Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விபத்தில்: இன்று காலையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விபத்தில்: இன்று காலையில் சம்பவம்

[Tuesday, 2011-03-01 04:25:00]

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று காலையில் கம்பஹா மாவட்டத்தின் வீரக்கொலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படைத் தலைமை அலுவலகம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட இந்த இரு விமானங்களும் கீழே விழுந்து நொருங்கியதனையடுத்துத் தீப்பற்றி முற்றாக எரிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு விமானங்களையும் செலுத்திய இரு விமானிகளும் உயிர் தப்பிய உள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன (இலங்கை நேரப்படி காலை 10.21)

இலங்கை விமானப்படையின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இலங்கை விமானப்படைக்குப் புதிதாக விமானப்படை தளபதி நியமிக்கப்பட்டு இரு தினங்கள் செல்வதற்கு முன்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் பாரிய தாக்குதலுக்காக விமானப்படையினரால் பயன்படுத்தபட்டவையே இந்த கிபீர் ரக விமானங்கள்.

இவ்வாறான விமானங்கள் மூலம் வன்னியில் பாரிய தாக்குதல்களை நடத்திய முக்கிய விமானிகள் கடந்த வருடம் தெற்கில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிரிழந்தமை தெரிந்ததே.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்கள அரசின் விமானப்படைக்கு சொந்தமான இஸ்ரேல் தயாரிப்பு கிபீர் அதிவேக ஜெட் போர் விமானங்கள் இரண்டு சிறீலங்கா விமானப்படையின் 60ம் ஆண்டு நிகழ்வுகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கம்பகா வான் பரப்பில் நடுவானில் மோதி வெடித்துச் சிதறி உள்ளன.

இதனால் ஒரு சிங்கள விமானி கொல்லப்பட்டு மற்றவர் உயிர் பிழைத்துள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு சிறீலங்காவின் இனவாத ஜனாதிபதி உலங்குவானூர்தி மூலம் உடனடியாக விஜயம் செய்து தேசங்களை மதிப்பிட்டுள்ளார்.

இந்த கிபீர் போர் விமானங்கள் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் மற்றும் போராளிகள் இலக்குகளை வகை தொகை இன்றி தாக்கி பெரும் உயிர் மற்றும் சொத்தழிவுகளை ஏற்படுத்த பாவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SLAF_Kfir_mid_air_03.JPG

SLAF_Kfir_mid_air_06.JPG

செய்தி சேகரிப்பு: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33612

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாதப் பிறப்பாம் நாள் நல்ல செய்தி. அப்படியே.... இந்த மாதம் முழுக்க நல்ல செய்திகள் வரட்டும். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.ஈவிரக்கமின்றி குண்டுகளைப் போட்டுக் கொலை செய்த அரக்கர்கள் இன்று அதே குண்டுகளால் அழியும் நிலை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.ஈவிரக்கமின்றி குண்டுகளைப் போட்டுக் கொலை செய்த அரக்கர்கள் இன்று அதே குண்டுகளால் அழியும் நிலை.

இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு இருந்த விமானபப்டை வீரர்களுக்கும் இறந்த குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவித்தார்.

60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை விமானப்படையினரின் இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கம்பஹா வரான பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kiffr.jpg

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

  • கருத்துக்கள உறவுகள்

தன்னாலே தான் அழிவர் தருக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கல் அவலத்திற்க்கு சிங்களம் பதில் சொல்லியே ஆகவேண்டும்....................

  • கருத்துக்கள உறவுகள்

இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின விமானி ஒருவர் பலி! மற்றையவர் படுகாயம்!

நிட்டம்புவ யக்கல பிரதேசத்தில் வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி சற்று முன்னர் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் விபத்துக்குள்ளானது குறித்து கடும் அதிர்ச்சியுற்றுள்ள மஹிந்தா உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.

விமானப்படையின் கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளானதை அறிந்தவுடன் ஜனாதிபதியின் இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் யாவும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து ஜனாதிபதி விபத்து இடம்பெற்ற அத்தனகல்லைப் பிரதேசத்துக்கு விரைந்துள்ளார்.

விபத்தில் காயமானவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது கம்பஹா பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் விசேட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருக்கும் வதுபிட்டிவலை மருத்துவமனை மற்றும் கம்பஹா பொதுமருத்துவமனை என்பன காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்க உச்சகட்ட தயார்நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

பிரஸ்தாப மருத்துவமனைகளிலிருந்து தலா இரண்டு வீதம் நான்கு அம்புலன்ஸ் வண்டிகளும் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை நோக்கி துரித கதியில் அனுப்பப்பட்டுள்ளன. ஆயினும் விபத்தின் காரணமாக காயமுற்றவர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.

விமானத்தின் தானியங்கி பரசூட் காரணமாக விமானிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பிக் கொண்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் பெரும் பங்காற்றிய இரண்டு கிபீர் விமானங்களே விபத்துக்குள்ளாகியிருப்பதாக விமானப்படை வட்டாரங்களின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த விமானியும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த விமானி ப்ளைட் லெப்டினன்ட் தர அதிகாரியான மொனாத் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் கட்டுநாயக்க வான்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஸ்குவாட்ரன் லீடர் ஜயகொடி எனும் விமானியே விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் ஆரம்ப கட்டமாக வதுபிட்டிவலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின் பெரும்பாலும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விமான விபத்தின் போது ஒரு விமானம் அத்தனகல்லையின் நெல்லிகஹமுல பிரதேசத்தின் வீடொன்றின் மீது விழுந்துள்ளதால், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. மற்றைய விமானம் அதற்கு இருநூறு மீட்டர் தூரம் தள்ளி வனப்பகுதிக்குள் விழுந்துள்ளது.

இச்செய்தி எழுதப்படும் நேரத்திலும் விமானங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன், அப்பிரதேசத்தின் பெரும்பாலான மரங்களும் விமானங்களின் தீச்சுவாலை காரணமாக கருகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆயினும் விமான விபத்துக் காரணமாக சிவிலியன்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.

யக்கலையில் இடம்பெற்ற கிபிர் வானூர்தி விபத்தில் விமானி ஒருவர் பலியானார். மற்றும் ஒரு விமானி பாரசூட் மூலம் உயிர்தப்பியுள்ளார்.

இந்தநிலையில் விபத்தின் போது பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான கிபிர் விமானங்களில் ஒன்று வீதி ஒன்றில் உடைந்து வீழ்ந்துள்ளது.

மற்றும் ஒரு விமானம் வீடுகள் இருந்த இடத்தில் வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக சில வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன

http://www.sankathi.com/news/index.php?option=com_k2&view=item&id=359:இரு-கிபீர்-விமானங்கள்-விழுந்து-நொறுங்கின-விமானி-ஒருவர்-பலி-மற்றையவர்-படுகாயம்&Itemid=54

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான விபத்தென்றும் பாராமல் சிதறிக்கிடந்த தேங்காய்களுக்காக முண்டியடித்த பொதுமக்கள்

[ பிரசுரித்த திகதி : 2011-03-01 04:03:28 PM GMT ]

இன்று காலை விமானப்படை விமானங்கள் மோதி வீழ்ந்து கிடந்த இடத்தில் சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்கிக் கொள்வதற்காக விமான விபத்தையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் முண்டியடித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தின் போது ஒரு விமானம் தென்னந்தோட்டமொன்றில் வீழ்ந்து நொறுங்கியதால் ஏராளம் தென்னை மரங்கள் சேதமுற்றிருந்தன. அதன் காரணமாக தேங்காய்களும் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன.

விமான விபத்தைப் பார்வையிட வந்த பொதுமக்கள் தேங்காய்களைக் கண்டதும் விமான விபத்தையே மறந்தவர்களாக சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்குவதற்காக முண்டியடித்தனர். ஒருத்தரையொருத்தர் தள்ளி வீழ்த்திக் கொண்டனர்.

தேங்காய்களுக்காக சண்டையிட்டுக் கொண்ட பொதுமக்களை பொலிசாரினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இலங்கையின் பொருட்களின் விலை அதிகரிப்பால் தேங்காய்களும் அதிக விலையில் விற்கப்படும் நிலை காரணமாகவே பொதுமக்கள் அவ்வாறு தேங்காய்களுக்காக மோதிக் கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்த போதும் பொதுமக்கள் அவரைப் பார்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilulakam.com

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை நடத்தி இருந்த விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் இழந்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

இவரின் பெயர் மொனாத் பெரேரா. விமானப் படையில் லெப்டினண்ட் பதவி வகித்தவர்.

காலி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவர். எனினும் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நீர்கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்து இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இவரின் பங்கு மிகவும் காத்திரமானதாக இருந்து உள்ளது.

இவரை கௌரவிக்கும் வகையில் விமானப் படையின் 60 ஆவது வருட நிறைவு விழாவில் கிபிர் விமான சாகசத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விபத்தில் இவரின் சகாவான வஜிர ஜெயகொடி உயிர் தப்பி உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் வசித்து வருபவர்.

விமானப் படையில் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கிபிர் விமான சாகசம் நிகழ்த்துகின்றமைக்காகவே இவர் பாகிஸ்தானில் இருந்து அழைக்கப்பட்டு இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் இவரின் பங்களிப்பும் மிகவும் காத்திரமானது.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18948:2011-03-01-13-08-52&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

or

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலத்துக்கு இந்தக் கிபீர் விமானம் சிங்களப் பகுதியிலை விழுந்தது.....

தமிழ்ப் பகுதியில் விழுந்திருந்தால்.... "எஞ்சியுள்ள புலிகளின் தாக்குதல்" என்று, பல வார இதழ்களும், இணையங்களும் கட்டுரை, கட்டுரையாக எழுதிக் குவித்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிபீர் விமான விபத்துக் காரணமாக இலங்கை விமானப்படைக்குப் கோடிக்கணக்கில் இழப்பு

[ பிரசுரித்த திகதி : 2011-03-02 04:57:51 AM GMT ]

நேற்று இடம்பெற்ற விமானப்படையின் கிபீர் விமான விபத்துக் காரணமாக கோடிக்கணக்கிலான பெரும் நஷ்டமேற்பட்டிருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமானப்படை வட்டாரங்களின் தகவல்களின் பிரகாரம் விபத்துக்குள்ளான விமானங்களின் இன்றைய பெறுமதி பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்று தெரிய வருகின்றது. இலங்கைப் பெறுமதியில் பல கோடி ரூபாவாகும்.

விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலினால் பிரஸ்தாப விமானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிபீர் விமானங்களை வெளிநாடுகள் கொள்வனவு செய்வதாயின் அதற்கு அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அனுமதி பெறப்படுவது முக்கியமானதாகும்.

அந்த வகையில் இஸ்ரேலிடமிருந்து இலங்கை, ஈக்குவடோர், கொலம்பியா ஆகிய நாடுகள் மட்டுமே தற்போதைக்கு கிபீர் விமானங்களை கொள்வனவு செய்துள்ளன. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மற்றும் தலைவர்களைத் தேடித்தாக்கியழிக்கும் முயற்சியில் இலங்கை விமானப்படைக்கு கிபீர் விமானங்கள் பெரும் பங்காற்றியிருந்தன.

tamilulakam.com

Edited by கறுப்பி

இந்திய பயங்கரவாதிகள் வழங்கிய இரசானயக் குண்டுகளை வீசியதில் இந்த இரண்டு விமானிகளும் இந்திய விமானிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களாம். இவர்கள் பொன்சேகாவின் அபிமானிகள். தமக்கு எதிராக செயற்படக் கூடிய விபரம் அறிந்தவர்களை அழிக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஒரு நடவடிக்கையாக இதைக் கருத முடியும். நாடுத் தலைவரின் விபத்துப் பகுதி விஜயமும் திட்டமிடப்பட்ட ஒரு செயல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை நடத்தி இருந்த விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் இழந்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

ஒரு சிங்கள ஊடகங்களிலும் வரவில்லை. உங்களுக்கு மட்டும் ஸ்பெசலா கோத்தபாயா காதுக்குள்ள வந்து சொன்னவரோ. யாழ் கள நிர்வாகம் பல இணய்த்தளங்களை தடை செய்துள்ளது. ஆனால் இந்த tamilcnn ஐ மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ தெரியவில்லை.

அது நிற்க ... தமிழ் செல்வன் மீத தாக்குதல் வெளினாடு ஒன்றினால் நடத்தப்பட்டிருக்கும் என்பதே எனது கருத்து. ஏனெனில் அவ்வளவு துல்லியமாக அடிக்கக் கூடிய ஆற்றல் இலங்கை விமானப் படையிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்களாக அடிபட்டு விழுவதை பார்த்து சந்தோசப்படுவதற்கு ஒன்றுமில்லை.விபத்துக்கள் எங்கும் நடக்கலாம்.கடவுள் தண்டிப்பார்,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் கையாலாத்தவர்களின் வெளிப்பாடு.

நாங்களாக எதுவும் செய்தால் ஒழிய விடிவு எங்களுக்கில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களாக அடிபட்டு விழுவதை பார்த்து சந்தோசப்படுவதற்கு ஒன்றுமில்லை.விபத்துக்கள் எங்கும் நடக்கலாம்.கடவுள் தண்டிப்பார்,முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் கையாலாத்தவர்களின் வெளிப்பாடு.

நாங்களாக எதுவும் செய்தால் ஒழிய விடிவு எங்களுக்கில்லை.

புலிகளில் ஒருவரின் மறைவு சம்பந்தமாக களத்தில் நாம் துயர் பகிந்து கொண்டிருக்கும் போது, அந்த நேரம் பெட்டைத்தனமாக விசமத்தனமான பதிவுகள் பதிவது இந்த செயல் கையாலாகாத்தனம் இல்லையா?

தலைவர் அனையின் துயர் பகிர்வில் சிங்களத்தின் காட்டுமிராண்டித் தங்களை நொந்த போது, அங்கேயும் இதேவகையான செயல், இவை கையாலாகத்தனம் இல்லையா?

கார்ல்மாக்ஸையும், கத்தரிக்காயையும் நான் படிச்சனான், கிழிச்சனான்; நாலுபேருடன் பழகிய இராமசாமி நான்.

இந்த வகையான பயன்கள் எல்லாம், புலிகளை விமர்சிக்கும் தரத்தில் நாம் அறியமுடிகின்றது.

கோடரிக்காம்புகளை அணைக்கும் விதத்திலும் புரியமுடிகின்றது.

சிங்களவ-ஆட்சி; தமிழன்-ஆட்சி, இரண்டிலும் வாழ்ந்தவனுக்கு ஒன்றிலும் வாழாதவன், சிங்களவன்-ஆட்சி மேலானது என்று சொல்லுகின்ற நிலைமையானது, சிங்களவனுக்கு கால்பிடித்துவிடும் விசுவாசத்தினால் அன்றி வேறு என்ன அறிவாசத்தைக் காணமுடிகின்றது இங்கே!

அச்சா அச்சா! இது அடிக்கடி நடக்கவேணும்.

உயிரிழந்த லெப்டினன்ட் மொனாத் பெரேரா ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்வு!

சிறிலங்கா விமானப் படையின் கண்காட்சி சாகச நிகழ்வுக்கு என பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய போது உயிரிழந்த லெப்டினன்ட் மொனாத் பெரேரா ஸ்குவாட்ரன் லீடராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அதேவேளை, இவ் விமான விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா விமானப்படையின் விமானியான லெப்டினன் மொனத் பெரேராவுக்கு விபத்து இடம்பெறும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஏற்பட்ட மாரடைப்பினால் தனது விமானத்தை, குறித்த விமானியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமையே இந்த விபத்திற்கான காரணம் என நீர்கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விபத்தில் சிறிலங்கா விமானப்படையின் விமானியான லெப்டினன் மொனத் பெரேரா உயிரிழந்துள்ளதுடன், ஸ்கோட்ரன் கெப்டன் வஜிர ஜயகொடி காயமடைந்துள்ளார்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={ED9D9AE6-99DB-4348-BA80-BAC08EE5DF3F}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.