Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பா – கனடாவில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்கள்

Featured Replies

ஐரோப்பா, கனடா நாடுகளில் சிறு பிள்ளைகளின் பேரில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்கள் மதுபானக் குளத்தில் பாயும் விழாக்களாக மாறி வருவதாக பல நாடுகளிலிருந்தும் கவலையோடு சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இந்தவகையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல நோர்வேயில் இருந்து பிறந்த நாட்கள் பற்றிய ஒரு பார்வை இங்கே வருகிறது.. சுமார் 300 பேரில் இருந்து 500 பேர்வரை கலந்து கொள்ளும் இந்த விழாக்களில் இலட்சக்கணக்கில் பணம் விரயம் செய்யப்படுகிறது.. இவற்றின் சில முக்கிய இயல்புகள்..

கட்டவுட் கலாச்சாரம் பிறந்தநாளில்

பழைய காலங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பாரிய கட்டவுட்கள் வைக்கப்பட்டது போல இப்போது பிறந்த நாளுக்கு சுமார் 12 அடி உயரத்தில் பிள்ளையின் கட்டவுட் வைக்கப்படுகிறது. மாலை 6.00 மணி என்று அழைப்பு விடப்படும் ஆனால் அதை யாருமே கருத்தில் கொள்வதில்லை ஆட்கள் 7.00 மணிக்கே மெல்ல மெல்ல வருவார்கள்.

இசைக்குழுக்களின் காட்டுக் கூச்சல்

இந்த விழாக்களில் இசைக்குழுக்கள் என்ற போர்வையில் பாடப்படும் காட்டுக்கூச்சல்கள் செவிப்பறையை வெடிக்க வைத்துவிடும். என்ன பாடலைப் பாடுகிறார்கள் என்று விளங்க முடியாதளவுக்கு ஸ்…புஸ்..கூ.. என்ற ஒலிகள் வரும். அருகில் எங்கோ மிருகக்காட்சிச் சாலை இருப்பதுபோன்ற அலறல்கள் ஒலிபெருக்கியால் வரும். பாடக்கூடிய திறமை உள்ளவர் குரலையும் இது சாப்பிட்டுவிடும். 25 வருடங்களாகியும் சவுண்ட் செற்பண்ண தெரியாத அவல நிலை. மேலும் பாடகர்கள் ஒரு பெக் அடித்துவிட்டால் டி.எம்.எஸ், எஸ்.பி.பிஆகி வெளுத்துக்கட்ட தொடங்கிவிடுவார்கள்.

கைமாறும் குசினியும் வொட்கா விஸ்கியும்..

ஆரம்பத்தில் சிற்றுண்டி வழங்க பெண்கள் இருப்பார்கள் பின் இரவு 8.30ற்கு குசினி ஆண்களின் கைகளுக்கு மாறும். அப்சலூற் வொட்கா விஸ்கியை பைன் அப்பிள் யூசுடன் கலந்து ஏற்றத் தொடங்குவார்கள். சுமார் 7 போத்தல்கள்வரை முடிந்தாலும் சாப்பாடு வந்து சேராது. குசினிக்குள் இருப்போர் மாட்டிறைச்சி துண்டுகளை சாப்பிட்டு, மதுவையும் குடித்த காரணத்தால் பசியின் கொடுமை அவர்களை வாட்டுவதில்லை.

பரிசு கொடுக்க நீண்ட கியூ வரிசை

விழாவில் இரு பக்கமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நிற்பார்கள். எப்படியோ பரிசைக் கொடுத்துவிட்டு அடுத்த விழாவுக்கு போக வேண்டும், இல்லை வீடு போய் ஒரு படத்தையோ, நாடகத்தையோ பார்த்துவிட்டு நின்மதியாக உறங்க வேண்டும் என்ற துடிப்பில் இந்த வரிசை பாம்புபோல நெளியும். இதற்குள் வீடிஓ எடுத்து முடிய எந்திரன் படத்தில் பல வருடங்கள் நடித்தது போன்ற களைப்பு வந்துவிடும்.

கொத்துறொட்டியும் பாடலும்

இசைக்குழுவின் பாடல்களின் சுதி தப்பிய அபசுரங்கள் ஒரு புறம், அதற்கு போட்டியாக கொத்து றொட்டி கொத்துக்களின் அவலமான ஓசை இரண்டும் கலந்து றீ மிக்ஸ் பாடலாகும். இதற்குள் வயிறு கலக்கி மலசல கூடம் ஓடுவோர் கைகளை ஒழுங்காக கழுவாமல் றொட்டியை அள்ளிப்போட்டுவிட்டு, நமது மிளகாய்த் தூள் பக்டீரியாவை கொன்றுவிடும் என்று சமாதானமும் கூறுவார். இதற்குள் கொத்து றொட்டி வாசம் மண்டபத்திற்குள் நுழையும். நாலு நாள் சென்றாலும் சாறியில் இருந்து நாற்றம் போகாது என்பார் ஒருவர். மற்றவர் கூறுவார் ஒரு விழாவுக்கு ஒரு சாரி கட்டும் எமக்கு அதைப்பற்றி என்ன கவலை என்பார்.

ஒஸ்லோ அவசர மதுபான சேவைப்பிரிவு

மொய் எழுத வரிசையில் நின்று, பின் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று சனம் களைப்படைய உள்ளே வொட்கா விஸ்க்கி முடிவடைந்துவிடும். நோர்வே ஒஸ்லோவில் ஓர் இலக்கத்திற்கு போன் அடித்தால் அவசர தமிழ் மதுபான சேவைப்பிரிவு என்ன நேரமானாலும் மதுபானத்தை சப்ளை செய்யும். விலை வெறும் 300 குறோணர்கள்தான், இந்த விலையில் கடைகளில் வாங்க முடியாது. விழா ஒரு மணிக்கு முடிந்தாலும் இரண்டு மூன்று மணிக்கும் மதுபானம் கார்களில் தொடரும்..

இத்தனையும் நடப்பது தெரியாமல் பிறந்த நாளுக்குரிய பிள்ளை ஒரு பொம்மையை இழுத்துக் கொண்டு திரியும். தனக்கு நடக்கும் பிறந்தநாளுக்குத்தான் இத்தனை கூத்தும் நடக்கிறதென்பது தெரியாத பரிதாபம் அதன் முகத்தில் தவழும்.. நோர்வேயில் மட்டுமா இது புலம் பெயர் நாடுகளில் பரவும் பொது நோயாக இது மாறி வருகிறது.

-----------------------------------------------------------------

நோர்வேயிலிருந்து சிங்சாங் 19.01.2011

http://www.alaikal.com/news/?p=54887#more-54887

புலம்பெயர் தமிழர்களின் புதிய கலாச்சாரமிது.

ஒன்று தவறிவிட்டது பார்ட்டி முடிந்து போகும்போது உடைகள் முழுக்க தூள்கறி மணம் கமழும். ரோட்டில் நாய் வாலையாட்டும் பேரூந்து தொடரூந்தென்றால்

சக பயணிகள் எட்ட நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

guest-tables-decoration.jpg

ஐயோ முக்கியமான ஒன்றை விட்டிட்டூங்க...

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எங்கட ஆக்கள் உப்படியான நிகழ்வுகளில் தான் தங்கட "உயரிய அந்தஸ்துக்களை" காட்டிறது.

நான் பொதுவா இப்படியான நிகழ்வுகளுக்கு போறதை விரும்பிறதில்ல. இருந்தாலும்.. உறவினர்கள் என்று அழைச்சு தவிர்க்க முடியாமல்.. ஒன்றிரண்டுக்கு போக... நம்மல பாட்டின்னு.. திக்கு முக்காட வைச்சிட்டாங்க..

வெள்ளையளின் பாட்டிக்கு போனால் சாப்பாடு இரண்டாம் பட்சம்.. என்ரரெயிண்ட் மெண்ட் முதல்..!

இவர்களின் பாட்டிக்குப் போனால் சாப்பாடு முதலாம் பட்சம். அதுதான் இவைட பாட்டியே..!

உண்மை சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் படியுங்கோ..

a to z , ரொம்ரொம்.. மொபைல் நவிகேற்றர் எல்லாம் பாவிச்சு.. சொன்ன நேரத்துக்கு விழுந்தடிச்சு பேட்தே லொக்கேசனுக்கு போனா அது ஒரு சேர்ச்சில் அமைந்திருந்த விழா மண்டபம். பெரிய ஆடம்பரமான சோடனைகள்..! வட்டவட்ட மேசைகள்.. அதைச் சுத்தி நாலு நாற்காலிகள். அதில கோலா போத்தல்.. அப்படி இப்படின்னு அதுகளோட நாலு கிளாஸ் கவுத்து வைச்சிருந்தாங்க. அதோட மஞ்சள்.. சிவப்புண்ணு.. ரிசுக்களை வடிவா மடிச்சு வைச்சிருந்தாங்க.

பாட்டிக்கு போய் உட்காரல்ல... ஒரு புகலிடத்தில் பிறந்த இளம் பொண்ணு நகைகள் அழங்கரிக்க.. வட இந்திய நாகரிகத்தில் முளைத்த உடை அணிந்து கொண்டு வந்து.. ஸ்ராட்டர் என்று பல வகை சிற்றுண்டிகளை நீட்டிச்சுது..

சரி என்று ஒரு புன்னகையோடு அதை வாங்கி.. என்னடா வந்ததும் வராததுமா... சாப்பாடு என்று நினைச்சுக் கொண்டிருக்க...

இன்னொரு ஆன்ரி... கலோ.... ஹாய்.. உங்களுக்கு கொக்கோ.. றிங்ஸோ.. என்று கொண்டு வந்தா...

இதென்னடா அநியாயமா இருக்கு.. வாங்கின சாப்பாட்டை சாப்பிடக் கூட இல்ல.. அதுக்குள்ளாவா...

ஆன்ரியின் மூச்சியைப் பார்த்து..

கோக் என்ற..

அந்த ஆன்ரி போய் ஒரு 5 நிமிசம் கூட ஆகல்ல...

நூடில்ஸ் வேண்டினவைக்கு நூடில்ஸ்.. இடியப்பப் பிரியாணி.. புட்டு பிரியாணி.. மட்டின் பிரியாணி.. சிக்கன் பிரியாணி.. சைவ ஆக்களுக்கு வெயிடபிள் பிரியாணி.. என்று எல்லாம் இருக்குது. கூச்சப்படாமல் நல்ல வடிவா சாப்பிட்டுப் போகலாம்.. ஒருத்தரும் இப்ப வெளிக்கிட வேண்டாம் என்றாங்கள்...

நான்.. தட்டில இருந்த சிற்றுண்டிகளை பார்த்து.. வெறிச்சுப் போட்டு.. இதுகளை சாப்பிட்டா.. பிரியாணிகளை எப்படி.. நிரப்பிறது என்று யோசிச்சுக் கொண்டிருந்தன்...

அப்ப.. அந்த பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அப்பா வந்து சொன்னார்... றிங்ஸ் எடுக்கிறவை அங்க இருக்கு எடுங்கோ.. என்று.

அங்க திரும்பி பார்த்தால்.. சிவாஸ்.. வொட்கா.. பக்காடி.. நெப்போலியன்.. ஜக்டானியள்.. என்று ஐரெம் எல்லாம் வெரி கெவியா இருந்திச்சு. நம்மளப் போல ஆக்களுக்கு என்று ஜே2ஓ அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு சொவ்ட் ஐரங்கள் வேற..!

அதுகளையும் ஒரு பார்வை பார்த்திட்டு.. திரும்பிறன்.. பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அம்மா வாறா.. கேக் வெட்டப் போறம். எல்லாரும் வாங்கோ என்று.

சரிடாப்பா.. இப்பவாவது பிறந்த நாள் என்று இதையாவது ஒழுங்க செய்யப் போறாங்களே என்று போய் பார்த்தா.. ஒரு பெரிய மேசையை நிரப்பின.. கேக்.

அதில.. உள்ள் காட்டூன் கெரக்டெர்கள்.. பி எஸ் பி.. கேம் கொன்றோலர்.. என்று டிசைன்கள் போட்டிருந்திச்சு. நடுவில பெரிய பாபியை நிற்பாட்டி வைச்சிருந்தாங்க.

அட கடவுளே.. இந்தளவு பெரிய கேக்.. அதுக்கு இவ்வளவு சோடினையா.. இப்படியும் பேர்த்டேக்கு கேக் வெட்டிவாங்களா... கண்றாவிடா.. என்றுபோட்டு.. அதை பிரமிப்போடு.. விடுப்புப் பார்த்திட்டு வந்து உட்காரல்ல...

இன்னொரு இளம் பொண்ணு.. அதே அலங்காரங்களோடு பெரிய கேக் பீசை நீட்டுது..

தாங்க்ஸ் என்று வாங்கி அதை மேசையில் வாங்கி வைச்சிட்டு வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறன்..

அதுக்குள்ள இன்னொரு பெண்...

ஐஸ்கிறீம்.. புரூட் சலாட் என்று இன்னொரு கப் ஐரத்தோட வந்து நிற்குது...

இதென்னடாப்பா என்று.. அதையும் வாங்கி மேசைல அடுக்கி வைச்சிட்டு.. எதையுமே சாப்பிடல்ல....

சரி எல்லாரும் வாங்கோ.. பிள்ளை போட்டோ எடுக்கனுமாம்.. என்டாங்க.

அட கடவுளே.. சாப்பிடக் கூட அவகாசம் இல்லை... போட்டோ... என்று நினைச்சுப் போட்டு..

சரின்னு அங்க நகர்ந்து போனா.. அதில 200 பேர் கியூவில நிக்கிறாங்க.. போட்டோ எடுக்க..! குடும்பமா.. தனியா எண்டு.

(அதுமட்டுமா.. ஆக்களை விட அவை கொண்டு வந்த பிரசண்டுகளை வைச்சு போட்டோ பிடிக்கிறதுதான் அங்க முக்கியமா இருந்திச்சு. அப்ப தானே அடுத்தமுறை அவை அவைக்கு பேர்த்டே வரேக்க.. இந்தப் பிள்ளையின் பெற்றோர் பெரிசா வாங்கிக் கொண்டு போவினம். அதோட பிரசென்றின்ர அளவு பெருக்க பெருக்க.. அந்தஸ்தும் பெருக்குமாமெல்லோ..!)

அதுக்குள்ள.. சாப்பிடுறவை சாப்பிட.. பிரியாணிக்கு கியூவில நிக்கிறவை நிக்க.. மிச்சப் பிரியாணிகளை பொட்டலம் கட்டி வீட்டுக்கு கொண்டு போறவை அதுக்கு ஆயத்தப்படுத்த.. இப்படி கனக்க நடந்துக் கிட்டு இருந்திச்சுது.

நானும் வந்திட்டனே ஒரு போட்டோவை எடுப்பம் என்று என் கமராவை வெளில எடுத்து நீட்டினா.. அது எங்க.. சனம் கமராவுக்கு முன்னால கூடி நின்று கொண்டு மகளுக்கு 24 வயசு. இப்பதான் மெடிசின் முடிச்சு வெளில வந்திருக்கா.. அவாக்கு நல்ல மாப்பிள்ளை பாக்கிறம் என்று.. பேர்தே பாட்டியை.. மெற்றிமெனி சென்ரர் ஆக்கிக்கிட்டு நிற்குதுங்க. அதுவும் குண்டு குண்டு ஆன்ரிங்க.. அவையை தாண்டி கமராவை போக்கஸ் பண்ணுறது எண்டது இமய மலையை நகர்த்தி வைச்சிட்டு பண்ணுறது போல..!

சரி வேண்டாம்.. என்றிட்டு.. அங்கால போனா.. அதுவரை கொஞ்சம் அடக்கமா ஓடிக்கொண்டிருந்த மியுசிக்.. அப்பா.. செவிப்பறை பிளக்க.. ஒலிக்க ஆரம்பிச்சுது. விஜய் குத்தாட்டம்.. போட.. திரிசா குத்த.. நயன் ஓட.. சூரியா துரத்த... இடைக்கிடை இங்கிலீசில தூசணத்தில வந்து ராப் விழ.... அங்க நிக்கவே முடியல்ல. கோலை விட்டு வெளில வந்து ஆகாயத்தை வெறிச்சுப் பார்த்திட்டு நிக்கிறன்.. பொலிஸ் கார் வந்திச்சு.

என்னவாம் என்று கேட்டால்.. அண்டை அயலில் இருந்ததுகள்.. கவுன்சிலுக்கு அடிச்சுச் சொல்ல கவுன்சில் பொலிஸுக்கு அடிச்சுச் சொல்ல.. பொலிஸ் வந்திட்டுது.. சத்தம் போடாமல் 10 மணிக்குள்ள நிகழ்வுகளை முடிச்சிட்டு எல்லாரும் அமைதியா போயிடனும் என்று.

பொலிஸ் வந்ததும்.. வெள்ளைக்காரன் வந்திட்டான் எல்லோ.. உடன ரெண்டு மூன்று பெரிசுங்களும்.. அவைட புகலிடத்தில் பிறந்த வாரிசுகளும்.. பொலிஸோட ஒரே அளவலாவல். சிலர் பொலிஸுக்கு பந்தா பிடிக்க கோலாவை நீட்ட அவன்.. அவள்.. வேண்டாம் என்ற.. அந்தக் கூத்து வேற வெளில அரங்கேறிக் கொண்டிருந்திச்சு.

நான் சரியா மாலை 6 மணிக்கு வந்தனான். 9.45 ஆக.. மண்டபத்தை விட்டு வெளியேறிட்டன். ஏன் என்றால்.. பிறகு 250 பேரும் 10 மணிக்கு ஒன்றா வெளிக்கிடுங்கள்.. கார் அதுஇது என்று அந்தப் பகுதியே ரபிக் ஜாம் ஆகிடும். பொலிஸ்காரன் வேற.. ரபிக் கென்றோல்.. பண்ண.. அற்ககோல்.. கென்றோல் பண்ண வந்திட்டான்.

உண்மையைச் சொல்லுறன்.. யுனில இருக்கிறதால.. வெள்ளையளோடும் பாட்டி அது இதெண்டு போயிருக்கிறன்.. ஒரு நாளும் பொலிஸ் வந்து பாட்டியை கென்றோல் பண்ணினதை அனுபவிச்சதே இல்ல. ஆனால்.. நம்மவர்களின் பாட்டியில தான் பொலிஸ் கொன்றோல்.. வரும் அளவுக்கு பாட்டி.. சாறி.. சாப்பாட்டு பந்தி நடத்தக் கண்டிருக்கிறன்.

இதை குறையாச் சொல்லுறன் என்று புலம்பெயர் தமிழ் மக்கள் என்னில குறை நினைக்கிறதில்ல.. இது எங்கட பெருமை என்று சொல்லுறன்... என்று நினைச்சுக் கொண்டு.. போங்கோ.. ஓகேவா. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கல்யாணம் முடிக்காத பையன் என்டு விழுந்து,விழுந்து கவனிச்சார்கள் போல :lol: அதெல்லாம் தம்பிக்குப் பிடிக்காதே :D ...வெள்ளையளின்ட பார்ட்டிக்குப் போனால் அரை குறை உடுப்போடு வருபவர்களைப் பார்க்கலாம், வயது வித்தியாசம் பாராமல் தாம்,தூம் என குடிக்கலாம்,எல்லோரும் சேர்ந்து ஆடலாம்,விரும்பினால் சாப்பிடு இல்லாட்டி போ கேட்கவும் நாதியில்லை,கடைசியில் சாப்பிடவும் ஏலாமல் உடுப்பு அவுண்டு விழுவதும் தெரியாமல் றோடுகளில் விழுந்து கிடக்கலாம்...இப்படியான பார்ட்டி தான் தம்பிக்கு பிடிக்கும் :rolleyes:

உது பப்.. கிளப்பில நடக்கிறது.. அக்கா. வெள்ளையள் பார்ட்டி என்று வந்தா.. உப்படி நடந்து கொள்ளமாட்டினம். அங்க அதுவும் வெளியாக்கள அழைத்தால் அவர்கள் அதற்குரிய வகையில் நடத்துவினம். ஒரே சாப்பாடு என்றில்ல.. மியுசிக் இருக்கும்.. தங்கட விசயங்களை.. பகிர்ந்து கொள்வார்கள்.. கடந்த கால நிகழ்வுகளை புகைப்படங்களில்.. வீடியோக்களில் பதிவு செய்து நினைவு படுத்துவார்கள்... ஆட்டம் இருக்கும்.. உடுப்பெல்லாம் கழண்டு விழாது. சாப்பாடு தண்ணி.. ஒரு துணைக் காரணியாக இருக்குமே அன்றி.. அதுவே அங்கு முக்கியமில்லை. ஏன் கேக் வெட்டிறது கூட ஒரு சாதாரணமா இருக்கும். அங்க ஒரு பூரணத்துவம் இருக்கும். வெள்ளையள் என்றதுக்காக சொல்லேல்ல.. நான் பூரணத்துவத்தை கண்டதால் சொல்கிறேன். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா இப்படியான நிகழ்வுகளுக்கு போறதை விரும்பிறதில்ல. இருந்தாலும்.. உறவினர்கள் என்று அழைச்சு தவிர்க்க முடியாமல்.. ஒன்றிரண்டுக்கு போக... நம்மல பாட்டின்னு.. திக்கு முக்காட வைச்சிட்டாங்க..

ஒருத்தர் அழைத்தால்

போனமாம் சாப்பிட்டமாம்

ஒரு ஐந்தையோ பத்தையோ கையில கொடுத்தமாம் வந்தமாம் என்று இல்லாமல்

இவ்வளவு விடயத்தை கவனித்திருக்கிறீர்களே....

தங்களை அழைத்து சாப்பாடும் போட்ட அந்த மனிதரை உதைக்கணும் முதலில். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உது பப்.. கிளப்பில நடக்கிறது.. அக்கா. வெள்ளையள் பார்ட்டி என்று வந்தா.. உப்படி நடந்து கொள்ளமாட்டினம். அங்க அதுவும் வெளியாக்கள அழைத்தால் அவர்கள் அதற்குரிய வகையில் நடத்துவினம். ஒரே சாப்பாடு என்றில்ல.. மியுசிக் இருக்கும்.. தங்கட விசயங்களை.. பகிர்ந்து கொள்வார்கள்.. கடந்த கால நிகழ்வுகளை புகைப்படங்களில்.. வீடியோக்களில் பதிவு செய்து நினைவு படுத்துவார்கள்... ஆட்டம் இருக்கும்.. உடுப்பெல்லாம் கழண்டு விழாது. சாப்பாடு தண்ணி.. ஒரு துணைக் காரணியாக இருக்குமே அன்றி.. அதுவே அங்கு முக்கியமில்லை. ஏன் கேக் வெட்டிறது கூட ஒரு சாதாரணமா இருக்கும். அங்க ஒரு பூரணத்துவம் இருக்கும். வெள்ளையள் என்றதுக்காக சொல்லேல்ல.. நான் பூரணத்துவத்தை கண்டதால் சொல்கிறேன். :D:)

அதுசரி..! :D

எங்கட நிறுவனம் நடத்திற கிறிஸ்மஸ் பார்ட்டிகளையும்தான் பார்க்கிறமே..! வரும்போது கோட் சூட் தான்..! பிறகு தண்ணி.. ஒன்பதுமணிக்கு மேலை சோடி மாறி ஆட்டம்..! :wub: பிறகு சில தண்ணியிலை நிலையில்லாமல் கம்பனி எடுத்துக்குடுக்கிற ஹோட்டல் ரூமிலை தங்கிறது.. இல்லாட்டில் கம்பனி காசில டாக்சி எடுக்கிறது.. <_<

எல்லா சமூகத்திலயும்தான் இது இருக்கு..! :D தமிழாக்கள் என்ன இதைக் கண்டுபிடிச்சவையா? எல்லாம் வெள்ளையளிட்ட இருந்து பழகினதுதான்..! :rolleyes:

அது என்னமோ தெரியல்ல எனக்கு வாய்க்கிற நண்பர்களும் நண்பிகளும் நல்லவங்களா அமைஞ்சிடுறாங்க. அவங்க இப்படி செய்து நான் காணேல்ல. நான் காணாத போது செய்யினமோ தெரியாது.. என்னோட வேலை செய்த ஒரு வெள்ளை நண்பன் இருக்கான்.. அவனுக்கு மது என்பது வாந்தி வரும் விடயம்.

அதேபோல் நண்பிகள் இருக்கிறார்கள்.. அவர்களும் மது அருந்துவதில்லை. ஒழுங்கான உடைகள் தான் உடுப்பார்கள்.

ஆனால் எம்மவர்களில் பலரின் பாட்டிகள் அது வீட்டிலோ.. வெளியிலோ.. நடந்தாலும் எல்லாதிற்கும் ஒரே குணம் மணம் தான் இருக்கும்..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ தெரியல்ல எனக்கு வாய்க்கிற நண்பர்களும் நண்பிகளும் நல்லவங்களா அமைஞ்சிடுறாங்க.

அவங்க இப்படி செய்து நான் காணேல்ல. நான் காணாத போது செய்யினமோ தெரியாது.. என்னோட வேலை செய்த ஒரு வெள்ளை நண்பன் இருக்கான்.. அவனுக்கு மது என்பது வாந்தி வரும் விடயம்.

அதேபோல் நண்பிகள் இருக்கிறார்கள்.. அவர்களும் மது அருந்துவதில்லை. ஒழுங்கான உடைகள் தான் உடுப்பார்கள்.

..! :D:)

நெடுக்ஸ்

இப்ப தெரியுது நீங்கள் ஏன் முக்கியமானவற்றை எல்லாம் வெறுக்கின்றீர்கள் என்று...

சேருகின்ற கூட்டத்துக்கு ஒன்றிலும்நாட்டமில்லை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

இப்ப தெரியுது நீங்கள் ஏன் முக்கியமானவற்றை எல்லாம் வெறுக்கின்றீர்கள் என்று...

சேருகின்ற கூட்டத்துக்கு ஒன்றிலும்நாட்டமில்லை :lol::D

அப்படி என்று சொல்ல முடியாது. சில நண்பர்கள் தண்ணி அடித்தாலும் அளவோடு அடிப்பதோடு நம்மை எல்லாம் வற்புறுத்தி அடிக்கச் சொல்வதில்லை. அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்பார்கள் அதோடு சரி. உடனடியாக புரிந்து கொள்வதோடு மற்றவர்களின் நிலையை மதிக்கக் கூடியவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வகையில் அந்த நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். :)

  • தொடங்கியவர்

எனக்குத்தெரிந்த உறவுக்கு மூன்று பிள்ளைகள். வசதி படைத்தவர்கள். எப்பொழுதும் பிறந்தநாட்களில் கிடைக்கும் பண பரிசுகளை காலத்தின் தேவைக்கு ஏற்ப அளித்துவிடுவார்கள்.

கடைசியாக போர்குற்ற விசாரணைகளுக்கு உதவியாக வழங்கினர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சையொருத்தர்! எங்கடைசனத்தின்ரை கொண்டாட்டத்துக்கு அரைமனசோடை போனாராம்........எல்லாத்தையும் பாத்திட்டு முக்குளிச்சுப்போனாராமெல்லே :o . நல்லாய்த்தான் கூத்துப்பாத்திருக்கிறார். :lol:

நாங்களும் வெள்ளையளின்ரை கொண்டாட்டங்களுக்கு அடிக்கடி போறனாங்களாக்கும்.அங்கை நடக்கிற சிதம்பரசக்கர கூத்துக்கள் எல்லாத்தையும் பாத்து அலுத்துப்போய்த்தான் இருக்கிறம். :)

அதுக்காக ஒரு பார்ட்டிக்குபோட்டுவந்து நக்கல் நக்கலாய் சத்தி எடுக்கக்கூடாது.மரியாதை குடுத்து அழைப்பு விடுத்தவைக்கு நல்லநன்றிக்கடன் இது. ^_^

நான் இப்படியான மிதமிஞ்சிய ஆடம்பர கொண்டாட்டங்களை வரவேற்பவனல்ல.ஆடம்பர அசிங்கங்கள் சர்வசாதாரணம். :(

இவரொத்தர் எங்கடை கொண்டாட்டங்கள்ளை மட்டும்தான் குண்டுகுண்டு ஆன்ரிகளை முதல்முதலாய் பாக்கிறாராம்.இமயமலையை அரக்கி வைக்கிறாராமெல்லே.ஏதோ வெள்ளையளின்ரை பங்ஷனிலை தேர்,சப்பறங்கள் இல்லாதமாதிரி புதிசாய்க்கதைக்கிறார் :lol:

சூப்பருங்கோ ஆகா ----- கு. சா.அசத்திட்டீங்க போங்க------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை குறையாச் சொல்லுறன் என்று புலம்பெயர் தமிழ் மக்கள் என்னில குறை நினைக்கிறதில்ல..

இது எங்கட பெருமை என்று சொல்லுறன்... என்று நினைச்சுக் கொண்டு.. போங்கோ.. ஓகேவா. :D:)

தமிழ்மக்கள் மீதான தங்களது அக்கறை இது என்றே தோன்றுகிறது. மக்கள் மீதான அக்கறையுள்ளவர்களுக்கு இது போன்ற எதைக்கண்டாலும் கோபம்வரும். வரணும். :rolleyes:

பொதுவாக விழாக்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்! முடிந்தளவு இந்த விழாக்களை முதலே காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிடுவேன். அதே நேரம் உறவினர், நண்பர்களாயின் அவர்கள் முகம் கோணாமல் இருப்தற்கு விழாவுக்கு முதல் தினங்களிலேயே போய் உதவிகள் தேவைப்படின் முடிந்தளவு செய்து, கடைசி நேரத்தில் பரிசுப் பொருளும் கொடுத்துவிடுவேன். (கழுவுற மீனில் நழுவுற மீன் என்று அடிக்கடி சொல்லுவார்கள் :rolleyes:^_^ )

akootha விற்கு ஒரு green_plus.gif:)

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சையொருத்தர்! எங்கடைசனத்தின்ரை கொண்டாட்டத்துக்கு அரைமனசோடை போனாராம்........எல்லாத்தையும் பாத்திட்டு முக்குளிச்சுப்போனாராமெல்லே :o . நல்லாய்த்தான் கூத்துப்பாத்திருக்கிறார். :lol:

நாங்களும் வெள்ளையளின்ரை கொண்டாட்டங்களுக்கு அடிக்கடி போறனாங்களாக்கும்.அங்கை நடக்கிற சிதம்பரசக்கர கூத்துக்கள் எல்லாத்தையும் பாத்து அலுத்துப்போய்த்தான் இருக்கிறம். :)

அதுக்காக ஒரு பார்ட்டிக்குபோட்டுவந்து நக்கல் நக்கலாய் சத்தி எடுக்கக்கூடாது.மரியாதை குடுத்து அழைப்பு விடுத்தவைக்கு நல்லநன்றிக்கடன் இது. ^_^

நான் இப்படியான மிதமிஞ்சிய ஆடம்பர கொண்டாட்டங்களை வரவேற்பவனல்ல.ஆடம்பர அசிங்கங்கள் சர்வசாதாரணம். :(

இவரொத்தர் எங்கடை கொண்டாட்டங்கள்ளை மட்டும்தான் குண்டுகுண்டு ஆன்ரிகளை முதல்முதலாய் பாக்கிறாராம்.இமயமலையை அரக்கி வைக்கிறாராமெல்லே.ஏதோ வெள்ளையளின்ரை பங்ஷனிலை தேர்,சப்பறங்கள் இல்லாதமாதிரி புதிசாய்க்கதைக்கிறார் :lol:

:lol: :lol:

:lol: :lol:

நான் உப்படியான பார்ட்டிக்கு போறது என்றால் முழுநாளும் சாப்பிடாமல் இருந்து போட்டு ,இரவு சாப்பட்டை ஒரு வெட்டு வெட்டி போட்டு வாரனான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் உப்படியான பார்ட்டிக்கு போறது என்றால் முழுநாளும் சாப்பிடாமல் இருந்து போட்டு ,இரவு சாப்பட்டை ஒரு வெட்டு வெட்டி போட்டு வாரனான்

இங்க லண்டனிலும் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கினம் அன்டைக்கு முழுக்க சமைக்க மாட்டினம் பிஸ்கட்,பாண் அப்படி சாப்பிட்டு விட்டு பார்ட்டியில் போய் ஒரு வெட்டு வெட்ட ரெடியாவினம்...பொதுவாக எனக்கு பார்ட்டி என்டால் அலர்ஜி...நான் போவதும் இல்லை...ஆனால் பார்ட்டி என்டால் பொதுவாய் சின்னதாய் தங்கள் நெருங்கிய உறவினை மட்டும் அழைத்துக் கொண்டாடலாம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இதை குறையாச் சொல்லுறன் என்று புலம்பெயர் தமிழ் மக்கள் என்னில குறை நினைக்கிறதில்ல.. இது எங்கட பெருமை என்று சொல்லுறன்... என்று நினைச்சுக் கொண்டு.. போங்கோ.. ஓகேவா. :D:)

போரிங் ஆன பார்ட்டிக்குப் போய் இருக்கிறீங்க. நீங்க விவரிச்சதெல்லாம் சாதாரண பிறந்தநாள் பார்ட்டிகள்! வித்தியாசமான அயிட்டங்கள் உள்ள பார்ட்டிகளுக்குப் போனா மயங்கி விழுந்துவிடுவீர்கள். பிறகு அம்புலன்ஸ், அது, இது என்று பிரச்சினை வேறு வந்துவிடும்.

சரி. ச்ரி... இரவைக்கு மூன்று பிறந்தநாள் பார்ட்டிக்குப் போகவேண்டும். எப்படி மூன்றுக்கும் போகலாம் என்று பிளான் பண்ணவேண்டும்.. வர்ட்டா :D

தம்பி கல்யாணம் முடிக்காத பையன் என்டு விழுந்து,விழுந்து கவனிச்சார்கள் போல :lol: அதெல்லாம் தம்பிக்குப் பிடிக்காதே :D ...வெள்ளையளின்ட பார்ட்டிக்குப் போனால் அரை குறை உடுப்போடு வருபவர்களைப் பார்க்கலாம், வயது வித்தியாசம் பாராமல் தாம்,தூம் என குடிக்கலாம்,எல்லோரும் சேர்ந்து ஆடலாம்,விரும்பினால் சாப்பிடு இல்லாட்டி போ கேட்கவும் நாதியில்லை,கடைசியில் சாப்பிடவும் ஏலாமல் உடுப்பு அவுண்டு விழுவதும் தெரியாமல் றோடுகளில் விழுந்து கிடக்கலாம்...இப்படியான பார்ட்டி தான் தம்பிக்கு பிடிக்கும் :rolleyes:

கற்பனைக் குதிரை ரொம்பவும் பாய்ஞ்சிடுச்சு.. கொஞ்ச வெள்ளை/கறுப்புகளையும் சினேகிதமாக்கிறது நல்லது!

  • தொடங்கியவர்

எம்மவர்களின் ஒரு குறைபாடு நாம் ஒவ்வொரு கிழமையும் பொதுவாக ஒவ்வெரு சனிக்கிழமையும் "குடிப்பதில்லை". இதை மேலை நாடுகளில் ஒரு சமூக குடி என்று கூட சொல்வார்கள் (சோஸல் டிரிங்கிங்). நாம் பிறகு வட்டியோடு ஒரு நம்மவர் பிறந்தநாள் விழாவில் போய் வட்டியுடன் கணக்கை தீர்ப்பது. பின்னர் தமது ஈரல் எரிந்து உடல் நிலை பாதிக்கப்படும் பொழுது கவலைப்படுவது ஒரு தாமதமான படிப்பு. சிலர் இரத்தத்தில் கூடிய "அற்ககோல்" காரணமாக விபத்துக்களை சந்திப்பதுண்டு.

இதனால் குடிப்பவர் உடல் நலம் கெடுவதுடன் எமது வருங்கால தலைமுறைக்கும் தவறான செய்தியை சொல்லுகின்றோம். சில இடங்களில் அவர்களின் மனம் கூட பாதிக்கப்பட்டு விடுகின்றது ( ஏதாவது சண்டைகள் இல்லை அதிகம் குடித்து விழுந்து விடுவது). இப்படியான சிக்கல்கள் ஒரு திறந்தமனம் கொண்ட கலந்துரையாடல் மூலம் (கவுன்சலிங்) தீர்க்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் குதிரை ரொம்பவும் பாய்ஞ்சிடுச்சு.. கொஞ்ச வெள்ளை/கறுப்புகளையும் சினேகிதமாக்கிறது நல்லது!

என்னோட இருக்கும் வெள்ளையள்,காப்புலிகள் எல்லோரும் நான் மேலே எழுதின மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள்...என்னோடு சேர்ந்ததனால் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ அல்லது அவர்களது பழக்க,வழக்கமே அப்படித் தானோ எனப் புரியாது உள்ளது...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் பழக்க,வழக்கம் அப்படி இல்லைப் போல இருக்குது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுபோன்ற நிகழ்சிகளில் கொஞ்சம் நேரத்தோட போய் நின்று முடிந்த சில பல உதவிகள் செய்து முடிந்தால் நிகச்சி முடிந்தபின்னும் நின்று வேண்டிய உதவிகள் செய்துபோட்டு வருவேன். இப்போதெல்லாம் பிள்ளைகள், பெறாமக்கள்,மருமக்கள் நிறைய. ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்கள். மனசில ஒரு டிக்... கொஞ்சம் வயதாகிக்கொண்டு போகுதுபோல. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.