Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும். -முன்னாள் யாழ். இராணுவ தளபதி

[saturday, 2011-04-02 04:59:43]

பிரிகேடியர் எச்.எவ்.ரூபசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆளணி நிர்வாகப் பணிப்பாளர், இராணுவ செயலர், சட்டப்பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத் தலைமையகப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர்.

யாழ்ப்பாணம் மற்றும மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பதிகாரியாகவும், கூட்டுப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் ஆலோசகராகவும், இந்திய அமைதிகாக்கும் படைக்கான இணைப்பதிகாரியாகவும் இருந்தவர்.

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் சிறிலங்காவில் இந்தியாவின் தலையீடு குறித்தும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்தும் விரிவான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"1958ல் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட எனது இராணுவ வாழ்வின் பெரும்பகுதி மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் இராணுவத் தலைமையகத்திலும் தான் கழிந்தது.

1986 ஜுனில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற விண்ணப்பித்தேன்.

அப்போது யாழ்ப்பாணத்துக்கான படைத் தளபதியாக இருந்த நான் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

�சம்பளத்துடன் ஓய்வூதியம்� என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணியாற்றினேன்.

இந்த திட்டம் 1994 ஓகஸ்ட் மாதம் சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த பின்னர் இல்லாமல் செய்யப்பட்டது. அதையடுத்து இராணுவ சேவையில் இருந்த ஓய்வுபெற்றேன்.

1987 - 1990ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகளின் புலனாய்வு தலைமை அதிகாரியாக இருந்த கேணல் ஹரிகரன், வெளியிடும் கருத்துகளில் இருந்து, சிறிலங்கா படைகள் புலிகளின் மரபுவழிப் போரிடும் பலத்தை அழித்ததையிட்டும், அவர்களின் தலைமையை அழித்ததையிட்டும் அதிர்ச்சியடைந்துள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி சிறிலங்காவில் குழப்ப நிலையை ஏற்படுத்திய புதுடெல்லி, இந்தியாவிடம் இராணுவத் தலையீட்டைக் கோரும் நிலைக்கு கொழும்பைக் கொண்டு வர முயன்றது.

ஆனால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ஜே.ஆர்.முடிவு செய்ததால், அவரது கழுத்தைப் பிடித்து பணிய வைப்பதை விட புதுடெல்லிக்கு வேறு வழி இருக்கவில்லை.

சிறிலங்காவில் நிலையற்ற சூழலை உருவாக்கும் முடிவை தனியொரு நபர் எடுக்கவில்லை. இராணுவ, அரசியல் தரப்புகளைச் சேர்ந்த ஒரு குழுவே எடுத்தது.

விடுதலைப் புலிகளின் மரபுவழிப் போரிடும் பலம் கடந்த 2009 மே மாதம் அழிக்கப்பட்டு விட்டபோதும், அவர்களின் முக்கியமான கருவியாக ஊடகங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.

சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் எஞ்சியுள்ள உறுப்பினர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் போர்முனையில் ஏற்பட்ட இழப்பை ஊடகங்கள் மூலம் ஈடுசெய்வதற்கு மூழுமூச்சுடன் செயற்படுகின்றனர்.

போர்முனையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நந்திக்கடலில் பிரபாகரனின் மரணத்துடன் முடிந்து விட்டது.

ஆனால் அவரது ஈழம் திட்டத்தை இன்னமும் ஊடக முனையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் புலனாய்வுச் சேவைகளும் நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்க முனையும் உள்நாட்டு,வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் மற்றும் சில தனிப்பட்ட நபர்களின் பரப்புரைகளை முறியடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்காவை வலிமை இழக்கச் செய்யும் நோக்கிலேயே இந்தியா தனது படைகளில் ஒரு பகுதியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்தது.

இதன்மூலம் புதுடெல்லிக்கு விசுவாசமான நிர்வாகம் ஒன்றை புலிகள் உருவாக்குவதற்கு வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.

1978 ஒக்ரோபரில் சிறிலங்கா கடற்படையினால் புலிகளின் குழுவொன்று கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்திய இராணுவத்தின் மீது புலிகள் போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களால் ஈழத்தை அடைந்திருக்க முடியும்.

பிரபாகரனின் பாதை மாறியதால் இந்தியாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் வரதராஜப்பெருமாளை பயன்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை.

இந்தியப்படையினர் மிகவும் மோசமான நிலையில் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்தியா புலிகளுடன் இரகசியமான முறையில் பேச்சுக்களுக்கும் போனது.

விடுதலைப் புலிகள் போரிடும் பலத்தை இழந்துள்ள நிலையிலும் புலம்பெயர் தமிழர் சமூகம் தனி ஈழம் என்ற தமது இலக்கை இலகுவாக விட்டுக் கொடுக்காது.

ஆரம்பத்தில் இந்தியாவும், புலம்பெயர் தமிழ் சமூகமும் தான் ஈழம் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றன.

இந்தியாவின் உதவி இல்லாமல், புலிகள் மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகளால் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பரப்புரைகளை மேற்கொண்டிருக்க முடியாது.

இந்தியப்படைகள், புலிகள் போருக்குப் பின்னர் [1987 ஒக்ரோபர்- 1990 மார்ச்] புலிகளும், புலம்பெயர் சமூகமும் தாமாகவே, சட்டவிரோத நாடுகடந்த செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

இப்போது புலிகளின் இராணுவ இயந்திரம் இல்லாமல் போய்விட்டது.

இந்தநிலையில் மேற்குலக அதிகார மையங்கள், அனைத்துலக உதவி நிறுவனங்களின் ஒரு பகுதி, ஊடகங்கள் ஆகியவற்றின் மீது தங்கியிருந்து புலம்பெயர் சமூகம் தமது பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

சிறிலங்காவை இலக்கு வைத்து ஊடகங்கள் திடீர் தாக்குதல்களை நடத்துவது அவர்களின் இந்த தந்திரோபாயத்துக்கான சாட்சியாக உள்ளது.

புலிகளின் மரபுவழியில் போரிடும் ஆற்றலை ஈடுசெய்வதற்கு ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

1980ல் புலம்பெயர் சமூகமும் அப்போது சென்னையை தளமாக கொண்டு இயங்கிய புலிகளின் ஆலோசனைக்குழுவும் ஈழத்தை அடைவதற்காக பலமுனைகளிலும் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இந்தப் போரில் வெற்றி பெற்ற சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதப்படைகள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் இருந்து நிதி வளம்மிக்க உதவி நிறுவனங்களை நடத்தும் சிலர், குறிப்பாக கேணல் ஹரிகரன் [ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி] போன்றவர்கள் சிறிலங்காவை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பனிப்போரின் பின்புலத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா தன்வசப்படுத்தி விடுமோ என்று இந்திய அச்சமடைந்திருந்தது.

அது ஒரு வித்தியாசமான காலகட்டம்.

இந்தநிலையில் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா விவகாரத்தில் தலையிடுவதற்கு தமிழரின் ஆயுதப்போராட்டத்தை தனது வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்டது இந்தியா.

தமக்கு வசதியான சூழலை ஏற்படுத்திக் கொள்வதற்காக இந்தியா சிறிலங்காவில் உள்ள தீவிரவாதக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு உதவியது.

அவர்களுக்கு வடக்கு,கிழக்கு மாகாணங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவுவதன் மூலம், திருகோணமலைத் துறைமுகத்தை தனது கைக்குள் கொண்டு வர முடியும் என்று இந்தியா கருதியது.

காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா ஒரு வேட்டுக் கூட தீர்க்காமல் கட்டப்படுத்தக் கூடியதாக இருந்தாலும், திருகோணமலைத் துறைமுகமே அதன் சக்தி வாய்ந்ததும், முக்கியமானதுமான இலக்காக இருந்தது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு என்ற சாக்கில் தனது இராணுவத்தை சிறிலங்காவில் வைத்திருக்கின்ற எண்ணம் இந்தியாவுக்கு அடிமட்டத்தில் இருந்தது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கும் வரை தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கவே இந்தியா திட்டமிட்டது.

புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்து போன பின்னர், இந்தியா ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழ்க்குழுக்களை வெளியே கொண்டு வந்தது.

வட-கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவதற்கு ஈபிஆர்எவ்எவ்விற்கு வசதிகளைச் செய்து கொடுத்த இந்தியா, இந்தியப் படையிரை வெளியுறுமாறு சிறிலங்கா அதிபர் பிறேமதாச கோரிய பின்னர் தமிழ்த் தேசிய இராணுவத்துக்கும் பயிற்சி அளித்தது.

இந்தியப்படையினருக்கான இணைப்பதிகாரியாக நான் பணியாற்றியுள்ளேன்.

விடுதலைப் புலிகளும் இந்தியப்படையினரும் இணைந்து செயற்பட்டனர். இதுபற்றி எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நிச்சயமாக இது உண்மை.

இந்தியப்படையினர் சிறிலங்காவில் நிலைகொண்டது முதல் 1987 ஒக்ரோபர் முதல் வாரத்தில் புலிகளின் இழுவைப்படகு ஒன்றை சிறிலங்கா கடற்படை கைப்பற்றும் வரை இந்த உறவுநிலை தொடர்ந்தது.

குமரப்பா, புலேந்திரன் மற்றும் சக உறுப்பினர்களை விடுவிக்க சிறிலங்கா மீது இந்தியா கொடுத்த அழுத்தம் தோல்வியில் முடிந்தது.

இதன்பின்னர் இந்தியப்படையினர் மேற்கொண்ட �ஒப்பரேசன் பவான்� புலிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பியோடும் நிலைக்கு கொண்டுவந்தது.

இந்தியப்படையினருக்கான இணைப்பதிகாரியாக இருந்ததால், பல்வேறு பிரச்சினைக்குரிய பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

புலிகள் தமது தாக்குதல் இலக்கை நிறைவு செய்யும் வரை அந்த இடத்துக்கு செல்வதை இந்தியப்படையினர் தவிர்த்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

பெரும்பாலான தருணங்களில் அவர்களின் தாமதமான வருகை அந்த இடத்தில் புலிகளுக்கான உதவியாகவே அமைந்தது.

திருகோணமலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன.

இந்திய- சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைவாக புலிகளின் ஆயுத ஒப்படைப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அப்போது புலிகள் சில ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

சிறிலங்காவில் இருந்த இந்தியப்படையின் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை பாவிக்க முடியாதவை.

அப்போது கேணல் ஹரிகரன் இந்தியப்படையின் புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்தார்.

அதுபற்றி தமக்கு ஏதும் தெரியாத்து போன்று இந்தியா நடந்து கொண்டது.

முதலையின் வாய்க்குள் கொண்டு செல்வது போன்று சிறிலங்காவில் 1200 இற்கும் அதிகமான இந்தியப்படையினர் சிறிலங்காவில் மரணமாவதற்கு கேணல் ஹரிகரன் காரணமாக இருந்தார்.

சிறிலங்காவுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படி இந்தியா, புலிகளை நிராயுதபாணிகளாக்கியிருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இந்தியத் தலையீடு இரத்தக்களரியை ஏற்படுத்தியிருந்த போதும் கூட, கேணல் ஹரிகரன் புதிய இந்தியத் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

2008 மே மாதம் வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, சிறிலங்காவில் 'புதிய இந்தியத் தலையீட்டுக்கான நேரம் வந்து விட்டது' என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

நான்காவது கட்ட ஈழப்போரில் சிறிலங்காவுக்கு இந்தியா உதவிகளை வழங்கியதும், தொடர்ந்து அது புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமானத் திட்டங்களுக்கு உதவுவதும் ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.

ஆனால் அதேநேரத்தில் கேணல் ஹரிகரன், வன்னி மேற்கில் சிறிலங்காப் படைகள் கடுமையான சண்டையை எதிர்கொண்டிருந்த நிலையில்- புலிகள் வன்னியின் கிழக்கில் வலுவாக நிலை கொண்டிருந்த போது இந்தியத் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரிகேடியர் ரூபசிங்கவின் அளித்த நீண்ட செவ்வியின் தொகுப்பு இது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] தொகுத்து மொழியாக்கம் செய்தவர் கார்வண்ணன்.

செய்தி.கொம்

... எமக்கு சுடலை ஞானம் கூட வர மறுக்குது!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று முக்கியத்துவம் உள்ள நேர்காணல். ஆங்கிலத்தில் எங்கு கிடைக்கும்? அந்த காலக்கட்டதில் நான் யாழில் இருந்தேன். அன்று ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் மட்டும் யதார்த்த நிலமையை உணர்ந்திருந்தார். இதுபற்றி என்னிடமும் அவர் பேசி இருக்கிறார். ஆனாலும் அவரது ஆலோசனைகள் முயற்ச்சிகள் எதுவும் செல்லுபடியாகும் நிலமை இருக்கவில்லை, அந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் மனைவியுடனும் தங்கை குடும்பத்தோடும் வன்னிக்குத் தப்பிச் செல்ல பாலகுமாரன்தான் உதவினார். அந்த பொறுப்பு சுதா மாஸ்ட்டரிடமும் தோழர்கள் கபிலன் மன்னார் சில்வா என்பவர்களிடம் கொடுக்கப் பட்டிருந்தது. முன்று நாள் முனைந்து கோப்பாயை தாண்ட முடியவில்லை. பின்னர் பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் த்லைமையோடு பேசி கோப்பாயில் இருந்த கரும்புலிகள் நிலைகளூடாக எங்களை சாவகச்சேரி கேரதீவு வழியாக வன்னிக்கு அனுப்பி வைத்தார். போராட்டத்தை ஆயுதங்களால் மட்டும் வெறி பெற முடியாது அறிஞர்களதும் இராசதந்தரிகளதும் கலைஞர்களதும் பங்களிப்பும் முக்கியம் என்பதை என்னுடைய ஆருயிர்த் தோழன் பாலகுமாரன் போல யாரும் உணர்ந்திருக்கவில்லை. திருஅவரையும் அவரது செல்வ மகனையும் இராணுவ சிறையில் பார்த்தபோது மனம் உடைந்து அழுதேன். தப்பிச் சென்ற வழியில் அவரது மகள் கைகளில் சூடுபட்டிருக்கிறாள். இந்த பாதகம் நிகழ்த்தியது எதிரியின் துப்பாக்கிகள் அல்ல என்று சொல்லப் படுகிறது. கருத்து வேறுபாடுகளோடும் ஒரு கர்ம யோகியாக போராடத்துக்குள் வாழ்ந்த என் தலை காத்த இனிய தோழனுக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. யுத்தக் குற்றவாளியான அரசின் கொலைக் கரங்களின் நிழலில்தான் அவர் எப்பவும் இருந்தார். இருப்பு உறுதிப் படுத்த முடியாததால் பல தோழர்களுக்கு அஞ்சலிகூட எழுத முடியவில்லை. நாளை அவ்ர் எங்கள் கனவுகளில் இருந்து த்ரும்பிவரவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை

பாலகுமாரன் மாற்றத்தைத் தவிர நிலையானது ஒன்றுமில்லை என உறுதியாக நம்பினார். அவர் நமக்கு அளித்த செல்வம் ஜனநாயக வழிமுறைகளும் பிழைகளை ஏற்றுக் கொண்டு திருத்துவதும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் காலத்தின் இயங்கியலோடு வளர்ந்து செல்வதும் என்கிற அணுகுமுறையும்தான். இதுதான் அவரது அரசியல். எதிரி தரப்பில் இருந்து .முன்னாள் இராணுவத் தளபதி கொடுத்திருக்கிற இந்தப் பேட்டியையும் நாம் நாம் திறந்த மனதுடன் ஆராய வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் உள்ள நேர்காணல். ஆங்கிலத்தில் எங்கு கிடைக்கும்?

இது கிட்டத்தட்ட 1 மாதத்துக்கு முன்னர் வெளியான பேட்டி. மூலம், தி ஐலன்ட் பத்திரிகையில் வெளியானது. மார்ச் 10ம் திகதிய தி.ஐலன்ட் பத்திரிகையில் ஒரிஜினல் இருக்கிறது. போய்ப் பாருங்கள். பேட்டி கண்டவர் ஷமின்ட்ர பெர்னினான்டோ. பேட்டியின் ஒரு பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தற்போது சுடச்சுட வேகமாக வெளியாகியிருக்கிறது.

தமிழர்கள் மஹிந்த சொன்னதை கேட்டிருந்தால்.... இந்தியா சொன்னதை கேட்டிருந்தால் இரு நாட்டு அரசும் சேர்ந்து தமிழீழத்தை பெற்றுகொடுத்திருப்பார்கள். பிரபாகரனுடன் சேர்ந்து போராடியது முதலாவது அவர்கள் செய்த தவறு.. சரி அதுதான் முடிந்து வொட்டது என்றால் பின்னர் புலம்பெயர்ந்த மக்கள் சொன்னதைக்கேட்டு ஜனனாயக வழியில் போராடியது அவர்களின் இரண்டாவது தவறு.

எல்லாவற்றையும் விட்டிட்டு மஹிந்த சொன்னதை கேட்டு அவரை நம்பியிருந்தால் தமிழர்க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார் முன் நாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்‌ஷ.

( இந்த செய்தி 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 அம் திகதி வெளியான ஐலண்ட் பத்திரிகையில் வெளியானது மொழிபெயர்ப்பு செய்து .......... இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

மீண்டும் மீண்டும் பிரபாகரனையும் புலிகளையும் அவர்களது நடவடிக்கைகளையும் விமர்ச்சிக்கின்றோம் எனவும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் கூறுவதன் மூலம்...

இந்தியாவில் ஏன் இலங்கையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நச்சு விதைகள் தூவப்படுகின்றன. அதனை அப்படியே மொழி பெயர்த்து நாங்களும் தமிழர்க்கு விழிப்புணர்வு என்ற பெயரில் பிரசுரிப்போம்.

வரலாற்று முக்கியத்துவம் உள்ள நேர்காணல். ஆங்கிலத்தில் எங்கு கிடைக்கும்? அந்த காலக்கட்டதில் நான் யாழில் இருந்தேன். அன்று ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் மட்டும் யதார்த்த நிலமையை உணர்ந்திருந்தார். இதுபற்றி என்னிடமும் அவர் பேசி இருக்கிறார். ஆனாலும் அவரது ஆலோசனைகள் முயற்ச்சிகள் எதுவும் செல்லுபடியாகும் நிலமை இருக்கவில்லை, அந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் மனைவியுடனும் தங்கை குடும்பத்தோடும் வன்னிக்குத் தப்பிச் செல்ல பாலகுமாரன்தான் உதவினார். அந்த பொறுப்பு சுதா மாஸ்ட்டரிடமும் தோழர்கள் கபிலன் மன்னார் சில்வா என்பவர்களிடம் கொடுக்கப் பட்டிருந்தது. முன்று நாள் முனைந்து கோப்பாயை தாண்ட முடியவில்லை. பின்னர் பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் த்லைமையோடு பேசி கோப்பாயில் இருந்த கரும்புலிகள் நிலைகளூடாக எங்களை சாவகச்சேரி கேரதீவு வழியாக வன்னிக்கு அனுப்பி வைத்தார். போராட்டத்தை ஆயுதங்களால் மட்டும் வெறி பெற முடியாது அறிஞர்களதும் இராசதந்தரிகளதும் கலைஞர்களதும் பங்களிப்பும் முக்கியம் என்பதை என்னுடைய ஆருயிர்த் தோழன் பாலகுமாரன் போல யாரும் உணர்ந்திருக்கவில்லை. திருஅவரையும் அவரது செல்வ மகனையும் இராணுவ சிறையில் பார்த்தபோது மனம் உடைந்து அழுதேன். தப்பிச் சென்ற வழியில் அவரது மகள் கைகளில் சூடுபட்டிருக்கிறாள். இந்த பாதகம் நிகழ்த்தியது எதிரியின் துப்பாக்கிகள் அல்ல என்று சொல்லப் படுகிறது. கருத்து வேறுபாடுகளோடும் ஒரு கர்ம யோகியாக போராடத்துக்குள் வாழ்ந்த என் தலை காத்த இனிய தோழனுக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. யுத்தக் குற்றவாளியான அரசின் கொலைக் கரங்களின் நிழலில்தான் அவர் எப்பவும் இருந்தார். இருப்பு உறுதிப் படுத்த முடியாததால் பல தோழர்களுக்கு அஞ்சலிகூட எழுத முடியவில்லை. நாளை அவ்ர் எங்கள் கனவுகளில் இருந்து த்ரும்பிவரவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை

பாலகுமாரன் மாற்றத்தைத் தவிர நிலையானது ஒன்றுமில்லை என உறுதியாக நம்பினார். அவர் நமக்கு அளித்த செல்வம் ஜனநாயக வழிமுறைகளும் பிழைகளை ஏற்றுக் கொண்டு திருத்துவதும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் காலத்தின் இயங்கியலோடு வளர்ந்து செல்வதும் என்கிற அணுகுமுறையும்தான். இதுதான் அவரது அரசியல். எதிரி தரப்பில் இருந்து .முன்னாள் இராணுவத் தளபதி கொடுத்திருக்கிற இந்தப் பேட்டியையும் நாம் நாம் திறந்த மனதுடன் ஆராய வேண்டும்.

பொயற்

நான் பாலகுமாரன் அண்ணாவுடன் நல்ல நெருக்கம் அவரது வீட்டில் கிழமைக்கு இரு தடவையாவது செல்வேன் அக்காவிடம் மத்தியான சாப்பாட்டிற்காகவும் அதே நேரம் அவரை அரசியல் வகுப்புக்களுக்கு கூட்டி செல்வதற்காகவும்.. அவர் எப்படியானவர் என்பதும் தலைவரை ஏன் நம்பினார் என்றதற்கும் சரியான காரணங்களை கூறினார்.

குறிப்பாக இந்திய இராணுவ சண்டை, ஜயசிக்குறு காலத்தில் நோர்வே பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்ல தலைவர் மறுப்பு தெரிவித்து இப்போ வரமுடியாது என கூறியது பற்றியும் எமக்கு கூறுவார்.

அவர் எல்லா போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் அரசியல் பாடம் எடுத்துள்ளார். குறிப்பாக எல்லா புதிய போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் வகுப்புக்கள் எடுப்பார்.

உங்களுக்கு நண்பராக இருக்கலாம் .. நெருங்கிய உறவாக இருக்கலாம்.. ஆனால் எமக்கு அவர் அரசியல் ஆசான்.. அந்த மனிதரைப்பற்றி இப்படியான விடயங்களில் தயவு செய்து இழுக்க வேண்டாம்.

அது தான் இப்போது புலிகள் இல்லையே, இருக்கிற நீங்கள் அறிவாழிகள், கலைஞர்கள் இந்தியாவுடன் அல்லது சிறிலங்காவுடன் சேர்ந்து தமீழழத்தைப் பெற்றுத் தரலாமே? என்ன தடை இருக்கிறது? சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிராமல் எதாவது தமிழப் படத்தில போய் நடிக்கலாம்.அரசியல் அற்ற இவர்கள் எல்லாம் கதைக்கிறார்கள்.

புலிகள் இந்தப் போரில் தோற்றிருக்கலாம் ஆனான் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளும் தெளிவும் இன்னும் தோற்கவில்லை, அதனால் போராட்டம் காட்டிக் கொடுக்கப்படவும் இல்லை அது ஓயவும் போவதில்லை.இன்று அது உருமாற்றம் பெற்றிருக்கிறது.

உமை இறந்தவர்கள் ,இல்லாதவர்கள் சொன்னார் என்று கேவலமான அரசியல் செய்யும் இவர்களை அம்பலப்படுத்த மேலும் பாலகுமார் அண்ணை என்ன சொன்னார் என்பது பற்றி எழுதுங்கள்.

இந்தியா எந்த நாட்டை இது வரை கால வரலாற்றிலை வாழ வைச்சு இருக்கு எண்டு இங்கை வந்து இந்தியாவை நம்பி போற்றுகிற அறிஞர் பெருமான்கள் சொன்னால் அறிஞ்சு கொள்ளலாம்... !

பாக்கிஸ்தானோடை சண்டை பிடிச்சு பங்களாதேசை பிரிச்ச இந்தியா அந்த நாட்டை எவ்வளவு சீர் குலச்சு போட்டு திரும்பினது எண்டதை பங்காளிகளிட்டையே கேட்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ...

தமிழர்கள் மஹிந்த சொன்னதை கேட்டிருந்தால்.... இந்தியா சொன்னதை கேட்டிருந்தால் இரு நாட்டு அரசும் சேர்ந்து தமிழீழத்தை பெற்றுகொடுத்திருப்பார்கள். பிரபாகரனுடன் சேர்ந்து போராடியது முதலாவது அவர்கள் செய்த தவறு.. சரி அதுதான் முடிந்து வொட்டது என்றால் பின்னர் புலம்பெயர்ந்த மக்கள் சொன்னதைக்கேட்டு ஜனனாயக வழியில் போராடியது அவர்களின் இரண்டாவது தவறு.

எல்லாவற்றையும் விட்டிட்டு மஹிந்த சொன்னதை கேட்டு அவரை நம்பியிருந்தால் தமிழர்க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும்.

இவ்வாறு கூறியுள்ளார் முன் நாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்‌ஷ.

( இந்த செய்தி 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 அம் திகதி வெளியான ஐலண்ட் பத்திரிகையில் வெளியானது மொழிபெயர்ப்பு செய்து .......... இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

மீண்டும் மீண்டும் பிரபாகரனையும் புலிகளையும் அவர்களது நடவடிக்கைகளையும் விமர்ச்சிக்கின்றோம் எனவும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் கூறுவதன் மூலம்...

இந்தியாவில் ஏன் இலங்கையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நச்சு விதைகள் தூவப்படுகின்றன. அதனை அப்படியே மொழி பெயர்த்து நாங்களும் தமிழர்க்கு விழிப்புணர்வு என்ற பெயரில் பிரசுரிப்போம்.

உமை,

இணையத்தளங்கள் இப்படியான கட்டுரைகளை மொழிபெயர்த்துப் போடுவது அந்தந்த இணையத்தளங்களை நடத்துபவர்களைப் பொறுத்தது. அவர்கள் அதற்கு ஏதாவது அளவுகோல் வைத்திருக்கலாம். அல்லது இல்லாதிருக்கலாம். அது வேறு விஷயம்.

நான் கூறவருவது இவர்கள் மொழிபெயர்ப்பது பழைய கட்டுரைகளை என்பதையே. மொழிபெயர்க்கிறதுதான் மொழிபெயர்க்கிறார்கள்... அதற்காக 1 மாதம் அவகாசம் எடுத்துக் கொள்வதா?

இந்தக் கட்டுரையாவது பரவாயில்லை. 1மாத காலத்தின் பின்னரும் தாக்குப்பிடிக்கக் கூடியது. வேறு சில இணையத் தளங்களில் மொழிபெயர்ப்புச் செய்தி வந்து சேர்வதற்குள் கதையே மாறி வேறு என்னென்னவெல்லாமோ நடந்துவிடுகிறது. குழப்பம்தான் மிஞ்சுகிறது.

முன்பு புதினம் இணையத்தளம் இருந்தவரை இந்த விஷயத்தில் அவர்கள் ராஜாக்கள். எந்தவொரு விஷயமும் 24 மணிநேரத்துக்குள் தமிழில் வந்துவிடும். இனி அப்படியொரு இணையத்தளத்தை யாராவது தொடங்கினால்தான், பழைய கஞ்சிகள் மைக்ரோவேவ்வில் வைத்து பரிமாறப்படும் நிலை மாறும். இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர், மீண்டும் வந்தது மகிழ்ச்சி! ஆனால் மீண்டும் அதே இந்திய ஆதரவுப் புலிகள் விமர்சனத்தோடு வந்திருப்பது நான் உங்களிடம் இறுதியாகக் கேட்ட கேள்வியை அப்படியே விடையின்றி விட்டு வைத்திருக்கிறது. இந்தியா எங்கள் சுய நிர்ணயம் தங்களுக்கு ஆபத்து என்று காலம் காலமாக நம்பி வந்திருக்கிறதே? பிறகேன் நாங்கள் இனி எங்களுக்காக மட்டும் சிந்தித்து வேறு சக்திகளின் துணையுடன் எங்கள் பிழைப்பைப் பார்த்துக் கொள்ளக் கூடாது? இங்கே முக்கியம் இந்திய நலனா? அல்லது ஈழத் தமிழர் நலனா? சொல்லுங்கள்? கோவித்துக் கொண்டு போய் விடாதீர்கள்!

உமை,

இணையத்தளங்கள் இப்படியான கட்டுரைகளை மொழிபெயர்த்துப் போடுவது அந்தந்த இணையத்தளங்களை நடத்துபவர்களைப் பொறுத்தது. அவர்கள் அதற்கு ஏதாவது அளவுகோல் வைத்திருக்கலாம். அல்லது இல்லாதிருக்கலாம். அது வேறு விஷயம்.

நான் கூறவருவது இவர்கள் மொழிபெயர்ப்பது பழைய கட்டுரைகளை என்பதையே. மொழிபெயர்க்கிறதுதான் மொழிபெயர்க்கிறார்கள்... அதற்காக 1 மாதம் அவகாசம் எடுத்துக் கொள்வதா?

இந்தக் கட்டுரையாவது பரவாயில்லை. 1மாத காலத்தின் பின்னரும் தாக்குப்பிடிக்கக் கூடியது. வேறு சில இணையத் தளங்களில் மொழிபெயர்ப்புச் செய்தி வந்து சேர்வதற்குள் கதையே மாறி வேறு என்னென்னவெல்லாமோ நடந்துவிடுகிறது. குழப்பம்தான் மிஞ்சுகிறது.

முன்பு புதினம் இணையத்தளம் இருந்தவரை இந்த விஷயத்தில் அவர்கள் ராஜாக்கள். எந்தவொரு விஷயமும் 24 மணிநேரத்துக்குள் தமிழில் வந்துவிடும். இனி அப்படியொரு இணையத்தளத்தை யாராவது தொடங்கினால்தான், பழைய கஞ்சிகள் மைக்ரோவேவ்வில் வைத்து பரிமாறப்படும் நிலை மாறும். இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

இணைய தளங்களில் கட்டுரைகளை அபப்டியே மொழி பெயர்ஹ்த்து போடுவதில் பிரச்சினை இல்லை எல்லோரும் கருத்துக்களை அறிந்து கொள்ளட்டும் என்ற நியாயப்பாட்டில் செய்கின்றார்கள். அதே வேளை இணைய தளங்களுக்கு ஓர் கடமை இருக்கின்றது. அதாவது அந்த கட்டுரை எழுதப்படுகின்ர நோக்கங்கள், பின்னணிகள் மட்டுமல்ல அந்த கடுரையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை குறித்த பொருள், இடம், காலம் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து ஒரு விமர்சனம் அல்லது சிறு குறிப்பு போடுதல் நல்லது. ஏனென்றால் 1987... 1988 இல் பிறந்தவர்கள் அதற்கு பின்னர் உள்ள தமிழ் சந்ததிக்கும் அது பிரயோசனமாக இருக்கும்.

மிகவும் அருமையான ஒரு ஆலோசனை. அத்துடன் அது பேட்டியாக இருந்தால் பேட்டி காணப்படுபவர் பற்றிய ஒரு சிறிய குறிப்பைபும் வெளியிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று முக்கியத்துவம் உள்ள நேர்காணல். ஆங்கிலத்தில் எங்கு கிடைக்கும்? அந்த காலக்கட்டதில் நான் யாழில் இருந்தேன். அன்று ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் மட்டும் யதார்த்த நிலமையை உணர்ந்திருந்தார். இதுபற்றி என்னிடமும் அவர் பேசி இருக்கிறார். ஆனாலும் அவரது ஆலோசனைகள் முயற்ச்சிகள் எதுவும் செல்லுபடியாகும் நிலமை இருக்கவில்லை, அந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் மனைவியுடனும் தங்கை குடும்பத்தோடும் வன்னிக்குத் தப்பிச் செல்ல பாலகுமாரன்தான் உதவினார். அந்த பொறுப்பு சுதா மாஸ்ட்டரிடமும் தோழர்கள் கபிலன் மன்னார் சில்வா என்பவர்களிடம் கொடுக்கப் பட்டிருந்தது. முன்று நாள் முனைந்து கோப்பாயை தாண்ட முடியவில்லை. பின்னர் பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் த்லைமையோடு பேசி கோப்பாயில் இருந்த கரும்புலிகள் நிலைகளூடாக எங்களை சாவகச்சேரி கேரதீவு வழியாக வன்னிக்கு அனுப்பி வைத்தார். போராட்டத்தை ஆயுதங்களால் மட்டும் வெறி பெற முடியாது அறிஞர்களதும் இராசதந்தரிகளதும் கலைஞர்களதும் பங்களிப்பும் முக்கியம் என்பதை என்னுடைய ஆருயிர்த் தோழன் பாலகுமாரன் போல யாரும் உணர்ந்திருக்கவில்லை. திருஅவரையும் அவரது செல்வ மகனையும் இராணுவ சிறையில் பார்த்தபோது மனம் உடைந்து அழுதேன். தப்பிச் சென்ற வழியில் அவரது மகள் கைகளில் சூடுபட்டிருக்கிறாள். இந்த பாதகம் நிகழ்த்தியது எதிரியின் துப்பாக்கிகள் அல்ல என்று சொல்லப் படுகிறது. கருத்து வேறுபாடுகளோடும் ஒரு கர்ம யோகியாக போராடத்துக்குள் வாழ்ந்த என் தலை காத்த இனிய தோழனுக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை. யுத்தக் குற்றவாளியான அரசின் கொலைக் கரங்களின் நிழலில்தான் அவர் எப்பவும் இருந்தார். இருப்பு உறுதிப் படுத்த முடியாததால் பல தோழர்களுக்கு அஞ்சலிகூட எழுத முடியவில்லை. நாளை அவ்ர் எங்கள் கனவுகளில் இருந்து த்ரும்பிவரவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை

பாலகுமாரன் மாற்றத்தைத் தவிர நிலையானது ஒன்றுமில்லை என உறுதியாக நம்பினார். அவர் நமக்கு அளித்த செல்வம் ஜனநாயக வழிமுறைகளும் பிழைகளை ஏற்றுக் கொண்டு திருத்துவதும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதும் காலத்தின் இயங்கியலோடு வளர்ந்து செல்வதும் என்கிற அணுகுமுறையும்தான். இதுதான் அவரது அரசியல். எதிரி தரப்பில் இருந்து .முன்னாள் இராணுவத் தளபதி கொடுத்திருக்கிற இந்தப் பேட்டியையும் நாம் நாம் திறந்த மனதுடன் ஆராய வேண்டும்.

தமிழர்களுக்காக போராட வேண்டும் என்ற கட்டாயத்தின் பெயராலும் பின்பு புலிகளிடம் இருந்து தப்பமுடியாமலும் சிக்கியே பாலகுமாரன் அவர்கள் புலிகளுடன் கூடியிருந்தார். தவிர அவரும் எங்களை போல தமிழர்களுக்கா போராட கூடியவர் பிரபாகரன்போல் தமிழர்களை அழிப்பவன் அல்ல என்று கோத்தபாயா முன்னிலை இராணுவ தளபதிகளுக்கு கூறியிருந்தாராம். அவர் இராணுவத்திடம் சென்றைடைந்தவுடன் அவரை பக்குவமாக பாதுகாத்தாத்தார்களாம்......................... அதை அறிந்த புலிகளின் தலமை ஒரு கரும்புலி தாக்குதலை திடீரென நிகழ்தியே பாலகுமார் அண்ணனை கொலை செய்யததாக நான் கேள்விபட்டேன்.

வாந்தியேடுப்பதையே வாழ்வாக கொண்டவர்கள் கேள்விபடாது இருப்பது எனக்கு பெரும் வியப்பாக உள்ளது.

வாந்தியேடுக்க வேண்டும் என்று பெரும் ஆவல் மட்டுமே உள்ளது தவிர புத்திக்குள் ஏதும் இல்லை கதை கட்டுவதென்றால் இதிலும் விட சிறப்பாக நாம் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவிடுதலைப்போராட்டம் எம்முடையது

அது எம்முடன் வளர்ந்தது

அதை நாமே வளர்த்தோம்

அது முக்கிய முடிவுகளை சிக்கலான கட்டங்களிலும் எடுக்கும்போதும் அதனுடன் நாமும் கூட இருந்தோம்.

அந்த முடிவுகள் அந்த நேரங்களில் தேவைப்பட்டன. சரியாகவும் இருந்தன.

எத்தனை வருடங்கள் சென்றாலும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் நாம் அதனை மறுக்கமாட்டோம். எமக்கு மாற்றுக்கருத்து இருந்தது என்று அதிலிருந்து தப்பிக்க மாட்டோம். அது எமக்காக எல்லாவற்றையும் தந்த எமது மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் செய்யும் துரோகமாகும். :(:(

தமிழ் தாய்க்கும் ஒரு தமிழ் தந்தைக்கும் பிறந்திருந்தால்.................

தமிழின் துடிப்பு என்பது இயல்பானதாக இதயத்தில் இருக்கும்.

விசயன் இலங்கை வந்தான்.............

போர்த்துகேயர் இலங்கை வந்தார்கள்..............

ஆங்கிலேயர் இலங்கை வந்தார்கள்...................

இந்திய நாய்களும் இலங்கை வந்தார்கள்.....................

என்பதை வாரலாற்று புத்தகங்களில் படிக்க தேவையில்லை. யாழ்களத்தில் உள்ள சில கருத்துக்களை வாச்திதாலே புரிய கூடியதாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அதனோடு கூட உழைத்த ஒரு எஜமான விசுவாசி நாயான வரதராஜப் பெருமாள் செய்த ஈழப்பிரகடனத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா நம்ப மறுத்த விடுதலைப்புலிகளை அது நம்பி ஈழத்தை அவர்கள் கையில் கொடுத்திருக்கும் என்பது கற்பனை மட்டுமே ஆகும்.

சிங்கள தளபதிகளுக்கு இப்போ வேலை இல்லை. அதனால் தங்களின் பிரசித்ததிற்காக இப்படி கூறினால் தான் இனவாத ஊடகங்களுக்கு தீனிபோட முடியும். இனவாதத்தை ஊட்டி வளர்க்க முடியும்.

ஈழப்பிரகடனம் ஏன் புலிகளினால் செய்ய முடியாமல் போனது? அதற்கான காலம் ஏதும் கனியவில்லை என்பதுதானே பொருள். ஈழப் பிரதேகங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை, சர்வதேச ஆதரவு இல்லை, இவைகளையெல்லாம் கடந்து தமிழர்கள் ஒரு பொதுமையான போராட்டத்திற்குத் தம்மை தயார்நிலையில் வைத்துக் கொள்ளவில்லை இவைகளைப் புலிகள் உணர்ந்தேயிருந்தார்கள்.

இராஜதந்திர நடவடிக்கைகளும் அறிவாளிகளின் ஒத்துழைப்புகளும் பெறப்படாமல் இருந்தது என்பது பொய்யான வாதம். புலிகளுக்கு முன்னான காலங்கள் அறிவாளிகளுடையதாகத்தானே இருந்தது. அப்போது இந்தியாவோ இலங்கையோ தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் கண்டிருக்கலாம்தானே. கடவுள்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வார்த்தைப் பிரயோகம் அன்றே அறிவாளியொருவரின் வார்த்தையான பிறகு இதுவெல்லாம் வறட்டுக் கருத்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.