என்ன பாதிக்கப்பட்டு விட்டிருந்தார். 30 நாள் கூடத் தேறாத நிலையில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அது கூட விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவர் நடந்து கொண்ட முறைக்காக.

தம்பி, விட்ட தவறுகளை ஏற்று திருத்துவதை விட்டு, ... ஒதுக்கி ஒதுக்கி பழகிய பழக்கம் ... இன்று தானும் செய்யாமல், மற்றவர்களையும் செய்ய விடாத நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது!!!! 30 நாள் தான் உள்ளுக்குள் இருந்தவர் அவர்!!! .... நீர் ஒரு நாட்பொழுது உள்ளுக்குள் இருந்தீர் என்றால் ... உமக்குத்தெரியும் அதன் வலி????

... இங்கும் சிலர், கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்துக்காக உழைத்து ... பின் குழி பறிப்பு/போட்டி/பொறாமைகளில் துரோகிகள் என பொய்ப்பட்டம் கட்டப்பட்டு ... அங்கு சென்று பங்கருக்களுக்குள் கிடந்து ... வந்து ... விரக்தி/கோபம்/வெறுப்பில் எதிராக செயற்பட்டனர். ஆனால் இன்று மீண்டும் சிங்களத்துக்கு எதிராக செயற்படத் தொடங்கியுள்ளனர். ... இன்றைய தேவை அவர்களை மட்டுமல்ல எல்லோரையும் அரவணைப்பதே!!! அதை விடுத்து ....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்து அவரணைப்பது போல இல்லையே. குற்றம் சாட்டுவது போன்றவல்லவா இருந்தது? அறிவற்ற செயல் என்ற விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டும்போது அதில் எங்கே, புரிந்துணர்வு, பண்ணாக்கு வரப் போகின்றது. முதலில் புரிந்துணர்வு வர வேண்டுமானால் அதை எவ்வாறு வரவைப்பது என்பது தொடர்பாகச் சிந்தியுங்கள். ஏன் என்றால் இங்கே, வார்த்தைகள் தான் அதைத் தீர்மானிக்கின்றன.

போராட்டத்தின் வலி எவ்வாறு என்பது எனக்கும் தெரியும். ஆனால் இராகரன் வெறுமனே பல்கலைக்கழகத்தில் குழப்பம் ஏற்படுத்தியதற்காகத் காவலில் வைக்கப்படவில்லை என்பது அவருக்கும் தெரியும். தவிர, அவர் சொல்வது போன்று அவர் மீது நடந்து கொள்ளவில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

தன் தாயை யாரோ புலி உறுப்பினர் திட்டினாராம் என்றும் புலி எதிர்ப்புக் கதைப்பார். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை புலிகளைத் திட்டிக் கொண்டு எப்படிப் புரிந்துணர்வுடன் கதைக்க முடியும்.

வலைப்பூக்களில் கட்டுரை வரைவதைத் தவிர என்ன அப்படி தமிழ்த் தேசியப் போராட்டத்தில் அவர் இணைந்து விட்டார் என்று பட்டியலிடமுடியுமா?

தமிழ் ஊடகங்களில் போராட்டம் நடத்தும் உங்களின் போராட்டம் வாழ்க!

  • தொடங்கியவர்

தம்பி தூயவன், கண்டதுக்கும் உள்ளுக்குள் போடுவதும்/மண்டையில் போடுவதும் அறிவான செயல்தான் உமது பார்வையில்!!! நான் குறிப்பிட்டது விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களை!

உசுப்பேத்துவதென்றால் பலருக்கு கைவந்த கலை.

நாட்டில் நடந்தது எதுவுமே இவர்களுக்கு தெரியாது போல்தான் உள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட குமணனையாவது தெரியுமா?

இராயகரன் என்ன குற்றம் செய்தார்? 84,86 காலகட்டங்களில் யாழ் பல்கலைகழகங்களில் படித்தவர்களை கேட்டால்தெரியும் சரித்திரம்.

படித்த, படிக்கின்றவர்களிலேயே பொறாமை கொண்ட ஆயுதத்தைமட்டும் நம்பிய கும்பல்.

எப்போதே தெரியும் இவர்களுக்கும் அதே ஆயுத்ததால் தான் அழிவென்று.

கொடிகாட்டி சீன் காட்டுவதைவிட்டு முதலில் மக்களை,ஒவ்வொரு உயிரையும் நேசிக்க பழகுங்கள்.

அதற்குள் ஒருவர் ஒவ்வொரு போராளியின் உயிரும் 1000 மக்களுக்கு சமனாம்.போராட்டமே மக்களுக்காகத்தான்.

பள்ளிகூடம் படித்தால் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உங்களுக்கு பல விடயங்கள் நாணயத்தின் ஒருபக்கமாகவே பார்த்துப்பழகிவிட்டது. நானும் முன்பு உங்களைப்போல் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து அதுதான் முழுமை என்று கடுமையாக நின்றிருக்கிறேன். அது எப்போது என்றால் சருகுகளின் வாய்மொழியை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த காலம்மட்டும் அதையே முழுமையென்றும் உண்மையென்றும் இருந்த காலமும் உண்டு. எப்போது இலட்சியத்தால் உயர்ந்தவர்களையும், உன்னதமானவர்களையும் சந்தித்தேனோ அப்போதே அத்தவறை படிப்படியாக திருத்தினேன் என்பதைக்காட்டிலும் வன்னியின் மையப்பகுதியால் திருத்தப்பட்டேன். உங்களைப் போல் எல்லோரையும் தூக்கி எறி என்று அவர்கள் எனக்குச் சொல்லித்தரவில்லை. எல்லோரையும் அரவணை என்பதனையே கற்றுத்தந்தார்கள். அங்கிருந்து மற்றவர்களை மதிக்கப்பழக்கினார்கள். எதிராளியின் கருத்தையும் உள்வாங்கி அதற்கான தெளிவுகளை உருவாக்க எத்தனை பாடுபட்டார்கள். கடந்த காலங்களில் புலிகளால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களைத் தேடிப் பேசினார்கள். தொடர்ந்தும் முரண்பாடுகள் வளராமல் நட்புறவை ஏற்படுத்தி தாயக மக்களுக்கு ஒரு சுதந்திரமான விடுதலையை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொண்டு செயற்பட்டார்கள். தாயக விடுதலையில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சி என்பது பாரியது. அவர்களுக்குள் இருந்த இறுக்கமான சட்டதிட்டங்களே அவர்களை முன்னணி சக்தியாக வளர்த்திருந்தது. அதற்காக மற்றவர்கள் தாயகத்தை மீட்கப் போராட எத்தனிக்கவில்லை என்று மட்டம் தட்டுதல் ஆகாது. வழிகாட்டிகளின் தடுமாற்றம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் விடுதலை வேட்கையைச் சாகடித்துவிட்டது. அல்லது உங்களைப்போல் மட்டந்தட்டி நோகடிக்கும் சமூகத்தின் பங்கு அவர்களை ஓரங்கட்டிவிட்டது. விடுதலைப் புலிகள் பரந்த அரசியலை முன்னெடுக்க தளத்தில் நின்று மிகமிகப் பாடுபட்டார்கள். உங்களைப் போல புலம்பெயர்ந்தவர்கள் இன்னும் குறுகிய அரசியலையே வைத்திருக்க அதீத ஆர்வத்துடன் முற்படுகிறீர்கள். மாறவேண்டும் வன்னியில் புலிகளின் தலைமைத்துவத்தால் முன்னெடுக்கப்பட்ட பண்புகளைத்தன்னும் மதிக்கப்பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்துவதென்றால் பலருக்கு கைவந்த கலை.

நாட்டில் நடந்தது எதுவுமே இவர்களுக்கு தெரியாது போல்தான் உள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட குமணனையாவது தெரியுமா?

இராயகரன் என்ன குற்றம் செய்தார்? 84,86 காலகட்டங்களில் யாழ் பல்கலைகழகங்களில் படித்தவர்களை கேட்டால்தெரியும் சரித்திரம்.

படித்த, படிக்கின்றவர்களிலேயே பொறாமை கொண்ட ஆயுதத்தைமட்டும் நம்பிய கும்பல்.

எப்போதே தெரியும் இவர்களுக்கும் அதே ஆயுத்ததால் தான் அழிவென்று.

கொடிகாட்டி சீன் காட்டுவதைவிட்டு முதலில் மக்களை,ஒவ்வொரு உயிரையும் நேசிக்க பழகுங்கள்.

அதற்குள் ஒருவர் ஒவ்வொரு போராளியின் உயிரும் 1000 மக்களுக்கு சமனாம்.போராட்டமே மக்களுக்காகத்தான்.

பள்ளிகூடம் படித்தால் தானே?

சந்தில பூந்து சிந்து பாடுறது உங்களுக்கு கைவந்த கலைபோல.....

படிப்பு மட்டும் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடுமா?

70 இற்கு முன்னர் படித்தவர்கள் .... இனத்திற்கான விடுதலையைப் பெற்றுத்தந்திருக்கலாம்தானே.....

  • கருத்துக்கள உறவுகள்

பலர் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்போலிருக்கு,

சிலர் தாங்கள் பிடித்த புலிக்கு இன்னமும் மூன்று கால்கள்தானாம்.

இராயகரன் குமணனை வதைமுகாமில் ஒருமுறைகண்டதாக எழுதிய ஞாபகம்.

ஏன் தோற்றோம் என்பதற்கு சுயவிமர்சனம் செய்து பார்க்காவிட்டால் அடுத்தமுறையும் அழிவோம்.

பி.இரயாகரன்

இவருக்கு மகிந்தவின் காசு போய்ச்சேரவில்லை போல. புலி எதிர்ப்பு புராணம் பாடியவர் திடீரென் இவருக்கு ஞானம் பிறந்து விட்டது போல.

புலிகள் சுயவிமர்சனம் செய்யத்தயார்.பிழைகளில் இருந்து கற்கவும் தயார். ஆனால் முன்னாள் போராளிகள் என (ஒரு தரம் காறித்துப்பி விட்டு :) ) கூறிக்கொள்பவர்கள் தற்போதும் மக்களை கடத்தி கொலை செய்து அரசுக்கு சேவகம் செய்பவர்கள் தமது தவறை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வார்களா என அறிய ஆவல்.

இது செவிடன் காதில் ஊதிய சங்கு என்றாலும் ஒரு முயற்சிதானுங்க.

உசுப்பேத்துவதென்றால் பலருக்கு கைவந்த கலை.

நாட்டில் நடந்தது எதுவுமே இவர்களுக்கு தெரியாது போல்தான் உள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட குமணனையாவது தெரியுமா?

இராயகரன் என்ன குற்றம் செய்தார்? 84,86 காலகட்டங்களில் யாழ் பல்கலைகழகங்களில் படித்தவர்களை கேட்டால்தெரியும் சரித்திரம்.

படித்த, படிக்கின்றவர்களிலேயே பொறாமை கொண்ட ஆயுதத்தைமட்டும் நம்பிய கும்பல்.

எப்போதே தெரியும் இவர்களுக்கும் அதே ஆயுத்ததால் தான் அழிவென்று.

கொடிகாட்டி சீன் காட்டுவதைவிட்டு முதலில் மக்களை,ஒவ்வொரு உயிரையும் நேசிக்க பழகுங்கள்.

அதற்குள் ஒருவர் ஒவ்வொரு போராளியின் உயிரும் 1000 மக்களுக்கு சமனாம்.போராட்டமே மக்களுக்காகத்தான்.

பள்ளிகூடம் படித்தால் தானே?

மன்னிச்சுக்கொள்ளுங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கேல்ல. படிப்புத்தான் படிச்சனான். அதால எனக்கு கணக்கு சரியா வராது. உங்கள மாதிரி 30 வருட படிப்பெல்லாமில்ல. சும்மா ஒரு 10 வருசம் தான். :) :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தில பூந்து சிந்து பாடுறது உங்களுக்கு கைவந்த கலைபோல .....

படிப்பு மட்டும் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடுமா?

70 இற்கு முன்னர் படித்தவர்கள் .... இனத்திற்கான விடுதலையைப் பெற்றுத்தந்திருக்கலாம்தானே.....

அவர் பாவம்

கன வருடங்களாக தனது கருத்துக்கு அல்லது தனது நிலைக்கு எவராவது ஆமாம் போடமாட்டார்களா என ஏங்குகிறார். யாராவது எமக்குள் சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்துவிடுவார். இரண்டில் ஒன்றாவது தனக்காக பாடும் என்று. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் இதுவரை இங்கு கருத்து எழுதுபவர்களுக்கு அவர் தனது நிலையையோ தனது கொள்கைகளையோ தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியோ சொன்னதில்லை. சொல்வதற்கு அவரிடம் ஏதுமில்லை என்பதுதான் உண்மை.

நான் எல்லோருடனும் அரவணைத்துப்போகும் கொள்கையுடையவன். அதன்பால் பலமுறை இவரைக்கேட்டுவிட்டேன். சொல்லுங்கள் என்ன செய்யலாம். அடுத்த கட்டம் என்ன என்று...? ஆனால் அரைத்தமாவையே அரைப்பதுபோல் தொடர்ந்து புலிக்காய்ச்சலில் எவரைத்தாக்குகின்றோம் எந்த திசையில் நடக்கின்றோம் . போகும்வழியின் வரைபடமே இல்லாத புலத்தல்கள் மட்டும்தான்.

இன்றும் 31 டிசம்பர் 2010 கேட்கின்றேன். சொல்லுங்கள் எப்படி நாம் தொடர்ந்து பயணிக்கலாம். அடுத்தவருடம் ஒன்றாய் பயணிக்கலாம். வாருங்கள் ஒத்தூதக்கேட்கவில்லை. உங்களின் பங்கு என்ன ..? எனது பங்கு என்ன...?

சொல்லுங்கள்.

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.83 கலவரம் குடுத்த வலி அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது.தலைமைகளின் கோளாறால் சிங்கள அரசை எதிர்க்க புறப்பட்ட பலர் தனது இயக்கத்திலிருந்தும்,மாற்று இயக்கங்களில் இருந்தும் தப்புவதே பெரும் பாடாகிவிட்டது.உலகம் முழுக்க இயக்கத்திலிருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக கதைசொல்வார்கள்.86,87 களுடன் மாற்று இயங்கள் ஓரளவு இல்லாமலே போய்விட்டது இருந்தும் அவர்களை விட்டு இருந்தவர்களைகூட வேட்டையாடுவதில் புலிகள் முள்ளிவாய்கால் வரைதொடர்ந்தார்கள்.

இதனாலேயே வெளிநாடுபோகமுடியாதவர்கள் தமது இருப்பிற்காக அரசுடன் சேர்ந்தார்கள்.டக்கிளஸ்சரி,கருணாசரி முதலில் ஈ.என்.டீ.எல் உடன் தான் இணைந்தார்கள் பின்பு தான் அரசுடன் சேர்ந்தார்கள்.

தமிழனின் ஒற்றுமையை புலத்திலும்,புலம் பெயர்ந்த இடங்களிலும் குலைத்ததற்கு முழுக்காரணமும் புலிகளேதான்.தம்முடன் வராத எவனும் துரோகி.நாட்டிலென்றாலும் பரவாயில்லை புலம் பெயர்ந்த ஜனநாயக நாட்டிற்கு வந்தும் அதைதொடர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இங்கு கருத்தெழுதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால் தான் இந்த நிலமை.

சந்தில பூந்து சிந்து பாடுறது உங்களுக்கு கைவந்த கலைபோல.....

படிப்பு மட்டும் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடுமா?

70 இற்கு முன்னர் படித்தவர்கள் .... இனத்திற்கான விடுதலையைப் பெற்றுத்தந்திருக்கலாம்தானே.....

எல்லாம் தெரிந்தது போல எவ்வளவு பொய்களை இயாகரன் எடுத்து விட்டவர் எண்டு கீழை இருக்கும் தலைப்பை ஒரு தடவை போய் பாத்து முடிவெடுங்கோ... ! இவர்களா மாறுவார்கள் எண்டுறீர்கள்...

அப்பட்டமான புலிக்காச்சல் மட்டும் தான் மே 19 வரைக்கும் இவர்களால் வைக்க பட்டது... இண்று புலி இல்லை எண்டதும் சிங்களத்தை அல்ல மகிந்தவை மட்டும் சொறிகிறார்கள்... ! மகிந்த இல்லாது போனால் எல்லாம் சரி வந்துவிடும் எண்டது தான் இவர்களின் கோசம்...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6541:2009-12-15-13-30-48&catid=277:2009

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.83 கலவரம் குடுத்த வலி அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது.தலைமைகளின் கோளாறால் சிங்கள அரசை எதிர்க்க புறப்பட்ட பலர் தனது இயக்கத்திலிருந்தும்,மாற்று இயக்கங்களில் இருந்தும் தப்புவதே பெரும் பாடாகிவிட்டது.உலகம் முழுக்க இயக்கத்திலிருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக கதைசொல்வார்கள்.86,87 களுடன் மாற்று இயங்கள் ஓரளவு இல்லாமலே போய்விட்டது இருந்தும் அவர்களை விட்டு இருந்தவர்களைகூட வேட்டையாடுவதில் புலிகள் முள்ளிவாய்கால் வரைதொடர்ந்தார்கள்.

இதனாலேயே வெளிநாடுபோகமுடியாதவர்கள் தமது இருப்பிற்காக அரசுடன் சேர்ந்தார்கள்.டக்கிளஸ்சரி,கருணாசரி முதலில் ஈ.என்.டீ.எல் உடன் தான் இணைந்தார்கள் பின்பு தான் அரசுடன் சேர்ந்தார்கள்.

தமிழனின் ஒற்றுமையை புலத்திலும்,புலம் பெயர்ந்த இடங்களிலும் குலைத்ததற்கு முழுக்காரணமும் புலிகளேதான்.தம்முடன் வராத எவனும் துரோகி.நாட்டிலென்றாலும் பரவாயில்லை புலம் பெயர்ந்த ஜனநாயக நாட்டிற்கு வந்தும் அதைதொடர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இங்கு கருத்தெழுதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால் தான் இந்த நிலமை.

உம்மள மாதிரி எதுக்கெடுத்தாலும் புலிக்காய்ச்சல்ல வாந்தியெடுக்கறவங்கள எனி துரோகி என்டு சொல்லுறத விட மனநிலை சரியில்லாதவை எண்டு தான் எனி சொல்லோணும். புலியும் அழிஞ்சுட்டுது. இப்ப கூட ஊரில படிச்சுதுகள் படிக்காததுகள் எண்டு போட்டுத்தள்ளுறாங்கள். அதைப்பற்றி கதைக்க காணேல்ல. வந்திட்டார் பழைய குப்பைகளை நோண்டிக்கொண்டு.

அது சரி ஊரில போய் கணக்கெடுத்தனீரோ மாற்று இயக்கத்துக்காரரை. எனக்குத்தெரிய ஒழுங்கா இருந்தவங்களை புலி ஒருக்காலும் போட்டுத்தள்ளேல்ல. ஆக காட்டிக்கொடுத்ததுகளும் தமிமினத்திற்கெதிராக செயற்பட்ட முன்னாள்களைத்தான் போட்டவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட பலவேளைகளில் மற்றவர்கள் மனம்நோக எழுதிவிட்டேனோ என மனவருத்தப்படுவதுண்டு.

போராவந்த மாற்றுஇயக்க உறுப்பினர்களை கேட்டால் அல்லது மாற்று இணயங்களை வாசித்தால் பல உண்மைகள் விளங்கும்.இந்தியாவிற்கு கப்பலேறிய பலருக்கு பிரபா,உமா,சிறியென்றால் யாரென்று தெரியாது.83 கலவரம் குடுத்த வலி அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது.தலைமைகளின் கோளாறால் சிங்கள அரசை எதிர்க்க புறப்பட்ட பலர் தனது இயக்கத்திலிருந்தும்,மாற்று இயக்கங்களில் இருந்தும் தப்புவதே பெரும் பாடாகிவிட்டது.உலகம் முழுக்க இயக்கத்திலிருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக கதைசொல்வார்கள்.86,87 களுடன் மாற்று இயங்கள் ஓரளவு இல்லாமலே போய்விட்டது இருந்தும் அவர்களை விட்டு இருந்தவர்களைகூட வேட்டையாடுவதில் புலிகள் முள்ளிவாய்கால் வரைதொடர்ந்தார்கள்.

இதனாலேயே வெளிநாடுபோகமுடியாதவர்கள் தமது இருப்பிற்காக அரசுடன் சேர்ந்தார்கள்.டக்கிளஸ்சரி,கருணாசரி முதலில் ஈ.என்.டீ.எல் உடன் தான் இணைந்தார்கள் பின்பு தான் அரசுடன் சேர்ந்தார்கள்.

தமிழனின் ஒற்றுமையை புலத்திலும்,புலம் பெயர்ந்த இடங்களிலும் குலைத்ததற்கு முழுக்காரணமும் புலிகளேதான்.தம்முடன் வராத எவனும் துரோகி.நாட்டிலென்றாலும் பரவாயில்லை புலம் பெயர்ந்த ஜனநாயக நாட்டிற்கு வந்தும் அதைதொடர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இங்கு கருத்தெழுதும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களால் தான் இந்த நிலமை.

புலிகளை விடுங்கள்

தாங்கள் நேசிக்கும் ஐனநாயத்தைக்கொண்ட ஒரு இயக்கத்தினுடைய பெயரைச்சொல்லுங்கள்.

அங்கு புலிகளுக்கு தப்பிவந்தவர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் இங்கு வந்து என்ன செய்தார்கள் என்று எமக்குத்தெரியும்.

அவர்களின் செயற்பாடுகளையும் குழிபறித்தல்களையும் செய்பவர்களைக்குறிவைத்து தடுத்தல்களையும் மீறி இன்றும் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது புலி போட்ட உயிர்ப்பிச்சையே தவிர அவர்கள் துளியளவும் தமிழருக்கான தமது குழிபறிப்புக்களை நிறுத்திமையால் அல்ல.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில் இங்குள்ள பொறுப்பாளருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் காரமான வாதங்கள் இடம்பெறும். பலமுறை கேட்டிருக்கின்றேன். நான் புலியல்ல. என்னை இயக்கத்தை விட்டு விலத்துங்கோ. அந்த நாயைப்போட்டுட்டு உள்ள போறன் என்று தொண்டர்கள் புலம்புவதை. அந்த அளவுக்கு இங்கு வேலை செய்பவர்களுக்கு இடைஞ்சல்கள் செய்தவர்கள் தான் அங்கு புலிகளுக்கு தப்பி இங்கு வந்தவர்கள் த. அதேநேரம் உன்னை விலத்தினாலும் நீ செய்தால் புலி செய்தது என்றுதான் வரும் என்று அந்த பொறுப்பாளர் கெஞ்சுவதையும் கேட்டுள்ளேன்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.