Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவளின் துரோகம்

Featured Replies

நல்ல ஒரு குறும்படம் குட்டி. என்னமோ தெரியல்ல பல தெரிந்தவர்களின் முகங்கள் நினைவில் வந்து போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறங்கடி வெளியிலை

படம் எண்டபடியாலை வார்த்தையோடை முடிஞ்சுது.

எனக்கு இப்பிடியொண்டு நடந்துதெண்டால் என்ரை கராட்டி வித்தையிலைதான் சிங்கியின்ரை கதை முடிஞ்சிருக்கும் :huh:

  • தொடங்கியவர்

படம் எண்டபடியாலை வார்த்தையோடை முடிஞ்சுது.

எனக்கு இப்பிடியொண்டு நடந்துதெண்டால் என்ரை கராட்டி வித்தையிலைதான் சிங்கியின்ரை கதை முடிஞ்சிருக்கும் :huh:

ஒரு மனதை புரிந்து கொள்ளாமல் தூக்கி எறிஞ்சிட்டு போறவையளை பேசாமல் விட்டுடவேணும். படத்தில மனட்சாட்சி சொல்லுறது போல ஒரு நாளைக்கு உணருவினம்... அது தான் அவைக்குக் கிடைக்கும் ஆயுள் தண்டனை. :)

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி எத்தினையை எடுத்துப் போட்டாலும்.. உந்த ஏமாத்திற கூட்டம் திருந்தப் போறதே இல்லை. இதுகளுக்காக ஒருத்தன் ஒரு துளி கண்ணீர் விடுவதே வீண்..! போனாளா.. தொலைஞ்சு சனி என்று விட்டுத் தொலைச்சிடனும்..! உதுகளை நினைக்கவே கூடாது...! எப்படித்தான் ஒரு அருவருப்பில்லாமல் பல ஆண்களோட காதல் என்ற போர்வையில வாழுதுகளோ.. அதுகளுக்கே வெளிச்சம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. உது மாதிரிதானே உங்கட பலகலைக் கழக அனுபவமும்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. உது மாதிரிதானே உங்கட பலகலைக் கழக அனுபவமும்? :wub:

எங்களை ஏமாற்றிப் போறது பெரிய விடயம் அல்ல. நாங்க யாரையும் தடுத்து நிறுத்தி நான் உன்னை காதலிக்கிறன்.. நீயும் என்னைக் காதலி.. என்று கெஞ்சிக் கொண்டு திரியமாட்டம். விரும்பினா வாடி இல்லைப் போடி.. நமக்கென்ன வந்திச்சு என்று போய்க்கிட்டு இருப்பமில்ல..! கூட வந்தா உனக்கும் வாழ்க்கை இல்லைன்னாலும் எமக்கு வாழ்க்கை இருக்குது. முன் பின் முற்றிலும் அறியாத ஒரு பெட்டை எங்களை தீர்மானிக்கிற அளவுக்கு நாங்கள் பலவீனமானவர்கள் கிடையாது. :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்தக் குறும் படத்தை பார்க்க நேர்ந்ததால் பார்த்துவிட்டு இணைத்தேன்.

இதில் ஒரு பெண் ஐந்து வருடங்களாக ஒருவனுடன் பழகி காதலித்துவிட்டு, காதலித்தவனுக்கு ஒரு நியாயமான பதில் சொல்லாமல் உதறிவிட்டு, இன்னொருத்தனோடு தனது வாழ்க்கைத் தீர்மானிப்பதால் இங்கே அந்தப் பெண் துரோகியாகத் தெரிகிறாள்... அதே நேரம் ஆண்களும் லேசுப்பட்டவர்கள் இல்லையே... பல இடத்தில் ஆண்களும் தாம் காதலித்த பெண்களுக்கும் ஒரு நியாயமான பதில் சொல்லாமல் உதறிவிட்டு இன்னொருத்தி கூட போவது கூட அவன் அவளுக்கு இளைக்கும் துரோகம் தானே? (இதுதான் ஈகுவல் ஒப்பச்சூனிற்றியோ?) :D:lol:

சரி இந்த இணைப்பையும் கொஞ்சம் பாருங்கோ...

  • தொடங்கியவர்

:lol: நெடுக்கரை யாரோ ஒருவள் பென்ட் எடுத்துப் போட்டு விட்டிருக்கிறாள் ... அவளுக்கு கோடானு கோடி நன்றிகள்!
  • கருத்துக்கள உறவுகள்

:lol: நெடுக்கரை யாரோ ஒருவள் பென்ட் எடுத்துப் போட்டு விட்டிருக்கிறாள் ... அவளுக்கு கோடானு கோடி நன்றிகள்!

அந்தளவுக்கு எல்லாம் நாங்கள் எவளையும் அனுமதிப்பதில்லை. கிட்ட நெருங்காம.. எட்ட வைச்சிடுவமில்ல..! :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது குறும்படம் நல்லதொரு ஆரோக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கு. வாழ்த்துக்கள்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கேட்கிறேன் என கோவிக்காதீங்கோ நீங்கள் அண்மையில் இணைக்கும் விடயங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறதே உங்களுக்கும் காதல் தோல்வியா?

  • தொடங்கியவர்

குட்டி கேட்கிறேன் என கோவிக்காதீங்கோ நீங்கள் அண்மையில் இணைக்கும் விடயங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறதே உங்களுக்கும் காதல் தோல்வியா?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ரதி, பார்த்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுறேன் :)

மண்ணில் இந்த காதல் அன்றி

http://www.youtube.com/watch?v=c5EAlr_W2yg

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி

சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்

சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்

கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்

கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்

கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்

சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்

எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி

இதனையும் இழந்தால் அவன் தான் துறவி

முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

:blink:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

:blink:

மன்னிக்கவும் தப்பிலி அதில் உங்களுக்கும் என்டது நான் இல்லை என்ட தம்பியைத் தான் குறிப்பிட்டேன் :)

மன்னிக்கவும் தப்பிலி அதில் உங்களுக்கும் என்டது நான் இல்லை என்ட தம்பியைத் தான் குறிப்பிட்டேன் :)

நன்றி ரதி.

உங்களுக்கும் என்றவுடன் உங்களின் அண்மைக்கால பதிவுகளை எண்ணி ஒரு கருத்திட்டேன் பின்பு அதனை நீக்கி விட்டேன்.

நீங்களும் பிழையாக நினைக்க வேண்டாம் . :)

Edited by thappili

  • தொடங்கியவர்

குட்டி கேட்கிறேன் என கோவிக்காதீங்கோ நீங்கள் அண்மையில் இணைக்கும் விடயங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறதே உங்களுக்கும் காதல் தோல்வியா?

ரதி, ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு கட்டத்தில் காதல் வசப்படுவது மனித இயல்பு. (ஆண்- பெண், பெண்- ஆண், ஆண்- ஆண், பெண்- பெண் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.) காதலே வராமல் ஒரு மனுஷன் வாழ்ந்து இறந்ததாக இருப்பின் அந்த மனிதன் முழு வாழ்கையை வாழாமலே போய்விட்டான் என்று தான் சொல்லவேணும்.

ஒவ்வொருத்தருக்கும் காதலின் அனுபவம் வேறுபடுகிறது. எல்லோரின் காதலும் ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது, அதே நேரம் எல்லாருடைய காதலும் வெற்றி பெற்றதும் இல்லை! நாங்கள் ஒன்றும் கடவுளின் அவதாரங்கள் இல்லையே... சாதாரண மானிடப் பிறவிகள் தானே? அதனால தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ விடுவது தவிர்க்க முடியாமல் போகிறது. (எவரும் தங்கள் காதல் உணர்வு தோற்றுப் போக வேணும் என்றோ அல்லது தோற்று விடும் என்றோ ஆரம்பத்தில் நினைப்பதில்லை.) சிலருக்கு காதலில் இருவரும் சேரும் அதிஷ்டம் கிடைகிறது (சேரும் என்றால் இங்கே ஆணும் பெண்ணும் உடல் ரீதியில் சேர்வதை குறிப்பிடவில்லை. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இன்பம்-துன்பம் எதுவாக இருந்தாலும் எந்தக் கட்டத்திலும் இருவரும் பகிர்ந்து கொளுத்தல்) பலருக்கு கிடைப்பதில்லை.

சில தவறுகள், பிழைகள் நடப்பது மனித வாழ்கையில் தவிர்க்க முடியாது. அதே பிழையை ஒருவன் அடுத்த தடவை விடாமல் விழிப்பாக இருப்பதே சிறந்தது. பலருக்கு முதல் காதல் தோல்வியைக் கொடுத்தாலும், அவர்கள் இரண்டாவதில் மிகக் கவனமாக இருப்பதை கவனித்து இருக்கிறேன். ஒரு தரம் மட்டும் தான் காதல் வரும் என்று சொல்பவர்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறார்களா அல்லது அடுத்தவர்களை ஏமாற்றுகிறார்களா என்று தெரியாது. ஆனால் அவர்கள் உள்ளதை சொல்வதில் என்று தான் நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்ட கேள்வி அண்மைக் கால பதிவுகளைப் பார்த்து என நினைத்தேன், அதனால் தான் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கருத்திட்டேன். நானும் ஒரு சாதாரண மனுஷ பிறப்புத் தான். அதில சந்தேகம் வேண்டாம்!! :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.