Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கஞ்சா''

Featured Replies

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

  • Replies 51
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவு நல்லாயிருக்கு

வரவேற்கின்றேன் தங்களை...

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

தூற்றுதல் ஒழி

நேர்படப் பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியிற் கலங்கேல்

செய்வது துணிந்து செய்.

பனங்காய்க்கு ஆதியின் முதல் மரியாதை. :rolleyes:

கிழமைக்கு ஓரிரு கஞ்சா (I mean கஞ்சா பீடி) புகைப்பது தேக ஆரோக்கியத்திற்கு நலம் என்று சித்த மருத்துவக் குறிப்புகளில் வாசித்த ஞாபகம். மற்றும் கஞ்சா துளிரை அரைத்து ஆட்டு இறைச்சி கறியுடன் சமைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும் என வாசித்த ஞாபகம். :blink:

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

  • தொடங்கியவர்

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

:lol:

நானும் யோசித்தனான்...

  • கருத்துக்கள உறவுகள்

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன.

கஞ்சாவில் உள்ள வேதியல் நரம்பு மண்டலத்தில் செல்வாக்குச் செய்வதால் நீங்கள் அதற்கு அடிமையாவதோடு மட்டுமன்றி உங்கள் நரம்பு மண்டலம் சிறுகச் சிறுக அதன் இயல்பை இழக்கும். இதனால் உங்களின் மரணத்தை நீங்கள் விரைந்து அழைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டு போதையூட்டும் பொருட்களை கையில் எடுக்கலாம்.

இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த குளிசை மருந்துமாத்திரையள்ளை என்ன கலந்து கிடக்கெண்டு ஆராவது உள்ளதை சொல்லுறியளே?

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

போதையில் ஏது அளவு..?கொஞ்சம் குடித்தால் என்ன அதிலே மூழ்கிக்கிடாந்தாலென்ன..எல்லாமே போதைதான்..கஞ்சா குடி ஆனால் கொஞ்சமாகக்குடிக்கலாம் என்பது கொலை செய்யலாம் ஆனால் நோகாமல் கொலை செய் என்பது போல் உள்ளது...மனிதனை அடிமையாக்கும் ஒரு கொடிய போதைப்பொருள் இந்தக்கஞ்சா இதனால் பலகுடும்பங்கள் சீரழிகின்றன..முதலில் கொஞ்சமாக பொழுதுபோக்கிற்கு ஆரம்பிப்பவர்கள் பின்னர் அதற்கு அடிமையாகி சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாகின்றனர்..கஞ்சா குடித்திருக்கும்போது தற்காலிகமாக சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள்.அதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ளவற்றை செயலாக்க முனைவார்கள்..இதனால் பல விபரீதங்கள் நேருகின்றன...இவ்வளவு கொடிய ஒரு போதைப்பொருளை குடித்து ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமா? சிரித்து வாழவேண்டுமா..? பிறர் சிரிக்க வாழவேண்டுமா..?கஞ்சா குடிப்பவர்களே..குடிக்க நினைப்பவர்களே..அதை விற்பவர்களே சிந்தியுங்கள்..வாழ்வதற்கே தானே நாம் இந்த மண்ணில் பிறந்தேம்..அந்த வாழ்க்கையை வீணாக்கலமா.?மடிந்து விழும் மரம் கூட விறகாக வீழ,வாழ்ந்து விழும் மனிதன் போதையில் விழுந்து வெறும் மண்ணாவதா?

தேடிக்கஞ்சா தினம் குடித்து

தெருச்சண்டை பல செய்து

வேடிக்கை மனிதராய் உலாவி

வெறும் வீணராய் வாழ்ந்து

யாருக்கும் உபயோகமற்று

யாவரும் வெறுக்க

பேருக்கு வாழ்ந்துவிட்டு

பெருஞ்சுமையாய் இருந்துவிட்டு

மானமில்லா மனித விலங்காய்

மண்ணில் விழலாமோ?

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும் போதை பொருளும் வேறு என்றே நினைக்கிறேன். படிக்கிற காலத்தில் கஞ்சா அடிச்சு பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கஞ்சா அடிச்சால், சிரிச்சு கொண்டு இருப்பினம் எண்டு கேள்வி பட்டு இருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடிச்சு பார்த்திட்டு சொல்லுறேன். :wub:

கஞ்சா மர்ஜுவானா சூஸ்தி கட்டு கிறாஸ் என்று மென்மையான போதைப் பொருட்களை மருந்து கடைகளில் வாங்குவதற்கு சில நாடுகளில் அரசே அனுமதித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு மருந்தாக மட்டும் பாவிப்பதற்கு. மாறாக இதற்கு அடிமையாகக்கூடிய ஆபத்துமுண்டு.

  • தொடங்கியவர்

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன..

http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif )

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

Edited by Panangkai

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது.

இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

  • தொடங்கியவர்

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன. இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

மூடநம்பிக்கை.. விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

அட்லீஸ்ட் பெரிய படிப்பு படிக்க அறா விலை கொடுத்து வந்திருக்கிறோம்..? :lol:

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

  • தொடங்கியவர்

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

  • தொடங்கியவர்

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்:

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன.. ஒண்டும் ஒண்டும் ரெண்டு. (நெருப்பு நீலமேகம் போஸ்டை கவனிக்கவும்... :lol: )

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சொந்த உபயோகத்துக்கு மட்டும் பாவிக்கலாம். விதைகள் உபகரணங்கள், சாதரணமாக விற்பனைக்குண்டு. கடைகள் தொடக்கம் ஒன்லைன் சைட்க்கள்... ஈ-பேய் வரை சாதரணமாக வாங்கி வீட்டுக்குள் பயிர் செய்யலாம்.

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? பரதேசியாகத்தான் முடியும்..என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..! வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

மாசத்துக்கு 2 3 தரம் கடந்த 8 வருடங்களாக.. இந்த ரேஞ்சில், இன்னுமொரு 20 வருசம் கழித்து கொக்கோயின் நக்கலாம் எண்டு இருக்கிறேன்

:rolleyes:

221734_1.jpg

ஒரு நாளைக்கு ஒரு பேகர் சாப்பிட்டவர் இப்படித்தான் கெபாப், கறி, சோறு, கிரிஸ்ப் எண்டு கொட்ட வெளிக்கிட்டு இப்ப நிலமையை பாருங்கோ..

மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரிக்கும் பல விடயங்களில் முக்கியமானது... கட்டுப்பாடு.

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மெய்யல்ல. தீர அறிந்து உணர்வதே உண்மை. :lol:

அப்டீயா? :lol:

Edited by Panangkai

  • தொடங்கியவர்

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..!

வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

உங்கல் குழந்தைகளுக்கு சாராயமும் சிகரட்டும் வாங்கிகொடுப்பீர்களா?

முதல் பந்தியில் உள்ள மிச்சத்துக்கு... வெல்கம் டு இன்டெர்னெட் ரெவலூஷன் அன்ட் குளோபலைஷேஷனுங்கோ..

ரோமர் இங்கிலாந்தில் செய்யதய்யா.. இங்கிலாந்துக்காரன்.. இராக்கில்,இலங்கையில் செய்துவிட்டான்? உலக வாழ்வியல் படிமுறை என்டால் என்ன எண்டு தெரியும்தனே?

2ம், 3ம் பந்திக்கு.. அப்டீயா?

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.