Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்..

Featured Replies

கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்..

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மெல்ல மெல்ல உயிர்க்கவும் சுதந்திரமான கலை இலக்கிய மாநாடுகள் நடத்தவும் உரிமை¨ உள்லவர்கள். ஆனால் அத்தகைய மாநாடுகளின் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்ப் பட்டதல்ல.

தமிழ் பேசும் மக்களான ஈழத் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக தமிழர்களின் மையம் புலம் பெயர்ந்த நாடுகளல்ல இலங்கைத் தீவு என்பதில் எனக்கும் சோபா சக்திக்கும் ஒத்த கருத்தே உள்ளது. ஈழத் தமிழரது இறைமை அடிப்படையில் புலம் பெயர்ந்த தமிழர்களது கையிலல்ல தாய் மண்ணில் வாழும் மக்களது கையில் மட்டுமே உள்ளது என்பதுதான் எனது உறுதியான நிலைபாடு. அவர்களது வாழ்வு மீண்டும் அந்த மண்ணில் முழுமையாக உயிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஈழத்து தமிழ் பேசும் மக்களது கலை இலக்கிய சமூக அரசியல் நடவடிக்கைகள் இலங்கைத் உயிர்த்தெழுவதை இடம் பெறுவதை நான் எப்பவும் ஆதரிப்பேன். குறிப்பாக ஒடுக்குதலுக்கும் போர்குற்றத்துக்கும் ஆளாகி நலிந்த தமிழரது வாழ்வு முழுமையாக உயிர்த்தெழ வேண்டும் சகல கலை இலக்கிய மற்றும் சமூக அரசியல் நடவடிக்கைகள் மக்கள் வழும் புலத்தில் மீண்டும் துளிர்க்க வேண்டும். இந்த அடிப்படையில் எழுத்தாளர் மாநாடு ஒன்று இலங்கைத் தீவில் நடைபெறுவதை நான் எதிர்க்க முடியாது. ஆனால் மக்களுக்கெதிரான போர்குற்றங்கள் நிகழ்ந்த காலக்கட்டத்தின்பின் இடம் பெறும் ஒரு எழுத்தாலர் மாநாடு சுதந்திரமான எழுத்தாளர்களின் சுதந்தரமான ஒன்றுகூடலாக இடம் பெற்றால் மட்டுமே நான் அதனை ஆதரிப்பேன் வரவேற்ப்பேன். அதுபற்றி இப்பவே என்னால் சாதகமாகவோ பாதகமாகவோ ஊகிக்க முடியவில்லை. என்னுடைய மதிப்புக்குரிய எழுத்தாள தோழர்கள் பலர் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். என்னைப் போன்றவர்களை வளர்த்த தோழர்களுள் ஒருவரான டோமினிக் ஜீவா மாநாட்டு பக்கத்தில் இருக்கிறார். என்னுடைய வேறு சில தோழர்கள் மாநாட்டை அரசியல் நோக்கம் பற்றிய கேழ்விகளோடு எதிர்க்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை விவாதங்கள் மூலம் அணுகும் மனோபாவம் இன்மைதான் எமது கடந்த கால இன்னல்களுக்கு அடிப்படையாகும். நாம் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நினைக்க விரக்தியாக உள்ளது. இரண்டு பக்கத்திலும் கலை இலக்கியம் சம்பந்தப் படாத உள்நோக்கம் உள்ளவர்களது ஊடுருவல் உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

இனவெறி அரசின் போர்குற்றங்களுக்கும் வழிதவறிய நடவடிக்கைகளாலும் பாதிக்கப் பட்ட நம் மக்கள் மீழ் உயிர்தெழும் காலம் இது. இக் கட்டத்தில் குறுங்குழுவாத அணுகுமுறை எமக்கு உகந்ததல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஆனாலும் உருவாக வேண்டிய கூடிய பட்ச ஐக்கிய முன்னணிச் சூழல் என்பது ஒருபோதும் அரசியல் சரணாகதியல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இரு தரப்பிலும் எழுத்தாளர்களல்லாத அரசியல் வாதிகள் வைக்கும் உள்நோக்கமுள்ள அரசியல் விவாதங்களை நான் ஆதரிக்கவில்லை.

மேற்படி அறிக்கையில் மாநாட்டு அமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் 12 அம்ச முன்னோக்குகளும் ம்கச் சரியானவை என்கிற கூற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசிடம் எழுத்தாளர்களுக்கான சலுகைகளுக்கு கையேந்துகிறது இன்றைய முன் உரிமையல்ல. அரசியல் கைதிகளாகவும் போர்க் கைதிகளாகவும் உள்ள புதுவை இரத்தினதுரை போன்ற கலைஞர்களை விடுதலை செய். அகதிகளாகவும் ஏதிலிகளாகவும் உள்ள கலைஞர்களதும் மக்களதும் வாழ்வுரிமைகளை பறிக்காதே என்கிற கோரிக்கைகளைத்தான் இன்று முன்னிலைப் படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் மாநாடுபற்றி எங்கள் எங்கள் விவாதத்தை நாம் வைப் பதற்குள்ள உரிமையைப் போலவே முன்னணி எழுத்தாளர் எஸ்.பொன்னுதுரைக்கும் குமுதம் றிப்போட்டர் புதிய ஜனநாயகம் போன்ற பத்திரிகைகளுக்கும் மாநாடு தொடர்பான எதிர் விவாதங்களை முன் வைக்க உரிமை உள்ளது. அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம் என்கிற நிலைபடு எனக்கு உடன்பாடானதல்ல..

இந்த மாநாட்டை நிராகரிக்கக் கோரி வெளியிடப் படுகிற அறிக்கைகள் வாதத்துக்குரியவை. அவற்றை விவாதத்துக்கு உட்படுத்துவதற்க்குப் பதிலாக நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என்கிற கூற்றும் எனக்கு உடன்பாடில்லை.

இரண்டு தரப்பினரும் ஊகங்களின் அடிப்படையில் இயங்குவதாகத் தெரிகிறது. போரினாலும் போரின் வெற்றி தோல்வியாலும் நமது வாழ்வு நொருக்கப் பட்டுக் கிடக்கும் இந்த சூழலில் அவசியமான பரந்து பட்ட ஐக்கிய முன்னணிக்கு எதிரான குறுங்குழு வாதங்கள் இத்தகைய ஊகங்கள் முன் முடிவுகளின் அடிப்படையாக மேலோங்குவது துயரம் தருகிறது. நான் உண்மைக்கான அவகாசம் வளங்கப் படுவதையே விரும்புகிறேன். தயவுடன் எனது பெயரை பட்டியலில் இருந்து அகற்றி விடுங்கள்.

உண்மையுடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் - கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நடந்து முடிஞ்சுது.. இப்ப ஏன் இப்படி ஒரு இணைய அறிக்கை.

எல்லாரும் நல்லா நாடகம் போடுறாங்கப்பா.

முழுக்க நனைந்த பின்னர் மொக்காடு எதற்கு...??! :lol::D

ம்ம்ம்ம்.... அவளை தொடுவான் ஏன்?, கவலை படுவான் ஏன்?? .....

... இங்கு யாழில் இருந்தும் பாண்டர், சமாதானம், ... போன்ற நாலைந்து கையெழுத்து இட்டு இருக்கினம், அவர்கள் இடத்தான் வேண்டும்!! ஏனெனில் அப்படி செய்யத்தான் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், சிங்களத்தினால் ..... உதுக்குள் நீங்கள் ஏன் போனீர்கள்???????

... ஒரு சிறிய சந்தேகம், தவறாயின் மன்னித்தருளுக ... யாழ்கள கரும்பாரும் கையெழுத்து இட்டு இருக்கிறார் போல் உள்ளது!

வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு நண்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்...

இந்த கூட்டம் தேவையானது துரோகம் மிக்கது இது இரண்டையும் தாண்டி தமிழர்களுக்குள் இது பிரிவினையை உண்டு பண்ணியது என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டமைக்காக...

தமிழர்கள் ஒண்றாக இணைந்து எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தடை சொல்வது எனக்கு நாகரீகமாக தெரியவில்லை... பாதகமானது எண்றாலும் துரோகிகள் எண்று சொல்லப்படுதவதையும் ஏற்றுக்கொள்ள இல்லை... !

காலம் கடந்து தன்னும் ஒரு முடிவை முதல் ஆளாக எடுத்து நிக்கும் ஜெயபாலன் அவர்களை பாராட்ட வேண்டும்...

ஒற்றுமைக்காக உழைக்க வேண்டுகின்றேன்...

எல்லாம் நடந்து முடிஞ்சுது.. இப்ப ஏன் இப்படி ஒரு இணைய அறிக்கை.

எல்லாரும் நல்லா நாடகம் போடுறாங்கப்பா.

முழுக்க நனைந்த பின்னர் மொக்காடு எதற்கு...??! :lol::D

இரட்டைவேட இலக்கியவாதிகள் அற்ப பிரபலயம் தேடும் முறைகளில் இதுவும் ஒன்றோ? .

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்.... அவளை தொடுவான் ஏன்?, கவலை படுவான் ஏன்?? .....

... இங்கு யாழில் இருந்தும் பாண்டர், சமாதானம், ... போன்ற நாலைந்து கையெழுத்து இட்டு இருக்கினம், அவர்கள் இடத்தான் வேண்டும்!! ஏனெனில் அப்படி செய்யத்தான் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், சிங்களத்தினால் ..... உதுக்குள் நீங்கள் ஏன் போனீர்கள்???????

இவர்கள் போய் எந்த விடயம் உருப்பட்டது. :D காலம் கடந்து என்றாலும் வாபஸ் பெற்றமைக்கு கவிஞருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்.... அவளை தொடுவான் ஏன்?, கவலை படுவான் ஏன்?? .....

... இங்கு யாழில் இருந்தும் பாண்டர், சமாதானம், ... போன்ற நாலைந்து கையெழுத்து இட்டு இருக்கினம், அவர்கள் இடத்தான் வேண்டும்!! ஏனெனில் அப்படி செய்யத்தான் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், சிங்களத்தினால் ..... உதுக்குள் நீங்கள் ஏன் போனீர்கள்???????

... ஒரு சிறிய சந்தேகம், தவறாயின் மன்னித்தருளுக ... யாழ்கள கரும்பாரும் கையெழுத்து இட்டு இருக்கிறார் போல் உள்ளது!

இரண்டு பேர் சேர்ந்து... எழுதின கடிதம் அது என நினைக்கின்றேன்.

நீங்கள் கீழே... கையொப்பத்தை கவனிக்கவில்லையா... :rolleyes:

கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்..

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார்.

---------

உண்மையுடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் - கலைஞன்

Edited by தமிழ் சிறி

ஆடுகளத்திற்கு பின் தன்னை கலைஞன் என்று விளிக்க விரும்புகின்றாரோ தெரியவில்லை.

ஜெயபாலன் எப்போது தான் தனது முடிவுகளை தெளிவாக எடுத்தார்.நோர்வேயில் நடந்த ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில் பாலசிங்கத்திடம் ஜெயபாலன் கேள்வி கேட்டத்தற்கு பாலசிங்கம் கொடுத்த பதிலை முடிந்தால் பார்க்கவும்.

கையெழுத்து: பண்டார வன்னியனின் படை நடந்த காடு - இரவி பரமேஸ்வரி

முன்னுரை: பாயிரம் ஓன்று

'ஆயிரம் பாட்டெழுதி அத்தனைக்கும் பொருள் எழுதி பாயிரமும் எழுத' இங்கு நான் வரவில்லை. மனதில் தைத்த துக்கமுள்ளின் சிறுவலியை பதிய இங்கு வந்தேன்.

உக்கிப் போன கயிற்றை கட்டி ஊஞ்சலாட முயல்கின்றனர் எம் வன்னி பெருநிலத்தின் பிள்ளைகள் சிலர்.

'துக்கம் என் முகத்தில்

இருண்டு கிடக்கும்

அதை சொல்வேன்

கேள் மகனே

சோகத்தின் படர் தாமரை

முகத்தில் அரிக்கும்

கதை சொல்வேன்.....'

கதையா இது? மனம் கனக்கும் துயர். நம் ஈழ நாட்டின் வளம் வன்னி. வெற்றி வன்னி. இப்போ தோற்றும் துவண்டு போனதும், வீழ்ந்து மடங்கிப் போனதும் அதே வன்னி.

இந்த சூழல் சிலரை அலைக்கழிக்கிறது. காற்றில் பறக்கும் சருகாய் அல்லாட வைக்கிறது. அலைக்கழிக்கப்பட்ட தலைச்சுற்றலில் ஏது செய்கிறோம் எனத் தெரியாது வன்னிப் பிள்ளைகள் சிலர் தடுமாறிச் சாய்கின்றனர்.

ஜனவரி மாதம் அளவில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது. சிங்கள அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிங்களம் சார்ந்த தமிழ் எழுத்தாளர் கூட்டிய மாநாடு இது. ஈழத் தமிழ்த் தேசியத்தையோ, அதன் இறைமையையோ இம் மாநாட்டிற்கு முண்டு கொடுத்தோரும், ஆதரித்தோரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது எமது பிரச்சினையும் அல்ல.

ஆனால் அதிக காலம் செல்லவில்லை. இலங்கைத் தீவில் பாரிய இனப்படுகொலை நிகழ்ந்து பல்லாயிரக்கணக்கில் எமது மக்களை நாம் இழந்தோம். அது உலகின் மிகக் கொடூரமான இனப்படுகொலை.

அந்த இனத்தில் இருந்து சென்ற இந்த எழுத்தாளர்கள் தம் இன மக்களின் குருதிச் சேற்றின் மீதும், புதைகுழிகளில் மேல் நின்றும் இந்த மாநாட்டை நடத்தியுள்ளார்கள்.

அவர்கள் அதைத்தான் செய்வார்கள். அப்படிச் செய்வதுதான் அவர்கள் வழக்கமும், பழக்கமும். ரோம் பற்றி எரிகின்றபோது பிடில் வாசிக்கின்ற நீரோ மன்னர்கள் இவர்கள்.

வேறெவரும் உட்புகமுடியாத சிங்கள தேசத்திலே, அதன் தலைநகரிலே தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது என்றால் யாருடைய அனுசரணையின் பேரில் அது நிகழ்ந்தது. சுலபமாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றை விளங்க முடியாதவர்களை எப் பெயர் கொண்டு அழைக்கலாம்?

முன்னர் நிர்மலா நித்தியானந்தன் என்று அறியப்பட்டு, இப்பொழுது நிர்மலா ராஜசிங்கம் என்று சொல்லப்படுபவர் எண்பதுகளில் கவிதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தார்.

'எப்படிப் பாடுவோம்?

அந்நியரின் கால்கள்

எங்கள் நெஞ்சிலே

பதியும் போது

எப்படிப் பாடுவோம்?'

இம் மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கைவிட்ட நிர்மலாவிடம் இப்பொழுது ஒரு கேள்வி. 'எப்படிப் பாடப் போகிறாய்?' நாங்கள் என்ன செய்தோம்?

கண்ணனின் இசையுடன் கூடிய அவ் வரிகளை எங்கள் நெஞ்சில் பதுக்கி வைத்தோம். சமயம் வரும்போது அவ் வரிகள் பீறிட்டுப் பாய்ந்து கிளம்புகின்றன. 'எப்படிப் பாடுவோம்?'

இம்மாநாட்டிக்கு ஆதரவாக ஒரு 'கும்பல்' அறிக்கை ஒன்று விட்டிருக்கின்றது. அதில் சிலர் கையெழுத்திட்டிருக்கின்றனர். நான் இரசிக்கின்ற மூன்று எழுத்தாளர்களின் கையெழுத்துக்களும் அதில் இருக்கின்றன. வ.ஜ.ச ஜெயபாலன், ஷோபா சக்தி, த.அகிலன் ஆகியோரே அம்மூவர். இதில் ஷோபா சக்தியைப் புறம் தள்ளுகின்றேன். எப்பொழுதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அரசியலிலும், இலக்கு, வேலைத்திட்டம், தீர்வு என்று எதுவும் இல்லாத அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.

மற்றைய இருவரும் வன்னியின் பிள்ளைகள். அதுவே என் பெரும் துக்கம். வன்னியின் வீறு இவர்களில் படியவில்லையா? த.அகிலனைக் கூட இதில் விட்டுவிடலாம். அவர் அரசியலிலும், அத்தனையிலும் குழந்தைப் பிள்ளை. அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

வ.ஜ.ச.ஜெயபாலன் இருக்கிறாரே! நாடறிந்த பெரும் கவிஞர். இக்கட்டுரைத் தலைப்பின் வரியும்; அவருடையது. முன்னர் சீனசார்பு கொம்யுனிஸ்ற்றுகள் சிறீமாவோவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்பதற்கு நக்கலாக 'சிறீமாவோயிஸ்ற்றுகள்' என்று எழுதியவர் ஆயிற்றே.

இவ்வன்னியின் பிள்ளைகளுக்கு வன்னியின் பலம், வீரம், ஓர்மம், வீராப்பு இவை குறித்துக் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. இவை பற்றிக் கொஞ்சம் பாட வேண்டி இருக்கிறது. எனக்குத் தெரிந்தவற்றிலிருந்தும் நிலாந்தன் எழுதிய 'வன்னி மாண்மியம்' இலிருந்தும். வ.ஜ.ச.ஜெயபாலனின் கவிதைகளில் இருந்தும் இரந்தும், உவர்ந்தும் பெற்று இதனை எழுதுகிறேன்.

பாயிரம் இரண்டு

வன்னித் தேக்க மரத்தின் வலிமை பற்றி இனிச் சொல்வேன்.

'அடங்காப் பற்று என்று அழைக்கப்பட்ட வன்னிப் பெருநிலம் எப்பொழுதும் பகைவருக்கு அடங்கிக் கிடந்ததில்லை. யாழ்ப்பாணத்து அரசுகள் வீழ்ந்து படும் போதெல்லாம் ஆட்சி மையம் இயல்பாகவே வன்னிப் பெருநிலத்துக்கு நகர்ந்து விடும் அல்லது பகை சூழ்ந்த போதெல்லாம் தமிழரசின் உயிர்ச் சூட்டைப் பெருநிலமே ஒளித்து வைத்திருக்கும். அங்கிருந்துகொண்டு பகைவரின் மீது விடாது போர் தொடுக்கப்படும். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்தியர், என்று படையெடுத்து வந்த எல்லாப் பகைவருக்கும் வன்னிப் பெருநிலம் ஒரு பொல்லாத கனவாய்த்தான் முடிந்திருக்கிறது.' (நிலாந்தன் - வன்னி மாண்மியம்)</p>

இவை குறித்து மேலும் விளக்க ஒன்றுமில்லை. இரு கண்களும் ஒளிர்ந்து, இரு கைகளும் முறுக்கேறி, இரு தோள்களும் புடைத்து, இரு கால்களும் வேகம் கொண்ட வீரம் வன்னி ஆடவருக்கு மாத்திரமல்ல, வன்னி பெண்டிருக்கும் உரியது. வெல்லப்பட முடியாத மக்களாக அவர்கள் திகழ்கிறார்கள்.

வன்னியில் புவி அமைப்பு வலுமிக்கது. அன்பான பெருங்கடல், அதனை அண்டிய பெரும் காடு, (இதனால் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த இராணுவ வெற்றிகள் குறித்து கருணா பிரிவின் போது தராகி சிவராம் நல்ல கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களில் குறிஞ்சி தவிர ஏனைய மூன்று நிலங்களும் வன்னியில் உண்டு. குறிஞ்சி இல்லை எனலால் ஆறும் இல்லை எனலாகாது. பாலியாறு பெருகும் தரை வன்னி.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வவுனிக்குளம் உண்டாயிற்று. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் என்ற தமிழன் வவுனிக்குளத்தை கட்டியதென்று சொல்வார்கள்.

கனகராயன் குளத்தில் மழை பெய்தால் வவுனிக்குளம் நிரம்பும். வவுனிக்குளம் நிரம்பினால் பாலியாறு பெருகும். பாலியாறு பெருகினால் பாலியம்மாள் உருக்கொள்வாள். பாலியம்மாள் உருக்கொண்டால் படை திரளும், படை பெருகும், போர் மூளும், வீரம் விளையும், வெற்றி கிட்டும்.

அவ்வீர மக்களே வன்னி மண் காட்டின் இரகசியங்களை சொல்லிக் கொடுத்தபடி நட்டாங்கண்டல் காட்டில் சிதைந்த தன் அரண்மனைக்குள் ஒளித்து வைத்திருக்கும் போர்வாளினை எடுத்து வெளிவருகிறான் பண்டார வன்னியன். முரட்டுக் குதிரைகளின் குளம்போசை காட்டை நிறைக்க உடுக்கும் பறையும் சேர்ந்து முழங்கி உருவேற்ற நித்திகைக் குளத்தில், தண்ணீரூற்றில், நந்திக்கடலில் குதிரைகள் வேகமாய் பாய்கின்றன. குளம்போசை தேய்ந்து அழிகின்றது.

பனங்காமத்து காட்டை விலக்கி சிறுத்தையும், யானையும் மிரண்டு ஓட கைலாய வன்னியன் போருக்கெழுந்தான்.

அமைதியாக பாலியாறு நகர்கிறது. ஆற்றங்கரை மணலில் வன்னியனின் படை நடந்த அடிச்சுவடு இன்னும் அழியவில்லை. வன்னியன் தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்குதலைத் திட்டமிட்டு, புழுதி படிந்திருந்த கால்களைக் கழுவி, நீர் அருந்தி, வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் பாலியாற்றின் மருதமர நிழலில் சற்றே கண்ணயர்கிறான் வன்னியன்.

கற்சிலை மடுவில் பண்டாரவன்னியன் காத்திருந்து தாக்கப்பட்டான். தனியொருவராக நின்று வாள்வீச்சில் அறுபது தலைகளைக் கொய்தவனான வன்னியன் வெள்ளைக்காரத் தளபதி 'ட்றிபேர்க்' கிடம் தோற்றுப் போனான். தப்பி ஒடி காட்டின் மறைவிடம் ஒன்றின் காயங்களினால் இறந்தான்.

மன்னவா நான் வைத்தது திலகம் அல்ல. இது அடங்காப்பற்று. வண்ணப் பெண்களின் மானத்தைக் காக்கும் உங்கள் வீரத்தைப் பறைசாற்ற இட்ட குருதித்திலகம்' - இளவரசி குருவிச்சி நான்.

பண்டார வன்னியனின் பின் வன்னியை ஒரு பெண் அரசாண்டாள். அவள் குருவிச்சி நாச்சியார். வன்னியனின் மறைவின்போது நாச்சியார் கற்குளத்தில் இருந்தாள். அவள் வழிபட்ட சிவன் ஆலயத்தில் துர்க்குறிகள் தோன்றின. தோல்வியை அவளால் தாங்க முடியவில்லை. நிராசையாலும், கோபத்தினாலும் அவள் இதயம் நொருங்கியது.

'மன்னவர் பண்டார வன்னியர் அவர்களே, உங்களைப் போலவே வன்னி மண்மீது மிகுந்த பற்றுக் கொண்டவள். குருவிச்சி வன்னியின் மானத்தை காக்க வேண்டும் என்ற வன்மம் கொண்டவள்தான் இளவரசி குருவிச்சி'' -தோழி செங்கமலம்.

தோழி செங்கமலத்தின் கூற்று குருவிச்சி நாச்சியாரின் கோபத்தை காட்டுகிறது. குருவிச்சி என்ன செய்தாள்? பெருந்தீயை மூட்டினாள். ஆபத்தில் தன் சகோதரனுக்கு உதவாத அறுபத்து நான்கு கிராமங்களின் பெயர்களை ஓலையில் எழுதி அந்தத் தீயிலே போட்டாள். சபித்தாள். பிறகு அந்தத் தீயில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். அவள் சாபம் ஊர்களின் மீது குலைப்பன் காய்ச்சலாக வந்ததென்று ஒரு கதை கூறும்.

இதற்கு இன்னொரு கதையும் உண்டு.

'மன்னர் பண்டார வன்னியர் இந்த மண்ணில் எமது மக்களிடையே மீண்டும் ஒருநாள் திரும்புவர். அப்போது இந்த வன்னி மண்ணுக்கு விடிவு வரும். கணவராய் அவரை நினைத்து விட்டேன். அதுவும் மண்ணைக் காக்கும் வீரனை, அவர் கடமை உணர்ச்சியை, மண்ணில் மேலுள்ள பக்தியை. இனி அவர் எண்ணம்தான் என் எண்ணம்' -இளவரசி குருவிச்சி நாச்சியார்.

குருவிச்சி நாச்சியாரை பண்டார வன்னியனின் சகோதரி என்று ஒரு கதை சொல்ல, மறு கதை காதலி என விளம்புகிறது. எதுவோ வன்னி மண்ணில் ஆணும், பெண்ணும் ஒத்த வீரம் விளைத்தவர் என்ற கதையே யான் சொன்னேன் நிற்க.

மன்னர் பண்டாரவன்னியர் ஆங்கிலேயருடன் போரிட்டு மாவீரர் ஆனார் என்பதை கேள்வியுற்;ற இளவரசி குருவிச்சி ஆங்கிலேயரின் கொடூரங்களும், சித்திரவதையும் தன்னை நோக்கி விரையும் என்பதை தெரிந்து, நஞ்சு கொண்ட கார்த்திகைக் கிழங்கை மெழுங்கி தற்கொலை செய்து நாச்சியார் (மாவீரர்) ஆனார். இதை அறிந்து போரில் இளவரசியுடன் துணையாக இருந்து அவர் தோழி செம்கமலமும் கார்த்திகைக் கிழங்கை மெழுங்கி தற்கொலை செய்து நாச்சியார் ஆனார். நாச்சிமார்களின் பூத உடல்கள் ஆங்கிலேயர் வரும் முன்பு பேழைகளில் இட்டு ஆற்றில் சங்கமிக்கப்பட்டன.

மானமுள்ள தமிழிச்சிகளான நாச்சிமாரின் பூத உடல்கள் பனங்காடு ஆற்றில் சென்றன. நீர் போகும் ஆறு இனி குருவிச்சி ஆறு ஆகும். குருவிச்சி நாச்சி என்ற சிற்;றாறும், பண்டார வன்னியன் என்ற பேராறும், அறுத்து சங்கமமாயிற்று.'

இது வெறும் கதையா? அல்ல, எப்போதுமே தமிழ்ச் சமூகத்திற்கு நிகழ்ந்த கதை.

பாயிரம் மூன்று

'அலைகள் பாயும் கடலிலே

அன்னை நாட்டை நோக்கியே

வேங்கை போல எழுகிறோம்.

வீறுமிக்க துணிவுடன்

பனைக்கரங்கள் அசைக்கின்றாள்

பாசம் மிக்க அன்னை மண்

போர்க்களத்தில் நிற்கிறாள்

மகனே என்று அழைக்கிறாள்.'

இப்பாடல் வ.ஜ.ச ஜெயபாலன் உடையது. இதை எழுதிய கைகள் தாம் சிங்கள வெறியன் மகிந்தாவை அனுசரிக்கும் மாநாட்டிற்கு ஆதரவை கையெழுத்திட்டிருக்கிறது. இடது கை பாடல் எழுத கையெழுத்திட்டது வலது கையோ தெரியவில்லை. வலது கையும், இடது கையும் இவ்வாறு எழுதி முடித்ததன்று, ஜெயபாலனின் எந்தக் கை இந்தப்பாடலை எழுதி முடித்திருக்கும்? தும்பிக்கையா?

'பண்டார வன்னியனின்

படை நடந்த காடு

பணியாது ஒரு போதும்

ஈழவள நாடு.'

http://www.ponguthamil.com/inithuinthu/inithuinthucontent.asp?sectionid=4&contentid={0BDBCA1A-3974-4E69-A663-94F471ACC5C4}

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்டால் நம்பிக்கை இருக்கு கலைஞன் இதில் கையெழுத்துப் போட்டு இருக்கவும் மாட்டார்...எழுத்தாளார் மாநாட்டுக்குப் போய் இருக்கவும் மாட்டார்

என்னோ தெரியவிலை கட்டுறையை வாசித்து முடித்ததும்... புதியபாதை படத்தில் பார்த்தீபன் எரியிர வீட்டில் இருந்து கொள்ளியெடுத்து சிகரட் பத்தும் காட்சி நினைவுக்கு வந்தது....

பாயிரம் மூன்று

'அலைகள் பாயும் கடலிலே

அன்னை நாட்டை நோக்கியே

வேங்கை போல எழுகிறோம்.

வீறுமிக்க துணிவுடன்

பனைக்கரங்கள் அசைக்கின்றாள்

பாசம் மிக்க அன்னை மண்

போர்க்களத்தில் நிற்கிறாள்

மகனே என்று அழைக்கிறாள்.'

இப்பாடல் வ.ஜ.ச ஜெயபாலன் உடையது. இதை எழுதிய கைகள் தாம் சிங்கள வெறியன் மகிந்தாவை அனுசரிக்கும் மாநாட்டிற்கு ஆதரவை கையெழுத்திட்டிருக்கிறது. இடது கை பாடல் எழுத கையெழுத்திட்டது வலது கையோ தெரியவில்லை. வலது கையும், இடது கையும் இவ்வாறு எழுதி முடித்ததன்று, ஜெயபாலனின் எந்தக் கை இந்தப்பாடலை எழுதி முடித்திருக்கும்? தும்பிக்கையா?

}

போர் தமிழ் மக்களின் தன்மானத்தின் நாடி, நரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது : நிமல்கா பர்னாண்டோ

http://inioru.com/?p=19327

. வ.ஜ.ச ஜெயபாலனும், இதில் விதிவில்ல ... அவரின் தன்மானத்திற்கான நாடி, நரம்புகளும் அறுந்து விட்டது!!! <_<

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.