Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<_<தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள்

அண்மையில் தமிழக மீனவர்களுடன் பிடிக்கப்பட்ட இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது என்று வடமாராட்சி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் டக்கிளஸ் தேவானந்தா பிரசன்னமாகி இருந்ததாகவும் ஆனால், பத்திரிக்கையாளர்களின் கண்னில் படாதவாறு பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழக மீனவர்களின் படகுகளை மீள ஒப்படைக்குமாறு இலங்கை ராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் வடமாராட்சி மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைத் தருமாறு அதிகாரப் பீடத்தை வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப்பிரச்சனையால் லாபமடையப்போவது இருபுறத்திலுமுள்ள தமிழர் விரோத சக்திகள்தான் என்பது இந்த மீனவர்களுக்கு புரிகிறதோ என்னவோ??!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்தான் புலிகளை அழித்தவர்கள்

தற்போது மிச்சம் மீதியிருக்கும் தமிழர்களையும் அழிக்காமல் ஓயமாட்டார்கள். என்ன பிறப்புகளோ.....? :(

இது இலங்கை இந்திய கூட்டுச்சதி யாழ் மீனவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். தமிழகத்து ஈழ ஆதரவு போரட்டங்களை திசை திருப்பும் ஒரு சதி.

136 இந்திய மீனவர்களும் விடுதலை

கடலில் உள்ளூர் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 136 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.வடமராட்சிக் கடலில் கடந்த 15 ஆம் திகதி 108 இந்திய மீனவர்களும் வலிகாமமம் கடற்பரப்பில் கடந்த 16 ஆம் திகதி 28 இந்திய மீனவர்களும் உள்ளூர் மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றமும் வலிகாமாம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 28 மீனவர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தன.

இந்நிலையில் பொலிஸார் சமர்ப்பித்த மனுவையடுத்து இம்மீனவர்கள் அனைவரையும் மேற்படி நீதிமன்றங்கள் விடுதலை செய்தன.

இம்மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் உதவியுடன் தமது படகுகளுடன் தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.

இதேவேளை, இந்திய மீனவர்கள் 136 பேரும் இன்று வெள்ளிக்கிழமை விடுதலையாவார்கள் என்று தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுடன் பேசிய பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டேன்.

இலங்கை அரசின் பிரதம வழக்குத் தொடுநருடன் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் இன்று (அதாவது வியாழன்) நீதிமன்றங்களுக்கு விடுமுறையாகும். நாளை (வெள்ளி) நீதிமன்றங்கள் திறந்தவுடன் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன் என அமைச்சர் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் nதெரிவித்திருந்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/16720-112-.html

விடுதலை ஆன மீனவர்கள் இன்று படகுமூலம் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கின்றனர். மீனவர்கள், யாழ்ப்பணத்தில் இருந்து புறப்பட்டு நாளை ( சனிக்கிழமை( அதிகாலையில் நாகப்பட்டினம் துறைமுகம் வந்து சேர்வர் என தெரிகிறது.

இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது: இதற்கிடையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திட்டு பகுதியில் எல்லை மீறி மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த பிரான்சிஸ்( 60), பாசியஸ் ( 49) அருள்ராஜ்(33), ராஜாகிஸ்யம்(59).

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190556

இவர்கள்தான் புலிகளை அழித்தவர்கள்

தற்போது மிச்சம் மீதியிருக்கும் தமிழர்களையும் அழிக்காமல் ஓயமாட்டார்கள். என்ன பிறப்புகளோ.....? :(

வடக்கு மீனவர்கள் தான் புலிகளை அழித்தனர் என்று எப்படி சொல்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மீனவர்கள் தான் புலிகளை அழித்தனர் என்று எப்படி சொல்கின்றீர்கள்?

இந்தப்பிரச்சனையால் லாபமடையப்போவது இருபுறத்திலுமுள்ள தமிழர் விரோத சக்திகள்தான் என்பது இந்த மீனவர்களுக்கு புரிகிறதோ என்னவோ??!!

:(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே எங்கள் பக்கம் தான் பிழை இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்வதும் எங்களுக்கு உதவப் போவதில்லை. இங்கே இந்திய-இலங்கை-டக்கி கூட்டுச் சதி என்று எழுதும் யாராவது வடபகுதி மீனவர்கள் கேட்பது என்ன என்று வாசித்துக் கூட பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கேரளாவிலேயே தமிழக மீனவர்கள் பாவிக்கும் சக்தி மிக்க வலைகள் பாவிக்கத் தடை. மேலும், கேரளா எல்லைக்குள் போய் தங்கள் பாரிய இழுவைப் படகுகளால் மீன் வார தமிழக மீனவர்கள் ஒரு போதும் துணிவதில்லை. ஆனால், சில பத்துக் கிலோ மீற்றர்கள் கடல் எல்லைக்குள் தங்கள் ஒட்டுப் போட்டுப் பாவிக்கும் பழைய இயந்திரப் படகுகளுடன் வடபகுதி மீனவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உழைக்கிறார்கள்-அவர்களிடம் பயமில்லாமல் வந்து மீன் வாரிக் கொண்டு போக தமிழக மீனவர்களுக்கு துணிவு இருக்கிறது. ஒரு பாரிய தமிழக இழுவைப் படகு ஒரு தடவை பேசாலைக்கு அண்மையில் வந்து போனால் மூன்று நாளைக்கு பேசாலை மீனவர்கள் பலர் வெற்று வள்ளத்துடன் தான் திரும்பி வருவார்கள்-இது இன்று நேற்றல்ல, கடந்த சமாதான காலத்திலேயே ஆரம்பித்த ஒன்று. வட பகுதி மீனவர்களுக்கு மீன்பிடித்தல் பொழுது போக்கென்றால் பேசாமல் விட்டு விடலாம். அவர்கள் வீட்டில் அடுப்பெரிவதே அவர்கள் செய்யும் இந்தத் தொழிலால் என்று இருக்கும் போது ஏன் தான் அவர்கள் இப்படி நியாயமான கோரிக்கைகளுக்காக நீதியான வழி முறைகளில் போராடுவதை தடுக்க வேண்டும்? இதனால் தமிழக ஆதரவு இல்லாமல் போகுமா? இது வரை எங்களுக்கு எந்தத் தமிழக ஆதரவாவது உயிர் காக்க வந்திருக்கிறதா, இப்போது இல்லாமல் போவதற்கு?

இது வரை எங்களுக்கு எந்தத் தமிழக ஆதரவாவது உயிர் காக்க வந்திருக்கிறதா, இப்போது இல்லாமல் போவதற்கு?

:rolleyes::rolleyes::rolleyes:

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் 2009 ஆம் ஆண்டில் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நிகழ்வுகளைக் குறிக்கும்.

அதற்கும் முன்னரும் பலர் தமது உயிரை எமக்காக கொடை தந்தவர்கள்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பதினேழு பேர் இறந்துள்ளார்கள்.

தமிழ்நாடு

1.1 முத்துக்குமார்

1.2 பள்ளப்பட்டி ரவி

1.3 சீர்காழி இரவிச்சந்திரன்

1.4 அமரேசன்

1.5 ஜோதி என்கிற தமிழ்வேந்தன்

1.6 சிவப்பிரகாசம்

1.7 கோகுலகிருஷ்ணன்

1.8 சீனிவாசன்

1.9 சதாசிவம் சிறீதர்

1.10 நாகலிங்கம் ஆனந்த்

1.11 இராசசேகர்

1.12 பாலசுந்தரம்

1.13 மாரிமுத்து

1.14 சிவானந்தன்

1.15 சுப்பிரமணி

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதை நியாயமென்று நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினால், அது நியாய மில்லை என்பதே எமது பதிலாக இருக்கும். அதேநேரத்தில் கடல் வலயப் பாதுகாப்புச் சட்டத் தின்போது கடற்கரைப் பக்கமே போக முடியாத நிலைமை எமக்கு இருந்ததையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஆக, தமிழக மீனவர்கள் எங்களுடைய வலைகளை அறுத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் தமிழகத்தாலும் இந்திய மத்திய அரசாலும் எங்களுக்காக ஆகவேண்டிய காரியங்கள் நிறையவே உள்ளன. அதற்கான வழிவகைகளை எங்கள் மீது விசுவாசம் கொண்டு இந்திய மத்திய அரசு செய்யா விடினும், தமிழகத்து மீனவர்களுக்கு இலங்கைக் கடற் படையால் ஏற்படும் விபரீதங்களை கருத்தில் எடுத்து இந்திய மத்திய அரசு அதைச் செய்யும் என்ற நம்பிக்கையிருந்தது.

அந்த நம்பிக்கை நிஜமானதா என்பதை அறு தியிட்டு சொல்ல முடியாத போதிலும் நாங்கள் செய்த வேலையால் எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று கூறும் அளவிற்கு நேற்று முன்தினம் நடந்த சம் பவம் காரணமாயிற்று. என்ன செய்வது! எங்களை வழிப்படுத்த யாருமே இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81953

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே எங்கள் பக்கம் தான் பிழை இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்வதும் எங்களுக்கு உதவப் போவதில்லை.

இங்கே இந்திய-இலங்கை-டக்கி கூட்டுச் சதி என்று எழுதும் யாராவது வடபகுதி மீனவர்கள் கேட்பது என்ன என்று வாசித்துக் கூட பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கேரளாவிலேயே தமிழக மீனவர்கள் பாவிக்கும் சக்தி மிக்க வலைகள் பாவிக்கத் தடை. மேலும், கேரளா எல்லைக்குள் போய் தங்கள் பாரிய இழுவைப் படகுகளால் மீன் வார தமிழக மீனவர்கள் ஒரு போதும் துணிவதில்லை. ஆனால், சில பத்துக் கிலோ மீற்றர்கள் கடல் எல்லைக்குள் தங்கள் ஒட்டுப் போட்டுப் பாவிக்கும் பழைய இயந்திரப் படகுகளுடன் வடபகுதி மீனவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உழைக்கிறார்கள்-அவர்களிடம் பயமில்லாமல் வந்து மீன் வாரிக் கொண்டு போக தமிழக மீனவர்களுக்கு துணிவு இருக்கிறது. ஒரு பாரிய தமிழக இழுவைப் படகு ஒரு தடவை பேசாலைக்கு அண்மையில் வந்து போனால் மூன்று நாளைக்கு பேசாலை மீனவர்கள் பலர் வெற்று வள்ளத்துடன் தான் திரும்பி வருவார்கள்-இது இன்று நேற்றல்ல, கடந்த சமாதான காலத்திலேயே ஆரம்பித்த ஒன்று. வட பகுதி மீனவர்களுக்கு மீன்பிடித்தல் பொழுது போக்கென்றால் பேசாமல் விட்டு விடலாம். அவர்கள் வீட்டில் அடுப்பெரிவதே அவர்கள் செய்யும் இந்தத் தொழிலால் என்று இருக்கும் போது ஏன் தான் அவர்கள் இப்படி நியாயமான கோரிக்கைகளுக்காக நீதியான வழி முறைகளில் போராடுவதை தடுக்க வேண்டும்? இதனால் தமிழக ஆதரவு இல்லாமல் போகுமா? இது வரை எங்களுக்கு எந்தத் தமிழக ஆதரவாவது உயிர் காக்க வந்திருக்கிறதா, இப்போது இல்லாமல் போவதற்கு?

ஐஸ்ரின்

உங்களது கேள்வியையும் நியாயத்தையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

அந்தவகையில் சிந்திப்பதற்கோ, செயற்படுவதற்கோ எமது மீனவர்களுக்கு தற்போது எந்தவித சாதகமாக சூழ்நிலையும் வடபகுதியில் இல்லை என்பதும் ஒரு சிலர் சேர்ந்தே கடலுக்கு ஒன்றாக செல்ல தடை இருக்கும் போது ஆயிரக்கணக்கானவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்று இவ்வளவு பேரையும் பலாத்காரமாக ஓட்டிவந்தார்கள் என்பதுதான் இடிக்கிறது.

ஆனால் இப்படித்தான் நடந்தது அது உண்மை என்று தாங்கள் நிறுவும் பட்சத்தில் எனக்கு மிகவும் சந்தோசமே.

1) தமிழர் தமது உரிமைக்காக போராட தொடங்கி விட்டனர்.

2) தம்மை எதிர்ப்போரை மண்டியிட வைக்க எதையும் செய்ய முடிவு எடுத்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்கள் பின்புலம் இல்லாமல் எமது கரையில் இவ்வளவு துணிவாக மீன்பிடிக்கமாட்டார்கள்.தமிழ் நாட்டு கரையிலேயே இலங்கை இராணுவத்தால் 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதும் தெரிந்ததே.வெளிப்படையாக தெரிவது வடபகுதி மீனவர்களையும் ,தமிழ் நாட்டு மீனவர்களையும் கொழுவி விடுவதில் இலங்கை, இந்திய அரசுகள் ஈடுபட்டுள்ளன. எனவே எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது. உணர்ச்சிவசப்பட்டு இலங்கை/தமிழ்நாடு/இந்திய அரசின் திட்டத்துக்கு பலியாகாமல் சாதுரியமாக செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அகோதா:

பதினைந்து பேர் செத்தார்கள் எங்களுக்காக, அதை விட அதிகம் பேர் சிறை சென்றார்கள். கரம் கூப்பித் தொழ வேண்டிய செயல்கள் தான். ஆனால் நான் கேட்டதற்கு இதிலெல்லாம் பதில் இருக்கா? வன்னியில் ஒரு உயிராவது காக்கப் பட்டதா? தமிழ்நாட்டில் பெரும்பான்மைத் தமிழர்கள் கருணானிதியின் நாடகத்தைக் கண்டும் காணாமல் போட்ட வாக்குகளே என் கேள்விக்கான பதில். மேலும் இந்தியாவால் தமிழக தமிழர்களால் எங்களுக்கு நிறைய ஆக வேண்டியிருக்கிறது என்கிற உங்கள் கருத்து அப்பாவித் தனமான நம்பிக்கை. அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை ஏற்கனவே அவர்கள் காட்டி விட்டதாகவே நான் நினைக்கிறேன். இது "அவர்கள் செய்ய வேண்டும்" என கேட்கும் சண்டித்தனம் அல்ல. அவர்களால் எதுவும் செய்ய இயலாது, வேறு பாதைகளில் நாம் நகர்வோம் இனி என்கிற யதார்த்தம் மட்டுமே நான் சொல்வது.

விசுகு:

எதை நிரூபிக்க வேண்டும்? பிடித்தது வடபகுதி மீனவர்கள் தான், பிடிபட்டது இந்திய மீனவர்கள் தான் என நிரூபிக்க வேண்டுமா? இந்த நிகழ்வு உங்களுக்கு செய்தியாக இப்போது தெரிகிறது. 2004 இலிருந்து சண்டை தொடங்கும் வரை மன்னார் பகுதியிலும் வடமாராட்சியிலும் தமிழக மீனவர்கள் ட்ராவ்லரில் வந்து போவது அன்றாட நிகழ்வு. இன்று இது செய்திக்கு வரக்காரணம் அவர்கள் பிடிக்கப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டதே. முன்னரும் பல வள்ளங்களில் போய் சுற்றி வளைத்த நிகழ்வுகள் மன்னார் பேசாலைப் பகுதியில் நடந்திருக்கின்றன. புலிகள் தலையிட்டு கைகலப்பைத் தடுத்திருக்கிறார்கள். எதுவும் செய்தியாகவில்லை. இதுவே தமிழக மீனவர்களுக்கு இவ்வேலையைத் தொடர்ந்து செய்ய ஊக்கமாகவும் போய் விட்டது. இதற்காகவே இம்முறை செய்தியாக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நுணா:

ஏற்கனவே பஞ்சப் பட்டுப் போன வடபகுதி மீனவனை "நாங்கள் எல்லாம் தொப்பூழ் கொடி உறவு" என்று சொல்லிக் கொண்டே இன்னும் சுரண்டுவது தான் கோபம் தரும் செயல். சிங்களவன், சீனாக்காரன் செய்தாலாவது அதுக்கு எங்களுக்குப் பின்னணி தெரியும். தமிழக தமிழர்களுக்குக் கூடவா நாங்கள் நொந்து கிடப்பது தெரியாது?

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு:

பிடித்தது வடபகுதி மீனவர்கள் தான், பிடிபட்டது இந்திய மீனவர்கள் தான்

எனக்கு மிகவும் சந்தோசமே.

1) தமிழர் தமது உரிமைக்காக போராட தொடங்கி விட்டனர்.

2) தம்மை எதிர்ப்போரை மண்டியிட வைக்க எதையும் செய்ய முடிவு எடுத்துவிட்டனர்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ஜஸ்ரின் அவரின் கருத்துக்கள் தவறாக ஏதும் படவில்லை... ஆம் இந்த மாக்களால் ஆக போவது ஒன்றுமில்லை... அது குவாட்டர் கோழி பிரியாணியாடு சரியாக போய்விடும்.. போக சொந்த தில்லு இருந்து கிந்திய அரசாங்கத்தினை எதிர்க்கவேணும்(தமிழீழம் ..அறிவியல் இத்தியாதி ).. சிங்கள கைக்கூலிகளின் பின்புறத்தில் அல்ல.. அவன் (கருநா) ஓட்டு பொறுக்குபவன் ராஜபக்சேவுக்கே போன் போட்டு கைது பண்ண சொல்லி இருப்பான்... நாளை காலை இங்கு தமிழரை விடுத்த வள்ளலே வருக என போஸ்டர் ஒட்டுவார்கள்...ம்ம் இந்த கணக்கு டேலி ஆகாது .. ஆட்டம் ரொம்ப சுவார்சியமாக சென்று கொண்டுள்ளது...

டிஸ்கி:

கொஞ்சம் சொரணை வர ... சம்நதபட்ட தமிழீழ அங்கத்தவர்கள் தாஙகள் வேறுபாதையில் அதாவது (சீனா பாகிஸ்தான்) என செல்வதாக அறிக்கை விடவேணும்..மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்த மாதிரி அவரை கொடி உறவு தொப்புள் கொடி உறவு என அக்க போர்க்கள் அனைத்தும் தீர்க்கபடும்..அவன் (கிந்தியன்) ஆடும் கேமும் இதை வைத்தே.. இதற்கும் ஆகாது கிந்திய உறவு வேண்டுமே வேண்டும் என்பவர்களுக்கு நம்முடைய சஜசன் குவாட்டார் மற்றும் கோழி பிரியாணி.. அவன் தெபெத்து பங்களாதேசுகாரன் இங்கிட்டு எம்.எல்.ஏ ஆகும் போது...???:lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

மேலும் இந்தியாவால் தமிழக தமிழர்களால் எங்களுக்கு நிறைய ஆக வேண்டியிருக்கிறது என்கிற உங்கள் கருத்து அப்பாவித் தனமான நம்பிக்கை. அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை ஏற்கனவே அவர்கள் காட்டி விட்டதாகவே நான் நினைக்கிறேன். இது "அவர்கள் செய்ய வேண்டும்" என கேட்கும் சண்டித்தனம் அல்ல. அவர்களால் எதுவும் செய்ய இயலாது, வேறு பாதைகளில் நாம் நகர்வோம் இனி என்கிற யதார்த்தம் மட்டுமே நான் சொல்வது.

தாயக மக்கள், புலம் பெயர் மக்களை விட நீண்ட காலப்பார்வையில் தமிழகத்தை தான் நம்ப வேண்டும், உறவுகளை வளர்க்க வேண்டும்.

நாம், இன்று எமக்கு எதிரிகளை/எதிர்ப்புக்களை தவிர்க்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

புது டெல்லி எமக்காக ஒன்றும் செய்யாது இல்லை நிச்சயம் செய்யும் நம்புவதும் பலவீனம், அதற்காக புது டெல்லியை கைவிடுவதும் புத்திசாலித்தனம் ஆகாது. இன்று நாம் எல்லா வாசல்களையும் (கொழும்பு, புது டெல்லி, வாசிங்க்டன், பெய்ழிங்) திறந்துதான் வைத்திருக்க வேண்டும். அதன் அர்த்தம் அவர்களின் பேச்சுக்கு அடிபணிவது என்பது அல்ல, அவர்களுடன் பேசி எமது தேவைகளை பூர்த்தி செய்யும் இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள், புலம் பெயர் மக்களை விட நீண்ட காலப்பார்வையில் தமிழகத்தை தான் நம்ப வேண்டும், உறவுகளை வளர்க்க வேண்டும்

ம்ம் எனக்கு ஒண்ணும் ப்ரியல தோழர்.. நீங்க வாழ்வாதார ரீதியில் (அரிசி பருப்பு) என சிந்திக்கிறீர்களா என தெரியவில்லை.. (இனம் இனம் என்று வெறுமனே கும்மியடித்தல் இங்கு ஆகாது :( ) ...இங்கிட்டு அவர்களின் வாழ்வியல் தாக்கத்தில் ஏதாவது செய்யணோம் அப்பத்தான் பல பஸ்கள் பத்தி எரியும்..

2007021713860101.jpg

லேதுமறி

ஆப்பிரிக்கா .. காங்கோ ,, சோமாலியா போன்ற நாடுகளை கவர் செய்வதுதான் சிறந்த வழி :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழக மக்களை ஈழத் தமிழர் பகைக்க வேண்டும் என்று நிறையப்பேர் கனவு கண்டாலும் - அது நடக்காது. சதியில் ஈடுபடும் கூட்டம் மண்ணோடு மண்ணாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.