Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கத்துவ நாடு ஒன்றின் ஆதரவு தேவை சிறிலங்காவை விசாரிப்பதற்கு - பான் கி மூன்

Featured Replies

அங்கத்துவ நாடு ஒன்றின் ஆதரவு தேவை சிறிலங்காவை விசாரிப்பதற்கு - பான் கி மூன்

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது. இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.

214 பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ளது.

முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட / தரவிறக்கம் செய்ய: http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

New York, 25 April 2011 - Statement attributable to the Spokesperson for the Secretary-General on public release of Panel of Experts' report on Sri Lanka

The United Nations has today made public the advisory report of the Secretary-General's Panel of Experts on accountability with respect to the final stages of the decades-long armed conflict in Sri Lanka, which was submitted to him on 12 April 2011. The decision to release the report was made as a matter of transparency and in the broader public interest.

The report was shared in its entirety with the Government of Sri Lanka on 12 April. The Secretary-General has indicated his willingness to publicize the Government's response alongside the report. This invitation was extended to the Sri Lanka Government throughout the week, including again on Saturday by the Secretary-General to the External Affairs Minister of Sri Lanka. The Government has not responded to this offer which nonetheless still stands.

The Secretary-General expresses his appreciation to the advisory Panel of Experts who have provided their advice on how the undertaking on accountability in the joint communiqué that he had made with the President at the conclusion of Sri Lanka's war can be fulfilled.

The Secretary-General is carefully reviewing the report's conclusions and recommendations with regard to events that took place during the final stages of the conflict, including its assessment that there are a number of allegations of serious violations of international humanitarian and human rights law committed by both the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Government of Sri Lanka, some of which could amount to war crimes and crimes against humanity.

The Panel's first recommendation is that the Government of Sri Lanka should respond to the serious allegations by initiating an effective accountability process beginning with genuine investigations. The Secretary-General has consistently held the view that Sri Lanka should, first and foremost, assume responsibility for ensuring accountability for the alleged violations. This and a number of other short and medium-term recommendations that the Panel proposed in regard to steps that could be undertaken by the Government of Sri Lanka, have now been shared with the Government. He encourages the Sri Lankan authorities to respond constructively.

The Secretary-General has decided that he will respond positively to the Panel's recommendation for a review of the United Nations' actions regarding the implementation of its humanitarian and protection mandates during the war in Sri Lanka – particularly in the last stages. The exact modality of such a review will be determined after consultations with relevant agencies, funds and programmes.

In regard to the recommendation that he establish an international investigation mechanism, the Secretary-General is advised that this will require host country consent or a decision from Member States through an appropriate intergovernmental forum. The monitoring and repository functions it was suggested this mechanism undertake will continue to be performed by the United Nations Secretariat.

The Secretary-General trusts that the Government of Sri Lanka will continue to respect the work of the UN and its agencies as well as its obligations to the safety of UN staff in Colombo. He regrets the inflammatory tone of some of the recent public statements emanating from Sri Lanka.

The Secretary-General sincerely hopes that this advisory report will make a contribution to full accountability and justice so that the Sri Lankan Government and people will be able to proceed towards national reconciliation and peace.

http://www.un.org/apps/sg/sgstats.asp?nid=5222

Edited by akootha

  • தொடங்கியவர்

முதலில் நாம் எல்லோரும் ஒரு பிரதியை பாதுகாப்பாக எமது கணணியில் போட்டு வைத்துக்கொள்ளுவோம்

அடுத்து பலரும் என்ன செய்யலாம் என ஆராயும் நேரத்தில் நாம் :

- முடிந்தளவுக்கு இதை சமூக வலைகளில் ஏற்றலாம்

- சாராம்சத்தை எனது நாட்டு அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித ஆர்வலர்களுக்கு அனுப்பலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் அகூதா அண்ணா! தரவிறக்கம் செய்துள்ளேன்.இனித்தான் வாசிக்க வேண்டும்!

தூக்கி விட்டிருவான்களோ என்ற பயம் தான், தரவிறக்கம் செய்யக் காரணம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:) அகோதா, புங்கையூரான்,

எப்படி, எங்கே தரவிறக்கம் செய்தீர்கள்? நீங்கள் இணைத்த இணைப்பில் ஒரு பக்க செய்தி மட்டும்தானே இருக்கிறது ?

தயவுசெய்து தரவிறக்கம் செய்தது எப்படி என்றும் சொல்லவும்.

நன்றி.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

:) அகோதா, புங்கையூரான்,

எப்படி, எங்கே தரவிறக்கம் செய்தீர்கள்? நீங்கள் இணைத்த இணைப்பில் ஒரு பக்க செய்தி மட்டும்தானே இருக்கிறது ?

தயவுசெய்து தரவிறக்கம் செய்தது எப்படி என்றும் சொல்லவும்.

நன்றி.

ரகுநாதன்,

அகூதாவின் இணைப்பில் க்ளிக் பண்ணும்போது ஒரு பக்கம் மட்டும் வரும். உங்கள் மவுசின் right கிளிக் செய்து, save as யை செலக்ட் பண்ணி save பண்ணுங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:) நன்றி,

தரவிறக்கம் செய்துவிட்டேன்.

  • தொடங்கியவர்

கள உறவுகளே,

இந்த முக்கியமான அறிக்கை பலத்த சிங்கள எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த நகர்வு என்ன என்பது தெளிவில்லாமல் உள்ளது. இந்த வேளையில் தனிப்பட்ட ரீதியிலும் எமது அமைப்புக்களும் என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, நாம் தமிழர் இயக்கம் போன்றவை இவ்வறிக்கையினைத் தமக்கு ஆதரவான சாட்சியாகப் பாவித்து உலக நாடுகளிடையேயும், இன்னோரென்ன மனிதவுரிமை அமைப்புக்களிடையேயும் சென்று பிரச்சாரம் செய்வதன் மூலம் ஐ.நா தலையீட்டுடனான ஒரு நீதியான திர்வை நோக்கிச் சிங்களத்தை தள்ளுவது அவசியம்.

இதுவரை காலமும் எமது அழுகுரலை அசட்டை செய்துவந்த அனைத்துச் சர்வதேச நாடுகளாகட்டும், அல்லது அமைப்புகளாகட்டும் இன்றைக்கு இல்லை என்று புறக்கணித்து ஒதுக்க முடியாத ஐ. நா அங்கீகாரத்துடனான ஒரு ஆவணம் எமக்குக் கிடைத்திருக்கிறது. போராட்டகாலத்தில் நாம் தேடித்திரிந்த அங்கீகாரம் என்பது போராட்டம் நசுக்கப்பட்டபின்னர் எமக்கு போர்க்குற்றங்கள் நடந்தது உண்மைதான் எனும் வடிவில் கிடைத்திருக்கிறது.

இதுவே நாம் எல்லோரும் எதிர்பார்த்த முடிவுமல்ல. இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டும்தான். இந்தப் புள்ளியிலிருந்து எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை நாம் உலக நாடுகளிடையே கொண்டு செல்ல வேண்டும்.

நியாயம் கேட்கும் போராட்டமாகத் தொடங்கி எமது அரசியல் விடிவிற்கான போராட்டமாக இதனை மாற்ற வேண்டும்.

இத்தனை அழிவுகளுக்கும் பிறகு நாம் எப்படி தற்போதையச் சிங்கள அரச கட்டமைப்பினுள் ஒன்றாக வாழ முடியும் என்கிற யதார்த்தமான கேள்வியை நாம் உலகின் மனசாட்சியின் முன்னால் கேட்கவேண்டும்.

தற்போது இருக்கின்ற எமது அரசியல் அமைப்புகளுக்கு இதற்கான பலம் கிடையாதென்றால், முதலில் ஒன்றுபட்ட தமிழரின் குரலாக ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள காலம் மிகவும் குறுகியது. அதற்குள் எம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.

கள உறவுகளே,

இந்த முக்கியமான அறிக்கை பலத்த சிங்கள எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த நகர்வு என்ன என்பது தெளிவில்லாமல் உள்ளது. இந்த வேளையில் தனிப்பட்ட ரீதியிலும் எமது அமைப்புக்களும் என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

நன்றி

தமிழ்ச்சமூகம் தன்னை மீள ஒழுங்கமைத்து, ஒரு ஆக்க சக்தியாக பரிணமிக்க வேண்டிய தருணம் இது. இந்த மீள் ஒழுங்கமைப்பு, கட்டுமானம் தற்போதைக்கு ஈழத்தில் சாத்தியம் இல்லை. இராணுவ அடக்குமுறை அகலாத வரை தாயக உறவுகளை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்காக பேச வேண்டியதும் புலம்பெயர் உறவுகள் ஒவ்வொருவருடயதும் தார்மீக கடமை. இதில் தமிழக உறவுகளின் பங்களிப்பு மிக அவசியமானதாகும். எனது அறிவிற்கு எட்டிய வரை இரண்டு விடயங்கள் நிதர்சனமானவை.

1) இந்திய அரசு ஒரு மதயானை. அதை நாம் இலாவகமாக கையாள வேண்டும். இன்று அது எம்மை தாக்கலாம். ஆனால் அதை வைத்து தான் எம் காரியங்களை சாதிக்க வேண்டியும் உள்ளது.

2) இந்திய நலன்களுக்கு அப்பால், இலங்கையில் ஒரு தீர்வு சாத்தியமில்லை.

இவை இரண்டும் எமக்கு என்றுமே பிடிக்காத விடயங்களாக கூட இருக்கலாம். ஆனால் இவற்றினூடாக தாம் எம் விடிவிற்காக பயணிக்க வேண்டி உள்ளது. வெற்றிக்கான முதல் படி, எம் நிலையை மிகச்சரியாக கணித்து கொள்வது தான்.

போர் நடந்த காலத்திலும் அதன் பின்பும் இலங்கை அரசு, புலம்பெயர் மக்களின் மீள் ஒருங்கிணைவை தகர்க்க தன்னாலான எல்லா வழிமுறக்களையும் கையாள்கின்றது. இனி இன்னும் மூர்க்க தனமாக இதை செய்யும். இதை தடுப்பதும் ஒடுக்குவதும் புலம்பெயர் உறவுகளின் கைகளில் இருக்கிறது.

ஐ.நா. வின் இந்த அறிக்கை, இலங்கையின் போர் முகத்தை காட்டி நிற்கிறது. அதன் தூதரகங்களில் திணித்து வைத்திருக்கும் புலனாய்வாளர்கள், முன்நாள் இராணுவ அதிகாரிகள் போன்றவர்களை மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் அந்தந்த நாடுகளில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம். இவர்கள்தான் இன்றைய குழப்பங்களை திட்டமிட்டு நடைமுறை படுத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களும் அவர்களின் ஒழுங்கமைந்த குரலும் நிச்சயம் உலகையும், தமிழகத்தையும் அதன்மூலம் இந்தியாவையும் விரும்பியோ விரும்பாமலோ எம்மை நோக்கி திருப்பும். நாடு கடந்த அரசு இதை முழுமூச்சாக முன்னெடுக்க வேண்டும். இது ஆயுத போராட்டமல்ல. தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, உயிர்வாழும் உரிமைக்கான போராட்டமாக முன்னிலை படுத்த வேண்டும். உணர்ச்சி வசப்படாமல், தமிழர்களின் நீண்டகால இருப்பையும் நலனையும் உணர்ந்து பணியாற்றக்கூடிய அர்ப்பணிப்புள்ள இராஜதந்திரிகள் தமிழர்களில் இருந்து வரவேண்டும்.

உணமையை கூறினால், இந்தியாவில் இருக்கும் பல அரசியல் தலைவர்களுக்கு கூட இங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கும். உளவு துறைகள் இவற்றை அறிந்தே இருக்கும். மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுடனான தொடர்புகள், தொடர் கருத்தாடல்கள் மிக முக்கியம். என்ன தான் எதிர் அலைகள் வந்தாலும், மனத்திடத்துடன் நம் காரியமே கண்ணாக செயல்பட வேண்டிய தருணமிது.

புலம்பெயர் தமிழர்கள் "தமிழர்களுக்கான தாயகம்" என்ற அடிச்சொல்லின்மீது நம்பிக்கை வைத்து ஒருங்கிணைய வேண்டியது மிக அவசியமாகும். பெயர், புகழ், பணம் என்பவற்றிற்காக வேலை செய்யாமல் மண்ணோடு மண்ணாக, காற்றிலும் கடலிலும் கரைந்துபோன எம் உறவுகளுக்காக வேலை செய்வோம். இதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியே எமக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய செல்வம்.

கள உறவுகளே,

இந்த முக்கியமான அறிக்கை பலத்த சிங்கள எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த நகர்வு என்ன என்பது தெளிவில்லாமல் உள்ளது. இந்த வேளையில் தனிப்பட்ட ரீதியிலும் எமது அமைப்புக்களும் என்ன செய்யலாம் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

நன்றி

ஒரு மேற்குலக ஊடகவியலாளரிடம் இது பற்றி உரையாடும் போது அவர் கூறியது,

(தனிநபர்களாகவோ அமைப்புக்களாகவோ) அறிக்கைகளை ஆதாரமாக வைத்து அந்நாட்டு எதிர்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமக்காக குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் பெரிதாக்ககினால் ஆளும் கட்சி ஏதாவது செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளுடன் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/List_of_members_of_the_United_Nations_Security_Council

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முக்கியமான அறிக்கை பலத்த சிங்கள எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் வெளிவந்துள்ள நிலையில், அடுத்த நகர்வு என்ன என்பது தெளிவில்லாமல் உள்ளது.

சிறிலங்காவிற்குள்ளே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவில்லாமல் உள்ளது.என்னதான் நர்வதேச கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிட்டாலும் அவர்கள் எல்லோரையும் சிறிலங்கா ஏதோ ஒருவிதத்தில் திருப்திபடுத்த முனையும்.சிறிலங்கா அதிபருக்கு எதிராக சிறிலங்காவில் விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா?யதார்த்தத்திற்கு முரணாக இருக்கிறதே?(அறிக்கை போர்க்குற்றம் நடைபெற்றுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளதை வைத்து சர்வதேச மன்றத்தில் விசாரணைகளை நடத்துமாறு புலம் பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும். எல்லா அமைப்புக்களும் (நா.க.க உ.த.பேரவை ததேகூ மற்றும் பிற அமைப்புக்கள்)இணைந்து ஓரு செயற்பாட்டுக்குழுவை அமைக்க வேண்டும்.அதன் முலம் காத்திரமான அழுத்தத்தைக் கோடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக் குழுவை அமைக்க அதிகாரமில்லை“ - கைவிரித்தார் பான் கீ மூன்

ஜ செவ்வாய்க்கிழமைஇ 26 ஏப்ரல் 2011இ 00:41 புஆவு ஸ ஜ கார்வண்ணன் ஸ

நிபுணர்குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டுஇ சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தன்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது என்று கைவிரித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலோ அல்லது உறுப்பு நாடுகள் அழைப்பு விடுத்தாலோ மட்டுமே சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை வெளிப்பட்ட பின்னர்இ நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“நிபுணர்குழு சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியான சுதந்திரமான அணைத்துலக விசாரணைக் குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலருக்குப் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் தன்னிச்சையாக விசாரணைக்குழுவை அமைக்க ஐ.நா பொதுச்செயலருக்கு அதிகாரங்கள் இல்லை.

சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன் அல்லது ஐ.நாவின் உறுப்புநாடுகள் அழைப்பு விடுத்தால் மட்டுமே அத்தகைய விசாரணக்குழுவை அமைக்க முடியும்.

இந்த அறிக்கை தொடர்பாகப் பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கப்பட்ட போதும் பதில் எதையும் அளிக்கவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக- நியாயபூர்வமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நிபுணர்குழு அழைப்பு விடுத்தள்ளதற்கு பான் கீ மூன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறும் கடமை சிறிலங்காவுக்கே முதலில் உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.

அதேவேளைஇ நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கோபப்படும் தொனியில் சிறிலங்காவில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து பான் கீ மூன் விசனமடைந்துள்ளார்.

முழுமையான பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் சிறிலங்கா அரசும் மக்களும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கருதுகிறார்“ என அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நிபுணர் குழுவின் அறிக்கையுடன் ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த அறிக்கையை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த 12ம் திகதி கையளிக்கப்பட்ட பின்னர் அது சிறிலங்கா அரசக்கு வழங்கப்பட்டு அதன் பதிலுக்கு காலஅவகாசம் வழங்கியதாகவும்இ கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் மீண்டும் இதுதொடர்பாக ஐ.நா கேட்டுக் கொண்ட போதும் இதுவரை சிறிலங்கா எந்தப் பதிலையும் வழங்கவில்லை என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவின் பணிகளுக்கு சிறிலங்கா தொடர்ந்தும் மதிப்பளிக்கும் என்றும்இ கொழும்பிலுள்ள ஐ.நாவினதும் அதன் முகவர் அமைப்புகளினதும் பணியாளர்களுக்கு சிறிலங்கா அரசு பாதுகாப்பு வழங்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும்இ போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு சிறிலங்காவின் ஒப்புதல் அல்லது அனைத்துலக அமைப்பின் உறுப்பு நாடு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கூறியுள்ள போதும்இ அது பாதுகாப்புச்சபையா அல்லது மனிதஉரிமைகள் பேரவையா என்று அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி-புதினப்பலகை

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்கள் சார்ப்பாக செய்யப்பட வேண்டிய நடவடிக்கை.. இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆராயவும்.. ஆலோசனை வழங்கவும்.. தேவையான நடவடிக்கைகளைப் பட்டியலிடவும்.. தமிழ் மக்கள் சார்ப்பில் செயற்படும் அமைப்புக்களில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதும்.. அதன் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுவதும் அவசியமாகிறது.

ஐநா அங்கத்துவ நாடுகளிடம் தமிழ் மக்களின் பிரச்சனையை குறிப்பிட்டு அவர்களிடம் ஆதரவு கேட்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு.. உலகத் தமிழர் பேரவை.. பிரித்தானிய தமிழர் பேரவை.. போன்ற மற்றும் அமைப்புக்கள் தமது பிரதிநிதிகள் கொண்ட ஒரு செயற்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவும்.. மேலே குறிப்பிட்ட நிபுணத்துவக் குழுவும் சேர்ந்து இயங்குவதோடு தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்குடன் மக்களுடன் தங்கள் செயற்பாடுகளின் நோக்கம் குறித்து விளக்க வேண்டும்.

மேற்குலகம் வாழ் தமிழர்களுடன் மட்டுமன்றி.. தமிழக மற்றும் , தெற்காசிய.. தென்னாபிரிக்கா வாழ் தமிழ் தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணி.. அவர்களின் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுக் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்திய அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசியற் தலைமைகள் செயற்பட அவர்களோடு சரியான மேற் சொன்ன அமைப்புக்கள் கலந்துரையாடல்களையும் தேவையான நடவடிக்கைகளையும் தாமதமின்றி செய்து கொள்வதோடு.. சர்வதேச சமூகத்திடமும்.. அனைத்துலக நாடுகளின் தூதுவர்களிடமும் தமிழ் மக்களின் வேண்டுகோள்களை சமர்பிக்க வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள்... மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிரமமாக செய்திகள் வழங்கப்பட வேண்டும்.

எமது இன்றைய தேவை மனித குலம் கண்டறியாத பல கொடுமைகளை செய்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மட்டுமல்ல. எனியும் சிங்களவர்களோடு இணங்கி வாழ முடியாது என்பதை உலகிற்கு சொல்வதாகவும்.. அந்த நிலையில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில் சர்வதேச அணுசரனையுடன் கூடிய தீர்வொன்றை இலங்கைத் தீவில் நாம் அடைவதும் ஆகும். இதை நோக்கி நாம் இரு முனை நகர்வுகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். அதற்கு எமது ஒருமைப்பாடான அனைத்துலகத்துடன் தொடர்பு கொண்டதான.. பிராந்திய இராஜதந்திரம் கலந்ததான செயற்பாடுகள் அரசியல் மதிநுட்பம் தொலைநோக்குக் கொண்ட செயற்பாடுகள் அவசியமாகின்றன. வெறும் பழிதீர்ப்பாக அன்றி எமது இனத்தின் விடிவை தீர்மானிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடுவது எமக்கும் எமது இழப்புக்களுக்கும் அர்த்தம் கற்பிக்க முடியாத ஒரு நிலையையும் எமது இனத்தின் நிரந்தர அழிவுக்கும் அடிமைத்தனத்திற்கு அது உதவி நிற்கும்.

எனவே அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒருங்கிணைந்து இனத்தின் விடிவுக்காக பொதுநோக்கோடு செயற்பட முன் வர வேண்டும். நிபுணத்துவ உதவிகளை ஆலோசனைகளை தாமாக முன்வந்து மக்களிற்காக அவர்களின் விடிவுக்காக வழங்க வேண்டும். அனைத்துலக சமூகத்துடனான தொடர்பாடல்களை உறவாடல்களை பலப்படுத்தி ஐநா அங்கத்துவ நாடுகளிடம் எமக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை சரியாக திட்டமிட்டு செய்ய வேண்டும். இவையே எமக்கு இன்று அவசியம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் சார்ப்பாக செய்யப்பட வேண்டிய நடவடிக்கை.. இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆராயவும்.. ஆலோசனை வழங்கவும்.. தேவையான நடவடிக்கைகளைப் பட்டியலிடவும்.. தமிழ் மக்கள் சார்ப்பில் செயற்படும் அமைப்புக்களில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதும்.. அதன் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுவதும் அவசியமாகிறது.

ஐநா அங்கத்துவ நாடுகளிடம் தமிழ் மக்களின் பிரச்சனையை குறிப்பிட்டு அவர்களிடம் ஆதரவு கேட்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு.. உலகத் தமிழர் பேரவை.. பிரித்தானிய தமிழர் பேரவை.. போன்ற மற்றும் அமைப்புக்கள் தமது பிரதிநிதிகள் கொண்ட ஒரு செயற்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவும்.. மேலே குறிப்பிட்ட நிபுணத்துவக் குழுவும் சேர்ந்து இயங்குவதோடு தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்குடன் மக்களுடன் தங்கள் செயற்பாடுகளின் நோக்கம் குறித்து விளக்க வேண்டும்.

மேற்குலகம் வாழ் தமிழர்களுடன் மட்டுமன்றி.. தமிழக மற்றும் , தெற்காசிய.. தென்னாபிரிக்கா வாழ் தமிழ் தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணி.. அவர்களின் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் பெற்றுக் கொண்டு செயற்பட வேண்டும்.

இந்திய அரசின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசியற் தலைமைகள் செயற்பட அவர்களோடு சரியான மேற் சொன்ன அமைப்புக்கள் கலந்துரையாடல்களையும் தேவையான நடவடிக்கைகளையும் தாமதமின்றி செய்து கொள்வதோடு.. சர்வதேச சமூகத்திடமும்.. அனைத்துலக நாடுகளின் தூதுவர்களிடமும் தமிழ் மக்களின் வேண்டுகோள்களை சமர்பிக்க வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள்... மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிரமமாக செய்திகள் வழங்கப்பட வேண்டும்.

எமது இன்றைய தேவை மனித குலம் கண்டறியாத பல கொடுமைகளை செய்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மட்டுமல்ல. எனியும் சிங்களவர்களோடு இணங்கி வாழ முடியாது என்பதை உலகிற்கு சொல்வதாகவும்.. அந்த நிலையில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில் சர்வதேச அணுசரனையுடன் கூடிய தீர்வொன்றை இலங்கைத் தீவில் நாம் அடைவதும் ஆகும். இதை நோக்கி நாம் இரு முனை நகர்வுகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். அதற்கு எமது ஒருமைப்பாடான அனைத்துலகத்துடன் தொடர்பு கொண்டதான.. பிராந்திய இராஜதந்திரம் கலந்ததான செயற்பாடுகள் அரசியல் மதிநுட்பம் தொலைநோக்குக் கொண்ட செயற்பாடுகள் அவசியமாகின்றன. வெறும் பழிதீர்ப்பாக அன்றி எமது இனத்தின் விடிவை தீர்மானிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடுவது எமக்கும் எமது இழப்புக்களுக்கும் அர்த்தம் கற்பிக்க முடியாத ஒரு நிலையையும் எமது இனத்தின் நிரந்தர அழிவுக்கும் அடிமைத்தனத்திற்கு அது உதவி நிற்கும்.

எனவே அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒருங்கிணைந்து இனத்தின் விடிவுக்காக பொதுநோக்கோடு செயற்பட முன் வர வேண்டும். நிபுணத்துவ உதவிகளை ஆலோசனைகளை தாமாக முன்வந்து மக்களிற்காக அவர்களின் விடிவுக்காக வழங்க வேண்டும். அனைத்துலக சமூகத்துடனான தொடர்பாடல்களை உறவாடல்களை பலப்படுத்தி ஐநா அங்கத்துவ நாடுகளிடம் எமக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை சரியாக திட்டமிட்டு செய்ய வேண்டும். இவையே எமக்கு இன்று அவசியம்.

இதன் மூலம் எமது அமைப்புகளுக்கிடையில் ஒரு தொடர்பினை ஏற்படுத்தலாம், எதிர்கால ஒன்றுபட்ட இணைப்புக்கும் இதுவே அடிகோடிடலாம், எமக்கிடையேயான தொடர்பாடலுக்கும் இது இலகுவாக வழிகோலும், இதற்குள் வர மறுக்கும் அமைப்புகளை மக்கள் இலகுவாக இனம் கண்டு கொள்ளலாம், இது செயற்படுவதர்குரிய காலம், செயல்வீரர்களே ஒன்று சேருங்கள்,

  • தொடங்கியவர்

ஐ. நா. செயலாளர் அவர்கள் ஒரு அங்கத்துவ நாடு கேட்டாலே மேற்கொண்டு தான் எதுவும் செய்யலாம் என கூறியுள்ளார். ஆனால் பல மனித உரிமை அமைப்புக்களும் இல்லை அவரால் முடியும் என்கிறனர். தமிழ் அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் கூட இதையே வலியுறுத்திவருகின்றனர். அதேவேளை சிங்களம் எல்லா வேண்டுகோளையும் நிராகரித்து வருகின்றது.

மேலும், பான் கி மூன் இரண்டாவது தடவையும் ஐ.நா. செயலாளர் நாயகமாக வர விரும்புகிறார். அதற்கு அவருக்கு பல நாடுகளின் ஆதரவு தேவை அதில் சீனாவும் உருசியாவும் கூட அடங்கும்.

நாம் எவ்வாறு ஐ.நா.வை எமக்காக தொடர்ந்தும் நகரவைக்கலாம்? எமது தலைவிதி எமது கைகளை விட மேற்குலகம், இந்தியா, உருசியா, சீனா என உலக நாடுகளின் கைகளில் கூடுதலாக உள்ளது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வியூகங்களை வகுக்கவேண்டிய தேவை உள்ளதாக தெரிகின்றது. எல்லாவற்றையும் விட சிங்களம் விடும் தவறுகள் ஊடாகவே எமக்கு ஆதரவு பெருகும் நிலையும் உள்ளது.

ஐ.நா. செயலாளர் என்ன செய்ய முடியும்? அதேவேளை விடயம் சற்று கூடுதலாக தெரிந்த ஒருவர் பின்வருமாறு கூறினார்:

Whatever people say and Ban says, it is correct that UNSG is not empowered to appoint and Independent Investigation Mechanism. Only UNSC, UNGA OR UNHRC can pass a resolution to that effect. But the UN charter empowers the Secretary General to bring to the attention of the UNSC any matters that he thinks threatens the maintenance of International Peace and security. Therefore we need to continue to persuade the member nations to bring it to the attention of the UNSC,UNGA or UNHRC and also the UNSG to recommend to the UNSC based on the Panel's recommendations to him, for the UNSC to consider taking action.

எனவே 80 மில்லியன் தமிழ் மக்களையும் 1 மில்லியனுக்கு மேலாகா மேற்குலக மக்களையும் கொண்ட நாம் எமக்கு ஆதரவாக பலம் வாய்ந்த நாடுகளை திருப்பி அதன் மூலம் மேற்சொன்ன ஐ.நா அமைப்புக்கு முன்னால் "இலங்கையில் விசாரணை செய்யவேண்டும்" என்ற குரலை பலமாக ஒலிக்கவைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

ஒரு மேற்குலக ஊடகவியலாளரிடம் இது பற்றி உரையாடும் போது அவர் கூறியது,

(தனிநபர்களாகவோ அமைப்புக்களாகவோ) அறிக்கைகளை ஆதாரமாக வைத்து அந்நாட்டு எதிர்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமக்காக குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் பெரிதாக்ககினால் ஆளும் கட்சி ஏதாவது செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளுடன் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/List_of_members_of_the_United_Nations_Security_Council

Dear Madam/Sir,

After gathering evidence for 10 months, the UN Secretary General’s three-member panel on Sri Lanka has called for a thorough investigation into what it believes to be credible allegations that war crimes, and crimes against humanity, were committed by both sides of the civil war in Sri Lanka as the war drew to an end nearly two years ago.

The panel found that the government of Sri Lanka, among various violations, systematically shelled vulnerable areas during the war, including: all hospitals in the Vanni region, even though the government knew their locations; the UN hub; food distribution lines; near the ICRC ships coming to pick up the wounded; and three consecutive no-fire zones, where it encouraged the civilian population to concentrate. In stark contrast to the government of Sri Lanka’s repeated assertion that there was a policy of “zero civilian casualties,” the panel found that tens of thousands died in the last five months of the war. The panel highlighted that government shelling was the main cause of the civilian casualties.

Among the allegations against the Liberation Tigers of Tamil Eelam, the panel said the insurgents refused civilians permission to leave areas under their control, “using them as hostages, at times even using their presence as a strategic human buffer between themselves and the advancing Sri Lanka army.”

If Sri Lanka is to find true peace and justice, these allegations must be properly investigated.

Full Text of UN Panel Report:

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

Sincerely,

Edited by akootha

  • தொடங்கியவர்

Here are the contacts for 2011 UN security council member's e-mail ids. Please write when time permits :-)

ஐ.நா. பாதுகாப்பு பேரவை : ஐந்து வீட்டோ உரிமை உள்ள நாடுகளும் பத்து தற்காலிக நாடுகளும்

China: ChinaMissionUN@Gmail.com HE Mr. LI Baodong http://www.china-un.org/eng/

France: france@franceonu.org HE Mr Gerard ARAUD http://www.franceonu.org/spip.php?rubrique2

Russian Federation: rusun@un.int HE Vitaly Churkin http://www.un.int/russia/new/MainRoot/index_plain.html

United Kingdom, UK@UN.int HE Mark Lyall Grant http://ukun.fco.gov.uk/en/

USA: http://archive.usun.state.gov/Issues/Contact2.html HE Susan Rice http://www.usunnewyork.usmission.gov/

Bosnia and Herzegovina: bihun@mfa.gov.ba HE. Mr. Ivan Barbalić www.bhmisijaun.org/

Brazil: delbrasonu@delbrasonu.org HE Maria Luiza Ribeiro Viotti http://www.un.int/brazil/

Colombia: colombia@colombiaun.org H.E. Mr. Nestor Osorio http://www.colombiaun.org/English/Home.html

Gabon: mission.gabon@ties.itu.int, gabon@un.int HE Guy Blaise Nambo-Wezet http://www.un.int/gabon/

Germany: info@new-york-un.diplo.de HE Dr. Peter Wittig http://www.new-york-un.diplo.de/

India India@un.int, ind_general@indiaun.net HE Hardeep Singh Puri http://www.un.int/india/

Lebanon: mission.lebanon@ties.itu.int, contact@lebanonun.org HE Najla Riachi Assaker http://www.un.int/wcm/content/site/lebanon

Nigeria: mission-nigeria@bluewin.ch, HE Martin Ihoeghian Uhomoibhi http://www.nigeriaunmission.org/

Portugal: portugal@un.int HE José Filipe Moraes Cabral http://www.missionofportugal.org/pmop/

.

Process for Selection of UN Secretary-General

The Secretary-General is appointed by the General Assembly upon the recommendation of the Security Council, according to Article 97 in Chapter 15 of the UN Charter. UN Member States submit the names of potential nominees to the Security Council. The Security Council then meets privately to discuss candidates and may utilize "straw polls" to determine where support lies, through informal votes that either encourage or discourage a candidacy.

Approval in Security Council: All candidates are subject to the veto and thus must gain the support of all five permanent members of the Security Council. According to General Assembly Resolution 11/1 of 1946, a candidate must gain an affirmative vote of nine members of the Security Council, including concurring votes of the five permanent members, in order for a nomination to go forward to the General Assembly. In other words, as long as none of the permanent members block a candidate's selection with a veto and at least four other members vote for him or her, that person may be nominated formally by the Security Council.

http://www.unelections.org/?q=node/71

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து இருவருடங்களாகின்ற இந்த நேரத்தில் தமிழ்மக்கள் மீண்டும் ஒன்றுதிரண்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவை எம்பக்கம் திருப்பினால்தான் மகிந்த அரசின் நீண்டகால தமிழின அழிப்பின் செயற்பாடுகளை முடக்கி உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம். தமிழர்களின் தலைமைகள் இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த முனையவேண்டும்.

தமிழகத் தமிழர்கள் பெரும்பான்மையானவர்களின் உணர்வுபூர்வமான ஆதரவு இருந்தும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சி ஆதரவின்றியே மே 2009 இல் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. எனவே இந்திய அரசு என்ற மதயானையைக் கையாளவேண்டுமென்றால், தமிழகத்தில் ஆட்சிசெய்யும் கட்சியின் ஆதரவு ஈழத்தமிழர்களிற்குத் தேவை.

  • தொடங்கியவர்

ஐ.நா.அறிக்கையும் ஏமாற்றினால் ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல...

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-27 07:51:04| யாழ்ப்பாணம்]

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை முழுமையாக வெளியாகியுள்ளது. அறிக்கை வெளிவருமா? இல்லையா? என்ற கேள்விகளின் மத்தி யில் ஒருவாறு அதன் பிரசவம் நடந்தாயிற்று. பிரசவம் நடந்தாலும் அதனை மற்றவர்கள் அறியாதவாறு மூடி மறைப்பதற்காக, ஐயா! அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. எனினும் இலங்கை அரசின் கோரிக்கைக்கு ஐ.நா. சபை செவிசாய்க்கவில்லை.

இப்போது இலங்கை தொடர்பில் போர்க்குற்ற விசாரணை குறித்த ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் உலகின் மூலைமுடுக்கெங்கிலும் பரவியிருக்கும் இவ்வேளையில், ஐ.நா. சபையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதே எஞ்சியிருக்கும் வினா.

நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்பு அது குறித்துக் கருத்துக் கூறிய ஐ.நா. செயலாளர் பான் கீ மூன்,வன்னிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தன்னால் எவ்வித விசாரணைகளுக்கும் உத்தரவிட முடியாது எனவும், இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தால் அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கோரிக்கை விடுத் தால் மட்டுமே நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.

ஆக, கோழியிடம் கேட்டு குழம்பு வைக்கும் கதையை ஐ.நா. செயலாளர் கூறியிருக்கிறார். என்ன எங்கள் கெடுகாலம் நேர்கொண்ட பார்வையில்லா அந்த மனிதர் அந்தப் பதவியில் இடம் பிடித்துக் கொண்டார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றால் எதற்காக நிபுணர் குழு, எதற்காக விசாரணை, எதற்காக அறிக்கை, எதற்காக பகிரங்கப்படுத்தல்,இப்படியான கேள்விகள் எழும். அது மட்டு மல்ல இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்ப டும் போர்க் குற்றத்தை உறுதிசெய்வதான அறிக்கையை வெளியிட்டுவிட்டு, எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அது உள்நாட்டு யுத்தம் நடக் கின்ற நாடுகளின் அரசுகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அமையும் அல்லவா?

ஆக, எல்லா வழியிலும் தோல்வியுற்று, எல்லோராலும் ஏமாற்றப்பட்டு, சொந்த நாட்டில் அகதி என்று பெயரெடுத்து ஊருக்குப் போகமுடியாத இலங்கையிலுள்ள அப்பாவி தமிழ் மக்களை, ஐ.நாவின் அறிக்கையும் ஏமாற்றிவிட்டால்...ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல... என்று பாடுவதை தவிர வேறு வழி ஏது?

http://www.valampurii.com/online/viewnews.php?ID=18496

  • தொடங்கியவர்

இலங்கைப் பிரச்சினை குறித்து பாதுகாப்பு சபையில் இன்று கலந்துரையாட ஐ.நா.செயலாளர் உத்தேசம்

இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடுவதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் உத்தேசித்திருப்பதாக ஐ.நா. பேச்சாளர் நேசிர்க்கி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேசிர்க்கி இதைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதிலுக்கு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'அங்கு பொதுமக்கள் பிரதிபலிப்பை நாம் வெளிப்படையாக பார்த்தோம். இது ஆரம்ப பிரதிபலிப்பு என நாம் கருதுகிறோம். என்ன கூறப்படுகிறது என்பதை நாம் செவிமடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த அறிக்கையை கவனமாக பரிசீலித்து பதிலளிப்பதாக அரசாங்கமும் கூறியுள்ளது என்றார்.

அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பதிலளிக்கும்; செயற்பாடு உட்பட யுத்தத்திற்குப் பின்னரான சவால்கள் தொடர்பாக ஐ.நா.வுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20338-2011-04-27-06-14-59.html

  • தொடங்கியவர்

சிங்கள அரசின் ஐ.நா. வுக்கான பதில்

Date: April 27, 2011 6:51:41 AM EDT

Subject: SL reax to UN

To: All Media

From: Public Communication Division

PRESS RELEASE

The Government of Sri Lanka refers to the release by the UN Secretary-General of the “Darusman Report” on accountability in Sri Lanka. The Government of Sri Lanka reiterates its position that the “Darusman Report” is fundamentally flawed in many respects and that among other deficiencies, the Report is based on biased material, which is presented without any verification.

Following the end of conflict, the Government of Sri Lanka, has given the highest priority to post-conflict reconciliation, rehabilitation, reconstruction and development. The Government is in the process of addressing these challenges and has recorded significant success on many fronts, including in the resettlement of internally displaced persons, restoring livelihood in conflict affected areas, release of former child soldiers recruited by terrorists, rehabilitation of detainees, de-mining, restoring democratic processes in the North and East as well as in the reconstruction of housing and infrastructure. We are moving gradually and confidently forward along a process that will consolidate national unity and progress.

The public release of the Report at this stage is divisive, and disrupts our efforts to reinforce peace, security and stability in Sri Lanka. It feeds into the political agendas of interested parties.

The Government of Sri Lanka however notes that the Secretary-General has correctly acknowledged the primacy of domestic responsibility in this regard. The Government has put in place of its own accord a domestic mechanism dealing with a range of issues relevant to the conflict with a view to promoting reconciliation and confidence among people. UN Member States have welcomed this measure. Furthermore, the Government has established an Inter-Agency Committee consisting of seven key Ministries in order to proceed with the interim recommendations of the domestic mechanism, the LLRC. The objective of the Government is to provide urgent relief and to engender a sense of confidence among the people affected by the conflict and give impetus to the reconciliation process. The areas in which action has already commenced relate to land issues, law and order, administration and language issues as well as socio-economic and livelihood issues. These actions have been initiated as a follow-up to the matters identified through the LLRC, deriving from testimony received from affected civilians in the country including from former conflict areas. The conclusions of the externally constituted “Darusman Panel” working from New York should not take precedence over the conclusions, still awaited, of the domestic process.

The “Darusman Report” refers to many issues which are alleged to have occurred in Sri Lanka and which are currently subject to a domestic process. This material can be looked at by the LLRC should it wish to do so, depending on its own assessment of the contents.

Ministry of External Affairs

Colombo

27th April 2011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.