Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்: முடிவுக்கு வந்தது திமுக கூட்டணிச் சிக்கல்

Featured Replies

புதுடெல்லி, மார்ச் 8,2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், மன்மோகன் அரசுக்கு பிரச்னையில் அடிப்படையில் ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து 24 மணி நேரம் திமுகவை எவ்வித தொடர்பும் கொள்ளாதிருந்த தமது கருத்தைக் கூட அவர்களிடம் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

பின்னர், ஏற்கெனவே திட்டமிட்டபடி திமுக அமைச்சர்கள் 6 பேர் திங்கட்கிழமை பிரதமரைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்காததால் ராஜினாமா அளிப்பது திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

பிரணாப்பின் முக்கிய 'ரோல்'!

இதனிடையே, காங்கிரஸ் - திமுக இடையே சமரசம் ஏற்படுவதற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முயற்சி மேற்கொண்டார்.

முதலில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலமாக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் அனுப்பிய அவர், திமுகவின் முடிவை மறுபரிசீலனைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்தச் சூழலில், திமுக அமைச்சர்கள் மு.க.அழகிரி (மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சர்), தயாநிதி மாறன் ( மத்திய ஜவுளித்துறை அமைச்சர்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நிதித்துறை இணையமைச்சர்), டி.நெப்போலியன் (சமூக நீதி அமலாக்கம் இணையமைச்சர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்) மற்றும் காந்தி செல்வன் (சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்காக டெல்லியில் முகாம் இட்டனர்.

பின்னர், முதல்வர் கருணாநிதியுடன் வெள்ளிக்கிழமை இரண்டு முறை தொலைபேசியில் பேச்சு நடத்தினார், பிரணாப்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க, திமுக மத்திய அமைச்சர்களின் ராஜினாமா ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கூட்டணிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் அம்சமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமைச்சர்கள் அழகிரியும் தயாநிதியும் சந்திப்புப் பேசினர்.

நீடித்த இழுபறி..

அதன் தொடர்ச்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் திமுக மத்திய அமைச்சர்கள் இன்று பேச்சு நடத்திய நிலையிலும், திமுக - காங்கிரஸ் இடையில் கூட்டணி தொடருமா என்ற குழப்பம் நீடித்தது.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, திமுக அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் மற்றும் பழனி மாணிக்கம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

எனினும், இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தீர்மானம் நிறைவேற்றதில் தனது கடுமையான அதிருப்தியை திமுக தலைமையிடம் சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறின.

கனிமொழி கொண்டு சென்ற செய்தி...

இந்த நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

முதல்வர் கருணாநிதியிடம் இருந்து தாம் பெற்றுச் சென்ற தகவலை, காங்கிரஸ் தலைமையிடம் கனிமொழி கொண்டு சேர்த்ததாக தெரிகிறது.

டெல்லிக்கு கனிமொழி வந்த பிறகு, பிரணாப் முகர்ஜியை தயாநிதி மாறன் மீண்டும் சந்தித்துப் பேசினார். அப்போது, சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேலும் அருகில் இருந்தார்.

பின்னர், காங்கிரஸ் கோரியபடியே 63 தொகுதிகள் ஒதுக்குவதாக, திமுக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய நாடகம் தான்.

நடந்த நாடகம் ஒரு குறுநாடகமாக முடிவடைந்தது கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது. இருந்தாலும், பல பேரங்களும், கோடி பணங்களும் கைமாறி, சுயநலங்கள் வெற்றிபெற்றுள்ளன.

பல அரசியல் பாத்திரங்களும் நன்றாகவே மக்களை மீண்டும் ஏமாத்த முனைந்துள்ளார்கள். இருந்தாலும் இதன்மூலம் மக்கள் வாக்குகளை இந்த கூட்டணி வென்றதா இல்லையா என தேர்தல் தான் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த நாடகம் ஒரு குறுநாடகமாக முடிவடைந்தது கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது. இருந்தாலும், பல பேரங்களும், கோடி பணங்களும் கைமாறி, சுயநலங்கள் வெற்றிபெற்றுள்ளன.

பல அரசியல் பாத்திரங்களும் நன்றாகவே மக்களை மீண்டும் ஏமாத்த முனைந்துள்ளார்கள். இருந்தாலும் இதன்மூலம் மக்கள் வாக்குகளை இந்த கூட்டணி வென்றதா இல்லையா என தேர்தல் தான் சொல்லும்.

பார்க்கலாம்

ஆனால் சில ஆயிரம் வாக்குகள் குறைய வாய்ப்புள்ளது இந்த நாடகத்துக்காக............

  • தொடங்கியவர்

இதன் உடனடி பலனாக ஆ.ராசா விடுவிக்கப்படலாம், மற்றும் கனிமொழி, ராஜாதி ஆகியோரின் தலைக்கு மேல் இருந்த கைது கத்தி அகற்றப்படும்

இறுதிப் பலனாக எம் தொப்புள் கொடி உறவுகள், பல காங்கிரஸ் வேட்பாளர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைப்பர்...

Edited by நிழலி

கருணநிதியின் சாணாக்கியம் இதில் ஒன்றும் இல்லை.அவரே திக்கு திசை தெரியாமல் நிற்கின்றார்.

மூன்று முக்கியவிடயங்கள் விடயங்கள்.

1.தமிழ் நாட்டில் ஆட்சியைப்பிடிப்பது

2.மத்தியில் ஆட்சியுடன் கூட்டு (அமைச்சர் பதவிகள் பெற)

3.ஸ்பெக்கரம் ஊழலில் இருந்து தப்புவது

இதில் முதலாவதை விட அடுத்த இரண்டிற்கும் காங்கிரசின் உதவியே தேவை.

காங்கிரசின் நிலை அப்படி இல்லை.தமிழ்நாட்டில் அவர்கள் நிலை அவர்களுக்கே தெரியும்.தொடர்ந்து தி.மு.க வுடன் கூட்டு வைத்து இந்தியா முழுக்க ஊழல் கட்சியுடன் கூட்டுவைத்ததற்கு அவப்பெயர் எடுப்பது,ஒரு சீற் கூட் கிடைக்காவிட்டாலும் ராகுலின் எதிர்காலதிட்டப்படி காங்கிரசை தமிழ்நாட்டில் காலூன்ற(விஜெய்,விஜயகாந்த் போன்றவர்களை இணைத்து) முயற்சிப்பது,அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டு.

தி.மு.க, காங்கிரசுக்கு அடிபணிந்து கூட்டுவைப்பதற்கு தான் சாத்தியங்கள் அதிகம்

I wrote this last week.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

63 தொகுதிகள் கொடுக்க சம்மதித்த தி.மு.க.

தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க சம்மதித்து விட்டதா?

வரும் சட்டமன்றத் தேர்தலில்:

- திமுக 121 தொகுதிகளிலும்,

- காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும்,

- பாட்டாளி மக்கள் கட்சி 30 தொகுதிகளிலும்,

- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும்,

- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும்,

- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும்,

- மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும்

போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=60071

  • கருத்துக்கள உறவுகள்

வரும் சட்டமன்றத் தேர்தலில்:

- திமுக 121 தொகுதிகளிலும்,

- காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும்,

- பாட்டாளி மக்கள் கட்சி 30 தொகுதிகளிலும்,

- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும்,

- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும்,

- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகளிலும்,

- மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியிலும்

போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=wIo9OqXVYkI

நாட்டுல... பிக்பாக்கெட்டு.. முச்செறூக்கி ,, முள்ளமாறி ..சந்துல திருடறவன்... பொந்துல திருடறவன்..எல்லாம் தலைவனாயிட்டா நாடு தாங்குமா சார்.. :(

திமுக அமைச்சர்களது கோவணத்தையும் உருவியது காங்கிரஸ்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் 969)

இந்தக் குறளுக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய உரை 'உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.'

தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானையொத்த மானிடர்; தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலைவரின் அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர். இது பரிமேலழகர் உரை.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்ததால் தன் செங்கோல் கோடியபோது தன் உயிர் துறந்து அதை நேராக்கியது போல்வதாம்.

நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை எனவும் தங்களது ஆறு அமைச்சர்களையும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாகவும் நான்கு நாட்களுக்கு முன் அறிக்கை விட்ட திமுக தலைவர் இப்போது மானத்தை காற்றில் விட்டு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் சேதாரமின்றிக் கொடுத்துள்ளார்.

திங்கட்கிழமை காலை திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு திரும்புவார்கள் என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.

பதவி விலகல் மிரட்டலைக் கண்டுவிட்டு காங்கிரஸ் படிஇறங்கி 60 இடங்கள் போதும் என்று சொல்லும் என்று பார்த்தால், அப்படியொன்றும் நடக்கவில்லை. திமுக தான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மிரட்டலுக்குப் பயந்து கேட்ட 63 தொகுதிகளையும் கொடுத்துள்ளது.

சோனியா வேட்டியோடு போன திமுக அமைச்சர்களது கோவணத்தையும் உருவி அனுப்பியிருக்கிறார்! அவரோடான சந்திப்பு திமுகவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. சோனியா கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி மாறனும் மு.க. அழகிரியும் ஆடிப் போனதாகக் கூறப்படுகிறது.

இதைவிட மானக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது! திருக்குறளுக்கு உரை எழுதுவது வேறு திருக்குறள் சொல்வதைக் கடைப்பிடிப்பது என்பது வேறு என்பதை கருணாநிதி எண்பித்துக் காட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு மானம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திமுக அமைச்சர்களைப் பதவி விலகச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதசங்கிலிப் போராட்டம், தந்தி, உண்ணா நோன்பு என பல நாடகங்களை முதல்வர் கருணாநிதி மேடையேற்றினார்.

அன்று பதவி தோளில் போடும் துண்டு. கொள்கை இடுப்பில் கட்டும் வேட்டி என்றெல்லாம் என்னமாய் சொற்சிலம்பம் ஆடினார்கள்? அவையெல்லாம் கனவாய் பழங் கதையாய் போய்விட்டது! இன்று கொள்கை தோளில் போடும் துண்டு, பதவி இடுப்பில் கட்டும் வேட்டி என்று தலைகீழாக மாறிவிட்டது!

இந்தக் மானக்கேடு கருணாநிதிக்கு மட்டுமல்ல. முழுத் தமிழினத்துக்குமே தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இதனை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை மனக் கண்ணால் பார்க்க முடிகிறது. அதே சமயம் திமுக தொண்டர்கள்தான் பாவப் பிறப்புக்கள். இனிப்புக் கொடுத்து கொண்டாடிய கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.

விலகல் கடிதத்தை உடனடியாகத் தொலைப்படி மூலம் அனுப்பாமல் மூன்று நாள் கழித்து கொடுப்பது என்று திமுக முடிவெடுத்தபோதே விலகல் என்பது வெறும் வெருட்டு புலுடா என்பது தெரிந்து போயிற்று. இப்படியான வெருட்டு முந்திய காலங்களில் பலித்திருக்கிறது. ஆனால் இம்முறை பிழைத்துவிட்டது.

திராவிட கழகத் தலைவர் மானமிகு வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப வீரபாண்டியன் ஆகியோர்தான் பாவப்பட்ட பிறப்புக்கள். அவர்கள் விட்ட அறிக்கையில் காணப்பட்ட மை காயுமுன்னரே முதல்வர் கருணாநிதி அவர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார்.

கி.வீரமணி விட்ட அறிக்கை: குட்டக் குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்கிரஸ் இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைப் பரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.

திருமாவளவன் நேர்காணல்: தி.மு.க.,வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.

பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.மு.க சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.

சும்மா வாயை வைத்துக் கொண்டிருக்காமல் மானம், தன்மானம், முதல்வர் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் தோள்தட்டி ஆர்ப்பரித்தவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக முடங்கிப் போனார்கள்.

இந்த மூவரது முகத்தை மனக்கண்ணால்; பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்யப் போகிறார்கள்?

காங்கிரஸ் - திமுக ஊடலுக்கு 63 தொகுதிகள் மட்டும் காரணமா அல்லது மேலும் ஏதாவது காரணங்கள் உண்டா?

'கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?'' என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்கு, 'அதுவும் ஒரு காரணம்' என்று அவர் பதிலளித்தது முதலே காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் காரணம், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.

ஏனைய காரணங்கள் என்ன? 2 ஜி அலைக்கற்றை ஊழல் ஒன்று. இரண்டு, கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த 216 கோடி பணம். இந்த இரண்டையும் காட்டித்தான் சோனியாவும் பிரணாப் முகர்ஜியும் அழகிரியையும் தயாநிதி மாறனையும் மிரட்டி இருக்க வேண்டும்.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக அல்லது அதிமுக 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் திமுக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கு திமுக அருமையான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் தேர்தல் உடன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டுத் தமிழர்களது மானம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் மானம் காற்றில் பறந்துள்ளது.

வருகிற தோர்தலில் இந்த சந்தர்ப்பவாத திமுக - காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே காற்றில் பறந்த மானத்தில் கொஞ்சமாவது திரும்பி வரும்.

நக்கீரன், கனடா

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={32AAF689-6F6B-411F-B0FA-4A695BB72F43}

  • கருத்துக்கள உறவுகள்

டிராமா ஒர்க் அவுட் ஆகுத்தா?

ம.பு.க. (CBI) விசாரணை‌யி‌ல் கனிமொழி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மக‌ள் கனிமொழியிடம் மத்தியப் புலனாய்வுக் கழகம் விரைவில் விசாரணை நடத்தும் என்று தகவ‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

2‌ஜி அ‌லை‌க்க‌ற்றை வழக்கின் அடுத்த க‌ட்ட விசாரணை வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. வரு‌ம் 31ஆ‌ம் தே‌திக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌த்‌தி‌ற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உ‌‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இந்த ‌நிலை‌யில் கனிமொழியிடம் விசாரணை நடத்தினால்தான் வழக்கு விசாரணையை ஓரளவுக்குப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால் இந்த முடிவை ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌ம் எடுத்திரு‌ப்பதாக டெ‌ல்‌லி வ‌ட்டார தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌‌கி‌ன்றன.

கலைஞர் தொலைக்காட்சிக்கு எந்தவிதப் பிணையும் இல்லாமல் 240 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்ததாகவும் வட்டியையும் அசலையும் அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாஹித் பல்வா, ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக அதிகாரிகளிடம் ஏற்கனவே கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

எனவே இது தொடர்பாக மேலும் சில விளக்கங்களைப் பெற கனிமொழியிடம் விசாரணை நடத்தப்படும் என்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌‌ப்படு‌கிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1103/10/1110310001_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

டிராமா ஒர்க் அவுட் ஆகுத்தா?

ம.பு.க. (CBI) விசாரணை‌யி‌ல் கனிமொழி

-------

புரட்சி,

63 தொகுதியையும் கொடுத்து.... மத்திய புலனாய்வுத் துறை, கனிமொழியை விசாரிக்க கருணாநிதிக்கு ஹாட் அட்டாக் வந்துவிடுமே.....

தி.மு.க.,வை திணறடித்த காங் அரசியல் களத்தில் அரங்கேறிய பின்னணி

கட்சியின் உயர் மட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிறகும், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மிகப்பெரிய அரசியல் நாடகத்தின் முடிவில் நடந்த புதிருக்கான விடை, சற்று மெல்ல விலகியுள்ளது. தி.மு.க.,வை வழிக்கு கொண்டுவர, காங்கிரஸ் எடுத்த பிரம்மாஸ்திரமும், அ.தி.மு.க., ஆடிய சதுரங்க ஆட்டமும் தான், தி.மு.க.,வை திணறடித்து, கடைசியில், கேட்டதற்கு அதிகமாகவே, 63 தொகுதிகளை கொடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, ஆரம்பம் முதலே கடும் இழுபறியாக இருந்தது. ஐவர் குழு, பல முறை கூடி பேசியும், துளியும் முன்னேற்றம் இல்லை. இதனால், மேலிடத் தலைவரான குலாம்நபி ஆசாத்தே வந்து கருணாநிதியுடன் பேசினார். அப்போது, இருதரப்புக்கும் கடும் இறுக்கம் ஏற்படவே, அடுத்தநாளே, தி.மு.க., உயர்மட்டக்குழு கூடியது. ஐ.மு., கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், அடுத்தநாளே அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. உயர்மட்டக்குழு என்பது, தி.மு.க.,வின் அதிகாரம் மிக்க அமைப்பு. அங்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை மாற்ற வாய்ப்பே இருக்காது. 53லிருந்து 57 சீட் வரை மட்டுமே அளிக்க முடியும் என கறாராக பேசிவிட்டு, இரண்டு நாட்களாக, காங்கிரசிடம் இடைவிடாமல் பேசி பேசி, கடைசியில், 63 வரை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. என்ன நடந்துவிட்டது இடையில் என்ற கேள்விக்கும், எதற்காக இந்த முடிவை மாற்ற வேண்டுமென்றும் என்ற கேள்விக்கும், தற்போது விடை தெரியவந்துள்ளது.

தே.மு.தி.க., – அ.தி.மு.க., அணியில் சேர்ந்துவிட்டபிறகு காங்கிரசுக்கு வேறு வழியில்லை என தெரிந்த பின்னரே, தி.மு.க., தீர்மானத்தை நிறைவேற்றி, காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியதும், தி.மு.க., ஆடிப்போனது. தி.மு.க.,வின் இந்த தள்ளாட்டத்தை ரசித்துக் கொண்டே, வேண்டுமென்றே அ.தி.மு.க.,விடம் தூது பேசும் காட்சிகளை, காங்கிரஸ் அரங்கேற்றியது. டில்லியில் ம.நடராஜன் முகாம் அடித்து இருந்ததால், காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதை, தி.மு.க., கவனித்தது. அதற்கேற்ப, அன்றைய தினம் காலையில் பார்லிமென்டில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் குஷியாக இருந்தனர். குறிப்பாக, தம்பிதுரை, செம்மலை, பாலகங்கா போன்றவர்கள், மிகவும் பிசியாக இருந்தனர். அவர்களிடம் பேசியபோது, “அதெல்லாம் ஒன்றுமில்லை’ என, மறுத்தனர். ஆனாலும், அவர்களின் முகபாவங்கள் மகிழ்ச்சி ஆகியவை எல்லாம், “ஏதோ நடக்கிறது’ என்பதை மட்டும் உறுதிப்படுத்தியது.

அ.தி.மு.க., கூட்டணி பற்றி காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியிலும் பலமான பேச்சு இருந்தது. இதை, காங்கிரஸ் வேண்டுமென்றே செய்தது. சென்னையிலும் ம.தி.மு.க., – இடதுசாரிகள் கட்சிகளுடன் அ.தி.மு.க., நடத்தியிருக்க வேண்டிய பேச்சுவார்த்தையும் தாமதமாகிக் கொண்டே இருக்கவே, தி.மு.க.,வுக்கு உச்சகட்ட டென்ஷன் ஆனதாக தெரிகிறது. இதையடுத்தே, எப்படியும் அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் சென்று விடாமல், தடுத்தே ஆக வேண்டுமென வியூகம் வகுக்கப்பட்டது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகுதிகளையும் கூட அளிக்க தயார் என, தி.மு.க., இறங்கி வந்ததாகவும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவானது. பின்னர் ஒருவழியாக, 63 தொகுதிகள் என முடிவாகி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையை துவங்கி அதை காட்டி காட்டியே காங்கிரஸ், தி.மு.க.,விடம் தன் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொண்டது.

ஆனால், காங்கிரஸ் வகுத்த வியூகத்திற்கு அ.தி.மு.க., ஏன் வளைந்து கொடுக்க வேண்டும், அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்கையில், ஆச்சரியமான வியூகங்கள் அந்த பக்கம் இருந்தும் வருகின்றன. தற்போது, தே.மு.தி.க., இருப்பதால், இந்த கூட்டணியே போதுமான பலமுடன் இருக்கிறது. தேர்தலை சந்திக்க இதுவே போதும் என்பது அ.தி.மு.க.,வின் நிலை. காங்கிரஸ் வருமானால், அந்த கட்சிக்கு குறைந்தது 50 தொகுதிகள் வரை ஒதுக்கவேண்டும். அப்படி காங்கிரசும் சேரும்போது, அ.தி.மு.க.,வின் வெற்றி, 100 சதவீதமாகவிடும். அந்த சூழ்நிலையில், தே.மு.தி.க., – காங்கிரஸ் இரு கட்சிகளுமே தாங்கள் போட்டியிட்ட 90 தொகுதிகள் வரை வெற்றியை பெற்று இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வியும் கூடவே வரும். ஜெயலலிதா எளிதாக முதல்வராவதற்கு சிக்கல் உருவாகும். அந்த நிலை வருவதை அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதனால் தான், காங்கிரசை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் அ.தி.மு.க.,வுக்கு கிடையவே கிடையாது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டுமென்பது மட்டுமே, அ.தி.மு.க.,வின் எண்ணம். அதற்காக, அ.தி. மு.க.,வும், காங்கிரஸ் நேற்று முன்தினம் நடத்திய நாடகத்திற்கு, தன் பங்கிற்கு காய் நகர்த்தி பரபரப்பை கிளப்பியது. இப்படி காங்கிரசும் அ.தி.மு.க.,வும் ஆடிய சதுரங்க ஆட்டத்தில், தி.மு.க., மிகுந்த தள்ளாட்டத்திற்கு ஆளாகி, இறுதியில், 63 தந்து தனது இடத்தை, ஐ.மு., கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டது என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

http://www.alaikal.com/news/?p=60357

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.