Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மௌனக்காதல்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனக்காதல்......

ஒத்தையடிப் பாதையில

ஒதுங்கிநான் நடக்கையில

ஓரக்கண்ணாலே என்

உசிர்குடிச்சுப் போனவளே

அப்போ போனஉசிர்

அப்புறமா திரும்பலையே

இப்போ தனிச்சுஎன்

உடல்மட்டும் நிக்கிறதே

சின்னச் சிரிப்பாலே

சிதறவிட்ட புன்னகையால்

கன்னக் குழியோரம்

கவுத்துஎனைப் போட்டவளே

கன்னங் கருங்கூந்தல்

காற்றிலாடும் ரட்டைஜடை

கண்ணில் இளசுகளை

கட்டிவைக்கும் பேரழகு

என்னை ஒருசிரிப்பில்

எங்கோ தொலைச்சுப்புட்டேன்

இன்னும் தேடுகிறேன்

இருக்குமிடம் நீயறிவாய்

கரும்புப் பார்வையொன்றை

காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய்

கலைஞ்ச எம்மனசு இப்போ

காற்றிலாடும் இலவம்பஞ்சு

***

ஊரும் ஒறங்கிருச்சு

ஊர்க்குருவி தூங்கிருச்சு

பச்சைப் பாய்விரிச்சு

பயிர்கூடத் தூங்கிருச்சு

இச்சை உடலடக்கி

இருக்கும் முனிவர்களும்

சற்றே தலைசாய்த்து

சாய்ந்திடும் சாமத்தில்

பித்துப் பிடிச்சமனம் உம்

பின்னாடி அலையும்மனம்

சற்றும் தூங்கலையே

சாமக்கோழி கூவிருச்சே

பிடிச்சஎன் நோய்தீர

பெருமருந்து உள்ளதடி

எடுத்துச் சென்றஉசிர்

எங்கிட்டத் தந்திடடி

***

சுத்துதடி சுழலுதடி

உச்சந்தலை கிறுகுதடி

சிரிக்கிமவ ஓன்நெனைப்பில்

சீவனே போகுதடி

பொட்டலம்நான் கட்டிவச்சேன்

பொடிமருந்தும் தடவிப்பாத்தேன்

வந்தவலி போகலையே

வாட்டியெனை வதைக்கிறதே

தீராத தலைவலியும்

தீரவழி உள்ளதடி

திருடிச்சென்ற எம்மனசு

திருப்பிஅதைத் தந்துடடி

***

உண்ண முடியுதில்லை

உருசையும் தெரியுதில்லை

உள்ள சோறுதண்ணி

எறக்க முடியுதில்லை

உன்னை நெனச்சமனம்

உண்ண மறுக்குதடி

என்ன செஞ்சுபாத்தும்

எனக்குப்பசி எடுக்கலடி

முன்னப்போல நானாக

மூணுவேளை உணவுண்ண

உங்கூட வந்துப்புட்ட

எம்மனசை தந்திடடி

***

உள்ள நெஞ்சுக்குள்ள

உதிரத்தால் கூடுகட்டி

உன்னை வச்சிருக்கேன்

உசிருக்கு உசிராக

பாவப்பட்ட ஆம்பிளைங்க

பாசத்துக்கு ஏங்குவாங்க

கண்ணீர்விட்டுக் கதறியழ

கடைசிவரை முடியாது

உன்னைக் கரம்பிடிக்கும்

எங்கனவு பலிச்சிடுமோ

ஊமைக் கனவுபோல

எங்காதல் ஆயிருமோ...?

****

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்துக்கு இன்னும் 3 கிழமை இருக்கும்போதே இந்த வாட்டுவாட்டுதே...

நெருங்க நெருங்க என்ன ஆகுமோ....? :wub:

காதலர் தினத்துக்கு இன்னும் 3 கிழமை இருக்கும்போதே இந்த வாட்டுவாட்டுதே...

நெருங்க நெருங்க என்ன ஆகுமோ....? :wub:

:D:wub:

நெசமா சூப்பரப்பா...

Edited by நெருப்பு நீலமேகம்

நன்றி நல்ல கவிதைக்கு....!

காதலர் தினம் இப்பவே களைகட்ட ஆரம்பிச்சிட்டு :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மௌனக்காதல் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்.. பொண்ணு பின்னாடி.. ரெம்ப ஓவரா வழியுறாரு..! வாளி வாளியா அள்ளியிருப்பாரோ..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஒருசிரிப்பில்

எங்கோ தொலைச்சுப்புட்டேன்

இன்னும் தேடுகிறேன்

இருக்குமிடம் நீயறிவாய்

நாட்டுப் புற பாட்ல் சுவையும்,அழகான காதல் தவிப்பும ....

........கவி வரியில் சொல்லபட்டு இருக்கிறது . பாராடுக்கள்.

உங்கள் மௌனக் காதலின் இந்த ஏக்கம், தவிப்பு, ஆசை, அன்பு எல்லாம் உங்கள் காதலியைக் கரம் பிடிச்சு, கனவு பலித்த பின்பும் மாறாமல் இதே அளவு இருக்குமோ? :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மௌனக் காதலின் இந்த ஏக்கம், தவிப்பு, ஆசை, அன்பு எல்லாம் உங்கள் காதலியைக் கரம் பிடிச்சு, கனவு பலித்த பின்பும் மாறாமல் இதே அளவு இருக்குமோ? :unsure::rolleyes:

என்னால முடியும்.. ஆனால் அந்த பொம்பிளையும் அப்படியே இருக்கனுமே..! அது சீக்கிரம் கிழவி ஆகிடுமே..! :lol::D

Edited by nedukkalapoovan

என்னால முடியும்.. ஆனால் அந்த பொம்பிளையும் அப்படி இருக்கனுமே..! அது சீக்கிரம் கிழவி ஆகிடுமே..! :lol::D

கிகிகீ... :D

அது சரி எப்புடியப்பா கவிதை எழுதுறது...நானும் எழுதோணும் எண்டு ஒவ்வொரு நாளும் பேப்பறையும் பேனையையும் எடுது விரிச்சு வச்சுட்டு நித்திரையாப்போயிடுறன்...எப்புடி உப்புடி அழகழகா தமிழ் வருகுதப்பா...என்னால முடியாதப்பா...அதெல்லாம் தானா வரோணும்...இழுத்துவச்சு வாவெண்டால் என்னெண்டு வரும்...? :(

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகீ... :D

அது சரி எப்புடியப்பா கவிதை எழுதுறது...நானும் எழுதோணும் எண்டு ஒவ்வொரு நாளும் பேப்பறையும் பேனையையும் எடுது விரிச்சு வச்சுட்டு நித்திரையாப்போயிடுறன்...எப்புடி உப்புடி அழகழகா தமிழ் வருகுதப்பா...என்னால முடியாதப்பா...அதெல்லாம் தானா வரோணோம்...இழுத்துவச்சு வாவெண்டால் என்னெண்டு வரும்...? :(

பிகரு ஒன்று படிஞ்சிட்டா எல்லாம் தானா வரும். அதுபோல.. படிஞ்ச பிகரு படி தாண்டிட்டா.. மூஞ்சி முழுக்க தாடியும் வரும்..! கவனம்.. இந்த கவிதை விளையாட்டு லேசான விளையாட்டில்ல..! :lol::D

பிகரு ஒன்று படிஞ்சிட்டா எல்லாம் தானா வரும். அதுபோல.. படிஞ்ச பிகரு படி தாண்டிட்டா.. மூஞ்சி முழுக்க தாடியும் வரும்..! கவனம்.. இந்த கவிதை விளையாட்டு லேசான விளையாட்டில்ல..! :lol::D

நெருப்பு நீலமேகம் ஏற்கெனவே தாடியும், தற்பாதுகாப்பிற்கு கையில அரிவாளோட தான் நிக்கிறார்... :lol:

நெருப்பு நீலமேகம் ஏற்கெனவே தாடியும், தற்பாதுகாப்பிற்கு கையில அரிவாளோட தான் நிக்கிறார்... :lol:

கிகிகீ..அதுதான் செல்வ் டிபென்ஸ்... :D

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு,நீலமேகம்,தமிழினி,கறுப்பி,நிலாமதி...

நெடுக்ஸிற்கு அப்படி என்னதான் காதல்மேல் கோபமோ தெரியவில்லை..கோபம்,பசி,பாசம்,துயரம்,சந்தோசம் இவை போலக் காதல் மனித உணர்ச்சியின் ஒரு அங்கமே..போராட்டம் நடக்கும் பூமியில்கூட காதல் உருவாகிறது...கடும் போரிலும் உயிராபத்துக்கள் நிறைந்த மரணம் கண்ணெதிரே தெரியும் களங்களில் கூட காதல் மலர்ந்திருக்கிறது...காதலித்து திருமணம் செய்த போராளிகளே இதற்குச் சாட்ச்சி..காதலி கிழவியானால் பழைய காதல் போயிடுமென்றால் உங்கள் மனைவி கிழவியானால் உங்கள் பழையபாசம் போயிடுமா..?இந்தக்கேள்வியை குட்டியிடமும் விடுகிறேன்..காதலைப்பாடிட பெண்கள் பின்னால் வளிய வேண்டும் என்ற அவசியம் இல்லை..நண்பனின் காதல்கூட கவிபாடத் தூண்டிடலாம்...பூமாலை யார்கையில் இருக்கிறதென்பதுதான் முக்கியம்..காதல் பூமாலை போல..குரங்கின் கைகளில் உள்ள பிய்ந்துபோன பூமாலையைப்பார்த்துவிட்டு பூமாலை அசிங்கம் என்றால் அது பூமாலையின் குற்றமல்ல..

Edited by ந.சுபேஸ்

காதலி கிழவியானால் பழைய காதல் போய்விடும் என்று நான் சொல்லவில்லை. பொதுவாக காதலிப்பவர்கள் எல்லாருமே அந்த நேரத்தில் தமது காதல் தெய்வீகம் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அதே காதலி/ காதலன் மனைவியாகவோ/ கணவனாகவோ கரம்பற்றிய சிறிது காலத்தில் 'காதல் கண்ணை மறைசிடுது' 'love is blind' என்று எல்லாம் உளறுவதையும், தடம் புரண்டு வேறு வழி போவதையும் பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில் தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு வித போதை.. போதையில் பன்னிக் குட்டிகூட அழகாத்தான் தெரியும். போதை தெளியும் போது தான்.. பலருக்கே உலகம் தெரியுது. இதுதான் மனித வாழ்வியல் கோலம் இந்த உலகில்..! இதெல்லாம் புத்தி சொல்லி சனம் திருந்திற மாற்றரே இல்லை. அனுபவிச்சு உபத்திரபப்பட்டு தான் திருந்துங்கள். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக கவிதை எழுதுகிறீர்கள் பாராட்டுகள்...உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகள்.

என்னால முடியும்.. ஆனால் அந்த பொம்பிளையும் அப்படியே இருக்கனுமே..! அது சீக்கிரம் கிழவி ஆகிடுமே..! :lol::D

பெண்கள் மட்டும் தான் கிழவியாய் போவார்கள் ஆண்கள் அப்படியே குமரனாகவே இருப்பார்கள் :lol: :lol: :lol:

பெண்கள் மட்டும் தான் கிழவியாய் போவார்கள் ஆண்கள் அப்படியே குமரனாகவே இருப்பார்கள் :lol: :lol: :lol:

நாங்கள் அடிக்கடி கண்ணாடி பார்ப்பதில்லை. அதனால் கிழவனாவது தெரியவருவதில்லை.

கோபம்,பசி,பாசம்,துயரம்,சந்தோசம் இவை போலக் காதல் மனித உணர்ச்சியின் ஒரு அங்கமே..

அப்ப ஏன் மற்றதெல்லாத்தையும் விட்டு விட்டு காதலை மட்டும் இந்தப்பாடு படுத்துகிறீர்கள்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் மற்றதெல்லாத்தையும் விட்டு விட்டு காதலை மட்டும் இந்தப்பாடு படுத்துகிறீர்கள்? :lol:

எல்லாவற்றைப்பற்றியும்தான் பாட்டெழுதுகிறார்கள்..உதாரணத்திற்கு...வலிகளைப் பாடும் தீபச்செல்வனின் கவிதைகள்..ஆனால் என்ன காதலை கொஞ்சம் அதிகமாகவே பாடுகிறார்கள்..அதற்கு சினிமாவும் ஒருகாரணம்...சினிமாப்பாடல்கள் அதிகமானவை காதலைப்பற்றியவை..ஆனால் வாழ்க்கையின் பாடுகளைப் பாடும் எழுத்துக்கள் எப்பொழுதும் வந்துகொண்டேதான் இருக்கின்றன..

Edited by ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு வித போதை.. போதையில் பன்னிக் குட்டிகூட அழகாத்தான் தெரியும். போதை தெளியும் போது தான்.. பலருக்கே உலகம் தெரியுது. இதுதான் மனித வாழ்வியல் கோலம் இந்த உலகில்..! இதெல்லாம் புத்தி சொல்லி சனம் திருந்திற மாற்றரே இல்லை. அனுபவிச்சு உபத்திரபப்பட்டு தான் திருந்துங்கள். :lol::D

அதெல்லாம் தங்களைப்போன்ற சாதாரண மனிதப்பிறவிகளுக்கு...

நாங்கள், எங்கள் காதல் ....

அதையும் தாண்டி........................ :wub::wub::D

சபேஷ் நல்லதொரு நாட்டார் பாடல்கள் வரிசையில் அமைந்த ஒரு கவிதை. காதலும் நிச்சயம் வெற்றி பெரும். :)

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் கரம்பிடிக்கும்

எங்கனவு பலிச்சிடுமோ

ஊமைக் கனவுபோல

எங்காதல் ஆயிருமோ...?

அதுதான் சொல்லிட்டிங்கள்தானே இனிக் கிடைச்சி...டும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி,தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.