Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு மிகப் பிடித்த இயக்குனர் பாலாவின் நல்லதொரு பேட்டி

Featured Replies

கே.துரை, விருதுநகர்.

''தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்?''

''பின்னாடி கால் கிலோ கறி... நல்லி எலும்பு மாதிரி கையும் காலும். அதுக்கு ஒரு தலை... அதுல ஒரு கனம் வேறயா?''

எஸ்.மரிய இருதயம், தூத்துக்குடி.

''அறியாமையை அறிந்துவிடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையா?''

''கண்டுபிடிச்சுட்டியே ராசா!''

வி.திவ்யா ஷங்கர், சென்னை-17.

''புதுமுகங்களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தும் தைரியம் உங்களுக்கு இல்லையா?''

''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் எல்லோரும் என்னிடம் புதுமுகங்கள்போல்தான் வந்தார்கள். எனக்குத் தேவைப்பட்ட விதத்தில் அவர்களை நான் வடிவமைத்துக்கொண்டேன். அதற்கான அர்ப்பணிப்பு அவர்களிடம் இருந்ததையும் குறிப்பிட வேண்டும்.

என் திரைப்படங்கள் கேட்பது ஒரு நடிகனைத்தான். நட்சத்திரத்தை அல்ல.

ஓ.கே... இப்போ சொல்றேன், என் அடுத்த படத்தின் கதாநாயகன்... நிச்சயமாக ஒரு புதுமுகம்தான்!''

எம்.ஜவஹர்லால், தக்கலை.

''உலக சினிமாவை தமிழ் சினிமாவோடு ஒப்பிட முடியுமா?''

''தமிழ் சினிமாவும் உலக சினிமாதான்பா! நாங்க மட்டும் என்ன செவ்வாய்க் கிரகத்திலா படம் எடுக்கிறோம்?''

பெரியார் பிரியன், திருச்சி.

''நீங்கள் நாத்திகம் பேச யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?''

''நாத்திகத்தை யாரும் கற்றுத்தர முடியாது. அதை உணர வேண்டும். எனக்கு உணர்த்தியது அகால மரணங்கள். ஜானி என்ற என் ஆட்டுக் குட்டியிடம் ஆரம்பித்த பாடம் அது. இதோ, ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பு வரை இவ்வளவு கொடுமைகளைப் பார்த்த பிறகும், நாத்திகம் பேசாமல் இருக்க முடியுமா?''

ஆர்.தமிழ்ச்செல்வி, திருத்தங்கல்.

''அது ஏன் எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களைப்பற்றியே படங்கள் எடுக்கிறீர்கள். அவார்டு வாங்கத்தானே?''

''வி...ளி...ம்...பு... நி...லை. எங்கே பிடிக்கிறீங்க இந்த வார்த்தைகளை எல்லாம்?

மனித வாழ்வின் அற்புதமும், அவலமும், அழகும், குரூரமும் பராக் ஒபாமாவிடமும் பார்க்கலாம். பட்டிவீரன்பட்டி முருகேசனிடமும் பார்க்கலாம். இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் விளிம்பு நிலை மனிதர்கள்தான்.

என்னை நான் கண்ணாடியில் பார்ப்பதுபோலத்தான் என் திரைப்படங்களையும் எடுக்கிறேன்!''

வி.கோபி, சென்னை-41.

'' 'நான் பாலாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே மணிரத்னம் சொல்கிறார். அதிகம் பேசாத இருவர் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள் என்று அறிய ஆசை. பேசியதைச் சொல்ல முடியுமா?''

''சொன்னால் சிரிப்பீர்கள்!

ஒருமுறை நான் எங்கோ சென்றுகொண்டு இருக்கையில், மணி சாரிடம் இருந்து எனக்கு போன். அவசரமாக காரை ஓரம் நிறுத்திவிட்டுப் பேசினேன். 'இங்கியே இருந்துட்டு இருக்கக் கூடாது பாலா. வேற லெவல் போகணும். உங்களுக்கு என் ஃப்ரெண்டு ஒருத்தர் பேசுவார். ஃபெஸ்டிவல்ஸுக்குப் படம் அனுப்புங்க.ஓ.கே -வா?’ என்றார். அதன் பிறகே, என் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. அந்த அன்பு, அக்கறைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

மற்றபடி மணி சாரை எங்கே சந்தித்தாலும், எத்தனை முறை சந்தித்தாலும், அவர் 'ஹாய் பாலா’ என்பார். நான் பதில் வணக்கம் வைப்பேன். அவ்வளவுதான் எங்களுக்குள் உரையாடலே!

என் மனசுக்குள் இருப்பதை எல்லாம் பேசுவேனா அல்லது, பேசாமலேயே இருந்து விடுவேனோ... தெரியாது!''

எம்.திலீப், ஊட்டி.

''உலக சினிமாவில் இருந்து என்னென்ன காட்சிகளைச் சுட்டு இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள் சார்?''

''என் பாட்டி சுட்ட வடையே எனக்குப் போதும். எவளோ ஒரு வெள்ளைக்கார அம்மத்தா சுட்ட பீட்ஸா, பர்கர் எல்லாம் எனக்குச் செரிக்காது!''

ஆ.மணிமேகலை, மதுரை-2.

'' 'சேது’, 'நந்தா’, 'நான் கடவுள்’ என உங்கள் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் மரணம் அடைவது ஏன்?''

''என் அதீத அன்பு காரணமாக இருக்கலாம். பொசசிவ்னெஸ்!''

எம்.சங்கரப்பன், பொள்ளாச்சி.

''பாலா ஒரு சுய மதிப்பீடு?''

''நானோர் பரதேசி...

நல்லோர் கால்தூசி!''

ஆர்.திலகராஜ், வத்தலக்குண்டு.

''பாலாவின் ஜாலியான பக்கம் எது?''

''நண்பர்கள்... குடி... கும்மாளம்... அரட்டைக் கச்சேரிதான். செம காமெடியான கும்பல் நாங்கள். ஊர் உலகத்தைப்பற்றிய கவலையே இல்லாமல் கூத்தடிப்போம்.

நிறையப் பழைய பாடல்கள் பாடிக்கொண்டே இருப்போம். 'நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன். இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன். நன்மை செய்து... துன்பம் வாங்கும்... உள்ளம் கேட்பேன்’ என்ற வரிகளையே 24 மணி நேரமும் திருப்பித் திருப்பிப் பாட ஒரு அப்பனையே நான் தத்து எடுத்து வளர்க்கிறேன். அந்த அப்பனையும் மாமா என்றுதான் அழைப்பேன். நாங்க டுபிட் ஃபெல்லோஸ்!''

சா.அப்பாஸ் மந்திரி, தென்காசி.

''கற்பனை வளம் என்பது மண் சார்ந்ததா? இப்போது தமிழ் சினிமாவில் தெற்கத்தி இயக்குநர்கள் அதிகமாக இருப்பது அதனால்தானா?''

''கற்பனை வளம் என்பது மண் சார்ந்தது இல்லை. அது, மனம் சார்ந்தது. அனுபவம்தான் படைப்புகளின் ஆணிவேர்.

எல்லோருக்கும் நேரும் பிரச்னையையும் படமாக எடுக்கலாம். அல்லது எங்கோ, எவனுக்கோ நேர்ந்ததை எல்லோரையும் பாதிக் கும்படியும் படம் எடுக்கலாம். அதை ஓர் அனுபவமாக ஆக்குவதில்தான், அந்தக் கலை நேர்த்தியில்தான் ஒரு படைப்பு உருவாகிறது. இதில் தெற்கத்தி, வடக்கத்தி, அட்டைக் கத்தி என்று தனியாக எதுவும் இல்லை!''

லெனின் ஸ்டாலின், கோவை-21.

''ஏன் ஒரு படம் எடுக்க உங்களுக்கு வருடக்கணக்கில் ஆகிறது?''

''நீங்கள் என் தயாரிப்பாளராக இருந்தால், உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமை. ஆனந்த விகடனில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தினம் காலையில், 'ஐயோ... பாலா படம் இன்னிக்கும் வரலியே’ என யாராவது பட்டினிகிடக்கிறார்களா என்ன?

என் முதல் படத்தை எடுக்க எனக்கு 30 வருஷம் ஆச்சுங்க. என் படத்தின் வரவு- செலவுக் கணக்குகள், ஏன் தாமதமாகின்றன என்பதெல்லாம் அந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் கவலை.

மற்றபடி, எனக்காகத் தங்கள் வாழ்நாளின் இரண்டு மணி நேரத்தைத் தரும் பார்வையாளர் ஒவ்வொருவருக்கும், நான் என் படைப்பின் மூலம் மட்டுமே கடமைப்பட்டவன். அந்த இரண்டு மணி நேரம் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், என்னை எப்படி எட்டி மிதிப்பீர்கள் என்று தெரியும். படம் பிடிச்சிருந்ததா, இல்லையான்னு மட்டும் பாருங்களேன். என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்!''

விக்னேஷ்வரன், மதுரை.

''விதவிதமான மாலைகளை அணிவது ஏன்?''

''மண்டை ஓட்டு மாலையைக் கேட்கிறீர்களா? 'எதுவும் நிரந்தரம் அல்ல’ என எனக்கு நானே உணர்த்திக்கொள்ள அணிகிறேன்!''

சி.சாய் ரமேஷ், உசிலம்பட்டி.

''உங்கள் படம் பற்றிய தகவல்களை மூடிவைத்து, அவ்வப்போது ரிலீஸ் செய்வதே பில்டப் ஏற்றி, படத்தைப் பார்க்கத் தூண்டும் உத்திதானே?''

''உத்தியோ, புத்தியோ இருந்தால், என் முந்தைய படம் ஓடி இருக்க வேண்டுமே? அது போக, மூடி மறைக்க, நான் என்ன கள்ளச் சாராயமா காய்ச்சுகிறேன்?''

எஸ்.லலிதா, செங்கல்பட்டு.

''இயக்குநர்கள் எல்லோரும் நடிக்க வருகிறார்களே... நீங்கள் ஏன் நடிக்கக் கூடாது?''

''மேடம் கலாய்க்கிறாங்களாமாம்!

நான் ஏன் தனியா சினிமாவில் நடிக்கணும்? அதான், நிஜ வாழ்க்கையிலேயே... என் மனைவியிடம், நண்பர்களிடம், தயாரிப்பாளர்களிடம் எல்லாம் நடிச்சுட்டே இருக்கேனே... ரொம்ப நல்லவன் மாதிரி!''

பி.ராமச்சந்திரன், பாண்டிச்சேரி-3

''நான்கே படங்களில் இவ்வளவு பெரிய பெயர் வாங்கியது பெருமையாக இருக்கிறதா?''

''கூச்சமாக இருக்கிறது!''

மிகுதி அடுத்த வாரம்

நன்றி: ஆனந்த விகடன்

Edited by நிழலி

:lol:

நெத்தியடி. அருமையான பதில்கள்.

பாலா 2003 இல் தன்னைப்பற்றி, சினிமாவுக்கு வந்ததைப் பற்றி ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதியிருந்தார். அதுவும் நன்றாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இணைப்பு.

நன்றி

நல்ல இணைப்பு.

நன்றி

கு.சாவின் ஜாலியான பக்கம் எது?

கள்ளுக் கொட்டில் Interests:கள்ளடித்தல்,சுருட்டடித்தல்

''பாலாவின் ஜாலியான பக்கம் எது?''

''நண்பர்கள்... குடி... கும்மாளம்... அரட்டைக் கச்சேரிதான். செம காமெடியான கும்பல் நாங்கள். ஊர் உலகத்தைப்பற்றிய கவலையே இல்லாமல் கூத்தடிப்போம்.

ஏன் ? இந்த ஒற்றுமையாலோ :D:D:D:D

''பாலாவின் ஜாலியான பக்கம் எது?''

கஞ்சாவும் உண்டு என வாசித்துள்ளேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தப் பேட்டி பிடித்திருக்கிறது...தற்போது இருக்கும் டைரக்ட‌ரில் பாலா,செல்வராகவன் போன்றவர்கள் துணிச்சலானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பேட்டி, நகைச்சுவையாகவும் இருந்தது! :D

நன்றி நிழலி!! :D

  • கருத்துக்கள உறவுகள்

''உங்கள் படம் பற்றிய தகவல்களை மூடிவைத்து, அவ்வப்போது ரிலீஸ் செய்வதே பில்டப் ஏற்றி, படத்தைப் பார்க்கத் தூண்டும் உத்திதானே?''

''உத்தியோ, புத்தியோ இருந்தால், என் முந்தைய படம் ஓடி இருக்க வேண்டுமே? அது போக, மூடி மறைக்க, நான் என்ன கள்ளச் சாராயமா காய்ச்சுகிறேன்?''

:lol::lol:

சுவாரசியமான பேட்டி. பாலாவின் நான் கடவுள் வித்தியாசமான படம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலவைப்போல் உள்ளதை உள்ளபடி சொல்லும் துனிச்சல் பெரியாளாகிப் பேர் வாங்கிய திரைப்படத்துறயில் உள்ள எத்தனை பேருக்குவரும்..?நான் இப்படித்தான் எனக்குப்பிடிச்சது சரியென்று பட்டது இதுதான் அதனால் அப்படி வாழ்கிறேன்..இதுதான் என் வாழ்க்கை ஒன்றும் ஒழிவு மறைவில்லை..பெரிய இடத்தில் இருந்தாலும் எந்த ஈகோவும் எனக்கில்லை..நான் தான் பாலா..இவரை மாதிரிதான் இயக்குனர் பாரதிராஜாவும்..அக்சுவலி என்று தொடங்குபவர்கள்தான் அதிகம் தமிழ் சினிமாவில்.. இந்த பேட்டியைப்படிக்கும்போது ஒராள் என் நினைவுக்கு வருகிறார்..நல்ல இசையை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்..நான் இன்றைக்கும் அவரின் இசைக்கு ரசிகன்..ஆனால் அவரின் வாழ்க்கை முறைக்கு அல்ல..ஈகோவின் மொத்தவடிவம்..இசை**தான்..

  • தொடங்கியவர்

பாகம் 2

''ரஜினி-கமல் இவர்களை வைத்து படம் இயக்கு வீர்களா?''

''சத்தியமாக... நிச்சயமாக... உங்கள் கேள்வியின் மீது ஆணையாக... மாட்டேன் மாட்டேன் மாட்டேன்!

ஏன்னா... அவர்களும் என்னிடம் மாட்டவே மாட்டார்கள்!''

சிவகாமி, பொள்ளாச்சி.

''லைலாவைப்போல இன்னொரு நடிகை கிடைப்பாரா உங்களுக்கு?'' ''கிடைத்தாளே... பூஜா என்று ஒரு ராட்சஸி!''

த.அசோக், மதுரை-11.

''உங்களிடம் தொழில் கற்றுக்கொள்ள விரும்பி துணை இயக்குநராக வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன?''

''என்னிடம் இல்லாத எல்லாத் தகுதிகளும்!''

ஐ.சி.எப்.சுந்தரராஜ், சென்னை-53.

''மாற்றுத் திறனாளி’களையும் 'நான் கடவுள்’ படத்தில் நடிக்கவைத்தீர்கள். ஓ.கே! ஆனால், அவர்களை ரொம்பவும் இம்சைப்படுத்திவிட்டீர்களே... இது நியாயமா?''

''இம்சைப்படுத்தினேன் என்று எவன் சொன்னது? அந்த 300 பேரையும் என் குழந்தைகளாகத்தான் பார்த்துக் கொண்டேன். இன்றும் என்னைத் தேடி வந்து என் மடியில் விளையாடும் குழந்தைகள் அவர்கள். குழந்தைகளை எந்த அப்பனாவது கொடுமைப்படுத்துவானா?''

சுப்புலட்சுமி ராகவன், திருவல்லிக்கேணி.

'' 'பாலா-லைலா காதல்’ என்று முன்பு கிசுகிசு வந்ததே? அது என்ன ஆச்சு?''

''நேக்கும் கல்யாணம் ஆயிடுத்து. அவாளுக்கும் கல்யாணம் ஆயிடுத்து. செத்த சும்மா இருக்கேளா மாமி!''

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

'' 'நான் கடவுள்’ படத்தை எடுக்க தங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த விஷயம் எது?''

''நம் வாழ்வின், வழியெல்லாம் எதிர்ப்படும் எல்லாப் பிச்சைக்காரர்களும், ஏழாம் உலகமும்!''

லெனின் பிரசன்னா, திண்டிவனம்.

''இயக்குநர்கள் சங்க விழாவில், 'என் குருநாதர் பாலுமகேந்திராவிடம் இருந்துதான் தங்க அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வேன்’ என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தது ஏன்?''

''குழந்தை என்றால், பிடிவாதம் பிடிக்கத்தானே செய்யும். மேலும், அந்தத் தங்க அடையாள அட்டைக்கு சொந்தக்காரரே அவர்தானே!''

ச.மங்கையர்க்கரசி, கொடைக்கானல்.

''உங்கள் மகளுக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்?''

''அகிலா!

அம்மாவைப் பேர் சொல்லி அழைக்க முடியாத சங்கடத்தால், சும்மா பேருக்குப் பிரார்த்தனா!''

க.பக்திவிசுவாசம், மலையடிப்பட்டி.

''எனக்குப் பிடித்த இயக்குநர் நீங்கள். தங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?''

''ஆமா, இது உங்களுடைய உண்மையான பேர்தானே? அப்படி என்றால், கேள்வியும் நீயே... பதிலும் நீயே!''

ஆதிரை வேணுகோபால், சென்னை-94.

''ஏன்டா சினிமாவுக்கு வந்தோம் என்று என்றாவது ஒருநாள் நினைத்தது உண்டா?''

''தினமும்! அதிகாலைகளில் என்னை எழுப்பும்போது எல்லாம்!''

மதுரை முருகேசன், தஞ்சாவூர்.

''நடிகர் திலகத்தின் எந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டீர்கள்?''

'' 'முதல் மரியாதை’!''

ஆ.சுரேஷ், துறையூர்.

''உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?''

''தினத்தந்தியின் கன்னித் தீவு படக் கதை யின் படைப்பாளி. ஆனா, அந்த சார் பேர் தெரியலியே!''

த.கதிரவன், தூத்துக்குடி.

''இயக்குநர் பாலா ஆனதால், நீங்கள் பெற்ற தும் இழந்ததும் என்ன?''

''பெற்றதும் சுகம்... இழந்ததும் சுகம்!''

பா.செல்வி, செனை-91.

'' 'இந்தப் படத்தை நான் எடுத்திருக்க வேண் டும்!’ என்று ஏதேனும் ஒரு படத்தைப் பார்த்து நினைத்தது உண்டா?''

''நிறைய... சமீபத்தில் 'நந்தலாலா’!''

சி.எம்.கேசவன், மன்னார்குடி.

''உங்களுடைய மனைவி, குழந்தைக்காக விட்டுக்கொடுத்த விஷயம் ஏதாவது!''

''சுய மரியாதை!

கால்ல விழறதுதான்... வேறென்ன!''

வீ.பூபாலன், நாகப்பட்டினம்.

''நடிப்பைப் பொறுத்த வரை ரஜினி-கமல் இருவரில் யார் உங்கள் சாய்ஸ்?''

''இருவரும் இல்லை. சிவாஜி கணேசன். (பதில் உபயம்: கமல்ஹாசன்!)''

எல்.வித்யா, செந்துறை.

''யாருடைய இறப்புக்குப் பிறகு... அவருடைய பிரிவுக்காக வருத்தப்பட்டீர்கள்?''

''பழனிச்சாமி என்ற என் 'அப்பா’...வி!''

கி.பாலு, திருப்பூர்.

'' 'தவறு செய்துவிட்டோமே என மனம் கலங்கி நின்ற சம்பவம் ஒன்றைச் சொல்லுங்களேன்...''

''அது நிறைய உண்டு. சமீபத்திய தவறு... விகடன் மேடையில் பதில்கள் சொல்ல சம்மதித்தது. அறிவிப்பு வந்த நாளே, என் மனைவியிடம் இருந்து எனக்கு ஒரு வேண்டுகோள். 'உண்மையைப் பூராம் சொல்றோம்னு எதையாச்சும் உளறி, எல்லாரும் என்னைப் பரிதாபமாப் பாக்கிற மாதிரி பண்ணிடாத மாமா’ என்றாள்.

கலங்காதிரு மனமே!''

-அடுத்த வாரம்...

-பாலா பதில்கள் தொடர்கின்றன...

நன்றி: ஆனந்த விகடன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலவைப்போல் உள்ளதை உள்ளபடி சொல்லும் துனிச்சல் பெரியாளாகிப் பேர் வாங்கிய திரைப்படத்துறயில் உள்ள எத்தனை பேருக்குவரும்..?நான் இப்படித்தான் எனக்குப்பிடிச்சது சரியென்று பட்டது இதுதான் அதனால் அப்படி வாழ்கிறேன்..இதுதான் என் வாழ்க்கை ஒன்றும் ஒழிவு மறைவில்லை..பெரிய இடத்தில் இருந்தாலும் எந்த ஈகோவும் எனக்கில்லை..நான் தான் பாலா..இவரை மாதிரிதான் இயக்குனர் பாரதிராஜாவும்..அக்சுவலி என்று தொடங்குபவர்கள்தான் அதிகம் தமிழ் சினிமாவில்.. இந்த பேட்டியைப்படிக்கும்போது ஒராள் என் நினைவுக்கு வருகிறார்..நல்ல இசையை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்..நான் இன்றைக்கும் அவரின் இசைக்கு ரசிகன்..ஆனால் அவரின் வாழ்க்கை முறைக்கு அல்ல..ஈகோவின் மொத்தவடிவம்..இசை**தான்..

இளையராஜாவை சொல்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவை சொல்கின்றீர்களா?

ஆம் அண்ணை..

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் இளையராஜா ஏன் இப்படி தலைக்கனத்தோடு இருக்கிறார் என்று கவலையா இருக்கும். இப்ப தமிழ்நாடும், இந்தியாவும், தமிழர் நிலையையும் இருக்கும் இருப்பைப் பார்க்கும்போது இளையராஜாவின் பாணிதான் சரி போல் தோன்றுது. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்ரை சோலியும் எனக்கு வேண்டாம்.... என்ரை சோலியும் உனக்கு வேண்டாம்... எண்டு ......நானும் என் பாடும் எண்டு இருந்தாலே அதுவும் தலைக்கனம். :D

  • கருத்துக்கள உறவுகள்

உன்ரை சோலியும் எனக்கு வேண்டாம்.... என்ரை சோலியும் உனக்கு வேண்டாம்... எண்டு ......நானும் என் பாடும் எண்டு இருந்தாலே அதுவும் தலைக்கனம். :D

கூழைக்கும்பிடு போடாதவனெல்லாம் தலைக்கனம் பிடிச்சவன்தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மேதைகளாய் இருப்பவர்களிடம் கொஞ்சம் மேல்கனமும் இருக்கத்தான் செய்யும்! ஆனால் இப்ப எவ்வளவோ பரவாயில்லை போல் தெரிகின்றது. அதாவது ARR ன் ஆஸ்காருக்குப் பின். :)

  • தொடங்கியவர்

மூன்றாம் பகுதி

'' 'அவன் இவன்’ எப்படிப்பட்ட படம் பாலா? ஜாலியான கலாய்ப்பா அல்லது நெஞ்சைப் பிழியும் டிராஜெடியா?''

''விஷால் பேரு... வால்டர் வணங்கா முடி. ஆர்யா பேரு... கும்பிடுறேன் சாமி.

ஒருத்தன்... அடிச்சுட்டே இருப்பான். இன்னொருத்தன்... அடி வாங்கிட்டே இருப்பான். அடிக்கிறவன்கிட்ட கோபம் இருக்காது. அடி வாங்குறவனும் வருத்தப்பட மாட்டான். வந்து பாருங்க வேடிக்கையை!''

பா.மோகன், சென்னை-63.

'' 'நான் கடவுள்’ படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்து, பிறகு ஏதோ மோதலில் விலகினீர்களே... என்னதான் நடந்தது?''

''அப்படி எல்லாம் என்னுடன் யாரும் மோதிவிட முடியாது. எப்போதும், யாரிடமாவது நான்தான் மோதுவேன். முட்டாள்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக, நான் நடந்துகொண்டேன். தவறு என்னுடையதுதான். அந்த வருத்தம் இப்போதும் இருக்கிறது. ஆனால், அதற்காக நான் கவலைப்படவில்லை!''

கே.சாந்தகுமாரி, நாகர்கோவில்.

''மிகைப்படுத்தாமல் இயல்பாக இருப்பதே நடிப்புக்கான உங்கள் இலக்கணம் என நினைக் கிறேன். தற்போதைய நடிகர்களில், உங்கள் இலக்கணத்தில் பொருந்துபவர் யார்?''

''இலக்கணமா? என் இலக்கணத்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்க!

பொதுவாக, நடிகர்கள் இலக்கணமற்று இருப்பதுதான் அழகு. அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாசித்தும், மிகைப்படுத்த வேண்டிய இடத்தில் புகுந்து விளையாடவும் வேண்டும். நடிப்பில் காற்றுக்கென்ன வேலி... கடலுக்கென்ன மூடி!''

எம்.ஜெயக்குமார், வேலூர்-3.

''எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் உங்களுடன் பணியாற்றியவர்கள். ஒப்பிட முடியுமா?''

''ஜெயமோகன் - பேசிவிட்டுச் சிரிப்பார். எஸ்.ராமகிருஷ்ணன் - சிரித்துவிட்டுப் பேசுவார். ஜெயமோகன், சரமாரியாகச் சந்தே கங்கள் கேட்டே கொல்வார். எஸ்.ராம கிருஷ்ணன் - கருத்து சொல்லிச் சொல்லியே கொல்வார். ஜெயமோகன் எதையாவது விவகாரமாக எழுதிவிட்டு, யாராவது அடிக்க வந்தால், ஓடி ஒளிய இடம் தேடி என்னிடம் வருவார். எஸ்.ராமகிருஷ்ணன், படம் முடியும் வரை என் பக்கத்திலேயே இருந்துவிட்டு, முடிந்தவுடன் ஓடி ஒளிந்துவிட்டார்!

ஆனால், 'அறிவினம் சேர்’னு பெரியவர்கள் சொன்னதால், பல்லைக் கடிச்சுக்கிட்டு இருவரிடமும் பொறுமையா இருக்கேன். அவர்கள் என்னைச் சகித்துக்கொண்டு இருப்பதும் அன்பால் மட்டுமே!''

கி.மனோகரன், பொள்ளாச்சி.

''உங்கள் இயக்கத்தில், உங்களின் குருநாதர் இயக்கத்தில் உங்களுக்கு மன நிறைவைத் தந்த படங்கள் எவை?''

''என் படங்களில் இதுவரை இல்லை. அவர் படங்களில்... 'வீடு’, 'சந்தியாராகம்’ இரண்டும்!''

எம்.வெற்றி, பையூர்.

''பாலா... பணம் சம்பாதிக்கச் சிறந்த இடம் சினிமாவா... அரசியலா?''

''இரண்டையும்விட, இப்போதும் எப்போதும்... ஆன்மிகம்!''

எஸ்.கே.தனபாண்டியன், மதுரை-4.

'' 'சேது’ பாலாவுக்கும், 'அவன் இவன்’ பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?''

''அவன்... பிளாட்ஃபாரக்காரன். இவன்... வாடகை வீட்டுக்காரன்!''

மா.விஜயலட்சுமி, சேலம்-5.

''விக்ரம், சூர்யா, ஆர்யா மூவரும் உங்களிடம் இரண்டாவது படமும் நடித்ததுபோல், விஷாலும் உங்களிடம் இன்னொரு படம் நடிப்பாரா?''

''தெரியலையே! போன வாரம் படப்பிடிப்பு முடிந்ததும், பின்னங்கால் பிடறியில் பட விஷாலும் ஆர்யாவும் ஓடிய ஓட்டம் இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது.

யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க. என் காலம் வெல்லும், வென்ற பின்னே... வாங்கடா வாங்க!''

வா.குழந்தை, மன்னார்குடி.

'' 'நான் கடவுள்’ படத்துடன் உங்களின் சரக்கு தீர்ந்துவிட்டது என்கிறேன். நீங்கள் என்ன சொல் கிறீர்கள்?''

''சரக்கு இருக்கும் வரை சரக்கு தீராது. புரிந்துகொண்டவர்கள் புரிந்துகொள்ளுங்கள்... புரியாதவர்கள்... புரிந்துகொண்டவர்களிடம் தெரிந்துகொள்ளுங்கள்!''

எஸ்.கே.ரித்திகா, துறையூர்.

''காசியில் உங்களை மிகவும் பாதித்த சம்பவம் எது?''

''லோட்டா பாபா!

நர மாமிசம் உண்ணும் அகோரி அவர். 'நான் கடவுள்’ படத்தில் அவரை நடிக்க வைத்தேன். என்றோ ஒருநாள், அவரிடம் நான் எதிர்பார்த்த முகபாவம் வரவில்லை எனக் கோபத்தில் ஏதோ திட்டிவிட்டேன். பச்சைக் குழந்தைபோல தேம்பித் தேம்பி அழுதார். உறவுகளை அறுத்து, உலகம் வெறுத்து, நர மாமிசம் உண்டு வாழும் அகோரிக்குள் இப்படி ஒரு குழந்தை மனசா? அவரைப் போய் வருத்தப்படுத்திவிட்டேனே!''

செ.பவுன்துறை, திருநெல்வேலி.

''ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பும், இயக்கி முடித்த பின்பும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''நாளை மற்றுமொரு நாளே!

உங்களுக்கு ஒரு நாளும் மறுநாளும் எப்படி இருக் குமோ... அப்படியேதான் எனக்கும். எல்லோருக்கும் ஏதேதோ ஒரு தொழில் இருப்பதுபோல, என் தொழில்... திரைப்படம் எடுப்பது, அவ்வளவுதான். மற்றபடி, இதை ஏதோ மகத்தான காவியம்போல உயர்த்தாதீர்கள். ஒவ்வொரு படமும் ஓர் அனுபவம். அவ்வளவுதாங்க!''

மு.பவித்ரா, திருப்பூர்.

''அழகானவர்களை அழுக்கானவர்களாகக் காட்டுவதில் உங்களுக்கு அப்படி என்ன ஆர்வம்?''

''ம்... என்னைவிட எவனும் அழகா இருக்கக் கூடாதுன்னுதான்!

ஒரு நடிகன், அந்தக் கதாபாத்திரமாக மாற வேண்டும் என்றால், அப்படிக் கொஞ்சம் மெனக் கெட்டால் நல்லது. அது அந்த கேரக்டரின் நம்பகத் தன்மையைக் கூட்டும்!''

-அடுத்த வாரம்...

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.