Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த மாதத்தில் உலகை உலுக்கும் ஆறு பாரிய பூகம்பங்கள் பாரிய எச்சரிக்கை

Featured Replies

இந்த மாதத்தில் உலகை உலுக்கும் ஆறு பாரிய பூகம்பங்கள் - புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை

[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 03:00 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

உலகளாவிய ரீதியில், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய 5 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது சிறிலங்காவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழுவே இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதன்போதே ஏப்ரல் 3ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் ஜப்பானிலும், ஏப்ரல் 6ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் சீனாவிலும், ஏப்ரல் 10ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியுசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஜப்பானில் ஏப்ரல் 16ம் நாளுக்கும் 20ம் நாளுக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் சிறிலங்காவிலும் அதன் பாதிப்பு உணரப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி சிறிலங்காவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

puthinappalakai.com

இலங்கையர்கள் புவியியல் சாஸ்திரத்தில் வல்லவர்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

ஓம்.....நீங்கள் அப்பப்ப இப்பிடி அறிக்கையளை வெளியிலை கட்டாயம் விடோணும்.அப்பதான் சம்பளம் வீட்டுக்கு ஒழுங்காய் வரும் :lol:

:lol: இந்தோனேசியாவில் ஏற்ப்படும் பூகம்பத்தால் அம்பாந்தோட்டைப் பக்கம் சேதம் வந்தால் சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழுவை நான் நம்புவேன்! ^_^

Earthquake of 5.7 magnitude shakes North India

வட இந்தியாவில் லேசான நிலநடுக்கம்; இந்திய - நேபாள எல்லையில் 6 ஆக உணரப்பட்டது

நேபாள எல்லையை ஒட்டிய இந்திய நிலப் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவானது. இந்த நில அதிர்ச்சி, தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உணரப்பட்டது.

தில்லியில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. வீடுகளில் உள்ள ஷோபா, நாற்காலிகள், பீரோ ஆகியவை அதிர்ந்தன. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரம் எதுவும் வெளிவரவில்லை.

இந்தியாவின் நில அதிர்வுகள் குறித்து ஆராயும் அமைப்புகள், இந்த நில அதிர்வு இன்று(திங்கள்கிழமை) மாலை 5.01 மணி வாக்கில் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தில்லியில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. வீடுகளில் உள்ள ஷோபா, நாற்காலிகள், பீரோ ஆகியவை அதிர்ந்தன. இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரம் எதுவும் வெளிவரவில்லை.

அளவுகோலில் 'ஆறு' ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.இயற்கை அன்னைக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரலில் பாரிய பூகம்பம்! இலங்கையையும் தாக்கலாம்?!

Posted by admin On April 5th, 2011 at 11:17 am /

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதன்போது ஏப்ரல் 03ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்பிரல் 06 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடையில் சீனாவிலும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஜப்பானில் ஏப்பிரல் 16ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கையிலும் அதன் பாதிப்பு உணரப் படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

saritham

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் எம்மை அழித்தவர்கள்

அழிந்து போகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் எம்மை அழித்தவர்கள்

அழிந்து போகட்டும்

எம்மை அழிக்காதவர்கள் என்று யாரும் இல்லை விசுகு அண்ணா. அப்படி என்றால் முழு உலகமும் அழிய வேண்டும்.

ஐவிரிகோஸ்டில்.. போராளிகளுக்காக ஐநா சண்டை இடுகிறது. லிபியாவில் பள்ளிப் பிள்ளைகளைப் பிடித்து இரண்டு கிழமை பயிற்சி அளித்து நேட்டோ கடாபிக்கு எதிராக அனுப்புகிறது. வன்னியில் நடந்தவை எல்லாம் பயங்கரவாதம்.. என்றவை இன்று உலகம் பூராவும் அதையே செய்யினம். வன்னியில் சிறீலங்காவிற்கு பயங்கரவாதத்தை அழிக்க உதவியவர்கள்.. இன்று பயங்கரவாதத்தை வைத்து பிழைப்பை ஓட்டுகிறார்கள்... சிறீலங்கா தொடர்பான ஐநா விசாரணை கமிசன் ரிப்போட் இன்னும் வரேல்ல. 6 கிழமைக்கு முன்னர் தொடங்கிய கடாபி எதிர்ப்பு போராட்டத்தில் நேட்டோவின் ஐநாவின் தலையீடு.. கண்டு இரண்டு கிழமை போயிட்டுது. எங்கள் விடயத்தில் மெத்தனம். அவர்கள் விடயத்தில் அசுர வேகம்..???!

இப்படியா பட்ட உலகில்..???! நாம் எப்படி நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்குமாக போராடி வெல்ல முடியும்..????!

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அழிக்காதவர்கள் என்று யாரும் இல்லை விசுகு அண்ணா. அப்படி என்றால் முழு உலகமும் அழிய வேண்டும்.

இப்படியா பட்ட உலகில்..???! நாம் எப்படி நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்குமாக போராடி வெல்ல முடியும்..????!

அதனால்தான் இவர்கள் அனைவரும் அழிந்து புது உலகம் உருவாகட்டும்

அதிலாவது ஈழ தமிழனுக்கு நீதி கிடைக்கட்டும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இந்தோனேசியாவில் யாவா தீவில் மத்திம அளவில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டபோதும் தற்போது வாபஸ் பெற பட்டுள்ளதாக பி.பி.சி அறிவித்துள்ளது,அமெரிக்க அளவுகோலில் 6.7 புள்ளிகளும் உள்ளூரில் 7.1 ஆகவும் பதிவாகியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து கிறைஸ் சேர்ச்சில், ஐப்பானில் கடந்த மாதங்களில் நில நடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்திருக்கிறார்கள். இதனை வைத்து இந்தால் ஆறு பாரிய பூகம்பங்கள் வரும் என்று இந்தியாச் சாத்திரிகள் மாதிரி கதை விடுகிறார்.

2004ல் சுனாமி வரும் போது இந்தாள் எங்கே போயிருந்தார்.

  • தொடங்கியவர்

Japan: Tsunami warning issued after new earthquake Continue reading the main story

A tsunami warning has been issued for north-eastern Japan after an earthquake with a magnitude of 7.1 struck off the east coast of Honshu.

However, there has been no detectable effect at the Fukushima Daiichi nuclear plant damaged in last month's quake and tsunami, nor at two other nuclear plants in the area, officials say.

The Japanese authorities have ordered an evacuation from the warning zone.

Fukushima workers were also evacuated.

The tsunami was predicted to have a wave 2m (6ft) high.

Thursday's quake was 118km (78 miles) north of Fukushima, 40km offshore. It was initially reported to have a magnitude of 7.4 but has now been revised downwards to 7.1, according to the US Geological Survey.

The quake was strong enough to shake buildings in Tokyo, 265km to the south.

Japan's meteorological agency issued tsunami warnings and advisories for a stretch of coast 420km long, from Aomori prefecture in the north to Ibaraki prefecture in central Japan, just north of Tokyo.

Hundreds of aftershocks have shaken north-eastern Japan in the wake of the earthquake on 11 March, but few have measured higher than 7.0.

About 28,000 people are dead or missing, and hundreds of thousands were left homeless after the tsunami which ripped through Miyagi prefecture.

Are you on the north-east coast of Japan? Are you going to leave the area? Send us your accounts of the quake using the form below.

இதன்போது ஏப்ரல் 03ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ...

முதலாவது குறி ஏறத்தாள பலித்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.