Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

ஆஹா பட்டிமன்றம் தீர்ப்பு வழங்கியாச்சா?? தமிழினி அக்காக்கும் ஆசிரியருக்கும் நன்றி......அதுசரி அடிக்கடி எதிரணி என்று சொல்றீங்கிளே யாரவை?

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

ஹைய்யா.. தீர்ப்பு வந்திருச்சு!

இணையத்தால் நன்மைதான்னு சொல்லிட்டாங்கல்ல!

நடுவர்கள் சொன்னது போல - இது ஒரு தீவிர கருத்து பகிர்வு நிகழ்வு அம்புட்டுதான் -!

இதுல நாமதான் ஜெயிச்சிட்டோம்னு துள்ளி குதிக்க எதுவும் இல்லீங்க! 8)

இந்த தீர்ப்பால் - நிறைய மகிழ்ச்சி அடையகூடியது - எதிர்தரப்பில வாதத்தை வச்சவங்கதான் !

தீமைன்னு தீர்ப்பு சொல்லி இருந்தா- நாளைக்கு இணையம் பாவிக்கும்போது - ஒரு குறுகுறுப்பா இருக்கும் இல்லியா? 8)

பை-த-வே :

ரசிகை - அடுத்த தலைப்பு என்ன- ?

அட - பயப்பிடாம சொல்லுங்க - எப்பிடியும் அடுத்த கிறிஸ்மஸ்க்கு முன்னம் - வாதாடி முடிச்சிடுவோம்ல - முடிச்சு! :wink: :wink:

8)

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்றத்தை சிறப்பாக முடித்தமைக்கு நன்றிகள்.இதை வெற்றிகரமாக செயற்படுத்தி முடித்த ரசிகை, நடுவர்கள், மோகன் அண்ணா, மட்டுறுத்தினர்கள், சக உறுப்பினர்களுக்கு நன்றிகள்!!

பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் இந்தப் போட்டியை நடாத்தி முடித்த ரசிகைக்கும்,இன்னல்களுக்கு மத்தியில் நடுவராக செயற்பட்ட செல்வமுத்து அவர்களுக்கும்,தனியாக பட்டிமன்றத்திற்கு நடுவராக பொறுப்புடன் செயற்பட்ட தமிழினிக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலாக இதை நகர்த்திய கருத்தாளருக்கும் நன்றிகள்.யாழ்க் களத்தில் உருப்படியாக செய்யப்பட்ட ஒரு சில விடயங்களில் இந்தப் பட்டி மன்றம் முக்கிய இடம் வகிக்கிறது.இது தொடர வேண்டும் என்பதுவே எனது விருப்பம்.பொருத்தமான தலைப்புடன் மீண்டும் சந்திப்போம்.

களத்தில் உள்ள எல்லாக் கருத்தாடல்களும் பட்டி மன்றத்தைப் போல் ஆரோக்கியமானதாக இருந்தால் களம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

நன்மை அணியினரே வாழ்த்துக்கள்.. :P

தோற்றாலும் வாழ்த்தி செல்லணும்..அதுதான் பெரிய மனசாம்..அப்பிடித்தான் எங்கட அப்பம்மா சொல்லி தந்தவா... :( :roll: :) :idea: :arrow:

நடுவர்களின் தீர்ப்புக்கள் அவர்கள் மட்டில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கட்டும்..! வாழ்த்துக்கள்..! :P :idea:

பட்டிமன்றம் நல்ல கருத்துகளுடன் நடந்தது

ஓழுங்கமைத்த ரசி அக்காக்கும் நடுவர்களான தமிழ் அக்கா செல்வமுத்து அங்கிள் மற்றும் இரண்டு அணி அங்கத்தவர்களுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுவர்மீது எனக்கு ஒரு சந்தேகம் அவர் உண்மையில் நடுவர் மட்டும்தானா அல்லது எதிரணியில் வேறு பெயரில் வாதாடினாரா?

ஏனென்றால் அவர் அடிக்கடி எதிரணியினர் எதிரணியினர் என்று குறிப்பிட்டார் உண்மையான நடுவராக இருந்திருந்தால் அவர் இருபக்கத்தையும் சமமாக ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும

பட்டி மன்ற முடிவுகளை நடுவர்கள் செல்வமுத்து அவர்களும் தமிழினி அவர்களும் அறிவித்திருக்கிறார்கள்.

நல்ல பல கருத்துகளையும் முடிவுகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பணி கடினமானதொன்று...............

இது ஒரு விளையாட்டு மைதானம் போன்றது.

இங்கே யாரும் தொடர்ந்து வெல்வோரும் இல்லை.

தோற்போரும் இல்லை.

வெற்றி தோல்விகளை அடக்கத்தோடு முகம் கொடுப்பது

இளைய தலைமுறையை மேலும் உயர்வடைய வைக்கும்.

வென்றவர்களாக இங்கே கருதப்படுவோர் மட்டுமல்ல

தோற்றாதாக கருதப்படுவோரும் நமக்கு தெரியாத பல

கருத்துகளை இங்கே வைத்திருந்தார்கள்.

அவை எமக்கு மட்டுமல்ல

பலருக்கும் பிரயோசனமாகவே இருந்திருக்கிறது.

இங்கே வெற்றி பெற்றதற்காக துள்ளிக் குதிக்கவோ

தோற்றதற்காக துவண்டு விடவோ தேவையில்லை.

நல்ல கருத்துகள் இப் பட்டி மன்றத்தினூடக வந்திருக்கிறது.

இப்படி அருமையாக வாதாடக் கூடிய

நண்பர்கள் யாழ் களத்தில் இருக்கிறார்கள் என்று

அனைவரும் பெருமைப்படலாம்.

ஒரு போட்டிக்காக

ஒரு பாடசாலையில் இரு அணியாக பிரிந்து

போட்டியிடும் போது ஒரு அணிதான் ஜெயிக்கும்.

அதற்காக நாம் அந்த பாடசாலையை வெறுப்பதில்லை.

நாம் விரோத மனப்பான்மையை கொண்டு வாழ்வதில்லை.

காரணம் நாம் தொடர்ந்தும் அந்தக் கூரையின் கீழ்தான் வாழ்கிறோம்.

அப்படித்தானே?

நாளை நாம் வேறு ஒரு தலைப்பில்

வேறொரு பக்கமாகி கலந்து கருத்துகளை வைக்க வேண்டி வரும்.

தோற்றவர்கள் வெல்லவும்

வென்றவர்கள் தோற்கவும்

சிலவேளை இதற்கு மாறான முடிவுகளும் ஏற்படலாம்.

போட்டி என்று ஒன்று நடந்தால்

எங்கும் நடுவர்களின் முடிவுகளை

ஏற்றுக் கொள்வதே ஒரு சிறந்த போட்டியாளரை

மேன்மையடைய வைக்கும்.

நாம்தான்

நமது எதிர்கால இளைய சமூகத்துக்கு

வழிகாட்டியாக வேண்டும்.

விவாதத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும்

மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.............

நடுவர்களது கடும் உழைப்புக்கும் எமது

நன்றிகள் உரித்தாகட்டும்.

நாம் சகோதரர்களாய் என்றும் இணைந்து நிற்போம்.

நன்றி.

வெற்றி பெற்ற நன்மை அணியினாருக்கு எனது வாழ்த்துக்கள்.

வணக்கம்...

இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் இளையோர் நன்மை அடைகிறார்களா? சீரழிகிறார்களா? என்கிற பட்மன்ற விவாதத்தில் - நன்மையடைகிறார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மகிழ்ச்சி. சிறப்பான தமது கருத்தாடல்களின் மூலம் தீர்ப்பை நமது பக்கமாகத் திருப்பிய அனைத்து அணித் தோழர்களுக்கும் எனது நன்றிகள் + பாராட்டுக்கள். அதேபோல் எதிரணியினரின் உற்சாகமானதும், சிறப்பானதுமான கருத்தாடல்கள் தான் எம்மை வெற்றி நோக்கி உந்தித்தள்ளியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்தவகையில் எதிரணித் தோழர்களுக்கும் பாராட்டுக்கள் + நன்றிகள்.

இந்தப் பட்டிமன்றத்தை ஒருங்கமைத்து ஒழுங்கமைத்து சிறப்பாக முன்னெடுத்துச்சென்ற தோழி இரசிகைக்கும் எமதணி சார்பில் நன்றிகள். மற்றும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக இணைந்து செயலாற்றிய செல்வமுத்து ஐயா அவர்களுக்கும், தோழி தமிழினிக்கும் வாழ்த்துக்கள் + நன்றிகள்.

பட்டிமன்றம் கொஞ்சம் இழுபட்டுப் போயிருந்தாலும் கூட சுவாரசியமாகவே இருந்தது. இந்த இணையப் பட்டிமன்றத்தில் இருந்து பல அனுபவப்பாடங்களைக் கற்றிருக்கிறோம். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பட்டிமன்றங்கள் நிகழவேண்டும்.

தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........

தலைப்பு:

தலைப்பைப்பற்றி பலர் விவாதித்தார்கள். ஆனால் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே விவாதிப்பதைப்போல் இருந்தது. அதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் கொடுத்திருந்தாலும் அதனை இல்லை இல்லை என்றே எதிரணியினர் வாதித்தனர். இந்த வேளைகளில் ஆக்கபபுூர்வமாக வேறு ஏதாவது கூறியிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றியது.

இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???

நடுவருகே எதிரணியினர் எண்றால்.... :shock: :shock: அப்போ ...?? :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்ப்பு வந்திருக்கிறது.... அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எண்ற அவசியம் இல்லைத்தான் எண்றாலும். எங்கள் எதிரணிக்கு வாழ்த்துக்கள்..........

இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???

நடுவருகே எதிரணியினர் எண்றால்.... :shock: :shock: அப்போ ...?? :roll: :roll: :roll:

என்ன தல லொள்ளா நடுவர் ஒரு இடத்தில் கூறியிருந்தால் தவறாக கூறிவிட்டார் என நினைக்கலாம். அவர் எதிரணியில் வாதாடிவிட்டு கமுக்கமாக இருந்து தீர்ப்பும் கூறியிருக்கின்றார். இதுவே இணையத்தின் நன்மை(செல்வமுத்து) அவர்களுக்கு. இணையபட்டிமன்றம் என்ற படியால் எதையும் செய்துகொள்ளலாம்.

எதிரியாக இருந்தாலும் செல்வமுத்து நடுவார் சொன்ன தீர்ப்பின்படி வெற்றிபெற்ற எதிரணியினருக்கு(செல்வமுத்து உட்பட) வாழ்த்துக்கள். தலைமை ஏற்று நடத்திய இளைஞனுக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

ஆகா தீர்ப்பு சொன்னாச்சா? ம்ம் ஒரு மாதிரி பட்டிமன்றத்தை முடித்து தீர்ப்பு சொன்னாச்சு,. பட்டின்மன்றத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும். வெற்றி பெற்ற அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆஹா - மொதல்ல நடந்த ரவுசுகள பார்த்து - பட்டிமன்றம் என்னு - ஆரம்பிக்க யாரும் முன்வர தயங்குவாங்க என்னு ஃபீல் பண்ணினேனுங்க நானு- !

ஆத்தாடி -இப்போ நடக்கிற புடுங்கலை பார்த்தா - எதிர்காலத்தில - நடுவரா வரவும்- யாரும் திங்க் பண்ணமாட்டாங்கபோல இருக்கே-!

ஏனுங்க - இதுல என்ன அம்புட்டு மானபிரச்சினைங்களாம்?

வாதிடுறதுல -ஒங்களுக்கு இருந்த டாலன்ற் என்னனு நீங்களே பார்க்க கெடச்ச ஒரு சந்தர்ப்பமா நெனச்சிட்டு போவீங்களானு பார்த்தா -ரொம்பதான் --!

மனசுக்கு சங்கடமா இருக்குதுங்க - நடத்துங்க -! 8)

பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் நடுவர்கள் தமது பணியை நன்றே செய்திருக்கின்றார்கள். ஓரு இடத்தில் சறுக்கி விட்டார்கள் என்றால் அதை மன்னித்து விடலாமே....இந்த கருத்துக்கள் அடுத்த முறை நடுவர்களாக வருபவர்களுக்கு ஒரு பயத்தை தோற்றுவிக்கின்றது.

நடுவர்கள் வந்து இதில் தமது நிலைப்பாட்டை கூறினால் உறவுகள் விளங்கி கொள்வார்கள் என்பது எனது கருத்து.

வர்ணன் ரமா நீங்க இருவரும் வக்காலத்து வாங்கவேண்டாம். நன்மை அணியினர் வாதாடியதுபோல நடுவரும் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்று தீர்ப்பு கூறினாரே ஒழிய தலைப்பின்படி புலம்பெயர் நாட்டில் இணையம் எமது இளைஞர்களுக்கு நன்மை செய்கின்றது என்று ஒரு உதாரணம் காட்டீனாரா? எந்த ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு சில நன்மைகளும் இருக்கும்.ஆனால் பெரும்பான்மை வீதம் நன்மையா தீமையா என்பதை பார்க்கவேண்டும்.

வக்காலத்து வாங்க வந்தனீங்கள். நடுவர்(?) எதிரணியினர் என்று பலமுறை சுட்டிக்காட்டியதை பற்றி ஏதாவது சொல்லலாமே?

இந்த முடிவு யாருக்காகவோ பட்டிமன்றம் தொடங்கும்போதே எடுக்கபட்டமுடிவுபோல் இருக்கின்றது.

தகுதியில்லாதவர்கள் பொறுப்புக்களுக்கு வரக்கூடாது என்பது எனது எண்ணம்.

பட்டி மன்றம் இனிதே நிறைவு பெற்று முடிவுகளும் வந்துவிட்டது. வெற்றி பெற்ற நன்மை அணியினருக்கும்,சளைக்காது தமது திறமையான வாதங்களை முன்வைத்த தீமை அணியினருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இங்கு நடைபெற்றது நட்புணர்வோடுகூடிய பட்டி மன்றம் எனும் பெயரிலான கருத்து பரிமாற்றமே. இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்து உடனடியாக கூறமுடியாத பல விடயங்களை அவை நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம், அறிந்து கொள்ளமுடிந்தது.

அதற்கப்பால் பட்டி மன்றம் எனும் தலைப்பிட்டதனால் அதன் வரையறைக்குள் நின்று அனைவரும் வாதிட்டு சிறப்பாக கருத்துக்களை வைத்திருந்தார்கள்.

இதுவே பொதுவாக ஒரு தலைப்பில் கருத்து வையுங்கள் என்றால் அது கருத்து திசைதிருப்பல்களுக்குட்பட்ட

பட்டி மன்றம் என்கின்ற வடிவம் ஒரு போட்டியாக பல்வேறு கருத்துக்களை வெளிக் கொணர்வதற்காகவும்,அது ஒரு போட்டியாக இருந்தால் விறு,விறுப்பாக இருக்கும் என்பதாலும், அதை ஒரு போட்டியாக்க இறுதியில் தீர்ப்பு என்றும், அதை வழங்க நடுவர்கள் என்றும் ஒரு கட்டுமானத்தில் ,வடிவத்தில் நடத்தப் படுகிறது.ஆனால் நடைமுறையில் எந்த விடயமுமே இவ்வாறு கறுப்பு ,வெள்ளயாக இருப்பதில்லை.

அகவே இங்கே தீர்ப்பு என்பது பட்டி மன்றத்துடன் முடிந்து போக வேண்டிய ஒன்று.இங்கு முக்கியத்துவம் பெற வேண்டியது கருத்தாளர் சொன்ன கருத்துக்களும்,அங்கே சொல்லப் பட்ட விடயங்களும்,தர்க்க ரீதியான கருத்தாடலுமே.இதை விடுத்து தீர்ப்பு எமக்கு சாதகமில்லை, நடுவர்கள் பிழை விட்டு விட்டனர் என்று புலம்புவது சிறு பிள்ளைத் தனமானது.இங்கே எவருமே வெற்றி பெறவில்லை.இங்கே வெற்றி பெற்றது யாழ்க் களமே,இங்கே அது சிந்தனையைத் தூண்டும் களமாக,ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெறும் களமாக அது வெற்றி பெற்றுள்ளது.பலர் தாம் முன்னர் சிந்திக்காத ,அறியாத விடயங்களை இதன் பயனாக அறிந்து கொண்டனர்,அதுவே இங்கே யாழ்க் களத்தின் வெற்றியாகக் கணிக்கப் பட வேண்டும்.

அம்பயர் அவுட் குடுத்த பின், நான் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன் ,அந்த அவுட் அம்பயருக்கே பொருந்தும் என்று அடம்பிடிப்பது,சிறுவர்கள் ஆட்டக் களங்களில் செய்யும் செயல்,இங்கே நாம் எவரும் சிறுவர்கள் அல்ல , அம்பயர் பிழை விட்டிருக்கலாம், அது வேறு விடயம், ஆனால் விதிமுறை ,களம் என்று வரும் போது,இப்படியான விசயங்கள் நடை பெறக் கூடும்.அதற்காக சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிப்பது,ஒருவரின் முதிர்ச்சியின்மையையே பிரதிபலிக்கிறது. இதை ஒரு பெரிய விடயமாக எடுத்து ,பேசுவது , நடுவர்களாக செயற்பட்டவர்களுக்கு சலிப்பையும், மன உளைச்சலையுமே தரும். இதை விடுத்து அடுத்த பட்டி மன்றத்தில் எமது கரிசனையைச் செலுத்துவது சாலச் சிறந்தது.

இது சம்பந்தமாய் பட்டிமண்றத்தை ஆரம்பிக்காதையுங்கப்பா..! நடுவரின் பல கோணங்களில் வந்த தகவல்களில் இருந்து ஒரு தகவலை மட்டும்தான் கேட்கக் நேர்ந்தது....! அதோடு தீர்ப்பின் முடிவை நாங்கள் சரி எண்றும் சொல்லியாச்சுது....! எங்கள் எதிரணிக்கும் முடிந்தளவு வாழ்த்தும் சொல்லியாச்சு...! பிறகு என்னப்பா பிரச்சினை.

மரபு மீறப்பட்டதுதான் சுட்டிக்காட்டப்பட்டது...! இதில் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை எண்று யாரப்பா சொன்னது...???

இதில் நடுவர் எதிரணியினர் எண்று யாரை சொன்னார் என்பதுதான் இப்போ கேள்வியே....???

நடுவருகே எதிரணியினர் எண்றால்.... :shock: :shock: அப்போ ...?? :roll: :roll: :roll:

என்ன சகோதரம் நீங்களுமா? :lol:

செவமுத்து அண்ணா (நடுவர்) எதிரணியினர் என்று சொன்னதில் அப்படி என்ன தப்பு இருக்கெண்டு தெரியல....

"வாதம் செய்வது என் கடமை - அதில்

வழியை காண்பது உன் திறமை"

யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.

எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.

நன்றி.

இது தூயவன் அண்ணாவின் வாதத்துக்கு நடுவர் செல்வமுத்து அவர்கள் எழுதினது .... அவர் எங்களையும் எதிரணி என்று தானே சொல்லிருக்கார் ....

இப்ப உங்கள் அணி கருத்து வைத்தால், அதை வாசித்து விட்டு நடுவர்கள் கருத்து வைப்பினம் தானே ... அதில் கடைசியாக சொல்வது என்ன ,? எங்கே எதிரணியினர் என்ன சொல்லப் போகினம் எண்டு பாப்பம் எண்டுதானே... அப்படி எங்கள் அணியையும் சொலிருக்கினம் உங்கள் அணியையும் சொல்லிருக்கினம்,

அதே மாதிரித்தான், கடைசியாக நடுவர் எழுதினதும் எங்கள் அணி வெற்றி பெற்றதால் எங்கள் வாதங்களையும் சொல்லி உங்கள் அணியை எதிர் அணி என்றார் இதில் என்ன தப்பு...?

நாங்கள் தோல்விக்காக கவலைப்படவில்லை. இங்கு நடுநிலை தவறப்பட்டது என்பதைத்தான்சட்டிக்காட்டுக

இல்லை சகோதரம் நடுவர் என்பவர் மரபுக்கு உட்பட்டு கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து.... அதை நியாயம் எண்றும் சொல்லலாம்... ஆனால் ஒரு இடத்தில் இருந்து ஒரு கோணத்தில் இருந்து மட்டும் பார்த்து சொல்வது நடு நிலைமை கிடையாது....!

தமிழ்மொழி:

தமிழ்மொழி வளர்ச்சியிலே இணையத்தின் பங்கு ஏராளம். பல்கலைக் கழகங்களிலே இணைய மின் நு}லகங்கள் அமைக்கப்பட்டு அங்கே இலக்கிய நு}ல் வைப்பகங்கள், கலை பண்பாட்டு ஒலி ஒளி வடிவங்கள், பாடத்திட்ட நு}ல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என சகல துறைகளிலும் ஆக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. நு}லகங்களை எரித்தாலும் இந்த நு}ல்களை அழிக்கமுடியாது. இதனால் பயனடைவது அனேகமாக இளைஞர்கள்தான். இதனை விரிவாகத் தந்தனர் நன்மை அணியினர். இணைய ஊடகம் வந்ததின் பின்னர் தமிழின் வளர்ச்சி உரம்பெற்றிருக்கிறது. முகமறியா உறவுகளின் திறமைகளை வெளிக்கொணரவும், இணையவழி நு}லாக்கம் போன்றன அமைக்கவும் ஏதுவாகின்றது.

இது நடுவரின் தீர்ப்பில் வளங்கப்பட்ட கருத்துகளில் ஒண்று.....! இதில் நடுவரால் எவ்விடயங்களில் இணையத்தில் தமிழ் பாதிக்கப்படுகிறது நன்மை தீமை இரண்டையு எண்று சீர்தூக்கி பார்த்திருக்கிறாரா...??? இல்லை தீமை அணியினர் தமிழ் இணையத்தில் சீரளிகிறது எண்று சொல்லவில்லையா...??? :roll: :roll: :roll:

எனக்கு புரியவில்லை..... :shock:

பொது:

சில வேளைகளில் மாற்று அன்புக்குத்தான் அடிமையாகவேண்டும் போதை போன்ற இணையத்திற்கு அல்ல என்றும் புதிய புதிய விடயங்களிலே ஆர்வம் காட்டும் இளையோர் வேறுபட்ட, ஒவ்வாத கலாச்சாரத்தைப் பழகி இணையத்தில் உள்ள நன்மைகளை விட்டுவிட்டு தீமைகளையே நாடுவார்கள். இது இளமைக்கே உரிய குணாதிசயம் என்று கூறினர். "இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல்" என்றும் குறிப்பிட்டனர். அதனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்றனர். ஒரு சடப்பொருள் எப்படிச் சீரழிக்கும்?

எதிரணியினரில் ஓரிடத்தில் 1900 புலம்பெயர் தமிழ் இளைஞர்கள்தான் பாவிக்கிறார்கள் என்றார் பின்னர் அதனை விடுத்து இன்னொரு பக்கத்தில் எத்தனையே இலட்சம் பாவிக்கிறார்கள் என்கிறார் இங்கே அவருடைய கருத்தே மாறுபடுகின்றது.

இது எந்தக் கோணத்தில் இருந்து நடுவரால் பார்க்கப்பட்டது என்பதை யாராவது அறிஞர்கள் வந்து விளக்கினால் நல்லது...... ! 8) 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே நடந்துமுடிந்துவிட்ட ஒரு நிகழ்வுக்காக நாம் வாதாடுவது .முட்டாள்தனம்.ஆனால் ஒரு நெருடல் எதிரணியினர் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்ற கருத்தை வைத்து எல்லோரும் தலைப்பிலிருந்து நழுவி வாதாடினார்கள். நாங்களும் இணையத்தில் நன்மை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டோம்.ஆனால் தலைப்பினை இரசிகை புலம்பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும் என்ற தலைப்பை இட்டிருந்தார். எதிரணியினரால் புலம்பெயர் இளைஞர் ஏதாவது ஒரு நல்லமுயற்சியை இணையத்தில் செய்திருக்கின்றனர் என்று உதாரணம் காட்டவில்லை. நடுவரும் எதிரணியினரின் மூளைச்சலவையில் மூளை கலங்கிவிட்டார். மறப்போம் மன்னியோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.