Jump to content

ஷோபாசக்தி - டிசே தமிழனின் கேள்விகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிசே தமிழனின் கேள்விகள்

டிசே தமிழன் Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க நான் கடப்பாடுடையவன். வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

இக் கேள்வி மேற்பார்வைக்கு மடத்தனமாகத் தோன்றினாலும் உள்ளே வஞ்சகத்தனமானது. நமது சூழலில் தலித்திய அரசியல் குறித்த உரையாடல்கள் ஆரம்பமாகி முப்பது வருடங்களாகின்றன. ஏற்கனவே பலராலும் பதில் சொல்லப்பட்ட கேள்வியை அந்தப் பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமலேயே ஏதோ ஒளிக்கற்றை ஊழலைக் கண்டுபிடித்த பாணியில் புத்தம் புதிதாகக் கேட்பது போன்ற பாவனையுடன் டிசே கேட்பது வருத்தத்திற்குரியது.

தலித் அரசியலில் மட்டுமல்ல எந்த ஒடுக்கப்பட்டோரது அரசியலிலும் புகுந்து அந்த அரசியலின் பிரதிநிதி போல ஒடுக்கும் தரப்பைச் சார்ந்த ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தக் கூடாது. இதை எத்தனை தரம்தான் நாம் திருப்பித் திருப்பிச் சொல்வது.

ஆனால் டிசே இந்தக் கேள்வியை விளக்க அ.மார்க்ஸ் x ரவிக்குமார் எடுத்துக்காட்டை கையாளுவதற்கு டிசேயிற்கு அ.மார்க்ஸ் மீது உள்ள காழ்ப்புணர்வு மட்டுமே காரணமாயிருக்க முடியும். தமிழகத்துத் தலித் அரசியலில் அ.மாவின் மிகப் பெரிய பங்களிப்பாக அவர் முன்னின்று ‘தலித் அரசியல் அறிக்கை’யை உருவாக்கியதை நான் சொல்லுவேன். ஆனால் அவர் எந்த இடத்தில் தன்னை தலித் மக்களின் அரசியல் பிரதிநிதியாகச் சொன்னார், தலித் மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்ததாகப் பேசியிருக்கிறார்? நிரூபிக்க முடியுமா டிசே! இங்கே நீங்கள் ரவிக்குமாரின் குற்றச்சாட்டை அங்கீரித்து, அ.மார்க்ஸ் சொல்லாத ஒன்றைச் சொன்னதான பொருள்பட எழுதுவதையே நான் வஞ்சகம் என்றேன்.

ரவிக்குமார் அதனால்தான் அ. மார்க்ஸை ஒதுக்கித்தள்ளினார் என்றொரு கேடுகெட்ட எடுத்துக்காட்டைத் தந்திருக்கிறீர்கள்.

ஏன் டிசே, ரவிக்குமார் மார்க்ஸை மட்டுமா திட்டினார். அவர் பெரியாரையே சாதிய வெறியனென்றும் ஸ்திரீ லோலன் என்றும் தொடந்து அய்ந்து வருடங்களாகக் காலச்சுவட்டிலும் தாய்மண்ணிலும் எழுதி வந்தவரவல்லவா. அவருக்கு அ.மாவைத் திட்டுவதா பெரிய காரியம். ரவிக்குமாரின் அ.மார்க்ஸ் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதே வழியில் பெரியாரையும் சாதி வெறியன் என்றும் ஸ்திரி லோலன் என்றும் சொல்லலாமே. நீங்கள் செய்தாலும் செய்வீர்கள். அ.மார்க்ஸை திட்டிவிட்டு ரவிக்குமார் அடுத்து செய்த காரியம் என்ன?

பார்ப்பனிய காலச்சுவட்டில் ஆசிரியராக வீற்றிருந்தார். குறுகிய காலத்திலேயே ஊழல் தி.மு.கவின் செல்லப்பிள்ளையானார். பெரியாரைத் திட்டிய வாயைத் திறந்து இளித்தபடியே கலைஞரின் கையால் ‘அண்ணா விருது’ பெற்றுக்கொண்டார். கலைஞர் அவரை வாழ்த்திப் பேசியதை தனது வலைப்பதிவில் போட்டு மகிழ்ந்தார். அவரது கட்சி இப்போது திமுகவுடனும் காங்கிரசுடனும் கூட்டிணியிலுள்ளது.

கனிமொழியும் நீராராடியாவும் பேசிய ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் ரவிக்குமாரும் கனிமொழியும் ஒன்றும் தெரியாத பாப்பாக்களாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமராஜர் அரங்கில் மொக்கை ஜோக்குகள் அடித்தவாறே உரையாற்றிய காட்சியை நான் நேரிலேயே பார்த்தேன். ரவிக்குமாரின் இந்த அரசியல் தகிடுதத்தங்களுக்கு மார்க்ஸ் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற காரணத்தாலேயே அ.மார்க்ஸிடமிருந்து ரவிக்குமார் விலகியிருக்கலாமே தவிர தலித் தனித்துவத்தின் மீதுள்ள அக்கறையால் அவர் அ.மாவிடமிருந்து விலகவில்லை என்பதற்கு ரவிக்குமாரின் இன்றுவரையான செயற்பாடுகள் உதாரணம். நீங்கள் எந்த யோக்கியதையில் ரவிக்குமாரின் உதாரணத்தை இங்கு எடுத்துவருகிறீர்கள்?

அருந்தததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரவிக்குமாரின் கட்சி மூர்க்கமாக எதிர்த்ததை நீங்கள் அறிவீர்களா? அந்தக் கட்சி ‘சமத்துவப் பெரியார்’ என்ற விருதினைக் கலைஞருக்கு வழங்கியதை அறிவீர்களா? எந்தவகையில் ரவிக்குமார் தலித் தனித்துவ அரசியலுக்கான எடுத்துக்காட்டாகவும் அ. மார்க்ஸ் அதைத் தட்டிப் பறிப்பவராகவும் உங்களுக்குத் தெரிகிறார். தயவு செய்து விளக்குங்கள்.

புலம் பெயர் சூழலில் தலித் அல்லாதவர்கள் தங்களைத் தலித்துகளுடைய பிரதிநிதிகளாகக் கூறுகிறார்களா? யாரைய்யா அந்த அயோக்கியன். சொல்லுங்கள் டிசே! ஊக அரசியலோ, கிசுகிசு வேலையோ செய்யாதீர்கள் ஆதாரத்துடன் பேசுங்கள்.

நான் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யில் சாதாரண உறுப்பினனாகக் கூட இருந்ததில்லை. முன்னணியினர் தலித் மாநாடுகள் நடத்தும்போது நான் அவர்களுடன் கூடவே இருந்துள்ளேன். ஆனால் மாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க இடமளிக்குமாறு கூட நான் அவர்களைக் கேட்டதுமில்லை, வாசித்ததுமில்லை.

ஆனால் ‘தலித் மாநாடு’ குறித்து வதந்திகளை ஊடகங்கள் கிளப்பியபோது அந்த ஊடகங்களை எதிர்த்து விடாப்பிடியாக எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல. அல்லது தலித் அரசியல் குறித்த எனது கட்டுரைகளையும் தொகுப்புகளையும் எதிர்வினைகளையும் நீங்கள் வாசிக்காதவருமல்ல. ஆனால் எந்தக் கட்டத்திலும் என்னை தலித் அரசியலின் பிரதிநிதியாக நான் முன்னிறுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு யாரையோ குறித்தே இந்தக் கேள்வியை எழுப்புவதாகவே நான் ஊகிக்கிறேன். அந்த ஊடுருவி யாரென நீங்கள் அடையாளம் காட்டினால் நமக்குக் களையெடுக்க வசதியாயிருக்கும்.

அவ்வாறு யாரையும் நீங்கள் அடையாளம் காட்டாதபட்சத்தில் வெறுமனே வம்புக்கே இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பியிருப்பதாக நான் அய்யமுறுவது நியாயம்தானே டிசே.

உங்களது கேள்விக்கு ஒரு சொல்லாடலை முத்தாய்ப்பாகக் கூறிவைக்க விரும்புகிறேன். “சாதியொழிப்பு அரசியலில் ஒரு தலித் அல்லாதவருடைய பங்களிப்பு என்பது சாதியொழிப்புக் களங்களில் முன்நிற்பதும் தலித்திய அரசியலில் பிரதிநிதித்துவம் என்று வரும்போது பின்வாங்குவதுமாகவே இருக்கவேண்டும்”. இந்தச் சொல்லாடலை நான் அன்றைய ரவிக்குமாரிடம் இருந்து பெற்றேன் என்பது பின்குறிப்பு.

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

அடையாள அரசியலையே நிராகரிக்கிறேன் என்றெல்லாம் நான் பொத்தாம் பொதுவாகக் கூறியதில்லை. இதையெல்லாம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள் டிசே! ஆச்சரியமாயிருக்கிறது.

சுருக்கமாக இப்படி விளக்கலாம். தமிழ்த் தேசியம் என்று வரும்போது அங்கே தொழிற்படும் ‘தமிழர்’ என்ற பொது அடையாளத்தை நான் நிராகரிப்பேன். தமிழ்த் தேசிய இனத்திற்குள் இருக்கும் சாதி / பால்நிலை / வர்க்கம் / பிராந்தியம் போன்ற வித்தியாசம் வித்தியாசமான பல்வேறு ஒடுக்கப்படும் அடையாளங்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பேன். இதையே ‘நாமெல்லோரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தைச் சிங்கள இனவாதம் முன்னிறுத்தும் போது இலங்கை என்ற அடையாளத்தை மறுத்து ஒடுக்கப்படும் எனது தமிழன் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவேன். இங்கே நான் என்மீது திணிக்கப்படும் இலங்கையன் என்ற அடையாளத்தைப் புறக்கணிப்பேன். இதையே அய்ரோப்பாவில் அய்ரோப்பியர்களின் வெள்ளைத்திமிர் முன்னே எனது இலங்கையன், வெள்ளைக் காலனியத்தால் வஞ்சிக்கப்பட்டவன் என்ற அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பேன்.

அரசியல் கோட்பாடுகளிற்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டதில்லை. மனிதர்களுக்காகவே அரசியற் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பான பண்பாட்டு - அரசியல் சூழல்களிற்கு ஏற்ப கோட்பாடுகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மாறவேண்டும். மாறாதபட்சத்தில் அதற்குப் பெயர் கோட்பாடு அல்ல. அதனது பெயர் வரட்டுவாதம்.

எனவே அடையாள மறுப்பு அரசியலுக்கான தேவை இருப்பதைப் போலவே அடையாள அரசியலுக்கான தேவையும் உண்டு. ஒருவர் எந்த அரசியலைத் தூக்கிப் பிடிப்பதென்பது குறிப்பான அரசியல் - பண்பாட்டு சூழலைப் பொறுத்து வேறுபடும். வேறுபட வேண்டும்.

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

பெரியார் 1930 கள் தொடக்கம் தனது இறுதிக்காலம் வரை தமிழ்த் தேசிய விடுதலையை அவ்வப்போது முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடில்லை. பெரியாருடைய தமிழ்த் தேசியம் தமிழர்களோடு சேர்த்து மொழிச் சிறுபான்மையினரையும் மதவழிச் சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். அது இசுலாமியர்களையும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் போன்ற சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். பார்பனர்களைக் கூட அவர் தமிழகத்தை விட்டு வெளியேற்றப் போவதாகச் சொல்லவில்லை. அவர் பார்ப்பனர்களை அதிகாரத்திலிருந்து வீழ்த்த வேண்டும் என்றுதான் சொன்னார்.

ஆனால் ஈழத்தில் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்த் தேசியம் அவ்வகையானதா? அது இஸ்லாமியர்களைக் கட்டிய துணியோடு கொள்ளையிட்டு விரட்டிய தேசியமல்லவா. தமது சொந்த இனத்தின் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்றழித்த தேசியமல்லவா. அப்பாவிச் சிங்கள மக்களை கொன்றுகுவித்த தேசியமல்லவா அது. சாதி ஒழிவதற்கு சாதியின் மூலவேரான இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்றார் பெரியார். மாறாகப் புலிகள் புதிதாக இந்துக் கோயில்களைக் கட்டினார்கள்.

தேசியம், பாஸிசம், சோசலிசம் எல்லாமே வெறும் சொற்கள். அந்த சொற்களின் கீழ் நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகள்தான் அந்த சொற்களுக்கான பெறுமதியைக் கொடுக்கின்றன. தேசியம் என்ற கருத்தாடல் தமிழகத்திலும் பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் ஒரேமாதிரியாகத் செயற்படுவதில்லை. அவை வெவ்வேறு வகையான செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அந்தச் செயற்பாடுகளே நமது ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகின்றன.

அதுசரி டிசே, அது என்ன கேள்வியின் ஆரம்பத்தில் ‘பெரியாரின் தாசனாகத் தம்பட்டம் அடிக்கிறேன்’ என்ற விசனம். ஏன் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து உங்கள் காதுகளில் தம்பட்டம் அடித்தேனா. ஏன் உங்களிற்கு இவ்வளவு காரணமற்ற வெறுப்பு. வெறுப்பு என் மீதா பெரியார் மீதா? எனினும் பெரியாரின் மாணவன் என நான் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

டிசே, பெருங்கதையாடல் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலிருந்து அல்லாமல் பெருங்கதையாடல் என்றால் ஷோபாசக்திக்கு என்னவென்று தெரியுமா அல்லது ஷோபாவுக்குத் தெரியாது என நிறுவும் எத்தனத்துடன் கேட்கப்பட்ட சுத்துமாத்துக் கேள்வியே இந்தக் கேள்வி என நான் கருதுகிறேன்.

ஒரு விடயத்தின் பல்வேறு தரப்புகளை நிராகரித்து விடயத்தை சாராம்சம்படுத்தி அணுகி அதற்கு ஒரு உறுதியான தீர்வையும் அந்தத் தீர்வே அந்த விடயத்தில் தொடர்புள்ள அனைத்து தரப்புகளிற்கும் மொத்தமான தீர்வு என இலட்சியவாத நோக்கில் சொல்லப்படும் ஒரு கதையாடலையே பெருங்கதையாடல் என நான் புரிந்துகொள்கிறேன்.

ஈழத்துச் சூழலில் இதை விளங்கப்படுத்தினால், வடக்குக் கிழக்கில் அல்லது தமிழீழம் என வரையறுக்கப்பட்ட பரப்பில் தமிழ் பேசும் மக்களிடையே உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள், இசுலாமியர்கள், இந்திய வம்சாவழியினர், ஒடுக்கப்படும் கிழக்கு மக்கள் போன்ற வித்தியாசங்களை மறுதலித்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒடுக்கிக்கொண்டிருப்பவர்களையும் தமிழர்கள் என்ற பெயரில் சாராம்சப்படுத்துவதையும் இந்த எல்லாப் பிரிவினருடைய வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளிற்கும் தமிழீழமே தீர்வென ஒரு மொத்தத்துவத் தீர்வை முன்வைப்பதையும் தமிழீழப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

இந்து மதம் என எடுத்துக்கொண்டால் ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல்வேறு சிறிய, பெரிய பண்பாட்டு அல்லது வழிபாட்டு மரபுகளின் தொகுப்பே இன்றைய இந்துமதம். இன்று பால்தாக்கரேயும் பா.ஜ.கவும் முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலைப் இந்துத்துவப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

5. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

ஈழத்திற்கான தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஒருபோதும் போகிற போக்கில் நிராகரித்ததில்லை. இன்றைய உலகச் சூழலில் தனிநாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஈழப் புலத்தில் இனியொரு ஆயுதம் தாங்கிய போராட்டம் நிகழ்வதையும் நான் விரும்பவில்லை. ஏனெனில் யுத்தம் அவ்வளவு பெரிய பாதிப்பை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. ஆனால் தங்களது அரசியலைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஈழத்தில் வாழும் மக்களே. அவர்கள் தமிழ் ஈழமே தீர்வென்றும் ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென்றும் முடிவெடுத்தால் அதைத் தடுக்க நான் யார், அதற்கு எனக்கென்ன சக்தியுள்ளது.

ஈழத்தில் நடந்த அகமுரண்களைச் சொல்லி நான் விடுதலையை நிராகரிக்கவில்லை. விடுதலைப் புலிகளையே நிராகரித்தேன். விடுதலை வேறு புலிகள் வேறா என்றொருவர் கேட்கலாம். ஆம் என்பதே எனது உறுதியான பதில்.

புலிகள் ஈழவிடுதலையைப் பெற்றுத் தருவார்கள் என நான் கடந்த இருபது வருடங்களாக எந்த நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ‘புலிகள் தங்களது பாஸிசத்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’ என ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலுக்கு எழுதிய மதிப்புரையில் கசப்புடன் குறிப்பிட்டேன்.

நான் மறுத்தது புலிகளின் பாஸிச அரசியலையே தவிர தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை அரசியலை அல்ல.

அதுசரி டிசே, இடையிலே தமிழகத்திற்கான விடுதலையை நிராகரிக்கிறேன் என்றொரு குற்றச்சாட்டை ஏன் என்மீது வீசுகிறீர்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன். அவர்கள் இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே. ஆரம்பிக்காத ஒன்றை நான் எங்கேபோய் நிராகரிப்பது. ஏன் இந்த அவசர எதிர்வு கூறலும் அதை வைத்து என்மீதான விமர்சனமும். இதைத்தான் ஆடறுக்க முதல் புடுக்கறுக்க நிற்பது என ஊரில் சொல்வார்கள். ஒருவேளை சீமான், மணியரசன் போன்றவர்களின் எழுச்சி உரைகளால் கவரப்பட்டு தமிழகத்தில் தனிநாட்டுக்கான போராட்டம் வெடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களோ. அவ்வாறு கருதுவது உங்களது உரிமை. ஆனால் ஊகத்தின் அடிப்படையில் எல்லாம் என்னை நோக்கி நீங்கள் கேள்விக்கு மேலே கேள்விகளாக அடுக்குவது கொடுமை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னேனென்று நீங்கள் பட்டியலிடுவது கயமை.

6. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

இதெல்லாம் ஒரு கேள்வியா டிசே! இவ்வாறான சாரமற்ற சொல்லாடல்களைக் கேள்விகளாகக் கோர்த்த நீங்கள் கோமாளியா? இல்லை வேலைமெனக்கெட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நான் கோமாளியா?

காஷ்மீரில் அகமுரண்கள் உள்ளன. எங்குதான் அவை இல்லை. கியூபாவில் இல்லையா. எல்லாவிடத்திலும் உள்ளன. அந்த அகமுரண்களை தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் இறங்குமாறு கேட்பதும் உயிர்ப் பலிகள் நிகழ்கையில் அந்தத் தவறுகளைக் களையுமாறு குரல்கொடுப்பதும் அதற்குக் காரணமானவர்களை நிராகரிப்பதும் காஷ்மீரத்து மக்களின் விடுதலைக் குரலோடு நாமும் இணைந்து நிற்பதும்தானே நமது கடமை. இதெல்லாம் மிகவும் அடிப்படை அறம் சார்ந்த விடயங்கள் அல்லவா. இதிற் கூடவா உங்களுக்குச் சந்தேகம் டிசே.

‘துரோக’ அமைப்புகள் என்றொரு சொல்லாடலை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தச் சொல்லாடலால் ஈழத்து அரயசிலையும் மக்களையும் சிதைத்தது போதும். தயவு செய்து அதைக் காஷ்மீர்வரை கடத்திச் செல்லாதீர்கள்.

தோழமையுடன் கடைசியாக ஒரு வார்த்தை டிசே! உங்களது கேள்விகளின் நோக்கம் என்னை ஈழமக்களின் விடுதலைக்கு எதிரானவனாக வலிந்து சித்திரிப்பதும் என்னையொரு முட்டாளாகச் சித்திரிப்பதுவுமே என்று எனக்கு நன்றாகவே புரிகின்றது. உங்களது இரண்டாவது நோக்கம் வேண்டுமானால் ஒருவேளை நிறைவேறலாம். ஆனால் உங்களது முதலாவது நோக்கம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. உங்களால் மட்டுமல்ல யாராலும் அதைச் செய்துவிட முடியாது. ஏனெனில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தத்துவாசிரியர்கள், அரசியல்வாதிகள், போராளிகள் என யாரையும்விட வெகுசனங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பது எனது அனுபவம். ஏனெனில் அவர்கள் அவர்களது வதைகளிலிருந்தும் பாடுகளிலிருந்தும் உண்மைகளைக் கண்டடைகிறார்கள். அந்த உண்மையின் வெளிச்சத்தில் அவர்கள் எங்கள் ஒவ்வொருவரதும் எழுத்துகளையும் செயற்பாடுகளையும் பரிசீலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=795

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது

பகுதி 01

1.

ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து 'டிசே தமிழன்' என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து ஒரு மூடிய தளமாகவே வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது ஷோபா என்னை முன்னிறுத்தி ஒரு பதிவை அனைவரும் பார்க்கக்கூடிய பொதுத்தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இது ஃபேஸ்புக்கினுள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியே. உண்மையில் ஷோபாவின் இப்பதிவு தலையுமின்றி வாலுமின்றி இடைநடுவில் நின்று அந்தரத்தில் ஆடுகின்றது.

'நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றேன்' என ஷோபா குறிப்பிட்டிருந்தார் என்றால் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நான் நடந்தவற்றை ஆதியிலிருந்து அந்தமாகப் பொதுத்தளத்தில் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஷோபா எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஷோபா என்னிடம் அனுமதி கேட்காமல் எங்களுக்குள் நடந்த உரையாடலை பொதுத்தளத்தில் வைத்தது என்னளவில் சோர்வையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவரைப் போலின்றி, அவருக்கு நான் இப்படி ஃபேஸ்புக்கில் நடந்த அனைத்தையும் பொதுத்தளத்தில் வைக்கப்போகின்றேன் எனக் கூறியே இங்கே இவற்றை எழுதத் தொடங்குகின்றேன் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.

அத்துடன், ஷோபா டிசே தமிழன் கேட்ட கேள்விகள் எனக் கூறுபவை முதலில் வளர்மதியிடம் இருந்து வந்தவை. அதற்கான எந்த கிரடிட்டும் வளர்மதிக்கு ஷோபா கொடுக்கவில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகின்றது. ஆகவே அந்தக் கேள்விகளின் மூலம் வளர்மதி என முதலில் தெளிவுபடுத்தி விடுகின்றேன். அத்துடன் நான் ஷோபாவிடம் கேட்ட மிகுதி அசல் 14 கேள்விகள் இருக்கின்றன. அதை இப்போது தனது தளத்தில் நுட்பமாக மறைத்திருக்கின்றார். அந்தக் கேள்விகளையும் -ஷோபாவைப் போல மறைக்காது- இங்கே முன்வைத்து ஷோபாவின் பதில்களையும் தரப்போகின்றேன். அத்துடன் ஷோபாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை வைத்து ஒரு 'பொழிப்புரை' எழுதுவதாகக் கூறியிருக்கின்றேன். அதையும் இனிவரும் நாட்களில் செய்வேன்.

இனி நடந்தவை....!

இலங்கைச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அண்மையில் நடந்தது நாமனைவரும் அறிந்ததே. அதை முன்னிட்டு சில மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு, ஆதரவு என்ன எல்லாத்தளங்களிலும் அறிக்கைகள் மாறி மாறி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. அறிக்கைகளில் அரசியலில் எரிச்சலுற்று, நான் பேஸ்புக்கில் -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா...!- என நிலைத்தகவல் எழுத, ஒருசாராரின் அறிக்கையைப் பிரதிநிதிப்படுத்திய ஷோபா, நான் அவரது அறிக்கையையும் கேலி செய்வதாக நினைத்து, எனது நிலைச்செய்தியின் கீழ் சில பின்னூட்டங்களை எழுதினார்.

அவரோடு அதற்கு முன் ஃபேஸ்புக்கில் எந்த விரிவான உரையாடலையும் செய்திராத நான் இவ்வாறு ஒரு நோட்டை அதன் நீட்சியில் அவருக்கு எழுதினேன். (பார்க்க: 'ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்' ). அந்தப் பதிவுக்கு ஷோபாசக்தி எழுதிய முதற்பின்னூட்டம் இப்படியாக அமைந்தது: Shoba Sakthi சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்.

ஷோபாவின் இக்கேள்வியைச் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வாசிப்பதற்கான ஒரு அறிக்கையை நான் எழுதினேன். (பார்க்க 'மாற்றை முன்வைத்தல்')

அதற்கு ஷோபாசக்தி, இந்த அறிக்கைக்கு தான் முதல் ஆளாக கையெழுத்து வைக்கிறேன். பிற நண்பர்களுக்கும் அனுப்பி கையெழுத்து வைக்கச் சொல்வோம் என எழுதியிருந்தார். ஆனால் இந்த அறிக்கைகளையே 'அரிக்கைக'ளாக நினைத்த நான் ஷோபாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காது, 'ஷோபா இது அறிக்கையில்லை. இது உங்களுக்கு மறுமொழியாக - நான் சொல்லவிரும்பியதை- அறிக்கை வடிவத்தில் எழுதியிருந்தேன். அறிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததும், கீழே பெயர்களைப் பட்டியலிட்டதும் கூட இந்த அறிக்கை அரசியலை நக்கலடிக்கவே தவிர உண்.மையான அறிக்கைக்காய் இல்லை. ஏற்கனவே -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா- எழுதியவன்/நக்கலடித்தவன் அதேபோக்கில் ஓர் அறிக்கை எழுதுவான் என நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் எனவே நான் நினைக்கின்றேன்.' என நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஷோபாவும் நானும் அதன்பிறகு எவ்வித உரையாடல்களைச் செய்யவுமில்லை. இதை ஒரு 'பகை' மறப்பெனவும் எடுத்துக்கொள்ளவும்.

ஆமாம், அதுவே உண்மை. ஆனால் சில தினங்களுக்கு முன் ஷோபா ஒரு பதிவை எழுதி என்னையும் ரக் (tag) செய்திருந்தார். அங்கிருந்து தொடங்கியது இரண்டாம் ஆட்டம்.

(தொடர்ந்து வரும்...)

http://djthamilan.blogspot.com/2011/02/01.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02

ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது ."இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்." எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.

எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று குறிப்பிடவே எழுதியிருந்தேன் என்பதை விளங்கியிருப்பார்கள். At the first place, I really don't want ask any questions to him. நிச்சயமாக அவரிடம் எனக்கு எந்தக் கேள்விகளும் எழுப்ப வேண்டியிருக்கவில்லை. எனெனில் நான் தொடர்ந்து ஷோபாசக்தியின் புனைவுகளையே வரவேற்பவனாகவும், அவரது அரசியலைத் தொடர்ந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் கூறிவந்திருக்கின்றேன். எனவே அதன் அடிப்படையில் எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்பதற்கான எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம் குறிப்பில் ஒரு மூன்றாம் மனிதனாய், ஷோபாசக்தியின் ஃபேஸ்புக் பித்தலாட்டங்களை அவதானித்துவிட்டு அதை ஒருவேண்டுகோளாய் வைக்கவேண்டுமெனவே எழுதினேன். அவரோடு நெருங்கி உறவாடக் கூடியவர்களே ஷோபாவின் இந்த சமனிலையற்ற ஆட்டத்தை ஷோபாவிற்குச் சுட்டிக்காட்டவில்லையே என்ற ஆதங்கத்தையும் எனது குறிப்பில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதேவேளை ஷோபாவை தொடர்ந்து பல்லாண்டுகளாய் நுட்பமாய் அவதானித்து வந்தவன் என்றவகையில் ஒரு கவனக்குறிப்பையும் இவ்வாறு இறுதியில் எழுதியிருந்தேன்...

'எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான் / தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்'.

ஆக, ஷோபாவை எவ்வாறு சரியாகக் கணிப்பிட்டேனோ, நேரம் பார்த்து அவர் எனக்கும் அடிக்கத் தொடங்கினார். அதாவது "டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். "

ஏற்கனவே நடந்தவற்றை அறியாது வாசிக்கும் ஒருவர், ஏதோ நான் ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்கவேண்டுமென ஒற்றைக் காலில் நின்றதாகவும், பிறகு ஷோபாவிடம் பயந்து பின்வாங்கிய‌தாக‌வுமே எண்ணிக்கொள்வார். என்னிடம் கேள்விகள் இருக்கின்றன என்று நான் கூறாமலே ஷோபா எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றார், பெயர்களை இணைத்துப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள் (ஷோபாவின் விவாதத்திறமையின் நளினங்கள் குறித்து, சில உதாரணங்களை அடுத்த பதிவில் எழுதலாம் என இருக்கின்றேன்).

இது ஷோபாவிற்குப் புதிதுமல்ல. ஷோபா பிரான்சில் பலருக்குச் செய்ததுதான்.. இறுதியில் யமுனா ராஜேந்திரனுக்கு 'காணவில்லை' எனவும் ஒரு 'சுவரொட்டி' சத்தியக்கடதாசியில் ஒட்டப்பட்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆக இதை நினைத்து எனக்கு வருந்த எதுவுமில்லை. ஆனால் இதை இப்படியே விட்டால், உசாத்துணை (reference) போடுவதுபோல ஷோபா இனிவரும் காலங்களில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் என் பெயரையும் இழுப்பார் என்றெண்ணி அவருக்கான சில கேள்விகளை இவ்வாறு எழுதத்தொடங்கினேன்.

(பார்க்க: ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபா சக்தி?)

"....நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?

இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, 'கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரில் 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?

ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன்' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்..

இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்..

(இப்போது ஷோபாவின் பதில்களையும் இணைத்திருக்கின்றேன் ~டிசே)

(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்?

(மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)

ஷோபாசக்தி: (1) 90களில் இருந்த எனது கருத்து எப்போதுமே மாறாதிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. வெகுசன ஊடகங்களிலும் நமது கருத்துகள் வரவேண்டும் என 2000களில் முடிவெடுத்தேன். ஆனால் அதற்கான அறம் என்ன தேர்வு, என்ன என்பதை எனது புதுவிசை இதழ் நேர்காணலில் காலச்சுவடு/மாலதி மைத்ரி/சுகிர்தராணி குறித்த கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றி எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?

ஷோபாசக்தி: (2).அங்கு மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நான் அங்கே இருந்திருப்பின் பிரச்சினை கைவாறில் முடிந்திருக்கும்

(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?

ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது

(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடம் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய் வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்). ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?

*டிசே யின் குறிப்பு :மேலும் 3/4 ற்குப் பதில் சொல்வதாய் ஷோபா எழுதியிருக்கின்றார். இது நேரடியாக ஷோபாவின் மீது நான் முன்வைக்கும் கேள்விக்கு அவர் தன் நிலையில் இருந்து பதிலளிக்கவில்லை என்பதைச் சுட்ட விரும்புகின்றேன்)

(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் காலச்சுவடு கண்ணன் முழுத்தொகுப்பையை நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி உட்பட நான் வரை உங்களுக்கு ஆதரவாகவே 'பதிவுகள்' தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)

ஷோபாசக்தி: (5) அது நாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம். எனக்கோ சுகனுக்கோ ஆங்கிலம் தெரியாததால் நடந்த சம்பவம். தெரிந்து செய்த பிழையன்று..அறியாமையால் செய்த தவறு. அறியாமையை அறிக்கையிட அப்போது கொஞ்சம் வெட்கப்பட்டோம். அவ்வளவே.

(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?

ஷோபாசக்தி: (6).அது ஒரு சிறந்த கதை என்பதே எனது கருத்து. அல்லாத பட்சத்தில் பிரசுரித்திருக்க மாட்டோம். எனக்கு ஆங்கிலம்தான் தெரியாதே தவிர தமிழ் நன்றாகவே தெரியும்.

(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும் அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

ஷோபாசக்தி: (7).ஆம்...யார் வென்றிருந்தாலும் பகை மறப்பும் சமாதானமுமே முதன்மையானவை என்றே வலியுறுத்துவேன். புலிகள் போரியல் வெற்றியின் உச்சங்களில் இருந்து ஒரு அரசுமாதிரியையே கட்டமைத்திருந்த காலத்திலும் இதையே கூறினேன்

(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர், தான் பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?

ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை 'தனகுவதை'த் தவிர வேறு வழியில்லை.

(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.

ஷோபாசக்தி: (9) மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன்: தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.

(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?

ஷோபாசக்தி: (10) சுகனின் கோட்பாடு அரசியல் சரிவுகள் என நீங்கள் குறிப்பிடுவது எதையோ?

(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறு இருக்காத‌தால்தான் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார். ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து 'ஷோபாசக்தி டொட் கொம்' ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ, எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.

ஷோபாசக்தி: (11).தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. என்னுடைய தியேட்டரில் உங்களுடைய ஆபாசப் படத்தை ஓட்டவிடாமல் நான் தடுத்தால் அதன் பெயர் பொறுப்புணர்வு.

(12) இந்தக் கேள்வி குழந்தைப் போராளி சம்பந்தமானது. கேட்கும்போது தயக்கங்கள் இருந்தன. இப்போது அது Too personal போன்று தோன்றுவதால் அதை பொதுவெளியில் வைக்க விரும்பவில்லை. அதேசமயம் ஷோபா இதற்குப் பதில் அளித்திருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதற்கு நன்றி (~டிசே)

(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை, தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்த தலித்துக்களை பொலிஸ் கைதுசெய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?

ஷோபாசக்தி: (13).புலிகள் காலத்தில் துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருந்தது. அது இப்போது வெளிவருகிறது என்ற கருத்துத்தான் எனது கருத்தும். புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன். இன்றைக்கு உகந்த போராட்ட வடிவம் எது என்ற எனது கருத்தை அறிய எனது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற கட்டுரையைப் படிக்கவும்.

(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றார் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் ஆட்சி இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக்காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது, அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)

ஷோபாசக்தி: (14). நான் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன். தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்

இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...

(நினைவூட்டல்...

Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.

November 13, 2010 at 9:31pm )

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?

6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

(இறுதி 1-6 வரையான கேள்விகளுக்கு ஷோபா விரிவாகவே தனது தளத்தில் பதிலளித்திருப்பதால், அவற்றின் விடைகளே இங்கே பதியவில்லை)

-----------------

எனது அசல் கேள்விகளான 14ற்கும் பதிலளித்து ஷோபா, இவ்வாறு கேட்டிருந்தார்....

Shoba Sakthi வளர்மதியின் கேள்விகள் அபத்தமானவை என்றும் பொருட்படுத்த்தக்கவையல்ல என்றும் எத்தனை தடவைதான் சொல்வது. மறுபடியும் நான் டிசேயிடம் கேட்பது நீங்கள் தொகுத்த அவரின் கேள்விகள் வலுவானவையெனவும் சரியானவையெனவும் நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில அவை உங்களுடைய கேள்விகளாயும் மாறிவிடும். மகிழ்ச்சியாகப் பதில் தருகிறேன். தனிக் கட்டுரையாகவே எழுதிவிடலாம். வளர்மதியின் கேள்விகளை உங்களது கேள்விகளாக முன்வைக்கிறீர்களா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தினீர்கள் எனில் வேலையைத் தொடங்கிவிடுவேன்.

நான் அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தேன்:

ஷோபா, வளர்மதியின் கேள்விகளுக்கான பதில்களை நானும் எதிர்பார்க்கின்றேன் (அவை என் கேள்விகளுமென நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை). வேண்டுமெனில் கேள்வி இல.5 ஐத் தவிர்த்துவிட்டு பதில் எழுத வேண்டுகிறேன்

வளர்மதியின் 6 கேள்விகளுக்கு ஷோபா இப்போது பதிலளித்திருக்கின்றார். ஆனால் அவற்றை டிசே தமிழனின் கேள்விகளாக்கிவிட்டார். ஆகக்குறைந்து, வளர்மதி தொடக்கத்தில் கேட்டு, அதையே டிசேயும் கேட்டிருந்தார் என்றாவது வளர்மதிக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிடாதது மட்டுமின்றி பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தை இடைநடுவில் இருந்து பொதுத்தளத்தில் எடுத்துப்போட்டு அதற்குப் பதிலளிக்கிறேன் என ஷோபாசக்தி தொடங்கியதை எந்தவகையான அறம் என்பதை ஷோபாவிடம் அல்ல, வாசிக்கும் உங்களிடம் முன்வைக்கின்றேன்.

மேலும், வளர்மதியின் கேள்விகள் (மூன்றாம் கையால் வைக்கப்படுவது என்றும் ஷோபா இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறார்; இதுகுறித்து வரும் பகுதிகளில் எழுதுவேன்). உண்மையில் வளர்மதி என்னிடம் எந்தப்பொழுதிலும் தனது கேள்விகளை ஷோபாசக்தியிடம் கேட்கச் சொல்லிக் கேட்டதில்லை என வெளிப்படையாக முன்வைக்கின்றேன். ஷோபா புலிகளிடம் இருந்தபோது உளவுத்துறைக்குள் இருந்து வேலை செய்திருக்கலாம்; பல திடுக்கிடும் உண்மைகளைக் கூடக் கண்டும்பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே நடக்காத ஒரு விடயத்தை நடந்த்தாய் 'பாவனை' செய்வது மிக அநியாயமானது.

நான், ஏன் எனது கேள்விகளோடு இப்போது வளர்மதியின் கேள்விகளையும் இணைத்தேன் என்றால், நான் ஷோபாவோடு முரண்பட்டு எழுதிய முதலாவது நோட்டிலேயே ஷோபாவிற்கு இது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்.

வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

இளங்கோவன் அன்பனின் ஃபேஸ்புக்கில், வளர்மதி இதே 6 கேள்விகளை முன்வைத்து ஆகக்குறைந்து 4-5 மாதங்களாகி இருக்கும். எத்தனையோ அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் தனது 24மணிநேர சேவை (இது அவரே குறிப்பிட்டதுதான்) மூலம் பதிலளித்து வந்த ஷோபா இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஏன் புறக்கணித்து வந்தார் என்பதையும் வாசிப்பவர்க‌ள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், டிசே தமிழனின் ஆறு கேள்விகள் என்று எழுதிய பதிவில் எவ்வாறு

வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனக்கூறி 'வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.' என்னமாதிரி பில்ட் அப் (build-up) கொடுக்கின்றார் எனப் பாருங்கள். அதேபோன்று எனது அசல் 14 கேள்விகளும் தவிர்க்கப்பட்டு மிக நுட்பமாக இந்த 6 கேள்விகள் மட்டுமே அவ‌ர‌து த‌ள‌த்தில் முன்வைக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது சற்று காலச்சக்கரத்தைச் சுழற்றுவோம். 'என்னிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?' என்றும் 'கேள்வி கேட்காமல் டிசே தமிழன் ஓடிவிட்டார்' எனவும் எழுதவும் துணிகிற ஷோபாசக்தி இந்த முன்னுரை /முக்குகின்ற உரையைத் தவிர்த்து- நேரடியாக -கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டியதுதானே? முதலிலே ஒரு அறிமுகம் கொடுத்து கேள்வி/பதில்களை வாசிக்கமுன்னரே வாசகருக்கு தானொரு அறிவுஜீவி என்கின்ற தோரணையைக் கொடுப்பது. இந்த 'முன்னுரையின்' பின்பு ஒரு வாசகர் முன் அனுமானமின்றி உள்ளே போகமுடியுமா?

மேலும், கேள்விகள் கேட்பவன் ஒரு முட்டாளாக இருக்கிறான் ஆகவே வாசகத் தோழர்களே பொறுத்தருள்க எனத் 'தெளிவாக' ச் சொல்லி, ஆனாலும் பாருங்கள் 'நான் எப்போதும் நல்லவனப்பு, எவன் என்றாலும் பதில் சொல்லாமல் தப்பியோடுபவன் அல்ல' என்கின்ற தோரணையை 'என் கடமையைச் செய்ய அனுமதியுங்கள்' மூலம் கட்டமைப்பது....

ஆம் நண்பர்களே. இதுதான் ஷோபாசக்தி. நீங்கள் இந்தச் சுழலிருந்தும், அவரது நளினமான விவாதத் திறமைகளிலிருந்தும் (ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு spider man மாதிரித் தாவுவது வரை) உங்களைக் காப்பாறிக்கொள்ளாமல் விட்டால் ஷோபாவுடன் உரையாடுவது என்பது 'சொந்த செலவிலே சூனியம் வைப்பது' போன்றதுதான்.

(இன்னும் வரும்)

http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசே தமிழனின் கேள்விகள்

டிசே தமிழன் Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க நான் கடப்பாடுடையவன். வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

இக் கேள்வி மேற்பார்வைக்கு மடத்தனமாகத் தோன்றினாலும் உள்ளே வஞ்சகத்தனமானது. நமது சூழலில் தலித்திய அரசியல் குறித்த உரையாடல்கள் ஆரம்பமாகி முப்பது வருடங்களாகின்றன. ஏற்கனவே பலராலும் பதில் சொல்லப்பட்ட கேள்வியை அந்தப் பதில்களை எல்லாம் கணக்கில் எடுக்காமலேயே ஏதோ ஒளிக்கற்றை ஊழலைக் கண்டுபிடித்த பாணியில் புத்தம் புதிதாகக் கேட்பது போன்ற பாவனையுடன் டிசே கேட்பது வருத்தத்திற்குரியது.

தலித் அரசியலில் மட்டுமல்ல எந்த ஒடுக்கப்பட்டோரது அரசியலிலும் புகுந்து அந்த அரசியலின் பிரதிநிதி போல ஒடுக்கும் தரப்பைச் சார்ந்த ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தக் கூடாது. இதை எத்தனை தரம்தான் நாம் திருப்பித் திருப்பிச் சொல்வது.

ஆனால் டிசே இந்தக் கேள்வியை விளக்க அ.மார்க்ஸ் x ரவிக்குமார் எடுத்துக்காட்டை கையாளுவதற்கு டிசேயிற்கு அ.மார்க்ஸ் மீது உள்ள காழ்ப்புணர்வு மட்டுமே காரணமாயிருக்க முடியும். தமிழகத்துத் தலித் அரசியலில் அ.மாவின் மிகப் பெரிய பங்களிப்பாக அவர் முன்னின்று ‘தலித் அரசியல் அறிக்கை’யை உருவாக்கியதை நான் சொல்லுவேன். ஆனால் அவர் எந்த இடத்தில் தன்னை தலித் மக்களின் அரசியல் பிரதிநிதியாகச் சொன்னார், தலித் மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்ததாகப் பேசியிருக்கிறார்? நிரூபிக்க முடியுமா டிசே! இங்கே நீங்கள் ரவிக்குமாரின் குற்றச்சாட்டை அங்கீரித்து, அ.மார்க்ஸ் சொல்லாத ஒன்றைச் சொன்னதான பொருள்பட எழுதுவதையே நான் வஞ்சகம் என்றேன்.

ரவிக்குமார் அதனால்தான் அ. மார்க்ஸை ஒதுக்கித்தள்ளினார் என்றொரு கேடுகெட்ட எடுத்துக்காட்டைத் தந்திருக்கிறீர்கள்.

ஏன் டிசே, ரவிக்குமார் மார்க்ஸை மட்டுமா திட்டினார். அவர் பெரியாரையே சாதிய வெறியனென்றும் ஸ்திரீ லோலன் என்றும் தொடந்து அய்ந்து வருடங்களாகக் காலச்சுவட்டிலும் தாய்மண்ணிலும் எழுதி வந்தவரவல்லவா. அவருக்கு அ.மாவைத் திட்டுவதா பெரிய காரியம். ரவிக்குமாரின் அ.மார்க்ஸ் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதே வழியில் பெரியாரையும் சாதி வெறியன் என்றும் ஸ்திரி லோலன் என்றும் சொல்லலாமே. நீங்கள் செய்தாலும் செய்வீர்கள். அ.மார்க்ஸை திட்டிவிட்டு ரவிக்குமார் அடுத்து செய்த காரியம் என்ன?

பார்ப்பனிய காலச்சுவட்டில் ஆசிரியராக வீற்றிருந்தார். குறுகிய காலத்திலேயே ஊழல் தி.மு.கவின் செல்லப்பிள்ளையானார். பெரியாரைத் திட்டிய வாயைத் திறந்து இளித்தபடியே கலைஞரின் கையால் ‘அண்ணா விருது’ பெற்றுக்கொண்டார். கலைஞர் அவரை வாழ்த்திப் பேசியதை தனது வலைப்பதிவில் போட்டு மகிழ்ந்தார். அவரது கட்சி இப்போது திமுகவுடனும் காங்கிரசுடனும் கூட்டிணியிலுள்ளது.

கனிமொழியும் நீராராடியாவும் பேசிய ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்குள் ரவிக்குமாரும் கனிமொழியும் ஒன்றும் தெரியாத பாப்பாக்களாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமராஜர் அரங்கில் மொக்கை ஜோக்குகள் அடித்தவாறே உரையாற்றிய காட்சியை நான் நேரிலேயே பார்த்தேன். ரவிக்குமாரின் இந்த அரசியல் தகிடுதத்தங்களுக்கு மார்க்ஸ் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற காரணத்தாலேயே அ.மார்க்ஸிடமிருந்து ரவிக்குமார் விலகியிருக்கலாமே தவிர தலித் தனித்துவத்தின் மீதுள்ள அக்கறையால் அவர் அ.மாவிடமிருந்து விலகவில்லை என்பதற்கு ரவிக்குமாரின் இன்றுவரையான செயற்பாடுகள் உதாரணம். நீங்கள் எந்த யோக்கியதையில் ரவிக்குமாரின் உதாரணத்தை இங்கு எடுத்துவருகிறீர்கள்?

அருந்தததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை ரவிக்குமாரின் கட்சி மூர்க்கமாக எதிர்த்ததை நீங்கள் அறிவீர்களா? அந்தக் கட்சி ‘சமத்துவப் பெரியார்’ என்ற விருதினைக் கலைஞருக்கு வழங்கியதை அறிவீர்களா? எந்தவகையில் ரவிக்குமார் தலித் தனித்துவ அரசியலுக்கான எடுத்துக்காட்டாகவும் அ. மார்க்ஸ் அதைத் தட்டிப் பறிப்பவராகவும் உங்களுக்குத் தெரிகிறார். தயவு செய்து விளக்குங்கள்.

புலம் பெயர் சூழலில் தலித் அல்லாதவர்கள் தங்களைத் தலித்துகளுடைய பிரதிநிதிகளாகக் கூறுகிறார்களா? யாரைய்யா அந்த அயோக்கியன். சொல்லுங்கள் டிசே! ஊக அரசியலோ, கிசுகிசு வேலையோ செய்யாதீர்கள் ஆதாரத்துடன் பேசுங்கள்.

நான் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யில் சாதாரண உறுப்பினனாகக் கூட இருந்ததில்லை. முன்னணியினர் தலித் மாநாடுகள் நடத்தும்போது நான் அவர்களுடன் கூடவே இருந்துள்ளேன். ஆனால் மாநாட்டில் ஒரு கட்டுரை வாசிக்க இடமளிக்குமாறு கூட நான் அவர்களைக் கேட்டதுமில்லை, வாசித்ததுமில்லை.

ஆனால் ‘தலித் மாநாடு’ குறித்து வதந்திகளை ஊடகங்கள் கிளப்பியபோது அந்த ஊடகங்களை எதிர்த்து விடாப்பிடியாக எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல. அல்லது தலித் அரசியல் குறித்த எனது கட்டுரைகளையும் தொகுப்புகளையும் எதிர்வினைகளையும் நீங்கள் வாசிக்காதவருமல்ல. ஆனால் எந்தக் கட்டத்திலும் என்னை தலித் அரசியலின் பிரதிநிதியாக நான் முன்னிறுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு யாரையோ குறித்தே இந்தக் கேள்வியை எழுப்புவதாகவே நான் ஊகிக்கிறேன். அந்த ஊடுருவி யாரென நீங்கள் அடையாளம் காட்டினால் நமக்குக் களையெடுக்க வசதியாயிருக்கும்.

அவ்வாறு யாரையும் நீங்கள் அடையாளம் காட்டாதபட்சத்தில் வெறுமனே வம்புக்கே இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்பியிருப்பதாக நான் அய்யமுறுவது நியாயம்தானே டிசே.

உங்களது கேள்விக்கு ஒரு சொல்லாடலை முத்தாய்ப்பாகக் கூறிவைக்க விரும்புகிறேன். “சாதியொழிப்பு அரசியலில் ஒரு தலித் அல்லாதவருடைய பங்களிப்பு என்பது சாதியொழிப்புக் களங்களில் முன்நிற்பதும் தலித்திய அரசியலில் பிரதிநிதித்துவம் என்று வரும்போது பின்வாங்குவதுமாகவே இருக்கவேண்டும்”. இந்தச் சொல்லாடலை நான் அன்றைய ரவிக்குமாரிடம் இருந்து பெற்றேன் என்பது பின்குறிப்பு.

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

அடையாள அரசியலையே நிராகரிக்கிறேன் என்றெல்லாம் நான் பொத்தாம் பொதுவாகக் கூறியதில்லை. இதையெல்லாம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள் டிசே! ஆச்சரியமாயிருக்கிறது.

சுருக்கமாக இப்படி விளக்கலாம். தமிழ்த் தேசியம் என்று வரும்போது அங்கே தொழிற்படும் ‘தமிழர்’ என்ற பொது அடையாளத்தை நான் நிராகரிப்பேன். தமிழ்த் தேசிய இனத்திற்குள் இருக்கும் சாதி / பால்நிலை / வர்க்கம் / பிராந்தியம் போன்ற வித்தியாசம் வித்தியாசமான பல்வேறு ஒடுக்கப்படும் அடையாளங்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பேன். இதையே ‘நாமெல்லோரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தைச் சிங்கள இனவாதம் முன்னிறுத்தும் போது இலங்கை என்ற அடையாளத்தை மறுத்து ஒடுக்கப்படும் எனது தமிழன் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவேன். இங்கே நான் என்மீது திணிக்கப்படும் இலங்கையன் என்ற அடையாளத்தைப் புறக்கணிப்பேன். இதையே அய்ரோப்பாவில் அய்ரோப்பியர்களின் வெள்ளைத்திமிர் முன்னே எனது இலங்கையன், வெள்ளைக் காலனியத்தால் வஞ்சிக்கப்பட்டவன் என்ற அடையாளத்தை உயர்த்திப்பிடிப்பேன்.

அரசியல் கோட்பாடுகளிற்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டதில்லை. மனிதர்களுக்காகவே அரசியற் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பான பண்பாட்டு - அரசியல் சூழல்களிற்கு ஏற்ப கோட்பாடுகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும், மாறவேண்டும். மாறாதபட்சத்தில் அதற்குப் பெயர் கோட்பாடு அல்ல. அதனது பெயர் வரட்டுவாதம்.

எனவே அடையாள மறுப்பு அரசியலுக்கான தேவை இருப்பதைப் போலவே அடையாள அரசியலுக்கான தேவையும் உண்டு. ஒருவர் எந்த அரசியலைத் தூக்கிப் பிடிப்பதென்பது குறிப்பான அரசியல் - பண்பாட்டு சூழலைப் பொறுத்து வேறுபடும். வேறுபட வேண்டும்.

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

பெரியார் 1930 கள் தொடக்கம் தனது இறுதிக்காலம் வரை தமிழ்த் தேசிய விடுதலையை அவ்வப்போது முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடில்லை. பெரியாருடைய தமிழ்த் தேசியம் தமிழர்களோடு சேர்த்து மொழிச் சிறுபான்மையினரையும் மதவழிச் சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். அது இசுலாமியர்களையும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் போன்ற சிறுபான்மையினரையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியம். பார்பனர்களைக் கூட அவர் தமிழகத்தை விட்டு வெளியேற்றப் போவதாகச் சொல்லவில்லை. அவர் பார்ப்பனர்களை அதிகாரத்திலிருந்து வீழ்த்த வேண்டும் என்றுதான் சொன்னார்.

ஆனால் ஈழத்தில் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்த் தேசியம் அவ்வகையானதா? அது இஸ்லாமியர்களைக் கட்டிய துணியோடு கொள்ளையிட்டு விரட்டிய தேசியமல்லவா. தமது சொந்த இனத்தின் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்றழித்த தேசியமல்லவா. அப்பாவிச் சிங்கள மக்களை கொன்றுகுவித்த தேசியமல்லவா அது. சாதி ஒழிவதற்கு சாதியின் மூலவேரான இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்றார் பெரியார். மாறாகப் புலிகள் புதிதாக இந்துக் கோயில்களைக் கட்டினார்கள்.

தேசியம், பாஸிசம், சோசலிசம் எல்லாமே வெறும் சொற்கள். அந்த சொற்களின் கீழ் நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகள்தான் அந்த சொற்களுக்கான பெறுமதியைக் கொடுக்கின்றன. தேசியம் என்ற கருத்தாடல் தமிழகத்திலும் பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் ஒரேமாதிரியாகத் செயற்படுவதில்லை. அவை வெவ்வேறு வகையான செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அந்தச் செயற்பாடுகளே நமது ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகின்றன.

அதுசரி டிசே, அது என்ன கேள்வியின் ஆரம்பத்தில் ‘பெரியாரின் தாசனாகத் தம்பட்டம் அடிக்கிறேன்’ என்ற விசனம். ஏன் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து உங்கள் காதுகளில் தம்பட்டம் அடித்தேனா. ஏன் உங்களிற்கு இவ்வளவு காரணமற்ற வெறுப்பு. வெறுப்பு என் மீதா பெரியார் மீதா? எனினும் பெரியாரின் மாணவன் என நான் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

டிசே, பெருங்கதையாடல் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலிருந்து அல்லாமல் பெருங்கதையாடல் என்றால் ஷோபாசக்திக்கு என்னவென்று தெரியுமா அல்லது ஷோபாவுக்குத் தெரியாது என நிறுவும் எத்தனத்துடன் கேட்கப்பட்ட சுத்துமாத்துக் கேள்வியே இந்தக் கேள்வி என நான் கருதுகிறேன்.

ஒரு விடயத்தின் பல்வேறு தரப்புகளை நிராகரித்து விடயத்தை சாராம்சம்படுத்தி அணுகி அதற்கு ஒரு உறுதியான தீர்வையும் அந்தத் தீர்வே அந்த விடயத்தில் தொடர்புள்ள அனைத்து தரப்புகளிற்கும் மொத்தமான தீர்வு என இலட்சியவாத நோக்கில் சொல்லப்படும் ஒரு கதையாடலையே பெருங்கதையாடல் என நான் புரிந்துகொள்கிறேன்.

ஈழத்துச் சூழலில் இதை விளங்கப்படுத்தினால், வடக்குக் கிழக்கில் அல்லது தமிழீழம் என வரையறுக்கப்பட்ட பரப்பில் தமிழ் பேசும் மக்களிடையே உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினர், பெண்கள், இசுலாமியர்கள், இந்திய வம்சாவழியினர், ஒடுக்கப்படும் கிழக்கு மக்கள் போன்ற வித்தியாசங்களை மறுதலித்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒடுக்கிக்கொண்டிருப்பவர்களையும் தமிழர்கள் என்ற பெயரில் சாராம்சப்படுத்துவதையும் இந்த எல்லாப் பிரிவினருடைய வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளிற்கும் தமிழீழமே தீர்வென ஒரு மொத்தத்துவத் தீர்வை முன்வைப்பதையும் தமிழீழப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

இந்து மதம் என எடுத்துக்கொண்டால் ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல்வேறு சிறிய, பெரிய பண்பாட்டு அல்லது வழிபாட்டு மரபுகளின் தொகுப்பே இன்றைய இந்துமதம். இன்று பால்தாக்கரேயும் பா.ஜ.கவும் முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலைப் இந்துத்துவப் பெருங்கதையாடல் எனச் சொல்லலாம்.

5. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

ஈழத்திற்கான தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஒருபோதும் போகிற போக்கில் நிராகரித்ததில்லை. இன்றைய உலகச் சூழலில் தனிநாட்டுக்கான சாத்தியம் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஈழப் புலத்தில் இனியொரு ஆயுதம் தாங்கிய போராட்டம் நிகழ்வதையும் நான் விரும்பவில்லை. ஏனெனில் யுத்தம் அவ்வளவு பெரிய பாதிப்பை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. ஆனால் தங்களது அரசியலைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஈழத்தில் வாழும் மக்களே. அவர்கள் தமிழ் ஈழமே தீர்வென்றும் ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென்றும் முடிவெடுத்தால் அதைத் தடுக்க நான் யார், அதற்கு எனக்கென்ன சக்தியுள்ளது.

ஈழத்தில் நடந்த அகமுரண்களைச் சொல்லி நான் விடுதலையை நிராகரிக்கவில்லை. விடுதலைப் புலிகளையே நிராகரித்தேன். விடுதலை வேறு புலிகள் வேறா என்றொருவர் கேட்கலாம். ஆம் என்பதே எனது உறுதியான பதில்.

புலிகள் ஈழவிடுதலையைப் பெற்றுத் தருவார்கள் என நான் கடந்த இருபது வருடங்களாக எந்த நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ‘புலிகள் தங்களது பாஸிசத்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறைத் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்’ என ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலுக்கு எழுதிய மதிப்புரையில் கசப்புடன் குறிப்பிட்டேன்.

நான் மறுத்தது புலிகளின் பாஸிச அரசியலையே தவிர தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை அரசியலை அல்ல.

அதுசரி டிசே, இடையிலே தமிழகத்திற்கான விடுதலையை நிராகரிக்கிறேன் என்றொரு குற்றச்சாட்டை ஏன் என்மீது வீசுகிறீர்கள். நான் எப்போது அப்படிச் சொன்னேன். அவர்கள் இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே. ஆரம்பிக்காத ஒன்றை நான் எங்கேபோய் நிராகரிப்பது. ஏன் இந்த அவசர எதிர்வு கூறலும் அதை வைத்து என்மீதான விமர்சனமும். இதைத்தான் ஆடறுக்க முதல் புடுக்கறுக்க நிற்பது என ஊரில் சொல்வார்கள். ஒருவேளை சீமான், மணியரசன் போன்றவர்களின் எழுச்சி உரைகளால் கவரப்பட்டு தமிழகத்தில் தனிநாட்டுக்கான போராட்டம் வெடித்துவிட்டதாகக் கருதுகிறீர்களோ. அவ்வாறு கருதுவது உங்களது உரிமை. ஆனால் ஊகத்தின் அடிப்படையில் எல்லாம் என்னை நோக்கி நீங்கள் கேள்விக்கு மேலே கேள்விகளாக அடுக்குவது கொடுமை. நான் சொல்லாததையெல்லாம் சொன்னேனென்று நீங்கள் பட்டியலிடுவது கயமை.

6. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

இதெல்லாம் ஒரு கேள்வியா டிசே! இவ்வாறான சாரமற்ற சொல்லாடல்களைக் கேள்விகளாகக் கோர்த்த நீங்கள் கோமாளியா? இல்லை வேலைமெனக்கெட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நான் கோமாளியா?

காஷ்மீரில் அகமுரண்கள் உள்ளன. எங்குதான் அவை இல்லை. கியூபாவில் இல்லையா. எல்லாவிடத்திலும் உள்ளன. அந்த அகமுரண்களை தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் இறங்குமாறு கேட்பதும் உயிர்ப் பலிகள் நிகழ்கையில் அந்தத் தவறுகளைக் களையுமாறு குரல்கொடுப்பதும் அதற்குக் காரணமானவர்களை நிராகரிப்பதும் காஷ்மீரத்து மக்களின் விடுதலைக் குரலோடு நாமும் இணைந்து நிற்பதும்தானே நமது கடமை. இதெல்லாம் மிகவும் அடிப்படை அறம் சார்ந்த விடயங்கள் அல்லவா. இதிற் கூடவா உங்களுக்குச் சந்தேகம் டிசே.

‘துரோக’ அமைப்புகள் என்றொரு சொல்லாடலை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தச் சொல்லாடலால் ஈழத்து அரயசிலையும் மக்களையும் சிதைத்தது போதும். தயவு செய்து அதைக் காஷ்மீர்வரை கடத்திச் செல்லாதீர்கள்.

தோழமையுடன் கடைசியாக ஒரு வார்த்தை டிசே! உங்களது கேள்விகளின் நோக்கம் என்னை ஈழமக்களின் விடுதலைக்கு எதிரானவனாக வலிந்து சித்திரிப்பதும் என்னையொரு முட்டாளாகச் சித்திரிப்பதுவுமே என்று எனக்கு நன்றாகவே புரிகின்றது. உங்களது இரண்டாவது நோக்கம் வேண்டுமானால் ஒருவேளை நிறைவேறலாம். ஆனால் உங்களது முதலாவது நோக்கம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. உங்களால் மட்டுமல்ல யாராலும் அதைச் செய்துவிட முடியாது. ஏனெனில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தத்துவாசிரியர்கள், அரசியல்வாதிகள், போராளிகள் என யாரையும்விட வெகுசனங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பது எனது அனுபவம். ஏனெனில் அவர்கள் அவர்களது வதைகளிலிருந்தும் பாடுகளிலிருந்தும் உண்மைகளைக் கண்டடைகிறார்கள். அந்த உண்மையின் வெளிச்சத்தில் அவர்கள் எங்கள் ஒவ்வொருவரதும் எழுத்துகளையும் செயற்பாடுகளையும் பரிசீலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=795

இந்த நடுநிலை விபச்சாரி............ புலிகள் எந்த கமினிஸ்டை கொன்றார்கள் எந்த கலைஞனை கொன்றார்கள் எங்கே அப்பாவி சிங்கள மக்களை கொன்றார்கள் என்று ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறதா?

குமுதினி படகை வழிமறித்து சிங்கள காடையர்கள் கத்தியாலும் வாளாலும் அதில் இருந்த அனைத்து தமிழர்களையும் ஒரு ஆறுமாத சிறுமி உட்பட குதறியபோது.......

அதன் வலி பொறுக்க முடியாது தன்னிச்iசாயக சில புலி உறுப்பினர்கள் ஒரு சிங்கள கிராமத்தினுள் புகுந்து சில சிங்களவர்களை கொன்றார்கள். அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கபட்டது சிங்கள மக்களை இலக்காக்குபுவது அன்றொடு நிறுத்தவும்பட்டது.

இந்த நடுநிலை விபச்சாரி........... ஊகங்களை எழுதிகொண்டே இருக்கலாம்.????

இந்த விபச்சாரிகளை தேடி புலிகள் சுட்டிருந்தால் அதுகும் குற்றமாகியிருக்கும் இந்த ஜனநாயக பூமியிலே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய இந்த சோபாசக்தி வலைப்பூ உலகின் ஆரம்பத்தில் (அதற்கு முன்னரும் சில இணையத்தளங்களில் எழுதி வந்தது. ஆனால் அப்போதெல்லாம் அது பெரிதும் அறியப்பட்டிருக்கவில்லை.) (யாழ் குடில்கள்.. வலைப்பூ என்று அந்த இணையத்தில் கண்டபடி எழுதும் எழுத்தியல் உலகின் ஆரம்பத்தில் இருந்து அந்த உலகோடு இணைந்திருப்பவன் என்ற வகையில் சொல்கிறேன்..) வெட்டிக்கு தேடுவாரில்லாமல் எழுதிக் கொண்டு திரிஞ்ச(வர்)து. இடையில பெண்களின் அந்தரங்க உறுப்புகளை வைச்சு தூசணத் தமிழை வைச்சு கவிதை கட்டுரை வரைஞ்சு கொண்டு எழுத்துப் புரட்சி பண்ணுறன் என்று தானே தனக்கு சொல்லிக் கொண்டு திரிஞ்சிச்ச(வர்)சுது.

(தூசணத் தமிழால் வலைப்பூ உலகில் உயர்ந்த ஈழத்தமிழர்கள் மூவர். 1. சோபா சக்தி. 2. டி. சே. 3. தமிழச்சி. (தமிழச்சி ஒரு படி மேல போய் பெண்களின் நிர்வாணப் படங்களையே போட்டு கிட்டத்தட்ட ஒரு பாலியல் வக்கிரத்தனம் வளர்க்கும் வலைப்பூவையே நடத்தியவர்.) இவர்கள் எவருமே இவர்களின் எழுத்தின் சமூகத் தேவையால் அது கொண்டிருந்த தமிழியல் கனதியால் பிரபல்யம் அடைந்தவர்கள் அல்ல. டி. சே இடையில் சில நூல்களை வெளியிட்டு தன்னை இன்னொரு வடிவில் இனங்காட்டி அதனூடு "தமிழ் பெரியவர்கள்" விரும்பும் பெரியாள் ஆகிட்டார். ) :D

அப்படி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமான இந்த சோபாசக்தி.. இப்ப முழு நேரமாக.. புலி எதிர்ப்பு என்பதை சன நாய் அகம் பூசி மொழுகி எழுதி... பெரியாளாகி.. பேசப்படும்.. ஏன் கிருபனால் காதலிக்கப்படும் அளவுக்கு உயர்ந்திட்டுது. கொடுமைடா சாமி. அது எனி வேரும் விழுதுமாகி எங்கடை ஆக்கள் ஆளாளுக்கு இலவசமா கொடுக்கிற பட்டங்களை (அடைமொழிகள்) தாங்கி தமிழர்களின் விழுமியமும் ஆகி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போல...???!

உவர்.. டி சே யும்.. சோபா சக்தியும் வாசகர்களை கவர.. ஆபாசத் தமிழை.. எழுத்துத் தமிழாக்கிய ஒரு வகை.. 3ம் தர பிரபல்யம் விரும்பிகள். அதற்கு அவர்கள் பெரியாரை தவறாகப் பயன்படுத்தியும் கொண்டனர். இவர்களின் எழுத்துக்களால் பெரியாரை ஒரு பித்தலாட்டக்காரனாக இனங்கண்டு வெறுக்க ஆரம்பித்தவன் நான். ஆனால் உண்மையில் மா பொ சி போன்றவர்களோடு பெரியாரும் ஒரு காலத்தின் கருத்தியல் சூறாவளி என்பதை பின்னர் நாம் தமிழர் அமைப்பு போன்றவற்றின் கொள்கைப்பற்றோடு இணைத்துக் கண்டேன்.) அந்த வகையில் டி.சே சோபாசக்தியின் தோழர் ஆவது புதுமையும் அல்ல.

ஆபாசத்தமிழுக்கு அங்கீகாரம் தேடுகிறோம் என்ற போர்வையில் தங்களைப் பிரபல்யப்படுத்த (இப்படிப் பிழைக்கிறதவை விட "ஏ" படம் எடுத்து பிழைச்சிருக்கலாம்) இவர்கள் முனைந்ததை அப்போதே யாழில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். ன்று அதே சோபாசக்தி தமிழர்களைக் கொன்றொழித்த சிறீலங்கா மகிந்த அரசின் நிகழ்வுகளுக்கு தனது சன நாய் அக தூசணத் தமிழ் ஆதரவுக் கரத்தை நீட்டி கையெழுத்திட்டு கைகொடுக்கும் அளவுக்கு பெரியாள் ஆகி(ட்டார்)டிச்சு.

நடக்கட்டும்.. நடக்கட்டும்.

கடவுளே நீதான்.. தமிழர்களையும் அவர்களின் எழுத்துலகையும் எனிக் காக்க வேண்டும். வலைப்பூ உலகில் திரிந்த இந்த கருத்தியல் அனாதை... தூசணத் தமிழலால்.. இன்று அறிவு சீவியாகி... புலிகளை விமர்சிக்கிற அளவுக்கு சன நாய் அக எழுத்தாளர் ஆகி... பெரியாள் ஆகிடிச்சு என்று நினைக்கிற போது.. உலகம் எவ்வளவு வேகமா சுழன்றுகிட்டு இருக்கென்று விளங்குது. உந்த சோபா சக்திக்கு யாழிலும் ஒரு ரசிகர் சங்கம் முளைச்சிருக்குது போல..! வாழ்க...! வழங்குக இவர்களுக்கு ஓசி விளம்பரம். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே நீதான்.. தமிழர்களையும் அவர்களின் எழுத்துலகையும் எனிக் காக்க வேண்டும்.

இந்த அறிவு சீவி.. புலிகளை விமர்சிக்கிற அளவுக்கு பெரியாள் ஆகிடிச்சு என்று நினைக்கிற போது.. உலகம் எவ்வளவு வேகமா சுழன்றுகிட்டு இருக்கென்று விளங்கு.

உந்த சோபா சக்திக்கு யாழிலும் ஒரு ரசிகர் சங்கம் முளைச்சிருக்குது போல..! வாழ்க...! :D:)

ஆமாம் நானும் கவனித்தேன்

அதிலும் இங்கு 3 நடுநிலையாளர்கள் என்று தள்ளிநிற்போர் இவருக்காக உழைப்பது தெரிகிறது. நானும் பிரான்சில்தான் இருக்கின்றேன். அவரைப்பற்றி இங்குதான் இந்தளவுக்கு அறிகின்றேன். ஆனாலும் சில நன்மைகள்.

நேரே கண்டால் நாலு கேள்விக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன இந்த விதைப்புக்களால்.

சிலரது கருத்துக்களைப்பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது.

ஒருவர் ஒரு உடுப்பை அசிங்கமாக போட்டிருந்தாலும் அதை அவர் எவ்வளவு அழகுபட தைத்துள்ளார் என்று மட்டும் பாருங்கள் என்பதுபோல் உள்ளது. ஆனால் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அல்லது சமூதாயத்தை குழப்பாத வகையிலாவது போட்டுள்ளரா என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபனால் காதலிக்கப்படும் அளவுக்கு உயர்ந்திட்டுது. கொடுமைடா சாமி. அது எனி வேரும் விழுதுமாகி எங்கடை ஆக்கள் ஆளாளுக்கு இலவசமா கொடுக்கிற பட்டங்களை (அடைமொழிகள்) தாங்கி தமிழர்களின் விழுமியமும் ஆகி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போல...???!

கடவுளே நீதான்.. தமிழர்களையும் அவர்களின் எழுத்துலகையும் எனிக் காக்க வேண்டும். வலைப்பூ உலகில் திரிந்த இந்த கருத்தியல் அனாதை... தூசணத் தமிழலால்.. இன்று அறிவு சீவியாகி... புலிகளை விமர்சிக்கிற அளவுக்கு சன நாய் அக எழுத்தாளர் ஆகி... பெரியாள் ஆகிடிச்சு என்று நினைக்கிற போது.. உலகம் எவ்வளவு வேகமா சுழன்றுகிட்டு இருக்கென்று விளங்குது. உந்த சோபா சக்திக்கு யாழிலும் ஒரு ரசிகர் சங்கம் முளைச்சிருக்குது போல..! வாழ்க...! வழங்குக இவர்களுக்கு ஓசி விளம்பரம். :D:)

ஷோபாசக்தியியை ஒரு ஜந்துவாக ஆக்கிவிட்டீர்கள். :D

சோபாசக்தி எழுதுவதை ரசிப்பதற்கு அவருடன் காதலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.. அதற்கு தேவையுமில்லை.. :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு உடுப்பை அசிங்கமாக போட்டிருந்தாலும் அதை அவர் எவ்வளவு அழகுபட தைத்துள்ளார் என்று மட்டும் பாருங்கள் என்பதுபோல் உள்ளது. ஆனால் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அல்லது சமூதாயத்தை குழப்பாத வகையிலாவது போட்டுள்ளரா என்பதே.

பாரீசில் இருக்கின்றீர்கள் விசுகு அண்ணா. நல்ல நல்ல மியூசியங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டீர்கள் போலுள்ளது. நவீன கலைகளில் ஆபாசம் என்று எதுவும் கிடையாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிருபன்

எனக்கும் நீங்கள் சொல்பவர்கள் போல் சிலரைத்தெரியும். எதைச்செய்தாலும் முதலில் நான், எனது குடும்பம், எனது நாடு.... இவற்றிற்கு பிரயோசனமாக இருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியியை ஒரு ஜந்துவாக ஆக்கிவிட்டீர்கள். :D

சோபாசக்தி எழுதுவதை ரசிப்பதற்கு அவருடன் காதலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.. அதற்கு தேவையுமில்லை.. :wub::lol:

மனிதன் என்றால் நாகரிகம்.. அநாகரிகம்.. என்று பகுத்துணரும் இயல்பை கொண்டிருப்பான். ஜந்துகள்.. தான் உடுப்புப் போடாட்டிலும் அதுகளுக்கு ஒன்றுதான் உடுப்புப் போட்டாலும் ஒன்றுதான். மனிதர்கள் மத்தியிலும்.. அந்த வகையில் உள்ளதுகளை ஜந்துகள் என்னாமல்.. வேறேதாவது கொண்டு அழைக்கத் தெரியவில்லை. :D:)

இந்த ஜந்து அப்படி என்னத்தை புதிசா எழுதி இருக்குது. கள்ளுத் தவறணைப் பேச்சை அல்லது பப்பில் பேசப்படும் பேச்சை அப்படியே அச்சில் போட்டால்.. எப்படியோ அப்படி..! அதை போய் ஐநா சபையில் பேச முடியுமா. சோபாசக்தி என்ற நீங்கள் குறிப்பிடும் நபர் (ஜந்து) இதையே புரட்சி என்று சொல்லித் திரியு(றார்)து.

சிலர் அதற்கு ஒரு மாயை தோற்றம் அளிச்சு.. உருக்கொடுத்துவிட.. அதுவும் உருவெடுத்து ஆடுது. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாமல் உந்தாளை தலையில தூக்கிவைத்து அடாதையுங்கோ. எம்ஜிஆரும் ........... எண்டு தூசனவார்த்தையில் எழுதினத நான் வாசிச்ச ஞாபகம். நெடுக்கு உங்களுக்கு இரண்டு இடத்தில பச்சை குத்தியிருக்கிறன்ஈ காரணம் உங்கள் கருத்துடன் உடன்படுகிறன் ஆனால் தங்கள் சொல்லாடலில் அல்ல. தங்கள் எழுத்துக்களும், கருத்துக்களும் கடந்தகாலங்களில் தரமானதாகவே இருந்தவை அதை இதுபோன்ற விமர்சனங்களால் மதிப்பற்றதாக்கிவிடாதீர்கள். இதேகருத்தை வேறவிதத்திலும் வெளிப்படுத்தலாம் முயலுங்கள்.

நன்றி.

சோபாசக்தி என்பது ஆண்பாலா.. பெண்பாலா... ஒன்றன்பாலா..???! சோபா + சக்தி... இந்தக் குழப்பம் காரணமாகவே ஒன்றன்பாலாக கருத்திட்டேன். சிலர் சோபாசக்தியை.. ஆண் என்கிறார்கள்.. சிலர் பெண் என்கிறார்கள்.. எனக்கு அந்தப் பெயர் இரண்டுமாகவும் அன்றி.. ஒன்றன்பாலைக் குறிக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. சக்தியை (energy) ஒன்றன்பாலில் தானே குறிப்பிடுவோம். புனைபெயரில் ஒரு தெளிவின்மை காணப்படுவதால்.. இத்தவறு நேர்ந்திருக்கலாம். இதனை சம்பந்தப்பட்ட புனை பெயர் கொண்டவர் கருத்தில் எடுப்பது நன்று. :)

Link to comment
Share on other sites

அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேச வைத்தீர்கள்

.ப்ய் ஸ்கொப ஸக்தி ஒன் Wஎட்னெச்டய், Fஎப்ருஅர்ய் 16, 2011 அட் 11:17அம்.ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தமபி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். 'தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா' என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். இப்போதுவரை தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்தக் குற்றச்சாட்டிற்கான இணைப்பை யாரும் முன்வைக்கவில்லை. நான் தொடர்ந்தும் ப்ரியா தம்பியின் திரியிலும் எனது முகப்புத்தகப் பக்கத்திலும் இடைவிடாது மறுப்பை எழுதியவாறே இருந்தேன்.

தமிழச்சியே வந்து ப்ரியா தம்பியின் திரியில் 'ப்ரியா தம்பி எழுதியது சரியே' என்றதும் பிரச்சனை இன்னொரு பரிமாணத்தை எட்டிற்று. தமிழச்சி அப்போது கூடத் தான் முன்னரே அவ்வாறொரு குற்றச்சாட்டை வைத்ததாகச் சொல்லவில்லை. அவர் ப்ரியா தம்பியின் குற்றச்சாட்டைச் சரியென்று மட்டுமே கூறினார். அதாவது ப்ரியா தம்பி உருவாக்கிய குற்றச்சாட்டிற்கு தமிழச்சி தனது அங்கீகாரத்தை அளித்தார். ப்ரியா தம்பியோ ஆதாரத்தைக் காட்டியாகிவிட்டது "நாண்டுகிட்டு சாவீங்களா" என என்னிடம் கேட்டார். ஏராளமானவர்கள் தமிழச்சியின் கூற்றை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு என்மீது தொடர்ந்து பழிகளைச் சுமத்தினார்கள். எனது மறுப்பை ஆதரித்து நின்ற தோழர்கள் பலரும்கூட என்பொருட்டு பழிச் சொற்களைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக்கொண்டு தமிழச்சிக்கு Fஅcஎபோக் ஊடாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டுத் தமிழச்சியின் பதிலுக்காகக் காத்திருக்கலானேன். அந்தச் செய்தி இது:

ஸ்கொப ஸக்தி, 15 Fஎப்ருஅர்ய் அட் 03:51

வணக்கம்,

நமது கடந்தகால உறவுகளை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்ற காரணத்தினாலேயே நீங்கள் கடந்த 4 வருடங்களாக என்னைத் தாக்கி பதிவுகள் போட்டுவந்த போதிலும் நான் மவுனம் காத்தேன்.ஏனெனில் இணையத்தில் கிசுகிசுக்களளிற்காகக் காத்திருப்பவர்களே 95 சதவீதமானோர்.

ஆனால் இது குறித்து உங்களிற்குக் கவலையே இல்லை என உங்களது தொடர்ந்த பதிவுகள் நிரூபித்தன. இன்று ப்ரியா தம்பியின் முகப் புத்தகத்தில் அவர் எழுதிய 'நான் அத்துமீறி நீங்கள் என்னை அடித்தது' என்ற பதிவை உண்மையே எனச் சான்றிதழ் கொடுத்து நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.

எனவே, நமக்குள்ளான உறவு என்ன? பிரிவு ஏன் ? என்ற எல்லா விடயத்தையும் நான் முழுவதுமாக எழுதுவதற்கு நீங்கள் என்னைத் தூண்டியுள்ளீர்கள். எனினும் இவ்வளவு நடந்த பின்னும் நமது உறவைப் பகிரங்கமாக எழுத எனது மனது ஒப்பவில்லை.

இனி என்ன செய்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்களுடைய கையைப் பிடித்து இழுத்தேன் என்ற விமரிசனத்திற்கு நான் விரிவான பதிலை எழுத வேண்டியிருக்கலாம்.

எனினும் இந்த நிமிடம் வரை நமது உறவைப் பகிரங்கமாக வெளியிலே வைக்க வேண்டாம் என்றே எனது மனது சொல்கிறது.

இனி நடப்பதும் நடக்காததும் உங்களது கையில். விளைவுகளிற்கும் நீங்களே பொறுப்பு. என் மீது எந்தப் பழியும் சேராது.

- சக்தி

நான் தமிழச்சிக்கு செய்தி அனுப்பி இரண்டு நாட்களாகிவிட்டன. அவர் எனக்கு இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை. எனது செய்தியை தமிழச்சி கவனிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் இந்த இருநாட்களுமே பேஸ்புக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறார். தவிரவும் எனது செய்தி அவருக்கு அனுப்பப்பட்ட பின்பும் அவர் ப்ரியா தம்பியின் திரியில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும் வகையில் கருத்துகளை எழுதுகிறார். அவரின் பதிலின்மையை நான் எவ்வாறு விளங்கிக்கொள்வது? நான் அவருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்ததுபோல நான் வெளிப்படையாக எழுதுவதில் அவருக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றே விளங்கிக்கொள்கிறேன். ஒருவகையில் அவரின் அனுமதியுடனேயே நான் எனது தரப்பைச் சொல்கிறேன். இனி எனக்கும் தமிழச்சிக்குமான தொடர்பு என்ன என்று நான் பேசத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அதைச் சொல்லாமல் இந்தக் குற்றசாட்டு அவதூறேயென நிரூபணம் செய்ய எனக்கு இனி வழிகள் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுத் தவறென எடுத்துக்காட்ட எவ்வளவு மிகக் குறைந்தளவு சொற்கள் தேவைப்படுமோ அந்தச் சொற்களை மட்டுமே நான் இங்கே பேசப் போகிறேன்.

2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச தமிழச்சி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே நமக்கிடையேயான முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே தமிழச்சியின் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன். நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.

சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு தமிழச்சின் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.

இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது. இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. உறவு முறிந்ததுமே உடனடியாகவே தமிழச்சி இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்' குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை. என்பொருட்டு எனது தோழர்களும் தமிழச்சியிடம் வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நமக்கிடையே நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.

பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத் தமிழச்சி தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது. அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் இப்போது ப்ரியா தம்பி கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல. தமிழச்சியை முன்னிறுத்தி ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க ப்ரியா தம்பிக்கும் காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. நமது பிரிவிற்குப் பின்பாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த அவதூறைச் சரியான குற்றச்சாட்டு என தமிழச்சி சொல்வதும் தமிழச்சியின் கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள். தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

அண்ணை ஒரு சிறுகதை மனுசர் வாசிக்ககூடியதாக எழுதிவிட்டு பின்னர் விமர்சனத்தை வையுங்கள்

Link to comment
Share on other sites

'அதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன் -மற்றவர்க்கும் எனக்கும்.'

நன்றி ருத்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கா.. தூ.

இது எல்லாம் ஒரு பிழைப்பு.

இவங்க - தமிழச்சி கதையே தனி ஒரு முன் பின் நவீனத்துவ "இலக்கியமாகி" இங்கு விரும்பிப் படிப்பப்பட்டாலும் ஆச்சரியமில்ல. :lol::D

----------------------------------------------

ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது.

தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்கள் அந்த நிமிடத்தில் எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நாகரிகச் சுமைகளை சுமந்து கொண்டு வாழும் நகரப் பெண்களுக்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வெளிகூட இங்கு மறைமுகமாக மறுக்க‌ப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை - திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரைமுறையற்றவை. பெண்ணிய எழுத்துக்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், ஆபாசம் என்றோ மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என்றோ பொதுஇடங்களில் நஞ்சைக் கக்கும் ஆணாதிக்க மனோபாவம் இன்றளவும் தொடர்கிறது.

பெண்ணியப் புரிதல் இல்லாத இவர்களை விட ஆபத்தானவர்கள், பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்களை சுரண்டக்கூடிய மனிதர்கள்... பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் எனக்குத் தெரிய வந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இச்சம்பவம் இப்போது நடந்ததல்ல. பாரீஸில் வசிக்கும் பெண் தோழர் அவர். பெண்ணியக் கருத்துக்களை, பெரியாரியக் கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருபவர். மணமாகி, குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசுபவர் என்பதால், எதற்கும் தயாராக இருப்பார் என்ற ஆணாதிக்க வக்கிரத்தோடு ஒரு ‘முற்போக்கு’ முகமூடி இவரை அணுகியிருக்கிறது. பெண்ணியம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்று பேசி நூல் விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அத்துமீறி நடக்கவும் முயற்சித்திருக்கிறது. அப்போதுதான் அந்த ‘பின்நவீனத்து’வவாதிக்குத் தெரிந்திருக்கிறது, நமது பெண் தோழருக்கு கராத்தேயும் தெரியும் என்பது. அடி பின்னி எடுத்துவிட்டார். அப்போதே அதை இணையதளங்களில் எழுதியுமிருக்கிறார். ஆனால், அந்த யோக்கிய சிகாமணி இதுவரை அந்தப் பெண் தோழரிடம் அத்துமீறி நடந்தற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதெயெல்லாம் விடக் கொடுமை, அதே ‘முற்போக்கு’, இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு.

யாரென்று கேட்கிறீர்களா? இதுநாள் வரை தலித் வேஷம் போட்டுக் கொண்டிருந்த வெள்ளாளன் ஷோபா சக்திதான் அது. இந்த யோக்கியவான் பாலியல் சுதந்திரம் பேசுவது என்பது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களைப் பாலியல் பண்டமாக மட்டுமே பார்ப்பதில் காஞ்சி ஜெயேந்திரனுக்கும், ஷோபா சக்தி போன்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. ஜெயேந்திரன் தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததை பொது ஊட‌க‌ங்க‌ளில் ப‌கிர‌ங்க‌மாக‌ வெளிப்ப‌டுத்திய‌ எழுத்தாள‌ர் அனுராதா ர‌ம‌ணன், க‌டைசிவ‌ரை எந்த‌வொரு நியாய‌த்தையும் பெறாமலேயே இறந்து விட்டார். பாரீஸ் தோழ‌ர் ப‌ல முறை எழுதியும் அவ‌ருக்கான‌ நியாய‌ம் இதுவ‌ரை கிடைக்க‌வில்லை. ஷோபா ச‌க்தியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு க‌ள்ள‌ மௌன‌த்தைத் த‌விர எந்த‌ ப‌திலையும் இதுவ‌ரை த‌ர‌வில்லை. 'வேலைக்குப் போகும் பெண்க‌ள் ஒழுக்க‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்று காஞ்சி ஜெயேந்திர‌ன் உதிர்த்த‌ வார்த்தைக‌ளுக்கு சற்றும் குறைவில்லாத‌து ஷோபா ச‌க்தியின் செய்கை.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் சில ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. பல பேருடன் கூடித் திரிவதற்கும், தங்களது இச்சையை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்கும்தான் இவர்கள் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்க, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில்தான், பாலியல் சுதந்திரம் குறித்து அ.மார்க்ஸ் பேசத் தொடங்கினார் என்று நண்பர் ஒருவர் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. (அம்பேத்கரும், பெரியாரும் முதல் மனைவி இறந்தபின்பே இரண்டாவது திருமணம் செய்தார்கள் என்பதும், அந்தத் திருமணத்தையும் பகிரங்கமாக செய்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை, கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். (இந்தக் கட்டுரையையும் தனிமனிதத் தாக்குதல் அல்லது அவதூறு என்று சொல்லி இவர்கள் கடந்துபோகக் கூடும். ஆனால், பொதுவெளியில் புரட்சி பேசுபவர்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு விரோதமாக நடந்து கொள்வது குறித்து என்றேனும் ஒரு நாள் பேசித்தான் ஆக வேண்டும். இவர்களை திருஉருக்களாகக் கருதிக் கொண்டு பின்னால் செல்பவர்களுக்காகவாவது இதைப் பேச வேண்டும்.)

ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்காகப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை. காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசிவரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

லீனா மணிமேகலையின் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்திய அ.மார்க்ஸ் & கோ, பாரீஸ் பெண் தோழருக்காக ஒரு கூட்டம் நடத்துமா என்றால் மாட்டார்கள். யாரை சொறிந்துவிட வேண்டும், யாரைப் பிறாண்ட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

அருந்ததி ராய் மீது சேறடிப்பார்கள்; இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவார்கள்; ம.க.இ.க. தோழர்களை நக்கலடிப்பார்கள். ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவ்வாறு பத்திரமாகப் போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

(பின்குறிப்பு: ஃபேஸ்புக்கில் எழுதியதை கொஞ்சம் விரிவாக்கி இங்கே தந்திருக்கிறேன். பாரீஸ் பெண் தோழர் யார் என்பதும், ஷோபா சக்தி & கோ எனது கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினைகளும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. பொதுவான வாசகர்களின் புரிதலுக்காக அவற்றை கீழே பின்னூட்டங்களாக இட்டுள்ளேன்.)

இந்த இணைப்பை நிச்சயம் வாசியுங்கோ...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010&Itemid=263

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் வேலை வெட்டி இல்லாதவன் எல்லாம் எழுதலாம் என்பதால் நாலு எழுத்தை எழுதிவிட்டு ஏதோ திருவள்ளுவருக்கே திருக்குறள் சொன்னவங்கள்போல் துள்ளிகுதிக்கிறானுகள்.

யாரு ஐயா இவனுகள்? இவனுகள் ஆச்சு ஏதோ இரண்டு புத்தகங்களை தாங்களே எழுதி தாங்களே வாசிச்சானுகளாம் என்றால்......??

இஞ்ச யாழ்களத்தில முள்ளிவாய்கலுக்கு பின் வந்து ஒட்டிகொண்டு புலிவாந்தி எடுக்கும் ஒருவர் அவரும் என்றோ ஒருநாள் தானும் அனைத்தையும் எழுதுவாராம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம் இஞ்ச எழுதுற கருத்துக்களே ஏதோ புச்சாடீச்சா மாதிரி இருக்கு இதிலே புத்தகம் வேற எழுதினால்?

பாவம் ஐயா பிரசுகாரன் ஏதோ குடும்பத்தை நடத்த பிரசுநடத்தும் அவனுக்கு இதிலே சரிபிழை பார்க்கும் தண்டனை எல்லாம் ஏன்தானோ தெரியவில்லை.

நாம சொல்லி கேட்கவா போறானுகள்............. ஏதோ செய்து துலையுங்கப்பா.

இந்த கஞ்சல்களை இங்கே இணைக்கும் நபர்கள் கொஞ்சம் எமது நிலமைகளை கவனத்தில் எடுத்தால் தகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தி, சுசீந்திரன் உள்ளிட்ட‌ ஆதிக்க சாதியினரின் ‘புலி’த் தீண்டாமை!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை.

அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது.

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.

இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.

அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன. சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர். அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."

ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது - தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார்.

"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார். புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.

இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "

புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472:2011-01-17-04-29-48&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தி - பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண புரட்சியாளன்

ஒரு வெட்டி வேலையைச் செய்ய உட்கார்ந்து எத்தனை மணி நேரம் வெட்டியாகப் போனது என்று கணக்கிட்டுப் பார்க்கிறேன். நேரத்தைக் கணக்கிடச் செலவிட்ட 24 மணித்துளிகளும் சேர்த்து பாட்டா செருப்பு விலையைப் போல முழுதாக 18 மணி நேரம் 59 மணித்துளிகள்.

இத்தனை மணி நேரம் வெட்டியாக வேலை செய்து எழுதிய வெட்டிக் கட்டுரையை வெட்டியோ வெட்டாமலோ பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் இஷ்டம். "இணைய தள வெட்டிப் பத்திரிகைகளில் வெட்டிப் பயல்கள் எழுதும் கட்டுரைகளுக்கெல்லாம், வெட்டிப் பிடுங்கிக் களையெடுத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்ற பதிலே இந்தக் கட்டுரைக்கும் கிடைக்கும் என்று மட்டும் வெட்டொன்று துண்டொன்றாக சொல்லி வைத்து விடுகிறேன் அல்லது “தோழர்கள் இது போன்ற அவதூறுகளை எதிர்த்து போராட வேண்டும்” என்ற அறைகூவல் விடப்படலாம். அல்லது இங்கே தப்பித் தவறி விழும் ஓரிரு வெட்டி வார்த்தைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வெட்டிச் சண்டைக்கிழுத்து ஓரிரு புத்தி சிகாமணிகள் குதிக்கவும் செய்யலாம்.

புலம் பெயர்ந்து அகதியாக வாழும் நாட்டில் குடியுரிமை கூட பெறாமல், வேலை வெட்டி இல்லாமல், அரசியலே மூச்சாக வாழ்வதாக வெட்டித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு இலக்கியவாதி (ஆனால், அவருக்கு உலகின் பல நாடுகளுக்கும் இஷ்டப்படி சென்று வர விசாவும் பணமும் கொடுக்கும் ஆபீசர்களும் புரவலவர்களும் எங்கே கிடைக்கிறார்கள் என்ற மர்மம் மட்டும் தொங்கிக் கொண்டே இருக்கிறது) எழுதிய சிறுகதைத் தொகுப்பிற்கும், அவர் அடித்த ஒரு வெட்டி அரசியல் விவாதப் புத்தகத்திற்கும் இன்று மாலை நடக்க இருக்கும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளவோ கட்டுரை வாசிக்க அழைக்கப்படவோ வாய்ப்பே இல்லாத ஒரு வெட்டிப் பயல் எழுதும் விமர்சனங்களடங்கிய முன்குறிப்பு இது.

வாசிக்க நேர்ந்த அந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு “எம்.ஜி.ஆர். கொலை வழக்கு”. எழுதிய இலக்கியவாதி ஷோபா சக்தி.

இலக்கியத்தில் யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்தவாதம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்று வகைப்பாடுகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், புலி எதிர்ப்பு இலக்கியம் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறீர்களா? அப்படியொரு புதிய இலக்கிய வகைப்பாட்டை தன்னந்தனியனாக நின்று தோற்றுவித்து வளர்த்த ஒர்ர்ரே இலக்கியவாதி என்ற பெருமைக்குரியவர் என இலக்கிய வரலாற்றுப் புத்தகங்கள் வருங்காலத்தில் ஷோபாசக்தியைப் பெருமையாகக் குறிப்பிடலாம்.

பத்து சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததும் எழுந்த முதல் மனப்பதிவு இதுதான். “ரம்ழான்”, ”வெள்ளிக்கிழமை”, “திரு. மூடுலிங்க” இந்த மூன்று சிறுகதைகள் தவிர்த்து தொகுப்பில் உள்ள மற்ற ஏழு சிறுகதைகளும் ஷோபசக்தி அரசியல் களத்திலே செய்து வரும் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தின் இலக்கியச் சாயம் பூசிக் கொண்ட கதைகள் என்பதற்கு மேலாக எந்தத் தகுதியும் உடையவை அல்ல. மேலே சொன்ன மூன்று கதைகளை உத்தி பரிசோதனைக் கதைகள் என்ற நோக்கில் பார்த்தாலும் அசட்டுச் சிறுபிள்ளைத்தனமான பரிசோதனைகள் என்பதற்கு மேலாக எழுபவையும் அல்ல. மற்ற ஏழும் விஷம் தடவிய இனிப்பு.

மொத்த தொகுப்பின் நாடித் துடிப்பையும் உரத்து ஒலிக்கும் கதை ”பரபாஸ்”. நாகரீகத்தின் வாசனை படாத ஒரு காலத்திலே ஒரே ஒரு ஊர், அலைக்கழிக்கும் வாழ்க்கை இல்லாது சோம்பித் திரியும் மக்கள், அவர்களுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அந்த ஊரிலே ஒரு சிறு திருடன். சின்னக் கள்ளனின் சிறு திருட்டுகளை கையும் களவுமாக பிடித்தாலும் மன்னித்து விட்டுவிடும் பெருந்தன்மை மிக்க கிராமத்து மக்கள்.

நாகரீகத்தின் வாசனை எட்டிப் பார்க்கும் காலத்தில் இன்னொரு திருடன். சற்றே பெரிய திருட்டுகள். பிரச்சினை இப்போது போலீசுக்குப் போகிறது. கள்ளனிடம் பறிகொடுத்ததைக் காட்டிலும் போலீசுக்கு அதிகமாகப் பறிகொடுத்து வாய்மூடி மௌனியாக கைகட்டி நிற்கும் கிராமம்.

அடுத்த வருகை ”இயக்கம்”. இயக்கத்தின் வருகையோடு திருடனின் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. கிராமத்தின் குறியீடாக நிற்கும் ஆலயமே களவுக்கு உள்ளாகிறது. கிராமத்தின் ஆன்மா ஊரைவிட்டே போய்விடுகிறது. கதையின் தொடக்கத்தில் விவரிக்கப்படும் பொட்டல் காடாக அழிகிறது.

சந்தியாப்புலம், சந்தியோகுமையர் தேவாலயம், ஒரு மாய யதார்த்தவாதம் போலத் தொனிக்கும் அதிகாலைப் பொழுதுகளில் புரவியில் வலம் வரும் சந்தியோகுமையர் என்ற கிராமத்து மக்களின் ஐதீகம், கள்ளக் கபிரியல் என்ற வயதான நோஞ்சான் சிறு திருடன், வில்லியம் என்ற நாகரீக – படிப்பு வாசனை கிட்டிய சற்றே பெரிய கள்ளன், இவர்களைச் சுற்றிய ஒரு கதைப் புலம், வட்டார வழக்கு, இத்யாதி இத்யாதியான இலக்கியப் பூச்சுகள்.

சிறு திருட்டு பெரிய திருட்டாகும் போதோ, போலீஸ் வந்து மிரட்டிப் பறித்துக் கொண்டு போகும்போதோ ஊரை விட்டுப் போகாத கிராமத்தின் ஆன்மா, இயக்கம் வந்தபின் ஊரை விட்டு கடலுக்குள் கரைந்துவிடுகிறது.

இலக்கிய இனிப்பு தடவி ஷோபாசக்தி கொடுக்கும் மெசேஜ் இதுதான்.

இதிலே ஷோபாசக்தி நாசூக்காக வைக்கும் விஷம் என்ன?

இயக்கம் எதிலே வருகிறது தெரியுமோ? வெள்ளை வேனில் வருகிறதாம். இதுதான் விஷம். ஈழத்து நடப்புகள் அறிந்தோருக்குத் தெரியும் வெள்ளை வேனில் வருவோர் யாரென்று. சிங்க‌ள‌ பாசிச‌ அர‌சுக்கு எதிரானவ‌ர்க‌ளுக்கு முடிவு க‌ட்ட‌ பிள்ளையான் அனுப்பும் வேனை, இய‌க்க‌த்தின் வேனாக‌ திரித்துக் காட்டுகிறார்.

ஷோபாசக்தியின் கதைகளின் நாடித்துடிப்பு இதுதான்.

இடையிலே ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் இன்னொரு சிறு நாடியும் இருக்கிறது. அதே கதையில் வரும் ஒரு விவரிப்பில் அது பல் இளித்துக் காட்டி நிற்கவும் செய்கிறது. அது பின்வருமாறு:

“கபிரியலுக்கு எழுபது வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடலும் தீர்க்கமான கண்களும் கம்பீரமான நடையும் வெண்ணிறத் தாடியுமாக ஆள் பார்ப்பதற்கு சுந்தர ராமசாமி போலவேயிருப்பார்.”

கதைப் புலத்திற்கு ஒட்டு சம்பந்தமில்லாத சுந்தர ராமசாமி எதற்குக் கதைக்குள் வருகிறார்? கபிரியல் ஒரு காமெடி காரக்டர். காமெடி காரக்டரோடு முடிச்சு போட்டு சுந்தர ராமசாமியை ஒரு இடி இடித்து செல்கிறாராம் புத்திசாலி கதை சொல்லி ஷோபாசக்தி. இதை “பகிடி பாருங்கோ பகிடி பாருங்கோ” என்று கூவிக் கெக்கலித்துச் சிரித்து அல்ப சந்தோஷம் கொள்ள ஒரு சிறு கும்பல். பரம சந்தோஷம் கொள்வார் அ. மார்க்ஸ்.

ஈழப் புலம் பெயர் இலக்கியப் பரப்பில் ஷோபாசக்தி அவிழ்த்துக் கொட்டியுள்ள கதைப்புலக் குப்பையின் சாரம் இதுதான்: ”இயக்கத்தின்” (விடுதலைப் புலிகள்) மீதான சூசகமான பழிப்புகள், ஈழக் கள அரசியல் யதார்த்தத்திற்குப் புறம்பான அப்பட்டமான திரிப்புச் செய்திகள், வரலாற்றுப் பொய்கள். தான் சார்ந்த இலக்கிய கேம்பிற்கு எதிரான கேம்ப் மீதான பழிப்புக் காட்டல்கள்.

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள பிற கதைகளையும் எடுத்து விலாவாரியாக குடலாபரேஷன் செய்து இதைக் காட்ட முடியும். ஷோபாசக்தியின் மொத்த இலக்கிய output ஐயும் எடுத்து மொத்தத்தையும் இது போல குடலாபரேஷன் செய்து காட்டவும் முடியும்.

ஷோபாசக்தி போடும் ”மொக்குப் போடு” style –ல் சொல்வதென்றால் “It is just a beginning” என்று இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

ஈழக் கள அரசியல் நடைமுறை யதார்த்தத்திற்குப் புறம்பான ஷோபாசக்தியின் ஒரு திரித்தலைச் சுட்டிக் காட்டினேன் (வெள்ளை வேன் பற்றிய குறிப்பு). வரலாற்றுத் திரிப்பிற்கு இரு உதாரணங்கள்.

தொகுப்பின் முதல் சிறுகதை “Cross Fire”. ஒரு அரசியல் படுகொலை நிமித்தமான நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசும் இடதுசாரி சிங்கள இதழாளரின் உரையாக நீளும் கதை. இரண்டாம் பத்தியிலேயே விஷம் தோய்ந்த வரலாற்றுத் திரிபு. அந்த ‘இடதுசாரி’ சிங்கள இதழாளர் பேசுகிறார்:

“இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்.”

எவ்வளவு பிரமாதமான அரசியல் நிலைப்பாடு என்று இடதுசாரிப் போக்குள்ள வாசகர்களுக்கு எடுத்த எடுப்பில் தோன்றும். ஷோபாசக்தியின் ’வெற்றி’யின் ரகசியமும் அதுதான். ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டை வாய்ப்பாடாக கற்றுவைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல வரலாற்றைத் திரித்து ஒரு கதைக்களனை வடித்துக் கொள்வது.

இங்கே திரிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் களன் என்ன?

சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள். தமிழர்கள் இஸ்லாமிய மக்களை ஒடுக்குகிறார்கள். இது சரிதானே?

சிங்கள இனவெறி முஸ்லிம் மக்களை ஒடுக்கவில்லை என்ற பொருள் இதில் ஒளிந்து கொண்டிருப்பதுதான் விஷம் தடவிய வரலாற்றுத் திரிப்பு. அதை ஒரு சிங்கள இடதுசாரி கதாபாத்திரத்தின் கூற்றாகச் சொல்வது இன்னும் நுட்பமான திரிப்பு.

கிழக்கில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை சிங்கள இனவெறி அரசு திட்டமிட்டு வளர்த்துப் பரப்பியது ஒரு தனிக்கதை. இஸ்லாமியர்கள் ஏன் அதற்குப் பலியானார்கள் என்ற கேள்வி இதில் முக்கியமானது.

1915 –ல் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தென்னிலங்கை முழுதும் பரவலாக அரங்கேற்றப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் பெரும் கலவரங்கள் இலங்கை முஸ்லிம் அரசியல் போக்கில் தீர்மானகரமான ஒரு திருப்பு முனையாக அமைந்த வரலாற்று நிகழ்வு. சிங்கள இனவெறியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்து போன தென்னிலங்கை முஸ்லீம்கள் அந்த வரலாற்று நிகழ்விலிருந்து எடுத்துக் கொண்ட இரு பாடங்கள் – எக்காரணம் கொண்டும் ஆதிக்கத்தில் இருக்கும் சிங்கள இனத்தவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது; அரசு எந்திரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் தரப்பை எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

கலவரத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் பிரிட்டிஷ் அரசின் இருப்பு மட்டுமே தனக்குப் பாதுகாப்பானது என்று உணர்ந்து காலனிய அரசோடு நெருக்கமாக தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டது. இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்த கையோடு அரசு எந்திரம் சிங்களப் பெரும்பான்மையரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்தை 1915 -ல் அடிபட்டு உணர்ந்திருந்த தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகத்தினர் இன்னொரு சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் அரசியலோடு அடையாளப்படுத்திக் கொள்வது மீண்டும் சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்திற்கு பலியாவது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அச்சமயம் யாழ் மைய அரசியலாகவிருந்த தமிழர் அரசியல் கோரிக்கைகளோடு முறித்துக் கொண்டு சிங்கள இனவெறியர்களின் கட்டுக்குள் வந்திருந்த அரச நலன்களோடு அய்க்கியமாயினர்.

தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் கிழக்கு முஸ்லீம்களையோ யாழ்ப்பாண முஸ்லீம்களையோ தமது சமூகத்தினராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை. தமக்கு இணையானவராகக் கூட கருதவில்லை. இலங்கை முஸ்லீம்கள் என்று அவர்கள் கட்டமைத்த அடையாள அரசியல் கிழக்கு மற்றும் யாழ் முஸ்லீம்களை முற்றாக விலக்கி வைத்த அடையாளமாகவே இருந்தது.

சிங்கள இனவெறி நலன்களுக்கும் தமிழர் நலன்களுக்கும் இடையிலான மோதல்கள் கூர்மையடைந்த வரலாற்றுப் போக்கில் சிங்கள அரசு கிழக்கில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை திட்டமிட்டு வளர்த்ததற்கும் இத்தென்னிலங்கை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஊக்கமாகப் பங்குபெற்றதற்கு ஈழப் போராட்ட வரலாற்றில் நிரம்ப சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்றுப் பின்புலத்தை மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் மீது கொலைவெறியோடு பாய்ந்த குதறிய சிங்கள இனவெறி குறித்து மௌனிக்கும் ஒரு சிங்கள ’இடதுசாரி’ கதாபாத்திரத்தின் ஊடாக, தமிழர்கள் முஸ்லீம்களை ஒடுக்குகிறார்கள் என்று சொல்ல வைப்பது அரசியல் களவானித்தனம் என்றல்லாமல் எப்படிச் சொல்வது!

புத்தகத்தின் சமர்ப்பண வாசகத்திலேயே இந்தக் கயவாளித்தனம் முகத்தில் அறைந்து நிற்கிறது.

“தோற்றுப்போன புரட்சியாளன் ரோகண விஜேவீரவிற்கு” நூலை காணிக்கை செய்திருக்கிறார் ஷோபாசக்தி.

பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண விஜேவீர புரட்சியாளன்!

இலங்கை அரசியலின் நுட்பங்கள் அறியாதவர்களுக்கு இங்கு சில வரலாற்றுத் தகவல்கள் அவசியம்.

60 –களின் மத்தியில் சண்முகதாசனின் இயக்கத்தில் இருந்து பிரிந்த ரோகண விஜேவீர JVP இயக்கத்தைத் தொடங்குகிறார். சிங்கள ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கத் தொடங்கி 1971 –ல் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிகொண்ட அரைவேக்காட்டு ஆயுத எழுச்சி நிகழ வித்திடுகிறார் (அப்பாவித் தமிழ் மக்களை பலிகொண்ட கொலைவெறி ஆயுதப் போராட்டத்தை நடத்திய கொடூரன் பிரபாகரன் என்று வசைபாடுவதைப் போல ரோகண விஜேவீரவை ஷோபாசக்தி பழிக்கவில்லை; புரட்சியாளன் என்கிறார்).

1977 வரை சிறைவாசம். இக்காலத்தில் JVP -யின் பொதுச் செயலாளராக இருந்த Lionel Bopage –ன் செல்வாக்கில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கை என்ற நிலைப்பாட்டை அரைமனதோடு ஏற்றுக்கொள்கிறார். 1982 தேர்தலையொட்டி தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரிப்பதாக முன்வைத்து JVP தமிழர் பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தேர்தலில் படுதோல்வி அடையும் ரோகண விஜேவீர தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்ததால்தான் சிங்களவர்களிடையே தாம் செல்வாக்கு இழந்ததாக முடிவுக்கு வருகிறார். தமிழர்களின் கோரிக்கை மீதான JVP யின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும், அதை மறுக்கும் அறிக்கையை கட்சிக்குள் சுற்றுக்கு விடுகிறார். 1986 –ல் இந்த சுற்றறிக்கை “Solutions to Tamil Eelam Struggle” என்ற நூலாக வருகிறது. அதில் ஈழ விடுதலைக் கோரிக்கை இலங்கையைத் துண்டாட அமெரிக்கா செய்யும் சதி என்று காரணத்தை முன்வைத்து ஈழ விடுதலையை மறுக்கிறார். சிங்கள இனவெறி நிலைப்பாட்டைத் தழுவுகிறார். ஜேவிபியின் இன்றைய‌ இன‌வாத‌ அர‌சிய‌லுக்கு மூல‌வித்து ரோக‌ண‌தான்.

1989 –ல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்ட எழுச்சியைத் தொடங்கிய ரோகண விஜேவீர சிங்கள அரசால் படுகொலை செய்யப்படுகிறார்.

இறுதிவரை களத்தில் நின்று தன் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பலிகொடுத்தும் உறுதி குலையாமல் போராடிய பிரபாகரன் ஷோபாசக்திக்கு பாசிஸ்ட். தன் வாழ்நாளிலேயே சிங்கள இனவெறி நிலைப்பாட்டை எடுத்த ரோகண விஜேவீரே ஷோபாசக்திக்கு புரட்சியாளன். இனவெறி நிலைப்பாடு கொண்டவருக்கு இலக்கியம் சமர்ப்பணம்!

ஷோபாசக்தி அடிக்கடி விடும் அதிரடி அரசியல் ஸ்டேட்மெண்டுகளில் மட்டுமல்ல இலக்கியம் என்ற பெயரில் கழித்திருக்கும் அஜீரணக் குப்பையிலும் இதே மொக்கு அரசியலே ஒளிந்திருக்கிறது.

சான்றுகள்:

1.http://issues.lines-magazine.org/Art_May03/bopagefull.htm

2.Sinusoidal nature of the JVP Policy on the National Question

3.Feature article: The JVP’s campaign among the Tamils, 1977-1982 by Lionel Bopage who was a former General Secretary of the JVP

4.Rohana Wijeweera's killing - still a mystery By K T Rajasingham

- நடராசன் ( vkathavarayan@yahoo.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9687:2010-06-22-06-03-59&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

--------------------------------

முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் பெண்ணிலைவாதம் பேசிய ஆண்கள் பலர் பெண்களை கீழ்த்தரமாக நடத்த ஏன்.. பெண்களோடு தங்கள் தனிப்பட்ட அல்லது அந்தரங்க இணைப்புக்களை ஏற்படுத்த அவற்றை காரணிகளாக்குகின்றனர் என்று பல தடவைகள் யாழ் களத்தில் விவாதங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இன்று அவை எல்லாம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு வழியில் வந்த போலி நபரை பற்றி யாழ் களம் வேரும் விழுதும்.. ஊர்ப்புதினம் பகுதியில் வைத்து கருத்தாட அனுமதிப்பது சரியா. இந்த தலைப்புக்களை சமூகம் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றுவதே சிறப்பு.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

சோபாசக்தி என்பது ஆண்பாலா.. பெண்பாலா... ஒன்றன்பாலா..???! சோபா + சக்தி... இந்தக் குழப்பம் காரணமாகவே ஒன்றன்பாலாக கருத்திட்டேன். சிலர் சோபாசக்தியை.. ஆண் என்கிறார்கள்.. சிலர் பெண் என்கிறார்கள்.. எனக்கு அந்தப் பெயர் இரண்டுமாகவும் அன்றி.. ஒன்றன்பாலைக் குறிக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. சக்தியை (energy) ஒன்றன்பாலில் தானே குறிப்பிடுவோம். புனைபெயரில் ஒரு தெளிவின்மை காணப்படுவதால்.. இத்தவறு நேர்ந்திருக்கலாம். இதனை சம்பந்தப்பட்ட புனை பெயர் கொண்டவர் கருத்தில் எடுப்பது நன்று. :)

இந்தப் பேர் பிரளயம் கன காலமாக நடக்குது. சோபா சக்தி யாரெண்டு நேற்று இணையத்தில போட்டுப் பார்த்த போது முதலாவதாக வந்த இணைப்பு கீழே இருக்கு. யாரோ ஒரு அரை அவியல் யாரெண்டு கூட ஆராயாமல், சோ.ச வை "she" என்று சுட்டி எழுதியிருக்குது. அதுவும் ஈழத்தமிழரின் வன் முறை பற்றி இவர் புட்டுப் புட்டு வைக்கிறாராம் எண்டு வேற எழுதியிருக்கு. நான் நினைக்கிறன் சோ.ச தன்ர பிறவிப் பலனை இந்த மாதிரி அரை அவியல்களின் "விமர்சனப் பார்வை" மூலம் அடைஞ்சு கொண்டிருக்கிறார் என்று.

http://www.cinesouth.com/specials/specials/eelatamil.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் வேலை வெட்டி இல்லாதவன் எல்லாம் எழுதலாம் என்பதால் நாலு எழுத்தை எழுதிவிட்டு ஏதோ திருவள்ளுவருக்கே திருக்குறள் சொன்னவங்கள்போல் துள்ளிகுதிக்கிறானுகள்.

இந்த கஞ்சல்களை இங்கே இணைக்கும் நபர்கள் கொஞ்சம் எமது நிலமைகளை கவனத்தில் எடுத்தால் தகும்.

:wub: :wub:

இன்றைய அற்பம் நாளைய அற்புதம். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub:

இன்றைய அற்பம் நாளைய அற்புதம். ^_^

நீங்கள் முற்போக்குவாதிகளாக யாழில் இணங்காட்டியவர்கள் இவர்கள். அதற்காகவே எம்மோடு பல முறை வாதம் செய்தவர். அவர்கள் பிரச்சன்னமாகாத போதும் அவர்களின் நிலைப்பாடுகளை நன்குணர்ந்தவர் போல் நீங்கள் அவர்களுக்காக வாதாடியவர். அதற்கு சாட்சியாக அவர்களின் எழுத்துருவாக்கங்களை கொண்டு வந்து ஒட்டியவர். அப்படியெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய ஒருவர்.. மக்களின் பார்வையில்.. தரங்கெட்டதனமாய்... அவரளவில் தரமாய் நடந்து கொண்டதை உங்களால் உடனடியாக ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும்.

அந்தவகையில்.. அற்பங்களை அற்புதமாக்கிக் காட்ட வேண்டிய ஒரு தேவையும் உங்களுக்கு உண்டு. :D:)

நான் ஷோபாசக்தியை முற்போக்குவாதியாகக் கருதியதில்லை! அதே நேரத்தில் புனிதம் என்று சொல்லப்படுபவையையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கி தகுந்த விளக்கங்கள் அளிக்கப்படுமானால் ஏற்றுக்கொள்ளவும் தயங்கியதில்லை.

கவிஞர் கண்ணதாசன் தனிப்பட்ட வாழ்வில் முன்மாதிரியாக இருக்கவில்லை, எனினும் அவரது எழுத்துக்களை/பாடல்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றோம். ஏனெனில் அவரின் எழுத்துக்களும், பாடல்களும் பெரும்பான்மையாக மக்களின் கருத்தியலுடன் ஒத்துப் போகின்றமைதான். ஒத்துப் போகாமல் இருந்திருந்தால் அவரையும் அற்பனாக ஆக்கியிருப்போம்!

இந்தத் திரிப்பை உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. "நீங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இந்தக் கண்ணதாசன் ஒரு உதாரணம்" என்று எழுதியவர் தான் கண்ண தாசன். இந்த சத்திய சோதனைக்கும் பாலியல் சுதந்திரம்/பெண் விடுதலை கோஷங்களின் பின்னால் சோ.ச. மறைத்து வைத்திருக்கும் சுய நலம் மிக்க பாலியல் வக்கிரத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரியவில்லையா? நீங்களும் "சில விஷயங்களில்" வறுமை கொண்டவரா?

ஷோபா சக்தியின் ஆக்கங்களில் எவை பாலியல் வக்கிரம் நிறைந்தவை என்று உங்களுக்கு தோன்றின? நான் அவரின் அநேக ஆக்கங்களை வாசித்தவன் என்ற ரீதியில் எனக்கு அப்படி எவையும் தோன்றவில்லை. என் பார்வையும் உங்கள் பார்வையும் வேறு வேறு தளங்களில் பயணிப்பதை இருக்கலாம்

..அத்துடன் கிருபனை நோக்கி "சில விஷயங்களில்" வறுமை கொண்டவரா என்ற கேள்வியில் இருக்கும் வக்கிரமே மற்றவர்களின் வக்கிரத்தை குறையாக கேட்க உங்களுக்கு இருக்கும் தகுதியை கேள்வி கேட்கின்றது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.