Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு.

Featured Replies

ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு.

166671_494326369335_769594335_5725093_6989828_n.jpg

நோர்வேயின் பத்து முதன்மை (TOP10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான மூத்த பொறியியலாளர் ஸ்ரீவன் புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வமைப்பு முதன்மையான வெளிநாட்டவர்களில் ஐந்து பெண்களையும் ஐந்து ஆண்களையும் வருடாவருடம் தெரிவுசெய்வது குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில், நோர்வே, மேற்குப் பிராந்தியத்தில் வசித்து வருபவரும், கப்பல் கட்டும் துறையில் மூத்த பொறியியலாளராகக் கடமையாற்றும் திரு ஸ்ரீவன் புஸ்பராஜா அவர்களை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது. இவ்வங்கிகாரமானது திரு. ஸ்ரீவன் புஸ்பராஜா அவர்களுக்குக் கிடைத்த அங்கிகாரம் மட்டுமல்ல விடாமுயற்சியும் வேலைத்திறனும் கொண்ட ஒட்டுமொத்த நோர்வே வாழ் தமிழர்களுக்கும் கிடைத்த அங்கிகாரமாகும்.

திரு ஸ்ரீவன் புஸ்பராஜா அவர்கள் 1987 ம் ஆண்டிலிருந்து நோர்வேயில் வசித்து வருபவர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இவர் ஈழவிடுதலையில் மிக முக்கியமான சனநாயக அரசியல் வேலைகளை புலம்பெயர் தேசங்களில் அந்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முன்னெடுத்து வருபவர் ஆவார். ஈழத்தில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என இன்றும் முனைப்புடன் செயற்பட்டு வரும் ஒரு தேசபற்றாளர். தான் வசிக்கும் பிராந்தியத்தில் பல தமிழ் அமைப்புக்களை உருவாக்குவதற்குப் பாடுட்டவராவர். நோர்வேயில் வாழும் தமிழர்களிடையே கலை, கலாச்சாரம், தாய்மொழி என்பன அழிந்துவிடாது இருக்க மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருபவர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது எமது மக்களுக்கான பல புனர்வாழ்வு வேலைகளை நோர்வேஜிய மக்களையும் அமைப்புக்களையும் இணைத்து முனைப்புடன் செயற்பட்ட ஒரு மனிதரபிமானியாவார். நோர்வேஜிய அரசியல் மட்டத்தில் நன்மதிப்புப் பெற்ற இவர் இங்குள்ள தொழிற்சங்கங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் உயர்தரக்கல்வி பயின்று 1987ம் ஆண்டு நோர்வேக்கு வந்த இவர் ஆரம்பகாலங்களில் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ஒரு சாதாரண இரும்பு ஒட்டும் (Welder) தொழிலாளராகச் சேர்ந்து படிப்படியாக தனது கல்விவளத்தை உயர்த்தி இன்று கப்பல் கட்டும் துறையில் ஒரு மூத்தபொறியியலாளராகக் கடமை புரிகின்றார். அத்துடன் தனது சொந்த முயற்சில் பொருட்களை உருவாக்குவதில் (Product Development) மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டு வருபவர். தமிழ்க்குமுகம் பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் வளர்ச்சிபெற்ற குமுகமாக பலம்பெறவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்.

நோர்வேயின் பொருளாதாரத்தில் கப்பல் கட்டும் துறையும் முக்கிய பங்கு வகித்து வருவதால் நோர்வேஜிய இளைய சமூகம் கப்பல் கட்டும் துறையில் ஆளுமை கொண்ட வளம்மிக்க சமூகமாக வளரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படும் இவர் இங்கு உயர்தர வகுப்பில் தொழில்சார் கல்விகற்கும் நோர்வேஜிய மாணவர்களை கப்பல் கட்டும் துறைக்கு ஈர்ப்பதற்காக தனது நிறுவனம் சார்பாக வகுப்புக்களை (Motivation Course) எடுத்து வருபவர் ஆவார்.

தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ்மக்கள் பெருமைகொள்ள வேண்டும். தமிழர்கள் எங்குசென்றாலும் ஒரு தனித்தன்மையுடன் உலகமக்களின் கவனத்தை ஈர்க்கும் இனமாக மிளிரவேண்டும்.

Tamilvannan Eelappriyan <tamil2009@hotmail.fr>

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புமிக்க கெளரவத்தைப் பெற்ற திரு ஸ்ரீவன் புஸ்பராஜா அவர்களுக்குப் பாராட்டுக்கள். நமது சமூகத்திலிருந்து இத்தகைய நிலைக்கு ஒரு தமிழர் தெரிவானதில் அனைவரும் மகிழ்கிறோம்.

ஆகா இப்படியும் நல்லசெய்திகள் வருவது ,ஓரளவு நிம்மதியாகவிருக்கிறது, புஷ்பராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

பிரித்தானியா இராணியால் கௌவரவிக்கப்பட்ட தமிழர்கள்

Queen Elizabeth II honoured three Tamils this year at New Year’s awards in New Zealand and in UK. Significantly, The Queen’s Service Medal (QSM) to:

  • 77-year-old Eezham Tamil, Mr. Arumugam Thevarajan from New Zealand was in specific recognition for his services to the Tamil community in New Zealand.

  • Another Eezham Tamil who received Member of the Order of the British Empire (MBE) was Mr. Chelliah Yogamoorthy, an old student of Jaffna Hindu College, who was honoured for his outstanding service to the Department of Transport. Mr. Yogamoorthy is also a trustee of a Tamil school in Birmingham.

  • The MBE honour for Lakshmi Holmstrom, alumna of Madras and Oxford universities, was for her services to literature. She translated a number of Tamil literary masterpieces into English. In 2007, Canadian Tamils also honoured her with an award.

http://tamilnet.com/art.html?catid=79&artid=33401

ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த புஸ்பராஜாவிற்கு பாராட்டுக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

திரு.புஷ்பராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...உங்கள் சேவை தொடர வேண்டும்

இந்த காலத்தில் நல்ல பெயர் எடுப்பது சுலபம் இல்லை,,,,,,,,

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு.

தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ்மக்கள் பெருமைகொள்ள வேண்டும். தமிழர்கள் எங்குசென்றாலும் ஒரு தனித்தன்மையுடன் உலகமக்களின் கவனத்தை ஈர்க்கும் இனமாக மிளிரவேண்டும்.

வாழ்த்துக்கள் எமது உறவுக்கு

ஸ்ரீவன் புஸ்பராஜா

ஆறுமுகம் தேவராஜா

செல்லையா யோகமூர்த்தி

லக்ஷ்மி

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதில் தேவராஜா அவர்கள் யாழில் 70 களில் நடந்த தமிழாராச்சி மகாநாட்டை நடத்துவதில் முன்னின்று உழைத்தவர் என்று சேனையூரைச் அவரது உறவினர் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.

அட எங்கன்ட சனத்திற்க்கு பாராட்டு கிடைச்சதில் மகிழ்ச்சி .... , புஷ்பராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் அதிக வெளிநாட்டவர்களாக பாகிஸ்தானியர்கள் இருந்த போதும்....

அவர்ககளைவிட குறைந்த அளவில் வாழும் ஈழத் தமிழர்கள் சார்பாக முதலாவது இடத்தை பிடித்த,

ஸ்ரீவன் புஷ்பராஜாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பெருமையாக உள்ளது சகோதரா.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீவன் புஸ்பராஜாவுக்கு நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் அண்ணர்,

உங்களை நான் ஒரு முறை சந்தித்தேன் சுனாமி வேளையில். புனர்வாழ்வுக்கழகம், டெக் ஆகிய அமைப்புக்களுக்கு சுனாமியின் பின்னர் படகு கட்டுமானங்களை ஆரம்பித்து செய்ய தொழில் நுட்ப ஆலோசனை உதவி செய்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.