Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Lailaa

Featured Replies

  • தொடங்கியவர்

ஒரே செக்கிலேயே சுத்தி சுத்தி வந்த உங்களால் செக்கு உடைந்தபின்னும் அதைவிட்டு வெளிவரமுடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

அடுத்து நீலமேகத்தாரே அவதூறுகள் யார் மீதும் வீசலாம்.நாங்களும் பேஸ்புக் வருவதை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.தவறாக நடக்க முற்பட்டவர் என்று வாங்குகின்றீரே, தவறாக நடந்தவர்களை மறந்துபோனீர் போலிருக்கு.

தேசியம் பேசுங்கள்,எழுதுங்கள். தேசியத்திற்குள் குளிக்காதீர்கள் தாண்டுபோவீர்கள்.

24 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த என்னுடன் அன்றே சண்டைபிடித்து என்னை துரோகி என்று போனவர் இன்று அரசுடன் என்று நேற்று யாழில் ஒருவர் எழுதித்தான் தெரியும்.உங்களை ஒருத்தரும் கூப்பிடவில்லை போலிருக்கு அதுதான் இந்த காட்டுக்கத்தல்.பலருக்கு கூப்பிடமாட்டார்களா? என்ற ஏக்கம் கூட எழுத்தில் தெரிகின்றது.

போகிறபோக்கில் நாட்டில் இருக்கும் அனைவரையும் துரோகிகளாக்கி ஓடிவந்த நீங்கள் தான் தமிழ்மறவர்கள் என்பீர்கள் போலிருக்கு.

  • Replies 60
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழையும், மக்களையும், தமிழ் இலக்கியத்தையும் யாழ்களத்தையும் இரசிக்கும், நேசிக்கும், மதிக்கும்

உங்கள் இருவரிடமும் தாழ்மையாக ஒரு கேள்வி.

முன்னவர் முன்மொழிய பின்னவர் வழிமொழிந்தது "இது இந்தக்களத்தில் இதை தமிழில் வாசிப்பவர்களுக்கு புரியும் வல்லமை இருக்காது" என எண்ணியா? இல்லை நீங்கள் புரியும் மாதிரி மற்றயவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கமா?

நன்றி

தமிழ் இலக்கியத்தை ஒரு நாளுக்குள் படித்துவிடமுடியாது. அது கடலளவு! நான் இன்னமும் கடற்கரையில் நின்று கடலின் அதன் பிரமாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றுகொண்டிருக்கின்றேன். கடல் அலையில் கால் நனைத்தாலே போதும் என்றிருக்கின்றேன்.

பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் என்று பலவகைகளில் இருக்கின்றது. எனவே வாசிப்பு நிறையத் தேவை. இதற்காக வாசிக்காமல் இருக்கவேண்டால் என்று சொல்லவரவில்லை. எனவே நவீன இலக்கியத்தை அறிய "crash course"ஐத் தேடாமல் பொறுமையாக பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று தேடிப்படித்தால் வல்லமை தானாக வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தி! வலியோரைச்சார்ந்து நின்று தன் இனத்தையே விற்று எழுதி சிங்கள அராஜகங்களுக்கெல்லாம் பக்கப்பாட்டுப்பாடி பொறுக்கி அரசியல் செய்து வாழும் ஈனப்பிறவிகளுக்கெல்லாம் இலக்கிய அறிவு கிடைத்தது தமிழ்த்தாய் செய்த பெரும்பாவம்..இவரிற்கு வக்காலத்து வாங்கும் கேட்டால் அவர் எழுத்தை ரசிக்கிறேன் அவர் நிலைப்பாடுகளை அல்ல என்னும் அல்லக்கைகளின் தொல்லை தாங்கமுடியவில்லை..தன் அரசியல் நிலைப்பாடுகளை நயவஞ்சகத்தனமாக தன் எழுத்துக்களில் புகுத்தும் அவரின் சிங்கள எசமானிய விசுவத்தை கூட புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது நடிக்கிறார்களா?? நீர் எழுதினால் வெறும் இலக்கியத்தை எழுதுமப்பா..ஏன் நயவஞ்சகமாக இலக்கியவாதி என்னும் போர்வைக்குள் மறைந்திருந்து கொண்டு நடு நிலையாளன் என்று நாடகமாடுகிறீர்?? வேனுமானால் கருணாவைப்போல் டக்கிளசைப்பொல் துணிந்து வெளியில் வந்து சிங்கள அரசுடன் சேர்ந்து அரசியல் செய்யும்..அப்போ உம் வண்டவாளம் உலகறியும்..சும்மா மறைந்திருந்து நடுநிலையாளன் முற்போக்கு வாதி என்று நாடகம் ஆடாதேயும்..எதிரியை விட துரோகி ஆபத்தானவன்...

கேட்போர் காதில் ரத்தம் வடிய பெண்ணியம் பேசும் இவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கமுற்பட்ட கதை சந்தி நாறுது..இவரின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறுவதை இங்கு காணவும்...

http://www.facebook.com/note.php?note_id=200123963335996&comments

கருணா, ஷோபாசக்தி போன்றவர்கள் எல்லாம் புலிகளில் அங்கத்தவர்களாக பலவருடங்கள் இருந்தவர்கள். தற்போது துரோகிகள் என்று சொல்லுகின்றோம். இன்னும் நிறையப்பேரைச் துரோகி என்று சொல்லி பொழுதைப் போக்கவேண்டியதுதான்.

ஒரே செக்கிலேயே சுத்தி சுத்தி வந்த உங்களால் செக்கு உடைந்தபின்னும் அதைவிட்டு வெளிவரமுடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

இதை தான் உங்களை நோக்கியும் சொல்ல வேண்டி கிடக்கு அப்ப இருந்து இப்ப வரைக்கும் புலியை தாக்கினீயள் இப்பவும் தாக்கி கொண்டு தான் இருக்கிறீயள்... போராட்டம் புலியை தாண்டி போய் கொண்டு இருக்கு.. ஆனால் புலி போட்டுக்குடுத்த இலக்கின் அடிப்படையிலையும் ஈட்டி தந்த வெற்றியையும் நோக்கி.. ஆனால் நீங்கள் இப்பவும் 86 இலை எப்படி இருந்தியளோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறீயள்... !

நீங்கள் முன்னேறப்போவதும் இல்லை முன்னேற விடப்போவதும் இல்லை... ஆனால் வரலாறும் வாழ்க்கையும் ஒரே இடத்திலை நிண்டு சுத்தாது...

எனக்கு யாருக்கும் அறிவுரை சொல்ல பிடிக்கிறது இல்லை... முட்டாளுக்கு அறிவுரை சொல்லி பயன் இல்லை, அறிவாளிக்கு அறிவுரை தேவையும் இல்லை... !

கருணா, ஷோபாசக்தி போன்றவர்கள் எல்லாம் புலிகளில் அங்கத்தவர்களாக பலவருடங்கள் இருந்தவர்கள். தற்போது துரோகிகள் என்று சொல்லுகின்றோம். இன்னும் நிறையப்பேரைச் துரோகி என்று சொல்லி பொழுதைப் போக்கவேண்டியதுதான்.

சோபாவை தாக்கிறதிலை எங்களை விட முன்னுக்கு சபா நிக்கிறாரே.... <_< <_< <_<

http://inioru.com/?p=11321

Edited by தயா

ஒரே செக்கிலேயே சுத்தி சுத்தி வந்த உங்களால் செக்கு உடைந்தபின்னும் அதைவிட்டு வெளிவரமுடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

அடுத்து நீலமேகத்தாரே அவதூறுகள் யார் மீதும் வீசலாம்.நாங்களும் பேஸ்புக் வருவதை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.தவறாக நடக்க முற்பட்டவர் என்று வாங்குகின்றீரே, தவறாக நடந்தவர்களை மறந்துபோனீர் போலிருக்கு.

தேசியம் பேசுங்கள்,எழுதுங்கள். தேசியத்திற்குள் குளிக்காதீர்கள் தாண்டுபோவீர்கள்.

24 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த என்னுடன் அன்றே சண்டைபிடித்து என்னை துரோகி என்று போனவர் இன்று அரசுடன் என்று நேற்று யாழில் ஒருவர் எழுதித்தான் தெரியும்.உங்களை ஒருத்தரும் கூப்பிடவில்லை போலிருக்கு அதுதான் இந்த காட்டுக்கத்தல்.பலருக்கு கூப்பிடமாட்டார்களா? என்ற ஏக்கம் கூட எழுத்தில் தெரிகின்றது.

போகிறபோக்கில் நாட்டில் இருக்கும் அனைவரையும் துரோகிகளாக்கி ஓடிவந்த நீங்கள் தான் தமிழ்மறவர்கள் என்பீர்கள் போலிருக்கு.

இங்கபாருங்க ஓடி வந்தாலும் யாரையும் காட்டிக்கொடுக்காமல் அரச படுகொலைகளுக்கு வக்காலத்து வாங்காமல் நாமுண்டு நம்பாடுண்டு என்று வாழ்கிறோம்..ஆனால் இவர்கள் அரசுக்கு வக்காலத்து வாங்கி என் இனத்தை அல்லவா விற்குறார்கள்..நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மாந்தரை நினைக்கையிலே..சோபசக்தியோடு எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தக்கடுப்பும் இல்லை ஆனால் அவரின் இலக்கியத்திறமையை நல்லவழியில் பயன்படுத்தாமல் இப்படி ஆமியையும் அரசையும் வக்காலத்து வாங்கப்பயன்படுத்துகிறாரே என்பதுதான் கொடுமை..அதற்குகூட அவருக்கு தமிழின் துணை தேவைப்படுகிறது..தமிழ் இலக்கியம் என்பது காலம்காலமாக வீரத்தையும் மானத்தையும் மண்பற்றையும் தாய் நிலத்தையும் தமிழ் தேசியத்தயும் நேசித்தவர்களாலேயே சங்ககாலத்தில் இருந்தே வளர்க்கப்பட்டிருக்கிறது..இப்பொழுது யார் யாரோ கைகளில் என் தமிழ்த்தாய் சிதைக்கப்படுகிறாள்..

அடுத்து நீலமேகத்தாரே அவதூறுகள் யார் மீதும் வீசலாம்.நாங்களும் பேஸ்புக் வருவதை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.தவறாக நடக்க முற்பட்டவர் என்று வாங்குகின்றீரே, தவறாக நடந்தவர்களை மறந்துபோனீர் போலிருக்கு.

இது சோபாசக்திக்கும் உங்களுக்கும் ஏன் உங்கள் எல்லோரையும் போன்ற தமிழ் தேசிய உணர்வாளர்களை தூற்றுபவர்களுக்கும் கூடப்பொருந்தும் நண்பரே..உங்கள் ஆக்களுக்கு மட்டும் நடக்கும்போது அது அவதூறாகத்தெரிகிறது உங்களுக்கு..

கருணா, ஷோபாசக்தி போன்றவர்கள் எல்லாம் புலிகளில் அங்கத்தவர்களாக பலவருடங்கள் இருந்தவர்கள். தற்போது துரோகிகள் என்று சொல்லுகின்றோம். இன்னும் நிறையப்பேரைச் துரோகி என்று சொல்லி பொழுதைப் போக்கவேண்டியதுதான்.

பொழுதைப்போகுவதற்காக துரோகிகள் என்று சொல்லப்பட்டவர்கள் அல்ல இவர்கள்..இவர்கள் தங்கள் செயல்கள் மூலமும் எழுத்து மூலமும் பேச்சு மூலமும் தங்களை அப்படி இனங்காட்டிக்கொண்டவர்கள்/மக்களால் இனங்காணப்பட்டவர்கள்..பூனை கன்னை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று சொல்லிய கதைபோல இருக்கிறது நீங்கள் சொலுவது..யாரும் அவர்களை அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அவர்களே அப்படி தங்களை இனங்காடிக்கொண்டு இருக்குறார்கள்/இருப்பார்கள்..புலிகள் யாரையும் ஸ்கான் பண்ணி அவர்கள் இயக்கத்தில் சேர்த்ததாக நான் அறியவில்லை நண்பரே...

ஒரே செக்கிலேயே சுத்தி சுத்தி வந்த உங்களால் செக்கு உடைந்தபின்னும் அதைவிட்டு வெளிவரமுடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

அடுத்து நீலமேகத்தாரே அவதூறுகள் யார் மீதும் வீசலாம்.நாங்களும் பேஸ்புக் வருவதை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.தவறாக நடக்க முற்பட்டவர் என்று வாங்குகின்றீரே, தவறாக நடந்தவர்களை மறந்துபோனீர் போலிருக்கு.

தேசியம் பேசுங்கள்,எழுதுங்கள். தேசியத்திற்குள் குளிக்காதீர்கள் தாண்டுபோவீர்கள்.

24 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த என்னுடன் அன்றே சண்டைபிடித்து என்னை துரோகி என்று போனவர் இன்று அரசுடன் என்று நேற்று யாழில் ஒருவர் எழுதித்தான் தெரியும்.உங்களை ஒருத்தரும் கூப்பிடவில்லை போலிருக்கு அதுதான் இந்த காட்டுக்கத்தல்.பலருக்கு கூப்பிடமாட்டார்களா? என்ற ஏக்கம் கூட எழுத்தில் தெரிகின்றது.

போகிறபோக்கில் நாட்டில் இருக்கும் அனைவரையும் துரோகிகளாக்கி ஓடிவந்த நீங்கள் தான் தமிழ்மறவர்கள் என்பீர்கள் போலிருக்கு.

ஒரு கேள்விக்கு பண்புடன் பதிலளிக்கும் வலிமையையும் உங்களுக்கு கிடையாது,

ஒரு விடயத்தையும் பண்புடன் விவாதிக்கும் வழியும் உங்களுக்கு தெரியவில்லை,

ஒரு இனத்தை வாழ வைத்து தானும் வாழும் வழிவகையும் புரியவில்லை,

மாறாக

நாலு பழைய கதைகளை மத்தளம் போல் திருப்பி திருப்பி அடிப்பதும்,

தமிழ் கதைத்து தமிழ் எழுதி அவநம்பிக்கையையை திணிப்பதும்,

ஒரு பெட்டகத்துள் இருக்கும் தாரக மந்திரம் போல ஊதுவதும்

வழமையாகிவிட்டது.

Edited by akootha

தமிழ் இலக்கியத்தை ஒரு நாளுக்குள் படித்துவிடமுடியாது. அது கடலளவு! நான் இன்னமும் கடற்கரையில் நின்று கடலின் அதன் பிரமாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நின்றுகொண்டிருக்கின்றேன். கடல் அலையில் கால் நனைத்தாலே போதும் என்றிருக்கின்றேன்.

பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் என்று பலவகைகளில் இருக்கின்றது. எனவே வாசிப்பு நிறையத் தேவை. இதற்காக வாசிக்காமல் இருக்கவேண்டால் என்று சொல்லவரவில்லை. எனவே நவீன இலக்கியத்தை அறிய "crash course"ஐத் தேடாமல் பொறுமையாக பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று தேடிப்படித்தால் வல்லமை தானாக வரும்.

நான் தாழ்மையுடன் கேட்டது , நீங்கள் இந்த மாதிரி கதைகளை வாசித்து புரியும் அறிவு இந்த கள வாசகர்களுக்கு இல்லை என்ற தொனிப்பட நீங்கள் அந்த பழமொழியை இணைத்தீர்களா?, என்று.

நீங்கள் நேரடியாக "ஆம் / இல்லை" என பதில் அளிக்கவில்லை. மாறாக நீங்கள் "தமிழ் இலக்கியம் 101" என்பதற்கு ஒரு குறுகிய விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. "இல்லை" என்றே சொல்லியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே செக்கிலேயே சுத்தி சுத்தி வந்த உங்களால் செக்கு உடைந்தபின்னும் அதைவிட்டு வெளிவரமுடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றீர்கள்.

""தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்! "" என்று உங்களை இந்த சீன பழமொழி உவமானமாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தாழ்மையுடன் கேட்டது , நீங்கள் இந்த மாதிரி கதைகளை வாசித்து புரியும் அறிவு இந்த கள வாசகர்களுக்கு இல்லை என்ற தொனிப்பட நீங்கள் அந்த பழமொழியை இணைத்தீர்களா?, என்று.

நீங்கள் நேரடியாக "ஆம் / இல்லை" என பதில் அளிக்கவில்லை. மாறாக நீங்கள் "தமிழ் இலக்கியம் 101" என்பதற்கு ஒரு குறுகிய விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. "இல்லை" என்றே சொல்லியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி.

கள வாசகர்கள் எல்லோருக்கும் புரியும் அறிவு இல்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில் வாசித்தவர்கள் அனைவரும் கருத்துப் பதியவேண்டிய அவசியமில்லை.

எனினும் வைக்கப்பட்ட சில கருத்துக்களைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த பழமொழியைப் பதிந்தேன்.

இது எப்ப தொடக்கம்? நீங்கள் நா. பார்த்தசாரதியின் நாவல்களை அதிகம் படிப்பவர் போலுள்ளது.

பின் நவீனத்துவம் என்றெல்லாம் கதைக்கின்றார்கள், அதுகளையும் கொஞ்சம் அறிந்துகொள்ளவேண்டும்.

சோபா சக்தியின் எழுத்தைப் பிடிக்குதோ, இல்லையோ, ஆனால் அவர் ஈழத்தமிழர்களில் முன்னணியில் உள்ளவர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இலக்கியம் என்ற சொல் படைப்பவனின் நோக்கில் தான் உருவாகிறது. படிப்பவனின் நோக்கில் அல்ல.

இலக்கை தொட்டது இலக்கியம் எனப்படுகிறது. ஒரு படைப்பாளி தான் உணர்ந்த ஒரு உணர்வை, எண்ணத்தை இலக்காக வைத்து அதை வெளிப்படுத்த எழுதுகிறான். அப்படி அந்த முயற்சியில் அவன் வெற்றி பெற்று விட்டானான் ஆனால் அது இலக்கியமாகிறது.

ஒருவர் வெளிப்படுத்திய இலக்கு பிறருக்கு பிடிக்காததாய் இருக்கலாம்; வெறுப்பாகவும் இருக்கலாம்.

ஆனால் அது இலக்கியம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், படைப்பாளி சரியாக இலக்கை தொட்டு அதை வெளிப்படுத்தி விட்ட போது மட்டுமே அது நிச்சயமாக அவனுக்கு இலக்கியமாகிறது.

சூன்ய இலக்கியம் என்றொன்று உண்டு. இலக்கு ஏதுமின்றி மனதின் உணர்வை அதன் போக்கில் வெளிப்படுத்துவது! இதில் இலக்கின்றி இருப்பதே இலக்காகிறது!! இந்தக்கதையில் இதுவே மிளிர்ந்துள்ளது!!

இலக்கை தொட்டது இலக்கியம் எனப்படுகிறது. ஒரு படைப்பாளி தான் உணர்ந்த ஒரு

உணர்வை, எண்ணத்தை இலக்காக வைத்து அதை வெளிப்படுத்த எழுதுகிறான். அப்படி அந்த

முயற்சியில் அவன் வெற்றி பெற்று விட்டானான் ஆனால் அது இலக்கியமாகிறது.

ஒருவர் வெளிப்படுத்திய இலக்கு பிறருக்கு பிடிக்காததாய் இருக்கலாம்;

வெறுப்பாகவும் இருக்கலாம். ஆனால் அது இலக்கியம் இல்லை என்று சொல்ல முடியாது.

படைப்பாளி சரியாக இலக்கை தொட்டு அதை வெளிப்படுத்தி விட்ட போது அது நிச்சயமாக

அவனுக்கு இலக்கியமாகிறது.

சூன்ய இலக்கியம் என்றொன்று உண்டு. இலக்கு ஏதுமின்றி மனதின் உணர்வை அதன்

போக்கில் வெளிப்படுத்துவது! இதில் இலக்கின்றி இருப்பதே இலக்காகிறது. இதில்

படைப்பாளி சரியாக தன் மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவானேயானால் இதுவும்

அவனுக்கு இலக்கியமாகிறது.

இலக்கியம் என்ற சொல் படைப்பவனின் நோக்கில் தான் உருவாகிறது. படிப்பவனின்

நோக்கில் அல்ல. ஏனெனில் இலக்கு படைப்பாளியின் உணர்வில் தெரிவதே அல்லவா?

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/16400-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/page__view__findpost__p__300058

கள வாசகர்கள் எல்லோருக்கும் புரியும் அறிவு இல்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில் வாசித்தவர்கள் அனைவரும் கருத்துப் பதியவேண்டிய அவசியமில்லை.

எனினும் வைக்கப்பட்ட சில கருத்துக்களைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த பழமொழியைப் பதிந்தேன்.

எந்த வகையை சார்ந்தது இந்த இலக்கியம் என்பதே விவாதப்பொருள். இந்தக்கதை ஒரு சூனிய இலக்கத்தை சார்ந்தது என்பதும் ஒரு வாதம்.

"கள வாசகர்கள் எல்லோருக்கும் புரியும் அறிவு இல்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில் வாசித்தவர்கள் அனைவரும் கருத்துப் பதியவேண்டிய அவசியமில்லை." - இது எல்லா பதிவுகளுக்கும் பொருத்தமானது. ஊர்ப்புதினம் தொடக்கம் கதைவரை :wub:

  • தொடங்கியவர்

ஓமோம்..அதென்னண்டா இவ லண்டனுக்கு படிக்கத்தான் போனது. அங்கதான் கீர்த்தி மாஸ்டரோட லவ்வானது. கீர்த்தி மாஸ்டர் அப்ப லண்டனில புளொட்டுக்கு வேலை செய்தவர். நல்ல அரசியல் தெளிவுள்ள ஆள். ரெண்டு பேரும் லண்டனிலயிருந்து ஒண்டாத்தான் வெளிக்கிட்டவை. கீர்த்தி மாஸ்டர் நேர பி. எல் ஓ. ட்ரெயினிங்குக்காக லெபனானுக்குப் போயிட்டார். லைலா இந்தியாவுக்கு வந்திற்றா. இந்தியாவில கே. கே. நகர் புளொட் ஒப்பிஸிலதான் இரண்டு வருசமா இருந்தவ.”

“அப்ப இவ லைலா இயக்கத்தில் பெரிய பொறுப்பில இருந்தவவா?”

“ஒப்பிஸில வேலை செய்தவ. கிட்டத்தட்ட உமாமகேஸ்வரனுக்கு செகரட்ரி மாதிரித்தான். இங்கிலீஸ் நல்லாத் தெரியும். அதால வெளிநாட்டுத் தொடர்புகள், மொழிபெயர்ப்புகள் எண்டு கன வேலை செய்தவ. இவவுக்கு அங்க மஞ்சள் குருவியெண்டு பட்டம்.”

“அதென்ன மஞ்சள் குருவி?”

“ஆம்பிள பொம்பிளை எண்டு வித்தியாசம் பாராம எல்லாரோடயும் நல்லாச் சிரிச்சுப் பழகுவா. உடுப்புகளும் அப்பிடி, இப்பிடி லண்டன் ஸ்டைலிலதான் போடுவா. ஒருக்கா உமாமகேஸ்வரன் கூட ‘உங்கிட லண்டன் பழக்கத்தை இஞ்ச காட்டாதீங்கோ, கட்டுப்பாடு தேவையெண்டு’ இவவ ஏசினது. ஆரைப் பார்த்தாலும் வழியிற கேஸ் எண்டு அவவுக்கு ஒரு பேரிருந்தது. லைலாத் தோழர் எங்களுக்கு முதலே இயக்கத்திலயிருந்து விலத்திற்றா.”

“ஏன் இயக்கத்திலயிருந்து வெளியில வந்தவ?”

“அது எனக்குச் சரிவரத் தெரியேல்ல, ஆனால் இயக்கம் உடையத் தொடங்கின "உடனேயே கெட்டிக்காரங்கள் ஓடித் தப்பிற்றாங்கள்". லைலா லண்டன் படிப்பெல்லா.. நாங்கள் அரைகுறையள் நிண்டு இழுவுண்டு வந்தது. மொக்குகள் எல்லாம் அங்கயிருந்து செத்துப்போனாங்கள். புலி போட்டது அரைவாசி…எங்கிட ஆக்களே போட்டது அரைவாசி.”

குட்டி ஏறக்குறைய இந்த இடத்தில் தான் ஒற்றுமை.பின்னர் 09 மேயில் யூனிவெர்சிடி அவெனெயுவில் போய் நின்றதற்கு சொந்த சகோதரர் கூட போன் எடுத்து பேசினார்.தாங்கள் தப்புவதற்கு மக்களையும் இழுத்துக்கொண்டு போகின்றார்கள் அவர்களுக்கு நீயும் வக்காலத்தோ என்று.அது எனக்கும் தெரியும் ஆனால் அந்த மக்களை போராட்டதில் நம்பிக்கை வரப்பண்ணி நடுரோட்டில் விட்டதற்கு

எங்களுக்கும் பங்குண்டு அவர்கள் தங்கள் கூத்தை ஆடினாலும் அத்துடன் மக்களும் தப்பினால் காணும் என்றே என் நினைப்பு.

இலக்கை தொட்டது இலக்கியம் எனப்படுகிறது. ஒரு படைப்பாளி தான் உணர்ந்த ஒரு

உணர்வை, எண்ணத்தை இலக்காக வைத்து அதை வெளிப்படுத்த எழுதுகிறான். அப்படி அந்த

முயற்சியில் அவன் வெற்றி பெற்று விட்டானான் ஆனால் அது இலக்கியமாகிறது.

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/16400-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/page__view__findpost__p__300058

:D ஆம் இது சுட்ட வரைவிலக்கணம் ( இலக்கியம் என்றால் என்ன? )

ஒன்றின் வரைவிலக்கணத்தை வகுத்தால் தானே விவாதிக்கலாம்! அந்த ரீதியில் இது எந்த வகையை சாரும் என்றே பதித்திருந்தேன். நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

:D ஆம் இது சுட்ட வரைவிலக்கணம் ( இலக்கியம் என்றால் என்ன? )

ஒன்றின் வரைவிலக்கணத்தை வகுத்தால் தானே விவாதிக்கலாம்! அந்த ரீதியில் இது எந்த வகையை சாரும் என்றே பதித்திருந்தேன். நன்றி. :D

அது இன்னுமொருவர் வகுத்த வரைவிலக்கணம். சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். எப்படி எடுத்து விவாதிக்க வேண்டும் என்கிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை எது சரி, எது பிழை என்பதல்ல முக்கியம். எழுத்து கவர்ந்திர்ந்தால் மனசைத் தொடும்.

ஜெயமோகன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் எழுத்தாளர். அவரை இந்துவெறியர் என்று சொல்லுவோரும் உண்டு (நான் இந்து வெறியன் அல்ல). அதற்காக அவரது எழுத்துக்களை வாசிக்காமல் விடுவதில்லை. அதைப் போலத்தான் ஷோபாசக்தியின் எழுத்தின் மீதுள்ள ஈடுபாடும். அவரது எழுத்தை சூனிய இலக்கியம் என்று நீங்கள் சொல்லுவதால் எனக்குப் பிடிக்காமல் விடப்போவதில்லை!

பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் இருந்து

"இந்த உலகத்தில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக் கொள்ளமுடியாது. சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது. அப்படி அலட்டிய நிறையப் பேர் மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கின்றனர். நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ, தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அற்பம் என்று ஒரு பொருளுமில்லை. நேற்றைய அற்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்பம் நாளைய அற்புதம். ஆனால் எல்லாவற்றிற்கும் விலை உண்டு. எச்சில் இலைக்கும், சாம்பலுக்கும் கூட விலை உண்டு"

அது இன்னுமொருவர் வகுத்த வரைவிலக்கணம். சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். எப்படி எடுத்து விவாதிக்க வேண்டும் என்கிறீர்கள்?

நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுப்போம். ஒருவர் இன்னொருவரை "இந்து வெறியன்" என்கிறார்.

இதை விவாதிப்பது என்றால், அதற்கும் முன்னர் "இந்து வெறியன்" என்றால் என்ன? என்பது வரையறுக்கப்படல் வேண்டும். அப்படியானால் மட்டுமே விவாதிப்பதில் அர்த்தம் இருக்கும்.

அந்த ரீதியில் அந்த வரைவிலக்கணத்தை இலக்கியத்துக்கு வலையில் தேடி எடுத்தேன். அந்த வரைவிலக்கணம் அதிகூடிய தரவுகளில் இணைக்கப்பட்டு இருந்தது.

என்னைப் பொறுத்தவரை எது சரி, எது பிழை என்பதல்ல முக்கியம். எழுத்து கவர்ந்திர்ந்தால் மனசைத் தொடும்.

ஜெயமோகன் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் எழுத்தாளர். அவரை இந்துவெறியர் என்று சொல்லுவோரும் உண்டு (நான் இந்து வெறியன் அல்ல). அதற்காக அவரது எழுத்துக்களை வாசிக்காமல் விடுவதில்லை. அதைப் போலத்தான் ஷோபாசக்தியின் எழுத்தின் மீதுள்ள ஈடுபாடும். அவரது எழுத்தை சூனிய இலக்கியம் என்று நீங்கள் சொல்லுவதால் எனக்குப் பிடிக்காமல் விடப்போவதில்லை!

நல்லது:D , நன்றி!

Edited by akootha

பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கு.

அதாவது சார்க்கோஸிக்கும் தமிழருடன் சம்பந்தமான விடயதிற்கும் ,

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சார்க்கோஸிக்கும் தமிழருடன் சம்பந்தமான விடயதிற்கும் ,

நீங்கள் கதையை வாசிக்காமல் பின்னர் வந்த கருத்துக்களை படித்தமாதிரி இருக்கு. பாரிஸ் நகரப் புறநகர்ப் பகுதிகளில் வாழும் பிறநாட்டவர்கள் குடியிருப்புக்களில் உள்ளவர்களுக்கும் (குறிப்பாக பிரெஞ் பேசும் ஆபிரிக்கர்களுக்கும்) சார்க்கோஸிக்கும் ஒத்துவராது என்று தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். கதை அதைத்தான் சொல்லவருகின்றது.

ஒரு டச் இருக்கவேண்டுமல்லவா அதற்கு இவ்வளவு சவ்விழுப்பு தேவையில்லையென்பதே என்கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 வருடம் கழித்து பிரான்சு தமிழ் அமைப்பினர் என்று ஒரு அமைப்பு சோபாசக்தி ஈழத்தின் இலக்கியசுடர் (ஈழத்துசெவாலியர்) என்ற விருதை வழங்கினால் நாங்கள் உடனே வாழ்த்தி யாழில பின்னூட்டம் விட்டாலும் விடுவோம் காலம் மாறிக்கொண்டிருக்குதுடாப்பா :D:D

  • கருத்துக்கள உறவுகள்

:D தகவலுக்கு நன்றி.

எதைவைத்து இந்த எழுத்தாளர் முன்னணியில் உள்ளார் என்கிறீர்கள்?

யழ்களதில் உள்ள மூன்று பேருக்குஅவரை தெரிந்திருக்கிறது................. அதன் பிறகும் இந்த கேள்வியை கேட்டால் எப்படி?

சற்று கிணத்துக்குள் இறங்கி பார்க்க வேண்டாமா? இப்படியே உலகத்தை பாhத்துகொண்டிருந்தால் போதுமா?

சத்தியமாய்..... எனக்கும் அவர் யார் எண்டு தெரியாது.

இப்ப.... அவருக்கு என்ன பிரச்சினை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் வாழ் ஒட்டுகுழுக்களின் மரணம் கடைசியில் இப்படித்தான் முடியுமா?? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கு.

அப்படி என்றால் யாழ்கள வாசகர்கள் பிச்சைகாறர்களா??? :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.