Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானில் அணுக்கசிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 18, மார்ச் 2011 (17:59 IST)

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி ஜப்பான்

அணு உலையை குளிரவைக்க முயற்சி

ஜப்பான் சுனாமி தாக்குதலால் அங்குள்ள புகுசிமா அணு உலைகள் செயல் இழந்தன. இங்கு மொத்தம் 6 அணு உலைகள் உள்ளன. அதில் 4 அணு உலைகள் பாதிப்பு அடைந்து வெடித்தன. அதில் இருந்து அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. அணு உலைகளை குளிர்விக்கும் கருவிகள் பழுதானதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது.

மேலும் வெடித்து சிதறாமல் தடுக்க அவற்றை மாற்று முறைகளில் குளிர்விக்க முயற்சித்து வருகின்றனர்.

இதற்காக தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்து வருகின்றனர். இது போதாது என்பதால் ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீரை ஊற்றி குளிர்விக்கும் முயற்சி நடக்கிறது.

இதற்காக சி.எச். 47 சினூக் வகை ராணுவ ஹெலிகாப்டர்கள் பலப்படுத் தப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் ராட்சத தொட்டி மூலம் கடல் தண்ணீர் எடுத்து வந்து அணு உலைகள் மீது ஊற்றின. ஒவ்வொரு தடவை 7 1/2 டன் எடை கொண்ட தண்ணீர் ஊற்றப்பட்டது.

அதே நேரத்தில் குளிர்விக்கும் கருவியை மீண்டும் இயக்க வைக்க தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை எட்டியுள்ளது. ஆனாலும் இந்த கதிர்வீச்சின் அளவு குறைவாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

nakkheeran

  • Replies 104
  • Views 10k
  • Created
  • Last Reply

இது ஜப்பானிய கதிர் வீச்சு என்பதால் அமெரிக்காவை பெரிதும் பாதிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

கலிபோஃனியாவில், விஞ்ஞானிகள் குறிப்பிட்டபடி அணுக்கசிவின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

- 1ஆம் 2ஆம் 3ஆம் ரியாக்டர்களில் அணுக்கசிவு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது

- தண்ணீர் மட்டங்களும் வெப்பமும் கட்டுப்படுத்தப்படுவதாக சொல்லப்படுகின்றது

- அதேவளை 2ஆம் ரியாக்டருக்கு மின் வழங்கும் முயற்சி தொடருகின்றது. தன மூலம் 1ஆம் 3ஆம் ரியாக்டருக்கும் மின் வழங்கப்படும்.

- பல இடங்களில் உணவிலும், நீரிலும், பாலிலும் கதிரியல் தாக்கம் உணரப்பட்டுள்ளது

- மக்கள் அரசு உண்மைகளை மறைப்பதாக குறை கூறுகிறார்கள்

- Efforts to control Japan’s nuclear crisis were delayed by concerns over damaging valuable assets at the Fukushima Dai-Ichi nuclear power plant and initial passivity from the Japanese government, the Wall Street Journal reported, citing people familiar with the matter.

Tokyo Electric Power Co. was reluctant to use seawater to cool one of the six reactors at the plant and hesitated because it was concerned about harming its long-term investment in the plant, the Journal cited people involved with the response as saying.

http://www.bloomberg.com/news/2011-03-19/japan-s-response-to-reactor-crisis-delayed-by-concern-over-asset-damage.html

  • கருத்துக்கள உறவுகள்

யப்பானிய அரசு உண்மையை சொன்னால்... மக்கள் குழம்பி விடுவார்கள்.

அதன் பின் களவு, திண்டாட்டம், ஒட்டம், பசி, பட்டினி என்று... எல்லாத் துன்பமும் ஒரு நாளில் அனுபவிக்க வேண்டி வரும்..

மெல்ல... மெல்ல அனுபவிக்கட்டும் என்று யப்பான் அரசின் ராச தந்திரம் போலை கிடக்குது.

"முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்"

  • தொடங்கியவர்

- 3 ஆம் ரியாக்கடடில் அமுக்களவு கூட்டிக்கொண்டு வருகின்றது. இந்த அமுக்க அளவை குறைக்கும் வழிமுறைகளை அமுல்படுத்தி வருகின்றார்கள்.

- 1ஆம் 2ஆம் 4ஆம் ரியாக்டர்களில் இருந்து செளிவரும் கசிவைத்தடுக்கும் முயற்சிகள் தொடருகின்றன, தண்ணீரை பாய்ச்சுவது முக்கிய பங்கு வகிக்கின்றது.

- மின்சார இணைப்பு வழங்கும் முயற்சியும் தொடருகின்றது

- இதுவரை 7700 மக்கள் இறந்துள்ளனர் என கூறப்படுகின்றது

- 12000 மக்கள் வரை இன்னரும் காணமல் போயுள்ளனர்

Cooling efforts on at Japan nuke plant; toll mounts to 7,700

http://www.hindustantimes.com/Cooling-efforts-on-at-Japan-nuke-plant-toll-mounts-to-7-700/Article1-675595.aspx

Japan makes some progress in nuclear crisis

http://www.reuters.com/article/2011/03/20/japan-idUSL3E7EJ0820110320

ஜப்பான், நிச்சயம் இந்த பிரச்சனையில் இருந்து மீளும், ஒரு பெரும் அணு உலை விபத்தாகிப் போனால் கூட

அவர்கள் அணுவாயுதம் போட்ட அமெரிக்காவையே தன் அபிவிருத்தி பலத்தால் நட்புறவாக்கி அந்த அணுச் சக்தியை தன் மின் சக்தியாக மாற்றிய மக்கள் கொண்ட நாடு

நிச்சயம் இந்த இக்கட்டில் இருந்து மீளும், அதன் மீண்ட செயல்திட்டங்களே நாளைக்கு பல நாடுகளுக்கு படிப்பினை ஆகும். அதற்கான ஒற்றுமையும், ஒரு இனம் என்ற அடையாளத்தின் கீழ் அணிவகுக்கும் தேசிய திறனும், மற்றவனிடம் அடைக்கலம் தேடி ஓன்டினால் பிரச்சனை தீரும் என்ற பம்மாத்து குணமும் அற்ற ஒரு இனம்.. நிச்சயம் எதிர்கால உலகுக்கு அதன் இன்றைய நிலையில் இருந்து மீள்வது பெரும் பாடமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வீச்சு அதிகரித்ததால் அணு உலைகளை புதைக்க ஜப்பான் யோசனை!

சனிக்கிழமை, மார்ச் 19, 2011, 12:00[iST]

டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி, பூகம்பமும், சுனாமியும் தாக்கி பேரழிவை உண்டாக்கின. ஃபுகுஷிமா என்ற இடத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 4 அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. மேலும், அந்த அணு உலைகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால் மின்சார சப்ளையும் அறுந்தது.

மின்சாரம் இல்லாமல், தண்ணீர் ஏற்ற முடியாததால், அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் தொட்டிகள் நீரின்றி வறண்டு விட்டன. இதனால், அணு உலைகள் மேலும் சூடாகி வரும் நிலையில், கதிர்வீச்சு அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. இதனால் அணு உலைகளை குளிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்நீரை ஒரு ராட்சத தொட்டியில் எடுத்து, அணுஉலைகள் மீது கொட்டி, அவற்றை குளிரூட்டி வருகிறார்கள். ஆனால் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

மின்சப்ளை:

இதையடுத்து, அணு உலைகளுக்கு மின் சப்ளையை புதுப்பிக்கும் பணிகளில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்சப்ளை கொண்டுவரப்பட்டால், தண்ணீர் மோட்டாரை இயக்க முடியும் என்பதால், அப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பூகம்பத்தால், அணுஉலை மோசமாக பாதிக்கப்பட்டதால், மின்சப்ளை கொண்டுவரப்பட்டால்கூட, தண்ணீர் மோட்டார் செயல்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மீண்டும் வெடிவிபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

மண்ணில் புதைக்கத் திட்டம்:

இந்த சூழ்நிலையில், அணு உலைகளை மண்ணிலும், கான்கிரீட்டிலும் புதைப்பது பற்றி ஜப்பான் பரிசீலித்து வருகிறது. கடந்த 1986-ம் ஆண்டு, உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணு உலையில் இருந்து கடுமையான கதிர்வீச்சு வெளியானபோது, இதுபோன்றுதான், அந்த அணு உலையை மண்ணில் புதைத்து, கதிர்வீச்சை தடுத்தனர்.

எனவே, அதே பாணியில், புகுஷிமா அணு உலைகளையும் மண்ணில் புதைப்பதுதான் கதிர்வீச்சை தடுக்க ஒரே வழி என்று என்ஜினீயர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய நிலையில், அணு உலைகளுக்கு மின்சப்ளையை கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இத்தகவலை ஜப்பான் அணுசக்தி கழக செய்தித்தொடர்பாளர் ஹிடேகிகோ நிஷியாமா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமைக்குள், 2 அணு உலைகளில் மின்சப்ளை கொண்டுவரப்படும் என்று ஓர் அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

நிபுணர் குழு ஜப்பான் விரைந்தது...

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட அணு உலைகளை நேரில் பார்வையிடுவதற்காக, சர்வதேச அணுசக்தி கழக தலைவர் யுகியா அமனோ நேற்று 4 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் ஜப்பான் சென்றார்.

அணு மின் நிலையம் அருகே மீண்டும் நிலநடுக்கம்:

இந் நிலையில் ஜப்பானில் புகுஷிமா அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனிடம் அடைக்கலம் தேடி ஓன்டினால் பிரச்சனை தீரும் என்ற பம்மாத்து குணமும் .

இந்தக் குணம் தமிழர்களை விட்டு எப்போது நீங்கும்?

நீங்க ஒவ்வொரு தமிழனும் என்ன செய்ய வேண்டும்?

நீங்க ஒவ்வொரு தமிழனும் என்ன செய்ய வேண்டும்?

  • தொடங்கியவர்

பூகம்பம் - ஆழிப்பேரலை நடந்து ஒன்பது நாட்களுக்கு பின்னர் ஒரு பதினாறு வயது சிறுவனும் அவரின் பாட்டியாரும் உயிருடன் மீட்கப்பட்டனர்

Rescue in Japan as two pulled from rubble

A grandmother and her teenage grandson were rescued Sunday in Japan, nine days after they became trapped in their home following the earthquake and tsunami, officials said.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/20/japan.rescue/index.html?hpt=T2

சிறு முன்னேற்றங்கள் - ஆனால்அணு உலைகளை புதைக்கும் எண்ணமும் வலுவாக உள்ளது

- 5ஆம் 6ஆம் ரியாக்டர்கள் பெரியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

- 3ஆம் ரியாக்கடரில் ( மிகவும் கூடிய ஆபத்தானது) சடுதியாக அமுக்கம் கூடி குறைந்தமை அதில் இன்னும் பாரிய சிக்கல்கள் உள்ளன என்பது சொல்லுகின்றது

- மின்சாரம் வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

- பாதிக்கபட்ட இடங்களில் இருந்து மரக்கறிகள் விற்பனைப்படுத்துவதை அரசு கட்டுப்படுத்தியுள்ளது

The operator of Japan's crippled, leaking nuclear plant says two of the six reactor units are now safely under control after their fuel storage pools cooled down. Tokyo Electric Power Company declared Units 5 and 6 safe Sunday night after days of pumping water into the reactors pool brought temperatures down.

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/japan-backs-off-from-venting-of-leaking-nuclear-reactor/article1948737/

http://www.google.com/hostednews/canadianpress/article/ALeqM5hQP_ctKYa7hMFwxODkMZDxLFEmtQ?docId=6308514

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குணம் தமிழர்களை விட்டு எப்போது நீங்கும்?

நீங்க ஒவ்வொரு தமிழனும் என்ன செய்ய வேண்டும்?

நீங்க ஒவ்வொரு தமிழனும் என்ன செய்ய வேண்டும்?

[/quote

சுட்டுவிரல் காட்டி நீ மற்றவனை திட்டுகையில்

மிகுதி நாலுவிரல்

உனைக்காட்டி (வெட்கி குனிந்து) நிற்குதடா மனிதா....???

சுட்டுவிரல் காட்டி நீ மற்றவனை திட்டுகையில்

மிகுதி நாலுவிரல்

உனைக்காட்டி (வெட்கி குனிந்து) நிற்குதடா மனிதா....???

ஏன்? இது உங்களைச் சுட்டு விட்டதா?

  • தொடங்கியவர்

  • மொத்தமாக 18000 மக்கள் வரை இறந்திருக்கலாம்
  • மொத்த மீள் கட்டமைப்பு செலவு 235 பில்லியன்கள் - உலக வங்கி
  • ஜப்பானின் முக்கோண அவலங்கள், பூமியதிர்ச்சி - சுனாமி - அணுக்கசிவு, பாரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கலாம்.
  • மீள் கட்டமைப்பு ஐந்து வருடங்கள் வரை எடுக்கலாம் - உலக வங்கி
  • உலகம் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலையை சந்திக்கலாம்
  • ஐரோப்பாவின் வங்கிகள் அவற்றின் பொருளாதாரம் ஜப்பானின் அவலத்தைவிட கூடுதலாக உலக பொருளாதரத்தை பாதிக்கலாம்

Japan's triple disaster estimated to cost 18,000 lives, $235-billion (http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/japans-triple-disaster-estimated-to-cost-18000-lives-235-billion/article1948737/ )

World Bank: Japan reconstruction may take 5 years (http://www.google.com/hostednews/ap/article/ALeqM5iuKbgE2jXe5-0z1lWM296wlkvgmQ?docId=f6a73e2b7a554988885ea58fd1a644a0)

Global economy faced with a new recession ( http://www.ctv.ca/generic/generated/static/business/article1948173.html)

Europe’s finances may hurt the global economy more than Japan’s tragedies (http://www.washingtonpost.com/opinions/europes_finances_may_shake_the_global_economy_more_than_japans_tragedies/2011/03/20/AB6yYU3_story.html?wprss=rss_homepage)

  • கருத்துக்கள உறவுகள்

Monday, March 21st, 2011 | Posted by thaynilam

ஐப்பான் அணு உலைகளை மூடத் திட்டம்! சுனாமியால் 20000பேர் உயிரிழப்பு

ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் பழுதடைந்துள்ள உலைகள் மூடப்பட்டு விடும் என்று, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலியானோர் மற்றும் மாயமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது.

புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் தற்போது, 1 மற்றும் 2ம் உலைகளில், மின்சார கேபிள்கள் இணைப்புப் பணி முடிந்து, 2ம் உலையில், மின்சாரம் மூலம் நீரை உலைக்குள் செலுத்தும் பணி தொடங்கி விட்டது.

பிற உலைகளுக்கு விரைவில் மின் இணைப்புப் பெறப்பட்டு விடும். அதே நேரம், புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் என்ற இரு எரிபொருட்களும் உள்ள 3ம் உலையில், நேற்று 14 மணி நேரம் தொடர்ந்து 2,400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4ம் உலையில் நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் குளிரூட்டும் முறைகள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ,குளிரூட்டும் முறைகள் வெற்றியடைந்த பின், பாதிக்கப்பட்ட உலைகள் கான்கிரீட் கலவையால் ஒரேயடியாக மூடப்படும் என்று தெரிவித்தார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3920

  • தொடங்கியவர்

Smoke spews from 2 reactors at stricken Japanese nuclear plant

- 2ஆம் 3ஆம் ரியாக்டர்களில் இருந்து புகை வந்தவண்ணம் உள்ளது

- எதனால் இந்த புகை வருகிறது எனத்தெரியவில்லை என சொல்லப்படுகின்றது

- இது ஒரு பின்னடைவு என கூறப்படுகின்றது

இன்னும் ஆபத்து நிலையிலேயே இந்த அணுக்கசிவு நிலைமை உள்ளதாக சர்வதேச அணு ஆராய்வு மையம் கூறுகின்றது.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/21/japan.nuclear.reactors/index.html?hpt=C1

  • தொடங்கியவர்

- மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அணு ஆலைகளுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தப்படுள்ளது

- இருந்தாலும் இன்னும் அணுக்கசிவு தொடர்வதாக சர்வதேச அணு ஆய்வு மையம் கூறியுள்ளது

- சுனாமியால் இறந்தோர் மற்றும் காணாமல் போனோர் 21000 வரை என தற்போது மீள் மதிக்கப்பட்டுள்ளது

Lights restored at Japan nuclear reacto

Lighting has been restored in the control room of one of the most badly-damaged reactors at Japan's stricken Fukushima nuclear plant, officials say. It is hoped the development will speed up work to restore cooling systems vital for stabilising the reactor.

Meanwhile, the UN's nuclear watchdog says radiation is still leaking from the quake-hit plant, but scientists are unsure exactly where it is coming from.

Japan estimates more than 21,000 people died in the 11 March quake and tsunami.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12825342

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தொடர்ந்து தரும் செய்திகளுக்கு நன்றி akootha

  • கருத்துக்கள உறவுகள்

ரோக்கியோவில்.... அணுக்கதிர் வீச்சின் தாக்கம் கடல் நீர், குடிநீர், உணவுப் பொருட்கள் மீது உணரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை நோக்கிச் செல்லும் ஜப்பானின் அணு உலை கதிர்வீச்சு! _

வீரகேசரி இணையம் 3/23/2011 9:47:14 AM Share

ஜப்பானின் அணு உலைகளில் இருந்து வெளியாகிய கதிர்வீச்சு பிரித்தானியாவை நோக்கிச் செல்வதாகவும், இதன் துணிக்கைகள் ஐரோப்பாக் கண்டத்தின் வான் பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்லாந்து நாட்டு அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர்.

ஜப்பான் அணு உலைகளினால் எதுவித கதிர்வீச்சு கசிவு அபாயமும் தமது நாட்டுக்கு வராதென பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேற்படி தகவலானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, ஜப்பானின் புகுஷிமா, இபராகி, டொச்சிஜி, கன்மா பிரதேச மாகாணங்களில் இருந்து பால் மற்றும் சில உணவுப்பொருட்களைத் தமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

இவை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. _

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு செய்திகள் இணைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் சுவியின் தாழ்மையான வணக்கங்கள்! :D

  • தொடங்கியவர்

ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் உள்ள வீடுகளின் குழாய் நீரில் கதிரியல் தாக்கம் உள்ளதாகவும் சிறுவர்கள் இது விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. மேலும் பதினோரு விதமான காய்கறிகளில் ஜப்பானின் அங்கீகரிக்கப்பட்ட கதிரியல் அளவைவிட கூடுதலாக தாக்கம் உள்ளதகாவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க உட்பட பல நாடுகள் பாதிக்கபட்ட இடத்திலிருந்து பால் வகைகளை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளன.

3ஆம் ரியாக்டரில் தொடரும் அணுக்கசிவை அடுத்து அந்த ஆலையில் வேலை செய்யும் சகலரும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tokyo Issues Tap Water Warning for Infants

TOKYO — Radioactive iodine detected in the capital’s water supply spurred a warning for infants on Wednesday as the government issued a stark new estimate about the costs of rebuilding from the earthquake and tsunami that slammed into the northeast of the country this month.

http://www.nytimes.com/2011/03/24/world/asia/24japan.html

N-plant workers flee amid smoke

Workers at a leaking nuclear complex in Japan have been evacuated from the site after black smoke was seen rising from above its crippled Unit 3. Officials at Tokyo Electric Power, which runs the plant, said workers from the entire Fukushima Dai-ichi plant have been temporarily evacuated.

http://www.surreyherald.co.uk/surrey-news/world-uk-news/2011/03/23/n-plant-workers-flee-amid-smoke-86289-28387459/

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனை நோக்கிச் செல்லும் ஜப்பானின் அணு உலை கதிர்வீச்சு! _

அடப்பாவிகளா.. லண்டனுக்குப் போற நேரமாப் பார்த்து பீதியைக் கிளப்புறாங்களே..! :(

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. லண்டனுக்குப் போற நேரமாப் பார்த்து பீதியைக் கிளப்புறாங்களே..! :(

ஏதோ நம்மால முடிந்தது.... :lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.