Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

பட்ட கடனை திருப்பி அடைப்பதும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை தானே.

என்னைப்பொறுத்தவரை

மகிந்தவின் ஒரு முக்கிய நண்பன் இனி சில காலத்துக்கு எவரையும் துன்புறுத்தமாட்டான்

Edited by விசுகு

  • Replies 90
  • Views 9.9k
  • Created
  • Last Reply

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

வலித்தவன் திட்டுவான்.

வலிக்காதவன் தத்துவம் பேசுவான்.

இதுவரை 1217 பேர் மரணம்...மேலும் நூற்று கணக்கானோரை காணவில்லை... cnn.news

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயரும் என அஞ்சப்படுகிறது

13 மார்ச் 2011

ஜப்பானில் வெள்ளியன்று ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பயங்கரமாக பாதிக்கப்பட்ட மியாகி நகரில் பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும் என அஞ்சுவதாக ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது.

மியாகியில் இதுவரை சாவு எண்ணிக்கை 379 மட்டுமே என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மியாகி காவல்துறையின் இந்த அறிவிப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பேரிடர் நிவாரண அதிகாரிகள் முன்னிலையில் மியாகி காவதுறை உயரதிகாரி சுகாவரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை லட்சக்கணக்கான மக்கள் 2 நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் ஜப்பான் இராணுவத்தினர் சுமார் 100,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு மின்சாரத் தொழிற்சாலையின் 2 அணு உலைகள் சுனாமியால் சேதமடைந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நிலநடுக்கம் குறித்து கவலை அடைந்தோம். தற்போது அணுக்கதிர் குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளோம். அணு உலைகளுக்கு அருகில் வசிப்பதால் இங்கு வந்து பரிசோதனை செய்தோம்.

பரிசோதனையில் உடலுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாது என கோரியாமாவில் அவசரகால நிலையத்தின் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் பெரும்பகுதி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு எவுரும் செல்ல முடியவில்லை. எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

380,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால வசிப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவாகி நகரில் உணவு மற்றும் எரிபொருள் இல்லாததால் குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். அந்த நகரில் மின்சாரம் இல்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஜப்பான் முழுவதும் கடந்த 2 நாட்களாக 14 லட்சம் பேர் குடிநீர் இல்லாமலும், 25 லட்சம் பேர் மின்சார வசதி இல்லாமலும் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

gtn

  • முதலில் என 8.9 ரிக்டர் அளவில் சொல்லப்பட்ட இந்த அதிர்ச்சி இப்பொழுது 9.0 என உயர்த்தப்பட்டுள்ளது
  • இதுவரை 293 பின் அதிர்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையானவை 6.0 க்கும் மேலானவை.
  • வீதிகளை விட உலங்குவானூர்த்திகளே மக்களுக்கு உதவ அதிகளவில் பாவிக்கப்படுகின்றது
  • 2.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் இல்லை. தொடர்ந்தும் சுழற்சிமுறையில் மின்சாரம் தடைப்படும்.
  • மக்கள் உணவுப்பொருட்களை சேமித்தவண்ணம் உள்ளனர்.
  • போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. மசகு எண்ணெயும் தட்டுப்பாடாக உள்ளது.

Edited by akootha

முன்னர் எவ்வாறு இருந்தது பின்னர் எவ்வாறு உள்ளது படங்களை இங்கு பார்வையிடலாம். படங்களில் mouseஇனால் நகர்த்துவதன் மூலம் தெளிவாகப் பார்வையிடலாம்.

http://www.vg.no/nyheter/utenriks/jordskjelv-i-japan/bilder.php

http://www.aftenposten.no/spesial/article4059392.ece

  • கருத்துக்கள உறவுகள்

ஓவர் பீலீங்கு ஒடம்புக்கு.. சூடு.. ஏதோ கிரிக்கெட்டு மேட்ச் பார்ப்பது ஏதோ ஒரு நாட்டில் எங்கிட்டோ நிகழுது என நினைத்து கொண்டு போய்விடுதல்.. வேண்டும்..இங்கிட்டு ஈழத்தில் சுனாமி வந்த போதும் நிவாரண உதவி திட்டத்தில் சம பங்காளிகளாக சேர்க்காதவர்தவர்கள்தான் சப்பான் நாட்டினர்.. ஏதோ ஒப்புக்கு அனுதாபம்/ஆதரவு பிலிம் காட்டிவிட்டு அடுத்த கட்டம் நோக்கி நகருதல் வேண்டும்.

டிஸ்கி:

இன்னுமோர் முள்ளிவாய்க்கால் சோகம் மற்றும் சுனாமி போல இயற்கை சோகம் வந்தாலும் இந்த கனிஸ்கர் கோஸ்டிவாடும் அசோகர் கோஸ்டிவாடும் இணைந்தே இருப்பார்கள்.. சுருக்கமாக சொன்னால் ஒட்டுறதுதான் ஒட்டும் ... அதாகபட்டது இனந்தான் இனத்தை சேரும் ..

scan0007.jpg

5 பைசாவுக்கு புண்ணியபாடாத ரிலேசன்ட் சிப்பு தேவையில்லை..ரைட்டு..

டிஸ்கி டிஸ்கி:

இதை எப்படி பாவிக்க வேணுமென்றால் .. கருநாகம் போல உணவு பொருளை கொஞ்சம் சேகரித்து போட்டு ..அசையாம ....ராஜபக்சே தடுத்து போட்டார் என அடித்து விடவேணும்..அவன் உண்மையா தடுத்தா இன்னும் ரொம்ப வசதி... அவன் அனும்திச்சி அப்படியே உதவி செய்து போட்டாலும் உடனே யப்பான் மக்கள் மனமாறி ஈழம் ஈழம் .. அப்படியே தேர்தலில் பிரதிபலிக்கபோவதில்லை.. அவனெல்லாம் அமெரிக்க கோஸ்டிக்கு தாளம் போடுபவன்..இன்னும் இரண்டே மாதத்தில் (அமெரிக்க)ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு உதவி செய்து பழையபடி மாற்றிவிடுவான்..சுருக்கமாக சொன்னால் ஈழ தோழர்கள் கண்ணாடி போல இருக்கணும்.. எது எதிரில் இருக்கிறதோ அதைத்தான் கண்ணாடி காட்டும்.. அதை போலத்தான் கடந்தகாலத்தின் வரலாறினை மனதில் வைத்து எதிர்காலத்தினை கணக்கிடவேண்டும்.. ஈழ தோழர்கள் என்றுமே வறுமையில் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளை போக்கஸ் செய்யவேணும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் மற்றும் பாடை காசிலும் லாபம் தேடும் உலகில் இப்படித்தான் இருக்கணும்.. இன்னும் மனிதாபிமானம் பேசி வீணா போய்ட கூடாது...^_^

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தாயகத்தில் ஆழிப்பேரலை தாக்கிய காலத்தில் பல நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு பணம் சேர்த்தனர். பல தமிழரல்லாத மக்களும் மனமுவந்து உதவினர். எமது மக்களும் அவர்களுக்கு நன்றி கூறினார்கள்.

ஆனால் சேர்த்த உதவிகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மக்களின் தேவைக்கு அவர்கள் அனுப்ப முற்பட்டபோது மேற்குலக நாடுகளின் உளவுத்துறையினர் பல உளரீதியான தாக்குதல்களை பயமுறுத்தல்களை தொண்டர்கள் மீது மேற்கொண்டனர். இதனால் மனிதாபிமான உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அங்கே அரசியலிடம் மனிதாபிமானம் தோற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிட்டு எவனும் தமிழர் வாழ்வில் இனி இஞ்சி மரபா வியாபரம் நடத்த கூடாது...வாழ்வியலில் அளவீடு ஒரே முறையில்தான் இருக்கவேண்டும் .. அங்க ஒன்னும் தங்கத்தில் தொங்கவில்லை .. இங்கிட்டு ஒன்னும் தகரத்தில் தொங்கவில்லை..அப்படி இஞ்சி மரபா வியாபரம் நடத்துபவனுக்கு புதிய வியாபரத்தினை கற்று கொடுக்கணும்..

டிஸ்கி:

ஊரில் ஒரு பழமொழி உண்டு. விவசாயி வீட்டு குப்பைய கிண்டினால் மாட்டு சாணாமத்தான் இருக்கும் . அமட்டன் (முடிதிருத்துபவர் ) வீட்டு குப்பை கிண்டினால் மசிருதாத்தான் இருக்கும் . பழைய குப்பைகளை கிண்டி ..... இனியும் வெத்தலை வள்ளி கிழங்கு பயிர் செய்யாமல்...

வேலை இல்லாதவன் பொண்டான்டி தலையை செரத்த கதையாக இல்லாமல் ..அனைவரும் தங்களது பிள்ளைகளை பிஸ்ஸி(bsc) இயற்பியலில் செர்க்குக அதுதான் ஈழத்தின் முதல் படி .... வெற்றிபடி..... ...கோ அன்ட் புரசீட் .. :blink:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ. எங்களுக்கு யப்பான் செய்த துரோகத்துக்குத்தான் இந்த அழிவு என்பதை யாராவது தயவு செய்து அந்த மக்களுக்கு தெரியப்படுத்திவிடுங்கள்.அப்பதான் எங்களுக்கும் நிம்மதி.அவர்களுக்கும் சுரனை வரும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மனித நேயம் பேசும் பலரது முகத்திரையை இந்த சுனாமி காட்டி கொடுத்திருக்கு,

58லையிருந்து ஒவ்வொண்டாய் எண்ணிப்பாரும்?

அப்ப தெரியும் ஈழத்தமிழனிலை சர்வதேசம் எவ்வளவு மனிதாபிமானம் வைச்சிருந்ததெண்டு?

ஒருசில ஆக்களுக்கு மற்றவன் கு - -யை கழுவுறதும் மனிதாபிமானம் தான்.

எல்லா இடத்திலையும் பரிவு,பட்சமாக என்னாலும் எழுத முடியும்.

கதைக்க வந்திட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஜப்பான்! எப்போது இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 16:23

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகுத்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நிலைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது இந்தியா? என்ற எதிர்பார்ப்பும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கவே செய்யும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பவாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

sankamam.com

  • கருத்துக்கள உறவுகள்

indian_map.gif

இன்னிக்கு செத்தால் நாளைக்கு இங்கு பால்.. இதையெல்லாம் இங்கு உணராவதவர்கள் இல்லை..மும்பை தாக்குதலின் மூன்றாவது நாளில் எழுந்த மகாராஸ்டிரியர்கள் என்கிறார்கள் கூர்ந்து கவனித்த்தால் ...சத்தியமாய் அது தேச்பக்தி கிடையாது.. எவன் செத்தால் எனக்கென்ன எனும் போக்கே இங்கிட்டு மேலோங்கி காணபடுது.. அது சாதாரணம் கிரவுடை குறை சொல்ல முடியாது.. இயற்கையும் அவனவன் மூலமாக குண்டு வைக்குது .. புயல் எழுப்புது.. ஆனா எவனும் தன்னின்ட வேலைய நிறுத்தற மாதிரி தெரியல் ஓவர் கிரவுடு எப்பா சாமி இயற்கை எதாவது வழி செய்யணும் தமிழ்நாட்டு மாக்களை தவிர்த்து.. இவர்களை பிரியாணி வாங்கி குடுத்து சரிபண்ணிடலாம் .. ஆனா மற்ற மாநிலங்களில் மிடியாடு ரைட்டு... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

இதை எப்படி செய்யலாம்?

இப்போது ஜப்பான்! எப்போது இந்தியா?

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

sankamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.