Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

  • தொடங்கியவர்

மற்றது இரசிகைக்கு...

நாம் சிறு பிழை ஒன்று விட்டுள்ளோம் எனன்று நினைக்கிறேன். புலம் என்பது தாயகத்தையே குறிக்கும். புலம்வாழ் இளைஞர்கள் என்பது எம்மைக் குறிக்காது. ஈழத்தில் வாழ்பவர்களையே குறிக்கும். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் என்பது தான் எம்மைக் குறிக்கும். முடிந்தால் தலைப்பில் இதை மாற்றவும். அதேபோல் புலம்வாழ், அல்லது புலத்து இளைஞர்கள் என்று தமது கருத்தாடலில் எழுதியவர்கள் அவற்றையும் திருத்த முயலுங்கள்.

இனி வருபவவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் அல்லது புகலிடத்தில் வாழ் இளைஞர்கள் என்றே எழுதுங்கள்.

நன்றி

இளைஞன் சொன்னதுபோல் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். கருத்து வைப்பவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதிலும் ஒரு தவறு இருக்கிறது ரசிகை. புலம்பெயர்ந்து வாழ் இளைஞர்கள் மட்டுமல்ல யுவதிகளும் இணையம் பாவிக்கினம். எனவே புலம் பெயர்ந்து வாழும் இளையோர் என்பதே சாலப் பொருத்தமாக இருக்கும்.

:

குருவிகள் இளைஞர்கள் என்று சொல்லும் போது ஆண்களும் பெண்களும் அடக்கம்தானே.

இருந்தாலும் நாம் போட்ட தலைப்பு இதுதானே

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

  • தொடங்கியவர்

ஆஹா அனித்தாவா என்னால் நம்ப முடியவில்லை மிக அழகாக தனது வாதத்தை வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!.

நடுவர் தமிழினிக்கும் எனது பாராட்டுக்கள்

புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது.

இளைஞன் : ஆண்பால்

இளைஞி: பெண்பால்

இளைஞர்

இளைஞர்கள்: பலர்பால்

இளையோன் - தம்பி

இளையாள் - தங்கை

இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே?

தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.

குருவிகளே.

புலம் என்பதற்கு வயல் என்ற பதமும் இருப்பதாக ஞாபகம். மேலும் உயர் கணிதம் மற்றும் பொறியியலில் (vector and tensor fields, Einstein's gravitional field, etc) இவை வௌ;வேறு வியாக்கியானங்களை பெறுகின்றன. :lol::(

  • தொடங்கியவர்

சரியுங்கே உதுக்கு பெயர்தான் அது எண்டா நானும் வாறான். :cry:

ஆனால் நன்மை அடைகிறார்கள் பக்கம் ஆக்கள் கூடிவிட்டுது.

அங்காலையும் யாரும் பேனால் நல்லாய் இருக்கும். :roll:

உங்களை நன்மை அணியில் இணைத்துள்ளேன்

அத்துடன் சிறுமாற்றம் ரமாவை சீரழிகிறார்கள் என்ற அணிக்கு மாற்றியுள்ளேன்.

ஆகா

நம்ம அணித் தலைவர் இளைஞன்

நறுக்கு தெறித்தது போல் அடுக்கிக் கொண்டு போகும் போதே மகிழ்வாக இருந்தது.

அனித்தாவை

நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.

போட்ட போடுல

எதிரணித் தலைவர் சோழியன் காதை சொறியிறதை பார்த்து

என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை.

சும்மா சும்மா தரவுகளை எடுத்துக் கொடுத்து

சுண்டல் பண்ண வச்சிட்டீங்க.

மன்னிக்கவும்

அடுத்து நம்ம பாட்டி வந்தா

நீங்க சுண்டல்தான்?

புலம் - வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம் என்று அகராதி சொல்கிறது.

இளைஞன் : ஆண்பால்

இளைஞி: பெண்பால்

இளைஞர்

இளைஞர்கள்: பலர்பால்

இளையோன் - தம்பி

இளையாள் - தங்கை

இளையோர்: 60 வயதையுடையவர்களுக்கு 40 வயதையுடையோர் இளையோர் தானே?

தெளிவில்லை எனக்கும். யாராவது தமிழாசான்கள் தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.

நன்றி இளைஞன்..!

இளைஞி (என்பது தமிழ் இலக்கண மரபுக்குள் இல்லை)

இளைஞன் - ஆண்பால் ( ஒருமை)

யுவதி - பெண்பால் (ஒருமை) (இளம் பெண்களைக் குறிக்க வேறும் பதங்கள் இருக்கு)

இளைஞர்கள் - ஆண்பால் (பன்மை)

யுவதிகள் - (பெண்பால் பன்மை)

இளையோர்- சிறுவர்கள் அடங்களாக இளையவர்களைக் குறிக்கும் வகையிலேயே பாவிககப்பட்டு வருகிறது.

http://sooriyan.com/index.php?option=conte...d=1792&Itemid=1

மேலும் யாராவது.. இது குறித்து தெளிவுற அறிந்தவர்கள்.. தெளிவுபடுத்தினால் நல்லம். தவறான அர்த்தத்துடன் சொற்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க உதவியாக இருக்கும். :P :idea:

குருவிகளே.

புலம் என்பதற்கு வயல் என்ற பதமும் இருப்பதாக ஞாபகம். மேலும் உயர் கணிதம் மற்றும் பொறியியலில் (vector and tensor fields, Einstein's gravitional field, etc) இவை வௌ;வேறு வியாக்கியானங்களை பெறுகின்றன. :lol::(

நன்றி இளதிருமகன்..! :P

உதைத் தான் அப்பு நானும் சொல்லுறன். எப்படியான கண்டுபிடிப்புக்கள் முன்னேற்றங்கள் வந்தாலும் அதன் பயன்பாடு சார்ந்த நன்மை தீமை முற்று முழுதாக நுகர்வேரில் தான் தங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இணைய ஊடகம் ஒரு விதிவிலக்கல்ல பட்டிமன்றம் வைத்து விவாதிக்க. மனிதவரலாற்றில் இணையத்துக்கு முதல் வந்த பல் வேறு பட்ட ஊடக மற்றும் ஏனைய தொடர்பாடல்கள் வழிமுறைகள் எவ்வாறு நல்ல வழிகளிலும் தீயவழிகளிலும் பயன் பட்டதோ அதே போல்தான் இணைய ஊடகத்தின் பயன்பாட்டுச் சிறப்புக்களும் சீரழிவுகளும். :?

உந்தக்கதை எல்லாம் வேண்டாம் உந்த தலைப்புக்குள்ளதானே உங்களுக்கு ஆப்பு இருக்கு... :wink:

தலைப்புக்குள்ள இப்பவாவது கதையுங்கோவன்... இது பட்டி(:wink:)மண்றம் எல்லே... :lol::(

செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll:

செல்வமுத்து அவர்களின் துயரத்தில் பங்கெடுத்த நாங்கள் இ அவரும் தலைமை வகித்த இந்த பட்டிமன்றத்தை ஒரு சில நாட்கள் ஒத்திவைத்தால் என்ன? :roll:

இல்லை வர்ணன் பட்டிமற்றம் நடக்கட்டும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதத்தில் தானே இப்போ பட்டிமண்ற விவாதம் நடக்கிறது... அவர் வரும் போதுவாசித்து தீர்ப்பை அளிக்க வசதியாய் வேறு இருக்கும்.. அது வரை தமிழினி அக்கா தலைமை தாங்குவா தானே..??? :roll: :roll: :roll:

சரி தல அவர்களே 8) :roll:

தல உங்கள் நிலைப்பாடுதான் குருவிகளினதும். :P :idea:

  • தொடங்கியவர்

தல உங்கள் நிலைப்பாடுதான் குருவிகளினதும். :P :idea:

ஆமாம் வருணன் தல சொன்னமாதிரியே இருக்கட்டும்.

ஆகா அனித்தாவா இது. அசத்திவிட்டீர்கள் போங்கள். கருத்தாளர்கள் பித்தளைத்தாமரையில் இருக்கின்றார்கள் என்று எழுதினீர்கள். ஆனால் உங்களைப் போல பலம் சேர்க்கும் கருத்துக்கள் எனும் தங்க முலாமை புூசி அதனையும் தங்கமாக்கலாம் தானே. வாழ்த்துக்கள்.

ஆகா

நம்ம அணித் தலைவர் இளைஞன்

நறுக்கு தெறித்தது போல் அடுக்கிக் கொண்டு போகும் போதே மகிழ்வாக இருந்தது.

அனித்தாவை

நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.

போட்ட போடுல

எதிரணித் தலைவர் சோழியன் காதை சொறியிறதை பார்த்து

என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை.

சும்மா சும்மா தரவுகளை எடுத்துக் கொடுத்து

சுண்டல் பண்ண வச்சிட்டீங்க.

மன்னிக்கவும்

அடுத்து நம்ம பாட்டி வந்தா

நீங்க சுண்டல்தான்?

866481481lo.gifsoli0yy.gif

ரொம்பத்தான் ஆடாதீங்க... சொல்லிட்டேன்.. :P

இங்கே இளைஞர் என்ற சொல் பற்றிய சிறு விளக்கத்தை நான் தரலாம் என எண்ணுகின்றேன்.

பொதுவாகவே இளைஞர் எனும்போது அது வயது வந்தவர்களையே குறிக்கின்றது. அதாவது 16-18 வயதிற்கு மேற்பட்டோரையே குறிக்கின்றது. அதனால் அதற்கு கீழுள்ளவர்களை (சிறுவர்) அது உள்ளடக்காமல் போய்விடுகின்றது. அதனால் இளையோர் என்ற சொல்லைப் பாவிப்பதே சிறந்தது. அது போல் இளைஞர் என்பது ஆண்பாலுமல்ல பெண்பாலுமல்ல. அது இரண்டிற்கும் பொதுவான பொதுப்பால்.

சில உதாரணம்:

இளைஞன் - ஆண்பால்

இளைஞி - பெண்பால்

இளைஞர் - பொதுப்பால்

ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்

தலைவன் - தலைவி - தலைவர்

அவன் - அவள் - அவர்

சிறுவன் - சிறுமி - சிறுவர்

ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.

செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.

உங்கள் கருத்தின் கடைசி இரண்டு வரிக்கு மேலே உள்ளவற்றை எல்லாம் எதற்காக சொன்னீர்கள் வசம்பு அவர்களே? :roll:

இளைஞர் - பொதுப்பால்

ஆசிரியன் - ஆசிரியை - ஆசிரியர்

தலைவன் - தலைவி - தலைவர்

அவன் - அவள் - அவர்

சிறுவன் - சிறுமி - சிறுவர்

ஆனால் நாம் ஆசிரியர் தலைவர் போன்ற சொற்கள் ஆண்பாலென தவறாகவே கருதி வருகின்றோம்.

செல்வமுத்து அண்ணா ஓரளவு மனம் தேறி வரும்வரை பட்டிமன்றம் தொடரட்டும். அதுவரை தமிழினியின் பணியும் தொடரட்டும். பின்பு இருவரும் சேர்ந்து அலசித் துவைத்து திர்ப்பை வழங்கட்டும்.

நான் முதல் அனுப்பின தகவலை காணவில்லை மேற்கோள் மட்டும் தெரியுது.

சரி திரும்பவும் கேக்கிறேன் .. நீங்கள் கடைசியாய் சொல்லி முடித்த இரண்டு வரிகளுக்கு மேல் உள்ளவற்றை எல்லாம் எதற்காய் இப்போ சொன்னீர்கள் வசம்பு அவர்களே? விவாதம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சே? அதுதான்

நீங்க இப்படி வந்து கேள்வி கேட்கணும் என்று அல்ல. ஒருமுறை இதற்கு முன் பக்கத்தையும் வாசியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால். ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.

இளைஞர் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்லவா? அப்போ ஏன் யுவதி என்ற சொல் தேவை இல்லாமல் பாவிக்கிறோம்? இளையோர் என்பதுதான் பொதுபால் என்று நினைக்கிறேன்! வசம்பு அவர்களே.

அத்துடன் இளைஞி என்று ஒரு சொல் வளக்கில் இருக்கா???இளம் பெண் என்றுதான் இருக்குமோ?

அதை விட உங்கள் வரிசையில் சொன்ன தலைவன் - தலைவி -தலைவர் என்று முடியாது -தலைமை என்று முடியும் என்று நினைகிறேன்!

அதே போல அவன் - அவள் - அவர் என்று முடியாது அவர்கள் என்று முடியும் என்றும் கருதுகிறேன் சரியோ தவறோ தெரியவில்லை!

நீங்க இப்படி வந்து கேள்வி கேட்கணும் என்று அல்ல. ஒருமுறை இதற்கு முன் பக்கத்தையும் வாசியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால். ஆண்டவன் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.

வசம்பு அவர்களே ஏன் இப்படி கடும் வார்த்தைகள்?

சரி அறிவு இல்லாத என்னை ஆண்டவன் காப்பாற்றினால் அவருக்கு நன்றி!

"ஞி" என்ற எழுத்து தமிழ் சொற்களில் பாவனையில் உண்டா?

வேறு எந்த தமிழ் செற்களில் "ஞி" பாவிக்கப்படுகிறது?

இளைஞன்

யுவதி

இளைஞர்கள்

யுவதிகள்

இளையோர்

போன்றவற்றை பாவனையில் கண்டுள்ளோன்.

ஆனால் "இளைஞி" என்ற சொல் "ஞி" என்ற எழுத்து? :roll:

சத்தியமாக நான் தமிழ் பண்டிதன் இல்லை, ஆனால் குழப்பமாக இருக்கு :?

இன்னொன்று "அகமும் புலமும்" என்பது எதிர்கருத்துள்ள செற் சோடி இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.