Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் தேர்தலும், தமிழ் மக்களின் பங்களிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் தேர்தலும், தமிழ் மக்களின் பங்களிப்பும்

கனடாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களையும் கணக்கிலெடுக்காது கொண்டு செல்லமுடியாது. ஆனாலும் தமிழர்கள்மீது அவதூறு விளைவித்து தமிழர்களைப்புறந்தள்ளுவது என்பதும் நடைமுறைச்சாத்தியமாக இருக்கமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் இடையில் தமிழர் வாக்குகள் என்பது கணிசமாக கணிக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது.

தமிழர்கள் தங்கள் வாக்குப்பலம் பெறவேண்டுமாயின், எமது இனம் பலமுள்ள இனம் என்று சுட்டிக்காட்டப்படவேண்டுமாயின் உலகத்திலேயே விவேகமும், பலமும் மிக்க ஈழத்தமிழினம் தங்கள் பலத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கும்போது அதற்குரிய வெகுமானம் சொல்ல முடியாத தொன்றாக இருக்கும். அந்த விவேகமும் பலமும் தேர்தலில் ஒரு பலத்த தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதற்குத்தானாக ஒரு மதிப்பு இயல்பாகவே உருவாகும். உருவாக்கும் மதிப்பைவிட இயல்பாக உருவாகும் மதிப்பை யாராலும் அழித்துவிடமுடியாது.

சிதறிக்கிடக்கும் பட்டமரக்கொப்புகளை உடைத்துவிடலாம். அவைகள் ஒன்று சேர்ந்தால் உடைக்கமுடியாது என்பது யதார்த்தம்.

தமிழனுடைய பலவீனம் சிதறிக்கிடப்பதுதான். அதையும் எதிராளி நன்றாகப்புரிந்து வைத்துள்ளான். 'ஒன'றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு." தமிழனை ஒன்று சேரவிடக்கூடாது என்பதில் மற்றவர்கள் உறுதியாக உள்ளார்கள். அவர்களுக்குள் பகைமை, பிரிவினை ப+சல்கள் இருந்தாலும் இந்த விடயத்தில் ஒன்றாக ஒத்துழைக்கின்றார்கள்.

ஆனால் தமிழனோ பிரிந்து நிற்பதிலும், தன்னினத்தை பிரிப்பதிலும் பகைமை பாராட்டுவதிலும் தான் முன்னிணியில் திகழ்வதால், அவர்களுக்கு தமிழனைக்கட்டியாள்வதற்கான வழியை தமிழனே சுலபமாக்கிக் கொடுக்கின்றான் என்பது இதில் சொல்லவும்மனம் கூசுகின்றது.

தமிழர்கள் தேர்தலில் ஆவது பகைமையை மறந்து ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் தமிழரின் வாக்குகள் தமிழர் பொது அபிலாசைகளை நிறைவேற்றித்தருவோம் என்ற ஒரு உறுதி வழங்கும் கட்சிக்குத்தான் அளிக்கப்படும் என்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டு அதற்குச்சரியான பதிலளிக்கும் கட்சிக்கு ஒட்டு மொத்த வாக்குகளும் அளிக்கப்படும் என்று அறிவித்தால் அதனால் ஒரு வெளிப்படையான மாற்றத்தை வெளிக்கொணரமுடியும். அப்பொழுது தமிழன் மீதான கௌரவமான நடைமுறை இயல்பாகவே உருவாகும்.

இது மரப்கொப்புகள் ஒன்றுசேர்ந்த கதைக்கு ஒப்பானது.

அவர்கள் எங்களைப்பிரித்து ஆள்வதற்கு நாங்களே துணைபோவதால் அவர்களின் நடைமுறையைத்தமிழர்களே எளிதாக்கிக்கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு தமிழனும் தங்கள் சுயநலத்திற்காக இனத்தை விற்கும் இழிவான காரியத்தில் இறங்காதீர்கள்.

கனடாவின் கடந்த காலத்தேர்தல்களை எடுத்துப்பார்த்தால் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அநேகமான வெள்ளை இனத்தவர்களுக்குத் தேர்தலைப்பற்றிய அக்கறை இல்லாதததால் வாக்களிக்கதில்லை. மற்றைய நாட்டவர்கள் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அதிகம் அக்கறையில்லை.

ஈழத்தமிழன் ஒருவன் தான் கனடாவை தனது புகலிடமாக ஏற்றுக்கொண்டாலும் வருங்காலம் எங்கள் ப+மி என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களில் கணிப்பிடக்கூடிய ஒரு இனமும் அல்லாது மொத்த வாக்காளர் தொகையில் அதிக வீதத்தில் வாக்களிக்கும் மக்களாகவும் இருக்கின்றனர்.

எனவே தமிழர்களை தேர்தலில் புறம் தள்ளிவிடமுடியாது. ஆனால் தமிழர்களின் வாக்கை வலுவற்றதாகச் சிதைக்கமுடியும். அது தான் இந்தத் தேர்தலில் நடக்கின்றது. தமிழன் கேட்கின்றான் என்ற ரீதியில் வாக்குப்போடும் மக்களும் இருக்கின்றனர். சுயநலதேவைகளைப்ப+ர்த்திசெய்வதற்காக பத்திரிகைகளில் அந்த எம்.பிக்கு வாக்களியுங்கள் என்று வியம்பரத்தின் மேல் விளம்பரம் செய்யும் மேதாவிகளும் தமிழினத்தில் தங்கள் நலனுக்காக இனத்தை அடைவு வைக்கும் ஈனப்பிறவிகளும் இருக்கின்றனர்.

அவர்கள் எங்களைப் படித்து அறிந்து எங்களுக்குள் சூழ்ச்சியை உருவாக்கி எங்களை ஆயுதம் இன்றி அழிக்கும் வித்தையை நன்றாகக்கற்றுக்கொண்டுள்ளார்கள். நாங்கள் அவர்களைக் கற்றோமா? அவ்hகள் சூழ்ச்சியை முறியடிக்க என்னத்தை செய்கின்றோம்?

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழன் படுகொலை செய்யப்பட்டபோது உலகளாவிய ரீதியில் போராட்டம் நடத்தினோம். என் டீ பீ யைத்தவிர யாராவது வந்து குரல் கொடுத்தார்களா? மறந்துவிட்டீர்கள் போலும்.

நன்றி மறப்பது நன்றன்று. அது தமிழன் பண்பாடும் அல்ல.

இன்று நாங்கள் தமிழர்கள் மீது அக்கறைகொண்டுள்ளோம் என்று சில தேர்தல் விளம்பரங்களும் பறை சாற்றுகின்றன. இந்த அக்கறை அன்று எங்கே போனது. பனிப்பொழிவிலும் கூட நின்று கூக்குரலிட்ட மக்களுக்கு ஆறுதல் வார்ததை சொல்லக்சூட வரவில்லையே. அதெப்படி வந்தது அக்கறை இப்போது. காப்பாற்று காப்பாற்று என்றபோது வராதகுரல்கள். இப்போது என்ன அக்கறை?

தமிழருக்கு லிபரல் தான் என்ன செய்தது? யாராவது சொல்வார்களா? வெறும் வார்த்தை யாலம் தான். யாரும் ஒரு தமிழரக்காவது தேர்தலில் இடம் கொடுத்தார்களா? இதுவம் இல்லை. எப்படி இவர்கள் தமிழர்கள் மீதான அக்கறை.

தமிழர்க தங்கள் இருப்பைத் தாங்களே தீர்மானிக்க வேண்டுமானால் ஒரு அணியாகத்திரண்டு ஈழத்தமிழனின் வாக்குகள் எமது கோரிககைகளை நிறைவேற்றும் அணியினருக்கே என்று வாக்களிக்வேண்டும்.

தமிழனின் ஒற்றுமையே தமிழனுக்குப்பலம் சேர்க்கும்.

போராட்டகாலங்களில் எம்மையும் ஒரு மனித இனமாக மதித்து குரல் கொடுத்த என். டீ. பி. க்கு ஒட்டு மொத்த வாக்களையும் அளித்து தமிழன் நன்றி மறவாதவன் என்று தமிழனின் நன்றி உணர்வையாவது வெளிப்படுத்துங்கள்.

தமிழனின் பலமான எதிர்காலம் தமிழனின் ஒற்றுமையான செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது. பலமான அத்திவாரம் இல்லையேல் எங்கள் இருப்பு என்றும் கேள்விக்குறிதான்.

கனடாவில் பத்தொன்பது கட்சிகள் தேசியளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நான்கு கட்சிகள் ( இதில் ஒன்று பிரஞ்சு மாநிலனமான க்யூபெக் பிரிய வேண்டும் என வேண்டுபவர்கள்) மட்டுமே பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தப்படுள்ளன.

மே 2 ஆம் திகதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவர் இந்த தேர்தலில் எப்படியாவது ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க விரும்புகின்றார். எதிர்க்கட்சிகளான, இரண்டாம் இடத்தில் உள்ள லிபரல் கட்சியும் மூன்றாம் இடத்தில் உள்ள என்.டி.பி.யும் தமக்குள் பழமைவாத கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் பொழுது அது அந்தக்கட்சிக்கு சாதகமாக அமைகின்றது.

தமிழர்கள் கனேடிய அரசியலில் அவர்கள் அளவை கொண்டுள்ள சீக்கிய சமுதாயத்தை ஒரு முன்னோடியாக பார்க்கலாம். அவர்களின் பிரதிநிகள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர், அதேவேளை வெற்றிகரமாக தமது இன மக்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்.

தமிழர் தரப்பில் என்.டி.பி சார்பாக போட்டியிடும் இராதிகா சிற்சபேசனை நாம் அந்த கட்சி சார்பில் வெல்லவைக்க வேண்டும். அதற்கு தேவையெனில் நாம் அந்த தொகுதியில் உள்ள வேற்று இன மக்களுடன் சேர்ந்து அவர்களின் பிரதிநிதி ஒருவரை இன்னொரு தொகுதியில் வெல்ல தமிழர் உதவலாம். அதே மாதிரி, பழமைவாத கட்சியில் போட்டியிடும் தமிழர்களை வெல்ல வைக்க வேண்டும். நிச்சயமாக எமது தாயக விடுதலைக்கு, தமிழர்களின் நியாமான சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தரும் தனிப்படவர்களை எல்லாக்கட்சிகளிலும் நாம் ஆதரிக்கவேண்டும்.

இதன் மூலம் மீது இந்த மற்றும் அடுத்த சந்ததிகளுக்கு கனேடிய அரசியலில் ஆர்வம் உருவாகும். அந்த அரசியல் வெற்றி எம்மை ஒரு பொருளாதார பலமாக மாற்ற உதவும். அது மேலும் கூடிய அரசியல் வெற்றியை தரும். அதன் மூலம் தாயகத்திற்கு தார்மீக பலம் ஆதரவு கிடைக்கலாம்.

Edited by akootha

கனடா அரசியல் தலைமைகளிடம் ஏதாவது கேட்கவேண்டுமாயின் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்,ஆனால் உங்கள் பெயர் சரியான விலாசம் தொலைபேசி இலக்கங்கள் ஆகியவை வழங்கினால் தான் உங்கள் கேள்விகளுக்கு விடைகிடைக்கும்

pov@cbc.ca

உ+ம்

common question for all party leaders:

To hide the economic crisis, the harper government imports many stuff from china including whole poultry. This will affect farmers in Canada who try to sell their own poultry.

Same thing goes on with milk. In the US 4 litres of homo milk is $1.80 but in Canada its $5.49. So how much money would the farmers earn? But all this money goes toward taxes.

Therefore the government should control this.

Mr. Stephen Harper made a speech in a Tim Horton at Oakville once. The employees worked like beyblades there . All Tim Horton’s have these type of employees but they never get paid well. In the province of Quebec its different because they have a civil law.

I am hoping all party leaders find a solution to solve all these problems especially in Ontario since most problems occur here.

When employees get a raise, it isn’t very beneficial since the government takes the money in the name of taxes.

Please solve this problem too. Credit cards charge between 20-28% annual interest which affects many Canadian citizens.

Police need to get more power about gang violation and financial fraud (credit card)

Auto insurance liability control by provincial government(insurance fraud right the way control by provincial government)

Prime Minister Stephen Harper, I have one simple question. You took a quick decision towards the problem in Libya. Why didn’t you do that towards the problem in Sri Lanka? WE protested in front of the parliament and in Ottawa because we knew that many Tamil citizens in Sri Lanka would die in one day (around 75000). All you did was support the Sri Lankan government because they had power and money. The International Society wanted to inquire about the war crime in Sri Lanka and the Canadian government didn’t support that either. Because you didn’t help save the Tamil people in sri lanka, there was a big boat filled with Tamil refugees landing in the docks of Canada. You used this to your own benefit to get more votes for the election. Don’t you feel ashamed because you are literally begging to get votes.

Don’t use military forces for politics. That happens everywhere in the world now but the forces are made of people who have lives and children

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் பெருமளவு வாக்குகள் இருக்கின்றது என்பதை உணர்த்துமளவுக்கு தமிழர்களால் நடந்துகொள்ள முடியவில்லை. எல்லாக் கட்சியிலும் கால்பதிக்கவேண்டும் என்று கருதுவதால் எந்த ஒரு கட்சியும் தமிழர்களை கணக்கில் எடுப்பதில் இருந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கின்றது. தமிழர்களின் தேர்வு ஒரு கட்சியாக இருந்தால் அடுத்துவரும் தேர்தல்களில் ஏனைய கட்சிகள் தமிழர்களை நிச்சயம் கணக்கில் எடுக்கும். ஒரு தேர்தலிலாவது எம்மிடம் இவ்வளவு பெரும்பான்மை வாக்குகள் இருக்கின்றது என்பதை தமிழர்களால் உணர்த்த முடிந்ததில்லை. எமக்குள் இருக்கும் போட்டிகளும் ஒற்றுமையின்மை போன்ற பலவீனங்களை கருத்தில் கொண்டாவது ஒரு கட்சியை நோக்கி தமிழர்களை வழிநடத்தி பின்னர் எல்லாக்கட்சிகளிலும் கால்பதிப்பதையிட்டு நகரலாம். தமிழர்களை வழிநடத்துபவர்களின் சிந்தனைகள் எப்போதும் பெருமெடுப்பாகவே உள்ளது. தமது பலவீனங்களையே அலட்சியம் செய்து கனவுலகில் மிதப்பதாக உள்ளது. இதனாலேயே இந்தத் தேர்தலில் தமிழர்களை பலிக்கடவாக்கி ஓட்டுச் கேட்கின்றது பழமைவாதக்கட்சி. தமிழர்களது வாக்கு ஒருமுகப்பட்டால் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காத கட்சிகள் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழர்கள் நலன்சார்ந்து பேசும். ஆகக் குறைந்தது தமிழர்களை அலட்சியம் செய்வதையாவது நிறுத்தும். தமிழர்களை வழிநடத்துபவர்கள் தமிழர்களது பலத்தையும் பலவீனத்தையும் கருத்தில் கொண்டு பெரிதாக வெட்டிப்புடுங்குவதை விடுத்து எளிமையான செயற்பாடுகளை நோக்கி வழிநடத்துங்கள்.

நல்ல கருத்து சுகன்

கடந்த காலங்களில் இங்குள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று இங்குள்ள எல்லாக்கட்சிகளுக்கும் தெரியும். தமிழர்களுக்கு வழிகாட்டிகளாகக் கருதப்பட்டவர்களின் குத்துக்கரணங்களை இங்குள்ள அனைத்துக்கட்சிகளும் அறிந்தே வைத்திருக்கின்றன. இங்கு தமிழரின் வாக்குகள் பெரும் தாக்கத்தைக் கொடுக்காமல் போனதற்கும் அதுவே காரணம். அத்தோடு இனிவரும் காலம் இந்த வாக்களிப்பு விகிதத்தை பாரிய அளவில் உணர்த்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதா என்று பார்த்தால் அடுத்தடுத்து தமிழ்மக்களுக்குள் இடம்பெற்ற வாக்களிப்பினால் பல மக்கள் வெறுப்புற்றுப் போய் இருக்கிறார்கள். நான் பேசுபவர்களெல்லாம் இவ்வாக்களிப்பு நிகழ்ச்சியை அலட்சியமாகக் கருதுகிறார்கள் இது கனெடிய அரசாங்கத்திற்கு உரியது என்பதையும் ஆர்வமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் எம்மவர் பலர் இல்லை. இதற்கான மாற்றத்தை உருவாக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பழமைவாதக் கட்சி அகதிகளாக வந்த தமிழர்களைக் "கிரிமினல்"கள் என்று தமது கட்சி விளம்பரத்தில் போட்டிருந்ததாமே. அக் கட்சிக்கு வேலைசெய்யும் தமிழர்களும் இருக்கின்றார்களா?

valvaizagara

Posted 31 March 2011 - 06:54 AM

View Postsukan, on 31 March 2011 - 12:18 AM, said:

அரசியல்வாதிகள் போட்டியிடுபவர் யார் என்பதைப்பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை

வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்தபின் எந்தச்சந்தர்ப்பத்தையும் நான் தவறவிட்டதில்லை

அத்துடன் எனது உறவுகள் நண்பர்களையும் ஊக்குவித்து வாக்களிக்கவைத்துள்ளேன்

ஒரு வாக்குக்கூட பெரிய மாற்றத்தை தரக்கூடும்

பழமைவாதக் கட்சி அகதிகளாக வந்த தமிழர்களைக் "கிரிமினல்"கள் என்று தமது கட்சி விளம்பரத்தில் போட்டிருந்ததாமே. அக் கட்சிக்கு வேலைசெய்யும் தமிழர்களும் இருக்கின்றார்களா?

அந்தக்கட்சியின் சார்பாக தமிழர் ஒருவர் போட்டியுமிடுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் தமிழர்கள் லிபரல் கட்சிக்கு தான் வாக்களித்தார்கள்.தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிப்பார்கள் என கருதியோ என்னவோ அவர்களும் தமிழர் பிரச்சனையில் ஏனோ தானோ என இருந்தார்கள். கடந்த தேர்த்தல் தொடக்கம் மக்கள் பல கட்சிகளுக்கும் வாக்களிக்க தொடங்கினார்கள்.இதில் என்.டி.பி குறிப்பிடத்தக்க தமிழர்களின் வாக்குகளை பெற்று வருகின்றது.

தனது தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு எதிராக எதிராக செயற்படும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்காமல் ஏனைய கட்சிகளுக்கு வாக்குறுதிகளின் அடிப்படையில் தங்களது வாக்குகளை தமிழர்கள் வழங்கலாம்.தமிழர்கள் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல்,என்.டி.பியின் பலம் அதிகம் என்பதாலும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரியும் மாகாணமாக இருப்பதாலும் எமது பலத்தை எமது வாக்குகள் மூலம் நிரூபிக்கலாம்.

எக்கட்சி என்றாலும் தமிழர்கள் போட்டி இட்டால் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் உள்ளனர்.இம்முறை பழமைவாத கட்சியை புறக்கணித்து எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

கடந்த காலங்களை விட தமிழர்களின் வாக்களிக்கும் வீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.என்றாலும் முழு தமிழர்களும் தமது வாக்குப் பலத்தை காட்டும் போது அது பெரும் சக்தியாக உருவெடுக்கும்.

ஒரு தமிழரல்ல இரு தமிழர்கள் போட்டியுடுகின்றார்கள்.நேற்று நான் அதில் ஒருவரை சொப்பிங் செய்யும் போதுகண்டேன்,அவர் தானும் தன்பாடும். ஒரு வேட்பாளர் போல் நாலு பேரைபார்த்து சிரிப்பதாக இல்லை .சிலவேளை தனது தொகுதியில்லை தானே என நினைத்தாரோ தெரியாது.

கடந்த காலங்களில் தமிழர்கள் லிபரல் கட்சிக்கு தான் வாக்களித்தார்கள்.தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிப்பார்கள் என கருதியோ என்னவோ அவர்களும் தமிழர் பிரச்சனையில் ஏனோ தானோ என இருந்தார்கள். கடந்த தேர்த்தல் தொடக்கம் மக்கள் பல கட்சிகளுக்கும் வாக்களிக்க தொடங்கினார்கள்.இதில் என்.டி.பி குறிப்பிடத்தக்க தமிழர்களின் வாக்குகளை பெற்று வருகின்றது.

தனது தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு எதிராக எதிராக செயற்படும் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்காமல் ஏனைய கட்சிகளுக்கு வாக்குறுதிகளின் அடிப்படையில் தங்களது வாக்குகளை தமிழர்கள் வழங்கலாம்.தமிழர்கள் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல்,என்.டி.பியின் பலம் அதிகம் என்பதாலும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரியும் மாகாணமாக இருப்பதாலும் எமது பலத்தை எமது வாக்குகள் மூலம் நிரூபிக்கலாம்.

எக்கட்சி என்றாலும் தமிழர்கள் போட்டி இட்டால் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் உள்ளனர்.இம்முறை பழமைவாத கட்சியை புறக்கணித்து எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

கடந்த காலங்களை விட தமிழர்களின் வாக்களிக்கும் வீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.என்றாலும் முழு தமிழர்களும் தமது வாக்குப் பலத்தை காட்டும் போது அது பெரும் சக்தியாக உருவெடுக்கும்.

- எல்லா கனேடிய தமிழர்களும் வாக்களிக்க வேண்டும். அரசியலில் கூடுதலகா இளையோரை இணைக்கவேண்டும்

- தமிழர்கள் பழமைவாதக்கட்சிக்கு எதிரானவர்கள் என்ற அபிப்பிராயத்தை வெளிப்படையாக வழங்ககூடாது

- பழமைவாதக்கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்கலாம்

- தமிழர்கள் எல்லா கட்சிகளிலும் இணைந்து அங்கத்துவர்களாக இருத்தல் வேண்டும்

- ஆனால் வாக்களிப்பு நிலையத்தில் தமிழர்கள் - தமிழ் வேட்பாளர்களுக்கு கட்சி மாறியும் வாக்களிக்கலாம்

- நாமும் அரசியலில் சாதுரியமாக நகரவேண்டிய தேவை உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.